Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
அரசியலமைப்பு பேரவைக்கு சித்தார்த்தன் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்
அரசியலமைப்பு பேரவைக்கு சித்தார்த்தன் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சித்தார்த்தன் பரிந்துரைக்கப்பட்டு அவரை நானும் நீங்களும் ஏற்றுக் கொண்டுள்ளபோதும்
அவர் ஏன் இதுவரை நியமிக்கப்படவில்லை என்பது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தெரியவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23),அரசியலமைப்பு பேரவை தொடர்பில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அரசியலமைப்பு பேரவை தொடர்பில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களின் போது எழுந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான ஹர்ஷ டி சில்வா,அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.யான தர்மலிங்கம்
சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரை அந்த பதவிக்கு சபாநாயகர் நியமிக்காமல் இருக்கிறார் என்றார்.
இதற்கு ஜனாதிபதி பதிலளிக்கையில், , அது சபாநாயகரின் தவறு அல்ல. எதிர்க்கட்சியில் இருந்து சில குழுக்கள் வேறு பெயர்களை பரிந்துரைத்திருக்கின்றன .
அதனால் அதனை அவர்கள் தீர்த்துக்கொள்ள வேண்டும். அந்த குழுக்கள் உங்களுடன்தான் இணைந்து செயற்படுகின்றன.
அதனால் இது அரசாங்கத்தின் பிரச்சினை அல்ல. எதிர்க்கட்சியே இதனை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
மீண்டும் எழுந்த ஹர்ஷ டி சில்வா எம்.பி., தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் இருக்கும் பிரதான ஒரு கட்சி.
அரசியலமைப்பு பேரவைக்கு சித்தார்த்தன் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்
அவர்கள்தான் சித்தார்த்தன் எம்.பியை பரிந்துரை செய்திருக்கிறார்கள். அப்படியாயின் ஏன் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கேட்டார்.
இதற்கு ஜனாதிபதி பதிலளிக்கையில் இது தொடர்பில் எனக்கு பதில் வழங்க முடியாது. எதிர்க்கட்சியில் இருக்கும் வேறு சில குழுக்களே அவர்களில் ஒருவரின் பெயரை பரிந்துரைத்திருக்கின்றன என்றார்.
அந்த குழு யார் என சொல்லுங்கள் என ஹர்ஷ டி சில்வா எம்.பி கேட்டார்.
எனக்கு அது தெரியாது. சபாநாயகரிடமே கேட்கவேண்டும். இது எதிர்க்கட்சிகளின் பிரச்சினை.
நான் யாருடைய பெயரையும் பரிந்துரைக்கவில்லை என்று ஜனதிபதி கூறினார்.
அதற்கு ஹர்ஷ எம்.பி. எதிர்க்கட்சியில் இருந்து சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அதனை நியமித்தால் பிரச்சினை முடிந்துவிடும்.
அதனை சபாநாயகரே செய்ய வேண்டும்.. அதனால் இது எதிர்க்கட்சியின் பிரச்சினை என தெரிவிக்க வேண்டாம் என்றார்.
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி
- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை
சீரற்ற காலநிலையால் 662 பேர் இடம்பெயர்வு
சீரற்ற காலநிலையால் 662 பேர் இடம்பெயர்வு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 198 குடும்பங்களைச் சேர்ந்த 662 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் ஒரு வீடு முழுமையாகவும், 37 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி
- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை
மரணம் ஏற்படலாம் வைத்தியர் எச்சரிக்கை
மரணம் ஏற்படலாம் வைத்தியர் எச்சரிக்கை
வைத்தியர்களின் ஆலோசனையின்றி நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதால், உயிர்வாழ்வுக்குத் தேவையான பக்டீரியாக்கள்
மரணிக்கலாம் என குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மனிதன் 50 ஆண்டுகளுக்குள் மரணிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோயெதிர்ப்பு மருந்துகள் பக்டீரியாக்களை வலுவிழக்கச் செய்யும் என்றும், அதிகப்படியான நன்மை பயக்கும் பக்டீரியாக்களும் இதனால் கொல்லப்படுகின்றன என்றும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரணம் ஏற்படலாம் வைத்தியர் எச்சரிக்கை
எனவே மிகவும் அவசியமான சூழ்நிலைகளைத் தவிர, தேவையில்லாமல் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்க வேண்டாம் என்று அவர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒருவரின் வயது மற்றும் எடை உட்பட பல காரணிகளை கருத்தில் கொண்டே நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
“வைரஸ் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்குக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருமல், சளி மற்றும் சிறு காயங்களுக்கு மருத்துவரின் பரிந்துரைப்படி நோய்
எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்த முடியும் என குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி
- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை
விடுதலைப் புலிகளின் உபகரணங்களை தேடும் நடவடிக்கை
விடுதலைப் புலிகளின் உபகரணங்களை தேடும் நடவடிக்கை
போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை இன்று (23) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு கடந்த 19 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸின் விசேட புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் இடத்தில்
விடுதலைப் புலிகளின் உபகரணங்களை தேடும் நடவடிக்கை
தோண்டுவதற்கு நீதிமன்றத்தில் கடந்த 19 ஆம் திகதி வழக்கு தொடரப்பட்டு நீதிபதியின் அனுமதியுடன் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் பொலிஸார், விஷேட அதிரடி
படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் பொலிஸார் ஆகியோரின் பிரசன்னத்துடன் இன்று (23) காலை 9 மணிக்கு குறித்த அகழ்வு பணி இடம்பெற்று வருகின்றது.
கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்ட போது நிலத்திலிருந்து நீர் வருவதை அவதானிக்க முடிந்துள்ளது இருந்தும் தொடர்ச்சியாக குறித்த
இடத்தினை அகழ்வு பணி செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
மேலும் மற்றுமொரு கனரக இயந்திரம் கொண்டு தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
குறித்த பகுதிக்கு அண்மையில் கடந்த பங்குனி மாதமளவில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில்
எதுவும் மீட்கப்படாத நிலையில் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தில் இருந்து 27 000 பேர் ஓட்டம்
இராணுவத்தில் இருந்து 27 000 பேர் ஓட்டம்
இந்த வருடம் இராணுவத்தில் இருந்து 27,000 பேர் வெளியேறியமைக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் இன்று (23) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்தார்.
“அரசியல்வாதிகளுக்குப் பிறகு, அதிகம் விமர்சிக்கப்படுபவர்கள் பொலிஸார். அதுபோல வரலாற்றில் அரசியல்வாதிகளால் கடுமையாக
துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட நிறுவனம் என பார்த்தால் அது காவல்துறைதான். அது குறித்து நாம் கதைக்க வேண்டும்”
இராணுவத்தில் இருந்து 27 000 பேர் ஓட்டம்
“அக்டோபர் 13 ஆம் திகதி முதல் 40 நாட்களாக இராணுவப் படைத் தலைவர் (இரண்டாம் நிலை) பதவி வெற்றிடமாக உள்ளது. இதனால் படைகளுக்குள் சிக்கல் எழுந்துள்ளது. இது வரலாற்றில் முதல் தடவை.
“மேலும், 2023 ஆம் ஆண்டில், இராணுவத்தில் கிட்டத்தட்ட 27,000 பேர் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர்.
அவர்கள் ஓய்வு பெற்றனர், அல்லது அவர்கள் சேவையை விட்டு வெளியேறிவிட்டார்கள்
. அவர்கள் ஏன் ராஜினாமா செய்தார்கள். அதாவது ஏதோ சிக்கல் உள்ளது. அதை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.”
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி
- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை
கொக்குதொடுவாயில் 5 மனித எச்சங்கள் மீட்பு
கொக்குதொடுவாயில் 5 மனித எச்சங்கள் மீட்பு
கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் ஐந்து மனித எச்சங்கள், துப்பாக்கிச்சன்னம் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்றிருந்தது.
முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொக்குதொடுவாயில் 5 மனித எச்சங்கள் மீட்பு
இன்றைய அகழ்வுப் பணியின் போது ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது.
இவ் அகழ்வு பணியில் இன்றுடன் 24 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
நாளை நான்காம் நாள் அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளன.
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி
- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை
பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரியை சிக்க வைத்த பெண்
பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரியை சிக்க வைத்த பெண்
கல்முனையில் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய 59 வயதுடைய பொலிஸ் சப் இன்பெக்டர் ஒருவர் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஓழிப்பு
ஆணைக்குழுவால் நேற்று புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏற்கனவே குற்றச் செயல் ஒன்றில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்து மாதத்தில் ஒருநாள் நீதிமன்றம் சென்று கையொழுத்து இட்டுவரும் குறித்த பெண்ணை
அங்கு கடமையாற்றி வரும் கல்முனை பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த 59 வயதுடைய பொலிஸ் சப் இன்பெக்கடர் பெண்னை அனுகி பாலியல் இலஞ்சம் கோரியுள்ளர்
பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரியை சிக்க வைத்த பெண்
இதனையடுத்து குறித்த பெண் கொழும்பிலுள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் தெரிவித்ததையடுத்து அவர்களின் வழிகாட்டலில், கல்முனை கடற்கரை பகுதியிலுள்ள உல்லாச விடுதி ஒன்றில் கொழும்பில்
இருந்து வந்த இலஞ்ச உழல் பிரிவினர் மாறுவேடத்தில் சம்பவதினமான நேற்று காலை 9.30 மணிக்கு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த பெண் பலாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரியை குறித்த விடுதிக்கு வருமாறு அழைப்பையடுத்து அங்கு சென்ற
பொலிஸ் அதிகாரி விடுதி அறைக்கு சென்ற நிலையில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் பொலிஸ் அதிகாரியை மடக்கிபிடித்து கைது செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை 28 நாட்கள் விளக்கமறியலில்
வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரியை கொழும்பிற்கு இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஒழிப்பு குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி
- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை
குளியல் அறைக்குள் கெமரா
குளியல் அறைக்குள் கெமரா
வீடுகளுக்குள் நுழைந்து குளியலறைக்குள் கெமரா பொருத்தி வீடியோக்களை எடுத்து வீட்டாரை மிரட்டி வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடுகளுக்குள் இரவு வேளைகளில் அத்துமீறி நுழைந்து குளியறைகளில் கமராக்களைப் பொருத்தி வீடியோ எடுத்து, இளைஞன் ஒருவர் வீட்டாரை மிரட்டி வந்துள்ளார்.
அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்ட நிலையில், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
லஞ்ச் ஷீட்டை உண்ண வைத்த அதிபர் இடமாற்றம்
லஞ்ச் ஷீட்டை உண்ண வைத்த அதிபர் இடமாற்றம்
நாவலப்பிட்டி, ரம்புக்பிட்டி மகா வித்தியாலயத்தின் அதிபர், சில மாணவர்களை லஞ்ச் ஷீட்டை மற்றும் பத்திரிகைகளை உண்ணுமாறு
வற்புறுத்திய சம்பவத்தை அடுத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கம்பளை வலயக் கல்வி அலுவலகத்திற்கு அவர் இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இன்று தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பஸ்பாகே வலயக் கல்விப் பணிப்பாளரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு வசதியாக அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி
- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை
குடியிருப்பு மீது மண்மேடு சரிவு
குடியிருப்பு மீது மண்மேடு சரிவு
உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோடன் தோட்ட பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடியிருப்பு மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
உடப்பஸ்ஸலாவை பிரதேசத்தில் கடந்த தினங்களாக காலநிலை மாற்றத்தினால் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகின்றது.
குடியிருப்பு மீது மண்மேடு சரிவு
இந்த நிலையில் நேற்றைய தினம் (22) கடும் மழையினால் கடன் தோட்டப்பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்கு மேற் பகுதியில் காணப்படும் பாரிய மண்மேட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது.
இதன்போது மண்மேட்டில் இருந்து பாரிய கற்கள் குடியிறுப்பின் ஒரு பகுதி சுவர் மீது சரிந்து வீழ்ந்து குடியிருப்புக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் குடியிருப்பு தளபாடங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் ஏற்பட்ட வேளையில் பௌத்த பிக்குகள் குடியிறுப்பில் இருந்த போதிலும் அவர்களுக்கு எவ்வித
பாதிப்புக்கள் ஏற்படவில்லை என உடப்புஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி
- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை
மஞ்சள் சிவப்பு கொடிகளை வெட்டி அட்டகாசம்
மஞ்சள் சிவப்பு கொடிகளை வெட்டி அட்டகாசம்
கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த மாவீரர்
நினைவேந்தல் கொடிகள் (22) புதன்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில்
சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
மஞ்சள் சிவப்பு கொடிகளை வெட்டி அட்டகாசம்
முன்னாள் உப தவிசாளர் மயூரன் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை இரவு 8 மணி வரை நினைவேந்தல் இடத்தில் சிரமதானம் மேற்கொண்டு –
நினைவுக் கொடிகளை கட்டி விட்டு சென்றிருந்த நிலையில் மேற்படி கொடிகள் அனைத்தும் இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இருப்பினும் அவ்விடத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் கட்டப்பட்ட நினைவுக் கொடிகள் அறுத்து எறியப்படவில்லை எனவும் எனவே இது
தொடர்பாக பொலிஸார் தகுந்த விசாரணை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய
வேண்டும் எனவும் முன்னாள் உப தவிசாளர் மயூரன் தெரிவித்துள்ளார்
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி
- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை
புலிகளின் நிழல் கூட்டமைப்பு தடைசெய்ய கோரிக்கை
புலிகளின் நிழல் கூட்டமைப்பு தடைசெய்ய கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தவறு செய்துவிட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வரவு-செலவுத் திட்டத்தின் மீதான குழுநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டனர். ஆனால், அவ்வமைப்பின் நிழலாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். புலிகளை அழித்த கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைச்செய்து இருக்கவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ அதனை செய்யாது தவறு செய்துவிட்டார்.
மஹிந்த பாவம் பார்த்தார். இப்போது அது பெரும் அனர்த்தமாக உள்ளது என்றார்.
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி
- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விசேட ஸ்கேன் மூலம் ஆராய்வு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விசேட ஸ்கேன் மூலம் ஆராய்வு
புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பதனை அறிய எதிர்வரும் 24 விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனை செய்யப்படவுள்ளது
என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது இரண்டாவது நாளாக, செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்று அகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விசேட ஸ்கேன் மூலம் ஆராய்வு
கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி இரண்டாவது கட்ட அகழ்வுப்பணி இடம் பெற்றிருந்தது. இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
அந்த எலும்புக்கூட்டு உடற்பகுதியில் இருந்து துப்பாக்கி சன்னங்கள், குண்டு சிதறல்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் இலக்க தகடு ஆகியன எடுக்கப்பட்டன.
இலக்க தகடுகள் தொடர்பான விடயங்கள் பின்னர் அறியத்தரப்படும். தொடர்ந்து இப்பணி முன்னெடுக்கப்படும் . எதிர்வரும் 24அம் திகதி வெள்ளிக்கிழமை விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் இந்த மனித
புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது. எத்தனை படைகளில் எலும்புக்கூடுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன எனும் தகவலை அறிவதற்காக விஷேட ஸ்கான் சோதனை நடைபெறும்.
களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரே குறித்த ஸ்கேன் இயந்திரத்தினை கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது ஜனாதிபதி
எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது ஜனாதிபதி
எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது. ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம், நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபையில் இன்று (22) தெரிவித்தார்.
ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களுக்கு பிறகு, மாகாண சபை தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் நடத்தப்படும் என்றார்.
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை
- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்
- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது
- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை
- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு
வித்தியா கொலை நீதிமன்றுக்கு கல் வீசிய வழக்கிலிருந்து விலகினார் நீதிபதி
வித்தியா கொலை நீதிமன்றுக்கு கல் வீசிய வழக்கிலிருந்து விலகினார் நீதிபதி
யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதிக்கு கல் வீசிய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் இருந்து தான் விலகி கொள்வதாக யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்து 21ஆம் திகதி
யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற சூழலில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், பலரும் கூடி இருந்தனர்.
இந்நிலையில், போராட்டம் வன்முறையாக மாறி நீதிமன்ற கட்டட தொகுதி மீது கல்வீச்சு இடம்பெற்றது.
தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணிகளின் வாகனங்கள், சிறைச்சாலை வாகனம், நீதிமன்றுக்கு
அருகில் இருக்கும் சுப்பிரமணிய பூங்கா உடைமைகள், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்த பொலிஸ் காவலரண் என்பவை சேதமாக்கப்பட்டன.
வித்தியா கொலை நீதிமன்றுக்கு கல் வீசிய வழக்கிலிருந்து விலகினார் நீதிபதி
இவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சுமார் 300க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து, நீதிமன்ற கட்டட தொகுதிக்கு கல் வீசியமை, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை , பொலிஸ் நிலையம் மீது
கல்வீசியமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடர்ந்து சந்தேகநபர்களை மன்றில் முற்படுத்தி, வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நீதிமன்ற கட்டட தொகுதிக்கு கல்வீசிய வழக்கு விசாரணை சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்.மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டதை அடுத்து , மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுவந்தன.
குறித்த வழக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக தற்போது கடமையேற்று இருக்கும் நீதிபதி டீ. சூசைதாசன் முன்னிலையில் எடுத்து
கொள்ளப்பட்ட போது , தனது தனிப்பட்ட காரணங்களால் இந்த வழக்கு விசாரணைகளில் இருந்து தான் விலகி கொள்வதாக தெரிவித்து விலகி கொண்டுள்ளார்.
இது குறித்த நீதிமன்ற பதிவாளரால், பிரதம நீதியரசருக்கு அறிவிக்கப்பட்டு, புதிய நீதிபதி ஒருவர் குறித்த வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும்
பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை யாழ்.நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை
- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்
- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது
- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை
- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு
மண்சரிவில் சிக்கியவர் சடலமாக மீட்பு
மண்சரிவில் சிக்கியவர் சடலமாக மீட்பு
பேராதனை நகரில் மண்சரிவில் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாயகிய பிரதேசத்தில் தொலைபேசி சேவை நிலையத்தை நடத்தி வந்த திருமணமாகாத அனுர ஜயவீர (வயது 68) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மண்சரிவில் சிக்கியவர் சடலமாக மீட்பு
இன்று (22) அதிகாலை 12.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளுடன் இராணுவ அதிகாரிகள் இணைந்து
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது உயிரிழந்தவரின் சடலம் அதிகாலை 5.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
பேராதனை நகரில் சுமார் நான்கு வர்த்தக நிலையங்கள் மண்சரிவினால் அழிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
65 போலி நாணயத்தாள்களுடன் பட்டதாரி கைது
65 போலி நாணயத்தாள்களுடன் பட்டதாரி கைது
5,000 ரூபாய் பெறுமதியான 65 போலி நாணயத்தாள்களுடன் வெளிவாரி பட்டதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் 2021 ஆம் ஆண்டு ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் வெளிவிவகார கல்விக்காக பதிவு செய்யப்பட்டவர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
28 வயதான சந்தேக நபர் பொல்பிதிகம ஹட்பொகுன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டிலுள்ள 9 மாவட்டங்களுக்கு இன்றிரவு 8 மணிவரை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளை சேர்ந்த மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை
- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்
- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது
- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை
- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு
சோறு குழைந்தால் விவாகரத்து செய்யமுடியாது
சோறு குழைந்தால் விவாகரத்து செய்யமுடியாது
சொதியில் உப்பு கூடிவிட்டது என்றுச் சொல்லியும், சோறு குழைந்துவிட்டது என்று கூறியும் மனைவியை விவாகரத்து செய்யமுடியாது என்று ஸ்ரீ லங்கா
பொதுஜன பெரமுனவின் எம்.பியான ரோஹித அபே குணவர்தன, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவ்வாறு விவாகரத்து செய்துவிட்டால், யாரை திருமணம் முடிப்பது எனக் கேட்ட, ரோஹித அபேகுணவர்தன,அதனால்தான், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இந்த வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்கின்றது என்றார்.
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை
- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்
- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது
- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை
- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு
இலங்கை மீனவர்கள் ஐவர் கைது
இலங்கை மீனவர்கள் ஐவர் கைது
இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக
தெரிவித்து இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு படகொன்றையும் கைப்பறியுள்ளனர்.
இந்திய கடலோர காவல்படை இன்று (21) கைது செய்து விசாரணைக்காக தமிழக கடலோர காவல் குழுமம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது