கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விசேட ஸ்கேன் மூலம் ஆராய்வு
புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பதனை அறிய எதிர்வரும் 24 விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனை செய்யப்படவுள்ளது
என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது இரண்டாவது நாளாக, செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்று அகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விசேட ஸ்கேன் மூலம் ஆராய்வு
கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி இரண்டாவது கட்ட அகழ்வுப்பணி இடம் பெற்றிருந்தது. இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
அந்த எலும்புக்கூட்டு உடற்பகுதியில் இருந்து துப்பாக்கி சன்னங்கள், குண்டு சிதறல்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் இலக்க தகடு ஆகியன எடுக்கப்பட்டன.
இலக்க தகடுகள் தொடர்பான விடயங்கள் பின்னர் அறியத்தரப்படும். தொடர்ந்து இப்பணி முன்னெடுக்கப்படும் . எதிர்வரும் 24அம் திகதி வெள்ளிக்கிழமை விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் இந்த மனித
புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது. எத்தனை படைகளில் எலும்புக்கூடுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன எனும் தகவலை அறிவதற்காக விஷேட ஸ்கான் சோதனை நடைபெறும்.
களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரே குறித்த ஸ்கேன் இயந்திரத்தினை கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

- NPP பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது

- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்

- ஞானசார தேரோ மீதான வழக்கு பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- முன்னாள் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பிரதீப் கரியவசம் கைது








