Tag: கொக்குதொடுவாயில்
கொக்குதொடுவாயில் 5 மனித எச்சங்கள் மீட்பு
கொக்குதொடுவாயில் 5 மனித எச்சங்கள் மீட்பு
கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் ஐந்து மனித எச்சங்கள், துப்பாக்கிச்சன்னம் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்றிருந்தது.
முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொக்குதொடுவாயில் 5 மனித எச்சங்கள் மீட்பு
இன்றைய அகழ்வுப் பணியின் போது ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது.
இவ் அகழ்வு பணியில் இன்றுடன் 24 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
நாளை நான்காம் நாள் அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளன.
- ஈரானிடம் இன்னும் 1,500-2,500 ஏவுகணைகள் உள்ளன
- தெற்கு ஈரானில் ‘அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு’ பதிலடியாகவே பஹ்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல்
- பஹ்ரைன் மீதான ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதலை ஜோர்டான் கண்டிக்கிறது
- திவுலபிட்டிய தொழிற்சாலையில் தீ விபத்து
- குகையில் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞர் பிணையில் விடுதலை
- கடல் முழுவதும் மீன் இருப்புகளை எந்தத் தொழில்நுட்பத்தாலும் நேரடியாகக் கண்டறிய முடியாது – ஐ.என்.ஓ.ஆர்.ஏ. இயக்குனர்
- அனுரா கிளீன் சிறிலங்கா கிளீன்
- 1990 சுவா செரியாவில் ஊழியர்களைத் தக்கவைப்பதில் சம்பளக் கவலைகள் அச்சுறுத்தலாக உள்ளன
- போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கை
- அரசாங்கத்தின் வரி அல்லாத வருவாய் 39.1% உயர்ந்து ரூ. 314.8 பில்லியனாக அதிகரித்துள்ளது


















