Tag: மண்
ஹக்கீம் ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம்
ஹக்கீம் ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம்
ஹக்கீம் ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம் ,ஏமாற்றுத் தலைமைகள் ஹக்கீம், ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம் என்ற சுவரொட்டிகள் கிழக்கில் ஒட்டப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
ஜனதிபதி தேர்தல் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் 2024 ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ளது. ஐக்கிய மக்கள்
சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க அம்பாறை மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்ப்புகள் எழுந்த வண்ணமுள்ளன.
ரவுப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமது ஆதரவினை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியிருந்தனர்.
மேலும் கிழக்கில் ஏமாற்றுத் தலைமைகள் ஹக்கீம், ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம் என்ற சுவரொட்டிகளும் கிழக்கு மாகாணத்தில் பரவலாக ஓட்டப்பட்டுள்ளது.
முஸ்லிம் அரசியல் தலைமைகளான ஹக்கீம் மற்றும் ரிஷாத் அன்றிலிருந்து இன்று வரைக்கும் ஏமாற்று அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் சுயநல அரசியல் ஒழிய வேண்டும் என்றும் அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

குடியிருப்பு மீது மண்மேடு சரிவு
குடியிருப்பு மீது மண்மேடு சரிவு
உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோடன் தோட்ட பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடியிருப்பு மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
உடப்பஸ்ஸலாவை பிரதேசத்தில் கடந்த தினங்களாக காலநிலை மாற்றத்தினால் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகின்றது.
குடியிருப்பு மீது மண்மேடு சரிவு
இந்த நிலையில் நேற்றைய தினம் (22) கடும் மழையினால் கடன் தோட்டப்பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்கு மேற் பகுதியில் காணப்படும் பாரிய மண்மேட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது.
இதன்போது மண்மேட்டில் இருந்து பாரிய கற்கள் குடியிறுப்பின் ஒரு பகுதி சுவர் மீது சரிந்து வீழ்ந்து குடியிருப்புக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் குடியிருப்பு தளபாடங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் ஏற்பட்ட வேளையில் பௌத்த பிக்குகள் குடியிறுப்பில் இருந்த போதிலும் அவர்களுக்கு எவ்வித
பாதிப்புக்கள் ஏற்படவில்லை என உடப்புஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது














