போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை
Posted in இலங்கை செய்திகள்

போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை

போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை

போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை ,தமது வறுமையை நீர்த்திட கோரி போராளி குடும்பம் கண்ணீர் கோரிக்கை .

தமிழீழ விடுதலை புலிகளின் படையில் இணைந்து மக்களுக்காக போராடி காயமடைந்த முன்னாள் போராளி ஒருவர் ,தனது வாழ்வாதாரத்தை உயர்த்திட கோரி உலக தமிழ் மக்களிடம் உதவி வேண்டி இருக்கின்றார் .

தேசத்தையும் ,தேச மக்களையும் காப்பற்றிட தன்னை அர்ப்பணித்து அந்த ஈழ விடுதலை போராளி ,காலில் காயமடைந்த நிலையில் ,தனது குடும்பத்தை பராமரிக்க முடியாத நிலையில் தவித்து வருகிறார் .

அவ்வாறன அந்த குடும்பத்தை காப்பற்றிட வேண்டிய பொறுப்பு உலக தமிழ் மக்களிற்கு உள்ளது .

வவுனியா பாவற்குளம்

எனவே அன்பார்ந்த தாய் தமிழ் உறவுகளே, வவுனியா பாவற்குளம் பகுதியில் வசித்து வரும் இந்த போராளி குடும்பத்தை காப்பற்ற வேண்டியது நமது பொறுப்பாகும் .

இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வரும் இந்த வவுனியா பாவற்குளம் போராளி குடும்பத்திற்கு ,குழாய் கிண்று ஒன்றை நிறுவிட மக்களே உதவிடுங்கள் .

உதவிட தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் இதோ –0044 7536707793

வாட்ஸ்சாப்பில் இணைந்து பயன் பெறுக

வைபரில் இணைந்து பயன் பெறுக

வீடியோ

வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம்
Posted in இலங்கை செய்திகள்

வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம்

வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம்

வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம் ,அதிக காற்று காரணமாக யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பனைமரம் ஒன்று முறிந்து விழுந்தில் குறித்த வீது சேதமடைந்துள்ளது.

நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில்

நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 125 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீடொன்றே நேற்று (22) இவ்வாறு சேதமாகியுள்ளது.

இதேவேளை, அதிக காற்று காரணமாக நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அனர்த்தம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளது.

இலங்கையை இவ்வாறான புயல் தாக்கும் என காலநிலை அவதான நிலையம் அவதானித்து எச்சரித்த பொழுதும் இந்த சம்பவம் இடம்பெற்றதள்ளது .

பயன் பெறும் பனை மரங்கள்

மக்கள் அதிக பயன் பெறும் பனை மரங்கள் ,தமிழ் மக்கள் கலை பண்பாட்டு வாழ்வியலுடன் ஒன்றித்து பயணிக்கும் ஒரு காரனையாகி மாற்றம் பெற்றுள்ளது .

அவ்வாறான பனை மரங்கள் ,;தென்னை மரங்கள் என்பன வீடுகளின் அருகில் வளர்க்க படுகின்றன .

இது அறியாமையின் தன்மையா அல்லது ,அதன் விருப்பு நாள் இடம்பெறுவதா என்பதே கேள்வியாக உள்ளது .

இந்த பனை மரம் முறிந்து வீழ்ந்த சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையாகவே காணப்படுகின்றன .

மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி
Posted in இலங்கை செய்திகள்

மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி

மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி

மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி ,நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ராகலை மாகுடுகலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று (23) இடம்பெற்றுள்ளது.

வீசிய கடும் காற்றினால்

குறித்த பகுதியில் வீசிய கடும் காற்றினால் குறித்த மரம் சரிந்து விழுந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மஸ்கெலியாவை பிறப்பிடமாகவும் திருமணத்தின் பின்னர் மனைவியுடன் கந்தப்பளை ஹைபோரஸ்ட் இலக்கம் ஒன்றில் வசித்து வந்த கந்தசாமி ராஜ்குமார் என்ற 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீப நாட்களாக இலங்கை நாடு தழுவிய நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

வீதிகள் ,வீடுகள் மேலே மரங்கள் முறிந்து விழும் சம்பவம் அதிகரித்து காணப்படுகின்றன .

அபாயம் நிறைந்த மரங்களின் கிளைகளை வெட்டிவிட மக்கள் தயக்கம் அல்லது அலட்சியம் அற்று காணப்படுவதே இந்த நிலைக்கு காரணம் என படுகிறது .

மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன்
Posted in இலங்கை செய்திகள்

மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன்

மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன்

மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன் ,எதிர்வரும் வாரத்தில் இருந்து பல விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தொழில்துறையினருக்காக இந்த விசேட கடன் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் தொழில்துறையினரின் நிதித் தேவைகள் கண்டறியப்பட்டு, வணிக வங்கிகள் மூலம் மானிய வட்டி வீதத்தில் கடன் வழங்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் இலங்கையில் இடம்பெற உள்ளதை அடுத்து ,அத்தியாவசிய பொருட்டாகள் முதல் ,பல விலை கழிவை ரணில் விக்கிரமசிங்கா அரசு ஏற்படுத்தி வருகிறது .

அதன் ஒரு தொடர்ச்சியாகவே மக்களுக்கு மானிய வட்டிவீதத்துடன் உதவி திட்டங்கள் வழங்க படுவதன் புதிய அறிவிப்பையும் பார்க்க முடிகிறது .

இவை நன்கு திட்டமிடப்பட்ட மக்களை ஏமாற்றும், ஒரு கபட நாடகமாக பார்க்க படுகிறது என்பது குறிப்பிட தக்கது.

ஆண்களின் விதைப்பையில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்
Posted in இலங்கை செய்திகள்

ஆண்களின் விதைப்பையில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்

ஆண்களின் விதைப்பையில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்

ஆண்களின் விதைப்பையில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் ,ஆண்களின் பாலின உறுப்புகளில் ஒன்று, விதைப்பை. இதுவே, ஆண்களின் இனப்பெருக்கத்துக்குத் தேவையான விந்தணுக்களை உற்பத்தி செய்யும்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், விதைப்பையினுள் `மைக்ரோ பிளாஸ்டிக்’ (Microplastics) எனப்படும் சிறு சிறு பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

கருத்தடை அறுவை சிகிச்சையின்போது

பிரேதப் பரிசோதனையின்போதும், கருத்தடை அறுவை சிகிச்சையின்போதும் சேகரிக்கப்பட்டிருந்த 23 ஆண்களின் விதைப்பை மாதிரி செல்கள் மற்றும் 47 வளர்ப்பு நாய்களின் விதைப்பை மாதிரி செல்களையும் பரிசோதனைக்கு

எடுத்துக்கொண்டனர். சோதனையின் முடிவில், அனைத்து விதைப்பையிலும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சராசரியாக ஒரு நாயின் விதைப்பையினுள் 122.63 மைக்ரோகிராம் அளவும், மனிதனின் விதைப்பையினுள் 328.44 மைக்ரோகிராம் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதில், 12 வகையான பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் அட்டவணைப்படுத்தியுள்ளனர். அதில், பாலிஎத்திலீனால் உருவான பிளாஸ்டிக் துகள்கள் அதிக அளவு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து நியூ மெக்சிகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் சியோசங் யூ பேசுகையில், “வாய்வழியாக மற்றும் தோலில் இருக்கும் துளைகள் மூலம் உடலினுள் மைக்ரோ பிளாஸ்டிக் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

இவை, மனித இனப்பெருக்க மண்டலத்தை சென்றடையுமா என்ற கேள்வி எங்களுக்குள் இருந்தது.

இதனைக் கண்டறியவே இந்த ஆய்வை மேற்கொண்டோம். நாய்களின் விதைப்பையில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அதிகமான பிளாஸ்டிக் துகள்கள்

அதைவிட மூன்று மடங்கு அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் மனிதனின் விதைப்பையினுள் கண்டறியப்பட்டது எங்களுக்கு

பேரதிர்ச்சியைக் கொடுத்தது. பிளாஸ்டிக் துகள்கள் உடல் உறுப்புகளில் படிவதால் தொற்றுநோய், உறுப்புச் செயலிழப்பு, வளர்சிதை மாற்ற கோளாறு, டிஎன்ஏ சேதம் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

இவை, விதைப்பையினுள் இருப்பதால் விந்தணு உற்பத்தியையும் பாதிக்கலாம். விந்தணுக்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் பரவலாம்.

ஆண்களின் விதைப்பைகளில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதால் இனப்பெருக்கத்திறன் குறைவது, விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இது எதிர்காலத்தில் குழந்தையின்மைப் பிரச்னைகளைத் தீவிரமாக்கும் வாய்ப்பு உள்ளது.

இனப்பெருக்க மண்டலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்

இனப்பெருக்க மண்டலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் இருக்குமான என்பதற்கான ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவை எந்த அளவு இனப்பெருக்க மண்டலத்தையும், விந்தணு உற்பத்தியையும் பாதித்துள்ளத என்பது குறித்து இனிதான் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அது மிகவும் முக்கியமானது என்பதால் உடனடியாக அதற்கான முயற்சிகளைத் தொடங்க இருக்கிறோம்” என்றார்.

6குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

6குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதிப்பு

6குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதிப்பு

6குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதிப்பு ,பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெம்பியன் 57 பிரிவிலும்

கெம்பியன் கீழ் பிரிவிலும் நேற்று (22) இரவு பெய்த கடும் காற்றுடன் கூடிய வானிலையால் ஆறு வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் குடியிருப்புகளில் உள்ள கூறைதகடுகள் வீசிய பலத்த காற்றுக்கு அள்ளுண்டு சென்றுள்ளது இதனால் ஆறு குடும்பங்களை சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு வீடுகளில் இருந்த சில பொருட்கள் சேதமடைந்துள்ளது.

வீடுகளை சீர் செய்யும் நடவடிக்கை

பாதிக்கப்பட்ட குடும்பங்களை பிரதேசத்திற்கு பொருப்பான கிராம உத்தியோத்தர் மற்றும் தோட்ட முகாமைத்துவம் இனைந்து பாதிக்கப்பட்ட வீடுகளை சீர் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவளை நேற்று இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக பொகவந்தலாவ மற்றும் இராணிகாடு வரையிலான பிரதான வீதிகளின் அருகாமையில் உள்ள

மரங்கள் சரிந்து விழுந்துள்ளமையினால் பொகவந்தலாவ பிரதேசத்திற்கான மின்சாரம் முழுமையாக தடைப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கேசல்கமுவ ஒயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் கேசல்கமுவ ஒயாவின்

அன்மையில் உள்ள குடியிருப்பாளர்களை அவமானமாக இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம்
Posted in இலங்கை செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம்

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம்

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் ,தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பள அதிகரிப்பை அரசு அறிவித்திருப்பினும், ஒருசில தோட்டக் கம்பனிகள் குறித்த சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென அரசுக்கு

முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன. குறித்த நிலைமையைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் படிமுறைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் அவர்களால் சமகால வாழ்க்கைச் செலவு மற்றும் அண்மையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு தோட்டத் தொழிலாளர் ஒருவருக்குச் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச சம்பளத்தை மதிப்பீடு செய்தல்.
  • அவ்வாறு மதிப்பீடு செய்யப்படும் சம்பளத்தைச் செலுத்துவது தொடர்பாக ஒவ்வொரு தோட்டக் கம்பனிகளிடம் காணப்படுகின்ற இயலுமைகளை பரிசீலிப்பதற்குக் குழுவொன்றை நியமித்தல்
  • அத்துடன், ஏதேனுமொரு தோட்டக் கம்பனி முறைகேடான முகாமைத்துவத்தால் சம்பளம் செலுத்துவதற்கு தவறினால், அவ்வாறான தோட்டக் கம்பனிகளுடனான காணிக் குத்தகை ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான படிமுறைகளை மேற்கொள்ளல்.
  • வீடியோ
தமிழர்களுக்கு நீதி கிடைக்காது
Posted in இலங்கை செய்திகள்

தமிழர்களுக்கு நீதி கிடைக்காது

தமிழர்களுக்கு நீதி கிடையாது

தமிழர்களுக்கு நீதி கிடைக்காது ,பொலிஸாரின் அராஜகமும் அடக்க முடியாத அதிகாரப்பசியும் தமிழ் மக்களின் வாழ்வியலை பறித்தெடுக்கின்றது.

இந்த நாட்டில் நீதி மரணித்து விட்டது. சட்டம் சாகடிக்கப்பட்டு விட்டது .இலங்கையின் சட்டத்தினால் தமிழர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்காது என இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட எம்.பி.யான எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறுத்தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் சட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்துகிறதா? சட்டங்களின் வரையறைகளை பின்பற்றுகின்றதா? நீதித்துறை சட்டங்களின் ஊடாக கொண்டுவரப்பட்ட பல்வேறு விடயங்கள் அந்த நீதித்துறை ஊடாகவே

நடைமுறைப்பபடுத்தப்படாமல் போகின்றது .கடந்த மே 17,18 ஆம் திகதிகளில் இலங்கையின் பல பாகங்களில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் இந்த நாடு ஒரு சட்டத்திற்குள்தான் இருக்கின்றதா? என்பதையும் இங்கு கேட்க விரும்புகின்றேன்.

மக்கள் கொல்லப்பட்ட 15 ஆம் ஆண்டு

மக்கள் கொல்லப்பட்ட 15 ஆம் ஆண்டு நிறைவில் அந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுபடுத்தி வடக்கு,கிழக்கு தெற்கு மக்கள் கூட இந்தக்கஞ்சியை எல்லா இடங்களிலும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது ,

இவ்வாறு செய்கின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் உள்ள சம்பூரில் கஞ்சி காய்ச்சியதற்காக இரவில் வீடு புகுந்து பெண்களை பொலிஸார் அடாவடியாக கதறக்கதற கைது செய்து இழுத்து சென்றனர்.

கைது செய்வது எந்த நாட்டு சட்டத்திற்குள் உள்ளது. ?இலங்கை சட்டத்தில் இவ்வாறு உள்ளதா அல்லது இன்னொரு நாட்டு சட்டத்தை இலங்கை பின்பற்றுகின்றதா? என்றும் வினவினார்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்
Posted in இலங்கை செய்திகள்

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அவிசாவளையில் இருந்து கலிகமுவ நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியை பரிசோதிக்கும் போது பெண் பொலிஸ் உத்தியோகத்தரால் ஒருவருக்கும் சாரதி ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற

சர்ச்சைக்குரிய உரையாடலின் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, குறித்த காணொளி தொகுக்கப்பட்டுள்ளதாக (Editing) தெரிவித்தார்.

பிந்தெனிய பொலிஸ்

பிந்தெனிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரால் ஒருவருக்கும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

“வாகன வருமான உத்தரவுப் பத்திரம் மற்றும் காப்பீட்டு சான்றிதழில் வெவ்வெறு பெயர்கள் இருந்துள்ளன. சாரதியாக மற்றொருவர் இருந்துள்ளார்.

வாகன வருமான உத்தரவுப் பத்திரம்

வாகன வருமான உத்தரவுப் பத்திரம் மற்றும் காப்பீட்டு சான்றிதழின் முகவரியும் வேறுபட்டுள்ளன. சாரதி வேறு பகுதியில் வசிப்பவர்.

இந்த காரணங்களால், வாகனத்தின் உரிமையை மாற்றாதது குறித்து அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது .

நீதிமன்ற உத்தரவின்படி ரூ. 5,000 அபராதமும் செலுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு

சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு

சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு ,சீரற்ற வானிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

36,900 மின்சார துண்டிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மின்விநியோகத்தை சீரமைக்க மேலதிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம் விநியோகம்

இதேவேளை, மின்சார பாவனையாளர்கள் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு அல்லது குறுஞ் செய்தி அனுப்பி மின்வெட்டு தொடர்பில் அறிவிக்க முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்க பட்ட ,பகுதிகளுக்கும் மின்சார தேவை உள்ள மக்களுக்கும் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள பட்டு ,அவர்கள் மின்சாரம் பெறும் வழிகள் பெற்று தரப்படும் என தெரிவிக்க பட்டுள்ளது .

யாழில் வாள் வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள் வெட்டு

யாழில் வாள் வெட்டு

யாழில் வாள் வெட்டு ,யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொல்புரம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்திற்கு, பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இளைஞர்கள் இடையிலான மோதலே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை

இதில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தனிப்பட்ட முரண்பாடே வாள் வெட்டு சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் விசாரணை

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மகிந்த ராஜப்பா பாக்ஸர் ஆட்சியின் பின்னரே யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்பட ஆரம்பித்தன .

கோத்தபாயவின் நிழல் டிவிஷன் படையின் நேரடி அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த வாள்வெட்டு தாக்குதல் யாழ்ப்பாணத்தில் அதிகரிக்க காரணமாக விளங்கியது.

இவ்வாறான குற்ற சாட்டு மக்களினால் முன் வைக்க பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

மாணவியை கொன்ற பேரூந்து
Posted in இலங்கை செய்திகள்

மாணவியை கொன்ற பேரூந்து

மாணவியை கொன்ற பேரூந்து

மாணவியை கொன்ற பேரூந்து ,புதிய கருவாத்தோட்டம் பிரதேசத்தில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி 10 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவு

புதிய கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடஹென்தென்ன பிரதேசத்தில் பேருந்தில் இருந்து இறங்கி குறித்த பேருந்துக்கு முன்னால் வீதியைக் கடக்கச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவி, புதிய கருவாத்தோட்டம் பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புதிய கருவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் அதிகரித்து செல்லும் பேரூந்து விபத்தினால் ,மக்கள் பேருந்துகளில் பயனாகவே அச்சம் கொண்டுள்ளனர் .

சாரதிகள் பேருந்துகளை வீதி விதிமுறைகளுக்கு ஏற்ப செலுத்தி செல்லா நிலையிலேயே ,இலங்கையில் நாடு தழுவிய நிலையில் அதிக பேரூந்து விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன என்ற விடயம் அம்பலமாகியுள்ளது .

நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு புதிய சட்டங்கள்
Posted in இலங்கை செய்திகள்

நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு புதிய சட்டங்கள்

நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு புதிய சட்டங்கள்

நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு புதிய சட்டங்கள் ,சமூக வலுவூட்டலுக்கு நிலம் ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், பயிரிடப்படாத

பயிர்ச்செய்கைக்கு நிலங்களை பயன்படுத்துவதற்கு அவசியமான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை

மேலும், சமூக வலுவூட்டலுக்காக கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு திறன்விருத்தி மற்றும் தொழிற்கல்வியை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இதனைத் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர்

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்,

சமூக வலுவூட்டலுக்காக கல்வி முறையில் மாற்றம் வரவேண்டும். அதன்படி, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் கணிதம், மதம், மொழி

போன்ற பாடங்களில் சித்திபெறாமை, பரீட்சையில் சித்திபெறாததாகக் கருதக் கூடாது.

எனவே, க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் பாடத்திட்டத்தில் திறன்விருத்தி மற்றும் தொழிற்கல்வி பாடத்தை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இத் தீர்மானத்தை அடுத்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்விச் சீர்திருத்தங்கள்

அதற்கிணங்க எதிர்காலத்தில் ஒரு முழுமையான நிபுணத்துவத்துவம் மிக்கவர்களை உருவாக்குவதற்குத் தேவையான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

சமூகத்தை வலுப்படுத்த நிலம் ஒரு முக்கிய காரணியாகும்.

எனவே, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற, ஆனால் இதுவரை பயிரிடப்படாத நிலத்தைப் பயன்படுத்தும் வகையில் புதிய சட்டங்களை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

முழு நாட்டையும் வலுவூட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அதற்காக, அரச மற்றும் தனியார் துறையினர் மட்டுமின்றி அனைத்து சுயதொழில் செய்பவர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றோம்.

அதேபோல், ஒரு தொழில்முயற்சியாளர்களைக் கொண்ட நாட்டை உருவாக்க நாமும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதனுடன், அனைவரும் தொழில் கல்வியையும் பெற வேண்டும்.

அபிவிருத்தி நாட்டை செய்வதற்கும் முன்னேற்றுவதற்கும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

முன்பள்ளி ஆசிரியர்களை வலுவூட்டுவதற்காக “லியசவிய நிகழ்ச்சித்திட்டத்தையும்” நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.

அஸ்வெசும பெறுபவர்களில் 12 இலட்சம் பயனாளிகளுக்கு வலுவூட்டுவது எமது முக்கிய நோக்கமாகும்.

அதற்காக இந்த வருடம் 03 இலட்சம் குடும்பங்கள் வலுவூட்டப்பட வேண்டும். அதற்குத் தேவையான சுமார் 188,000 ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

உலக வங்கி திட்டத்தின் கீழ்

அதன்போது, உலக வங்கி திட்டத்தின் கீழ் 10,000 குடும்பங்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் கீழ் 16,000 குடும்பங்களையும் வலுவூட்டுத் தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

அதற்காக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சியும் இம்மாதம் நிறைவடையும்.

இளைஞர் சேவைகள் மன்றம், தெங்கு அபிவிருத்திச் சபை மற்றும் சிறுதோட்ட அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து பல சமூக வலுவூட்டல் வேலைத்திட்டங்கள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இவற்றின் மூலம் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்க எதிர்பார்க்கின்றோம்” என்று சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் மேலும் தெரிவித்தார்.

போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண்கைது
Posted in இலங்கை செய்திகள்

போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண்கைது

போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண்கைது

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண்கைது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்கப் பிரிவினரால் கைது

விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போது, ​​அவரிடம் இருந்து 2 கிலோ 851 கிராம் கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொக்கெய்ன் தொகையின் பெறுமதி 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டார் ஊடாக

இந்த பெண் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து தோஹா – கட்டார் ஊடாக இந்த நாட்டுக்கு வந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது சூட்கேஸில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கோதுமை மா அடங்கிய 03 பொதிகளுடன் கொக்கைன் போதைப்பொருள் அடங்கிய 03 பொதிகளையும் மறைத்து வைத்திருந்தார்.

அவர் பிலிப்பைன்ஸில் வசிக்கும் 47 வயது உதவி கணக்காளர் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான பெண்ணின் நண்பியின் ஊடாக போதைப்பொருள் கடத்தல்காரர்களால் குறித்த போதைப்பொருள் இலங்கைக்குள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களால், குறித்த பெண் 5 நாட்களுக்கு இலங்கையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களில் தங்குவதற்கு தேவையான

வசதிகளை செய்து தருவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்
Posted in இலங்கை செய்திகள்

புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்

புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்

புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் ,நாட்டின் சனத்தொகை மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை போன்ற காரணிகளின் அடிப்படையில் மாத்திரமே

நிதி இராஜாங்க அமைச்சர்

புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கரவனெல்ல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர், சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 100 மதுபான அனுமதிப்பத்திரங்களில் 55 அனுமதிப்பத்திரங்களை அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான வேறு

நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் செயற்பட்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது –

வசூலிக்கப்படும் வரிகள்

மதுபான நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிகள் இவ்வளவு கவனம் செலுத்தி, முறைபடி வசூலித்த ஒரு காலம் வேறு எங்கும் இல்லை.

அத்துடன் குற்றம் சுமத்தப்பட்டது போல், சதொச நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்குமாறு எமக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை.

மேலும், இதுபோன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், மதுபான உரிமத்தை வேறு ஒருவருக்கு குத்தகைக்கு விட முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆகவே சட்டவிரோத மதுபானம் உற்பத்திச் செய்ததைக் கட்டுப்படுத்துவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும். மேலும், குறிப்பிட்ட பகுதிக்கு மதுபான உரிமம் வழங்கினால், பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாரின் கருத்தை கட்டாயம் கேட்க

வேண்டும். நியாயமான ஆட்சேபனைகள் எழும் போது எந்த நேரத்திலும் அந்தப் பகுதிகளுக்கு மதுபான உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க மாட்டோம்.


2003ம் ஆண்டு மட்டும் வரி விதிப்பால் மதுவின் விலை 108% அதிகரித்துள்ளது. ஒருபோதும் மதுவின் சட்டப்பூர்வ பயன்பாட்டை அரசு அதிகரிக்கப் போவதில்லை.

நண்பர்களுக்கு மதுபான உரிமம்

அரசு தனது நண்பர்களுக்கு மதுபான உரிமம் வழங்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம்.

தற்போது வரை, நாட்டிலுள்ள மதுபான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஆர்.பி. 04 உரிமம் வெளியிடும் போது முதற்கட்ட கட்டணம் எதுவும் செலுத்தப்படவில்லை என்றாலும், தற்போது ஒன்றரை கோடி ரூபாய் (15 மில்லியன்) கட்டணமாக வசூலிக்கின்றது.


அனைத்து மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கும் அறவிடப்படும் வருடாந்த கட்டணம் பத்து மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக சட்டவிரோத

மதுபானத்தின் வளர்ச்சியை குறைப்பதற்கும் சட்டப்பூர்வ மது பாவனையை குறைப்பதற்கும் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு
Posted in இலங்கை செய்திகள்

வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு

மக்கள் வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு

வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ,யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டுகளில் ஒன்று காணப்பட்டுள்ளது.

சாப்பிட்டவர் பாணுக்குள் கண்ணாடி

பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள் கண்ணாடிப் துண்டை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

குறித்த கடைக்கு சுன்னாகம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்தே பாண் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரால் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உரிய முறையில் உணவகங்களை கண்காணிக்க மறுப்பு

இலங்கை சுகாதார அமைச்சு உரிய முறையில் உணவகங்களை கண்காணிக்க மறுத்து வரும் நிலையிலேயே ,இவ்விதமான சம்பவங்கள் அதிகரித்து செல்ல காரணமாகிறது .

மக்கள் நாள் தோறும் அதிகம் உட்க்கொள்ளும் உணவாக பாண் காணப்படுகிறது .

அவ்வாறு அதிகம் உண்ணும் பாண் தயாரிக்கும் வெதுப்பகங்களை கண்காணிக்க மறுப்பதாலே ,இவ்வாறு பாண்களில் பொருட்கள் காணப்பட காரணமாகிறது .

மேற்படி குற்ற சாட்டை ,பாணை விரும்பி உண்ணும் மக்கள் தெரிவித்து வருகின்றனர் எனற விடயம் வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது .

வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை

வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை

வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை ,மொறொந்துடுவ, பொல்ஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களால் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மொறொந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாய்த்தர்க்கம் நீண்டதில் மோதல்

உயிரிழந்த நபருக்கும் அவரது மைத்துனருக்கும் இடையிலான வாய்த்தர்க்கம் நீண்டதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் சந்தேக நபரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த நபர் மேலும் சிலருடன் பொல்ஹேன பிரதேசத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்த போது இந்த தகராறு ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணை

சம்பவம் தொடர்பில் மொரந்துடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறு வெட்டி படுகொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

வோரோதம் காரணமாகவே வெட்டி படுகொலைகள் அதிகம் இடம்பெறுவதாக குற்றவியல் விசாரணை குழுக்கள் தெரிவிக்கின்றன .

அவ்வாறு தெரிவிக்கும் காவல்துறையினால் கூட இவ்வாறு இடம்பெறும் வெட்டி படுகொலை சம்பவங்களை ,தடுக்க முடியவில்லை என்ற விடயம் வெளியாகியுள்ளது .

துப்பாக்கிச் சூடு களுத்துறையில்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு களுத்துறையில்

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு களுத்துறையில் ,களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது 8 வயது மகள் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (20) இரவு கட்டுகுருந்த புகையிரத நிலைய பொல வீதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீட்டினுள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுகுருந்த பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டு கொலை

குறித்த நபர் தனது 3 பிள்ளைகளுடன் தனது வீட்டில் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரி 56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதிக்கு துக்கதினம் பிரகடனம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் துக்கதினம் பிரகடனம்

ஈரான் ஜனாதிபதிக்கு துக்கதினம் பிரகடனம்

இலங்கையில் துக்கதினம் பிரகடனம், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இன்று (21) இலங்கையில் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

ஈரானின் வடமேற்குப் பகுதியில்

ஈரானின் வடமேற்குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த ஈரான் வெளிவிவகார அமைச்சர், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உட்பட 8 பேரும் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதியின் மறைவை முன்னிட்டு

இந்நிலையில் ஈரான் ஜனாதிபதியின் மறைவை முன்னிட்டு ,இலங்கையில் துக்கதினம் பிரகடனம் 5 நாட்கள் துக்க தினத்தை அனுசரிக்க ஈரான் நாட்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, பல நாடுகளில் துக்க தினங்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறைக்கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

சிறைக்கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு

சிறைக்கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு

சிறைக்கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு ,காய்ச்சலால் மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று (20) இரவு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்ட 24 வயதுடைய நபர் ஒருரே இவ்வாறு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

குறித்த கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும், இது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர மாத்தறை சிறைச்சாலையில் உள்ள மற்றுமொரு கைதியும் காய்ச்சல் காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பரில் மாத்தறை சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சல் கைதிகள் பாதிக்கப்பட்டதோடு, சில மரணங்களும் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசைனால் பராமரிக்க படும் சிறை சாலைகளில் ,நோயினால் பாதிக்க பட்டு மரணமாகவும் நிலையில் ,கைதிகள் நிலை உள்ளது என்ற விடயம் ,இந்த கைதி மரணத்தின் ஊடக அம்பல .பட்டுள்ளது

சிறை சாலைகள் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடம் அல்ல என்பதையும் ,இவ்வாறு நோய் வாய்ப்பட்டு இறந்து விடுங்கள் என்ற விடயமே, இதன் ஊடக குற்றங்களை விளைவிக்கும் நபர்களுக்கு இலங்கை சிறைச்சாலை நிர்வாகம் தெரிவிப்பதை இதன் ஊடாக காணமுடிகிறது .