யாழில் வாள் வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள் வெட்டு

யாழில் வாள் வெட்டு

யாழில் வாள் வெட்டு ,யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொல்புரம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்திற்கு, பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இளைஞர்கள் இடையிலான மோதலே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை

இதில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தனிப்பட்ட முரண்பாடே வாள் வெட்டு சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் விசாரணை

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மகிந்த ராஜப்பா பாக்ஸர் ஆட்சியின் பின்னரே யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்பட ஆரம்பித்தன .

கோத்தபாயவின் நிழல் டிவிஷன் படையின் நேரடி அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த வாள்வெட்டு தாக்குதல் யாழ்ப்பாணத்தில் அதிகரிக்க காரணமாக விளங்கியது.

இவ்வாறான குற்ற சாட்டு மக்களினால் முன் வைக்க பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு வாள் வெட்டு சம்பவம் – மூவர் கைது

முல்லைத்தீவு வாள் வெட்டு சம்பவம் – மூவர் கைது

முல்லைத்தீவில் வாள் வெட்டு மற்றும் வாகனத்துக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புபட்ட

மூன்று சந்தேக நபர்களை யாழ்ப்பாண பொலிஸார் நவாலியில் வைத்து இன்று (06) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு வடக்கு பகுதியில் கடந்த 27ஆம் திகதி இரவு வீடு புகுந்த சுமார் 7 பேர்கொண்ட கும்பல் வாள் வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதன்போது வீட்டில் இருந்த நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீதும் தாக்குதல் நடத்தி

சேதப்படுத்தியுள்ளதுடன் வாகனம் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்து.

இந்த நிலையில் சி.சி.ரிவி கெமரா மூலம் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை வைத்து சந்தேக நபர்களை இனம் காணும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களை கைதுசெய்ய அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்பட்டவர்களாக பிரதான சந்தேக நபர்களாக சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களை இன்று (6) நாவலியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த யாழ்பாண பொலிஸார் சந்தேக நபர்களை முல்லைத்தீவு பொலிஸாரிடம் கையளிக்க உள்ளனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    வாள் வெட்டு குழுக்கள் யாழில் ஒழிக்க படும் -பொலிஸ்

    வாள் வெட்டுக் குழுக்கள்ஒழிக்க படும் -பொலிஸ்

    வாள் வெட்டு குழுக்கள்- யாழில் இயங்கும் ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டு குழுக்கள் செயற்படுகின்றன.

    அவற்றை அடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம். புதிய ஆண்டிற்குள் அவர்கள் அனைவரையும் எம்மால் ஒழிக்க முடியும்.

    யாழில் வாள்வெட்டு குழுக்களை முற்றாக அழிப்பதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.