நாட்டில் பலபகுதிகளில் சீரற்ற வானிலை
Posted in இலங்கை செய்திகள்

நாட்டில் பலபகுதிகளில் சீரற்ற வானிலை

நாட்டில் பலபகுதிகளில் சீரற்ற வானிலை

நாட்டில் பலபகுதிகளில் சீரற்ற வானிலை ,நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியாவில்

மழையுடனான காலநிலை காணப்படுகின்ற நிலையில் இன்று (25) காலை முதல் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.

குறிப்பாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி , வெண்டிகோனர் , பங்களாஹத்த , நானுஓயா , ரதல்ல குறுக்கு வீதி போன்ற

வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்கள்

இடங்களில் வழகைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம் காணப்படுகின்றது இதனால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றன.

நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் சென்ற வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியவாறும், வாகன விளக்குகளை ஒளிரவிட்டும் செல்வதை அவதானிக்க

முடிந்தது . மேலும் தொடர்ந்து மழை பெய்வதால் அதிக குளிருடன் கூடிய காலநிலை காணப்படுவதை உணரக் கிடைத்துள்ளது.

வெசாக் பௌர்ணமி தொடர் விடுமுறை

குறிப்பாக வெசாக் பௌர்ணமி தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையால் வெளி மாவட்டத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு வாகனங்களில் வருகை தந்துள்ளனர் எனவே குறித்த

சாரதிகளுக்கும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி கடும் பனிமூட்டம் நிலவுவதால் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் மிகவும் அவதானமாக

தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் வாகனங்கள் செலுத்தும் போது தங்களுக்கு உரியத்தான பக்கத்தில் வாகனங்களின் முகப்பு

விளக்குகளை ஒளிரச்செய்தவாறு வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Featured

Loading...
சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு

சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு

சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு ,சீரற்ற வானிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

36,900 மின்சார துண்டிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மின்விநியோகத்தை சீரமைக்க மேலதிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம் விநியோகம்

இதேவேளை, மின்சார பாவனையாளர்கள் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு அல்லது குறுஞ் செய்தி அனுப்பி மின்வெட்டு தொடர்பில் அறிவிக்க முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்க பட்ட ,பகுதிகளுக்கும் மின்சார தேவை உள்ள மக்களுக்கும் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள பட்டு ,அவர்கள் மின்சாரம் பெறும் வழிகள் பெற்று தரப்படும் என தெரிவிக்க பட்டுள்ளது .

Featured

Loading...