Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்குச் சட்டம்: மீறுவோர் மீது கடும் நடவடிக்கை photo

ஊரடங்குச் சட்டம்: மீறுவோர் மீது
கடும் நடவடிக்கை photo

கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் – தற்போது நடைமுறையில்

உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும். இதன் ஒரு கட்டமாக இன்று காலையில் புஸ்ஸலாவ நகரம் இவ்வாறு

காட்சியளிக்கின்றது

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் – மார்ச் இன்று 30 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6:00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு

மீண்டும் இன்றே பிற்பகல் 2:00 மணிக்கு நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.

களுத்துறை மாவட்டத்தின் அட்டுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தின் அக்குரணை ஆகிய கிராமங்கள் முற்றாகத்

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளுக்குள் யாரும் உள் நுழையவோ அல்லது அங்கிருந்து யாரும் வெளியேறவோ தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாகப் பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளைத் துஷ்பிரயோகம்

செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா கிருமி பரவுவதைத் தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த

நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது

ஊரடங்குச் சட்டம்
ஊரடங்குச் சட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கை மீறிய 6,850 பேர் காவல்துறையினரால் கைது

ஊரடங்கை மீறிய 6,850 பேர் காவல்துறையினரால் கைது

இலங்கையில் பிறப்பிக்க பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறி செயல்

பட்ட சுமார் 6,850 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக இலங்கை

காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

மக்களை நோயில் இருந்து காப்பாற்றி கொள்ளும் முகமாக வீட்டை

விட்டு வெளியில் நடமாட வேண்டாம் என வேண்டுதல் விடுக்க பட்ட

பொழுதும் அதனை அலட்சிய படுத்தி இவ்விதம் வெளியில்

சென்றவர்கள் கைது செய்ய பட்டுள்ளதக போலீசார் தெரிவித்துள்ளனர்

ஊரடங்கை மீறிய
ஊரடங்கை மீறிய
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோவால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

இலங்கையில்கொரனோவால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலின் எண்ணிக்கை சுமார் 120 ஆக உயரவடைந்துள்ளது

மேலும் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்க படுகிறது

எனினும் உரிய இழப்புக்களை அரசு வெளியிடாது மறைத்து வருகிறது என்ற குற்ற சாட்டு


பரவலாக மக்கள் மத்தியில் முன் வைக்க படுகிறது

இலங்கையில்கொரனோவால்
இலங்கையில்கொரனோவால்

Posted in இலங்கை செய்திகள்

இரண்டாயிரம் ரூபா பெருமதியான உணவு பொதி பெருந்தோட்ட மக்களுக்கு மலையகத்தில் வினியோகம் photo

இரண்டாயிரம் ரூபா பெருமதியான உணவு பொதிபெருந்தோட்ட
மக்களுக்கு மலையகத்தில் வினியோகம்

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக அச்சதிற்கு உள்ளாகியிருக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு பெருந்தோட்ட

நிறுவனங்கள் தற்போது 2000.00 ரூபா பெருமதியான உணவு பொருட்கள் அடங்கிய பொதியினை மலையகத்தில் பல்வேறு

தோட்டங்களில் வழங்கி வருகின்றது. அதன் ஒருகட்டமாக கண்டி மாவட்டம் தொலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ

டெல்டா தோட்ட மக்களுக்கு இந்த உணவு பொதிகள் (28) வழங்கப்பட்டன.

இரண்டாயிரம் ரூபா பெருமதியான
இரண்டாயிரம் ரூபா பெருமதியான
Posted in இலங்கை செய்திகள்

கொரோனாவை’ சாதகமாக்கும் சிறிலங்கா அரசாங்கம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

கொரோனாவை’ சாதகமாக்கும் சிறிலங்கா அரசாங்கம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

உலக மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் நெருக்கடிநிலையினை தனக்கு சதகமாக்கி

சிறிலங்கா அரசாங்கம் நடந்து கொள்வதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்போர்கைதிகளின் உயிர்ப்பாதுகாப்பு தொடர்பிலும்,

சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் தமிழர்களை படுகொலை செய்த போர்குற்றவாளி சுனில் இரத்திநாயக்கா விடுதலை தொடர்பிலும்

இருவேறு ஊடகச் செய்திகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.

சிறைகளில் வைக்கப்பட்டுள்ள தமிழ்போர்கைதிகளின் (அரசியற்கைதிகள்) உயிர்பாதுகாப்பினை

உத்தரவாதப்படுத்துமாறு, சிறிலங்காவின் ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும், இந்தியா, அமெரிக்கா மற்றும் சர்வதேச

செங்சிலுவைச் சங்கத்துக்கும் அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,

தமிழ்போர்கைதிகள் சிறிலங்கா அரசின் பின்புலத்துடன் சிங்களக் கைதிகளால் படுகொலை செய்யப்பட்டலாம் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ்போர்கைதிகளுக்கு நெருக்கமான வட்டாரங்களின் தகவல்களில், கொரோன வைரஸ் தொற்று தொடர்பில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தின் போது, சிங்கள கைதிகள்

தமிழ்போர்கைதிகளை தங்களுடன் இணைந்து வருமாறு அழைத்திருந்ததாகவும், இதற்கு தமிழ்கைதிகள் மறுத்திவிட்ட

நிலையில், தமிழ்கைதிகள் மீது சிங்கள கைதிகளுக்கு வெறுப்பு நிலைகாணப்படுவதாகவும் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ

அரசாங்கம், இந்த வெறுப்புணர்வை பயன்படுத்தி சிங்கள கைதிகள் ஊடாக தமிழ்கைதிகளை படுகொலை செய்யலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.

1) 1983ம் ஆண்டு வெலிக்கடை சிறையில் 53 தமிழர்கள் படுகொலை
2) 1997ம் ஆண்டு களுத்துறை சிறையில் 3 தமிழர்கள் படுகொலை
3) 2000ம் ஆண்டு பிந்துனுவேவ சிறையில் 26 தமிழர்கள் படுகொலை

சிறைக்கூடங்களில் சிங்கள கைதிகளை ஏவிவிட்டு தமிழர்களை படுகொலை செய்த சம்பவங்கள் சிறிலங்காவின் கடந்த கால

வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளாக பதிவாகியுள்ளன என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோடிட்டுக்காட்டியுள்ளது.

இதேவேளை, சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த

போர்குற்றவாளி சுனில் இரத்திநாயக்கா விடுதலை செய்யப்பட்டுள்ளமையானது, சிறிலங்காவில் நீதிக்கானவெளி

தமிழர்களுக்கு இல்லை என்பதனை வெளிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவை

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, அனைத்துலக நீதிமன்றத்திலோ நிறுத்தவதன் ஊடாகத்தான் தமிழர்களுக்கான

நீதியினைப் பெறமுடியும் எனத் மற்றைய ஊடகச் செய்தியில் தெரிவித்துள்ளது.

இதேவேளை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மனிதஉயிர்களுக்கு அச்சுறுத்தலாக பாரிய நெருக்கடி நிலையினை

ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை தனக்கு சாதகமாக்கிய ஒரே அரசு என்ற இடத்தினை ‘சிறிலங்கா’ பிடித்துள்ளது என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்டத்திற்கு சென்று உணவு பொருட்கள் விற்பனை photo

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்டத்திற்கு சென்று
உணவு பொருட்கள் விற்பனை photo

கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முகமாக அரசாங்கத்தினால்

முன்னெடுக்கபட்டுள்ள ஊரடங்கு சட்ட வேலையில் பிரதேச செயலங்களில் அனுமதிபெற்ற தனியார் கடை உரிமையாளர்கள்

வீடுகளிலேயே தங்கியிருக்கும் தோட்ட மற்றும் கிராமபுற வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வினியோக்கும்

செயற்பாடுகள் மலையத்தில் சில பிரதேசங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் கண்டி மாவட்டம்

தொலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ டெல்டா தோட்டத்தில் இந்த செயற்திட்டம் நடைமுறைபடுத்தபட்டது

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு
Posted in இலங்கை செய்திகள்

லண்டன் டூட்டிங் பகுதியில் டாக்ஸி ஓடிய தமிழர் கொரனோ தாக்கி பலி

லண்டன் டூட்டிங் பகுதியில் டாக்ஸி ஓடிய தமிழர் கொரனோ தாக்கி பலி

லண்டன் ட்டோடிங் பகுதியில் யாழ்ப்பாணம் வல்வெட்டி துறையைச சேர்ந்த தமிழர் ஒருவர் கொரனோ


வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகியுள்ளார்

இவ்வாறு பலியானவர் டாக்சி சாரதியாக பணியாற்றியுள்ளார்
அவ்வேளை பயணியாக வந்தவர் வழங்கிய நோயின் தாக்குதலுக்கு

காரணமாக இவர் பலியாகியுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது

மேற்படி தமிழருக்கு முக நூல் ,மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆழ்ந்த இரங்கல்களை மக்கள் தெரிவித்த வண்னம் உள்ளனர்

பிரிட்டனில் இதுவரை ஐந்து இலங்கையர்கள் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளதாக சமூக வலைத்தள

பகுதிகளில் அவதானிக்க முடிகிறது

லண்டன் டூட்டிங் பகுதியில்
லண்டன் டூட்டிங் பகுதியில்
https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc&feature=emb_title
Posted in இலங்கை செய்திகள்

கொரனோவை கட்டுப்படுத்த மலத்தியோன் அடிக்கும் இராணுவம்

கொரனோவை கட்டுப்படுத்த மலத்தியோன் அடிக்கும் இராணுவம்

இலங்கை மல்லாவி பகுதியில் சுகாதார அமைச்சினால் வேகமாக பரவும் வைரஸ் நோயை கட்டு படுத்தும் நோக்குடன் வீடு வீடாக

சென்றும் ,பொது இடங்கள் எங்கும் மலத்தியோன் அடிக்கும் பணியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது

இதன் ஊடகங் இந்த நோயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என அது நம்பிக்கை வெளியிட்டுள்ளது

சீனா இது போன்று செய்துள்ளதாக கருதும் இலங்கை இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக நோக்க படுகிறது

கொரனோவை கட்டுப்படுத்த
கொரனோவை கட்டுப்படுத்த
https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc&feature=emb_title
Posted in இலங்கை செய்திகள்

கொரனோவால் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய விழா தடை

கொரனோவால் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய விழா தடை

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக மிக புகழ் பெற்று விளங்கும் வரலாற்று சிறப்பு மிக்க

நாகதம்பிரான் ஆலய விழாவை நடத்திட தடை செய்யப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது

எனவே இதனை கருத்த்தில் கொண்டு மக்கள் அந்த ஆலய வழிபாட்டுக்கு தமது நேர்த்திக் கடன்களை செய்திட வரவேண்டாம்

என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

நோயின் தாக்குதலை தடுக்கும் முகமாக முதன் முதலாக இந்த விழாவுக்கு தடை ஏற்பட்டுள்ளது

கீழ் வரும் அந்த அறிவிப்பை முழுமையாக படியுங்கள் ,உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதனை பகிருங்கள்

கொரனோவால் புளியம்பொக்கணை
கொரனோவால் புளியம்பொக்கணை
Posted in இலங்கை செய்திகள்

ஸ்பெயிலில் ஒரேநாளில் 838 பேர் பலி ,இத்தாலியில் 50 மருத்துவர்கள் 889 பேர் பலி

ஸ்பெயிலில் ஒரேநாளில் 838 பேர் பலி ,இத்தாலியில் 50 மருத்துவர்கள் 889 பேர் பலி

உலககில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் ஸ்பெயினில் சுமார் 838 பேர் பலியாகியுள்ளனர்

,இதன் மொத்த உயிர்பலி எண்ணிக்கை 6,528 ஆக உயர்வடைந்துள்ளது

அதேபோல ஒரே நாளில் இத்தாலியில் 889 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை பலியானவர்கள் மொத்த எண்னிக்கை 10,023 ஆக உயர்வடைந்துள்ளது

இந்த நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கிய நிபுணத்துவம் கொண்ட ஐம்பது மருத்துவர்களும் பலியாகியுள்ளனர் .

மேலும் ஐந்தாயிரம் மருத்துவர்கள் ,தாதியர்கள் உள்ளிட்டவர்கள் பாதிக்க பட்ட நிலையில் தனிமை படுத்த பட்டுள்ளனர்

மருத்துவர்கள் பெரும் நெருக்கடியில் சிகிச்சை வழங்கி வருகின்றனர் ,உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

பிரிட்டனை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு முற்றாக முடக்க வேண்டும் எனவும் அது தவறின் உயிரிழப்பு பல்லாயிரங்களை எட்டும் என எச்சரிக்க பட்டுள்ளது

ஸ்பெயிலில் ஒரேநாளில்
ஸ்பெயிலில் ஒரேநாளில்
https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு கொரனோ – அனைவரையும் தனிமை படுத்த நடவடிக்கை

இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு கொரனோ – அனைவரையும் தனிமை படுத்த நடவடிக்கை

இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த மக்களில் நால்வருக்கு கொரனோ நோயானது கண்டு பிடிக்க பட்ட நிலையில் அனைவரும்

தம்மை தாம் சுய தனிமைக்கு உட்படுத்த கொள்ள வேண்டும் என வடமாகாண சுகாதார அமைச்சினால் அவசர வேண்டுதல் விடுக்க பட்டுளள்து

மேலதிக விபரம் கீழே

இந்தியாவில் இருந்து
இந்தியாவில் இருந்து

Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடல் படை தளத்தில் துப்பாக்கி சண்டை ஒருவர் பலி – இருவர் காயம்

இலங்கை கடல் படை தளத்தில் துப்பாக்கி சண்டை ஒருவர் பலி – இருவர் காயம்

இலங்கை கல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள Mohottuwarama கடற்படை முகாமில் இடம்பெற்ற


துப்பாக்கி சூட்டு சண்டையில் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

காயமடைந்தவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

இந்த சூட்டு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன

https://www.youtube.com/watch?v=6uoMUItYMPQ
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 115 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 115 பேர் பாதிப்பு

இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 115 பேர் பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும் இதுவரை இலங்கையில் ஒருவர் பலியாகியுள்ளார்

மேலும் எதிர்வரும் நாட்களில் உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் என கருத்துரைக்க பட்டுள்ளது ,

இந்த நோயின் தாக்கம் தமிழர் பகுதிகளில் அதிகமாக காணப்படும் என உள்ளிருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன

தொடர்ந்து மருத்துவர் சத்திய மூர்த்தி இழப்பு விகிதத்தை மறைத்து வருவதான குற்ற சாட்டு முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

இலங்கையில் கொரனோ
இலங்கையில் கொரனோ
Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் இலங்கை மருத்துவர் உள்ளிட்ட இருவர் கொரனோ தாக்குதலில் பலி

பிரிட்டனில் இலங்கை மருத்துவர் உள்ளிட்ட இருவர் கொரனோ தாக்குதலில் பலி

பிரிட்டனில் இலங்கையை சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவரான கென்றி யெவர்த்தன உள்ளிட்ட இரு இலங்கையர்கள்


கொரனோ தாக்குதலில் பலியாகியுள்ளனர் என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி இவர்கள் பலியாகியுள்ளனர்


மேலும் இலங்கை தவிர்ந்த நாடுகளில் இலங்கையின் உத்தியோக பூர்வ அறிவிப்பின் பிரகாரம் நான்கு


இலங்கையர்கள் இந்த வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர்

இருபதயிரம் உயிர் பலிக்குள்ளதாக தாம் இந்த வைரஸை கட்டு

பாட்டுக்குள் கொண்டு வருவோம் என பிரிட்டன் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் மருத்துவர் உள்ளிட்ட
பிரிட்டனில் மருத்துவர் உள்ளிட்ட
https://www.youtube.com/watch?v=Y9cGn3NEqVk
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஒரு நாளில் 856 பேர் கைது

இலங்கையில் ஒரு நாளில் 856 பேர் கைது

இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதியில் உலவிய மக்களில் 856 பேர் கைது

செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

காவல்துறையினரின் அனுமதியின்றி வெளியில் நடமாடும் நபர்கள் தொடர்ச்சியாக கைது செய்ய பட்ட வண்ணம் உள்ளனர்

எனினும் இவ்வாறு நடமாடுபவர்கள் ஊடக இந்த நோயின் தாக்குதல் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது

இலங்கையில் ஒரு நாளில்
இலங்கையில் ஒரு நாளில்
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ பீதி -நீர்கொழும்பு சிறையில் இருந்து 175 கைதிகள் விடுதலை

கொரனோ பீதி -நீர்கொழும்பு சிறையில் இருந்து 175 கைதிகள் விடுதலை

இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலின் பீதி காரணமாக நீர்கொழும்பு சிறையில் தடுத்து

வைக்க பட்டிருந்த சுமார் 175 கைதிகள் விடுதலை செய்ய பட்டுள்ளனர்

சிறை காலத்தில் அவர்களின் நன் நடத்தைகளை அடிப்படையாக கொண்டு இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது


என தெரிவிக்க
பட்டுள்ளது

கொரனோ பீதி
கொரனோ பீதி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ தாக்குதலுக்கு ஒருவர் பலி 113 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரனோ தாக்குதலுக்கு ஒருவர் பலி

இலங்கையில் கொரனோ வைரஸ் தாக்குதலில் முலாவது நபர் பலியாகியுள்ளார் ,


இவ்வாறு பலியானவர் மாறவில பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது

இவருக்கு கிட்னி மாற்று நோயினால் சிக்கி தவித்தவரே இவ்வாறு பரிதாபகராமாக பலியாகியுள்ளார்

இந்த நோயின் தாக்குதலுக்கு சிக்கி 113 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

மேலும் சிங்கள அரசு திட்டமிட்டு மக்கள் இழப்புக்களை மறைத்து வந்த நிலையில் தற்பொழுது முதலாவது உயிர்பலி
என அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

இலங்கையில் கொரனோ
இலங்கையில் கொரனோ
Posted in இலங்கை செய்திகள் கொரனோ வைரஸ்

ஸ்பெயினில் ஒரே நாளில் 832 பேர் பலி -உலகில் 600,000 லட்சம் பேர் பாதிப்பு

ஸ்பெயினில் ஒரே நாளில் 832 பேர் பலி -உலகில் 600,000 லட்சம் பேர் பாதிப்பு

ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் நோயின்

தாக்குதலில் சிக்கி 832 பேர் பலியாகியுள்ளனர் மொத்த இறப்பு

எண்ணிக்கை 5,690, எட்டி பிடித்துள்ளது

மேலும் உலகலாவிய ரீதியில் இதுவரை 27,000 பேர்

பலியாகியுள்ளனர் மேலும் ஆறு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

எதிர்வரும் நாட்களில் ஒரு மில்லியன் மக்கள் இந்த நோயினால்

பாதிக்க படுவார்கள் என்ற மறுபட்ட தகவல் பீதியை கிளப்பியுள்ளது

முடிந்தவரை மக்களை வீட்டுக்குள் முடக்கும் நகர்வில் இராணுவம்

,போலீசார் ஈடுபட்டுள்ளனர்

இத்தாலியில் இறுதியாக வெளிவந்த தகவலின் படி ஒரே நாளில் 919 பேர் பலியாகியுள்ளனர் ,அதன் மொத்த உயிர்பலி எண்ணிக்கை

9,134 ஆக உள்ளது , அதேபோல அமெரிக்காவில் 1,700 பேர் பலியாகியுள்ளனர் ,104.000 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

பிரிட்டனில் ஒரேநாளில் 181 பேர் பலியாகியுள்ளனர் ,பதின் ஐந்தாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

ஸ்பெயினில் ஒரே நாளில்
ஸ்பெயினில் ஒரே நாளில்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் பெண்களின் சங்கிலியை திருடிவந்த -திருடன் மடக்கி பிடிப்பு

வவுனியாவில் பெண்களின் சங்கிலியை திருடிவந்த -திருடன் மடக்கி பிடிப்பு

வவுனியா கற்குளம் பகுதியைச சேர்ந்த 25 வயதுடைய வாலிபர்

ஒருவர் காவல்துறையினரால் கைது
செய்ய பட்டுளளார் ,

கைதானவர் ஊரடங்கு சட்டம் தளர்த்த படும் வேளையில் தனிமையில் வீதியில் செல்லும் பெண்களின் தங்க சங்கிலியை

அறுத்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது

ஊந்துருளியின் இலக்க தகட்டை மாற்றி ,மாற்றி இவர் கொள்ளையில் ஈடுபட்டு பின்னர் தப்பித்து சென்றது

அம்பலமாகியுள்ளது

பாதிக்க பட்ட பெண்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில்

போலீசார் விசேட அணியினர் மேற்கொண்ட விசாரணையின் இந்த திருடன் கைது செய்ய பட்டுளளார்

வவுனியாவில் பெண்களின்
வவுனியாவில் பெண்களின்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பல குடும்பங்களுக்கு கொரனோ இறக்கும் நிலையில் குடும்பம் – மறைக்கும் அரசு

யாழில் பல குடும்பங்களுக்கு கொரனோ இறக்கும் நிலையில் குடும்பம் – மறைக்கும் அரசு

இலங்கை வடக்கு தமிழர் தாயக பகுதியான யாழ்ப்பாணத்தில்

உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய

நிலையில் பல குடும்பங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன

இதில் சில தமிழர் குடும்பங்கள் பலமாக இந்த நோயால் பாதிக்க

பட்டுள்ளன .

அந்த குடும்பங்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளன

எனினும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

இதனை மறைத்து வருவதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது

இழப்புக்களை குறைத்து நாடு பாதுகாப்பாக உள்ளதான தோற்ற

பட்டாடை உருவாக்க இராணுவத்தை கொண்டு இந்த மக்களை

மிரட்டி அடக்கி வருகிறது

இந்த நோய் தொடர்பான தகவல்கள் வெளியில் பரவ விடாது

தணிக்கைக்கு உள்ளாக்க பட்டுள்ளது ,அவ்வாறு மீறி கூற

படுபவர்கள் வதந்தி பரப்பினார்கள் என கைது செய்ய பட்டு

சிறைகளில் அடைக்க பட்டுள்ளனர்

வரும் நாட்களில் இலங்கை கூறும் தகவல் நிலைகளுக்கு

எதிர்மறையாக பல உயிர்பலிகள் இடம்பெறும் என உள்ளிருந்து

கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன

பிந்திய செய்தி இதில் அழுத்தி படிக்க யாழில் வேகமாக பரவும் கொரனோ -மரண பொறிக்குள் வடக்கு தமிழர்கள்

பிந்திய விசேட செய்தி – இலங்கையில் ஐந்து கிராமங்களில் 100 பேருக்கு வைரஸ் – மக்கள் செல்ல தடை- இராணுவம் குவிப்பு

யாழில் பல குடும்பங்களுக்கு கொரனோ
யாழில் பல குடும்பங்களுக்கு கொரனோ
https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc