Tag: கடும்
இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்தமுறை விட்ட தவறுகளை மீளவும் ஒரு முறை செய்திட முடிந்தால் அது மிகப்பெரும் பாதிப்பினை யூத படைகளுக்கு ஏற்படுத்தும் என ஈரான் முக்கிய இராணுவ தளபதி ஒருவர் சூளுரைத்துள்ளார் .
இராணுவ கூட்டம்
இராணுவ கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்று பொழுது இந்த மிரட்டலை அவர் பகிரங்கமாக விடுத்துள்ளார் .
ஈரானிய ஜனாதிபதி வெளியுறவு அமைச்சர் முக்கிய இராணுவ தளபதிகள் ஆலோசர்கள் ஆய்வாளர்கள் நிபுணர்கள் என பலரை யூத படைகள் போட்டு தள்ளின.
மொசாட் முன்னெடுக்கும் , உளவு விளையாட்டில் ஈரானுடைய முக்கியமான தளபதிகள் பலியாகி இருந்தனர் .
இவ்வாறான நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறுமாக இருந்தால், யூத படையும் யூத அரசும் மிகப்பெரும் பாதிப்பினையும் இழப்பையும் சந்திக்க நேரிடும் என அவர் உறுமி இருக்கிறார் .
காசாவில் மீள யுத்தம்
பாலஸ்தீனம் காசாவில் மீள யுத்தத்தை இஸ்ரேல் படைகள் ஆரம்பித்ததை அடுத்து ஈரானுடைய இராணுவ தலைமையுடைய இந்த அதிரடி அறிவிப்பும் மிரட்டலும் வெளியாகி உள்ளது.
மொசாட் உளவுத்துறை அடங்குமா .இந்த மிரட்டலை ஏற்று ஒதுங்கி நிற்குமா .எதிர்காலம் இஸ்ரேல் இராணுவ தளபதிகளை இலக்கு வைத்து தாக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம் நடக்கப் போவது என்ன .
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து அவசரகாலக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

இலங்கையில் சீனா,இந்தியா கடும் போட்டி
இலங்கையில் சீனா,இந்தியா கடும் போட்டி
இலங்கையில் ஏற்பட்டுள்ள இன்றைய நெருக்கடி நிலையை அடுத்து தற்பொழுது
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போட்டிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இந்த போட்டிகளின் விளைவாக இரு நாடுகளும் முண்டியடித்து இலங்கைக்கு கடன் அடைப்படையில்
உதவிகளை வழங்கிய வண்ணம் உள்ளன
இது இலங்கையை தமது கட்டுப்பட்டுக்குள் வைத்து கொள்ளும் சதுரங்க ஆட்டமாக மாற்றம் பெற்றுள்ளது
கடனை கொடுத்து இலங்கையை சிதைத்த சீனா நல்ல பிள்ளை வேடம்
போட்டு மீளவும் நெருக்கடி நிலைக்குள் தள்ளிவிட தனது விளையாடலை ஆரம்பித்துள்ளது
இது மகிந்த சிந்தனைகளின் மீள் இடம்பெறும் தவறான ஆட்டமாக நோக்க படுகிறது ,எதிர்வரும் மூன்று ஆண்டுகளில்
இலங்கை மிக மோசமான நிலையை சந்திக்கும் என எதிர் பார்க்கலாம்
ஊரடங்குச் சட்டம்: மீறுவோர் மீது கடும் நடவடிக்கை photo
ஊரடங்குச் சட்டம்: மீறுவோர் மீது
கடும் நடவடிக்கை photo
கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் – தற்போது நடைமுறையில்
உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும். இதன் ஒரு கட்டமாக இன்று காலையில் புஸ்ஸலாவ நகரம் இவ்வாறு
காட்சியளிக்கின்றது
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் – மார்ச் இன்று 30 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6:00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு
மீண்டும் இன்றே பிற்பகல் 2:00 மணிக்கு நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.
களுத்துறை மாவட்டத்தின் அட்டுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தின் அக்குரணை ஆகிய கிராமங்கள் முற்றாகத்
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளுக்குள் யாரும் உள் நுழையவோ அல்லது அங்கிருந்து யாரும் வெளியேறவோ தடை செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாகப் பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளைத் துஷ்பிரயோகம்
செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
கொரோனா கிருமி பரவுவதைத் தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த
நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது













