Posted in இலங்கை செய்திகள்

514 அதிகாரிகள் மற்றும் 14140 ஏனைய இராணுவ சிப்பாய்கள் பதவி உ யர்வு

514 அதிகாரிகள் மற்றும் 14140 ஏனைய இராணுவ சிப்பாய்கள் பதவி உ யர்வு

இலங்கை இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தற்பொழுது

514 அதிகாரிகள் மற்றும் 14140 ஏனைய இராணுவ சிப்பாய்கள் தங்கள் பதவி உயர்வுகளைப் பெற்றுள்ளனர்.

அதன்படி, நான் இராணுவத் தளபதியாக பதவியேற்றதிலிருந்து 1897 அதிகாரிகள்

மற்றும் 41910 இராணுவ சிப்பாய்கள் அவர்களின் அடுத்தடுத்த பதவிகளில்

உயர்த்தப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

Posted in இலங்கை செய்திகள்

20 தொடர்பான உயர் நீதிமன்ற நிலைபாடு சபாநாயகரிடம்

20 தொடர்பான உயர் நீதிமன்ற நிலைபாடு சபாநாயகரிடம்

20 ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்த மூலத்திற்கு எதிராக தாக்கல்

செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான இரகசிய நிலைபாடு தனது அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை அலுவலகத்திற்கு சென்று அதனை திறந்து பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில்

குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

குறைந்த வருமான பெறுபவர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம்

குறைந்த வருமான பெறுபவர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம்

கொவிட் 19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள சமுர்த்தி மற்றும் குறைந்த வருமான

பெறுபவர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தொடர்ந்து தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு நிலையில் இந்த நிலமை

தொடர்ந்து நீடித்தால் அவர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை

எடுப்பதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

வரணி பகுதி கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு

வரணி பகுதி கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு

யாழ். தென்மராட்சி வரணி பகுதியில் உள்ள அந்தோணியார் தேவாலய கிணற்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

வரணியில் அமைந்துள்ள குறித்த அந்தோணியார் தேவாலயத்தின் திருவிழா ஆரம்பமாக உள்ள நிலையில் இன்று (09) கிணறு துப்பரவு செய்யப்பட்டது.

இதன்போது சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் இருப்பதை அறிந்து

பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதையடுத்து அக்கிணற்றில்

இருந்து இன்று மாலை ஒரு தொகுதி வெடி பொருட்கள் கொடிகாமம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

12 மோட்டார் குண்டுகளும் ஒரு கைக்குண்டு என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெடி பொருட்கள் மீட்கப்பட்ட வரணி அந்தோணியார் தேவாலய வளாகத்திற்கு முன்பாக இராணுவ முகம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

வேகமாக பரவும் கொரனோ – புதிதாக 16 பேர் பாதிப்பு

வேகமாக பரவும் கொரனோ – புதிதாக 16 பேர் பாதிப்பு

இலங்கையில் மிக வேகமாக பரவி வருகிறது கொரனோ ,இவ்வேளை

ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் உள்ளிட்ட பதினாறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்கள் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் ,


மேலும் பாதிக்க பட்ட இடங்களுக்கு மக்கள் செல்வதற்கு தடை விதிக்க

பட்டுள்ளதுடன் ,அப்பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் அடித்து பூட்ட பட்டு வருகிறது

இவ்வேளை இலங்கை எங்கும் வெளிநாட்டு சாராய கடைகள்

,காசினோக போன்றவை நடத்த 31 ஆம் திகதி வரை தடை விதிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

மதுபான சாலைகள் மூடப்படாது-மகிழ்ச்சியில் குடி மகன்கள்

மதுபான சாலைகள் மூடப்படாது-மகிழ்ச்சியில் குடி மகன்கள்

ஊரடங்குச் சட்டம் இல்லாத பிரதேசங்களில் மதுபான சாலைகளை மூடும்

நோக்கமில்லை என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும்,

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில்

மதுபானசாலைகள் மூடப்படும்

Posted in இலங்கை செய்திகள்

சனி,ஞாயிறு ஊரடங்கு இல்லை : பொலிஸ்

சனி,ஞாயிறு ஊரடங்கு இல்லை : பொலிஸ்

சனி, ஞாயிற்றுகளில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று பிரதி

பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (9) காலை தெரிவித்தார்.

அவ்வாறானதொரு எண்ணம் தற்போதைக்கு இல்லை. பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முடிவுகளை

அடிப்படையாகக்கொண்டே முடிவு எடுக்கப்படும். சிலவேளை மேலும் சில பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு

சட்டத்தை அமுல்படுத்தவேண்டி வந்தாலும் முழு நாட்டிலும் நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடரும். இன்று காலை 8

மணி முதல் இரவு 8 மணிவரை சுகாதார கட்டுப்பாட்டுகளுடன் சில வர்த்தக நிலைங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் மாத்திரமே வெளியில் செல்லுங்கள்.” என்றார்.

Posted in இலங்கை செய்திகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் இன்று திறப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் இன்று திறப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய

உணவுப்பொருள் விற்பனை நிலையங்கள் இன்று (09) திறக்கப்பட்டவுள்ளன.

இதற்கமைவாக இந்தப்பகுதிகளில் இன்று காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8 .00 மணிவரையில் இந்த வர்த்தக நிலையங்களை

திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள கம்பஹா மாவட்டத்தின் சகல சதொச, கூட்டுறவு மற்றும்

பொருளாதார மத்திய நிலையங்கள் இன்று முதல் திறக்கப்படும் என

அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வெலிசறை பொருளாதார நிலையமும் திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் தறபோது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் கம்பஹா மாவட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை சாதாரண விலையில்

விநியோகிப்பது சம்பந்தமாக அமைச்சில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்ததையின் போது இதுகுறித்து தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்..

Posted in இலங்கை செய்திகள்

மினுவாங்கொட கொவிட் 19 – நோயாளர்களின் எண்ணிக்கை 1053 ஆக அதிகரிப்பு

மினுவாங்கொட கொவிட் 19 – நோயாளர்களின் எண்ணிக்கை 1053 ஆக அதிகரிப்பு

மினுவாங்கொட கொவிட் கொத்தணியில் இனங்காணப்பட்டுள்ள மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1053 ஆக அதிகரித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்றிரவு 10.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் குறித்த தனியார் நிறுவன ஊழியர்கள்

இருவர் உட்பட அந்த நிறுவன ஊழியர்களுடன் தொடர்பைப் பேணிய

மேலும் 8 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று மாலை உறுதி செயயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 இல் புதுப்பிக்கப்பட்ட தரவுகள்

4488
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

1197
சிகிச்சை பெறும் நோயாளிகள்

0
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

3278
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

13
இறப்பு எண்ணிக்கை

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட ரயில் ஏற்பாடு

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட ரயில் ஏற்பாடு

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட ரயில் பெட்டி ஒன்று பொதுவான ரயில் சேவையில் இணைக்கப்படும்.

எதிர்வரும் தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காக தோற்றும் மாணவ மாணவிகளுக்காக பிரதான

ரயில் பாதைகளில் விடேச ரயில் சேவை பாதுகாப்பு முறையுடன் முன்னெடுக்கப்படும் என்று ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் நிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எமது செய்தி பிரிவிற்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இதற்கமைவாக பிரதான ரயில் பாதைகளில்

சேவையில் ஈடுபடும் ரயில்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம் சுகாதார பாதுகாப்புடன் கூடிய சில ரயில் பெட்டிகளை இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் உள்ள கம்பஹா மற்றும் வெயாங்கொடைக்கிடையிலான ரயில் நிலையங்களில்

நிறுத்தப்படும். ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பிரதேசங்களில் நிறுத்தப்படும் இந்த ரயில்களில் பயணிகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது.

விசேட ரயில் பெட்களுடன் சேவையில் ஈடுபடும் ரயில்களில் மாணவர்களின் பாதுகாப்பிற்காக ரயில் பாதுகாப்பு அதிகாரி

ஒருவரும் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இன்றைய தினம் பரீட்சை திணைக்களத்தில் இது தொடர்பாக இறுதி பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

அரச பணத்தில் வெளி நாடுகள் சுற்றிய சுமந்திரன்,சம்பந்தர்- ஊழலை போட்டுடைத்த மகிந்தா

அரச பணத்தில் வெளி நாடுகள் சுற்றிய சுமந்திரன்,சம்பந்தர்- ஊழலை போட்டுடைத்த மகிந்தா

வெளிநாட்டு சுற்றுபயணங்களில் ஈடுபட்ட அதிகாரிகள் 20 பேருக்கான விமான பயணச்சீட்டு கட்டண செலவுகள் ,கொடுப்பனவாக ரூபாய் 141 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது

2015 முதல் 2019 வரையான விசாரணை நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு சுற்றுபயணங்களில் ஈடுபட்ட எஃப்.சி.ஐ.டி. அதிகாரிகள்

20 பேருக்கான விமான பயணச்சீட்டு கட்டண செலவுகள் மற்றும் கொடுப்பனவாக ரூபாய் 141 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

நிதி மோசடி விசாரணை பிரிவின் (எஃப்.சி.ஐ.டி) அதிகாரிகள் 2015 முதல் 2019 வரையான விசாரணை நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டுள்ளதுடன்,

அச்சுற்றுப்பயணங்களில் ஈடுபட்ட அதிகாரிகள் 20 பேருக்கான சுற்றுப்பயணத்திற்கான விமான பயணச்சீட்டு கட்டணம் மற்றும்

சுற்றுப்பயணத்திற்கான கொடுப்பனவாக சுமார் ரூபாய் 141 இலட்சம் செலவிடப்பட்டுள்ளதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 2020.10.07 இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார எழுப்பிய #

கேள்விக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து பதிலளித்து உரையாற்றிய பிரதமர்,

ஊழல் மோசடி விசாரணை பிரிவொன்றை ஸ்தாபிக்கும் பேரில் அப்போதைய பிரதமர் கௌரவ ரணில் விகரமசிங்க அவர்கள் மற்றும் கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல்களை

கண்டறிதல் எனும் தலைப்பில் அப்போதைய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை

பத்திரங்களுக்கு அமைய 2015 ஜனவரி 21ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய ஊழல் தடுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன் உறுப்பினர்கள்,

  1. முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க (தலைவர்)
  2. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர
  3. முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க
  4. முன்னாள் அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ
  5. முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
  6. ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா
  7. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்
  8. பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்
  9. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க
  10. சட்டத்தரணி ஜே.சி. வெலிஅமுன
  11. கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன
  12. மலிக் சமரவிக்ரம
  13. குழு செயலாளர் ஒருவர்

மேலே குறிப்பிடப்பட்ட 2015 ஜனவரி 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கமைய

ஸ்தாபிக்கப்பட்ட ஊழல் தடுப்பு குழுவின் உறுப்பினர்களுக்காக பிரதமர் அலுவலகத்தினால் ஊதியமோ அல்லது கொடுப்பனவோ செலுத்தப்படவில்லை.

அத்துடன், 2015 ஜனவரி 21 அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2015

பெப்ரவரி 06ஆம் திகதி ஊழல் தடுப்பு குழுவிற்காக செயலாளர் அலுவலகமொன்றை அமைத்தல் மற்றும் பொருத்தமான ஊழியர்களை நியமித்தல் எனும் தலைப்பிலான அமைச்சரவை

பத்திரத்திற்கு அமைய 2015 பெப்ரவரி 11 அமைச்சரவை தீர்மானத்தில் குழுச் செயலாளர் அலுவலகமொன்றை அமைப்பதற்கும், தேவையான ஊழியர்களை நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கமைய, 44 பேரை கொண்ட ஊழியர்கள் குழாமொன்று நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பிரதமர் அலுவலகத்தினால் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக அதன் பணிப்பாளர் ஆனந்த விஜேபால அவர்களுக்கு 12 இலட்சத்து 85 ஆயிரத்து 167 ரூபாயும் 33 சதம் – மூன்று வருடங்களுக்கு

ஆலோசகர் ஏ.பி.ஏ. குணசேகர அவர்களுக்கு ரூபாய் 93 ஆயிரத்து 750 – 2 மாதங்களுக்கு

ஆலோசகர் டி.கே. வர்ணசூர்ய அவர்களுக்கு ரூபாய் 6 இலட்சத்து 60 ஆயிரம் – 2015ஆம் ஆண்டிற்காக

ஆலோசகர், எஸ்.மெதவௌ அவர்களுக்கு ரூபாய் 20 இலட்சத்து 68 ஆயிரத்து 125 – மூன்று ஆண்டுகளுக்கு

ஆலோசகர், எம்.பி.எச்.எம். தயாரத்ன அவர்களுக்கு ரூபாய் 19 இலட்சத்து 70 ஆயிரம் – மூன்று ஆண்டுகளுக்கு

ஆலோசகர் துசித் முதலிகே அவர்களுக்கு ரூபாய் 6 இலட்சத்து 26 ஆயிரத்து 80 – மூன்று ஆண்டுகளுக்கு

அத்துடன், 2015 பெப்ரவரி மாதம் முதல் 2017 ஜுன் மாதம் வரை ஊழியர்களுக்கான ஊதியம், கொடுப்பனவு மற்றும் பிற செலவுகளுக்காக சுமார் ரூபாய் 33.71 மில்லியன் நிதி பிரதமர் அலுவலகத்தினால் செலுத்தப்பட்டுள்ளது.


‘ஊழல் எதிர்ப்பு குழு’ மற்றும் ‘ஊழல் தடுப்பு குழுவை ஸ்தாபித்தல்’ தொடர்பான அமைச்சரவை பத்திரம் மற்றும் தீர்மானங்களை உள்ளடக்கிய பிரதிகள் பக்க இலக்கம் 01 முதல் 24 வரையும், ஊழல்

ஒழிப்பு குழுச் செயலாளர் அலுவலகத்தின் 2015 பெப்ரவரி மாதம் முதல் 2017 ஜுன் மாதம் வரையான செலவு அறிக்கை, ஒவ்வொரு அதிகாரிக்கும் செலுத்தப்பட்டுள்ள ஊதியங்கள் மற்றும்

கொடுப்பனவுகள் தொடர்பான சுருக்கம் மற்றும் பதவிநிலை, அதிகாரிகளுக்கு குறித்த காலப்பகுதியில் செலுத்தப்பட்ட ஊதியம்,

கொடுப்பனவு தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பக்க இலக்கம் 25 முதல் 58 வரை இணைத்து இத்துடன் சமர்ப்பிக்கிறேன்.

என்னால் முன்வைக்கப்படும் இந்த ஆவணம் மற்றும் எழுத்துபூர்வமான ஆவணங்களை எனது உரையுடன் இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நிதி மோசடி விசாரணை பிரிவின் (எஃப்.சி.ஐ.டி) அதிகாரிகள் 2015 முதல் 2019 வரையான விசாரணை நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டுள்ளனர். குறித்த நிதி மோசடி விசாரணை பிரிவின் அதிகாரிகள் 20 பேரும் அவ்வப்போது 19 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்களுக்கான விமான பயணச்சீட்டு கட்டணம் மற்றும் சுற்றுப்பயணத்திற்கான கொடுப்பனவாக சுமார் ரூபாய் 141 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஈடுபட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் பதவிநிலைகள் வேறு வேறாக அவர்களை அச்செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டமைக்கான

நோக்கம், பயணித்த நாடுகள், அந்நாடுகளில் இருந்த காலப்பகுதி, அவ்வாறு பயணம் மேற்கொண்ட குழு உறுப்பினர்களின் விமான பயணம், தங்குமிட வசதி மற்றும் ஏனைய வசதிகளுக்காக

செலவிடப்பட்ட தொகை என்பன தொடர்பான முழுமையான விபரங்கள் பக்க இலக்கம் 59 முதல் 61 வரை இணைக்கப்பட்டுள்ளன.

Posted in இலங்கை செய்திகள்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 78 கொரனோ தொற்றாளர்கள்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 78 கொரனோ தொற்றாளர்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 78 பேர், காத்தான்குடி ஆதார

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காத்தான்குடி

ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கம்ஹா மாவட்டத்தின் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர்களும் இன்னும் சிலருமே கொரோனா

வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், பலத்த பாதுகாப்புடன் நேற்று (07) இரவு பஸ்ஸில்

அழைத்து வரப்பட்டு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

சீனத் தூதுக்குழுவினர் கொழும்புக்கு விஜயம்

சீனத் தூதுக்குழுவினர் கொழும்புக்கு விஜயம்

சீனாவின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும், தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான

மேன்மை தங்கிய யங் ஜீச்சியின் தலைமையிலான உயர் அதிகாரமுள்ள சீனத் தூதுக்குழுவினர் (அக்டோபர் 8 ஆந் திகதி) இன்று கொழும்பு வரவுள்ளனர்.

வெளிநாட்டு அமைச்சு நேற்று (07) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர், தெற்காசியப் பிராந்தியத்தில் இடம்பெறும் சீனாவின் முதலாவது விஜயமாக இது அமைவதனால், உலகளாவிய தொற்றுநோயை

எதிர்த்துப் போராடுதல் மற்றும் பொருளாதார உறவுகளின் மறுமலர்ச்சி ஆகியவற்றில் இந்த விஜயம் இலங்கைக்கும்

சீனாவிற்குமிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விஜயம் செய்யும் சீனத் தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை அக்டோபர் 9 ஆந் திகதி சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த முக்கியமான விஜயத்தின் நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட பிரயாண அமைப்பு கொழும்பிற்கான தூதுக்குழுவினரை கட்டுப்படுத்துவதோடு, சுகாதார அமைச்சினால்

பரிந்துரைக்கப்பட்ட கடுமையான சுகாதார நெறிமுறையின் கீழ், அரச தலைவர் மற்றும் பிரதமருடனான இரண்டு

சந்திப்புக்களுக்குமான அவர்களது ஈடுபாடுகளைக் கட்டுப்படுத்தும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

வட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்

வட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்

2020 ஆம் ஆண்டுக்கான வட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் முதலிடத்தையும்,ஆண்கள் அணியினர் இரண்டாமிடத்தைப் பெற்றனர்.

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் இந்த போட்டி 02ம் திகதி தொடக்கம் 05ம் திகதி வரை இடம்பெற்றது. வடமாகாண அனைத்து

மாவட்டங்களுக்குமிடையிலான குத்து சண்டை போட்டியிலேயே முல்லைத்தீவு மாவட்ட அணியினர் முதலாவது மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.Capture Mulli 01மேலும் பெண்கள்

அணியினருக்கான போட்டியில் வவுனியா மாவட்டம் இரண்டாமிடத்தையும்,,மன்னார் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்

ஆண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தை வவுனியா மாவட்டமும், மூன்றாமிடத்தினை மன்னார் மாவட்டமும் பெற்றுக்கொண்டன


முல்லைத்தீவு மாவட்ட அணியில் உண்ணாப்பிலவு, தீர்த்தகரை, செல்வபுரம், முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை,

விஸ்வமடு, கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், மாங்குளம் ஆகிய பிரதேச வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண குத்துச்சண்டை
வட மாகாண குத்துச்சண்டை
Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 79 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 79 பேர் கைது

கம்பஹா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு

சட்டத்தை மிறிய 79 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கரவண்டி ஒன்றும் இவர்களிடம் இருந்து பொறுப்பேற்கப்பட்டதா பொலிஸார் தெரிவித்துள்ள

Posted in இலங்கை செய்திகள்

யாழில் பொருட்களை அள்ளி செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

யாழில் பொருட்களை அள்ளி செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் தேவையற்ற வகையில்

பொருள்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்” என்று யாழ்ப்பாண்ம் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் ​நேற்று (06) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே யாழ்ப்பாணம் வணிகர் கழகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் தெரிவித்ததாவது,

நாட்டில் தற்போது கோரோனா வைரஸ் சமூகத் தொற்றாக மாறியுள்ள நிலையில் மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை

பின்பற்ற வேண்டும். இது மட்டுமன்றி சமூகத் தொற்று காரணமாக நாடு முடக்கப்படும் என்ற சந்தேகத்தினால் அத்தியாவசியப்

பொருள்களை அதிகளவாக கொள்வனவு செய்கின்ற நிலையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்த நடவடிக்கை தேவையற்ற ஒன்று. யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தற்போதைய சூழலில்

தேவையான அளவு அத்தியாவசியப் பொருள்கள் அனைத்து வர்த்தக நிலையங்களிலும் கையிருப்பில் உள்ளன. அது மட்டுமன்றி

கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துவரப்படுகின்றன.

ஆகையால் தேவையற்ற முறையில் பொருள்களை கொள்வனவு செய்து தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்.

அது மட்டுமன்றி ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் பொருள்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிப்பதற்கும் திட்டத்துக்கும் வர்த்தகர்கள் தயாராகவே உள்ளனர்.

அத்தோடு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் உள்ள மக்களுக்கும் அங்குள்ள பிரதேச

வர்த்தகர்களுடாக பொருள்களை விநியோகிப்பதற்கான திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். எனவே தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்.

இதேவேளை, அரசினால் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்ட பொருள்களே கூடிய விலையில் விற்பனையாகின்றன. விலை

ஏற்றம் வர்த்தகர்களால் ஏற்பட்டதல்ல. இறக்குமதியாளர்களால் ஏற்படுத்தப் பட்டது. அதற்கு அரசுதான் தடையை நீக்க வேண்டும் – என்றார்.

Posted in இலங்கை செய்திகள்

குண்டு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படவில்லை- கோட்டா முழக்கம்

குண்டு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படவில்லை- கோட்டா முழக்கம்

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சநதேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்

ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்காக குற்றச்செயல் தொடர்பான

விசாரணைகள் நிறுத்தப்படவில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும்Capture Reply 02தெரிவித்துள்ளார்.விசாரணைகளின் அடிப்படையில்

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் எதிர்காலத்தில் கைது செய்யப்படக்கூடும் எனவும் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்வைத்த வாய்மொழி மூல வினாக்களுக்கு பதிலளித்த அமைச்சர் இந்த


விசாரணைகளின் போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் இந்த விடயங்களுடன் ரியாஜ் பதியுதீன்

தொடர்புபடவில்லை என உறுதிபடுத்தப்பட்டமைக்கு அமைய அவர் விடுதலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.


ரியாஜ் பதியுதீனின் கைது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் இருவேறு அறிவிப்புகள் தொடர்பிலும் இதன்போது

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி முன்வைத்த கேள்விக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ பதில் அளித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

முகக்கவசம் அணிய மறுப்போர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்- அரசு அறிவிப்பு

முகக்கவசம் அணிய மறுப்போர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்- அரசு அறிவிப்பு

முகக்கவசம் அணிய மறுப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு

உட்படுத்தப்படுவார்கள் என்று இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை சவளக்கடை சம்மாந்துறை மத்தியமுகாம்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் நேற்று(6) காலை முதல் வீதியால் வருவோர்

இடைநிறுத்தப்பட்டு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டனர்.

முகக்கவசம் அணியாது செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உடபடுத்தப்படுவார்கள் எனவும்

நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பாதசாரிகள் வாகன உரிமையாளர்கள் பஸ்களில் பயணிப்பவர்கள் சுகாதார

நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம், தனியார் கல்வி நிலையங்களுக்கு பூட்டு

யாழ்ப்பாணம், தனியார் கல்வி நிலையங்களுக்கு பூட்டு

வட மேல் மாகாணத்தின் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் மறு அறிவித்தல் வரையில் மூடுமாறு வட மேல் மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை (07) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து தனியார் கல்வி

நிலையங்களையும் காலவரையறையின்றி மூடுவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (06) இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய

நடவடிக்கைகள் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

கூட்டத்தில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா

வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி உட்பட துறைசார் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திலேயே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களை நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது

Posted in இலங்கை செய்திகள்

முடங்கிய இலங்கை – ஊரடங்கு அமூல் – பீதியில் மக்கள்

முடங்கிய இலங்கை – ஊரடங்கு அமூல் – பீதியில் மக்கள்

கம்பஹா நிர்வாக மாவட்டத்தின் பொலிஸ் எல்லை பகுதிக்குள் மீண்டும்

அறிவிக்கும்வரையில் இன்று காலை 6.00 மணி தொடக்கம் அமுலுக்கு

வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 1897 ஆம் ஆண்டு இலக்கம்

03 இன் கீழான தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக சுகாதார சேவைகள்

பணிப்பாளர் நாயகத்தினால் பதில் பொலிஸ் மா அதிபரின் கோரிக்கைக்கு அமைய 2020.10.06 மாலை 6.00 மணி தொடக்கம்

அமுலில் உள்ள வகையில் மறு அறிவித்தல் வரையில் கீழ் கண்ட பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

 கம்பஹா நிர்வாக மாவட்டத்தில் கம்பஹா பொலிஸ் எல்லைப் பகுதி

 கீழ் குறிப்பிட்ட பொலிஸ் பிரிவுகளில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

  1. திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவு
  2. மினுவாங்கொட பொலிஸ் பிரிவு
  3. வேயாங்கொட பொலிஸ் பிரிவு

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்ட காலப்பகுதியில் அனைவரும் தமது வீடுகளில் இருக்க வேண்டும். இதேபோன்று

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதிக்குள் இந்த பிரதேசத்திற்குள் பிரவேசித்தல்,

அதேபோன்று பிரதேசத்தில் இருந்து வெளியேறுதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தூர இடங்களுக்கான பயணிகள் போக்குவரத்து பஸ்கள் இந்த பிரதேசத்தின் ஊடாக பயணிக்க முடிந்த போதிலும் இந்த

பகுதிகளில் பஸ்களை நிறுத்துதல் மற்றும் பயணிகளை ஏற்றி இறக்குதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளை

ஏற்றுவதற்காகவோ அல்லது இறக்குவதற்காகவோ ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.