Posted in இலங்கை செய்திகள்

வைபவங்கள், ஊர்வலங்கள், களியாட்டங்கள் முதலானவற்றிற்கு தடை

வைபவங்கள், ஊர்வலங்கள், களியாட்டங்கள் முதலானவற்றிற்கு தடை

மினுவாங்கொடை பிரதேசத்தில் கொவிட் 19 நோய்த் தொற்று பரவலை

அடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மகாநாடு, உரைகள்,

கண்காட்சி இசை நிகழ்ச்சிகள், களியாட்ட நிகழ்வுகள், ஊர்வலங்கள்,

பெரகர வீதி உலா மற்றும் அத்தியாவசியமல்லாத கூட்டங்கள் போன்றவற்றை

நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதில் சுகாதார பணிப்பாளர்

நாயகத்தினால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு சுகாதார அமைச்சின் இணையத்தளத்தை

பயன்படுத்துமாறும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 832 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 832 ஆக அதிகரிப்பு

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் கொரோனா

வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் (6 ஆம் திகதி) இரவு 9.40 மணியளவில் திவுலுப்பிட்டிய

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்

நாலக கலுவௌ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவர்கள் அனைவரும்

மினுவங்கொடை தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள். என்றும்

இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 52 பேர் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 52 பேர் கைது

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள திவுலபிட்டி, மினுவாங்கொடை,

வியாங்கொடை பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 52 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

ரணில் மீது குண்டு வெடிப்பு விசாரணை

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க , ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில்

விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.

வாக்குமூலமளிக்க வருமாறு அவருக்கு கடந்த 22ஆம் திகதி ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று(06) முன்னிலையான ரணில் விக்கிரமசிங்க ஒன்றரை மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவரை எதிர்வரும் 13ஆம் திகதி ஆணைக்குழுவில் மீண்டும்ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல்

தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (05) முன்னிலையாகியிருந்தார்.

அவரை மீண்டும் 12 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை – கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 321

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை – கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 321

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும்

220 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று அரசாங்க தகவல்

திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இந்த ஆடைத் தொழிற்சாலையில் மொத்தமாக 321 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்..

Posted in இலங்கை செய்திகள்

உயர்தர பரீட்சை குறித்து நாளை இறுதி முடிவு

உயர்தர பரீட்சை குறித்து நாளை இறுதி முடிவு

கொவிட் – 19 தொடர்பான தற்போதைய நிலைமைகளை அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.

எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் கிடைக்கவுள்ள பி.சி.ஆர் பிரிசோதனைக்கு அமைவாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்

என்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் தெரிவித்தார்.

இதேபோன்று இந்த மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி தராதர உயர்தர

பரீட்சைகளை நடத்துவது தொடர்பிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

பரீட்சைகள் தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதுவரையில் கிடைத்துள்ள

பி.சி.ஆர் பரிசோதனை பெறுபேறுகளுக்கு அமைவாக 321 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்படிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான பெறுபேற்று அறிக்கை நாளை கிடைக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு

இன்று (6) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது இதன்போதே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்

Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு

பொலிஸ் ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு

பொலீஸ் ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக

யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோணா அச்ச நிலைமை தொடர்பில்

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ்

அத்தியட்சர் தலைமையிலான யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்ட போதே பொலிஸ் அத்தியட்சகர் இதனை தெரிவித்தார்

.யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியம் என்றும் அவர் இதன்போது கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் குண்டு எப்படி வெடித்தது மைத்திரியிடம் விசாரணை

இலங்கையில் குண்டு எப்படி வெடித்தது மைத்திரியிடம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில்

விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலமளிக்க வருமாறு அவருக்கு கடந்த 22ஆம் திகதி ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாளை (06)

வாக்குமூலமளிக்க வருமாறு ஆணைக்குழுவால் அன்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

Posted in இலங்கை செய்திகள்

பரீட்சை சான்றிதழ்கள் இணையவழி ஊடாகவழங்க படும் – கல்வி திணைக்களம்

பரீட்சை சான்றிதழ்கள் இணையவழி ஊடாகவழங்க படும் – கல்வி திணைக்களம்

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பு

விடயங்களை கவனத்தில் கொண்டு இலங்கை பரீட்சை திணைக்களத்தினால்

பரீட்சை சான்றிதழ்கள் இணையவழி ஊடாக வழங்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களத்திற்கு வரும் பொது மக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.

மீண்டும் அறிவிக்கும் வரையில் திணைக்களத்தினால் ஒரு நாள் மற்றும்

வழமையான சேவை கரும பீடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின்

1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு

தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து 849 பேர் நாடு திரும்பியுள்ளனர்

வெளிநாடுகளில் இருந்து 849 பேர் நாடு திரும்பியுள்ளனர்

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றிருந்த மேலும் 849 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

துபாயில் இருந்து நேற்று மாலை 400 பேர் வந்துள்ளனர். இவர்களுள் 7 சிறுவர்கள்

இடம்பெற்றுள்ளனர். மத்தளை விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஜப்பான் மற்றும் கட்டார் நாடுகளுக்கு தொழிலுக்காக சென்று

இலங்கை வரமுடியாமல் அந்த நாடுகளில் சிக்கியிருந்த 425 இலங்கையர்கள்

இன்று காலை கட்டுநாயக்க மற்றும் மத்தளை விமான நிலையங்களை வந்தடைந்தனர்.

ஜப்பானில் தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்த 280 இலங்கையர்கள்

டோக்கியோ நகரில் இருந்து மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

தமிழ் நாடு சென்னையில் இருந்தும் 27 பேர் இலங்கை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் விமான நிலையங்களில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது

மினுவாங்கொடை பிரதேசத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பொலிஸ் பிரதேசங்கள்

ஊடாக வாகனங்கள் மூலம் பயணிக்க முடிந்த போதிலும் அந்த பிரதேசங்களில்

வாகனங்களை நிறுத்த முடியாது என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பொலிஸ் பிரதேசங்களில் மீண்டும் அறிவிக்கும்

வரையில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

எவரேனும் திடீரென நோய்வாய்ப்பாட்டால் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம்

இன்றி வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முடியும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

பிரான்சில் சுட்டியலினால் அடித்து கொலை செய்ய பட்ட தமிழ் குடும்பம்

பிரான்சில் சுட்டியலினால் அடித்து கொலை செய்ய பட்ட தமிழ் குடும்பம்

பிரான்சில் ஒரே குடும்ப உறவுகளை சேர்ந்த ஐவர் சுட்டியலினால் அடித்து

கொலை செய்யப் பட்டுள்ளனர் .மேலும் ஐவர் மிக ஆபத்தான

நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த கொலை குடும்ப தகராறு காரணமாக இடம் பெற்றுள்ளதாக தமிழர்கள் மதியியல் பேச படுகிறது

போலீசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மேற்படி சமபவம் உலக அரங்கத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது குறிப்பிட தக்கது

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

கொரோனாவால் – வெளிநாடுகளில் பணிபுரிந்த 64 இலங்கைப் பணியாளர்கள் மரணம்

கொரோனாவால் – வெளிநாடுகளில் பணிபுரிந்த 64 இலங்கைப் பணியாளர்கள் மரணம்

வெளிநாடுகளில் பணிபுரிந்த 64 இலங்கைப் பணியாளர்கள், கொரோனாவால்

இதுவரை உயிரிழந்துள்ளனரென, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ​ஜோர்தானில் உள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த இலங்கைப்

பணிப்பெண்ணொருவர், நேற்று முன்தினம் (1) கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில், உயிரிழந்துள்ளா​ரென, இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி முகாமையாளரும் ஊடக பேச்சாளருமான மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த தொழிற்சாலையில், ​பணிபுரியும் 350 க்கும் மேற்பட்ட இலங்கைப் பணியாளர்கள் கொரோனா

தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், இவர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென்றும் ​அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2,600 இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பெண்ணுக்கு கொரோனா: 60 பேருக்கு சுயதனிமை

இலங்கையில் பெண்ணுக்கு கொரோனா: 60 பேருக்கு சுயதனிமை

கம்பஹா, திவுவுலுப்பிட்டியவில் ​39 வயதான பெண்ணுக்கு கொரோனா

வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பெண், கொழும்பு

ஐடிஎச் க்கு மாற்றப்பட்டுள்ளார் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

காய்ச்சல் காரணமாக அந்தப் பெண், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிசிஆர்

பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்தே, அப்பெண்ணுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இ​தேவேளை, அந்த வைத்தியசாலையைச் ​சேர்ந்த பணியாளர்கள் 15 ​​பேர் மற்றும் அப்பெண் கடமையாற்றிய நிறுவனத்தைச் சேர்ந்த 45

பேர் அடங்களாக 60 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றாளர் பணிபுரிந்த ஆடைத் தொழிற்சாலைக்குப் பூட்டு

கொரோனா தொற்றாளர் பணிபுரிந்த ஆடைத் தொழிற்சாலைக்குப் பூட்டு

புதிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் பணிபுரிந்த

ஆடைத்தொழிற்சாலையில், 400 பேர் வரை சேவையாற்றுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தொழிற்சாலை, மினுவாங்கொட- யக்காதுவ பிரதேசத்தில் உள்ள முன்னணி ஆடைத்தொழிற்சாலை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ​கொரோனா தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்டுள்ள பெண்ணுடன் ஒன்றாக பயணித்த, 40 பேர்,

சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பெண்ணின் கணவர், அவரின் பிள்ளைகள் நால்வர் மற்றும் பெண்ணின் தந்தை ஆகியோர்

தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவரது ஒரு குழந்தை மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவர் பணிபுரிந்த ஆடைத்தொழிற்சாலை தற்போது சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையின் சில இடங்களில் ஊரடங்கு

திவுலுப்பிட்டிய மற்றும் மினுவாங்கொடை ஆகிய பொலிஸ. பிரிவுகளில்

உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுதொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

ஆயுதம் தூக்கியோரை தெற்கில் நினைவு கூற முடியமென்றால் ஏன், வடக்கில் முடியாது?

ஆயுதம் தூக்கியோரை தெற்கில் நினைவு கூற முடியமென்றால் ஏன், வடக்கில் முடியாது?

  • ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஒரு கேலிக்கூத்து – மனோ கணேசன் எம்பி
    1970/80 களில் இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய, ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள் இன்று தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படும் போது, அதே வரப்பிரசாதம் வடக்கில் தமிழருக்கு இல்லை? இதனால், இந்த அஈசாங்கம் இப்போது அடிக்கடி சொல்லும், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஒரு கேலி-கூத்தாக தெரிகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி, தனது டுவீடர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்குபவர்களை அரசாங்கம் தனது கணிப்பீட்டின்படி “பயங்கரவாதிகள்” என்கிறது. அப்படியானால், 1970ம் , 80ம் ஆண்டு களில் இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள், “சிங்கள பயங்கரவாதிகள்கள்” ஆவர். இவர்கள் வருடாவருடம், தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படுகிறார்கள்.

ஆனால், அதே வரப்பிரசாதம், தமிழர்களுக்கு இல்லை. “தமிழ் பயங்கரவாதிகளை” என்ற தமிழ் ஆயுததாரிகளை மட்டுமல்ல, பலவேளைகளில் மரணித்த சாதாரண மக்களையே பகிரங்கமாக நினைவு கூற, தமிழர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இது இந்நாட்டில் நீண்ட நாளாக நடந்து வரும் ஒரு இரட்டை நிலைப்பாடு கொண்ட பாரபட்ச கொள்கை ஆகும். இதற்கு இடையில் இன்று இந்த அரசு, மேலும் ஒரு கொள்கையை பற்றி பேசி வருகிறது. அதுதான், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஆகும். இது இந்நிலைமையை இன்னமும் கேலி-கூத்தாக மாற்றி உள்ளது.

அதாவது, மறைந்த தமது உறவுகளை தமிழர் நினைவு கூறுவது மறுக்கபடுவதும், அதே உரிமை சிங்களவருக்கு வழங்கப்படுவதும், இந்நாட்டில் அரசின் இரட்டை கொள்கையின் அடிப்படையில் கேலி கூத்தாக அமைகிறது. மறுபுறம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இது பெரும் சோகமாக அமைகிறது.

இந்த இரட்டை கொள்கை உடன் முடிவுக்கு வரவேண்டும். இதுபற்றி தேசிய கலந்துரையாடல் நடைபெற வேண்டும். இதுபற்றி எவருடன் வேண்டுமென்றாலும், மூன்று மொழிகளிலும் பகிரங்க விவாதம் நடத்த நான் தயார்.

ஆயுதம் தூக்கியோரை தெற்கில் நினைவு கூற முடியமென்றால் ஏன், வடக்கில் முடியாது?

  • ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஒரு கேலிக்கூத்து – மனோ கணேசன் எம்பி
    1970/80 களில் இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய, ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள்
  • இன்று தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படும் போது, அதே வரப்பிரசாதம் வடக்கில் தமிழருக்கு இல்லை? இதனால், இந்த
  • அஈசாங்கம் இப்போது அடிக்கடி சொல்லும், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஒரு கேலி-கூத்தாக தெரிகிறது என தமிழ்
  • முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி, தனது டுவீடர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்குபவர்களை அரசாங்கம் தனது கணிப்பீட்டின்படி “பயங்கரவாதிகள்” என்கிறது. அப்படியானால், 1970ம் , 80ம் ஆண்டு களில் இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும்

எதிராக ஆயுதம் தூக்கிய ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள், “சிங்கள பயங்கரவாதிகள்கள்” ஆவர். இவர்கள் வருடாவருடம், தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படுகிறார்கள்.

ஆனால், அதே வரப்பிரசாதம், தமிழர்களுக்கு இல்லை. “தமிழ் பயங்கரவாதிகளை” என்ற தமிழ் ஆயுததாரிகளை மட்டுமல்ல,

பலவேளைகளில் மரணித்த சாதாரண மக்களையே பகிரங்கமாக நினைவு கூற, தமிழர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இது இந்நாட்டில் நீண்ட நாளாக நடந்து வரும் ஒரு இரட்டை நிலைப்பாடு கொண்ட பாரபட்ச கொள்கை ஆகும். இதற்கு இடையில் இன்று இந்த அரசு, மேலும் ஒரு கொள்கையை பற்றி பேசி

வருகிறது. அதுதான், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஆகும். இது இந்நிலைமையை இன்னமும் கேலி-கூத்தாக மாற்றி உள்ளது.

அதாவது, மறைந்த தமது உறவுகளை தமிழர் நினைவு கூறுவது மறுக்கபடுவதும், அதே உரிமை சிங்களவருக்கு வழங்கப்படுவதும்,

இந்நாட்டில் அரசின் இரட்டை கொள்கையின் அடிப்படையில் கேலி கூத்தாக அமைகிறது. மறுபுறம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இது பெரும் சோகமாக அமைகிறது.

இந்த இரட்டை கொள்கை உடன் முடிவுக்கு வரவேண்டும். இதுபற்றி தேசிய கலந்துரையாடல் நடைபெற வேண்டும். இதுபற்றி எவருடன்

வேண்டுமென்றாலும், மூன்று மொழிகளிலும் பகிரங்க விவாதம் நடத்த நான் தயார்.

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் நபர் அடித்து கொலை -குளக்கரையில் வீசப்பட்ட சடலம்

யாழில் நபர் அடித்து கொலை -குளக்கரையில் வீசப்பட்ட சடலம்

அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு சடலம் அங்கு கொண்டுவந்து

போடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரதீவு சிவன் ஆலய குளக்கரையிலேயே அவரது சடலம் இன்று

அதிகாலை கண்டறியப்பட்டது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகர் ரூபன் சர்மா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் 22 பேர் கைது

வவுனியா பொலிஸார் நேற்று (02) மாலை மேற்கொண்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 3 மணிநேரத்தில் 22 நபர்களை கைது செய்துள்ளனர்.

“குற்றச்செயல்கள் அற்ற வவுனியாவை உறுவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி

பீ.ஆர்.மானவடுவின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று (02) மாலை மேற்கொள்ளப்பட்ட மூன்று மணிநேர விசேட நடவடிக்கையின் போது பெண்களுடன் பகிடிவதை குற்றச்சாட்டில் ஒருவரும், வழிப்பறி மற்றும் கொள்ளை குற்றச்சாட்டில் இருவரும்,

கேரளா கஞ்சாவுடன் நால்வரும், கரோயினுடன் ஒருவரும், நீதிமன்ற பிடியானை உத்தரவில் இருவரும், மதுபோதையில் வாகனம்

செலுத்திய குற்றச்சாட்டில் இருவரும் , சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு பேர், பொதுமக்கள் நடமாடும் பகுதியல் மதுபானம் அருந்திய

குற்றச்சாட்டில் நால்வரும் என 22 நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 நபர்களும் வவுனியா பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களை வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்றிலையில்

ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

ஒரே நாடு-ஒரே சட்டம் என்ற கொள்கை ஒரு கேலி-கூத்து- மனோ

ஒரே நாடு-ஒரே சட்டம் என்ற கொள்கை ஒரு கேலி-கூத்து- மனோ

1970/80 களில் இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய, ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள் இன்று தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படும் போது, அதே

வரப்பிரசாதம் வடக்கில் தமிழருக்கு இல்லை? இதனால், இந்த அஈசாங்கம் இப்போது அடிக்கடி சொல்லும், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஒரு கேலி-கூத்தாக தெரிகிறது என தமிழ்

முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது, அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்குபவர்களை அரசாங்கம் தனது கணிப்பீட்டின்படி “பயங்கரவாதிகள்” என்கிறது. அப்படியானால், 1970ம் , 80ம் ஆண்டு

களில் இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள், “சிங்கள

பயங்கரவாதிகள்கள்” ஆவர். இவர்கள் வருடாவருடம், தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படுகிறார்கள்.

ஆனால், அதே வரப்பிரசாதம், தமிழர்களுக்கு இல்லை. “தமிழ் பயங்கரவாதிகளை” என்ற தமிழ் ஆயுததாரிகளை மட்டுமல்ல,

பலவேளைகளில் மரணித்த சாதாரண மக்களையே பகிரங்கமாக நினைவு கூற, தமிழர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இது இந்நாட்டில் நீண்ட நாளாக நடந்து வரும் ஒரு இரட்டை நிலைப்பாடு கொண்ட பாரபட்ச கொள்கை ஆகும். இதற்கு இடையில் இன்று இந்த அரசு, மேலும் ஒரு கொள்கையை பற்றி பேசி

வருகிறது. அதுதான், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஆகும். இது இந்நிலைமையை இன்னமும் கேலி-கூத்தாக மாற்றி உள்ளது.

அதாவது, மறைந்த தமது உறவுகளை தமிழர் நினைவு கூறுவது மறுக்கபடுவதும், அதே உரிமை சிங்களவருக்கு வழங்கப்படுவதும்,

இந்நாட்டில் அரசின் இரட்டை கொள்கையின் அடிப்படையில் கேலி கூத்தாக அமைகிறது. மறுபுறம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இது பெரும் சோகமாக அமைகிறது.

இந்த இரட்டை கொள்கை உடன் முடிவுக்கு வரவேண்டும். இதுபற்றி தேசிய கலந்துரையாடல் நடைபெற வேண்டும். இதுபற்றி எவருடன்

வேண்டுமென்றாலும், மூன்று மொழிகளிலும் பகிரங்க விவாதம் நடத்த நான் தயார்.