ராஜபக்ச திருடர்கள் அழித்த நாட்டை கட்டி எழுப்புவோம் சஜித் முழக்கம்
Posted in இலங்கை செய்திகள்

அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நல்லாட்சி ஏற்படும் சஜித்

அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நல்லாட்சி ஏற்படும் சஜித்

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நாட்டில் நல்லாட்சி ஏற்படும் என்ற கருதுகோள் சர்வதேசத்துக்கு உள்ளதாகவும், இதனால் குறுகிய அரசியல்

வேறுபாடுகளை மறந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காகவே 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு கட்சி வாக்களித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அத்துடன்,முன்னாள் நிதியமைச்சர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் பதவி விலகிய போதிலும், மொட்டுவின் கட்டளையின் கூடிய அரசாங்கமே தற்போது இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நல்லாட்சி ஏற்படும் சஜித்

விவசாயிகளின் உரத்தையும், மீனவர்களின் எரிபொருளையும் தடுத்து நிறுத்திய அதே எதோச்சதிகார அரசாங்கம் தான் மறைமுகமாக நாட்டை ஆள்கிறது எனவும் தெரிவித்தார்.

அதேபோல்,கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு குழந்தைகளுக்கு திரிபோஷம் இல்லாத சந்தர்ப்பத்தில், எந்த சூழ்நிலையிலும் எதிர்க்கட்சியாக அமைச்சுப் பதவியை ஏற்க

மாட்டோம் எனவும், எதிர்க்கட்சியில் இருந்த வண்ண்ம் நாட்டை கட்டியெழுப்பத் தேவையான உதவி ஒத்தாசைகளை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹம்பந்தோட்டை நெதிகம்வில ரஜமஹா விகாரையின் தலைமை தேரரும்,அமரபுர சத்தம்மயுக்திக நிகாயவின் மாத்தறை பிரிவின் பதில் மகாநாயக்க

தேரர்,சங்கைக்குரிய உயன்வத்தை சத்தாராம தேரரை பார்வையிடும் நிமித்தம் அன்மையில் (26) சென்றிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவரது துறவற வாழ்வின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு
நடத்தப்படவுள்ள விழா குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது கவனம் செலுத்தினார்.

முன்னாள் போராளிகள் விபரம் திரட்டும் இராணுவம்
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் போராளிகள் விபரம் திரட்டும் இராணுவம்

முன்னாள் போராளிகள் விபரம் திரட்டும் இராணுவம்

இலங்கை முல்லைத்தீவு பகுதியில் முன்னாள் போராளிகள் விபரங்கள் திரட்ட படுகின்றன .

நிதி அமைச்சினால் உதவிகள் வழங்க படவுள்ளதான குற்ற சாட்டின் அடிப் படையில் இந்த விபரங்கள் திரட்ட படுகின்றன .

இலங்கை அரச அதிகாரிகள் மற்றும் இராணுவம் இனைந்து ,நடத்தும் இந்த விபர திரட்டினால் போராளிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது .

முல்லைதீவு தவிர்ந்த பகுதிகளிலும் இந்த விபரம் திரட்டு இடம்பெறலாம், என்ற தகவல் மேலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது .

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தீபாவளி தினத்தன்று 17 வயது வாலிபன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இவர்களின் வாள்வெட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த வாலிபன் யாழ்ப்பாணம் ,போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

கோட்டா ஆட்சியில் உருவாக்க பட்டுள்ள, இந்த ஆவா குழுவின் செயல் பாடுகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து செல்கிறது .

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது

இவர்களுக்கு இராணுவம் காவல்துறை ஒத்துழைப்பு உள்ளது .

ரணில் விக்கிரமசிங்கா ஆட்சியிலும் இந்த ஆவா ரவுடி குழுக்கள் கட்டு படுத்தாது உலாவுகின்ற செயல் பாடுகள், மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

யாழ்ப்பாண கடலில் மிதந்த மனித சடலம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண கடலில் மிதந்த மனித சடலம்

யாழ்ப்பாண கடலில் மிதந்த மனித சடலம்

யாழ்பாணம் இளவாலை கடல் பகுதியில் ஆண் ஒருவரது சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் ,குறித்த ஆணின் சடலத்தை கண்ணுற்று காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் ,சடலம் மீட்க பட்டுள்ளது .

இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் ,இதுவரை அடையாளம் காணப்படவில்லை .

இலங்கையில் நாள் தோறும் இவ்விதம் ,நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகினறமை, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

இந்த தொடர் மர்ம கொலைகளின் பின்னல் உள்ளவர்கள் ,யார் என்பது இதுவரை வெளிப்படவில்லை .

இலங்கையில் 435 பேர் பத்து மாத்தில் கொலை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 435 பேர் பத்து மாதத்தில் கொலை

இலங்கையில் 435 பேர் பத்து மாதத்தில் கொலை

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான பத்து மாதத்தில் 435 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்கின்ற ,அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .

இந்த படு கொலையில் சுமார் 36 துப்பாக்கி சூட்டு சம்பவங்களாக பதிவாகியுள்ளது .

அதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்கிறது அந்த அதிர்ச்சிகர தகவல் .

இலங்கையை , ராஜபக்ச ஆட்சியில் ,மக்களை மிரட்டும் படு கொலைகளாக இவை காணப்பட்டுள்ளது .

இலங்கையில் 435 பேர் பத்து மாதத்தில் கொலை

கோத்தபாயாவின் நிழல் டிவிஷன் படைகளினால் , பல மர்ம கொலைகள் இடம்பெற்று வருகின்றன .

இவ்வாறான தகவல்கள் வெளியாகிய நிலையில் ,இந்த புள்ளி விபரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தற்போது புதிய நூதன முறையில், நீர் நிலைகளில் இருந்து ,மனித சடலங்கள் நாள் தோறும் மீட்க பட்டு வருகின்றன .

இவ்வாறான கொலைகளினால், இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருவது வீழ்ச்சியடைந்துள்ளது .

இலங்கை பாதுகாப்பற்ற நாடு என்கின்ற நிலையில் ,உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

crypto currency 14 பில்லியன் மோசடி இலங்கையில் நடந்த சுத்துமாத்து
Posted in இலங்கை செய்திகள் பங்கு சந்தை Forex Trade

crypto currency 14 பில்லியன் மோசடி இலங்கையில் நடந்த சுத்துமாத்து

crypto currency 14 பில்லியன் மோசடி இலங்கையில் நடந்த சுத்துமாத்து

இலங்கையில் உலகில் பிரபலமாக பேச படும் ,crypto currency பங்கு சந்தை வர்த்தகம் மூலம் ,பல்லாயிரம் இலாபம் தருவதாக கூறி மோசடி .

இவ்வாறு ,14 பில்லியன் இலங்கை ரூபாய்கள் மோசடி செய்யப் பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

சீனா நட்டு தம்பதிகளின் பின்புலத்தில் இந்த மகா மோசடி இடம்பெற்றுள்ளது .

இலங்கையின் மிக பெரும் ஐந்து நட்ச்சத்திர கொட்டல்களில் தங்கி ,அவர்கள் மூலம் இந்த crypto currency மோசடிகள் இடம் பெற்றுள்ளது. .

பங்கு சந்தையில் எவ்விதம் வர்த்தகம் செய்வது என்பது தொடர்பாக தெரியாத அப்பாவி மக்கள் சிக்கி விடுகின்றனர் .

,இவர்கள் பேச்சில் மயங்கி, தமது பணத்தை கொடுத்து ஏமார்ந்து போன சோக வரலாறு தற்போது நிகழ்ந்துள்ளது .

crypto currency 14 பில்லியன் மோசடி இலங்கையில் நடந்த சுத்துமாத்து

ஆடை மற்றும் ,அவர்களை கவரும் பேச்சில் மயங்கும் ,நம்மவர்கள் ,இவ்விதமான மோசடி கும்பலிடம் முற்றாக தம்மை இழந்து போகின்ற, வரலாறு இடம்பெறுகிறது .

தற்போது இந்த மாக கொள்ளை தொடர்பான ,தீவிர விசாரணைகள் , குற்ற தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் .

சர்வதேச போலீசார் உதவியுடன் ,இந்த கொள்ளை கும்பலை, கைது செய்திடும் வேட்டையில் போலீசார் களம் இறங்கியுள்ளனர் .

மிக பெரும் மாபியாக்கள் இதில் சிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு

இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு

இலங்கையில் கடந்த ஒன்பது மாதங்களில் .1500 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் அதிகரித்து வரும் போதை பொருள் பாவனை ,மற்றும் நுகர்வோர் கலாச்சாரத்தின் ஊடக, இந்த பாலியல் குற்றங்கள் இடம்பெற்று வருகிறது .

16 வயதுக்கு கீழான பெண்களும்,சிறுவர்களும் பெரும் தொகையில் கற்பழிக்க பட்டுள்ளனர் என்கிறது அந்த அதிர்ச்சி தரும் காவல்துறை குறிப்பு .

இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு

இலங்கையில் இந்த குற்றங்களுக்கு எதிராக ,கடுமையான சிறை தண்டனைகள் வழங்க பட்டுள்ளன .

அவ்வாறான பொழுதும் ,இவ்வாறான கற்பழிப்புக்கள் நாள் தோறும் அதிகரித்த வண்ணம் செல்கின்றன .

இலங்கை ஆட்சியாளர்களின் மக்கள் நலன் பேணாமை மற்றும் ,பாதுகாப்பு ,விதிகள் இறுக்கம் இல்லாத காரணத்தினால், இவை அதிகரித்து செல்வதாக தெரிவிக்க படுகிறது .

நெருக்கடியில் தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை
Posted in இலங்கை செய்திகள்

நெருக்கடியில் தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை

நெருக்கடியில் தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை

வாழ்வாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் நவம்பர் 8ம் திகதி முழுநாள் விவாதம்
மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை ஏற்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியினால், வாழ்வாதார துன்பங்களை மிக அதிகமாக எதிர்கொள்ளும் மிகவும் நலிந்த (Most Vulnerable) பிரிவினர் தொடர்பில், முழுநாள் விவாதம் ஒன்றை நடத்த தமிழ்

முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியும், தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) தலைவர் அனுரகுமார திசாநாயக்க எம்பியும் முன்வைத்த

கோரிக்கையை இன்று, பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் தலைமையில் கூடிய கட்சி தலைவர்கள் குழு ஏற்றுக்கொண்டது.

நெருக்கடியில் தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை

இதன்படி வரவு செலவு திட்டத்துக்கு முன்னர் கூடும் பாராளுமன்ற வாரத்தின் முதலாம் நாளான நவம்பர் எட்டாம் திகதி செவ்வாய்கிழமையன்று இந்த

கருப்பொருளில் முழு நாள் விவாதம் நடத்த கட்சி தலைவர்கள் குழு ஏற்றுக்கொண்டது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,

பெருந்தோட்ட துறை 51 விகிதம், நகர துறை 43 விகிதம், கிராமிய துறை 34 விகிதம், என்ற ஐநா நிறுவனங்களின் கணக்கெடுப்பின்படி, கடந்த வாரம், இந்நாட்டின் மிக மோசமான நெருக்கடியை சந்தித்துள்ள பெருந்தோட்ட துறை

மக்களின் வாழ்வாதார விவகாரங்கள் தொடர்பில், ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை, நான் கொண்டு வந்து விவாதத்துக்கு உள்ளாக்கி இருந்தேன்.

நாட்டில் வாழும் அனைத்து நலிந்த பிரிவினர்கள் தொடர்பில் கூட்டாக பிரேரணை கொண்டு வந்து முழுநாளும் விவாதிப்போம் என்ற யோசனையை ஜேவிபி தலைவர் நண்பர் அனுரகுமார திசாநாயக்கவும், நானும் அதன்பின் பேசி முடி செய்தோம்.

அதன்படி இன்று அனுரகுமார திசாநாயக்க அதுபற்றி கருத்திட, அதை நான் ஆதரிக்க கட்சி தலைவர்கள் தற்போது எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி கணக்கெடுப்புகளின்படி மிக அதிகமாக துன்புறும் நலிந்த பிரிவு குடும்பங்கள் தொடர்பாக முழு தேசமும், உலகமும் அறிந்து கொள்ளும் வண்ணம் நமது பிரேரணை அமையும்.

பெருந்தோட்ட உழைக்கும் குடும்பங்கள், நாளாந்த வருமான நகர பாமர குடும்பங்கள், மீனவ குடும்பங்கள், விவசாய குடும்பங்கள், ஆடை தொழிற்சாலை தொழிலாள குடும்பங்கள்,

மத்திய கிழக்கு உழைப்பாளர் குடும்பங்கள், பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள், உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் தொடர்பில் நாம் விவாதிக்க உள்ளோம்.

இந்த பிரிவினருக்கு விசேட ஒதுக்கீடு அடிப்படைகளில் நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்பதும், சமுர்த்தி வாழ்வாதார
உதவி பெருகின்றவர்களின் பட்டியல் அரசியல் தலையீடுகளினால், பாகுபாடு மிக்கதாக அமைத்துள்ளது என்றும்,


ஆகவே அந்த அப்பட்டியல் உண்மையிலேயே நலிந்த பிரிவினரை உள்வாங்கும் முகமாக திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும்,
நான் கோர விரும்புகிறேன்.

எனது இந்த நிலைபாட்டை ஆதரிக்கும்படி நாடு முழுக்க வாழும் மக்கள்,
தாம் வாக்களித்து தெரிவு செய்த தமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூற வேண்டும் எனவும் கோருகிறேன்.

பெண் பொலிசாருக்கு பாலியல் தொல்லை அதிகாரி கைதுந்த அதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

பெண் பொலிசாருக்கு பாலியல் தொல்லை அதிகாரி கைது

பெண் பொலிசாருக்கு பாலியல் தொல்லை அதிகாரி கைது

மட்டக்களப்பு அக்கறை பற்று பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் கான்ஸடபிள்கள் ,மற்றும் பயிற்சி பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சார்யன் தர அதிகாரி கைது செய்ய பட்டுள்ளார் .

பெண் பொலிசாருக்கு பாலியல் தொல்லை அதிகாரி கைது

பாதிக்க பட்ட பெண் காவல்துறையினர் வழங்கிய முறை பாட்டை அடுத்து ,காவல்துறை தலைமையகம் நடத்திய விசாரணையின் பின்னர் ,குறித்த சார்யன் தர அதிகாரி பணிநீக்கம் செய்ய பட்டுள்ளார் .

தொடர்ந்து அவர் மீது ஒழுக்காற்று மற்றும் பெற பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

குற்றம் நிரூபிக்க பட்டால் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க பாடுகிறது .

சம்பந்தனுடன் ஐரோப்பிய தூதுக்குழு பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

சம்பந்தனுடன் ஐரோப்பிய தூதுக்குழு பேச்சு

சம்பந்தனுடன் ஐரோப்பிய தூதுக்குழு பேச்சு

தமிழ் தேசிய கூட்டமைப்பித்தலைவர் சம்பந்தனுடன் ஐரோப்பிய தூதுக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது .

இந்த சந்திப்பின் பொழுது பயங்கரவாதம் மற்றும் நிகழ்கால அரசியல் மற்றும் ,தமிழர் தரப்பு நிலைப்பாடு தொடர்பில் பேச பட்டுள்ளதாக கூட்டமைப்பு தெரிவிக்கிறது .

இந்த தூது குழு சந்திப்பின் பொழுது நாரதர் சுமந்திரன் கலந்து கொண்டுள்ளார் .

கூட்டமைப்பே தமிழர் பிரச்சினை தொடர்பில் அக்கறை அற்று ,தமது பிழைப்பை நடத்திய வண்னம் நகர்கின்றமை குறிப்பிட தக்கது

இலங்கை நெதர்லாந்துக்கு இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை நெதர்லாந்துக்கு இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

இலங்கை நெதர்லாந்துக்கு இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

இலங்கை நெதர்லாந்துக்கு இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்க படவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .

இந்த பேச்சுக்கள் முடிவடைந்துள்ள நிலையில் , விமான சேவைகள் ஆரம்பிக்க படவுள்ளன .

இலங்கை நெதர்லாந்துக்கு இடையில் ,உல்லாச பயணிகள் வருகையை அதிகரிக்கும் நோக்குடன் ,இந்த விமான சேவைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இரு நாடுகளுக்கு இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது, தமிழர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கை கொழும்பு முதல் நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாம் வரையிலான ,விமான போக்குவரத்துக்கள் ஆரம்பிக்க படவுள்ளன .

உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு

உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு

இலங்கைக்கு இம் மாதத்தின் இதுவரையான கால பகுதியில் ,உல்லாச பயணிகள் வருகை அதிகரித்துள்ளதாக, இலங்கை உல்லாசத்துறை அறிவித்துள்ளது .

இந்த மாதத்தின் இதுவரையான கால பகுதியில் மட்டும் .சுமார் 31,828,உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளனர் என்கிறது உல்லாசத்துறை .

மேலும் இந்த மக்களின் வருகை அதிகரிக்க பல நடவடிக்கை ,முன்னெடுக்க பட்டு வருவதாக இலங்கை அறிவித்துள்ளது .

உல்லாச பயணிகள் வருகையிலேயே அதிக மில்லியன் பணத்தை இலங்கை வருமானமாக ஈட்டிய வண்ணம் உள்ளது .

கொரனோ காலத்தின் பின்னர் இவை வீழ்ச்சியடைந்த நிலையில் ,இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்தமை குறிப்பிட தக்கது .

இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது

இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது

இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்படியில் ஈடுபட்டு கொண்டிருந்த .7 இந்திய மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் .

இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் ,இந்திய மீனவர்கள் சிங்கள கடற்படையால் ,தொடராக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

திருட சென்று வீட்டில் தூங்கிய திருடர்கள் யாழில் நடந்த திகில் சம்பவம்
Posted in இலங்கை செய்திகள்

திருட சென்று வீட்டில் தூங்கிய திருடர்கள் யாழில் நடந்த திகில் சம்பவம்

திருட சென்று வீட்டில் தூங்கிய திருடர்கள் யாழில் நடந்த திகில் சம்பவம்

https://www.youtube.com/watch?v=SbXAhGgjn6M

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் திருட சென்ற திருடர்கள் ,அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு தூங்கிய திகில் சம்பவம் இடம் பெற்றுள்ளது .

அதிக போதையில் திருட சென்ற திருடர்கள், வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து சமைத்து சாப்பிட்டு ,பின்னர் அங்கேயே தூங்கியுள்ளனர் .

காலை வீடு வந்த உரிமையாளர் திருடர்களை கண்ணுற்று சத்தமிட்டுள்ளார் .

அயலவர்களை கண்ணுற்ற ஒருவர் தப்பி ஓடிவிட்டார் ,ஒருவர் சிக்கி கொண்டார் .

சிக்கியவர் காவல்துறையிடம் ஒப்படைக்க பட்டுள்ளார் .

இவர்கள் மீது திருட்டு மற்றும் குற்ற சம்பவம் தொடர்பிலான வழக்குகள் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

வடிவேலு காமடியாக இந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

இலங்கை இன அழிப்பு தொடர்பாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் நிலைப்பாடு என்ன
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இன அழிப்பு தொடர்பாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் நிலைப்பாடு என்ன

இலங்கை இன அழிப்பு தொடர்பாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் நிலைப்பாடு என்ன

இலங்கையி அரச பயங்கரவாதம் மேற்கொண்ட தமிழ் இன அழிப்பு தொடர்பாக ,பிரிட்டன் புதிய பிரதமரும் இந்திய பூர்வீக குடியாக கொண்ட ரிஷி சுனெக் நிலைப்பாடு என்ன .

என்கின்ற கேள்வி தமிழர்களினால் முன் வைக்க பட்டுள்ளது .பிரிட்டனின் பணக்கார பிரதமராக விளங்கி வருகிறார் ரிஷி சுனெக் .

இலங்கை இராணுவம் தமிழர்கள் மீது மேற்கொண்ட ,இன அழிப்பு தொடர்பான பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிடுவாரா ..?

அவ்விதம் உத்தரவிட்டு இலங்கை அரசை தண்டித்து பாதிக்க பட்ட தமிழர்களுக்கு தீர்வு வாங்கி கொடுப்பாரா என, பிரிட்டன் வாழ் தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் .

இலங்கை இன அழிப்பு தொடர்பாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் நிலைப்பாடு என்ன

வெளிநாட்டவராக ஆளும் பிதாமர் ,இலங்கை விடயத்தில் அதிக அக்கறை கொண்டிருப்பார் .

வட இந்தியர்களே தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக அமைந்தனர் .

அவ்வாறான வட இந்தியராக விளங்குபவராக இருக்கலாம் எனபடும் பிரிட்டன் பிரதமர் ,தமிழர்கள் இன அழிப்புக்கு தீர்வு வாங்கி தருவாரா என்கின்ற சந்தேகம் வலுத்துள்ளது .

இவ்வாறு கருத படும் இவர் ,தமிழர்களுக்கு நீதி பால் ,
இலங்கையை ஆண்டவர்கள் என்கின்ற நிலையிலும் ,தீர்வு வழங்குவாரா என்பதே எமது கேள்வியாக உள்ளது .

இலங்கையில் 4000 பொலிசாருக்கு உடல் தகுதி இல்லையாம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 4000 பொலிசாருக்கு உடல் தகுதி இல்லையாம்

இலங்கையில் 4000 பொலிசாருக்கு உடல் தகுதி இல்லையாம்

இலங்கையில் 4000 பொலிசாருக்கு உடல் தகுதி இல்லை என டிரான் அதிரடியாக அறிவித்துள்ளார் .

உயர் பொலிஸ் அதிகாரிகளாக விளங்கும் இவர்கள், சுகாதார அளவீட்டை காண்பித்து ,சொகுசாக வாழ்வதாகவும் ,களத்தில் இறங்கி பணி செய்வதில்லை என தெரிவித்துள்ளார் .

மேற்படி உடல் பாதிப்பு மருத்துவ சான்றிதழ்களுடன் உள்ள அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கப்படவுள்ளனர் .

இது தொடர்பான பிரெரோனை ஒன்று அமைச்சு முன்மொழிவுக்கு, கொண்டு வரப்படும் என குண்டை போட்டுள்ளார் .

இவரது இந்த அறிவிப்பால் காவல்துறை மட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .லஞ்சம் ஊழலில் ஊறி போன இலங்கை காவல்துறைக்கு இதெல்லாம் சகாயமப்பா .

எயிட்ஸ் நோயால் 50 பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

எயிட்ஸ் நோயால் 50 பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு

எயிட்ஸ் நோயால் 50 பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு

இலங்கையில் எயிட்ஸ் உயிர் கொல்லி நோயின் தாக்குதலில் சிக்கி 50 பல்கலைக்கழக மாணவர்கள் பாதிக்க பட்டுள்ளதான ,புதிய புள்ளி விபரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இந்த ஆண்டின் இதுவரையான கால பகுதியில் ,இந்த கொடிய எயிட்ஸ் நோய்க்கு மாணவர்கள் உள்ளாகியுள்ளனர் என்கிறது அந்த விபரம் .

மேலும் இந்த எயிட்ஸ் நோயின் தாக்குதலுக்கு இரண்டு புத்த பிக்குகளும் உள்ளாகியுள்ளது ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கை எங்கும் பரவலாக போதைவஸ்து பாவனைகள் அதிகரித்து காணப்படுவதால் ,அதற்கு அடிமையான மாணவர்கள் ,மக்கள் ,செக்ஸ் தொடர்பில் உரிய பாதுகாப்பு முறைமையை கடை பிடிப்பதில்லை .

இதனாலேயே இந்த உயிர்கொல்லி எயிட்ஸ் நோய் தாக்குதல் , அதிகரித்து காண படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ராஜபக்ச திருடர்கள் அழித்த நாட்டை கட்டி எழுப்புவோம் சஜித் முழக்கம்
Posted in இலங்கை செய்திகள்

ராஜபக்ச திருடர்கள் அழித்த நாட்டை கட்டி எழுப்புவோம் சஜித் முழக்கம்

ராஜபக்ச திருடர்கள் அழித்த நாட்டை கட்டி எழுப்புவோம் சஜித் முழக்கம்

பெரும் வரலாற்று சரித்திரம் இருப்பதாக கூறினாலும், ராஜபக்சர்களால் தற்போதைய ஆட்சியாளர்கள் கூட உலகம் முழுவதும் பிச்சை எடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார் .

இந்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இன, மத, சாதி, நிற பேதங்களுக்கு அப்பாற்பட்டு நாட்டின் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அதற்கான சரியான வேலைத்திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருப்பதாகவும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒரு நல்ல அணியைக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாஸ,

தேர்தலில் வெற்றி பெற்றால், அதன் உண்மையான வெற்றியாளர்கள் தாய் நாடும் அதன் 220 இலட்சம் மக்களும் தான் எனவும் தெரிவித்தார்.

கலகெதர தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கடந்த (23) ஆம் திகதி கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்மார்ட் தீர்வுகள், புத்திசாலித்தனமான தீர்வுகளை வழங்குவதாகக் கூறி ஆட்சி வந்த சேர்மார்கள் இறுதியில் நாட்டையே வக்குரோத்தாக்கினர் என்கிறார் .

ராஜபக்ச திருடர்கள் அழித்த நாட்டை கட்டி எழுப்புவோம் சஜித் முழக்கம்

இதனால், சிறு குழந்தை முதல் கர்ப்பிணித் தாய் வரை அனைத்து மட்டங்களிலுமுள்ள குடிமக்கள் தற்போது மிகவும் அவல நிலையில் இருப்பதாகவும், இறுதியாக உணவு வேளையைக் கூட தயாரிக்க முடியாத நிலையில் உள்ளனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

கல்வித் துறையின் பிரச்சினைகள், சுகாதாரத் துறையின் பிரச்சினைகள், கைத்தொழில் துறையின் பிரச்சினைகள் உட்பட பல தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது வலியுறுத்தினார்.

அரசாங்கம் போராட்டத்திற்கு பயந்து பல்வேறு கட்டளைச் சட்டங்களைப் பிரயோகித்து மக்களை ஒடுக்குவதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இந்த அடக்குமுறையைத் தாங்கும் உச்ச வரம்பை மக்கள் எட்டிவிட்டனர் .

அதன் காரணமாக பல்வேறு துறைசார் தொழில் வல்லுநர்கள் மற்றும் புத்திஜீவிகள் இலட்சக்கணக்கில் நாட்டை விட்டு வெளியேற ஆயத்தமாகி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

விரைவில் முழு நாட்டு மக்களும் வீதியில் இறங்கி மக்களுக்கு பக்கபலமாக இருக்கும் பொது மக்கள்
ஆட்சியொன்றை உருவாக்குவர் எனவும் சுட்டிக்காட்டினார்.

வீட்டில் பதுக்கி வைக்க பட்ட ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வீட்டில் பதுக்கி வைக்க பட்ட ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது

வீட்டில் பதுக்கி வைக்க பட்ட ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது

இலங்கை வெல்லாம் பிட்டிய பகுதியில் வீடொன்றில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்க பட்ட வாள்கள் ,கத்திகள் மற்றும் ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

இவர்களினால் பதுக்கி வைக்க பட்ட ,கொடிய கூரிய ஆயுதங்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,குறித்த வீடு சுற்றிவளைக்க பட்டு ஆயுதங்கள் மீட்க பட்டுள்ளன .

குறித்த குழுவினர் ,கொள்ளை மற்றும் ,சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுவதால் ,உரிய முறை கவனிப்புடன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

வீதியில் எரிந்த ஆட்டோ தப்பிய குடும்பம்
Posted in இலங்கை செய்திகள்

வீதியில் எரிந்த ஆட்டோ தப்பிய குடும்பம்

வீதியில் எரிந்த ஆட்டோ தப்பிய குடும்பம்

ஒரே குடும்பத்தினர் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று நேற்று (25) தீப்பிடித்து எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து முச்சக்கரவண்டிக்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு நுவரெலியா லவர்ஸ்லிப் பகுதியில் உள்ள வீட்டுக்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே, நுவரெலியா பஸ் நிலையத்திற்கு அருகில் இவ்வாறு முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்துள்ளது.

முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்த போது அருகில் இருந்தவர்கள் பல வழிகளில் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முச்சக்கரவண்டி இவ்வாறு தீப்பற்றி எரிந்த போது, முச்சக்கரவண்டிக்குள் தாய், தந்தை மற்றும் மகளும் பயணித்துக்கொண்டிருந்ததுடன், தந்தையே முச்சக்கரவண்டியை செலுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த மூவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், இந்த தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.