யாழ் இளைஞன் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழ் இளைஞன் கைது

யாழ் இளைஞன் கைது


யாழ் இளைஞன் கைது வேறு ஒருவரின் விசாவைப் பயன்படுத்தி கனடாவிற்கு தப்பிச் செல்ல வந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் தனது, விமான அனுமதியை முடித்துவிட்டு குடிவரவு கருமப்பீடத்திற்கு சென்று தனது கடவுச்சீட்டை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட கடவுச்சீட்டில் உள்ள புகைப்படமும் அவரது புகைப்படமும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதால், இந்தக் கடவுச்சீட்டைப் பற்றிய

கூடுதல் தகவல்களைக் கண்டறிய குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் அதன் தகவல்கள் உள்ளிடப்பட்டுள்ளன.

திருகோணமலை நீதிமன்றம்

இதன்படி, இந்த கடவுச்சீட்டை வைத்திருப்பவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து திருகோணமலை நீதிமன்றம்,

விமானப் பயணத் தடை விதித்துள்ளதாக உண்மைகள் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப்புலனாய்வுப்

பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரள கஞ்சா சிக்கியது
Posted in இலங்கை செய்திகள்

கேரள கஞ்சா சிக்கியது

கேரள கஞ்சா சிக்கியது

கேரள கஞ்சா சிக்கியது கேரள கஞ்சா தொகையுடன் இரண்டு சந்தேகநபர்கள் வடக்கு கடல் பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள கஞ்சா பறிமுதல்

இதன்போது அவர்களிடம் இருந்து 70 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் பெறுமதி சுமார் 28 மில்லியன் ரூபாய் என கடற்படை தெரிவித்துள்ளது.

கேரள கஞ்சாவை டிங்கி படகில் ஏற்றிச் சென்ற போது கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகை மற்றும் டிங்கி படகும் மேலதிக விசாரணை களுக்காக

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

6பேர் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம்
Posted in இலங்கை செய்திகள்

6பேர் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம்

6பேர் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம்

6பேர் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் ,முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் புதன்கிழமை(5) அதிகாலை இராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை(4) முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு சென்று மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் புறப்பட்டு புதன்கிழமை(5) அதிகாலை இராமேஸ்வரம் அடுத்த சேராங் கோட்டையை சென்றடைந்துள்ளனர்.

தாய் தந்தை மற்றும் நான்கு பிள்ளைகள் உள்ளடங்களாக 6 பேர் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கை தமிழர்கள் ஆறு பேரையும் மீட்ட மரைன் பொலிஸார் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது

பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது

பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது ,வவுனியா, நெடுங்கேணி பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்து நேற்று (04.06) மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் பயணித்த புளியங்குளம் பொலிஸ் நிலைய ஜீப் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது.

வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப்

வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப் வண்டி வீட்டிற்குள் நின்ற மோட்டர் சைக்கிள், வீதியோர மின்சாரத்தூண், வீட்டு குடிநீர் இணைப்பு

என்பவற்றை சேதப்படுத்தியுள்ளதுடன், அருகில் உள்ள கொட்டகையில் படித்துக் கொண்டிருந்த சுமார் 40 வரையான மாணவர்கள் மயிரிழையில் தப்பியுள்ளனர்.

விபத்தின் போது புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 5 பேர் சிவில் உடையில் வாகனத்தில் இருந்ததாக விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் பொதுமக்கள் குவிந்ததும் பொலிசார் அங்கிருந்து நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்குள் தப்பிச் சென்றுள்ளனர்.

நெடுங்கேணி பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், ஜீப் வண்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு வருகை

விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பொலிசார் மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வீதிகளை புனரமைக்க நிதி
Posted in இலங்கை செய்திகள்

வீதிகளை புனரமைக்க நிதி

வீதிகளை புனரமைக்க நிதி

வீதிகளை புனரமைக்க நிதி பொருளாதாரப் பிரச்சினைகளை நிறைவு செய்து, நாட்டை சரியான பாதையில் வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே எனவும் எனவே, மக்கள் ஆதரவுடன் மீண்டும்

ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டு எதிர்காலத்தில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கிராமிய

இராஜாங்க அமைச்சர்

வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அத்துடன், சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளை உடனடியாக புனரமைப்பதற்கு சுமார் 03 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஒதுக்கிய நிதியில் இருந்து சுமார் 12 பில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்தி, கிராமிய வீதிகளையும்,

பாலங்களையும் அமைக்கின்ற வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்திருக்கின்றோம். எமது அமைச்சின் ஊடாக சுமார் 65 சதவீதமான பணிகளை ஆரம்பிக்கக் கூடியதாக இருந்திருக்கின்றது. எதிர்வரும் நாட்களில்

இப்பணிகளை முழுமையாக நிறைவு செய்து கிராமங்களுக்கு அவற்றின் பலனைக்கொண்டு சேர்ப்பதற்கு அவசியமான விடயங்களை அமுல்படுத்தி வருகிறோம்.

வேலைவாய்ப்பு மற்றும் கட்டுமானத் துறை

கடந்த வருடங்களில் கட்டுமானத்துறை வீழ்ச்சியடைந்திருந்தது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு மற்றும் கட்டுமானத் துறையில் ஈடுபட்ட சாதாரண தொழிலாளர்களுக்கும் சிக்கல்களை எதிர்கொண்டனர்.

ஆனால் தற்போது நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைவதோடு மக்களின் வருமானத்தையும் உயர்த்தி, கட்டுமானத்துறையை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பும் கிடைத்துள்ளது.

எனவே இவ்வாறு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இதன் ஊடாக கிராமியப் பொருளாதாரமும் எதிர்காலத்தில் வளர்ச்சியடையும்.

மேலும், தற்போது நாட்டின் அதிகமான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கிராமிய வீதிகள் சேதமடைந்துள்ளன.

எனவே வெள்ளத்தால் சேதமைடைந்த வீதிகளை துரிதமாக புனரமைக்க ஜனாதிபதி சுமார் 03 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிராமப்புற மக்களின் வாழ்க்கை

அந்த வகையில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேப்படுத்துவதற்கான பணிகளை நாம் செவ்வனே செய்துகொண்டிருக்கின்றோம்.

முக்கியமாக இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்காலத்திலும் மக்களின் நம்பிக்கையை வென்று, இந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும்.

மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு கடந்த கால பொருளாதார நெருக்கடியினால் இடைநடுவே கைவிடப்பட்டிருந்த அபிவிருத்திப் பணிகளை நிறைவுசெய்து மக்கள்

பாவனைக்கு கையளிப்பதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று உலக வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள் தற்போதும் நடைபெற்று வருகின்றன.

அதிகமான விபத்துகள் இடம்பெறும் வீதிகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றின் பணிகள் கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளன.

தற்போது நாட்டின் நல்ல நிலைமை குறித்து மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்பு

நாட்டை முன்னோக்கிக்கொண்டு செல்ல வேண்டுமென்றால், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி உறுதியாக எல்லோரையும் அரவணைத்து செயற்பட வேண்டும்.

அதேபோன்று இப்போது இருக்கின்ற உலகளாவிய பிரச்சினைகளோடு சரியான இடத்திற்கு நாட்டைக் கொண்டு செல்லக் கூடிய ஒரு தலைவராக

நாங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பார்க்கிறோம். எனவே அவர் மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பலமான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவார்.

முக்கியமாக, நான் ஒரு சிறுபான்மை மக்களின் பிரதிநிதி என்ற வகையில் நானும் நம்புகிறேன்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எமது பிரச்சினைகள் குறித்து சிறப்பான சில முன்னெடுப்புகளைச் செய்துகொண்டு வருகின்றார்.

மேலும், நம்பிக்கைக் கொள்ளக்கூடிய அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மாகாண சபை முறையை நாங்கள் பலமாகக் கட்டமைக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறிவருகின்றார்.

இவற்றை அடுத்த வருடம் அமுலாக்கக் கூடிய வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.”

என்று கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேலும் தெரிவித்தார்.

அதிகரிக்கும் டெங்கு அபாயம்
Posted in இலங்கை செய்திகள்

அதிகரிக்கும் டெங்கு அபாயம்

அதிகரிக்கும் டெங்கு அபாயம்

அதிகரிக்கும் டெங்கு அபாயம் இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் 25,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

பல பாடசாலைகளில் நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்காணுவது மிகவும் முக்கிய விடயம் என அதன் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் டொ க்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

“டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில், கிட்டத்தட்ட 90,000 நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதேபோல், இந்த வருடம் ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

நோயாளிகளின் எண்ணிக்கை

மே மாத இறுதியில் நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்தது. வரும் காலங்களில் பருவமழையால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. 93,874 இடங்களை ஆய்வு செய்துள்ளோம்.

இங்கிருந்து கொசுக்கள் பெருகக்கூடிய 28,310 பகுதிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

மேலும், கொசுப்புழுக்கள் உள்ள 4,890 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” என தெரிவித்தார்

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி
Posted in இலங்கை செய்திகள்

குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது

குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது

குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது ,சமூக ஊடகங்களில் வைரலான குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புல்மோட்டை அரிசி

இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசி மலை பகுதியில் குறித்த நபரும் மேலும் தாக்குதல் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெலிஓயா கல்யாணபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான 4 1/2 வயதுடைய குழந்தையும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம்மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம்மீட்பு

கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம்மீட்பு

கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம்மீட்பு யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கோழி கிடைத்தால் புரியாணி போடுங்கள்
Posted in இலங்கை செய்திகள்

கோழி கிடைத்தால் புரியாணி போடுங்கள்

கோழி கிடைத்தால் புரியாணி போடுங்கள்

கோழி கிடைத்தால் புரியாணி போடுங்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கை தவறி போகும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை பெற்றே தீருவோம்.

ஒன்றேகால் இலட்சம் தமிழர் வாழும், எழுபத்தி ஐயாயிரம் தமிழ் வாக்காளர் வாழும் இரத்தினபுரியில் எம்பி பதவியை பெறுவது எமது உரிமை.

தலைவர் மனோ கணேசன்

அது ஒரு சலுகை அல்ல. ஆகவே அடுத்த முறை எங்கள் வேட்பாளர் சந்திர குமார் இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பியாக வெற்றி பெற்று வருவார்

என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்..

இப்படி எமது கடும் உழைப்பினால் தமிழ் பிரதிநிதித்துவங்களை நமது இனம் பெறுகின்ற சூழல் கூடி வரும் போது,

நாய், நரி, பூனை, யானை, காகம், குருவி, கோழி சின்னங்களை தூக்கி கொண்டு வந்து தமிழ் வாக்குகளை சிதறடிக்க

இப்போதே சிலர் திட்டம் போடுகிறார்கள். துரோகிகளான இவர்கள் தலைகளில் இடிதான் விழ வேண்டும். நாய், நரி, பூனை, காகம், குருவி வந்தால் விரட்டி விடுங்கள். கோழி கிடைத்தால் பிடித்து புரியாணி போடுங்கள் என்றார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளி கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட கட்டமைப்பு மாநாடு, மாவட்ட

இரத்தினபுரி நகரசபை

அமைப்பாளர் சந்திரகுமார் ஏற்பாட்டில், இரத்தினபுரி நகரசபை மண்டபத்தில் தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடை பெற்றது இதில் தலைமை உரை ஆற்றிய மனோ எம்பி மேலும் கூறியதாவது,

எனது எம்பிக்கள் அவ்வந்த மாவட்டங்களில் வாழும் மண்ணின் மைந்தர்களாக இருக்க்க வேண்டும். தமிழ் மொழியுடன் சிங்களமும் பேச வேண்டும்.

எமது துன்பம், துயரம், கஷ்டம், கண்ணீர் ஆகியவற்றை சிங்கள மொழியில் நாட்டுக்கு கேட்கும் விதமாக அவர்கள் உரக்க கூற வேண்டும்.

நான் அதைதானே செய்கிறேன்? அப்படிதான் எங்கள் எம்பிக்கள் இருக்க வேண்டும் என்பது என் கொள்கை. அதைதான் வேலுகுமார் செய்கிறார்.

எங்கள் மாவட்ட அமைப்பாளர்கள் இரத்தினபுரி சந்திர குமார், கேகாலை பரணிதரன், கம்பஹா சசி குமார், கொழும்பு பாலசுரேஷ், களுத்துறை அன்டன் ஜெயசீலன் ஆகியோர் செய்வார்கள்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியாவில், வடக்கில், கிழக்கில் பிரச்சினை இல்லை. ஆனால், நாம் சிறுபான்மையாக வாழும் கேகாலை, இரத்தினபுரி, கண்டி, கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நிலைமை சவால் மிக்கது.

இம்மாவட்டங்களில் எமது கடும் முயற்சியால் தமிழ் பிரதிநிதித்துவங்களை எமது இனம் பெறுகின்ற சூழல் கூடி வரும் போது, தமிழ் வாக்குகளை சிதறடிக்க இப்போதே சிலர் திட்டம் போடுகிறார்கள் என்றார்.

இந்திய தேர்தல் இன்று முடிவு
Posted in இலங்கை செய்திகள்

இந்திய தேர்தல் இன்று முடிவு

இந்திய தேர்தல் இன்று முடிவு

இந்திய தேர்தல் இன்று முடிவு இந்தியாவில் ஏழாவது கட்ட மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து வெளியான கருத்துக் கணிப்புகளில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் தலைவர்கள் இதற்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.

கடைசிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்ததும், பிரதமர் நரேந்திர மோதி கன்னியாகுமரிக்குச் சென்று சுமார் 45 மணிநேரம் தியானம் செய்தார்.

மூன்றாவது பதவிக் காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் செயல்படுத்த வேண்டியவை தொடர்பான ‘100 நாள் நிகழ்ச்சி நிரல்’ கூட்டத்தை பிரதமர் (ஞாயிற்றுக்கிழமை) நடத்தினார்.


பாஜக தனித்து 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களிலும் வெற்றி பெறும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா கூறினார்.

எதிர்க்கட்சிகள் கூடி எதிர்கால வியூகம்

இதற்கிடையில், சனிக்கிழமை எதிர்க்கட்சிகள் கூடி எதிர்கால வியூகம் குறித்து ஆலோசித்தன. இந்தியா கூட்டணி 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

கருத்துக் கணிப்புகள் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இது மோதி மீடியாக்களின் கருத்துக்கணிப்பு” என்று கூறியுள்ளார்.

கருத்துக் கணிப்புகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “இதன் பெயர் கருத்துக் கணிப்பு அல்ல, இது

மோதி மீடியாக்களின் கருத்துக் கணிப்பு, இது மோதிஜியின் கருத்துக் கணிப்பு, அவரது கற்பனைக் கருத்துக்கணிப்பு” என்றார்.

இந்தியா கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று ராகுல் காந்தியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, “சித்து மூஸ்வாலாவின் பாடலைக் கேட்டது உண்டா- 295” என்றார்.

மறைந்த பஞ்சாப் மாநிலப் பாடகர் சித்து மூஸ்வாலா ‘295’ என்ற பாடலை வெளியிட்டிருந்தார். அதைச் சுட்டிக்காட்டியே இந்தியா கூட்டணி 295 இடங்களைப் பெறும் என்று ராகுல் காந்தி கூறினார்.

Error: View 9293b2au4w may not exist
காரைதீவில் சிரமதானம்
Posted in இலங்கை செய்திகள்

காரைதீவில் சிரமதானம்

காரைதீவில் சிரமதானம்


காரைதீவில் சிரமதானம் ,தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு ஜூன் 03 சுற்றாடல் தூய்மைப்படுத்தல் தினம் என்பதற்கமைய காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகம், காரைதீவு

பிரதேச சபை, காரைதீவு சுகாதார வைத்திய அலுவலகத்தினர், காரைதீவு பொலிஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் சிறந்த ஒத்துழைப்போடு சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது காரைதீவு-02, 03, 05 ம் பிரிவுகளின் தோணாவின் சூழலை தூய்மையாக்கப்பட்டதுடன் காரைதீவு-09 வெட்டு வாய்க்கால் முகத்துவாரப் பகுதியில்

முறைகேடாக குப்பை கூழங்கள் கொட்டப்பட்டு மிகவும் மோசமான முறையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு காணப்படும் இடத்தினை தூய்மையாக்கல் சிறந்த முறையில் இடம் பெற்றது.

இதன் போது காரைதீவு பிரதேச சபை ஆளணியினர் மற்றும் வாகன வசதிகள் வழங்கி இருந்ததுடன் காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காரைதீவு பிரதேச சபை,

காரைதீவு சுகாதார வைத்திய அலுவலகத்தினர், காரைதீவு பொலிஸ் நிலைய பொலிஸார் என பலரும் கலந்து கொண்டனர்.

மாமாவை வெட்டிக்கொலை செய்த மருமகன்
Posted in இலங்கை செய்திகள்

மாமாவை வெட்டிக்கொலை செய்த மருமகன்

மாமாவை வெட்டிக்கொலை செய்த மருமகன்

மாமாவை வெட்டிக்கொலை செய்த மருமகன்
மாதம்பை, செம்புகட்டிய பிரதேசத்தில் மருமகன் ஒருவர் அவரது மாமாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நரசிம்ம கேசர பண்டாரநாயக்க சாம்சன் ஜயவீர என்ற 56 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சகோதரியின் மகனே இந்த கொலையை செய்துள்ளதாகவும், சந்தேக நபரும் இறந்தவரின் வீட்டிற்கு அருகில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பழைய தகராறு காரணமாக உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் சந்தேக நபர் வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களை இழுத்து சென்ற வெள்ளம்
Posted in இலங்கை செய்திகள்

மக்களை இழுத்து சென்ற வெள்ளம்

மக்களை இழுத்து சென்ற வெள்ளம்

மக்களை இழுத்து சென்ற வெள்ளம் ,வெள்ள நீரில் விளையாடிக் கொண்டிருந்த 4 பேர் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டதாகவும் ஒருவர் காணாமல் போனதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (03) மாலை இந்தச் சம்பவம் எங்குருவாதொட, உடுவர கரந்தவதுகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

நிவிவெடல் தோட்டம், நேபட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க பிரதேசவாசிகளும் எங்குருவாதொட பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை
Posted in இலங்கை செய்திகள்

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை ,சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (04) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் நாளையும் (05) இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஹோமாகம, கம்பஹா, களனி ஆகிய கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் கடுவெல பிரிவில் உள்ள பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலவும் வானிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் பாடசாலை களை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு மாகாண அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.

எரிவாயு விலை குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

எரிவாயு விலை குறைப்பு

எரிவாயு விலை குறைப்பு

எரிவாயு விலை குறைப்பு நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாறு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 3,790 ரூபாவாகும்.

5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,525 ரூபாவாகும்.

2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 712 ரூபாவாகும்.

இலங்கையில் தேர்தல் இடம்பெறவுள்ள இவ்வேளையில் இந்த விலை குறைப்புக்கள் அதிரடியாக நடத்த படுகின்றன .

தேர்தல் முடிவுற்றதும் மீளவும் வானை நோக்கி விலைவாசிகள் உயர்வடையும் என்பதனை இப்பொழுதே அடித்துக்கூறலாம் .

கடந்த முறை இடம்பெற்ற தேர்தல் காலத்திலும் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றன .

அதே போன்று இப்பொழுது மீளவும் இந்த விடயங்கள் கடை பிடிக்கப்படலாம் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .

எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல்
Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல்

எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல்


எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல் அவள் சிதைக்கப்பட்ட சிலையாய் தூக்கி வீசப்பட்டு கேட்பாரற்றுக் கிடந்தாள்.
அச்சிலையைப் பற்றி அறியாதவர்கள் அதன்மேல் கழிவுகளைக் கொட்டி அதைக் காலால் மிதித்து மேலும் காயப்படுத்திக் கொண்டு இருந்தனர்.


வாழ்க்கையை வலியோடு நகர்த்த முயன்று கொண்டிருந்த அந்த சிலையின் அருகே வழிப்போக்கன் ஒருவன் வந்தமர்ந்தான்.

சிலையைச் சிதைத்தவன் துர்ப்பாக்கியசாலி


அந்தச் சிலையின் அருமையை ஆராய்ந்து அறிந்தவன், இப்பேர்ப்பட்ட சிலையைச் சிதைத்தவன் துர்ப்பாக்கியசாலி என்று கூறி, அச்சிலையை தூசி தட்டித் தூக்கி நிறுத்தினான்.


என்னை முதன்முறை சிலையாக மாற்றியவனே சிதைத்து தூக்கி வீசி விட்டான். இவனைப் பார்த்தால் சிற்பியாகவே தெரியவில்லை என்று சிதிலமடைந்த சிலை சிரித்தது.

காயப்பட்ட சிலைக்கு கண்கள் காணும் காட்சி


காயப்பட்ட சிலைக்கு கண்கள் காணும் காட்சி பிழையாகத்தானே இருக்கும் எனப் புரிந்து கொண்ட அவன், பிறந்த குழந்தையைப் போல அச்சிலையை கண்ணியமாய்க் கவனித்துக் கொண்டான்.


அரைகுறைச் சிற்பி எண்டாலும் அச்சிலையின் வலியை அழகாய்ப் புரிந்து கொண்டு மருந்திடத் தொடங்கியவன், அவ்வப்போது அச்சிலைக்கே தெரியாமல் அதன் போக்கில் அதை அழகாய்ப் புதுப்பிக்க ஆரம்பித்தான்.


வெயிலோ, மழையோ, புயலோ, பூகம்பமோ வந்தாலும் அச்சிலையை விட்டு அகலாமல் இருந்தவன், எப்படியோ அதன் கால்களை ஆவலுடன் தன்னுடன் சேர்ந்து நடப்பதற்கு தயார்ப்படுத்தி விட்டான்.

சிலையை காதலோடு செதுக்கி கலைநயமாக வடிவமைத்தான்


காலப்போக்கில், காயமடைந்த சிலையை காதலோடு செதுக்கி கலைநயமாக வடிவமைத்தான். வலியை முற்றிலுமாக மறந்த அச்சிலையின் கண்களை மீண்டும் காதலால் நிரப்பினான்.


இரண்டாம் முறை காதல் கண்ணாடியை கையில் எடுத்து அச்சிலை மீண்டும் அது புதுப்பிக்கப்பட்டிருப்பதை ஆசையாய் தயங்கியபடி பார்த்து இரசிக்கத் தொடங்கியது.


நடைப் பயணமாய்….பேருந்துப் பயணமாய்….ரயில் பயணமாய்….

அச்சிலை காண நினைத்த இடங்களெல்லாம் உடன் சென்றவனிடம், அவ்விடங்களுக்கும் அதிலிருக்கும் நினைவுகளையும் தன்னையறியாமல் கூறிக் காயப்படுத்தினாலும் அதை அவன் காட்டிக் கொள்ளாமல்,

அந்த நினைவுகளிலிருந்து நிதானமாய் அச்சிலையை வெளிக் கொண்டு வரத்தொடங்கினான்.


இரண்டாவதாக செதுக்கப்பட்ட காதல் என்றாலும் இயல்பை விட இன்றியமையாத ஒன்றாக அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமே என்று நினைத்துக் கொண்ட அந்தச் சிலை அவனை அவமதிக்காமல் அரைகுறைச் சிற்பி என்றாலும் ஆசையாய் அணைத்துக் கொண்டது.


ஆறுதலும் ஆதரவும் அரவணைப்பும் அக்கறையும் அன்பும் மதிப்பும் காதலின் எண்ணத்தில் உண்மையாக இருக்கிறதா என்று எண்ண வேண்டுமே தவிர எண்ணிக்கையில் எத்தனையாவது என்று எண்ணத் தேவையில்லை.


02.06.2024. நிலா தமிழ்

சேதமடைந்துள்ள வீடுகள்
Posted in இலங்கை செய்திகள்

சேதமடைந்துள்ள வீடுகள்

சேதமடைந்துள்ள வீடுகள்

சேதமடைந்துள்ள வீடுகள் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழையுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற
காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு

உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்க செலவில், முப்படையினர் மற்றும் பொலிஸாரின்

உதவியுடன் எதிர்வரும் 02 மாதங்களுக்குள் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இது தொடர்பான முழுமையான திட்டமொன்று ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம்

பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் தலைமையில் நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

பொது நிர்வாக அமைச்சு

தற்போது பொது நிர்வாக அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர் மற்றும் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், மாவட்ட செயலகங்கள், பாதிக்கப்பட்ட அனைத்து

பிரதேச செயலகங்களின் அத்தியாவசிய உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கிராம சேவகர்கள் உள்ளிட்ட குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.

அந்த அனைத்து அதிகாரிகளின் அர்ப்பணிப்பையும் பாராட்டிய ஜனாதிபதி,
சேவைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காகவும்

பொதுமக்களுக்கு அன்றாட வாழ்க்கை நிலைமைகளை பேணுவதற்காகவும் வழங்கக்கூடிய அனைத்து ஆதரவையும் அரசாங்கம் உடனடியாக வழங்கும் என்றும் தெரிவித்தார்.

25 மாவட்ட செயலகங்களின் கீழ் அமைந்துள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்களை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தனக்கு

அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அதிப திலகரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு

முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்பையும் பெறுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெள்ள இடர்களைக் கையாள்வதற்குப் பயன்படுத்தக்கூடிய தேவையான வாகனங்கள், படகுகள் அல்லது ஹெலிகொப்டர்கள் ஆகியவற்றை வழங்குவதற்கு உடன்பாடு காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கிணங்க கடற்படை, விமானப்படை மற்றும் இராணுவம் என்பன அந்த பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு செயலாளர்

ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் கலந்துகொண்ட இச்சந்திப்பில் அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் டிஜிட்டல் முறையில் இணைந்து கொண்டனர்.

தேவையற்ற வகையில் வீதிகளுக்கு வருவதைத் தவிர்க்குமாறும், வெள்ளம் அல்லது அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வதைத்
தவிர்க்குமாறும், வெள்ளம் அல்லது நீர்நிலைகள் உள்ள இடங்களில் நீர்

விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம்


விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் பணிப்பாளர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

அவசர நிலைகளைத் தெரிவிப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிக
நிவாரணங்களை வழங்குவதற்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணி நேரமும் செயற்படும்.

சேவைகளுக்கு நேரடியாக பங்களிக்க வேண்டிய அனைத்து அரச நிறுவனங்களும் அதிகாரிகளும் இதன் ஊடாக இணைக்கப்பட்டு வசதிகள் செய்து தரப்படும் எனவும் பதில் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக அனர்த்தமுள்ள 08 பிரதேச செயலகப் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த அலுவலகங்கள்

அனைத்திலும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் இன்று இரவு முழுநேரப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன தெரிவித்தார்.

இரத்தினபுரி, குருவிட்ட, ஏலபாத்த, கலவான, அயகம, கிரியெல்ல, நிவித்திகல
மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் அதிக

ஆபத்துள்ள பிரதேச செயலகப் பிரிவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது சீரற்ற காலநிலை காரணமாக 2574 குடும்பங்களில் 9398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 528 குடும்பங்களைச் சேர்ந்த 2219 பேர் 18 பாதுகாப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில்

இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை 5 மரணங்கள் பதிவாகியுள்ளன. பிரதேச
செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளுராட்சி

உத்தியோகத்தர்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை தொடர்ந்து வழங்கி வருவதாக மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன தெரிவிக்கின்றார்.

இடம்பெயர்ந்த முகாம்களில் தங்கியுள்ள மற்றும் வெளியில் தங்கியுள்ள
அனைத்து பாதிக்கப்பட்டவர்களின் உணவு மற்றும் சுகாதாரத் தேவைகள்

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மேலும் வலியுறுத்தினார்.

இதேவேளை, 22 பிரதேச செயலகங்களில் நெலுவ, தவலம, நாகொட, நயாகம, வெலிவிட்டிய திவித்துறை, பத்தேகம மற்றும் எல்பிட்டிய ஆகிய 07 பிரதேச

செயலகப் பிரிவுகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக காலி மாவட்ட பதில் செயலாளர் சி.டி. ராஜகருணா கூறினார்.

நெலுவவை அண்டிய பகுதிகளில் பாதிப்பு குறைந்து வருவதையும் அவர்
சுட்டிக்காட்டினார். எனினும், அனர்த்தம் காரணமாக 1348 குடும்பங்களைச்
சேர்ந்த 3455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இருவர் காணாமல்
போயுள்ளனரர். பிரதான பாதுகாப்பு நிலையமொன்றில் 250 குடும்பங்களைச்
சேர்ந்த 608 பேருக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பதில்
மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டினார்.

மாத்தறை மாவட்டத்தில்

மாத்தறை மாவட்டத்தில் 16 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அத்துரலிய,
அக்குரஸ்ஸ மற்றும் பிடபெத்தர ஆகிய பிரதேசங்கள் மிகவும்
பாதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட செயலாளர் கணேஷ் அமரசிங்க கூறினார்.

முலட்டியன, பஸ்கொட, கொட்டபொல, திஹகொட, மாலிம்படை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பிரிவுகளும் சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ளன.

03 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளனர்.

அனர்த்தங்களினால் 2731 குடும்பங்களில் 10,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

மாத்தறை மாவட்டத்தில் 150 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது 21
குடும்பங்களைச் சேர்ந்த 123 பேர் 05 நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில்

மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் தேவையான

சேவைகளை வழங்க பொது நிர்வாக அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பணிப்புரைகள் கிடைத்துள்ளதாகவும் மாவட்ட
செயலாளர் குறிப்பிட்டார்.

களுத்துறை மாவட்டத்தில் 943 குடும்பங்கள் அனர்த்தத்தினால்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 3539 ஆகும்.
களுத்துறை மாவட்டச் செயலாளர் பிரசன்ன ஜனக குமார கூறுகையில்,

ஏற்கனவே 30 தங்குமிடங்கள் நிறுவப்பட்டுள்ளதோடு 606 குடும்பங்களைச் சேர்ந்த 2274 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தின் 06 பிரதேச செயலகப் பிரிவுகளில் மாத்திரம் அனர்த்த நிலைமைகள் பதிவாகியுள்ளதோடு, இதன் காரணமாக 1716 குடும்பங்களில் 6839 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

பிரதேச செயலாளர்களினால் 07 பாதுகாப்பான இடங்கள் தயார் படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 215


பேர் தங்கியிருப்பதாகவும் கொழும்பு பதில் மாவட்ட செயலாளர் பிரசன்ன ஜனக குமார தெரிவித்தார்.

அவசர நிலமைகள் தொடர்பில் அறிவிக்கவும்
Posted in இலங்கை செய்திகள்

அவசர நிலமைகள் தொடர்பில் அறிவிக்கவும்

அவசர நிலமைகள் தொடர்பில் அறிவிக்க

அவசர நிலமைகள் தொடர்பில் அறிவிக்கவும் ,அவசர நிலமைகள் தொடர்பில் அறிவிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி

இலக்கமானது 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவைகளுக்கு நேரடியாக பங்களிக்க வேண்டிய அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் இணைப்பு மற்றும் வசதிகளை இது எளிதாக்கும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை

இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமைகள் குறித்து அறிவிப்பதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட விசேட செயற்பாட்டு அறையின் தொலைபேசி இலக்கங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று (02) மாலை 06:00 மணி முதல் பொலிஸ் தலைமையகத்தில் 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்படும் விசேட பிரிவை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விசேட செயற்பாட்டு அறை பொலிஸ் தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் இயங்குவதுடன் அவசரகால நிலைகள் மற்றும் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

அவசர தொலைபேசி

இதன்படி, 011 2 42 18 20 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசேட செயற்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், 011 2 43 92 12, 011 20 130 36 அல்லது 011 20 130 39 ஆகிய எண்களுக்கு அழைப்பதன் மூலம் தகவல்களை வழங்க முடியும்.

அத்துடன் disaster.ops@police.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்துக்களில் நால்வர் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்துக்களில் நால்வர் பலி

வாகன விபத்துக்களில் நால்வர் பலி

விபத்துக்களில் நால்வர் பலி ,நாட்டின் சில பகுதிகளில் நேற்று (02) இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (02) காலை மஹபாகேவில் 20 அடி கிளை வீதியில் தப்பஹெனாவத்தை பிரதேசத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்த சாரதி

விபத்தில் பலத்த காயமடைந்த சாரதி, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

மகுல்பொகுன, ராகம பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை நேற்று மாலை கொட்டாவை அத்துருகிரி வீதியில் மெண்டிஸ் வளைவுக்கு அருகில் அத்துருகிரியவிலிருந்து கொட்டாவை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ந்து முன்னால் வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

முச்சக்கரவண்டியின் சாரதி

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, பின்னால் பயணித்த மூவர் மற்றும் காரின் சாரதி ஆகியோர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்.

42 மற்றும் 54 வயதுடைய ஹிக்கடுவை மற்றும் ஹப்புத்தளை பிரதேசங்களை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் நேற்று இரவு நிட்டம்புவ, கொழும்பு – கண்டி வீதியில் முருதாவல சந்திக்கு அருகில் கொழும்பில் இருந்து கண்டி திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நடந்து சென்ற நபர் மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி வட்டுபிட்டிவல வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

பஸ்யால பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சோறு போடும் விவசாயியின் நெல்
Posted in இலங்கை செய்திகள்

சோறு போடும் விவசாயியின் நெல்

சோறு போடும் விவசாயியின் நெல்

இன்று சோறு போடும் விவசாயியின் நெல் முதலாலிமார்களுக்கு வழங்கப்பட்டு, முதலாளிமார்கள் போஷிக்கப்பட்டு வரும் செயற்பாடு நடந்து வருகிறது.

இந்த ஏகபோகத்தை உடைத்து, விவசாயிக்கு வளமான சமகாலத்தையும், எதிர்காலத்தையும் உருவாக்கி, விவசாயியை மையமாக வைத்து கிராமம், நகரம், நாட்டைக் கட்டியெழுப்புவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மோசடி மிக்க வியாபாரி

கடன் மீளச்செலுத்த முடியாத மோசடி மிக்க வியாபாரிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி மோசடி மிக்க வியாபாரிகள், பணக்காரர்களின் பக்கமல்லாது விவசாயினதும் சாதாரண மக்களினதும் நலன்களின் பக்கம்

இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் விவசாயிகள் பெற்ற கடன்கள் உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டு, விவசாயி பாதுகாக்கப்படுவார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட விவசாயிகள் மாநாடு நேற்று (02) திருகோணமலை, கந்தளாய் நகரில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விவசாயிகளின் நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுக்க ஜனாதிபதி செயலணி,

உலக விவசாயம் பன்முக ரீதியாக வளர்ச்சி

உலக விவசாயம் பன்முக ரீதியாக வளர்ச்சி கண்டு வரும் நிலையில், எமது நாட்டிலுள்ள விவசாயி நாளுக்கு நாள் ஏழ்மை நிலைக்கு ஆளாகி வருகிறார்.

விவசாய துறைக்கான, திணைக்களங்கள், அரச நிறுவனங்கள், அதிகாரிகள் இருந்தும் விவசாயத்துக்கு முறையான தேசிய கொள்கை இல்லாததே இத்துறை பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நாட்டின் விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்கு விசேட ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபித்து, மாவட்ட மட்டத்திலும், கமநல மத்திய நிலையங்கள், விவசாய அமைப்புகள்

மட்டங்களிலும் விவசாயியை முன்னேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள அனைவரினதும், நாட்டு மக்கள் அனைவரினதும் வாழ்க்கையை சிறந்த நிலைக்கு இட்டுச் செல்வதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும்.

கோட்டாபய ராஜபக்ச எடுத்த ஒருதலைபட்சமான தீர்மானத்தால் விவசாய விளைச்சலும் விவசாய உற்ப்பத்திகளுக்கான விலைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.

விவசாய நிலங்களில் இருந்து டொலர்களை ஈட்டும் யுகத்தை உருவாக்குவோம்,

விவசாய நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும். உற்பத்தித் தரத்தை உயர்த்தி, விவசாயப் பொருட்கள் நாட்டில் நுகர்வுக்குப் பயன்படுத்தப்படுவது போல, ஏற்றுமதி விவசாயத்துக்கு இட்டுச்சென்று,

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஏற்றுமதி மூலம் வருமானம் பெற்று டொலர்களை ஈட்டும் சூழல் உருவாக்கித் தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் அறுவடை

விவசாயிகளின் அறுவடைக்கு நியாயமான விலை,

பெரும் விளைச்சலை ஒரே நேரத்தில் சந்தையில் போடாமல், விலையைக் குறைக்காமல் விவசாயிகளுக்கு நியாயமான விலையும், நுகர்வோருக்கு நியாயமான விலையும் கிடைக்கும் வகையில் முறையான சேமிப்பு களஞ்சிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இதுதவிர, ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி களைநாசினி தெளிக்கும் திட்டத்தையும், பயிர்ச்செய்கை அறிவுறுத்தல்களை கையடக்கத்

தொலைபேசி வழியாக பெற்று, பயிர்களை விற்பனை செய்யக்கூடிய பொதுவான விவசாயப் பயன்பாட்டு முறையையும் உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்காக பிரத்தியேக வங்கி,

விவசாயிகளுக்கு சரியான மூலதன அணுகலைப் பெறுவதற்கு நிதி வசதிகளுடன் கூடிய வங்கிக் கட்டமைப்பு உருவாக்கப்படும்.

தேசிய நிலப் பயன்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு யானை – மனித மோதலை குறைக்க புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

பயிர் சேதத்திற்கு பயிர் இழப்பீட்டு முறைகள் மற்றும் சொத்து சேதத்திற்கு புதிய காப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்துவோம். இதன் ஊடாக விவசாயிகளைப் பலப்படுத்துவோம்.

தட்டுப்பாடு இல்லாமல் உரம் வழங்கப்படும்,

அழிந்து வரும் விவசாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். நமது ஏற்றுமதி பயிர்களுக்கு சர்வதேச சந்தையை இழந்து வருகிறோம்.

இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டு விவசாயத்தை முன்னேற்க இரசாயன உரங்கள் தேவை.

நெல், மரக்கறிகள், பழங்கள், ஏனைய பிரதான பயிர்கள், தேயிலை, இறப்பர், தென்னை மற்றும் ஏற்றுமதி பயிர்களுக்கு உரங்கள் தேவை.

சகல பயிரின் ஆரம்பம் முதல் இறுதி வரை அவ்வப்போது உரம் இட வேண்டியிருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி இந்த உரத்தை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கும்.

விவசாயிகள் எதிர்நோக்கி வரும் அவல நிலையை முடிவுக்குக் கொண்டு வருவோம்.

பாதுகாப்பு உத்தியோகத்தர்

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் உரிமைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தியே முன்நின்றது,

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பெருமளவு பங்களிப்பை வழங்கிய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அரசாங்கம் புறக்கணித்துள்ளது.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பலர் இவர்களை மறந்துவிட்ட போதிலும் ஐக்கிய மக்கள் சக்தி இவர்களை மறந்துவிடவில்லை.

இவர்களுக்கு 30 இலட்சம் ரூபா வழங்கி ஓய்வூதியம் இல்லாமல் சேவை நீக்கம் செய்ய அரசாங்கம் எடுத்த திட்டத்தை பாராளுமன்றத்தில்

வெளிக்கொணர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியே அதனை தோற்கடித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.