Tag: சந்தேகநபர்
துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது
துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது
துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச்
சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள்
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள், கிடைத்த தகவலின் அடிப்படையில் கொட்டாவை பகுதியில்
மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இந்தச் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2025 ஓகஸ்ட் 6 ஆம் திகதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என பொலிஸார் உறுதி செய்தனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி
விசாரணையின்போது, சந்தேக நபரின் வீட்டில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், போர் 12 ரக தோட்டாக்கள் மூன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிரிவத்துடுவையைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது ,அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யூனிட் 19, 03 எல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்போபுர பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (02) இரவு முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
54 வயதுடைய யூனிட் 19, அக்போபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு துப்பாக்கியுடன் கைதான சந்தேகநபர்
உள்நாட்டு துப்பாக்கியுடன் கைதான சந்தேகநபர்
உள்நாட்டு துப்பாக்கியுடன் கைதான சந்தேகநபர் ,ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமரசேன பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென் மகாண பொலிஸ் விசேட பிரிவு
தென் மகாண பொலிஸ் விசேட பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (25) பிற்பகல்
முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
55 வயதுடைய ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரவைகள் 18, போர 12 ரக ரவைகள் மூன்றும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் ஹிக்கடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் பாவனைக்கு தடை விதிக்க பட்டுள்ள நிலையில் ,தற்போது இந்த துப்பாக்கிகள் மீளவும் தயாரிக்க பாடுவது மிக பெரும் குற்றமாக பார்க்க படுகிறது .
போலி பணத்துடன் சந்தேகநபர் கைது
போலி பணத்துடன் சந்தேகநபர் கைது
போலி பணத்துடன் சந்தேகநபர் கைது போலி நாணயத்தாள் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஹதரலியத்த பொலிஸால் பல்வேறு விடயங்களை கண்டறிந்துள்ளனர்.
நேற்று (20) மதியம் ஹதரலியத்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்று 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை வழங்கிய நபர் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய விசாரணையின் போது இது தெரியவந்துள்ளது.
போலி நாணயத்தாள்களை வைத்திருந்தவர் கைது
அதன்படி, போலி நாணயத்தாள்களை வைத்திருந்த கண்டி, உடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் இருந்து மூன்று போலி 5,000 ரூபா நாணயத்தாள்கள், இரண்டு போலி 500 ரூபா நாணயத்தாள்கள் மற்றும் இரண்டு போலி 100 ரூபா நாணயத்தாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
மேலும், சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, போலி 50 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட 9 கடதாசிகள், போலி 100 ரூபா நாணயத்தாள்கள்
அச்சிடப்பட்ட 4 கடதாசிகள், போலி 500 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட 4 கடதாசிகள், போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட 6 கடதாசிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.
கள்ள நாணயத்தாள்களை அச்சிட்ட சந்தேக நபர் கைது
இதேவேளை, இந்த போலி நாணயத்தாள்களை அச்சிட்ட சந்தேக நபரைக் கைது செய்வதற்காக கலகெதர பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விசாரணை அதிகாரிகள் சென்றுள்ளனர்.
இருப்பினும், சந்தேக நபர் அந்த நேரத்தில் நிறுவனத்தில் இல்லை, மேலும் போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட ஒரு கணினி மற்றும் அச்சு இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து ஹதரலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் கைது
துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் கைது
துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் கைது ,பாணாந்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பந்தர் அவர்கள் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே பகுதியில் உள்ள உதிரி பாகங்கள் விற்பனை வியத்துக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அப்பொழுது சம்பவத்துக்கு உதவி விருந்த சந்துகன் அவர் ஒருவர் தற்பொழுது குற்றத் தடுப்பு பிரிவுகளாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் மோட்டார் சைக்கிள் செலுத்தினர் சம்பவத்திற்கு முந்தின இரவு சந்தேக நபரின் வீட்டில் தங்கி இருந்ததாக தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட புலன் காரணமாகவும் சொத்து பத்து ஆசை தொடர்பாகவுமே இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட படுகொலை சம்பவத்தின் பின்புலம் என்னை என்பதும் ஏன் இவர்கள் இவரை படுகொலை செய்யமுள்ள பாகும் தற்போது விசாரணங்கள் இடம் பெற்று வருகின்றன.
இவை திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல தனிநபர் தாக்குதல் என்பது முழுமையாக தெரியவில்லை.
இலங்கையில் தற்பொழுது ஆளும் அனுராதா ஆட்சியில் நாடெங்கிலும் துப்பாக்கி சூடு சமூகங்கள் அதிகரித்து காணப்படுவதும் ,அதனால் பலர் பலியாகி காயமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெடிபொருட்களுடன் சந்தேகநபர் கைது
வெடிபொருட்களுடன் சந்தேகநபர் கைது
வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூனேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூனேவ சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் குழு நேற்று (13) இரவு சோதனையிட்டுள்ளது.
கைதான சந்தேகநபரிடமிருந்து சேவை நூல், 150 கிராம் அம்மோனியம் மற்றும் 1 ஜெலக்னைட் குச்சிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது
குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது
குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது ,சமூக ஊடகங்களில் வைரலான குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புல்மோட்டை அரிசி
இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசி மலை பகுதியில் குறித்த நபரும் மேலும் தாக்குதல் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெலிஓயா கல்யாணபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான 4 1/2 வயதுடைய குழந்தையும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Featured
துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது
துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது
துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது ,காலி – அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் சந்தேக நபர் கைது
கொஸ்கொடை பொலிஸார் நேற்று (26) பெந்தர கஹ்பிலியாகந்த பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து 03 கிராம் 410 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
36 வயதான சந்தேகநபர் நில்லபதன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் துப்பாக்கி சூடு
கடந்த 08 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகஹபிட்டிய லோகன்வத்த
பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.
இலங்கையில் சமீப கலங்கலாக இவ்வாறான குற்றங்கள் அதிகரித்து வருவது ,இலங்கையில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளதை காண்பிக்கிறது .
தடை செய்ய பட்ட ஆயுதங்கள் எவ்வாறு இவ்வாறான கொலை குற்றவாளிகளிடம் சிக்கியது என்பதற்கு ,.இலங்கை காவல் துறையிடம் இதுவரை பதில் ஏதும் இல்லை என்பது குறிப்பிட தக்கது .

































