Author: நலன் விரும்பி
நடிகை தூக்கு போட்டு தற்கொலை
நடிகை தூக்கு போட்டு தற்கொலை
பிரபல நடிகை வீட்டில் தூக்கு போட்ட நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல நடிகை தூக்கு போட்டு தற்கொலை
பல்லவி டே
மேற்கு வங்காளத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இளம் நடிகை பல்லவி டே (வயது 25). கொல்கத்தா நகரின் கர்பா பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று காலை காணப்பட்டார். அவரை பங்கூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
பல அடுக்குகளை கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் 2வது தளத்தில் வசித்து வந்த அவர் படுக்கை விரிப்பு ஒன்றின் உதவியால் மின் விசிறியில் தூக்கு போட்ட நிலையில் காணப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு
உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் கூறும்போது, சம்பவம் நடந்த பகுதியில் இருந்து தற்கொலை செய்ததற்கான குறிப்பு எதுவும் கிடைக்கப் பெறவில்லை.
அவரது உடலின் வெளியே காயம் ஏற்பட்டதற்கான அடையாளம் எதுவும் இல்லை என தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து, இயற்கைக்கு முரணான மரணம் என்று
வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லவி டே
அவர், மன் மானே நா என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய வேடமேற்று நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார். அவர் தற்கொலை செய்துள்ளார் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஆனால், பல்லவி கொல்லப்பட்டு இருக்கலாம் என அவரது
குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். பல்லவியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வரும் சாக்னிக் சக்ரவர்த்தி என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேஷம் ஜான்பி என்ற தொடரிலும், அமி சிராஜிர் பேகம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அவர் நடித்து வந்துள்ளார். இதனால், ரசிகர்கள் வட்டத்தில் அவருக்கு
நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அவர் உயிரிழந்தது ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள்,
திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம்
கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம்
பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ரைசா வில்சன் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம்
ரைசா வில்சன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின்
மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துருவிக்ரம் நடித்த வர்மா படத்திலும் நடித்தார். இவர் தற்போது தி சேஸ், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது நீச்சல்
உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை நடிகை ரைசா பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
வன்முறையில் ஈடுபட்டார்கள் 664 பேர் கைது
வன்முறையில் ஈடுபட்டார்கள் 664 பேர் கைது
கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பில் 258 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 67 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 43 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
எவ்வாறாயினும், இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 206 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 272 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாகாணங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்களின் மேற்பார்வையில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், தாக்குதல், காயம், சொத்துக்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.
இதேவேளை, சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 791 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றில் மேல் மாகாணத்தில் இருந்து 444 முறைப்பாடுகளும், தென் மாகாணத்தில் இருந்து 118 முறைப்பாடுகளும்
கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
காஸ் சுமந்த படி இலங்கை வந்தடைந்த இரு கப்பல்
காஸ் சுமந்த படி இலங்கை வந்தடைந்த இரு கப்பல்
இலங்கைக்கு காஸ் ஏற்றிய அப்டி இரு கப்பல்கள் வந்தடைந்துள்ளன
இவற்றுக்கு எலுமில்லியன் டொலர் செலுத்த படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இந்த கப்பல்கள் வருகையால்நடத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும் என எதிர் பார்க்க படுகிறது
ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் சண்டை தீவிரம்
ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் சண்டை தீவிரம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையே முதலாவது முரண்பாடு முதல் நாளன்றே தோற்றியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர், பாராளுமன்றம் இன்று (17) முதன்முறையாக கூடியது.
இந்நிலையில், நாளொன்றை வீணடிப்பதைத் தவிர்க்க, பெண் எம்.பி ஒருவரை பிரதி
சபாநாயகராக ஏகமனதாக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எம்.பி.க்களிடம் கேட்டுக் கொண்டார்.
எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஆண் எம்.பி ஒருவரின் பெயரை பிரேரித்து முன்மொழிந்தது. இது, பாராளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்புக்கு வழிவகுத்தது.
பிரதி சபாநாயகருக்கு ரோகினி கவிரத்னவின் பெயரை எதிர்க்கட்சிகள் முன்மொழிய, ஸ்ரீ லங்கா பொதுஜ பெரமுன.
அஜித் ராஜபக்ஷவை முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சபைக்குள் இரகசிய வாக்கெடுப்பு
சபைக்குள் இரகசிய வாக்கெடுப்பு
பிரதி சபாநாயகருக்கு ரோகினி கவிரத்னவின் பெயரை எதிர்க்கட்சிகள் முன்மொழிய, ஸ்ரீ லங்கா பொதுஜ பெரமுன.அஜித் ராஜபக்ஷவை முன்மொழிந்துள்ளது.
எனினும், வாக்களித்து இன்றைய நாளை செலவழிக்காமல் ஒருமித்த கருத்துடன் பிரதி சபாநாயகர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஆளும்
, எதிர்க்கட்சி கட்சிகளைச் சேர்ந்த பலரும், ஒருமித்த கருத்துக்கு இணக்கம் தெரிவித்து கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், அறிவிப்பொன்றை விடுத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன
, இன்னும் நேரமிருக்கிறது. ஒருவரின் பெயரை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கேட்டார். எனினும், எந்த தரப்பினரும் அதற்கு இணங்கவில்லை.
அதனையடுத்தே பிரதி சபாநாயகர் தெரிவுக்காக, இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.
பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்படுவதால்,
ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே முடிவுகளை எதிர்பார்க்க முடியும்.
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ளார்.
நிலையியற் கட்டளையின் பிரகாரம் அவ்வாறு செய்யமுடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அப்படியாயின், வாக்கெடுப்புக்குச் செல்வோமென தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் வாக்களிப்பு அழைக்கும் மணி,
பாராளுமன்றத்தில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.
நான் குடும்ப ஆட்சியை காப்பற்ற வரைவில்லை ரணில்
நான் குடும்ப ஆட்சியை காப்பற்ற வரைவில்லை ரணில்
ஒரு தனி மனிதன், ஒரு குடும்பம் அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பதற்காக நான் இந்த சவாலை பொறுப்பேற்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு இன்று மாலை விசேட உரையாற்றிய போது பிரதமர் இதனை தெரிவித்தார்.
நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. அடியே தெரியவில்லை. பாலங்கள் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. கைப்பிடி இல்லை.
என்னுடைய கால்களில் கழற்ற முடியாத பாதணிகள் போடப்பட்டுள்ளன. அதன் அடியில் கூர்மையான இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தையை பாதுகாப்பாக
அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இந்த சவாலை நான் நாட்டிற்காகவே பொறுப்பேற்றேன்.எனது நோக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு தனிமனிதன் , ஒரு குடும்பம்,
அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பது அல்ல முழு நாட்டினதும் மக்களை காப்பாற்றுதே, இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுவதே .உயிரை பணயம் வைத்து இந்த
சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள். நான் எனது
கடமையை நாட்டிற்காக செய்து முடிப்பேன்.
அது நான் உங்களுக்கு அளிக்கும் உறுதியாகும்.
ஆர்மேனிய ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஆர்மேனிய ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் ஆர்மேனியாவின் முன்னாள் அரசுத் தலைவரான யுசஅநn ளுயசமளைளயைn ஆர்மென் சர்கிசியன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ( Armen Sarkissian ) ஒன்றினை வழங்க இருக்கின்றார்.
ஒவ்வொரு ஆண்டின் உலகின் முக்கிய பிரமுகர்களை அழைத்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இம்முறை எட்டாவது அரங்கினை தொட்டுநிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை வழங்கும் அரசியல் பிரமுகரான ஆர்மென் சர்கிசியன்
அவர்கள், (2018-2022) காலப்பகுதியில் ஆர்மேனியாவின் 4வது அரசுத் தலைவராக இருந்துள்ளார். (1996-1997) காலப்பகுதியில் ஆர்மேனியாவின் பிரதமராகவும் பொறுப்பு
வகித்த இவர், (1998-2018) காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்தில் நாட்டின் நீண்ட காலம் பணியாற்றிய தூதராகவும் இருந்துள்ளார்.
(1995-1996) காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆர்மேனியாவின் தலைவராக இருந்துள்ளதோடு, மேற்குலகில் தொடங்கிய முதல் ஆர்மேனிய
தூதரகத்தினை லண்டனில் தொடங்கியவர் என்பதோடு, பெல்ஜியம, நெதர்லாந்து, லக்செம்பர்க் மற்றும் வற்றிக்கான் ஆகிய நாடுகளுக்கு ஆர்மேனியாவின் மூத்த தூதராக விளங்கியுள்ளார்.
பல்வேறு ஆளுமைகளை கொண்ட இவரது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையானது,
மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளாகிய புதன்கிழமை, செவ்வாய்க்கிழமை
New York 2:00 PM / UK : 7:00 PM / EU : 8:00 PM
நேரத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சியிலும், இதர உலகத்தமிழ் ஊடகங்கள் வழியாகவும் காணலாம்.
கொழும்பு பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை
இலங்கை கொழும்பு ஆர்மர் வீதி பகுதி அடுக்குமாடியில் வசித்து வந்த 47வயதுடைய
நபர் ஒருவர் மர்ம நபர்களினால் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இவ்விதம் கொலை செய்ய பட்டதற்கான காரணம் தெரியவில்லை .
தற்போது காவல்துறை விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்க பட்டு வருகின்றன.
விரைவில்கொலைக்கன காரணம் கண்டறிய படும் என நம்ப படுகிறது .
இரு காஸ் கப்பல் இலங்கை வருகிறது
இரு காஸ் கப்பல் இலங்கை வருகிறது
இரு கப்பல்கள் காஸ் ஏற்றியபடி இலங்கை வருவதாக ரணில் தெரிவித்துள்ளார்
இதனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிவாயு தற்காலிகமாக நிவர்த்தி செய்யப்படும்
என நம்பிக்கை வெளியிட பட்டுள்ளது
எங்கள் ஆதரவு ரணிலுக்கு மைத்திரி – குத்துக் கரணம்
எங்கள் ஆதரவு ரணிலுக்கு மைத்திரி – குத்துக் கரணம்
இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கா நியமிக்க பட்டதை அடுத்து
அவருக்கு நாம் ஆதரவு வழங்க மாட்டோம் என மைத்திரி அணி தெரிவித்து வந்தது
தற்போது நாட்டின் தேவை கருதி தாம் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக மைத்திரி அறிவித்துள்ளார்
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன
- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி
- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு
- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்
மக்கள் போராடடத்தை குழப்பும் இந்தியா
அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை மழுங்கடிக்கவே புலிகள் மீளுருவாக்கம் என்ற விடயம் பேசப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்லவம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அத்துடன், மே 18 நிகழ்வை சிங்கள மக்களும் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
வவுனியாவில் நேற்று (15) இடம்பெற்ற ரெலோ அமைப்பின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் கிறிஸ்ரி குகராயாவின் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “வவுனியாவில் சிங்கள தேசத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்திய மகானை நாம் நினைவுகூருகின்றோம்.
“முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் பாரிய அல்லல் பட்டனர். மஹிந்த மற்றும் கோட்டா அரசு அந்த மக்கள் மீது மோசமான வன்முறையை செய்துகாட்டியது. அந்த வலிகளை இந்த மாதத்தில் நாம் நினைவுகூருகின்றோம்.
“இதே காலப்பகுதியில் சிங்கள மக்களாலேயே விரட்டியடிக்கப்படும் நிலை கோட்டா அரசுக்கு ஏற்ப்பட்டுள்ளது. சிங்கள மக்களின் அந்த செயற்பாட்டில் நாங்களும் இணைந்துகொள்கின்றோம்.
“அத்துடன், இழந்துபோன தமது உறவுகளுக்காக அஞ்சலி செய்யும் வாய்ப்பை எந்தத் தடைகளும் இல்லாமல் புதிய பிரதமர் ஏற்ப்படுத்தித் தரவேண்டும். இந்த நிகழ்வில் சிங்கள மக்களும் கலந்துகொள்ள வேண்டும்.
“இதேவேளை, புலிகளின் மீளுருவாக்கம் என்ற போர்வையில் இந்த போராட்டத்தை மழுங்கடிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கும் என்று முன்னரே சொல்லியிருந்தேன். தற்போது இந்துப்பத்திரிகையில் சொல்லப்பட்டுள்ள விடயம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
“மக்கள் துக்கத்தை அனுபவித்துவரும்இந்தச் சூழலில் இப்படியான செய்திகள் வருவதை ஏற்கமுடியாது.
இது எமதுமக்களின் அஞ்சலியை தடைசெய்வதற்கான உக்தியாகவே பார்க்கின்றேன்” என்றார்.
மகிந்தா நாய் குட்டி திருட்டு – விசாரணை ஆரம்பம்
மகிந்தா நாய் குட்டி திருட்டு – விசாரணை ஆரம்பம்
மகிந்தவின் மெதமுலன வீட்டில் வசித்து வந்த மகிந்தாவின் செல்ல நாய்க்குட்டியை திருடி சென்ற
சஜித் அணியினரின் பிரதேச சபை உறுப்பினர் மீது விசாரணைகள் நடத்த பட்டு வருகின்றன
இவரே அந்த நாய்க்குட்டியை பராமரித்து வருவதாக தெரிவிக்க படுகிறது
உக்கிரேன் எல்லையில் 2500 ரசியா பல் நாட்டு படைகள் போர் பயிற்சி
உக்கிரேன் எல்லையில் 2500 ரசியா பல் நாட்டு படைகள் போர் பயிற்சி
உக்கிரேன் எல்லை பகுதியில் பல் நாடுகளை சேர்ந்த துணிப்படையினர் 2500 பேர் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக உக்கிரேன் அறிவித்துள்ளது.
இந்த பயிற்சி பெறுபவர்களின் பல முக்கிய படையில் இணைக்க படும் அவசர பயிற்சிகளும் வழங்க பட்டு வருவதாக அது தெரிவித்துள்ளது.
சிரியாவில் இருந்து நாற்பதாயிரம் படைகளை ரசியா இணைக்கும் முயற்சியில்
ஈடுபட்டு உள்ளதாக ,அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கே கவனிக்க தக்கது.
இங்கிலாந்தில் மேலும் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய்
இங்கிலாந்தில் மேலும் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய்
மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்காவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் குரங்கு அம்மை நோய் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் மேலும் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு
குரங்கு அம்மை நோய் பாதிப்பு
பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர், சமீபத்தில் நைஜீரியா நாட்டிற்கு சென்று லண்டன் திரும்பிய நிலையில், அவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கடந்த 7ம் தேதி அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபர்களுக்கு இந்த வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது என்பதால், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிய சுகாதார
ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட நபர் பிரிட்டனுக்கு விமானத்தில் வந்தபோது, அவரது அருகில் அமர்ந்து பயணித்தவர்கள் குறித்த தகவலும் திரட்டப்படுகிறது.
இந்நிலையில், லண்டனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 7ம் தேதி தொற்று
உறுதிப்படுத்தப்பட்டவருடன் இவர்கள் பயணிக்கவில்லை. இவர்களுக்கு இந்த தொற்றானது எவ்வாறு பாதித்தது என்று விசாரணை நடந்து வருகிறது.
குரங்கு அம்மை நோயானது எளிதில் பரவக்கூடியதல்ல. நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கி பழங்குவதன் மூலமே இந்த நோய் பரவுகிறது. அதிகமான மக்கள் நோய் தொற்று ஏற்பட்ட சில வாரங்களிலேயே குணமடைந்து விடுகிறார்கள்.
காய்சல், தலைவலி, தசை வலி, முதுகுவலி, குளிர் மற்றும் சோர்வு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும். குரங்கு அம்மை நோயானது பிளவு ஏற்பட்ட தோல், சுவாசப்பாதை, கண், மூக்கு, வாய் போன்றவற்றின் மூலம் பரவுகிறது.
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் குரங்கு அம்மை நோய் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு அமைப்பு கூறுகையில், ” இந்த நோய் தொற்றானது எளிதில் மக்களிடையே பரவாது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களிடம்
இருந்து தனித்திருப்பது நல்லது. பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் அவர்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க தொடர்புகொள்ளப்படுகிறார்கள் ” என்று தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் குரங்கு அம்மை நோய் தொற்றானது 2018-ல் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், ஒரு சிலருக்கு மட்டுமே இந்நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லிப் கிஸ் அடித்த சன்னி லியோன்
லிப் கிஸ் அடித்த சன்னி லியோன்
பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், அவருடைய பிறந்தநாள் நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
லிப் கிஸ் அடித்த சன்னி லியோன்.. வைரலாகும் புகைப்படம்
சன்னி லியோன், Sunny Leone
ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது
தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பேய்ப்படம் ஒன்றில் காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக
வைத்துள்ளார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற சன்னி லியோன் பிகினி உடையில் கவர்ச்சியாக எடுத்துகொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இருந்தார்.
சன்னி லியோன்
இந்நிலையில், சன்னி லியோன் பிறந்தநாளில் அவருக்கு நெருக்கமானவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
அதில் அவருடைய கணவர் டேனியலுடன் லிக் கிஸ் அடித்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
மறுமணம் செய்துகொண்டார் இசையமைப்பாளர் டி.இமான்
மறுமணம் செய்துகொண்டார் இசையமைப்பாளர் டி.இமான்
சமீபத்தில் மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் இன்று மறுமணம் செய்துள்ளார்.
மறுமணம் செய்துகொண்டார் இசையமைப்பாளர் டி.இமான்.. வைரலாகும் புகைப்படம்
டி.இமான்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர் இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் திரைப்படங்கள்
சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களுக்கு இமான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் அவருடைய மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக இமான் அறிவித்தார்.
2008-ஆம் ஆண்டு மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே விவாகரத்து செய்ததாக கூறப்பட்டு பிறகு
டிசம்பர் இறுதியில் அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார். சட்ட ரீதியாக தனது மனைவியை பிரிந்த டி.இமான் சென்னையை சேர்ந்த பெண் ஒருவரை
திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்துள்ளார்.
இமான் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
புலிகளின் பெயரால் குண்டு வெடிப்பை நடத்தி – இன மோதலை உருவாக்க கோட்டா திட்டம்
புலிகளின் பெயரால் குண்டு வெடிப்பை நடத்தி – இன மோதலை உருவாக்க கோட்டா திட்டம்
இலங்கையில் ஆளும் அரசுகளுக்கு எதிராக சிங்கள மக்கள் கொதித்தெழுந்து
போராட்டம் நடத்தி வருகின்றனர் ,இவ்வேளை வடக்கு ,கிழக்கு தமிழர்கள் அமைதியாக உள்ளனர்
தனது நெருக்கடியை தனித்து மக்களை திசை திருப்பவும் ,இன மோதல்களை உருவாக்கவும் புலிகளின் பெயரால் குண்டு தாக்குதல்களை நடத்திட கோட்டா சதி திட்டம் தீட்டியுள்ளார் ,
இவ்வாறான தாக்குதல் ஊடாக சிங்கள மக்களை பயமுறுத்தவும் ,அடிபணிய
புலிகளின் பெயரால் குண்டு வெடிப்பை நடத்தி – இன மோதலை உருவாக்க கோட்டா திட்டம்
வைக்கவும் ,அவர்கள் தன்னெழுச்சியை தடுக்கவும் தொடர் ஆயுத போராட்டம் கோட்டாவுக்கு தேவை படுகிறது
இரத்தம் குடித்து ஏப்பம் விடும் கோட்டாவுக்கு இது புதிதல்ல ,ஆனால் இம்முறை சிங்கள
பகுதியில் தொடராக குண்டுகள் வெடிப்பதன் மூலம் ,உயிர்ப் பலிகள் இடம்பெறுவதன் ஊடாகவே அவர்களின் எழுச்சியை தடுக்க முடியும்
அதற்காக தூசி தட்ட படும் புலிகள் அமைப்பு ,இல்லாத புலிகளுக்கு உயிரூட்ட முனைகிறது சிங்கள அரசியல் இனவாதம்.
கொழும்பில் குவிக்க படும் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார்
கொழும்பில் குவிக்க படும் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார்
கொழும்பு பகுதி எங்கும் பாதுகாப்பை பலப் படுத்தும் நோக்கில் ஆயிரத்திற்கு மேற்பட்ட
போலீசார் வரவழைக்க பட்டு வீதி ரோந்து மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது
ஆளும் அரசுகளுக்கு எதிராக முன்னெடுக்க படும் போராட்டங்கள் காரணமாக வன்முறைகள் வெடிக்கலாம் என்பதாலும் ,
அந்த மக்களை அடக்கி ஒடுக்கவும் இந்த போலீசார் இவ்விதம் அழைக்க பட்டுள்ளனர்.












