Author: நலன் விரும்பி
சுவாச நோய் குறித்து மக்களுக்கு அவசர எச்சரிக்கை
சுவாச நோய் குறித்து மக்களுக்கு அவசர எச்சரிக்கை
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் சுவாச நோய் Respiratory
ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் சுகாதார துறையினர் வழங்கும் ஆலோசனைகளை கடைபிடி ப்பது
முக்கியமானது என்று பிரிவன் பிரதான வைத்தியர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தள்ளார்.
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1045 ஆக உயர்வு
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1045 ஆக உயர்வு
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1045 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினத்தில் (2020.05.21) இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 17 பதிய நோயாளர்கள்;
பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
இந்த நோயாளர்களில் இருவர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த
கடற்படை அங்கத்தவர்கள். ஏனை 15 பேர் கிராகம தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளவர்கள். இவர்கள் டுபாயில் இருந்து வந்தவர்கள்.
இன்றைய தினத்தில் இதுவரையில் இலங்கையில் பதிவான கொரேனா வைரசு நோயாளர்களில் 604 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதேபோன்று இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளர்களில் 432 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நேற்றைய தினத்தில் (2020.05.20) மேற்கொள்ளப்பட்ட Pஊசு பரிசோதனைகளின் எண்ணிக்கை 1108 ஆவதுடன் இத்தினத்தில்
அடையாளங்காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 01 ஆகும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
யாழில் மனைவியுடன் கள்ள காதல் – காதலர்களை கட்டி வைத்து அடித்த கணவன்
யாழில் மனைவியுடன் கள்ள காதல் – காதலர்களை கட்டி வைத்து அடித்த கணவன்
யாழ்ப்பாணத்தில் தற்போது கள்ள காதல் சமாச்சாரம் அதிகரித்து வருகிறது
திருமணம் முடித்த பெண்கள் முதல் இளம் பெண்கள் வரை பாலியல் உறவுகள் அதிகரித்து செல்கிறது
இதனை கட்டு படுத்த முடியாத நிலையில் கணவன் ,மற்றும் பெற்றோர்கள் உள்ளனர் .
சம்பவ தினம் அன்று மனைவியின் கைபேசிக்கு தொடர்பு கொண்டு பேசி வந்த வாலிபர்கள் ,தகாத உறவு அழைத்துள்ளனர்
கணவன் வீட்டில் இருந்துள்ளார் ,இதனை அறியாத வாலிபர்கள் வாலிபர்கள் வழமை போன்று பாலியல் உரையாடல்கள் அடங்கிய
பதிவுகளை அனுப்பினார் ,இதனை அவதானித்த கணவன் மேற்படி விடயம் தொடர்பாக மனைவியிடம் வினவிய பொழுது அவர் நடந்தவற்றை விபிரித்துள்ளார்
அதே மனைவியை கொண்டு அழைப்பை ஏற்படுத்திய கணவர் அவர்களை மறைவான இடம் ஒன்றுக்கு வருமாறு அழைத்துள்ளனர்
பெண்ணின் பேச்சை நம்பி இரு வாலிபர்களும் காரில் வந்துள்ளனர்
அவ்வளவு தான் அங்கு கணவன் ,மற்றும் அவர்கள் நண்பர்கள்
மறைந்து காத்திருந்தனர் .இருவரை பிடித்து கட்டி வைத்து அடித்து நையப்புடைத்து விரட்டியுள்ளனர்
ஆமா உங்க மனைவி ஒழுங்கா இருந்தா ஏன் இவங்க வர போறானுக இவ்வாறு சந்தியடி வம்பர்கள் கேள்வியையையும் எழுப்பிட தவறவில்லை

அடம்பன் புயலினால் 80 பேர் பலி – 14 மில்லியன் மக்கள் பாதிப்பு
அடம்பன் புயலினால் 80 பேர் பலி – 14 மில்லியன் மக்கள் பாதிப்பு
சிலோன் அடம்பன் புயலின் கோர தண்டவத்தில் சிக்கி எண்பது பேர்
இதுவரை பலியாகியுள்ளனர் .
மேலும் இந்த புயலானது மணிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில்
வீசியது ,இதனால் வெள்ள பெருக்கு
ஏற்பட்டது பல்லாயிரம் வீடுகள் அழிக்க பட்டுள்ளது
மேலும் இந்த புயலினால் சுமார் பதின் நான்கு மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு உதவுவதாக அறிவித்துள்ளது
இந்தியா பெங்கால் பகுதியில் 73 பேர் பலியாகியுள்ளனர் ,வீடுகளை இழந்த
மக்கள் வீதிகள் மற்றும் பொது இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்
பிரிட்டனில் – காணாமல் போன இளம் பெண் காட்டுக்குள் சடலமாக மீட்பு
பிரிட்டனில் – காணாமல் போன இளம் பெண் காட்டுக்குள் சடலமாக மீட்பு
பிரிட்டனில் காணாமல் போன பதினாறு வயது இளம் பெண் ஒருவர்
woodland in Havant, Hampshire காட்டு பகுதி ஒன்றுக்குள் இருந்து
சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவரை கடத்தி சென்ற தம்பதிகள் கைது செய்ய பட்டு பிணையில் விடுவிக்க பட்டுள்ளனர் ,
இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பாகிஸ்தானில் 159 ஊடக நபர்களுக்கு கொரனோ – மூவர் பலி
பாகிஸ்தானில் 159 ஊடக நபர்களுக்கு கொரனோ – மூவர் பலி
பாகிஸ்தானில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்
தாக்குதலில் சிக்கி 159 ஊடக நபர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
இதில் மூவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்
மேலும் இந்த நோயினை கட்டு படுத்த சுகாதாரா அமைப்பு பல்வேறு நடவடிக்கையை
முன்னெடுத்து வருவதாக அந்த நாடு அறிவித்துள்ளது
பிரிட்டனில் மலேரியா தடுப்பு மருந்துகள் கொரானாவுக்கு சோதனை
பிரிட்டனில் மலேரியா தடுப்பு மருந்துகள் கொரானாவுக்கு
சோதனைபிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ
நோயினைம் தடுக்கும்
முகமாக தற்பொழுது anti-malaria drugs
மலேரியாவுக்கு ,பயன் படுத்த படும் தடுப்பு மருந்துகள்
சோதனைக்கு உள்ளாக்க பட்டு வருகிறது
முன் அரணில் பணி புரியும் சுகாதர் பிரிவினர் மற்றும் ,முக்கிய நபர்களுக்கு
இந்த மருந்துகள் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டு வருகின்றன
பிருத்தானியாவில் இரண்டு மருத்துவ மனைகளில் இந்த சோதனை தொடர்ந்து
இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,எனினும் இதனால் பூரண குணம் ஏற்படுமா என்பது தொடர்பில் தெரிவிக்க படவில்லை
தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ சோதனை சாவடிகள் – தாக்கிட முயற்சி – சிறிதரன்
தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ சோதனை சாவடிகள் – தாக்கிட முயற்சி – சிறிதரன்
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள பேரினவாத அரசு
வீதிகளில் இராணுவ காவலரண்கள் அமைத்து இராணுவம் குவிக்க பட்டுள்ளது
போர் வெறியுடன் தமிழர்களை அடக்கியாளும் நிலையில் சிங்கள பவுத்த
இனவெறி இராணுவம் வீதியில் குவிக்க பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கவுரவ ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்
போர் குணங்களுடன் ,போர்கால பகுதியில் எவ்விதம் நாட மாடினார்களோ
அதே போன்ற செயலுடன் இராணுவம் வீதிகளில் இறக்கிவிட பட்டுள்ளது ,
அனைவரும் புது முகங்கள் ,எனவும் தமது வாகனங்களை சோதனை செய்திட
இராணுவத்தினர் தம்மை தாக்காத குறையாக அவர்கள் பார்வை மற்றும் உடல் அசைவுகள் இருந்ததாக தெரிவித்துள்ளார்
மக்களினால் தெரிவு செய்ய பட்ட ஒரு பாரளுமன்ற உறுப்பினருக்கே இவ்வாறான
நிலை என்றால் சாதாரண மக்களுக்கு எவ்விதம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும் ,இது தான் இன்றைய இலங்கை
இலவச நிவாரணம் வாங்க முண்டியடித்த நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி
இலவச நிவாரணம் வாங்க முண்டியடித்த நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி
இலங்கை மாளிகாவத்தை பகுதியில் இலவசமாக தனியார் வழங்கிய
உணவு பொருட்டாக்களை வாங்கிட முண்டித்த மக்கள் கூட்ட நெரிசலை
சிக்கி மூன்று பெண்கள் மூச்சு திணறி பலியாகினர்
மேலும்
நால்வர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையில் ஓட்டுக்கு காசு – தேர்தல் ஆணையம் ஆப்பு – கடுப்பில் கோட்டா
இலங்கையில் ஓட்டுக்கு காசு – தேர்தல் ஆணையம் ஆப்பு – கடுப்பில் கோட்டா
இலங்கையில் பாராளுமனற தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் மக்களை
கவரும் நோக்குடன் இந்தியாவை போல ஓட்டுக்கு பணம் வழங்கும் புதிய
நடைமுறையை மகிந்த குடும்ப ஆட்சி தொடக்கி வைத்துள்ளது
சமுர்த்தி நிறுவனத்தின் ஊடாக இந்த உதவிகள் கிராமம் தோறும் மக்களுக்கு வழங்க பட்டு வருகின்றன
இவை தேர்தல் நோக்கம் கொண்டவை என்ற நிலையில் தேர்தல் ஆணையாளர் கோட்டபாய மற்றும் மகிந்தவுக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளார்
இதனால் கோட்டா ,மகிந்த கடுப்பில் உறைந்துள்ளனர்
யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு – நடப்பது என்ன ..?
யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு – நடப்பது என்ன ..?
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ளள பாடசாலை ஒன்றின்
மாணவர் ஒருவர் காரைநகரில் தாயின் தயார் வீட்டில் தூக்கில்
தொங்கிய நிலையில் சடலமாக
மீட்க பட்டுள்ளார் இவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தாரா அல்லது
கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்டாரா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது
இதுவரை யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று வாரத்திற்குள்ளாக 24 பேர்
இவ்விதம் மர்மமான முறையில் இறந்துள்ளமை குறிப்பிட தக்கது
புயலில் அடித்து செல்ல பட்ட 30 படகுகள் -இந்தோனேசியாவில் மிதப்பு
புயலில் அடித்து செல்ல பட்ட 30 படகுகள் -இந்தோனேசியாவில் மிதப்பு
சீரற்ற காலநிலை காரணமாக இலங்கைக்கு சொந்தமான 30 படகுகள்
இந்தோனேசியாவை அண்டிய கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக மீன்பிடி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த படகுகளில் 180 மீனவர்கள் வரையில் பயணித்துள்ளதுடன் அவர்களுக்கு
எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் பயணித்த படகுகள் அனைத்தும் இந்தோனேசியாவின் கடற்பகுதிக்கு அடித்துச் செல்ப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்தோனேசியா, நிகோபர் தீவுகள் மற்றும் இந்திய அதிகாரிகளை தெளிவுப்படுத்தியுள்ளதாக மீன்பிடி திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலநிலை சீரடைந்தவுடன் 180 மீனவர்களையும் நாட்டுக்கு அழைத்துவர
நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஆனால் தேவை ஏற்படின் உரிய நடவடிக்கைகளை
எடுக்கவுள்ளதாகவும் மீன்பிடி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் ஆபத்தில்லாத பிரதேசங்களில் பஸ் சேவைகள்
தொற்றுநோய் ஆபத்தில்லாத பிரதேசங்களில் பஸ் சேவைகள்
ஆபத்தானவையாக கண்டறியப்பட்ட பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்று மாகாணங்களுக்கு இடையிலான
பஸ் சேவைகள் நடத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நெருக்கடி காரணமாக, சில கட்டுப்பாடுகளுடன் பொதுப் போக்குவரத்து சேவைகளை நடத்துமாறு சுகாதார
சேவைகள் ஆலோசனை வழங்கியுள்ளன. இந்த ஆலோசனைகளுக்கு அமைய சேவைகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன் பிரகாரம், வேலைக்காக செல்லும் அரச-தனியார் ஊழியர்களுக்கு மாத்திரமே பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசியம் அற்ற
தேவைகளுக்காக பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது. நிலைமை சீரடையும்
பட்சத்தில், எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமைக்குக் கொண்டு வரக்கூடியதாக இருக்குமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ரயில் சேவையில், முன்பதிவு இன்றி அலுவலகம் நோக்கி பயணிக்கும் அரச-தனியார் ஊழியர்களுக்கு போக்குவரத்து
வசதிகளை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்பதிவுடன் கூடிய பயணிகளுக்கு வசதிகள் வழங்கும் முறை
அமுலாக்கப்பட்டது. எனினும், 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிவுகள் மேற்
கொள்ளப்பட்டிருந்தாலும், ஒன்பதாயிரம் பேர் வரை மாத்திரமே ரயில்களில் பயணித்திருக்கிறார்கள்.
கொழும்பு மா நகர வீதி வாகன தரிப்பிட கட்டண வசூல் மீண்டும் ஆரம்பம்
கொழும்பு மா நகர வீதி வாகன தரிப்பிட கட்டண வசூல் மீண்டும் ஆரம்பம்
கொழும்பு மா நகர வீதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தரிப்பிட கட்டண வசூல் நாளை முதல் மீண்டும்
நடைமுறை;ப்படுத்தப்படும் என்று கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
578 கடற்படை சிப்பாய்களுக்கு கொரனோ தொற்று
578 கடற்படை சிப்பாய்களுக்கு கொரனோ தொற்று
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் சிக்கி இதுவரை 578
சிங்கள கடற்படை சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு
உள்ளாகியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழில் கள்ள காதல் உறவில் பிறந்த சிசுவை – மலசலகூடக் குழிக்குள் வீசிய பெண் கைது
யாழில் கள்ள காதல் உறவில் பிறந்த சிசுவை – மலசலகூடக் குழிக்குள் வீசிய பெண் கைது
பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயார் அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.
நான்கு நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு சிசு பிறந்துள்ளது.
சிசுவை வீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தின் குழிக்குள் தாயார் போட்டுள்ளார்.
நான்கு நாள்கள் ஆகிய நிலையில் சிசுவின் உடல் அழுகி, அயலில் உள்ள
குடியிருப்பாளர்களுக்கு துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டதுடன், தாயாரைக் கைது செய்தனர்.
ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரத்தை பாவிப்பதற்கு ஜனாதிபதி முற்படுகிறாரா? வைத்திய கலாநிதி சிவமோகன் கேள்வி
ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரத்தை பாவிப்பதற்கு ஜனாதிபதி முற்படுகிறாரா? வைத்திய கலாநிதி சிவமோகன் கேள்வி
முள்ளிவாய்க்காலில் மே 18 ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின் எமது தமிழினப் போராட்டத்தை அகிம்சை போராட்டமாக
முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைத்துத் தமிழர்களுக்கும் உள்ளது
அந்த கடமையானது ஈழத்தமிழர்கள் உட்பட அதிகப்படியான உலகத் தமிழர்கள் அனைவருக்கும் உள்ளது அந்த விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பொறுப்புடன் செயற்பட்டு வருகிறது
உலகெங்கும் தோன்றிய விடுதலைப் போராட்டங்கள் அதற்கான ஒரு முடிவு வரும்வரை அமைதி கொண்டதில்லை அதே நிலமையில்தான் ஈழத்தமிழர்களும் இருக்கிறார்கள்
எவரும் எந்த கருத்தையும் சொல்லி விட்டுப் போகலாம் ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கை ரீதியான பொறுப்பு ஈழத்தமிழர்களுக்கான விடுதலையை பெற்றுக் கொள்வது மட்டுமே
அதுவும் சுயாட்சி ரீதியில் சிங்களவர்களுடன் எமது உரிமைகளை சரிக்கு சமனாக பகிர்ந்து கொள்ள வேண்டியவர்களாக நாங்கள்
இருக்கின்றோம் அந்த அடிப்படையில் மட்டுமே நாங்கள் எமது அரசியல் பயணத்தை செய்கின்றோம் யாருக்கும் அடிமைகளாக
எமது உரிமைகளை விட்டுக் கொடுப்பதற்கு எந்த ஒரு ஈழத்தமிழனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்
தமிழ் மக்களால் நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளில் கோவிட் 19 சட்டங்களுக்கு உட்பட்டு அடக்கு முறைகளையும்மீறி நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது
அதே நேரம் இலங்கை அரசாங்கம் பல்லாயிரக் கணக்கானோர் முன்னிலையில் இராணுவ வெற்றியை கொண்டாடப் போகிறார்கள்
அங்கு கோவிட் 19 சட்டம் மதிக்கப்படுமா?
இதிலிருந்து இவர்களின் பேரினவாத ரீதியான எண்ணங்கள் வெளிப்படுகிறது
எனவே எப்படி முள்ளிவாய்க்கால் நிகழ்வை மிகவும் குறைந்த நபர்களுடன் நினைவு கூர்ந்தது போல் இராணுவ வெற்றியை
ஐம்பதிற்கு உட்பட்ட இராணுவத்தினரை வைத்தே கொண்டாடப்பட வேண்டும்
ஆயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து கூடுவார்களானால் அவர்களே கோவிட் 19 சட்டத்தை மீறியவர்களாவார்கள் எனவே ஒரு
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசு இனவேற்றுமை காட்டக் கூடாது அப்படி வெற்றிக் கொண்டாட்டத்தை
அதிகளவானவர்களுடன் கொண்டாடுவார்களானால் எந்த சட்டங்களையும் நடைமுறைப்படுத்த அருகதையற்றவர்களாகவே கணிக்கப்படுவார்கள்
இன்று ஐநா சபையில் இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகளுக்கான பொறுப்புக் கூறலை ஏற்றுக் கொண்டு மீள் நிகழாமையை உறுதிப்படுத்திக் நல்லினக்க ரீதியான அரசியல்
நிலைப்பாட்டை எடுப்பதாக ஏற்றுக் கொண்ட இந்த இலங்கை அரசு ஒன்பது ஆண்டுகள் கடந்து ஐநா சபையில் அதை தூக்கி எறிந்தது எனவே இதற்கான ஒரு சரியா முடிவை சர்வதேசம் உடனடியாக
எடுக்க வேண்டும் கொரோனா நோய் தமிழர்களை ஒருபோதும் கொன்றுவிடப் போவதில்லை ஆனால் இனப்பாகுபாடு கொண்ட
இந்த அரசு மீண்டும் எம்மீதான இனப்படுகொலைகள் நடத்துவதற்கு காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாகவே தமிழர்கள் உணர்கிறார்கள்
ஏனெனில் இன்று சகல அதிகாரங்களுக்கும் பெருந்தொகையான இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஒரு இராணுவ ஆட்சியை நோக்கி இந்த அரசு சென்று கொண்டிருக்கிறது ஜனாதிபதி
என்பவருக்கான அதிகாரம் 19வது திருத்தத்தின் கீழ் ஒட்டு மொத்தமாக கட்டுப்படுத்தப்பட்டு சுதந்திர ஆணைக் குழு சுதந்திர தேர்தல் ஆணக் குழு என்று பல்வேறு ஆணைக்குழுக்கள்
நியமிக்கப்பட்டிருந்தது இவை அனைத்தையும் உருக்குலைத்து இல்லாத அதிகாரத்தை பாவிப்பதற்கு தற்போது ஜனாதிபதி முற்படுவதாகவே தெரிகிறது
அதில் ஒரு இடையூறு வருமிடத்து இலங்கை இராணுவ ஆட்சியாக மாற்றுவதற்கான கைங்கரியங்கள் மிகவும் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகினறன எனவே இந்த விடயத்தில்
அனைத்து தமிழ் சிங்கள மக்களும் ஒன்று சேர்ந்து இவ்வாறான விடயங்களை எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் என்று
வன்னியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்
கனடா Markham பகுதி வீட்டில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு
கனடா Markham பகுதி வீட்டில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு
கண்டா மார்க்கம் Bur Oak Avenue and Kenned Road பகுதியில் வீடொன்றில் காணாமல் போன பன்னிரெண்டு வயது சிறுவன்
எரிந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளான்
போலீசார் நடத்திய தொடர் தேடுதலின் பின்னர் இந்த சிறுவன் மீட்க பட்டுள்ளான்
குறித்த மாரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
கனடாவில் ஒரே இரவில் மூன்று இடங்களில் துப்பாக்கி சூடு
கனடாவில் ஒரே இரவில் மூன்று இடங்களில் துப்பாக்கி சூடு
கனடாவின் கடந்த தினம் மதியம் தொடர் இரவு வரையான கால
பகுதியில் மூவேறு இடங்களில் நடத்த பட்ட சட்டவிரோத துப்பாக்கி
சூட்டு தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்
இவ்வாறு காயமடைந்தவர்கள் பதின் ஐந்து வயதுடைய சிறுவனும் என தெரிவிக்க பட்டுள்ளது
கனடா Grandravine Drive. பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பலத்த
காயமடைந்த நிலையில் நபர் ஒருவர் ஆபாத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழை புரட்டிய புயல் – 66 குடும்பங்கள் பாதிப்பு
யாழை புரட்டிய புயல் – 66 குடும்பங்கள் பாதிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக 66 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
அம்பன் சூறாவளியின் தாக்கமானது நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண
மாவட்டத்தில் காற்றின் வேகமானது உயர்வாக உணரப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை காற்றின் தாக்கத்தின்
காரணமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமை பிரிவிற்கு
அறிக்கையிடப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் என்.சூரிராஜ் தெரிவித்துள்ளார்
கடந்த 17 மற்றும் 18 ஆம் திகதி வீசிய காற்றின் தாக்கத்தின் காரணமாக குறித்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 14 குடும்பங்களைச் சேர்ந்த 54
அங்கத்தவர்களும் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 அங்கத்தவர்களும் நல்லூர் பிரதேச
செயலகத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று அங்கத்தவர்களும் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த
50 குடும்பங்களுமாக மொத்தமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குறித்த காற்றின் தாக்கத்தின் காரணமாக 47 வீடுகள் இதுவரை பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மேலும் ஓரிரு நாட்களுக்கு குறித்த காற்றின் தாக்கமானது கூடுதலாக
காணப்படுவதன் காரணமாக கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும்
வளிமண்டலத்திணைக்களத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக
மீனவர் சமூகத்தினர் விழிப்பாக செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது
காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் அ
னர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.







