ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரத்தை பாவிப்பதற்கு ஜனாதிபதி முற்படுகிறாரா? வைத்திய கலாநிதி சிவமோகன் கேள்வி

Spread the love

ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரத்தை பாவிப்பதற்கு ஜனாதிபதி முற்படுகிறாரா? வைத்திய கலாநிதி சிவமோகன் கேள்வி

முள்ளிவாய்க்காலில் மே 18 ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின் எமது தமிழினப் போராட்டத்தை அகிம்சை போராட்டமாக

முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைத்துத் தமிழர்களுக்கும் உள்ளது


அந்த கடமையானது ஈழத்தமிழர்கள் உட்பட அதிகப்படியான உலகத் தமிழர்கள் அனைவருக்கும் உள்ளது அந்த விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பொறுப்புடன் செயற்பட்டு வருகிறது

உலகெங்கும் தோன்றிய விடுதலைப் போராட்டங்கள் அதற்கான ஒரு முடிவு வரும்வரை அமைதி கொண்டதில்லை அதே நிலமையில்தான் ஈழத்தமிழர்களும் இருக்கிறார்கள்

எவரும் எந்த கருத்தையும் சொல்லி விட்டுப் போகலாம் ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கை ரீதியான பொறுப்பு ஈழத்தமிழர்களுக்கான விடுதலையை பெற்றுக் கொள்வது மட்டுமே

அதுவும் சுயாட்சி ரீதியில் சிங்களவர்களுடன் எமது உரிமைகளை சரிக்கு சமனாக பகிர்ந்து கொள்ள வேண்டியவர்களாக நாங்கள்

இருக்கின்றோம் அந்த அடிப்படையில் மட்டுமே நாங்கள் எமது அரசியல் பயணத்தை செய்கின்றோம் யாருக்கும் அடிமைகளாக

எமது உரிமைகளை விட்டுக் கொடுப்பதற்கு எந்த ஒரு ஈழத்தமிழனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்

தமிழ் மக்களால் நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளில் கோவிட் 19 சட்டங்களுக்கு உட்பட்டு அடக்கு முறைகளையும்மீறி நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது

அதே நேரம் இலங்கை அரசாங்கம் பல்லாயிரக் கணக்கானோர் முன்னிலையில் இராணுவ வெற்றியை கொண்டாடப் போகிறார்கள்

அங்கு கோவிட் 19 சட்டம் மதிக்கப்படுமா?
இதிலிருந்து இவர்களின் பேரினவாத ரீதியான எண்ணங்கள் வெளிப்படுகிறது

எனவே எப்படி முள்ளிவாய்க்கால் நிகழ்வை மிகவும் குறைந்த நபர்களுடன் நினைவு கூர்ந்தது போல் இராணுவ வெற்றியை

ஐம்பதிற்கு உட்பட்ட இராணுவத்தினரை வைத்தே கொண்டாடப்பட வேண்டும்

ஆயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து கூடுவார்களானால் அவர்களே கோவிட் 19 சட்டத்தை மீறியவர்களாவார்கள் எனவே ஒரு

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசு இனவேற்றுமை காட்டக் கூடாது அப்படி வெற்றிக் கொண்டாட்டத்தை

அதிகளவானவர்களுடன் கொண்டாடுவார்களானால் எந்த சட்டங்களையும் நடைமுறைப்படுத்த அருகதையற்றவர்களாகவே கணிக்கப்படுவார்கள்

இன்று ஐநா சபையில் இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகளுக்கான பொறுப்புக் கூறலை ஏற்றுக் கொண்டு மீள் நிகழாமையை உறுதிப்படுத்திக் நல்லினக்க ரீதியான அரசியல்

நிலைப்பாட்டை எடுப்பதாக ஏற்றுக் கொண்ட இந்த இலங்கை அரசு ஒன்பது ஆண்டுகள் கடந்து ஐநா சபையில் அதை தூக்கி எறிந்தது எனவே இதற்கான ஒரு சரியா முடிவை சர்வதேசம் உடனடியாக

எடுக்க வேண்டும் கொரோனா நோய் தமிழர்களை ஒருபோதும் கொன்றுவிடப் போவதில்லை ஆனால் இனப்பாகுபாடு கொண்ட

இந்த அரசு மீண்டும் எம்மீதான இனப்படுகொலைகள் நடத்துவதற்கு காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாகவே தமிழர்கள் உணர்கிறார்கள்

ஏனெனில் இன்று சகல அதிகாரங்களுக்கும் பெருந்தொகையான இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஒரு இராணுவ ஆட்சியை நோக்கி இந்த அரசு சென்று கொண்டிருக்கிறது ஜனாதிபதி

என்பவருக்கான அதிகாரம் 19வது திருத்தத்தின் கீழ் ஒட்டு மொத்தமாக கட்டுப்படுத்தப்பட்டு சுதந்திர ஆணைக் குழு சுதந்திர தேர்தல் ஆணக் குழு என்று பல்வேறு ஆணைக்குழுக்கள்

நியமிக்கப்பட்டிருந்தது இவை அனைத்தையும் உருக்குலைத்து இல்லாத அதிகாரத்தை பாவிப்பதற்கு தற்போது ஜனாதிபதி முற்படுவதாகவே தெரிகிறது

அதில் ஒரு இடையூறு வருமிடத்து இலங்கை இராணுவ ஆட்சியாக மாற்றுவதற்கான கைங்கரியங்கள் மிகவும் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகினறன எனவே இந்த விடயத்தில்

அனைத்து தமிழ் சிங்கள மக்களும் ஒன்று சேர்ந்து இவ்வாறான விடயங்களை எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் என்று

வன்னியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்

      Author: நலன் விரும்பி

      Leave a Reply