Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

கனடா வன்கூவரில் மூவர் சுட்டு கொலை

கனடா வன்கூவரில் மூவர் சுட்டு கொலை

கனடா வன்கூவர் பகுதியில் மூவர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
காரில் பயணித்த நபர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .

இந்த சமபவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆயுத தாரியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கனடா வன் கூவர் பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் இதுவரை பலியாகியுள்ளனர்.

குறித்த கனடா வன்கூவர் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடபில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டன் பிரதமர் யார் பரபரப்பு போட்டி

    பிரிட்டன் பிரதமர் யார் பரபரப்பு போட்டி

    ,

    பிரிட்டன் ,லண்டன் ; பிரிட்டனில் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பதவி விலகிய நிலையில்
    தற்போது பிரிட்டனுக்கு புதிய பிரதமர் போட்டி நிலவுகிறது .

    இந்த போட்டியில் இந்தியரான ரிஷி சுனெக் மற்றும் பிரிட்டன் பூர்வீக கூடிய பெண் ஒருவருக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த இருவர் போட்டியில் மக்கள் கருத்து கணிப்பில் ரிஷி சுனெக் முன்னிலையில் உள்ளார் .

    ஆனால் கறுப்பினத்தவர் ஆட்சியில் அமர்ந்திட கூடாது என துடிக்கும் இனவாதிகள் சுனெக்கிற்கு எதிரான அ கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர் .

    பிரிட்டன் பிரதமர் யார் பரபரப்பு போட்டி

    எதிர் வரும் ஐந்தாம் திகதி பிரிட்டன் பிரதமர் யார் என்கின்ற விடயம் தெரியவரும் .

    தபோது வரை ரிஷி சுனெக் முன்னிலையில் உள்ளார் .இவ்வாறு ரிஷி சுனெக் பிரதமராக வெற்றி வாய்ப்பு கிடைத்தால் பிரிட்டனை ஆண்ட
    முதல் இந்தியர் மாற்றும் கறுப்பினத்தவர் என்ற பெருமையை இவரை தட்டி செல்லும் என்பது குறிப்பிட தக்கது .

      Posted in இலங்கை செய்திகள்

      கோத்தபாயாவுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுப்பு

      கோத்தபாயாவுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுப்பு

      உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌சவினை கைது செய்து நீதியின் முன் நிறுத்தக் கோரும் கையெழுத்து போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றனர்.

      சிங்கப்பூரில் தற்போது கோத்தபாயாவுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுப்பு நிலைகொண்டுள்ள நிலையில், அந்நாட்டு சட்டமா அதிபரை நோக்கியதாக இந்தக் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

      குறுகியகால விசாவில் தங்கியிருக்கும் கோத்தபாய இராஜபக்‌சே, எந்த சமயத்திலும் சிங்கப்பூரை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதால், உலகத் தமிழர்கள் அனைவரும் விரைவாக கையெழுத்திட்டு இதற்கு வலுச்சேர்க்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

      இந்நிலையில் பிரான்ஸ் தமிழர்களின் கொண்டாட்டமாக இருக்கின்ற தமிழர் விளையாட்டு விழாவில் பங்கெடுத்திருந்த மக்கள், ஆர்வத்துடன் இக்கையெழுத்து போராட்டத்தில் பங்கெடுத்திருந்ததோடு, இனப்படுகொலைக்கு எதிரான தமது உணர்வலைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

      கைபேசி செயலிவாயிலாகவும், பிரதி ஒப்பங்களாகவும் இப்போராட்டத்தில் மக்கள் பங்கெடுத்திருந்தனர்.

      குறித்த https://chng.it/rQVfCj4KdQ இந்த இணைப்பின் ஊடாக அனைவரும் இலகுவாக பங்கெடுத்துக் கொள்ள முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      கோத்தபாய இராஜபக்சே, இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களைப் புரிந்ததற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் கூறியுள்ளன.

      1948ம் ஆண்டு இன அழிப்புச் சட்டத்தின் கீழும், 1949ம் ஆண்டு ஜெனீவாச் சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு additional protocol 1 இன் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழ் சிங்கப்பூர் சட்டமாஅதிபரினை நோக்கி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

      சர்வதேச சட்டங்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரின் உள்நாட்டுச் சட்டங்களின் அடிப்படையிலும் கூட,


      ஜெனீவா சட்டம் தொடர்பாக சிங்கப்பூர் உள்நாட்டுச் சட்டம், சிங்கப்பூரின் குற்றவியல் சட்டத்தின் கீழும்,


      அவரைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டிய கடமைப்பாடு சட்டமாஅதிபருக்கு உண்டு என்பதை நாம்


      இங்கு சுட்டிக்காட்டி இருக்கின்றோம் என எனத் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

      https://youtu.be/FUdhloyFrO0
        Posted in உலக செய்திகள்

        ஆற்றில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்

        ஆற்றில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்

        கென்யா ; கென்யா நிதி ஆற்றின் மேலாக பாலத்தில் பயணித்து கொண்டிருந்த ஆடம்பர பயணிகள் பேரூந்து ஆற்றின் பள்ளத்தாக்கில் வீழ்ந்தது சிதறியதில் சுமாரா 30 பேர் மரணமாகியுள்ளனர்.

        இந்த பேருந்து நிதி ஆற்றின் மேலால் உள்ள பாலத்தில் வேகமாக பயணித்த பொழுதே இந்த விபத்து சமபவித்துள்ளது.

        ஆற்றின் பள்ளதாக்கில் வீழ்ந்து நொறுங்கிய பேரூந்தில் பயணித்தஅணைத்து பயணிகளும் மரணித்த துயரம் இடம்பெற்றுள்ளது.

        சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது.

        சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் சடலங்களை மீட்டு மருத்துவ மனையில் வைத்துள்ளனர் .

        கென்யாவில் ஆற்றின் பள்ளதாக்கில் வீழ்ந்து சிதறிய பேரூந்து செய்திகள் உலக ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக இடம்பிடித்துள்ளன .

          Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

          பிரான்ஸ் பீச்சில் ஒருவர் சுட்டுக்கொலை

          பிரான்ஸ் பீச்சில் ஒருவர் சுட்டுக்கொலை

          ,

          பிரான்ஸ் La Mama பீச் பகுதியில் ஆண் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .


          குறித்த La Mama பீச்சில் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபரது கண்மூடித்தனமான செயல் பாட்டின் காரணமாக காவல்துறையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

          மேற்படி பொலிஸ் துப்பாக்கி சூட்டு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .


          குறித்த சம்பவம் தொடரப்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

            Posted in உலக செய்திகள்

            காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்

            காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்

            அமெரிக்கா கலிபோனியா பகுதியில் காட்டு தீயில் சிக்கி 6000 கெட்டயர் அளவில் காடுகள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது .

            இந்த காட்டு தீயில் சிக்கி பலநூறு வீடுகள் மற்றும் வாகனங்கள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன .

            இந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் காட்டு தீயின் அகோரம் காரணமாக வீடுகளை விட்டு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் .

            கலிபோனியாவில் வேகமாக பரவி வரும் காட்டு தீயினை கட்டு படுத்த இரண்டாயிரம் தீயணைப்பு வீரர்கள் மாற்று விமானங்கள் என்பன ஈடுபடுத்த பட்டுள்ளன.

            காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்
            காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்

            எனினும் இவர்கள் கட்டுப்பட்டை மீறி காட்டு தீ வேகமாக பரவி வருவதால் மக்கள் தொடர்ந்து பீதியில் உறைந்துள்ளனர்.

            அதிக வெப்பம் காரணமாக இந்த கட்டு தீ ஏற்படுவதக தெரிவிக்க படுகிறது.

              Posted in உலக செய்திகள்

              மியன்மாரில் நான்கு போராட்ட காரர்கள் இராணுவத்தால் தூக்கிலிட்டு படுகொலை

              மியன்மாரில் நான்கு போராட்ட காரர்கள் இராணுவத்தால் தூக்கிலிட்டு படுகொலை

              மியன்மார் நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகிறது .இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போரட்டம் நடத்திய நால்வரை அந்த நாட்டு இராணுவம் தூக்கில் மாட்டி படுகொலை செய்துள்ளது .

              இந்த அப்பாவி ஜனநாயக போராட்ட வாதிகள் நால்வர் படுகொலை மியான்மாரில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

              இந்த நால்வர் படுகொலையை கண்டித்து ஆளும் இராணுவதத்திற்கு எதிராக போராட்டங்களை வெடித்துள்ளன .

              விரைவில் மியன்மாரும் இலங்கையை போல மக்கள் புரட்சி வெடித்து இராணுவ தலைமைகள் விரட்டியடிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கை மீது பாயும் பொருளாதார தடை எச்சரிக்கும் சஜித் பிரேமதாசா

                இலங்கை மீது பாயும் பொருளாதார தடை எச்சரிக்கும் சஜித் பிரேமதாசா

                இலங்கை ,கொழும்பு ;இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்க பட்ட பின்னர் மக்கள் மீது இராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்திய நிலையில்

                இலங்கை மீது ராயத்தந்திர மற்றும் பொருளாதார தடைகள் விதிக்க பட்டு வருவதாக சஜித் பிரேமதாசா எச்சரித்துள்ளார் .

                இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு ஆளும் அரசுகள் செயல் பட மறுத்தால் இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என சஜித் பிரேமதாசா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

                சஜிதா எதிர் காலத்தில் ஜனாதிபதியாகி விடுவார் எனவும் அவரது வெற்றியை தடுக்க ரணில் விக்கிரமசிங்க பல அரசியல் விளையாட்டை

                ஆரம்பித்துள்ள நிலையில் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .

                  Posted in இலங்கை செய்திகள்

                  ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக போராடுங்கள் சரத் பொன்சேகா அழைப்பு

                  ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக போராடுங்கள் சரத் பொன்சேகா அழைப்பு

                  இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக போராடும் மக்களுக்கு தனது ஆதரவு என முன்னாள் இலங்கை இராணுவ தளபதி பீல்ட் மாசால் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

                  ரணில் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .

                  அவ்வாறு அமைந்துள்ளதை இந்த ஆதரவு வழங்குதல் ஊடகங் அமைய பெறுகிறது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    அஜித் நிவ்ராட் கப்ராலுக்கு வெளிநாடு செல்ல தடை

                    அஜித் நிவ்ராட் கப்ராலுக்கு வெளிநாடு செல்ல தடை

                    இலங்கையின் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவ்ராட் கப்ராலுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றத்தினால் மேலும் தடை விதிக்க பட்டுள்ளது.

                    கோட்டபாய ஆட்சியில் மத்திய வாங்கி ஆளுநராக செயலாற்றினார் அஜித் நிவ்ராட் கப்ரல் .

                    இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியை சந்திக்க பிரதான காரணியாக இருந்தார் என்கின்ற குற்ற சாட்டில் விசாரணைகள் நடத்த பட உள்ளமையால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது குறிபிட தக்கது .

                      Posted in இலங்கை செய்திகள்

                      இராணுவத்திடம் இருந்து பறிக்க பட்ட ஆயுதங்கள் மீட்பு

                      இராணுவத்திடம் இருந்து பறிக்க பட்ட ஆயுதங்கள் மீட்பு

                      பெல்துவ சந்தியில் இடம்பெற்ற போராட்டத்த்தின் பொழுது இராணுவத்திடம் இருந்து பறிக்க பட்ட டி-56 ரபில்,

                      மற்றும் அதற்குரிய குண்டுகள் என்பன பாலத்திற்கு கீழ் இருந்து மீட்க பட்டுள்ளதா பொலிஸ் தெரிவித்துள்ளது.

                      இந்த பாலத்திற்கு கீழ் குறித்த ஆயுதங்கள் வைக்க பட்டுள்ளது என்பதை இராணுவம் எவ்வாறு கண்டுபிடித்தது என்பது தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுளளது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        கோத்தபாயவைக் கைது செய்ய ஒப்பமிடுவோம் ! உலகத் தமிழர்களை நோக்கி பிரதமர் வி.உருத்திரகுமாரன் அழைப்பு

                        கோத்தபாயவைக் கைது செய்ய ஒப்பமிடுவோம் ! உலகத் தமிழர்களை நோக்கி பிரதமர் வி.உருத்திரகுமாரன் அழைப்பு

                        சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்‌சவைவினை, உலகளாவிய

                        நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து நீதியின் முன் நிறுத்தும்படி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கான கையெழுத்து போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியுள்ளது.

                        புலம்பெயர் நாடுகளில் சிங்கப்பூர் தூதரகங்களை நோக்கி கவனயீர்ப்பு போராட்டங்களையும், கோரிக்கை மனுவினை கையளித்திருந்த நாடுகடந்த

                        தமிழீழ அரசாங்கம், அதன்தொடர்சியாக தற்போது (ஒப்பிடுவதற்கான இணைப்பு : https://chng.it/rQVfCj4KdQ ) இக்கையெழுத்து போராட்டத்தினை தொடங்கியுள்ளது.

                        இது தொடர்பில் உலகத்தமிழ் உறவுகளை நோக்கி அழைப்பினை விடுத்துள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி இனப்படுகொலை,

                        மானிடத்திற்கெதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களைப் புரிந்தவர். இதற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் கூறியுள்ளன. 1948ம் ஆண்டு இன அழிப்புச் சட்டத்தின் கீழும்,

                        1949ம் ஆண்டு ஜெனீவாச் சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு additional protocol 1 இன் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழ் நாம் இந்தக் கோரிக்கைகளை சிங்கப்பூர் சட்ட மாஅதிபரினை நோக்கி முன்வைக்கின்றோம்.

                        சர்வதேச சட்டங்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரின் உள்நாட்டுச் சட்டங்களின் அடிப்படையிலும் கூட, ஜெனீவா சட்டம் தொடர்பாக சிங்கப்பூர் உள்நாட்டுச்

                        சட்டம், சிங்கப்பூரின் குற்றவியல் சட்டத்தின் கீழும், அவரைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டிய கடமைப்பாடு சட்டமாஅதிபருக்கு உண்டு என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்டி இருக்கின்றோம்.

                        கோத்தபாயவைக் கைது செய்ய ஒப்பமிடுவோம் ! உலகத் தமிழர்களை நோக்கி பிரதமர் வி.உருத்திரகுமாரன் அழைப்பு

                        மேலும் 2011ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் முன்னாள் செயலாளர் பான் கீ மூனால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையிலும் சிறீலங்காவின் பிரச்சனைக்கு அடிப்படைக் காரணம், தமிழர்கள் அங்கு அரசியல் நீரோடையில் இல்லை

                        என்றும்” the root caused is the conflict …..”என்று கூறியிருப்பதையும் மற்றும் 2021ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பஷிலேற் அவர்களும் dangerous exclusionary policy of the Sri Lankan Government என்று அதாவது அங்கே

                        இனநாயகம் தலைதூக்கி இருப்பதையும் நாங்கள் இங்கு சட்டிக்காட்டி, மேலும் சிறீலங்கா ஒரு இனவாத அரசு, அரச கட்டமைப்புக்கள் நீதிமன்றம் உட்பட

                        சிங்களத்தை மையப்படுத்தி இருப்பதால் அங்கு தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதையும் நாம் இம் மனுவில் சுட்டிக் காட்டி உள்ளோம்.

                        உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் சிறீலன்ஹ்காவில் நடந்த இந்தக் குற்றங்கள் அந்தந்த நாடுகளின் நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாள் ஆணையாளர் நவிப்பிள்ளை,

                        அல்குசேன் மற்றும் தற்போதைய ஆனையாளர் மிசேல் பசேலே ஆகியோர் நாடுகளை நோக்கி முன்வைத்த கோரிக்கையினையும் எமது கோரிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளோம்.

                        கோத்தபாயவைக் கைது செய்ய ஒப்பமிடுவோம் ! உலகத் தமிழர்களை நோக்கி பிரதமர் வி.உருத்திரகுமாரன் அழைப்பு

                        இன்றைக்கு கோத்தபாய ராஜபக்‌சே திரும்பவும் கொழும்புபிற்கு திரும்பினால், அவர் அங்கு ஊழல் குற்றங்களுக்காகவே நீதியின் முன்னால் நிறுத்தப்படுவாரேயன்றி, தமிழனப் படுகொகைக்காகவோ,

                        மானிடத்திற்கெதிரான குற்றங்களுக்கு எதிராகவோ, போர்க்குற்றங்களுக்காவோ நீதியின் முன் நிறுத்தப்பட மாட்டார்.

                        தற்சமயம் சர்வேந்திர டி சில்வா இன்னொரு இனப்படுகொலையாளி. இன்னொரு போர்க்குற்றவாளி. அமெரிக்காவின் ளயnஉவழைn இற்கு

                        உள்ளானவர் இன்றைக்கு அங்கு ஒரு முக்கிய பதவியை வகித்துக் கொண்டு வருகின்ற இந்த வேளையில் அங்கு தமிழர்களுக்கான நீதி ஒருபோதும் கிடையாது.

                        எனவே சிங்கப்பூர் கோத்தபாயாவைக் கைது செய்து விசாரித்து நீதியின் முன்னால் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை


                        தாயகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் சார்பாகவும், புலத்தில் வசிக்கும் தமிழர்கள் சார்பாகவும், உலகத்தில் தமிழர்கள்
                        சார்பாகவும் நாங்கள் இந்தக் கோரிக்கையை வைத்து இந்தக் கையெழுத்து போராட்டத்தினை தொடங்கியுள்ளோம்.


                        இது உடனடியாக செய்ய வேண்டிய விடயம். ஏனெனில் ராஜபக்‌சே எந்த சமயமும் சிங்கப்பூரை விட்டு வெளிக்கிட்டு


                        விடுவார் எனவே விரைவாக இதில் அனைவரும் கையெழுத்து இட்டு உலகளாவிய தமிழர்களின் கோரிக்கை இது


                        என்பதை சிங்கப்பூர் சட்டமாஅதிபருக்கு நாங்கள் எடுத்துரைப்போம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
                        பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரியுள்ளார்.

                        https://youtu.be/7RVatQcjKzY
                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையர் விமான நிலையத்தில் கைது

                        இலங்கையர் விமான நிலையத்தில் கைது

                        சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

                        இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை ரகசியமாக கண்காணித்தனர்.

                        அப்போது கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்து இறங்கிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளை தீவிரமாக சோதனையிட்டனர்.

                        அதில், இலங்கையை சேர்ந்த நைமுதீன் (வயது 28) என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

                        அதில் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவர் சிறிய பாக்கெட்டுகளாக ரத்தின கற்களை விழுங்கியிருந்தமை தெரியவந்தது.

                        இலங்கையர் விமான நிலையத்தில் கைது

                        பின்னர் அவருக்கு இனிமா கொடுத்து அவற்றை வெளியே எடுத்த போது 56 சிறிய பாக்கெட்டுகளில் பளபளக்கும் ரத்தின கற்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவற்றை வகைப்படுத்தினர்.

                        இதையடுத்து ரூ.94 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள 8 ஆயிரத்து 309 கேரட் கொண்ட 1,746 இரத்தின கற்களை பறிமுதல் செய்தனர்.

                        இதைத்தொடர்ந்து இரத்தினக்கற்களை கடத்தி வந்த இலங்கை இளைஞனைகைது செய்த அதிகாரிகள்,


                        இரத்தினக் கற்கள் கடத்தல் பின்னணியில் உள்ளது யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          ஜனாதிபதி மாளிகையில் திருட்தில் ஈடுபட்ட மூவர் கைது

                          ஜனாதிபதி மாளிகையில் திருட்தில் ஈடுபட்ட மூவர் கைது

                          ஜனாதிபதி மாளிகையில் திரை அணிகலன்களாக பயன்படுத்தப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட 40 செப்பு உருண்டைகளை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                          2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு ஆக்கிரமித்தனர்.

                          அதன்போது,சந்தேகநபர்கள் பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                          செப்பு உருண்டைகளை பழைய உலோகமாக விற்பனை செய்ய முற்பட்ட இவர்கள் வெலிக்கடை பொலிஸாரால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.

                          28, 34 மற்றும் 37 வயதுடைய சந்தேகநபர்கள் ராஜபகிரிய ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் போதைக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.

                          இந்நிலையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை
                          மேற்கொள்ளும் விசேட பொலிஸ் குழுவிடம் சந்தேகநபர்கள் மூவரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            உக்கிரேனில் கைக்குண்டு வீசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன்

                            உக்கிரேனில் கைக்குண்டு வீசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன்

                            ,

                            உக்கிரேன் ; உக்கிரேனுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இராணுவ பயிற்சி பாசறையில் கைக்குண்டு ஒன்றை வீசியுள்ளார் .

                            உக்கிரேனில் இராணுவ பயிற்சி மையத்தில் கைக்குண்டு வீசிய போரிஸ் ஜோன்சன் புகைப்படம் தற்போது வைரலாகிய வண்ணம் உள்ளது.

                            உக்கிரேனுக்கு பிரிட்டன் அதிக ஆயுதங்களை வழங்கி வருவதுடன் ,நவீன் ஏவுகணையையும் வழங்கி வருகிறது.

                            உக்கிரேன் இராணுவத்தினருக்கு பிரிட்டன் இராணுவம் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது .


                            பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கைக்குண்டு வீசிய செயல் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

                            உக்கிரேனில் துப்பாக்கி மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் சுட்டு பயிற்சி பெற்றுள்ளார் .

                            ஆமா வெடிச்சு இருந்தா என்ன ஆகி இருக்கும் ..?

                            https://www.youtube.com/watch?v=-Rt2zx-Z8SE
                              Posted in இலங்கை செய்திகள்

                              காவல்துறையால் ஒருவர் சுட்டுக்கொலை

                              காவல்துறையால் ஒருவர் சுட்டுக்கொலை

                              இலங்கை அம்பலாங்கொட பகுதியில்
                              சந்தே நபர் ஒருவரை காவல்த்துறையினர் தேடி சென்றனர்.

                              இதன் பொழுது காவல்துறையினர் மீது கத்தியால் குத்திட முயன்ற சந்தேகநபர் காவல்துரையினரால் சுட்டு கொலை செய்யபட்டுள்ளார்.

                              இறந்தவர் சடலம் மீட்க பட்டு உடல்கூறு பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது.
                              மேற்படி சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கையில் போராட்டத்தை தடுக்க கொரனோ பீதியை கிளறும் அரசு

                                இலங்கையில் போராட்டத்தை தடுக்க கொரனோ பீதியை கிளறும் அரசு

                                இலங்கை ; இலங்கையில் ஆளும் அரசுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

                                இந்த மக்கள் போராட்டத்தினால் தினறி வரும் அரசு தமது அரசை காப்பாற்றி கொள்ள இலங்கையில் கொரனோ பரவி வருவதாக பீதியை கிளறி வருகிறது.

                                மக்கள் ஒன்று கூடலை தடுத்திட இந்த கொரனோ நோயின் அபாயத்தில் நாடு சிக்கியுள்ளதாக பரப்புரையை தற்போது சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

                                இந்த நோயின் தாக்குதலை திணித்து நாட்டை முடக்கும் நிலைக்கு செல்ல ரணில் திட்டங்கள் போட்டுள்ளதாக மேற்படி விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  ரணிலுக்கு எதிராக வெடிக்கும் உக்கிர போராட்டம்

                                  ரணிலுக்கு எதிராக வெடிக்கும் உக்கிர போராட்டம்

                                  இலங்கை ; இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்க பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை நடத்தினர்

                                  இரவில் இராணுவத்தை ஏவி அவர்கள் மீது நடத்த பட்ட தாக்குதல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                  இவ்வாறான நிலையில் ரணிலுக்கு எதிராக மேலும் மக்கள் ஒன்றுகூடி போராட்டம் வலுப்பெற்றுள்ளது.

                                  ரணிலுக்கு எதிராக வெடிக்கும் உக்கிர போராட்டம்

                                  ரணில் விக்கிரமசிங்க பதவி விலகும்வரை எமது போராட்டம் தொடரும் என்கிறது மக்கள் மன்றம் .

                                  ரணில் விக்கிரமசிங்க மக்கள் மீது நடத்திய தாக்குதலினால் உலகளாவிய ரீதியில் ரணிலுக்கு அவப்பெயரை சமபதித்துள்ளதுடன் மக்கள் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார் என்பது கவனிக்க தக்கது .

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    ஜனாதிபதி மாளிகையில் காணமல் போன பொருட்கள் தொடர்பாக விசாரணை

                                    ஜனாதிபதி மாளிகையில் காணமல் போன பொருட்கள் தொடர்பாக விசாரணை

                                    இலங்கை ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகையில் காணாமல் போன பொருட்கள் தொடர்பான ஆய்வுகளை நடத்திட விசேட குழு நியமிக்க பட்டுள்ளது.

                                    இந்த மாளிகையில் பழையகால புராதன ஓவியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் என்பன பாதுகாக்க பட்டு வந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.

                                    மிகவும் பெறுமதிமிக்க இந்த பொருட்களை திருடி சென்றவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்

                                      அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்

                                      இலங்கை ; அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (24) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

                                      இதுதொடர்பாக கல்வி அமைச்சு 19.07.2022 அன்று வெளியிட்ட அறிக்கைக்கு அமைவாக மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்கள், வலய

                                      பொறுப்பாளர்,உதவி கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அதிபர்களுக்கும் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம் குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

                                      எனினும் மறுஅறிவித்தல் வரை பாடசாலைகள் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளிலேயே இடம்பெறும்.

                                      புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையத்தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

                                      இதுபற்றிய ஆலோசனை கல்வித்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.