கோத்தபாயாவுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுப்பு

Spread the love

கோத்தபாயாவுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுப்பு

உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌சவினை கைது செய்து நீதியின் முன் நிறுத்தக் கோரும் கையெழுத்து போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் தற்போது கோத்தபாயாவுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுப்பு நிலைகொண்டுள்ள நிலையில், அந்நாட்டு சட்டமா அதிபரை நோக்கியதாக இந்தக் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறுகியகால விசாவில் தங்கியிருக்கும் கோத்தபாய இராஜபக்‌சே, எந்த சமயத்திலும் சிங்கப்பூரை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதால், உலகத் தமிழர்கள் அனைவரும் விரைவாக கையெழுத்திட்டு இதற்கு வலுச்சேர்க்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் பிரான்ஸ் தமிழர்களின் கொண்டாட்டமாக இருக்கின்ற தமிழர் விளையாட்டு விழாவில் பங்கெடுத்திருந்த மக்கள், ஆர்வத்துடன் இக்கையெழுத்து போராட்டத்தில் பங்கெடுத்திருந்ததோடு, இனப்படுகொலைக்கு எதிரான தமது உணர்வலைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

கைபேசி செயலிவாயிலாகவும், பிரதி ஒப்பங்களாகவும் இப்போராட்டத்தில் மக்கள் பங்கெடுத்திருந்தனர்.

குறித்த https://chng.it/rQVfCj4KdQ இந்த இணைப்பின் ஊடாக அனைவரும் இலகுவாக பங்கெடுத்துக் கொள்ள முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தபாய இராஜபக்சே, இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களைப் புரிந்ததற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் கூறியுள்ளன.

1948ம் ஆண்டு இன அழிப்புச் சட்டத்தின் கீழும், 1949ம் ஆண்டு ஜெனீவாச் சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு additional protocol 1 இன் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழ் சிங்கப்பூர் சட்டமாஅதிபரினை நோக்கி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டங்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரின் உள்நாட்டுச் சட்டங்களின் அடிப்படையிலும் கூட,


ஜெனீவா சட்டம் தொடர்பாக சிங்கப்பூர் உள்நாட்டுச் சட்டம், சிங்கப்பூரின் குற்றவியல் சட்டத்தின் கீழும்,


அவரைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டிய கடமைப்பாடு சட்டமாஅதிபருக்கு உண்டு என்பதை நாம்


இங்கு சுட்டிக்காட்டி இருக்கின்றோம் என எனத் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

    Leave a Reply