Author: நலன் விரும்பி
ஆற்றில் இருந்து பெண் சடலமாக மீட்பு
தலவாக்கலை மேல் கொத்மலையில் நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலமொன்றை தலவாக்கலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பிரதேசவாசிகளினால் வழங்கிய தகவலுக்கமைய தலவாக்கலை சுமண சிங்கள
வித்தியாலயத்திற்கு அருகிலே இவ்வாறு அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை இன்று (25) காலை பொலிஸார் மீட்டனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்கு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி
வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

கிளிநொச்சியில் தொல்பொருள் திணைக்களத்தினரால் அகழ்வுப் பணிகள் – மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு!
கிளிநொச்சி உருத்திரபுரீச்சரர் சிவாலயத்தில் (2021.03.24) தொல்பொருள் திணைக்களத்தினரால் அகழ்வுப் பணிகள் அறிவிப்பு – மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு!
ஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி
ஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி
அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக, ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த தோல்வி தமிழர்களுக்கு நீதியாக மாறவில்லை என்பதோடு பொறுப்புக்கூறலை சிறிலங்கா அரசிடமே கொடுக்கின்ற ஓர் வலுவற்ற தீர்மானம் என தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைச்சபையில் பிரித்தானியா தலைமையிலான கூட்டுநாடுகளால் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான தீர்மானத்துக்கு A/HRC/46/L.1 ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன. வாக்கெடுப்பில் 14 பங்கேற்கவில்லை.
அண்மைக்காலத்தில் அனைத்துலக அரங்கொன்றில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக இது இருந்தாலும், முன்னைய தீர்மானங்களை விட, வலுவற்ற நீர்த்துப்போன ஓர் தீர்மானமாக இது உள்ளதெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த காலத்தில் சிறிலங்கா சாமார்த்தியமாக ‘பயங்கரவாதத்தின் மீதான போர்’ என்று பூச்சாண்டி காட்டி உத்திகளைக் கையாண்டது. 2015ல் ஏமாற்று அரசியலைக் கையாண்டு ஐ.நா மனித
உரிமை;சபையின் 30/1 தீர்மானத்தைப் பிற நாடுகளுடன் கூட்டாக முன்மொழிந்து விட்டு, அதனைச் செயலாக்காமல் அனைத்துலக சமூகத்தினை சமாளித்ததென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே தங்களிடம் சான்று இருப்பதாக ஐ.நா மனிதவுரிமைச் சபையின் துணை ஆணையாளர் மெர் கான் வில்லியம்ஸ் கூறியுள்ள போதிலும், புதிய தீர்மானத்தில் ஒரு கூறு ‘ஐ.நா ஆணையாளர் அலுவலகம் தகவலும்
சான்றும் திரட்டவும் ஒருங்கமைக்கவும் பகுத்தாராயவும் பாதுகாக்கவும் வேண்டும்’ என்று கேட்டுக் கொள்வதாக’ உள்ளது. இது பாதிக்கப்பட்ட தமிழர்களை ஆற்றுப்படுத்துவதற்காக சேர்க்கப்பட்ட வெற்றுக்கூடான உள்ளடக்கமாக இது தோன்றுகிறது எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐ.நா மனிதவுரிமைப் சபையில் சிறிலங்காவுக்கு ஏற்பட்டுள்ள இந்த தோல்லி, அனைத்துலக இராஜதந்திர தளத்தில் சிறிலங்கா ஒதுக்கி வைக்கப்பட்ட அரசாகிக் கொண்டிருப்பதை வெளிக்காட்டுகின்றது.
இந்தத் தீர்மானம் சிறிலங்கா விவகாரத்தில் பின்னோக்கி சென்றுள்ளது. பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும் அயல்நாட்டு நீதிபதிகளும் பங்கேற்கக வேண்டுமென 2015ம் ஆண்டு தீர்மானம் முன்மொழிந்;திருந்தது.
ஆனால் இன்றைய தீர்மானமோ பொறுப்புக்கூறலை முழுக்க முழுக்க ஓர் உள்நாட்டுப் (சிறிலங்கா) பொறிமுறையிடமே விட்டுவிடுகிறது. நாகரீக நாடுகளின் சட்டப்புத்தகங்களில் அசிங்கமான
கறையாக வர்ணிக்கப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பொறுத்த வரை, 2015 தீர்மானத்தில் இடம்பெற்ற ‘நீக்கம்’ என்ற சொல் இன்றைய தீர்மானத்தில் காணப்படவில்லை.
சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்நிலையில் இருப்பவர்கள் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதைத் தெளிவாகக சுட்டிகாட்டும் வகையில் ஐ.நாவின் மூன்று அறிக்கைகள் உள்ளன. (ஐநா வல்லுநர் குழு அறிக்கை, உள்ளக ஆய்வறிக்கை (பெட்ரி அறிக்கை எனப்படுவது), சிறிலங்கா தொடர்பான மனிதவுரிமை ஆணையாளர் அலுவலக OISL அறிக்கை)
சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவும், உலகளாவிய மேலுரிமையினை சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக சமூகம் செலுத்த வேண்டும் என ஐநா உயராணையர் மிசேல் பசலே ஏற்கெனவே விடுத்த அழைப்பில் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைச்சபையின் 4 முன்னாள் ஆணையாளர்களும், சிறிலங்காவுக்குச் சென்றுவந்த 13 முன்னாள் ஐநா சிறப்பு அறிக்கையாளர்களும், சிறிலங்கா தொடர்பான ஐநா பொதுச் செயலரின் வல்லுநர் குழுவில் இடம்பெற்ற 3 உறுப்பினர்களும் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பக் கோரியிருந்தார்கள்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 2011ம் ஆண்டில் இருந்து கோரிவருகின்றது.
தற்போதைய ஐ.நா கூட்டத் தொடரிமை மையப்படுத்தி தாயக தமிழர் அரசியல் தரப்புக்களும், தமிழ் சிவில் சமூகமும், தமிழ் சமயத் தலைவர்களும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும், தமிழுலகமும், உட்பட பலரும தமது முதன்மைக் கோரிக்கையாக இதனை முன்வைத்திருந்தனர்.
சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்துவதற்குத் தேவைப்படுவது நாடுகளிடத்திடத்தில் அரசியல் மனத்திட்பம்தானே தவிர புதிய செயல்திட்டமன்று.
அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள மன்றங்களில் நீதி பெறுவதில் அரசுகளற்ற தேசங்கள் சந்திக்கும் சவால்களை ஐநா மனிதவுரிமைச் சபையின் இன்றைய தீர்மானம் காட்டுகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பும் உலகச் சமுதாயமும் சுயநிர்ணய உரிமையை ஓர் அடிப்படைக் கொள்கையாக ஏற்றுள்ள போதிலும், அதனை நீதிநோக்கில் பயன்படுத்தும் முயற்சியை இப்போதிருக்கும் அரசுகள் தமது நலன்களின் அடிப்படையில் வழிமறிப்பதே வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்தத் அரசுகள் தமது ‘இறைமையையும்’ ‘ஆட்சிப்புலக் கட்டுக்கோப்பையும்’ கட்டிக் காப்பதன் போர்வையில், நாசிக் கொடுமைகளை நினைவுபடுத்தும் இனஅழிப்புக்களையும்,
மானிடக்குற்றங்களை நடத்தத் தயங்குவதில்லை. மனிதவுரிமைகள் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் நீட்டி முழக்கும் உலக அரசுகள் தம் புவிசார் அரசியல் நலன்களுக்காக இந்தக் குற்றங்களைக் கண்டுகொள்வதில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு ஐநா இட்ட கட்டளை
இலங்கைக்கு ஐநா இட்ட கட்டளை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (unchr) இலங்கை தொடர்பில் மையப்படுத்தப்பட்ட அணியால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான இந்த பிரேரணை, பிரித்தானியாவினால் சமர்ப்பிக்கப்பட்டது கனடா,. ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் சார்பாகவே அந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
46/1 என அடையாளம் காணப்பட்ட அந்த வரைவு பிரேரணை, நேற்றையதினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தனது தரப்பின் சார்பில் கருத்துகளை முன்வைத்த சீனா, பிரேரணை வாக்கெடுப்புக்கு விடுமாறு கோரிநின்றது.
அதனடிப்படையில், பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்தன, எதிராக 11 நாடுகள் வாக்களித்தன, இந்தியா, ஜப்பான உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்துகொண்டன.
அவர்களின் பிரேரணையில், 2012 ஆம் ஆண்டுமுதல் இலங்கையில் எடுக்கப்பட்ட நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை நடவடிக்கைகள் குறித்து வெகுவாக கவனம் செலுத்தப்பட்டது.
பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க இலங்கை விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் அந்தப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் மாகாண சபை முறையைத் தொடர்வது குறித்தும்,
கொரோனா தொற்றை அடுத்து மத சுதந்திரத்துக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டமை தொடர்பிலும் அந்தப் பிரேரணையின் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
ஆறுபேர் இணைந்து சிறுமியை அடித்து கொன்ற கொடூரம்
ஆறுபேர் இணைந்து சிறுமியை அடித்து கொன்ற கொடூரம்
இலங்கை பெரிய கல்லாறு பகுதியில் பன்னிரண்டு வயது சிறுமி ஒருத்தியை மூன்று பெண்கள்
உள்ளிட்ட ஆறுபேர் இணைந்து நாள்தோறும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்
இந்த அடி காயங்களினால் அவளது புண்களில் ஏற்பட்ட தொற்று கிருமி ஊடாக அவர் இறந்துள்ளார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
இதனால் ஆறு பேரும் கைது செய்ய பட்டு கொலை குற்றச்சாட்டில் நீதி விசாரணைகள் இடம்பெற்று வருகிறது,
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
கச நோயினால் 600 பேர் ஆண்டு தோறும் இறப்பு
கச நோயினால் 600 பேர் ஆண்டு தோறும் இறப்பு
இன்று உலக காசநோய் தினமாகும். இலங்கையில் காசநோயினால் ஒரு வருடத்திற்கு 500 க்கும் 600 க்கும் இடைப்பட்டவர்கள் உயிரிழப்பதாக சுகாதார அறிக்கைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகளின்படி இந்நாட்டினுள் இனங்காணப்படாத காச நோயாளர்கள் கிட்டத்தட்ட 4000 க்கும் 5000 க்கும் இடைப்பட்டவர்கள் சமூகத்தில் இருப்பதாக காச
நோய் ஒழிப்பு மற்றும் மார்பு நோய் சம்பந்தப்பட்ட தேசிய வேலைத்திட்டத்தின் சமூகம் மருத்துவர் சுவனி தசநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், சுகாதார அறிக்கைகளின்படி குழந்தைகளுக்கு காச நோய் உருவாகும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நோயானது பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. ஆதிகாலம் முதல் இந்நோய் இருந்து வந்திருப்பதாக ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் மோட்டன், பிரான்சைச் சேர்ந்த ஜின் என்டன் விலமின் பாஸ்டர் ஆகிய விஞ்ஞானிகள் காசநோய் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
பலதரப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காச நோய்க்கு எதிராக உள்ள ஒரேயொரு தடுப்பூசி டீ.ஊ.பு என்று தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தற்போது காச நோயை குணப்படுத்துமளவிற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஐநாவில் தப்பியதா – வைக்க பட்ட ஆப்பு
இலங்கை ஐநாவில் தப்பியதா – வைக்க பட்ட ஆப்பு
இலங்கை புரிந்த தமிழ் இன படுகொலை தொடர்பாக அந்த ஆட்சியர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி ,
நீதி காணப்பட வேண்டும் என தமிழர் தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது ,ஆனால் மேற்குலகமும் இந்தியாவும் தமது நலனை முன் நிறுத்தி சதுரங்க ஆட்டத்தை நடத்தி வருகின்றனர்
ஆளும் இலங்கை பவுத்த பேரினவாதிகளே தமிழர்களுக்கு தீர்வினை வழங்க வேண்டும் என்பதாக இந்த மொழிவில் கூற பட்டுள்ளது ,இது இலங்கைக்கு வழங்க பட்டுள்ள மேலும் ஒரு கால
அவகாசமாக மாறியுள்ளது ,இவர்கள் நீதி வழங்கா விடின் ,கலப்பு நீதிமன்றம் ,அல்லது சர்வதேச நீதிமன்றில் நிறுத்த படுவார்கள் என சுட்டி காட்ட படுகிறது
அப்படி என்றால் மீளவும் பந்தை அடித்து இலங்கையின் காலில் வழங்கியுள்ளது ஐநா,இப்பொழுது ஆடுகளத்தை இலங்கையே திறந்துள்ளது ,
ஆட்டம் முறையாக ஆட தவறின் அது பெரும் நெருக்கடியில் இலங்கையை அழைத்து செல்லும் ,அதாவது விளங்க
சொல்லின் ,மைதானம் இன்றி விளையாட்டுக்கு இலங்கை செல்வது போன்ற நிலை ஏற்படும் வாய்ப்புக்கள் என்பதே இந்த விளையாட்டின் மறுபக்க பார்வையாகும்
ஏமாற்ற பட்டது தமிழர்கள் தான் ,ஆனால் தொடர்ந்து அந்த மக்களை ஏமாற்ற முடியாத நிலைக்கு செல்லும் நிலை ஏற்படும் ,
அதற்கான அறவழி போராட்டங்கள் தொடர வேண்டிய நிலையில் தமிழர் தேசம் தள்ள பட்டுள்ளது என்பதே நிகழ்வின் நிகழ்வுகளாக உருமாற்றம் பெற்றுள்ளது
பிரிட்டனில் வெடித்த இளையோர் போராட்டம் – வீடியோ
பிரிட்டனில் வெடித்த இளையோர் போராட்டம் – வீடியோ
பிரிட்டனில் ஈழ தமிழர்க்கு நடத்த பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதிமன்றில் ,நிறுத்தி தாமும்
அவர்களை போன்ற சுதந்திரத்துடன் வாழும் வாழ்வை தர வேண்டும் என கோரி இந்த இளைய போராளிகள் வீதிகளில் இயக்கி போராடடத்தில் ஈடுபட்டுள்ளனர்
அந்த காட்சிகள் இதே காணொளியில் பார்க்கவும்
ஐநாவில் தமிழர்கள் ஏமாற்ற பட்டது எப்படி – வீடியோ
ஐநாவில் தமிழர்கள் ஏமாற்ற பட்டது எப்படி – வீடியோ
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இலங்கை தொடர்பாக வைக்க பட்ட விடயங்கள்
அனைத்தும் இலங்கை அரசுக்கு சார்பான முறையில் வழங்க பட்டுள்ளது ,
இங்கு தமிழர்கள் எவ்விதம் ஏமாற்ற பட்டனர் என்பது தொடர்பில் தமிழீழ நாடு கடந்த அரச பிரதமர்
துல்லியமாக எடுத்து விளங்கும் இந்த விடயத்தை தமிழர்களே கேளுங்கள் பகிருங்கள்
மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி
மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி
புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியின் மாணவ தலைவர்களுக்கான ஒரு நாள் தமைமைத்துவ பயிற்சி கல்லூரியின் அதிபர் எஸ்.சந்திரமோகன் தலைமையில் யாழ்ப்பானம் நோர்த் லங்கா சிட்டி
பல்கலைகழகத்தின் இக்குனர் வி.கோபால் நோர்த் லங்கா சிட்டி பல்கலைகழகத்தின் மாத்தளை கிளையின் ஒருங்கினைப்பாளர் ஜீவரட்ணம் ஆகியோரின் ஏற்பாட்டில் கல்லூரியில் நடைபெற்றது.
இவ் தலைதமைத்துவ பயிற்சியின் பிரதான விரிவுரையாளராக யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் உப பீடாதிபதியும் உளவளதுறை ஆலோசகருமான பேராசிரியர் கலாநிதி
பா. தனபாலன் அவர்கள் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கி வைத்தார்.
குறிப்பாக மாணவ பராயத்தில் இருந்து மாணவர்களுக்கு தலைமைத்தவ பன்பினை உருவாக்கும் பொருட்டும். இன்றைய மாணவர்கள் நாட்டின் நாளைய தலைவர்கள் என்பதற்கு இனங்க அதற்கு
மாணவர்களை தயார்படுத்தும் அதே வேலை மலையக சமூகத்திற்கு நல்ல ஒழுக்கம் உள்ள சீடர்களாக மாணவர்களை உறுவாக்கும் நோக்கில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் பிரதி அதிபர் பொருப்பான ஆசிரியர்கள் அயற் பாடசாலை அதிபர்கள் பாடசாலையின் அபிவிருத்தி குழுவின் செயலாளர் பா.திருஞானம் உட்பட மாணவ தலைவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
ஐநா பிரேரணையால் மக்களுக்கு தீர்வு கிடைக்காது – பீரீஸ் முழக்கம்
ஐநா பிரேரணையால் மக்களுக்கு தீர்வு கிடைக்காது – பீரீஸ் முழக்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை, அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாகுமெனத் தெரிவித்த கல்வி
அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், இப்பிரேரணைகள் ஊடாகச் சாதாரண மக்களுக்கு நன்மைகள் எவையும் கிடைக்காது; மாறாக, புலம்பெயர் அமைப்புகள் மாத்திரம் குறுகிய பயனைப் பெறும் என்றார்.
அனைத்து நாடுகளுடனும் பொதுத் தன்மையைப் பேணுவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கொள்கையாகும் எனத் தெரிவித்த அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இலங்கை விவகாரத்தில்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களை அடிப்படையாகக் கொண்டு கொள்கை வகுக்கிறது.
இவ்வாறான செயற்பாடு, ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படைக் கொள்கைக்கு முரணானது என்றார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பெறுபேறு எதுவாக அமைந்தாலும், அரசாங்கம் சர்வதேசத்துடனும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் இணக்கமாகவே செயற்படும்.
இலங்கை விவகாரத்தில் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகள் ஒருதலைப்பட்சமானது.
சர்வதேசத்துக்கு அடிபணிந்து, இராணுவத்தினரை ஒருபோதும் காட்டிக் கொடுக்கமாட்டோம். இராணுவத்தினரைப் பாதுகாக்க மேலதிகமாக சட்டம் இயற்றுவோம்’ என்றார்.
‘இலங்கை விவகாரத்தில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர், ஒரு
தலைப்பட்சமாகச் செயற்பட்டு, இலங்கையின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில், வெறுக்கத்தக்க வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்’ என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இரவு வேளையில் வீதியில் நடமாடிய பெண்கள் நால்வர் கைது
இரவு வேளையில் வீதியில் நடமாடிய பெண்கள் நால்வர் கைது
எவ்விதமான காரணங்களும் இன்றி, இரவு வேளையில் வீதியில் நடமாடிய பெண்கள் நால்வர் கைது
செய்யப்பட்ட சம்பவம் யாவரும் அறிந்ததே, அந்த நான்கு பெண்களுக்கும் தலா 50 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்த நால்வருக்கும் எதிராகவும்
“ தெருக்களில் அநாவசியமாக சுற்றிதிரிந்தல்” என்ற குற்றச்சாட்டப்பட்டது.
அந்தப் பெண்கள் நால்வரும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவர்களுக்கு தலா 50 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
லொறி ஆட்டோ மோதல் – தாய் முன்னே பலியான மகள்
தலவாக்கலை – சென்.கிளயார் டெவோன் பகுதியில் லொறியொன்றும் ஓட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில், கணேஷன் நித்யாவின் (வயது 25 என்ற யுவதி உயிரிழந்துள்ளார். அவரது தாயார் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றுக்காலை 5.24க்கு இடம்பெற்றுள்ளது என திம்புள்ளை- பத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று காலை 5.20 மணியளவில் இடம்பெற்றதாக திம்புள்ளை−பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான லொறியொன்றும், கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த ஓட்டோடுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
ஓட்டோவில் பயணித்த யுவதி மரணமடைந்தார், அவரது தாயார் படுகாயமடைந்துள்ளார் எனினும்,
ஓட்டோ சாரதிக்கு எவ்விதமான ஆபத்துகளும் ஏற்படவில்லையென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஓட்டோ சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலத்தால் இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், அவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் 240 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
யாழில் 240 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம், வெத்தலகேனி பகுதியில் நேறறு (2021 மார்ச் 22) மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின்
போது 239 கிலோ மற்றும் 850 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற டிப்பர் வண்டியுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத கடத்தல்களைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்
யாழ்ப்பாணம், வெத்தலகேனி, அலியாவலய் பகுதியில் நேற்று (மார்ச் 22, 2021) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சாலையில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான டிப்பர் வண்டி ஒன்றை சோதனை செய்தனர்.
அப்போது சுமார் 07 பொலிதீன் பைகளில் அடைக்கப்பட்டுள்ள 239 கிலோ மற்றும் 850 கிராம் எடையுள்ள கேரள கஞ்சா 100 பார்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதன் படி கேரள கஞ்சா, டிப்பர் வண்டி மற்றும் அதில் பயணித்த இரண்டு (02) சந்தேக நபர்களை கடற்படை கைது செய்தது.
கடற்படை கைப்பற்றிய கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் ரூ .71.9 மில்லியன் என்று நம்பப்படுகிறது.
கொவிட் -19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட, இந்த நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31
மற்றும் 34 வயதுடைய வெத்தலகேனி, முல்லியன் மற்றும் அலியாவலெய் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கேரள கஞ்சா, டிப்பர் வண்டி மற்றும் சந்தேக நபர்கள் பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பிரிட்டனில் மக்கள் வாக்கெடுப்பு – பதிய மறந்தால் -1000 தண்டம் – உடனே பதியுங்கள் தமிழர்களே
பிரிட்டனில் மக்கள் வாக்கெடுப்பு – பதிய மறந்தால் -1000 தண்டம் – உடனே பதியுங்கள் தமிழர்களே
பிரிட்டனில் மக்கள் கணக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது ,இது நேற்றுடன் இறுதி நாளாக முடிவடைந்துள்ளது
மேற்படி உங்கள் பதிவுகளை பதிய மறந்து இருந்தால் ,அல்லது இந்த விடயம் தெரியாது இருந்தால் கீழ் உள்ளே இணைப்பில் அழுத்தி உடனே பதிவு செய்யுங்கள்
அவ்வாறு பதிய மறுப்பின் உங்களுக்கு ஆயிரம் பவுண்டுகள் தண்டம் என தெரிவிக்க படுகிறது
இதனை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள் உறவுகளே
குறட்டை விட்ட புலி அமைப்புக்களை – எழுந்து ஓடவைத்த அம்பிகை
குறட்டை விட்ட புலி அமைப்புக்களை – எழுந்து ஓடவைத்த அம்பிகை
பிரித்தானியாவை மைய படுத்தி இயங்கி வந்த புலிகளினால் உருவாக்க பட்ட அதன் அமைப்புக்கள் ,மற்றும் அதன் கிளை அமைப்புக்கள் என்பன தமிழர்கள் உரிமை போராட்டத்தை
சிங்கள இனவாத அரசுகளுடன் இணைந்து அடகுவைத்த செயலுக்கு ஒப்பாக போராட்டங்களை உறங்குநிலைக்கு எடுத்து சென்று காணாமல் போயிருந்தன
இவ்வாறான காலப் பகுதியில் , அமைப்புகளின் சார்பு இன்றி தன்னிச்சையாக அம்பிகை அவர்கள் மேற்கொண்ட உண்ணவைத்த போராடடத்தின் பின்னர் ,இப்போது பதுங்கி கிடந்த புலி அமைப்புக்கள் மீள் எழுந்து ஓட ஆரம்பித்துள்ளன .
தொடர்ந்து தாம் உறங்கு நிலைக்கு சென்றால் ,மக்கள் தன்னெழுச்சியாக செயல்பட்டு விடுவார்கள் என்பதும் ,அவ்வாரண நிலை ஏற்பட்டால் தாம் செல்லாக் காசாக மாறி விடுவோம்
என்பதால் ,இப்பொது மீள் செயல்பாட்டுக்கு தம வந்துள்ளதாக காட்டி கொள்ளும் பங்கிற்கு சென்றுள்ளன
எனினும் எதிர் காலத்தில் யல்லிக்கட்டு போராடடத்தை போன்று ,எவ்வித அமைப்பும் சாராது மக்கள் ஒன்றிணைந்த போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கும் தீவிர ஆலோசனைகளில் உள்ளக
ரீதியாக ஈடுபட்டு வருகின்றமை மேற்படி மைப்புகளுக்கு பெரும் சவாலாக உருமாற போகிறது என்பதை இங்கே அடித்து கூறலாம்
மனைவி மீது அசீட் வீசிய கணவன் – காவல் நிலையத்தில் நடந்த பயங்கரம்
மனைவி மீது அசீட் வீசிய கணவன் – காவல் நிலையத்தில் நடந்த பயங்கரம்
இலங்கை காலி பகுதியில் குடும்ப தகராறு காரணமாக 28 வயதுடைய மனைவி புகார் அளித்த நிலையில் கணவனை
அழைத்து விசாரிக்க போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர் ,அவ்வேளை காவல்நிலையம் வருகை தந்த கணவனை தான் மறைத்து வைத்திருந்த அஸீட்டை எடுத்து மனைவி மீது வீசியுள்ளார்
இந்த தாக்குதலால் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான் நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில்
மனைவி அனுமதிக்க பட்டுளளார் ,இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளன
இந்த தாக்குதலில் காவலர் ஒருவரும் காயமடைந்துள்ளார்
கணவன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
இலங்கைக்கு எதிராக ஐநாவில் வாக்கெடுப்பு
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சில நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை மீதான வாக்கெடுப்பை நாளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வாக்கெடுப்பு ஜெனீவா நேரத்தில் முற்பகல் 9 மணிக்கும்(இலங்கை நேரத்தின் பிராகரம் இன்று பிற்பகல் 1 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை, இன்றைய தினம் (22)
இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான
குறித்த யோசனை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ, மலாவி ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது
மனைவி மகளை வெட்டிய கணவன்- தப்பி ஓட்டம்
மனைவி மகளை வெட்டிய கணவன்- தப்பி ஓட்டம்
வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில்
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்றையதினம் (20) இரவு தனது மகளும், மனைவியும் வீட்டில் இருந்த நிலையில் கணவனால் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த அவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
வாள்வெட்டில் ஈடுபட்ட நபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
பஸ்ஸில் பிட்பொக்கட் திருடனை மடக்கி பிடித்த மக்கள்
பஸ்ஸில் பிட்பொக்கட் திருடனை மடக்கி பிடித்த மக்கள்
திருகோணமலையிலிருந்து கண்டிக்குச் சென்ற பயணிகள் பஸ்ஸில் பிட்பொக்கட் அடித்த ஒருவரை பொது மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
இச்சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூதூர் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரேயே பயணிகள் பிடித்து கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது:
திருகோணமலையிலிருந்து நேற்று (21) மாலை 4.00 மணிக்குச் கண்டிக்குச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ்ஸில் நான்காம் கட்டையிலிருந்து ஏறிய
சந்தேக நபர் பஸ்ஸில் தூங்கிய பிரயாணி ஒருவரின் பணப்பொதியை திருடிய வேளை மற்றொருவர் கண்டு கூக்குரலிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பயணிகள் சந்தேக நபரை பிடித்து கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் தொடர்பாக திருகோணமலை, கந்தளாய் மற்றும் தம்பலாகாமம் போன்ற பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.







