Posted in சினிமா

மீண்டும் இணையும் ‘ரவுடி பேபி’ கூட்டணி

மீண்டும் இணையும் ‘ரவுடி பேபி’ கூட்டணி

நடிகை சாய் பல்லவி ஏற்கனவே ‘மாரி 2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இணையும் ‘ரவுடி பேபி’ கூட்டணி?
சாய் பல்லவி, தனுஷ்


நடிகை சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விராட பருவம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது.

தனுஷ், சாய் பல்லவி

இந்நிலையில், நடிகர் தனுஷ் தெலுங்கில் அறிமுகமாகும் படத்தில், அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில்

தயாராக உள்ள இப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் சேகர் கமுலா இயக்க உள்ளார். நடிகை சாய் பல்லவி ஏற்கனவே ‘மாரி 2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படத்தில்

இடம்பெறும் ரவுடி பேபி பாடலுக்கு இவர்கள் இருவரும் ஆடிய நடனம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது

    Posted in சினிமா

    விவாகரத்துக்குப் பிறகு திருமண நாளில் ஒன்று சேர்ந்த ரஞ்சித் – பிரியா ராமன்

    விவாகரத்துக்குப் பிறகு திருமண நாளில் ஒன்று சேர்ந்த ரஞ்சித் – பிரியா ராமன்

    திரைப்படங்களில் ஒன்றாக நடித்து சின்னத்திரையில் வெவ்வேறு சீரியல்களில் நடித்து வரும் ரஞ்சித், பிரியாராமன் இருவரும் திருமண நாளில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

    விவாகரத்துக்குப் பிறகு திருமண நாளில் ஒன்று சேர்ந்த ரஞ்சித் – பிரியா ராமன்
    ரஞ்சித் – பிரியா ராமன்


    நேசம் புதுசு திரைப்படத்தில் ஜோடியாக நடித்த ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும்

    விவாகரத்து பெற்று பல வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்தனர். தற்போது, இருவரும் நிறைய சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகின்றனர்.

    பிரியா ராமன் – ரஞ்சித்

    இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது திருமண நாளை முன்னிட்டு சமூக வலை தளங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து மாறி மாறி இருவரும் வாழ்த்துக்களை

    கூறிக் கொண்டுள்ளனர். திருமண நாளில் ஒன்று சேர்ந்த இந்த ஜோடியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

    Posted in சினிமா

    பாத்ரூமில் போட்டோ ஷூட் எடுத்த பிகில் நடிகை

    பாத்ரூமில் போட்டோ ஷூட் எடுத்த பிகில் நடிகை

    விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அம்ரிதா ஐயர். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அமிர்தா ஐயரை ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இவர் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

    அந்த வகையில் சமீபத்தில் அவர் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் உட்கார்ந்தவாறு இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

    அம்ரிதா ஐயர்

    மேலும் போட்டோஷூட் எடுக்க இது தான் சரியான இடம் என்று நினைக்கிறேன் என்றும் அவர் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு பல லைக்குகள் குவிந்துள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    அசிட்டை அருந்தியவர் உயிரிழப்பு

    அசிட்டை அருந்தியவர் உயிரிழப்பு

    சாராயமென நினைத்து, லொறியின் பெட்டரி அசிட்டை (அமிலம்) அருந்திய இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக, காலி கராப்பிடிய போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    காலி – படதுவ பூர்வாராம மாவத்தையைச் சேர்ந்த (53 வயது) கராஜில் வேலை செய்யும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

    லொறியின் பெட்டரி அசிட்டை மாற்றுவதற்காக லொறியின் உரிமையாளரும் இன்னும் இருவரையும் அழைத்துக்கொண்டு கராஜ்ஜுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற இவர்கள், சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட சாராய போத்தலையும், அசிட் போத்தளையும் எடுத்துக்கொண்டு வந்துள்ளனர்.

    லொறியின் பெட்டரியை சார்ஜ் செய்துவிட்டு, அவர்கள் வாங்கி வந்த மதுபானத்தை அருந்தியுள்ளனர். இதன்போது எதிர்பாராத விதமாகத் தவறுதலாக அசிட்டை சாராயமென நினைத்து சோடாவுடன் கலந்துள்ளார்கள்.

    இதனை, அருந்திய லொறியின் உரிமையாளர் காலி கராபிடிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார். அசிட்டை அருந்தியதாலேயே இவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    பொலிஸ் அதிகாரி எனக்கூறி பணமோசடி

    பொலிஸ் அதிகாரி எனக்கூறி பணமோசடி

    வீட்டிலுள்ள தொலைபேசி அழைப்பு விடுத்து பணமோசடி செய்யும் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    பொலிஸ் அதிகாரி என தெரிவித்து இவ்வாறு மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் பிரசித்தி பெற்ற பொலிஸ் அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

    Posted in இலங்கை செய்திகள்

    சீன பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

    சீன பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

    இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சுரேஷ் சிரேஷ்ட கேர்ணல் வான் டோங் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவை (ஓய்வு) நேற்று சந்தித்தார்.

    பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த

    விடயங்கள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

    மேலும் இந்த கலந்துரையாடலின்போது, சீன தனது புதிய வின்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளமைக்காக ஜெனரல் குணரத்ன தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

    இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்காரவும் கலந்து கொண்டார்.

    Posted in இலங்கை செய்திகள்

    சட்டத்தை மீறிய 1,390 பேர் கைது

    சட்டத்தை மீறிய 1,390 பேர் கைது

    கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,390 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

    நாடளாவிய ரீதியில் இன்றும் சுற்றி வளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

    Posted in இலங்கை செய்திகள்

    முன்னாள் இராணுவ தளபதி மரணம்

    முன்னாள் இராணுவ தளபதி மரணம்

    இலங்கை இராணுவத்தில் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் மிகவும் பாராட்டப்பட்ட இராணுவத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், இராணுவ பதவி நிலை பிரதானியுமான (ஓய்வு) ஜெனரல் சிரில் ரணதுங்க புதன்கிழமை (16) தனது 91 வயதில் இயற்கை எய்தினார்.

    1980 களில் இலங்கை இராணுவ படைப்பிரிவின் படைத் தளபதி , கூட்டு நடவடிக்கைக் கட்டளை மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானி ஆகிய தலைமை பொறுப்புக்களை வகித்த அவர், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூகினியா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக பணியாற்றியிருந்ததுடன், சேர் ஜோன் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

    அன்னாருக்கான இறுதி சடங்குகள் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக வியாழக்கிழமை (17) நண்பகல் 12.30 மணிக்கு பொரளை பொது மயானத்தில், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இடம்பெற்றது. அவரது குடும்பத்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய மேற்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

    தீபகற்பத்தில் குருநகர் பகுதியில் 1971 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போர் சூழல் உக்கிரமடைவதை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைளில் அவர் பெருமளவில் பங்களிப்பு செய்திருந்த சிரேஷ்ட அதிகாரியான அவர், விஸிஸ்ட சேவா விபூசணய பதக்கம், இராணுவ அலங்காரம் உள்ளிட்ட பல பதக்கங்கள் தாய்நாட்டிற்கான சேவைக்காக வழங்கப்பட்டுள்ளன.

    1977 ஆம் ஆண்டு ஜனவரியில் அவர் இராணுவ தலைமையகத்தின் இராணுவ செயலாளராகவும், 1978 ஆம் ஆண்டு ஜனவரியில் பனாகொடை மேற்கு படைத்தளத்தின் கட்டளை தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். 1978 பெப்ரவரியில் அவர் பிரிகேடியர் பதவிக்கு நிலை உயர்த்தப்பட்டார். 1980 ஜனவரியில் அவர் மேற்கு படைகளின் கட்டளைத் தளபதியாக பணியாற்றியதோடு உதவிப் படைகளின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். அத்தோடு இராணுவத்தினரின் எதிர்காலத்திற்கான வைப்பு நிதியத்தை உருவாக்குவதற்கும் பங்களிப்புச் செய்திருந்தார்.

    1982 பெப்ரவரியில் அவர் இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானியாகவும், யாழ். பாதுகாப்பு படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். குறித்த காலத்தில் போர்க்குணம் மிகுந்த தமிழ் பகுதியான குருநகரில் சேவையாற்றினார். அப்பகுதியில் இராணுவ புலனாய்வு துறையை நிறுவி ஊக்குவித்த அவர் , 1983 இராணுவத்திலிருத்து ஓய்வு பெற்றார்.

    ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஜெனரல் ரணதுங்க விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவராக பணியாற்றியிருந்ததுடன், ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களினால் 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதுடன், அங்கு பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவு விவகாரங்களுக்கு பொறுப்பாகவும் செயற்பட்டார். பின்னர் அவர் 1993 ஆண்டு பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து விலகினார்.

    Posted in Uncategorized

    200 வருட கட்டிடம் இடிந்து வீழ்ந்தது

    200 வருட கட்டிடம் இடிந்து வீழ்ந்தது

    இலங்கையில் இருநூறு வருடம் பழமை வாய்ந்த புகழ்பூத்த கட்டடம் ஒன்று கடந்த இரவு இடிந்து வீழ்ந்துள்ளது

    Soyza building, located on Malay Street in Slave Island மேற்படி கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு பணியினர் ஈடுபட்டுள்ளனர்

      Posted in இலங்கை செய்திகள்

      மிரட்டும் கொரானா ஒரே நாளில் 51 பேர் மரணம்

      மிரட்டும் கொரானா ஒரே நாளில் 51 பேர் மரணம்

      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் சுமார் 51 பேர் பலியாகியுள்ளனர்

      நோயினை தடுப்பதற்குபயண கட்டு பாடுகள் விதிக்க பட்டுள்ள பொழுதும் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை

        Posted in சினிமா

        தற்கொலை மிரட்டல் விடுத்த மீரா மிதுன்

        தற்கொலை மிரட்டல் விடுத்த மீரா மிதுன்

        தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவரும், பிக்பாஸ் போட்டியில் பங்கு பெற்றவருமான மீரா மிதுன் தற்கொலை செய்ய இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

        தற்கொலை மிரட்டல் விடுத்த மீரா மிதுன்
        மீரா மிதுன்


        தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

        இதுகுறித்து மீராமிதுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நான் ஒரு அமைப்புக்காக வேலை பார்த்து பிரபலப்படுத்தினேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த அமைப்பில் இருந்து விலகினேன். அதை நடத்தியவர் செய்த அநீதியால் அமைப்பில் இருந்து விலகினேன்.

        அவர் எனது பெயரை கெடுத்து, போலி வழக்குகள் தொடர்ந்தார். அதிகாரத்தை வைத்து தொல்லைகள் கொடுத்தார். அதில் இருந்து மீண்டேன். ஆனாலும் தினமும் என்னை பின் தொடர்ந்து, தொல்லைகள் கொடுக்கிறார்.

        மீரா மிதுன்

        3 வருடங்களாக தொல்லையை அனுபவிக்கிறேன். இவரால் மன அமைதி போய் விட்டது. எனவே தற்கொலைதான் எனக்கு இருக்கும் ஒரே முடிவு. எனது தற்கொலைக்கு அவர்தான் முழு காரணம். சுஷாந்த் சிங் போன்று நான் இறந்த பிறகு அவரை தண்டிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்

        Posted in Uncategorized

        அதிக தொகைக்கு விற்கப்பட்ட நயன்தாரா படம்

        அதிக தொகைக்கு விற்கப்பட்ட நயன்தாரா படம்

        கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், நயன்தாரா நடித்துள்ள படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

        ஓடிடி-யில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட நயன்தாரா படம்
        நயன்தாரா


        நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தை ‘அவள்’ பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கி உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ரவுடி

        பிக்சர்ஸ் சார்பில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரித்துள்ளார்கள். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

        கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். அதன்படி இப்படத்தை வருகிற ஜூலை 9-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

        நெற்றிக்கண் படத்தின் போஸ்டர்
        நெற்றிக்கண் படத்தின் போஸ்டர்

        நடிகை நயன்தாராவின் சம்பளம் தவிர்த்து இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.5 கோடியாம். ஆனால் தற்போது இப்படத்தின் ஓடிடி உரிமை ரூ.25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி

        உள்ளது. இதன்மூலம் ரிலீசுக்கு முன்பாகவே ரூ.20 கோடி வரை லாபம் சம்பாதித்துள்ளனர். நயன்தாரா நடித்த படங்களில் அதிக தொகைக்கு விற்கபட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

        Posted in Uncategorized

        கொரோனாவுக்கு மகனை பறிகொடுத்த நடிகை

        கொரோனாவுக்கு மகனை பறிகொடுத்த நடிகை

        தமிழ் நடிகை ஒருவரின் மகன் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து அவரது கணவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

        கொரோனாவுக்கு மகனை பறிகொடுத்த நடிகை… தீவிர சிகிச்சை பிரிவில் கணவர்
        நடிகை கவிதா


        கடந்த சில மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழ் திரையுலக பிரபலங்கள் சிலர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் தமிழ் திரையுலகின்

        நடிகைகளில் ஒருவரான கவிதா என்பவரின் மகன் சாய் ரூப் என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

        மேலும் கவிதாவின் கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். கொரோனாவால் மகனை பறிகொடுத்த நடிகை

        கவிதாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை உலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

        கவிதா
        நடிகை கவிதா

        நடிகை கவிதா, ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், பாண்டவர் பூமி, அவள் வருவாளா

        உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் கங்கா, நந்தினி உள்பட ஒருசில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

        Posted in இலங்கை செய்திகள்

        அமைச்சர் டக்ளசுக்கு பாராட்டையும், கவலையையும், கோரிக்கையையும் ஒருசேர தெரிவிக்கிறேன் மனோ

        அமைச்சர் டக்ளசுக்கு பாராட்டையும், கவலையையும், கோரிக்கையையும்  ஒருசேர தெரிவிக்கிறேன்

        • தமுகூ தலைவர் மனோ கணேசன் 

        13ம் திருத்தத்தின்படி மாகாணசபைகளுக்கு உரித்தான மருத்துவமனைகளை மத்திய அரசு சுவீகரிக்கும் தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொண்டமை அரசியலமைப்புக்கு முரணானது என்பதை அமைச்சரவையில் சுட்டிக்காட்டினேன் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா

        கூறியுள்ளமை பாராட்டுக்குரியது. ஆனால், அதற்கான காரணமாக தமிழ் மக்கள் தனது கட்சிக்கு வாக்களித்து, தனக்கு அரசியல் பலத்தை தராமையே எனவும் அவர் மேலும் கூறியுள்ளமை கவலைக்குரியது.

        உண்மையில் ராஜபக்ச அரசின் “அதிகார பரவலாக்கலுக்கு” எதிரான பெருந்தேசியவாத நிலைப்பாடே இதற்கு காரணம். எனவே அமைச்சர் இதுபற்றி தனது அரசுக்குள்ளே விடாமல் போராட வேண்டும். அவருக்கு அரசுக்குள்ளே இருக்கும் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள், இது தொடர்பில் ஆதரவளிக்க வேண்டும் இது எம் கோரிக்கை என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

        இதுபற்றி மனோ எம்பி மேலும் விவரித்து கூறியுள்ளதாவது,   

        அமைச்சரவை தீர்மானத்தின்படி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளை, மத்திய அரசு சுவீகரிப்பது தொடர்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின்படி, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல்  மாகாண வைத்தியசாலைகளும் பறிக்கப்படும். ஆகவே இவை பற்றி வடக்கில், கிழக்கில், மலையகத்தில் இருந்து அரசுக்குள் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் மற்றும் சமகாலத்தில் எதிரணியில் இருந்து அரசு பக்கம் சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்பீக்களும் தமது எதிர்ப்புகளை காட்ட வேண்டும்.      

        உண்மையில், 13ம் திருத்தத்தை முழுமையாக அமுல் செயயும்படியே, இந்திய அரசாங்கம், ஐநா மனித உரிமை ஆணையம், ஐரோப்பிய பாராளுமன்றம் என்பவை கோதாபய ராஜபக்ச அரசாங்கத்தை திரும்ப, திரும்ப கூறுகின்றன.

        13ம் திருத்தத்தை முழுக்க அமுல் செய்வதை நிறுத்தியது ஒருபுறமிருக்க, இப்போது இருப்பதையும் பறிக்கும் செயன்முறையை இந்த அரசு மேற்கொள்கிறது. இது நிச்சயமாக, இந்திய அரசுடனான உறவு, செப்டம்பரில் அடுத்து வரும் ஐநா மனித உரிமை ஆணையரின் வாய்மொழி அறிக்கை, ஐரோப்பிய பாராளுமன்ற ஜிஎஸ்பி+ விவகாரம் ஆகியவற்றில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அமைச்சர் தனது ஜனாதிபதிக்கு எடுத்து கூற வேண்டும். பார்க்கப்போனால், இந்த ஜனாதிபதிக்கு உள்நாட்டு அரசியல் சட்டமும் தெரியவில்லை. இலங்கை பற்றிய வெளிநாட்டு நகர்வுகளும் தெரியவில்லை போல் எமக்கு தெரிகிறது.

        13ம் திருத்தத்தின்படி மாகாணசபைகளுக்கு உரித்தான மருத்துவமனைகளை மத்திய அரசு சுவீகரிக்கும் தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொண்டமை அரசியலமைப்புக்கு முரணானது என்பதை அமைச்சரவையில் சுட்டிக்காட்டினேன் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறியுள்ளமை பாராட்டுக்குரியது.

        ஆனால், அதற்கான காரணமாக தமிழ் மக்கள் தனது கட்சிக்கு வாக்களித்து, தனக்கு அரசியல் பலத்தை தராமையே எனவும், அது தமிழ் மக்களின் தீர்க்கதரிசனமற்ற தீர்மானமே எனவும் அவர் மேலும் கூறியுள்ளமை கவலைக்குரியது.

        உண்மையில் ராஜபக்ச அரசின் “அதிகார பரவலாக்கலுக்கு” எதிரான பெருந்தேசியவாத நிலைப்பாடே இதற்கு காரணம். எனவே அமைச்சர் இதுபற்றி தனது அரசுக்குள்ளே விடாமல் போராட வேண்டும். அவருக்கு அரசுகுள்ளே இருக்கும் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள்,  இது தொடர்பில் ஆதரவளிக்க வேண்டும்.

        இந்நாட்டில், அதிகார பரவலுக்காக தமிழ் மக்கள் சிந்திய இரத்தம், கொடுத்த விலை என்பவை சில அமைச்சரவை தீர்மானங்களால் சுலபமாக பறி போக கூடாது. இந்த உண்மை, அரசில் இருக்கும் தமிழ், முஸ்லிம் முழு அமைச்சர்கள், அரை அமைச்சர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள், எம்பீக்கள் ஆகியோருக்கு தெரிய வேண்டும். 

        Posted in Uncategorized

        சிறுமியை விபச்சாரத்திற்கு விற்ற நபர் கைது

        சிறுமியை விபச்சாரத்திற்கு விற்ற நபர் கைது

        கல்கிஸை பகுதியில், இணையத்தை பயன்படுத்தி 15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்ய சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

        சம்பம் தொடர்பில் முன்னதாக சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 26 வயது பெண் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

        குறித்த சிறுமி சுமார் 04 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டு பல்வேறு நபர்களுக்கு பாலியல் நடவடிக்கைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

        அவ்வாறு சிறுமியை குறித்த நபர்களின் இடங்களுக்கு அழைத்துச்சென்றமை தொடர்பில் ஜம்புரலிய மடபாத பகுதியை சேர்ந்த பெண் நேற்று (16) கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

        அத்துடன், குறித்த பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

          Posted in Uncategorized

          இலங்கையில் நில நடுக்கம் – பீதியில் மக்கள்

          இலங்கையில் நில நடுக்கம் – பீதியில் மக்கள்

          விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

          நேற்று (16) மாலை விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் 1.94 அளவில் சிறய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

          எவ்வாறாயினும் இது தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை என புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது

            Posted in Uncategorized

            1.561 பேர் கைது – தொடரும் வேட்டை

            1.561 பேர் கைது – தொடரும் வேட்டை

            கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

            சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான

            குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

            Posted in Uncategorized

            யாழில் எறிகணை மீட்பு – தப்பிய மக்கள்

            யாழில் எறிகணை மீட்பு – தப்பிய மக்கள்

            யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கலவையே ஒன்றுக்குள் இருந்து எறிகணை ஒன்று மீட்க

            பட்டுள்ளது ,துப்பரவு பணியாளர்கள் மேற்கொண்ட சுத்த நடவடிக்கையின் பொழுது அதற்குள் இருந்து இந்த குண்டு மீட்க பட்டுள்ளது

            Posted in Uncategorized

            நாயாறு – நந்திக்கடல் – காக்கைதீவு என நாடெங்கும் அபிவிருத்தி: அமைச்சர் டக்ளஸ்

            நாயாறு – நந்திக்கடல் – காக்கைதீவு என நாடெங்கும் அபிவிருத்தி: அமைச்சர் டக்ளஸ்

            நந்திக்கடல், நாயாறு களப்புக்கின் புனரமைப்பு பணிகளை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் வோனந்தா, யாழ். காக்கைதீவு கடல் நீரேரியை தூர்வாருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

            நடளாவிய ரீதியில் காணப்படுகின்ற களப்புக்களை புனரமைக்கும் வேலைத் திட்டம் தொடர்பாக இடம்பெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சரினால் மேற்குறித்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

            நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்ற சுமார் ஒன்பது பிரதான களப்புக்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நக்டா, நாரா மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றிற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

            இந்நிலையில், அவற்றின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராயும் நோக்கில் இன்றைய கூட்டம் நடைபெற்றிருந்தது.

            இதன்போது, முல்லைத்தீவு, நந்திக்கடலை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்த அதிகாரிகள், நந்திக்கடல் அபிவிருத்தி திட்டம் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

            அதேபோன்று, நாயாறு களப்பு அபிவிருத்திக்கான விலைமனுக் கோரல் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், விலைமனுக் கோரல் தொடர்பான விளம்பரங்களை அமைச்சின் இணையத் தளத்தில் தகுதியானவர்களை தெரிவு செய்து வேலைகளை ஆரம்பிக்குமாறு தெரிவித்தார்.

            அதேபோன்று, ரெக்கவ களப்பு அபிவிருத்தி திட்டம் மதிப்பீட்டுக்காக பிரதேச சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அருகம்பே களப்பு தொடர்பான அபிவிருத்தி திட்டங்கள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தாகவும் கடற்றொழில் அமைச்சருக்கு தெரிவித்த அதிகாரிகள், அனுமதி கிடைத்தவுடன் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்க முடியுமெனவும் சுட்டிக்காட்டினர்.

            இந்நிலையில், அம்பாறை மாவட்டத்திற்குரிய பாணம மற்றும் பாணகல களப்புக்களின் அபிவிருத்திக்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும் புத்தளம், சிலாபம், முந்தல் ஆகிய களப்புக்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சர் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார்.

            மேலும், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடலட்டை பண்ணைகளை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பூநகரி களப்புக்களில் இறால் வளர்ப்பு தொடங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நக்டா நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

            அத்துடன், யாழ். காக்கைதீவு களப்பு தூர் வாரப்பட வேண்டுமென தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் அதற்கான நிதியை திரட்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

            மேலும், நடெங்கிலுமுள்ள பிரதான 09 களப்புக்களின் அபிவிருத்திக்கான திட்டங்களையும் இவ்வருட இறுதிக்குள் வகுத்து அப்பணிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

            இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, நக்டா நிறுவனத்தின் தலைவர் நிமல் சந்திரரத்ன, நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரத்னராஜா உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

            Posted in Uncategorized

            இலங்கை சீனா வர்த்தக ஒப்பந்தம் – கொதிக்கும் இந்தியா

            இலங்கை சீனா வர்த்தக ஒப்பந்தம் – கொதிக்கும் இந்தியா

            இலங்கை வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு அமைக்கபட்டுள்ளது.

            சீனாவிலுள்ள இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹோனவின் தலைமையில் இந்த அமைப்பு பேஜீங் நகரில் இலங்கை தூதரக அலவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

            இரு நாடுகளுக்கிடையில் பொருளாதார வர்த்தக தொடர்புகளை விரிவு படுத்துவதே இதன் நோக்கமாகும்.

            இந்த அமைப்பின் ஊடாக இலங்கை உற்த்தி பொருட்களை சீன வர்த்தக சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு வாய்ப்பு கிட்டும் என்று சீனாவிலுள்ள இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹோன தெரிவித்தார்.