Author: நிருபர் காவலன்
கொரோனாவில் இருந்து மீண்ட சமீரா ரெட்டி
கொரோனாவில் இருந்து மீண்ட சமீரா ரெட்டி
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு
சிகிச்சை பெற்று வந்த நடிகை சமீரா ரெட்டி குணமடைந்துள்ளார்.
கொரோனாவில் இருந்து மீண்ட சமீரா ரெட்டி
சமீரா ரெட்டி
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை,
அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். ஆந்திர
மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சமீரா ரெட்டி
சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனிமைப்
படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த சமீரா ரெட்டி, தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பதாக கூறி இருக்கிறார்.
அன்பை வாங்கிக்கோங்க… பிரியா பவானி
அன்பை வாங்கிக்கோங்க… பிரியா பவானி
யோகி பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மண்டேலா’. ஒரு முடிவெட்டும் தொழிலாளியை அசிங்கமாக நடத்தும் கிராமம். ஆனால், அவனுக்கு ஓட்டு இருக்கிறது என
தெரிந்தவுடன், அந்த ஒரு ஓட்டுக்காக அவனை என்னவெல்லாம் செய்கிறார்கள் என இந்திய அரசியலையே ஒரு திரைப்படத்தில் காட்டியிருந்தனர்.
இப்படத்தை மடோனா அஸ்வின் எனும் இளம் இயக்குனர் இயக்கியிருந்தார். இப்படம் திரை
விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. யோகிபாபுவின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர்.
பிரியா பவானி சங்கர் – யோகி பாபு
இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பக்கத்தில் ‘யோசிச்சு பார்த்தா கடந்த சில பல நாட்கள்ல என் கண்ணில் கருத்தில் பதிந்த ஒரே நல்ல விஷயம்
‘மண்டேலா’. மடோனா அஸ்வின், யோகிபாபு அண்ணா.. என் அன்பை வாங்கிக்கோங்க. அவ்ளோதான். வேற ஒன்னுமில்லை. நன்றி வணக்கம்’ என பதிவிட்டுள்ளார்.
100கிலோ எடையுள்ள -100 வயது மீன் சிக்கியது – உலக சாதனை
100கிலோ எடையுள்ள -100 வயது மீன் சிக்கியது – உலக சாதனை
அமெரிக்காவில் மீனவர் ஒருவரது வலையில் நூறு வயதுடைய மீன் ஒன்று சிக்கியுள்ளது ,இதன்
எடை சுமார் 240-pound (108.8 kilograms) 7 feet (2.1 meters) ஏழு அடி என தெரிவிக்க பட்டுள்ளது
இந்த மீன் உலக சாதனை படைத்துள்ளது ,கடல் வாழ் நிபுணர்கள் நடத்திய ஆய்வின் பொழுது மேற்படி விடயம் அம்பலமாகியுள்ளது
மேற்படி மீனின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
இஸ்ரேலில் சன நெரிசலில் சிக்கி 45 பேர் மரணம் – பலர் காயம்
இஸ்ரேலில் சன நெரிசலில் சிக்கி 45 பேர் மரணம் – பலர் காயம்
இஸ்ரேல் நாட்டில் இடம்பெற்ற மரண ,மத சடங்கு நினைவு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட
மக்களில் நெரிசல் சிக்கி 45 பேர்மரணமாகியுள்ளனர் ,இவ்வாறு மரண மானவர்களில் நான்கு பேர் அமெரிக்கர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் ,மேற்படி சம்பவம் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ,பாதுகாப்பு ஒழுங்கு படுத்துனர்கள் மீது விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
பொலிசார் மீது ஐஸ் எஸ் தாக்குதல் – ஐவர் மரணம்
பொலிசார் மீது ஐஸ் எஸ் தாக்குதல் – ஐவர் மரணம்
ஈராக்கின் கிக்ரித் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஈராக்கிய காவல் துறையினரை
இலக்கு வைத்து ஐஸ் எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை சிப்பாய் ஒருவர்
மரணமாகியுள்ளார் ,மேலும் பல படுகாயமடைந்துள்ளனர்
இந்த தாக்குதலில் ஐந்து அப்பாவி மக்களும் பலியாகியுள்ளனர்
தாக்குதலை அடுத்து குறித்த பகுதி சுற்றிவளைக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது
பாலம் உடைந்து வீழ்ந்து 40 பேர் மரணம் -150 பேர் காயம் – இஸ்ரேல் சதி
பாலம் உடைந்து வீழ்ந்து 40 பேர் மரணம் -150 பேர் காயம் – இஸ்ரேல் சதி
பலஸ்தீன பகுதியில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் நாற்பது பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் நூற்றி ஐம்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்
பாதிக்க பட்டவர்கள் அவசர காவு வண்டிகள் மூலம் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .,
சிறந்த தாக்குதல் இலக்கு என இஸ்ரேல் அதிபர் வாழ்த்தியுள்ளார் ,அவ்வாறு எனின் இது இஸ்ரேலின் திட்டமிடப்
பட்ட சதியாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது .கட்டுமான பணியில் ஈடுபட்ட முகவர்கள்
இஸ்ரேலின் உளவாளிகள் எனபதான சந்தேகம் வலுத்துள்ளது ,விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது
வளைகுடா கடலில் தீவிர கண் காணிப்பில் ஈரானிய கடல் படை-தயாராகும் தாக்குதல்
வளைகுடா கடலில் தீவிர கண் காணிப்பில் ஈரானிய கடல் படை-தயாராகும் தாக்குதல்
வளைகுடா கடல் பகுதி ஊடாக எதிரிகள் தமது நாட்டுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்த கூடும் என்பதால் ஈரானிய புரட்சி காவல் கடற்படையினர் தீவிர ரோந்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்
இருபத்தி நான்கு மாணித்தியாலமும் தீவிர கண் காணிப்புக்குள் குறித்த கரையோர கடல் பகுதி உட்படுத்த பட்டுள்ளன
அதி நவீன ஏவுகணைகள் தாங்கிய படகுகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன ,
கடல் ரோந்துக்கும் ,
சண்டைக்கும் வழி மறிப்பிற்கும் என பத்து வகையான விசேட படகுகளை தயாரித்து களத்தில் விட்டுள்ளது ஈரானிய கடல் படை ,இவற்றில் இலகுரக நீர்மூழ்கிகளும் அடங்கும்
அமெரிக்கா ,இஸ்ரேல் நுழைந்து விடலாம் என முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தரை ,வான் பாதுகாப்பு ,கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது
அப்படி என்றால் இஸ்ரேல் ,அமெரிக்கா கடல்வழியாக பெரும் தாக்குதல்கள் நடத்த முற்
படுகின்றனர் என்பதான உளவு தகவல் கிடைக்க பெற்றதன் அடிப்படையில் இந்த பாதுகாப்பு இறுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை ஊகிக்கலாம்
- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்
- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
- வீட்டுவசதிப் போராட்டங்களைத் தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்பட காரணமும்
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்பட காரணமும்
பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்பட காரணம் என்ன? இவற்றை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்பட காரணமும், தடுக்கும் வழிமுறையும்
வெள்ளைப்படுதல் பிரச்சினை
இன்றைய சூழலில் 15 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனை வெள்ளைப்படுதல் ஆகும். பருவம் அடைந்த பெண்களின் மாதவிலக்கு நாட்களுக்கு முன்னதாகவும், கருவுற்றிருக்கும் சமயத்திலும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுகிறது.
இது பெரும் நோயாக இல்லாவிட்டாலும் சரிவரக்கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட ஏற்படக்கூடும்.
எனவே இந்த பிரச்சினை ஏற்பட காரணம் என்ன? இவற்றை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
தவறான உணவுப்பழக்கங்கள், கெட்டுப்போன உணவு பொருட்களை உண்ணுதல், சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிதல், சுயஇன்பம் பழக்கம், மாதவிடாயை தூண்டும் மருந்துகளை உண்ணுதல், ஊசைச்சதை, ரத்தசோகை, அதிக உடல் சூடு, உடலுறவில் அடிக்கடி ஈடுபடுதல் ஆகியவற்றால் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
மேலும் கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல், தூக்கமின்மை போன்றவையும் காரணமாக இருக்கக்கூடும்.
சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழிப்பது, பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்காதது ஆகியவையும் முக்கிய காரணங்கள்.
இவற்றை தடுக்க என்ன செய்யலாம்?
- மாதவிடாய் காலத்திலும், உடலுறவுக்கு பின்பும் பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிப்பது முக்கியம்.
- பருத்தி துணிகளால் ஆன உள்ளாடைகளை அணிவது சிறந்தது.
- நீண்ட நாட்களாக கருத்தடை சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துபவர்கள் மருந்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
வீட்டு வைத்தியம் உண்டா?
- கீழா நெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து 7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
- உளுந்து, பார்லி இரண்டையும் தலா 100 கிராம் எடுத்து கொண்டு மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா 10 கிராம் அளவு சேர்த்து பொடியாக அரைத்து கஞ்சி காய்ச்சி தினமும் ஒருமுறை குடித்து வரலாம்.
- தினமும் எலுமிச்சை சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய ஏதேனும் ஒன்றின் ஜூஸ் அருந்தலாம். அவற்றில் உள்ள வைட்டமின் டி, ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை பாக்டீரியா வளர்ச்சியை தடுப்பதுடன், அந்தரங்க உறுப்பில் ஏற்படும் துர்நாற்றதையும் அகற்றி விடும்.
வில்லன் நடிகரை புகழ்ந்த சேரன்
வில்லன் நடிகரை புகழ்ந்த சேரன்
நந்தா பெரியசாமி இயக்கத்தில் சேரன் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு.
இதில் சேரனுடன் சௌந்தரராஜா, செல்லா, முனிஸ்ராஜ், சூசன், ஜானகி, சிந்து, சுபா, மொட்டை ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
டேனியல் பாலாஜி
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சேரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில்,
ஒரு குளோஷப் ஷாட் எடுக்கப்பட எத்தனை உழைப்பு.. எவ்வளவு பேருக்கு நடுவில் ஒரு நடிகன் தன் உணர்ச்சிகளை
முகத்தில் எந்த பதட்டமுமின்றி காட்டவேண்டும். இங்கே டேனியல் பாலாஜி.. நான் ரசிக்கும் வளரும் கலைஞன்.. கூடவே நமோநாராயணன்.. என்று பதிவு செய்துள்ளார்
சஞ்சிதா ஷெட்டி படக்குழுவினருக்கு அபராதம்.
சஞ்சிதா ஷெட்டி படக்குழுவினருக்கு அபராதம்.
தமிழில் சூது கவ்வும் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இவர் தற்போது பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக
அறிமுகமாகும் அழகிய கண்ணே படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சீனு ராமசாமியின் துணை இயக்குனர் விஜயகுமார் இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கோணப்பட்டி கிராமத்தில் நடந்து வருகிறது. இதில் கிராமத்து மக்களும் கலந்து கொள்ள 100க்கும் மேற்பட்டவர்களை கொண்டு
படப்பிடிப்பு நடந்தது. மேலும் கிராம மக்கள் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க கூடியிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொரோனா தடுப்பு குழுவினர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றனர்.
அழகிய கண்ணே
குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாததால் படப்பிடிப்பு குழுவினருக்கு தடுப்பு பிரிவினர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்தவும்
அனுமதிக்கவில்லை. இதனால் படப்பிடிப்பை பாதியிலேயே ரத்து செய்து விட்டு படப்பிடிப்பு குழுவினர் கிளம்பிச் சென்றனர்.
ஸ்ருதி ஹாசனின் மாஸ்க் ஸ்டைல்
ஸ்ருதி ஹாசனின் மாஸ்க் ஸ்டைல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசனின் புதிய மாஸ்க் ஸ்டைலுக்கு பாராட்டுகளையும், லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.
ஸ்ருதி ஹாசனின் மாஸ்க் ஸ்டைல்… குவியும் லைக்குகள்
ஸ்ருதி ஹாசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர்
ஹிட்டாகியுள்ளது. தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
ஸ்ருதி ஹாசன்
நடிப்பு, இசையைத் தவிர சமூகப் பொறுப்புணர்வோடு செயல்படும் நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.
அந்தப் புகைப்படத்தில் ஒரு ஸ்டைலான மாஸ்க்கை நடிகை ஸ்ருதிஹாசன் அணிந்துள்ளார். அந்தப் புகைப்படத்தின் கேப்ஷனாக தமிழ் பொண்ணு அணிந்து இருக்கும் மாஸ்க் எனவும்
குறிப்பிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் லைக்குகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறார்கள்
மோதி சிதறிய அம்புலன்ஸ் – திகில் காணொளி
மோதி சிதறிய அம்புலன்ஸ் – திகில் காணொளி
அவசர காவு வண்டி ஒன்று நோயாளாரை காவிய படி வேகமாக செல்கிறது ,திடீரென டிராக்
ஒன்றுடன் மோதி சிதற பதற வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன
ஒருவரை காப்பாற்ற சென்ற அவசர காவு வண்டிக்கு நடந்துள்ள இந்த துயரம் நெஞ்சை பதற
வைக்கிறது அல்லவா ..?
An ambulance on the opposite side was rushing to answer a call on the Yuzhnoberezhnoye highway, but the foreign car did not give way. The driver of the Audi was killed and the three doctors in the ambulance were taken to the hospital.
பிரிட்டனில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் கார்கள் திருட்டு – வீடியோ
பிரிட்டனில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் கார்கள் திருட்டு – வீடியோ
பிரிட்டனில் ஆண்டு ஒன்றுக்கு சுமார்ஒரு லட்சம் கார்கள் திருட படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
குற்றங்களை தடுக்கும் விசேட போலீஸ் பிரிவினர் மேற்கொண்ட குற்ற தடுப்பு நடவடிக்கையின்
காட்சிகள் படமாக பட்டு அவை வெளியிட பட்டுள்ளன
இந்த குற்றங்களை நீங்களும் பாருங்கள்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – ஏழு பேர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – ஏழு பேர் மரணம்
அமெரிக்கா Jacksonville, Florida.பகுதியில் இலகுரக பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து
நொறுங்கியதில் அதில் பயணித்த ஏழுபேர் மரணமாகியுள்ளனர்
இந்த விமான விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,அமெரிக்காவில் இது
போன்ற விமான விபத்துக்கள் சமீப கலங்களில் அதிகரித்து காண படுகிறது
இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது
அமெரிக்கா விமான தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை -சேதம் மூடி மறைப்பு
அமெரிக்கா விமான தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை -சேதம் மூடி மறைப்பு
ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் முதல்தர விமான தளங்களில் ஒன்றாக விளங்கும் Balad தளம் மீது, ஆள் இல்லாத
உளவு விமானம் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது ,இதன் பொழுது அங்கு பெரும் வெடி சத்தங்கள் கேட்டதாகவும்
,இழப்பு பலமாக இருக்கலாம் என நேரில் கண்ட சாட்சிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்
,எனினும் அமெரிக்கா இராணுவம் தமது இழப்பு தொடர்பில் எதனையும் இதுவரை வெளியிடவில்லை
வளை குடா கடலில் அமெரிக்கா போர் கப்பலை துரத்திய ஈரானிய சண்டை படகுகள் முற்றுகை
நடந்து 24 மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
மேலும் மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் முற்றாக விலகும் வரை தமது
பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்தமை கவனிக்க தக்கது
- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்
- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
- வீட்டுவசதிப் போராட்டங்களைத் தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
வெடித்து பறக்கும் ஏவுகணை – அதிரும் போர் களம்
வெடித்து பறக்கும் ஏவுகணை – அதிரும் போர் களம்
சிரியாவின் அலெப்போ பகுதியில் சிரியா அரச இராணுவத்திற்கும் கிளர்ச்சி படைகளுக்கும்
இடையில் பரஸ்பர பல்குழல் எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன
இந்த தாக்குதலில் கிளர்ச்சி படைகளுக்கு கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது
பத்து ஆண்டுகளை கடந்து தொடரும் சிரியாவின் யுத்தத்தில் ,இதுவரை நான்கு லட்சத்திற்கு
அதிகமான மக்கள் பலியாகியும் ,முப்பது லட்சம் பேருக்கு மேற்பட்டவர்கள் அகதிகளாக இடம் பெயரந்துள்ளமை குறிப்பிட தக்கது
ஈரான் ஆதரவு இராணுவ தளபதி – இஸ்ரேலினால் படுகொலை
ஈரான் ஆதரவு இராணுவ தளபதி – இஸ்ரேலினால் படுகொலை
சிரியா ஈராக் எல்லையில் தளம் அமைத்து போராடி வரும் ஈரானின் ஆதரவு வெளிநாட்டு முக்கிய
இராணுவ தளபதி உள்ளிட்ட ஐவர் இஸ்ரேல் உளவு விமானம் நடத்திய தாக்குதலில் படுகொலைசெய்ய பட்டுள்ளார்
இவர் தங்கி இருந்த வீட்டின் அருகில் டிராக்கில் சென்று கொண்டிருந்த பொழுது மேற்படி ஏவுகணை
தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,அதில் ஜீப் வண்டி சம்பவ இடத்தில சிதறியுள்ளது ,அதில் பயணித்த
இவர் உள்ளிட்ட ஐந்து சமூக முக்கிய இராணுவ சிப்பாய்களும் படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஈரானின் முக்கிய தளபதிபதிகளை இவ்விதமே இஸ்ரேல் படு கொலை செய்தமை இங்கே குறிப்பிட தக்கது
கார் குண்டு தாக்குதலில் 11 பேர் மரணம்
கார் குண்டு தாக்குதலில் 11 பேர் மரணம்
சோமாலியாவின் மத்திய சிறைச்சாலை நுழைவாயில் அருகில் கார் குண்டு தாக்குதல் இடம்
பெற்றுள்ளது ,இந்த தாக்குதலில் பதினொரு அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது
எனினும் இதுவரை இந்த குண்டு தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை
குண்டு தாக்குதலை அடுத்து குறித்த பகுதி தீவிர இராணுவ சோதனை மற்றும் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது
தாயுடன் இருக்கும் சத்யராஜ்… வைரலாகும் புகைப்படம்
தாயுடன் இருக்கும் சத்யராஜ்… வைரலாகும் புகைப்படம்
ல படங்களில் நடித்த நடிகர் சத்யராஜ் தனது தாயுடன் இருக்கும் அரிதான புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் நக்கல், நய்யாண்டி கொண்ட கதாநாயக வேடங்களில் நடிக்க சத்யராஜை விட்டால் சிறப்பான
நடிகர் வேறு யாரும் இல்லை. ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களைக் குறைத்துக்கொண்டு குணச்சித்திர வேடங்களில் நடித்து இப்போதும் பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார்.
தாயுடன் சத்யராஜ்
சத்யராஜ் எப்போதுமே தனது குடும்பத்தினரை தனது புகழ் வெளிச்சத்துக்கு கொண்டுவர விரும்பமாட்டார்.
இந்நிலையில் இப்போது அவர் தனது 90 வயது அம்மாவுடன் இருக்கும் மிகவும் அரிதான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.
பெற்றோருக்கு கொரோனா… உதவி கேட்கும் நடிகை
பெற்றோருக்கு கொரோனா… உதவி கேட்கும் நடிகை
பிரபல தமிழ் நடிகை ஒருவரின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து தனது சமூக வலைதளம் மூலம் உதவி கேட்டுள்ளார்.
பெற்றோருக்கு கொரோனா… உதவி கேட்கும் நடிகை
சம்யுக்தா ஹெக்டே
ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ படத்தில் நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவருடைய பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தனது சமூக வலைத்தளத்தில்
தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைத்தள பக்கத்தில் தனது தந்தைக்கு ரெம்டிசிவிர் மருந்து
தேவை என்றும் தனக்கு தொடர்பு உள்ளவர்களிடம் அந்த மருந்தை கேட்டுள்ளதாகவும் அந்த மருந்தை கிடைக்க உதவி செய்யவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சம்யுக்தா
தனது பெற்றோரை வீட்டில் வைத்து சிகிச்சை செய்து வருகிறோம். இருவரையும் தான் கவனித்துக்
கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தயவு செய்து தனக்கு ரெம்டிசிவிர் மருந்து கிடைக்க உதவி செய்யவும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
















