இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி

இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி என இஸ்ரேல் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது .

பாலஸ்தீனம் காசா ஜபலியா பகுதியில் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேல் இராணுவத்தை வழிமறித்து ஹமாஸ் மக்கள் விடுத்லை போர் படைகள் நடத்திய தாக்குதலின் பொழுதே இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலியாகியுள்ளதா தெரிவிக்க பட்டுள்ளது .

காசா தெற்கு ஜபலியா பகுதியில் கடும் போர்

காசா தெற்கு ஜபலியா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின் தாங்கி கனரக படைகள் பெரும் இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன .

ஜெபலியா பகுதி ஊடாக ஊடறுப்பு தாக்குதலை நடத்தி முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட ,மேற்கொள்ளும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் பலத்த இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன .

கடந்த எட்டு மாதமாக இதே பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின், முக்கிய முதன்மை படையணிகள் பெரும் அடியை வாங்கி சுருண்டு கொண்டன .

அவ்வாறான பெரும் இழுப்பை இப்பொழுதும் சந்தித்த வண்ணம் உள்ளதை, இந்த இரண்டு இராணுவ தளபதிகள் பலியான சம்பவங்கள் எடுத்து காண்பிக்கின்றன .

Error: View 9293b2au4w may not exist
மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் , ரபாவிற்கு அருகில் இடம்பெயர்ந்த காசா மக்கள் கூடாரங்கள் மீது இஸ்ரேலிய அரச இராணுவம் தாக்குதல் .

இஸ்ரேல் அரச ஆக்கிரமிப்பு இராணுவம் பீரங்கி மற்றும் விமான வழி தாக்குதலை நடத்தியதில் சிக்கி ,டஜன் கணக்கான மக்கள் பலியாகியும் ,காயமடைந்துள்ளதாக ,காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

சர்வதேச நீதிமன்ற உத்தரவு

சர்வதேச நீதிமன்ற உத்தரவுகளை மீறி ,இஸ்ரேல் இராணுவம் ரபா சாலையில் கோர தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

இந்த பகுதியில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட அப்பாவி காசா மக்கள் இடம்பெயர்நது தங்கியுள்ளனர் .

இஸ்ரேல் இராணுவ தாக்குதல்

அவ்வாறான அப்பாவி மக்களை இலக்கு வைத்தே ,இஸ்ரேல் இராணுவ தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இஸ்ரேலிய அரச ஆக்கிரமிப்பு இராணுவம் நடத்தும் இந்த தாக்குதல்களை ,ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ளிட்ட பல நாடுகள் கண்டித்து ,கணடனம் தெரிவித்துள்ளன .

ஐரோப்பியா கூட்டமைப்பின் ஒன்றிய நாடுகளே கண்டித்துள்ள செயலானது ,இஸ்ரேலுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலில் இரு சார கருத்துக்கள் நிலவி வருகின்றதை இவை காண்பிக்கின்றன .

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்காவை தாக்கிய புயல் 11பேர் மரணம் 60 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவை தாக்கிய புயல் 11பேர் மரணம் 60 பேர் காயம்

அமெரிக்காவை தாக்கிய புயல் 11பேர் மரணம் 60 பேர் காயம்

அமெரிக்காவை தாக்கிய புயல் 11பேர் மரணம் 60 பேர் காயம் என தெரிவிக்க பட்டுள்ளது .

உலக வல்லரசு அமெரிக்காவினை தாக்கி வரும் கடும் புயல் மற்றும் கன மழை காரணமாக 11 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 60 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ், மிசோரி ஆகிய இடங்களில் சூறாவளியால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

திடீர் சூறாவளியால் ஐந்து மாநிலங்கள் பாதிப்பு

இந்த சூறாவளியால் ஐந்து மாநிலங்கள் பாதிக்க பட்டுள்ளன .இதே பகுதிகளில் 25 சூறாவளி தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதுடன் ,மக்கள் தாற்காலிக ,இடை தங்கள் நிலையங்களில் தங்க வைக்க பட்டுள்ளதாக அந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன .

சூறாவளியால் 100 க்கு மேற்பட்ட வாகனங்கள் சேதம்

திடீர் சூறாவளியால் 100 க்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் வீடுகள் என்பன சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

சீராற்ற காலநிலை காரணமாக அமெரிக்காவாவில் இயல்பு நிலை பாதிக்க பட்டதுடன் ,கடும் சூறாவளி புயல் காரணமாக பெரும் சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளது .

வீடுகளின் கூரைகளை அடித்து சென்ற சூறாவளி

மக்களது வீடுகளின் கூரைகள் சூறாவளியில் அடித்து செல்ல பட்டுள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன .

இந்த திடீர் சூறாவளி புயல் காரணமாக ,அமெரிக்காவின் ஐந்து மாநிலங்கள் கடுமையாக பாதிக்க பட்டுள்ளன .

அவ்விதம் புயலினால் பாதிக்க பட்ட பகுதிகளின் மொத்த சொத்து இழப்பு தொடர்பான கணக்கறிக்கை தயாராகி வருகிறது .

இவ் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட அதி உச்ச சூறாவளி புயல் இதுவாக காணப்பட்டுள்ளது என்கின்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன .

ஜனாதிபதி ஜோ பைடன் அனுதாபம்

ஜனாதிபதி ஜோ பைடன் புயலினால் பாதிக்க பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் ,கோர புயலினால் பாதிக்க பட்ட பகுதிகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார் .

ஜோ பைடன் சிக்கினார்

ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தலை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் ,சீரற்ற காலநிலை புயலினால் பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய முறையில் தீர்வை வழங்கினால் மட்டுமே ,அவரினால் மகத்தான வெற்றியை பெற முடியும் என்ற நிலை காண படுகிறது .

அதனால் புயலினால் ஏற்பட்ட மக்கள் இழப்பை, அரசு செலுத்த வேண்டிய நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு

பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு

பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு , பாலஸ்தீனம் தனி நாடு தொடர்பான அங்கிகரிப்பு ஆவணங்கள் நோர்வே உத்தியோக பூர்வமாக வழங்கியுள்ளது .

அடுத்து எதிர்வரும் 28 ஆம் திகதி பாலஸ்தீனம் அங்கீகரிக்க பட்ட உள்ளதாக ,நோர்வே ,ஐர்லாந்த் ,ஸ்பெயின் போன்ற நாடுகள் அங்கீகரிக்க போகின்றன .

இருபது நாடுகள் அதனை வரவேற்று ஆமோதிக்க போகின்றன

இவர்களுடன் மேலும் இருபது நாடுகள் அதனை வரவேற்று ஆமோதிக்க போகின்றன என்கின்ற விடயம் தெரிவிக்க படுகிறது .

எழுபது ஆண்டுகளாக அடக்குமுறை ,அவற்றில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக மிக கொடூரமான தாக்குதல்களை இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்தியது .

அதுவே இன்று பாலஸ்தீனம், தனி நாடக மாறுவதற்கு காரணமாக அமைய பெற்றுள்ளது .

அடக்குமுறை ,அடடூழியம் ,இனப்படுகொலை

தொடர் அடக்குமுறை ,அடடூழியம் ,இனப்படுகொலை ,வாழ்விடங்கள் அழித்தல் என்ற ,ஆக்கிரமிப்பு அரச பயங்கரவாத தாக்குதல்களின் வெளிப்பாடே பாலஸ்தீன தேசம் ஒரு ,இறைமையுள்ள சுதந்திர தேசமாக மாறிட காரணமாக அமைய பெற்றுள்ளது .

அந்த நாட்டை பெற்று கொடுக்க ஈரான் சாதனையை யாரும் மறந்துவிட கூடாது .

கூட்டிணைந்த நன்கு ஒருங்கிணைக்க பட்ட ,கூட்டு தாக்குதலே இந்த நிலைக்கு காரணமாக அமைய பெறுகிறது .

நெதன்யாகுவின் மூன்று தாசாப்த ஆண்டு இனப்படுகொலையின் அதீத வளர்ச்சியே இன்று இஸ்ரேல் அழிவில் சிக்கவும் ,மக்கள் அவரை வெறுத்து ஆட்சியிழந்த ஒருவராக மாற்றம் பெறவும் காரணமாக அமைகிறது .

இலங்கையில் கோட்டபாய ராஜபக்சவை போல ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் மாற போகிறார் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைய பெற்றுள்ளது .

மலர்கிறது பலஸ்தீன நாடு ,மனம் மகிழ்கிறது .எதனை ஆயிரம் உயிர் இழப்பு ,எத்தனை ஆண்டுகள் வலி ,அவலம் .

இத்தனையும் தந்து மகிழ்ந்த யூத ஆளும் அரச இராணுவ வெறியாட்டம் முடிவுக்கு வருகிறது .

விலங்குகளை போல மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்ட யூத அரச பயங்கரவாதத்திற்கு ,சாட்டை அடி வழங்க பட்டுள்ளது .

எமது சொந்த மக்கள் விடுதலை போன்றே பலஸ்தீன தானி நட்டு இராச்சியத்தை தமிழினம் பார்க்கிறது .

video

Error: View 9293b2au4w may not exist
ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல்

இஸ்ரேல் மீது ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல்

ஈரானின் அதிரடி இராணுவ தாக்குதல் ,ஈரான் அதிரடி இராணுவ ஏவுகணைகள் இஸ்ரேலை அழித்திருக்கும் என அமெரிக்கா  ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிப்பு .

இஸ்ரேல் இயலாமையை அம்பல படுத்தியுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் மீது ஈரான் கடும் ஏவுகணைகள் டிரோன் ரக வெடிகுண்டு விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்தின .

இஸ்ரேலியா இராணுவத்தின் ஒன்பது முக்கிய நிலைகளை தெரிவு செய்து 500 டிரோன் ரக விமானங்கள் ,ஏவுகணைகள் ஊடாக ஈரான் தாக்குதல் நடத்தியது .

இஸ்ரேல் மீது ஈரானின் அதிரடி தாக்குதல்

இந்த ஈரான் இராணுவத்தின் அதிரடி ஏவுகணை ,விமான தாக்குதலினால் இஸ்ரேல் மிக பெரும் நெருக்கடியை சந்தித்தது .

மூன்று மணித்தியாலமாக இஸ்ரேல் விமானங்களை பறக்க விடாது ஈரான் இராணுவம் ஏவுகணைகள் ,விமானம் மூலம் தாக்குதலை நடத்தியது .

சற்றும் எதிர் பாராத ஈரானின் இந்த ஏவுகணை ,ட்ரான் அதிரடி தாக்குதல் காரணமாக ,இஸ்ரேல் நிலை குலைந்து காணப்பட்டது .

எனினும் ஈரான் ஏவுகணை ,விமானங்களின் தாக்குதலினால் எமக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்து இருந்தது .

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன்

அவ்வாறன கால பகுதியில் தற்போது அமெரிக்கா ஜோ பைடன் ஈரான் ஏவுகணைகள் விமானங்கள் தொடர்பாக இவ்விதம் தெரிவித்து ,ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் தோல்வியை அம்பல படுத்தியுள்ளார் .

இந்த அறிவிப்பினால் இஸ்ரேல் நெதன்யாகுவின் ஆட்சி அதிகாரம் முடிவிற்கு வருவதாக அமெரிக்கா அறிவிக்கிறது என எடுத்து கொள்ளலாம் .

இந்த போரில் வென்று தலை நிமிர்ந்தது ஈரான் ,மற்றும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் ,ஹவுதிகள் ,ஈராக்கிய படைகள் ,என்பதை யாராலும் மறுக்க முடியாது .

Iran Missiles Will Destroy Israel USA  

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஜனாதிபதியை சந்தித்தார் விக்னேஸ்வரன்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்தார் விக்னேஸ்வரன்

ஜனாதிபதியை சந்தித்தார் விக்னேஸ்வரன்

ஜனாதிபதியை சந்தித்தார் விக்னேஸ்வரன் ,தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரான பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

உணவகங்களில் திடீர் சோதனை
Posted in இலங்கை செய்திகள்

உணவகங்களில் திடீர் சோதனை

உணவகங்களில் திடீர் சோதனை

உணவகங்களில் திடீர் சோதனை ,சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து

உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்களுக்கு திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது

சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் ஞாயிற்றுக்கிழமை (25) சாய்ந்தமருது பிரதேச உணவகங்களுக்கு திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டார்.

உணவகங்கள் பார்வை

சில வாரங்களுக்கு முன்னர் உணவகங்களை பார்வையிட்ட அவர் உணவக உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும், உணவகங்கள்

சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை

குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி

உணவகதின் மீது உரிய நடவடிக்கை

பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

அதனை ஒட்டியதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம். ஜெரின், ஜே.எம்.நிஸ்தார் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் சகிதம் சாய்ந்தமருது

உணவு நிலையங்கள் மீது திடீர் பரிசோதனை

பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் உணவு நிலையங்கள் மீது இன்று திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவித்தல்களை

பேணி நடக்காத உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் முறையற்ற களஞ்சியத்தை கொண்டிருந்த உணவுகளும் கைப்பற்றப்பட்டது.

எச்சரிக்கை

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் முறையற்ற களஞ்சியங்களை கொண்ட உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டது.

அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.

யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார்

யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார்

யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார் ,யாழில் ஜனாதிபதி இளைஇவ்வருடத்திற்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைத் தீர்க்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

அதேபோல், மீண்டும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவேன் .

நவீன விவசாயத்தைக் கிராமத்திற்கு கொண்டுச் செல்வதற்கான வேலைத்திட்டம் அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கத்தில்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாழ். மாவட்ட மாநாட்டிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது யாழ்.மாவட்ட இளைஞர் யுவதிகளின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் நேரடியாக கூறுவதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“வட. மகாணத்தில் பயன்படுத்தப்படாத பல காணிகள் காணப்படுகின்றன. யாழில் மாத்திரமின்றி முழு நாட்டிலும் அவ்வாறான பல காணிகள் காணப்படுகின்றன.

அந்த இடங்கள் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் எமது நாட்டில் விவசாய ஏற்றுமதி காணப்பட்டது.

அநுராதபுர காலத்தில் இலங்கை நெல் ஏற்றுமதி செய்தது

அநுராதபுர காலத்தில் இலங்கை நெல் ஏற்றுமதி செய்தது. பின்னர், தேயிலை, கோபி, இறப்பர், கறுவா உள்ளிட்டவைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது அந்த ஏற்றுமதிச் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன.

அதனால், விவசாயத்தை நவீனமயப்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்க வேண்டும்.

இளைஞர் யுவதிகள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். அரச மற்றும் தனியார் துறையுடன் இணைந்து நவீன விவசாயத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம்.

அதனால் இலங்கை டொலர்களை ஈட்டிக்கொள்வதற்கான வாய்ப்பும் அதிகமாக கிடைக்கும்.

கடந்த வாரம் கேகாலைக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன்.

நவீன விவசாயச் செயற்பாடு

அங்கு நவீன விவசாயச் செயற்பாடுகளை முன்னெடுப்போரை காண முடிந்தது. தற்போது அவ்வாறானவர்களே எமக்குத் தேவைப்படுகின்றனர்.

நவீன விவசாயத்தில் 5000 சதுர அடியில் உயர் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

ஒரு ஹெக்டயாரில் 08 மெட்ரிக் டொன் நெல் விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியும். அதனால் ஏற்றுமதி மற்றும் வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தையும் கட்டமைக்க முடியும்.

அரசாங்கம் கவனம்

அதேபோல் சுற்றுலா வர்த்தகத்தை பலப்படுத்துவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

அதேபோல் வலுசக்தி குறித்தும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் மூலமான மின்சார உற்பத்தியை செய்வதற்கான சாத்தியங்களும் உள்ளன.

அதனால் கிகாவோட் அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். குளங்கள் மீது சூரிய சக்தி படலத்தை அமைத்து அதனூடாக மின்சாரம் தயாரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்துகிறோம்.

இதற்காக பூநகரி மற்றும் இரணைமடு குளங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வடமாகாணமானது அதிகளவில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது.

ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்திப் படலம்

மேலும், இந்தப் பகுதியில் 700 மெகாவோட் திறன் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்திப் படலத்தை நிறுவும் பணியை மேற்கொள்ளவிருக்கிறோம்.

இதனை ஆரம்பமாகக் கொண்டு ஆசியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக வடக்கை மாற்ற முடியும்.

வலுசக்தி துறையின் முன்னேறிச் செல்ல அதிகளவில் மின் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

எனவே, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்திக்காக இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.

காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தை மையமாக கொண்டு முதலீட்டு வலயம் ஒன்று நிறுவப்பட உள்ளது.

மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயமொன்றை ஸ்தாபிப்பதற்கும் எதிர்பார்க்கிறோம். மீனவர்களுக்காக நமது கடற்பரப்பை பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு உள்ளது.

நவீன மீன்பிடி முறைகள் மூலம் மீன்பிடித் தொழில் துறையும் பலப்படுத்தப்படும்.

கடந்த நான்கு வருடங்களில் இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மக்கள் பெரும் அவதிப்பட்டனர். தற்போது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வருகிறது.

நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்ட பிறகு

நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்ட பிறகு, இளைஞர்களின் தொழில் இல்லாத பிரச்சினை நிவர்த்திக்கப்படும்.

பொருளாதார மாற்றச் சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க எதிர்பார்த்திருக்கிறோம்.

வியட்நாம், மலேசியா, தாய்லாந்து போன்ற ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் இலங்கையிலும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

மேலும், உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க இன்னும் இரண்டு மாதங்களில் தென்னிந்திய கலைஞர்களை கொண்டு யாழ்ப்பாணத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு

செய்யுமாறு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவருக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். வங்குரோத்து பொருளாதாரத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்கவும்,

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.ஞர்களுக்கு வழங்கிய உறுதி

முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி
Posted in இலங்கை செய்திகள்

முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி

முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி

முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி ,மோசமான வானிலை காரணமாக வீடு ஒன்றின் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த அனர்த்தத்தில் மற்றுமொரு பெண்ணும் ஆண் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

பொலிஸ் பிரிவு

நேற்று (25) இரவு ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கெட்டிய பிரதேசத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

ஹப்புத்தளை, பங்கெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

காயமடைந்தவர்கள் தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாத்திரை சென்ற வான் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

யாத்திரை சென்ற வான் விபத்து

யாத்திரை சென்ற வான் விபத்து ஒருவர் பலி

யாத்திரை சென்ற வான் விபத்து ,யாத்திரை சென்று கொண்டிருந்த வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

கல்கமுவ, மீஓயாவிற்கு அருகில் இன்று (26) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதிக்கு நித்திரை கலக்கம்

பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வேனின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டு மீஓயா பாலத்தில் மோதி வீதியை விட்டு விலகி மீண்டும் மரத்தில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது வேனில் சுமார் 15 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் போது வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன், காயமடைந்த 13 பேர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

விபத்தில் உயிரிழந்தவர் எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்து கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 07 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை

இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை

இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை முக்கியஸ்தர் அறிவிப்பு .

சர்வதேச நீதிமன்ற உத்தரவு மீறலை அடுத்து பொருளாதார தடையை விதிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

ஐக்கிய நாடுகள் சபை

எகிப்தின் எல்லையோரம்,காண படும் ரபா எல்லை வழியூடாக இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில் ,இந்த முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை வந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

சர்வதேச நீதிமன்ற உத்தரவை மதிக்காது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் ,பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருவதால் வேறு வழியின்றி இந்த நகர்வுக்கு ஐநா வந்துள்ளது .

இஸ்ரேல் போரை தடுக்க வேண்டுமாக இருந்தால், சர்வதேச பொருளாதார தடை ஊடகவே, இஸ்ரேல் நடத்தும் மனித குலத்திற்கு எதிரான கொடிய போரை தடுக்க முடியும் என ஐக்கிய நாடுகள் சபை நம்புகிறது .

இன அழிப்பு தாக்குதல்

எட்டு மாதங்கள் கடந்து தொடர் போரை நடத்தி மிக பெரும் இனஅழிப்பு தாக்குதலை நடத்திட இஸ்ரேல் தயாராகி வருகிறது .

இவ்வாறான நிலையில் ,அதனை தடுக்கும் நோக்குடன் இந்த பொருளாதார தடை என்ற ,ஆயுதத்தை ஐக்கிய நாடுகள் சபை எடுத்துள்ளதாக பார்க்க படுகிறது .

எனினும் இஸ்ரேல் மீது பொருளாதார தடையை விதிக்க அமெரிக்கா அனுமதி அளிக்காது என ஒரு தரப்பு கூறுகிறது .

எப்படி பார்த்தாலும் அமெரிக்காவை நம்பியவர்கள் ,அதே அமெரிக்காவினால் கவிழ்க்க பட்டு முதுகில் குத்திய நிகழ்வுகள் அதிகம் அரேங்கேறியுள்ளன .

அதை போலவே இஸ்ரேலுக்கும் அமெரிக்கா முதுகில் குற்றும் என எதிர் பார்க்க பாடுகிறது .

மிக பெரும் தோல்வியில் முடங்கி சேடம் இழுக்கும் இஸ்ரேலும் வேறுவழியின்றி ,சரண் அடையும் நிலைக்கு செல்ல நேரிடும் எனவே எதிர் பார்க்க படுகிறது

பாலஸ்தீனம் காசா தெற்கு பகுதியில் ஸ்னைப்பர் தாக்குதல் நடத்த பட்டதில், இஸ்ரேல் கனரக படைக்கு படைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது .

அவ்வாறான தாக்குதல் புதிய காணொளிகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
நெஞ்சை பிளந்து உன்னை தேடி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

நெஞ்சை பிளந்து உன்னை தேடி

நெஞ்சை பிளந்து உன்னை தேடி

நெஞ்சை பிளந்து உன்னை தேடி
நெடும் தூரம் நடந்தேன்
கொடும் போரில் கூட உனைத்தாங்கி
கோர வலியுடன் கடந்தேன்

இன்றெங்கே நீ இன்றெங்கே
இதயம் இன்றும் தேடுதே
உள்ளாயா இல்லை உயிர் நீத்தாயா
உள்ளமே பதில் கூறாயா

தாளம் இடும் இசையே
தரை தட்டும் கடலே
எங்கே இன்றெங்கே
என் சொந்தம் இன்றெங்கே

வான் முட்டும் மரமே
வளைந் தாடும் காற்றே
நீதி சொல்லாயா
நீர் விழி துடைக்காயா

நெஞ்சை பிளந்து இறக்க வா
நெஞ்சே உன்னை சுமந்து வாழ வா
தாய் மண்ணே பதில் கூறு
தாய் எங்கே என் தாய் எங்கே …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-05-2024

மனைவி வயிற்றை வெட்டிய கணவன்
Posted in உலக செய்திகள்

மனைவி வயிற்றை வெட்டிய கணவன்

கர்ப்பிணி மனைவி வயிற்றை வெட்டிய கணவன்

மனைவி வயிற்றை வெட்டிய கணவன் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கர்ப்பிணியான மனைவியின் வயிற்றில் உள்ளது என்ன பிள்ளை, என்பதை பார்க்க இவ்வாறு அவர் வெட்டியுள்ளது தெரிய வந்துள்ளது .

இந்திய உத்தரபிரதேச பகுதியில் எட்டு மாத கர்ப்பிணியான மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தை ,ஆணா பெண்ணா என அறிய ,ஆசை பட்ட கணவன் மனைவியின் வயிற்றை வெட்டியுள்ளார் .

ஆண் குழந்தை வெட்டி கொலை

இவருக்கு முன்னதாக ஐந்து பெண் பிள்ளைகள் தொடராக பிறந்த நிலையில் ,ஆண் குழந்தை இல்லை என வீரக்தி உற்ற கணவன் ,ஆண் குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டு இப்பொழுது மனைவியை கர்ப்பம் ஆக்கியுள்ளார் .

அதனை அடுத்தே எட்டு மாத கர்ப்பிணியான மனைவியின் வயிற்றை வெட்டிய கணவன்,குழந்தையை பார்க்க முனைந்துள்ளார் .

அரிவாளை எடுத்து மனைவியின் வயிற்றை வெட்டியுள்ளார் ,கணவன் அரிவாள் வெட்டில் வயிற்றில் உள்ள சிசு ,இறந்துள்ளது

மனைவி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் .

ஆபத்தான நிலையில் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,பொலிஸாரினால் ,கணவன் கொலை குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

பிள்ளை வரம் என்பது கடவுள் கொடுக்கும் வரமாகும் ,அதனை யாரும் தட்டி கழிக்க முடியாது .

பெண் பிள்ளைகள் பெற்ற பல குடும்பங்கள் அதே பெண் பிள்ளைகளினால் , அந்த குடும்பம் கொண்டாட படும் நிலைக்கு உள்ளான சம்பவங்களும் ,இந்த உலகில் பதிவாகியுள்ளது .

அவ்வாறான நிலையில் இந்த கணவன் புரிந்த செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இப்படியும் முரட்டு கணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு இவை ஒரு உதாரணமாக உள்ளது .

Error: View 9293b2au4w may not exist
ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சி இரணைமடுவில்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சி இரணைமடுவில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சியில்

ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சி இரணைமடுவில் மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கியுள்ளார் என ரணில் விக்கிரமசிங்கா ஊடக பிரிவு தெரிவித்துள்ளது .

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சி பயணம்

தமிழர் வடபகுதியாக விளங்கும் கிளிநொச்சி இரணை மடுவிற்கு பயணம் செய்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தமிழ் மக்கள் 1700 பேருக்கு காணி உறுதிகளை வழங்கி வைத்தார் .

டக்கிளஸ் தேவானந்தா தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா, காணி உறுதிகளை மக்களுக்கு கிளிநொச்சி இரணைமடுவில் வழங்கி வைத்துள்ளார் .

வனஜீவராசி திணைக்களம்

வனஜீவராசி திணைக்களம் உறுதிகளை ,இதே ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சியில் பறித்து வரும் நிலையில் ,கிளிநொச்சி இரணைமடுவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவினால் இவ்விதம் உறுதி பத்திரங்கள் வழங்கி வைக்க பட்டுள்ளது .

இலங்கை ஆளும் ஜனாதிபதிகள் சிங்கள பவுத்த மேலான்மை பாசிச கொள்கைகள் இன்றுவரை மாறவில்லை என்பதை ,காணி அபகரிப்பு நடத்தும் வனஜீவராசிகள் திணைக்கள நடவடிக்கைகள் எடுத்து காட்டுகின்றன .

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகத்தான வெற்றியை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுவிட வேண்டும் என்பதில், தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அதி தீவிர நகர்வில் ஈடுபட்டு வருவதை ,இந்த பயண விடயங்கள் மக்கள் சந்திப்புக்கள் எடுத்து காட்டுகின்றன .

பாலஸ்தீனம் தனிநாடாக 20நாடுகள் அறிவிக்க தயார்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பாலஸ்தீனம் தனிநாடாக 20நாடுகள் அறிவிக்க தயார்

பாலஸ்தீனம் தனிநாடாக 20நாடுகள் அறிவிக்க தயார்

பாலஸ்தீனம் தனிநாடாக 20நாடுகள் அறிவிக்க தயார் , ஆகி வருவதகாக தகவல் ,

பாலஸ்தீனமானது தனிநாடாக மலர்வதற்கு எதிராக கொதிக்கும் இஸ்ரேல் .அடக்கு முறைகளை உடைத்து பாலஸ்தீன புதிய தேசம் உலக பந்தில் உருவாக்கம் பெறுகிறது .

வன்முறை தாக்குதல் முடிவுக்கு வருகிறது


பல்லாண்டு அதிகார அடக்குமுறை வன்முறை தாக்குதல் முடிவுக்கு வருகிறது .


வெள்ளம் போல் ஓடிய மக்கள் கண்ணீர் துளிகள் வற்றி பெரும் சமுத்திரம் ஒன்றாக காசா மக்கள் வாழ்வு மாற்றம் பெற போகிறது .

அடக்கப்பட்ட ஒரு தேசத்தின் பெரும் கனவும் ,அடக்குமுறையின் உச்சத்தின் வெளிப்பாட்டு தன்மையும் தற்போது முடிவுக்கு வரவுள்ளது .

நெதன்யாகருவின் இன அழிப்பு

இஸ்ரேல் ஆளும் நெதன்யாகுவின் இன அழிப்பும் ,அதன் வக்கிர நிலைப்பாடுகளும் உலக அரங்கில் அம்பல பட்டுள்ளது .

அமெரிக்கா இஸ்ரேல் என்பன எவ்வாறான கொடிய மோசமானவர்கள் என்பதையும் இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா போர் வெளிப்படுத்தியுள்ளது .

அதனால் பல நாடுகள் தற்பொழுது தன்னெழுச்சியாக பலஸ்த்தீனம் தனி நாடக மாற்றம் பெறுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன..

மக்கள் பாலஸ்தீனம் தனிநாடாக மலர்வதை இட்டு பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன .

இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு

இந்த விடுதலையை விரைவாக பாலஸ்தீனம் பெற்றுக்கொள்ள ,இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு வழி ஏற்படுத்தி கொடுத்தார் என்றே அடித்து கூறலாம் .

தொடரான ஆக்கிரமிப்பு ,அழித்தொழிப்பு ,அண்டை நாடுகள் மீதான இராணுவ படையெடுப்பு இஸ்ரேலிய ,இராணுவ முரண் நிலைகளினால் இஸ்ரேல் பெரும் நெருக்கடியில் இன்று சிக்கி தவித்து வருகிறது .

இராணுவ அரசுகளின் நடைமுறை

முரண் பாடு கொண்ட முற்றிலும் நிகழ்கால களமுனைக்கு இராணுவ ,அரசுகளின் நடைமுறை நிகழ்வே,இன்று பாலஸ்தீனம் தனிநாடாக மலர்வதற்கு காரணமாக மாற்றம் பெற்றுள்ளது .

உலக நாடுகளில் தனி நாடக பிரிந்து செல்ல துடிக்கும் பலநாடுகளுக்கு ,இன்றைய பாலஸ்தீனம் பிரிந்து செல்லும் நிலைப்பாடு மிக பெரும் முன் உதாரணமாக காணப்படுகின்றன .

மக்கள் உரிமை கோரி போராட்டம்

அரேபிய தேசத்திலும் ,ஆபிரிக்க நாடுகளிலும் பல நாடுகள் ,இவ்வாறு தமது மக்கள் உரிமை கோரி போராடிய வண்ணம் உள்ளனர்

மனம் மாறிய உலகம் .மறுமலர்ச்சி உருவாக்கம் .சிரியாவில் கார் குண்டு தாக்குதல் இஸ்ரேலை தாக்கிட காரணம் ஈரான் ஜனாதிபதி என இராணுவம் அறிவிப்பு

Error: View 9293b2au4w may not exist
அண்ணா
Posted in கவிதைகள் நிலா தமிழ்

அண்ணா

அண்ணா

நஞ்சினை மாலையாய் அணிந்தவர்
பிஞ்சிலே வேங்கையாய் நிமிர்ந்தவர்
துஞ்சிடா வீரத்தைக் கொண்டவர்-நம்
நெஞ்சிலே ஈரத்தை விதைத்தவர்!

கஞ்சியை நாளுமே உண்டேனும்
பஞ்சியை துளியேனும் கொள்ளாமல்
கொஞ்சியே பேசிடும் தமிழுக்காய்- தன்
எஞ்சிய வாழ்வினை அர்ப்பணித்தவர்!

மிஞ்சியே பகை படை கொண்டு வந்தாலும்
அஞ்சியே எங்கேனும் ஓடிடாமல்
விஞ்சியே நின்று பகை எதிர்த்து– எம்
மஞ்சிய தாய் நாட்டைக் காத்தவர்!

கெஞ்சிடும் குடும்பத்தைத் துறந்தவர்
பஞ்சிடும் பஞ்சணையை வெறுத்தவர்
தஞ்சிடும் மக்களைக் காத்தவர் – கடும்
வஞ்சிடும் துரோகிகளை துவைத்தவர்!

வஞ்சியருக்கு சமவுரிமையை கொடுத்தவர்
அஞ்சியவருக்கும் வீரத்தை ஊட்டியவர்
துஞ்சியவரையும் தன்னாற்றலால்
எழ வைத்தவர் – எதிரியாயினும்
கெஞ்சியவருக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தவர்!

கெஞ்சியே இறைஞ்சுகின்றோம்
எஞ்சிய எம் வாழ்வைக் கழித்திட
விஞ்சிய மனவுரத்தை தந்திட – நம்
நெஞ்சிலே என்றும் இறையாய்
வாழுங்கள் அண்ணா!

-நிலாதமிழ்.
25.05.2024.

வடகிழக்கிற்கு ரணில் உதவினார்
Posted in இலங்கை செய்திகள்

வடகிழக்கிற்கு ரணில் உதவினார்

வடகிழக்கிற்கு ரணில் உதவினார்

வடகிழக்கிற்கு ரணில் உதவினார் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலம் முதல் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை கட்டடத்தை நேற்று முற்பகல் திறந்து

வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலம் முதல் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.

இன்று திறந்து வைக்கப்படும் யாழ்.பல்கலைக்கழகத்தின் இந்த மருத்துவ பீடக் கட்டடம் வடக்கிற்கு மாத்திரமன்றி நாட்டிற்கும் ஒரு நல்ல முதலீடாகும் என சுட்டிக்காட்டலாம்.

மேலும் இது எதிர்காலத்தில் இலங்கையில் நிபுணர்களின் புகலிடமாக மாறும் என நான் நம்புகிறேன்.

முன்னதாக இச்சபையில் உரையாற்றியவர்கள் கூறியது போல் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார் என்றார்.

ரோலில் இருந்த கறல் பிடித்தகம்பி
Posted in இலங்கை செய்திகள்

ரோலில் இருந்த கறல் பிடித்தகம்பி

ரோலில் இருந்த கறல் பிடித்தகம்பி

ரோலில் இருந்த கறல் பிடித்தகம்பி ,யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்தியில் உள்ள வெதுப்பகத்தில் வாங்கிய ரோலுக்குள்

சுமார் 4 இஞ்சி அளவிலான கறல் பிடித்த கம்பி காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை உறவினர் வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக குறித்த வெதுப்பகத்தில் ஒருவர் 80 ரூபா விதம் 10 ரோல்கள் வாங்கிச் சென்றுள்ளார்.

ரோலை உண்பதற்காக பரிமாறியபோது

உறவினர்களின் வீட்டில் குறித்த ரோலை உண்பதற்காக பரிமாறியபோது, நான்கு வயது சிறுமி ஒருவருக்கு ஊட்டுவதற்காக தாய் ரோலை பிரித்த போதே ரோலிற்குள் கறல் பிடித்த கம்பி இருந்தது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான படங்களை குறித்த வெதுப்பகத்தில் ரோலினை கொள்ளளவு செய்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.

இதனிடையே தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குள் இவ்வாறான உணவக சீர் கேட்டுச் சம்பவங்கள் அண்மைக்காலத்தில்

பொதுமக்கள் தரப்பில் விசனம்

தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது குறித்து பொது மக்கள் தரப்பில் விசனம் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுவருகிறது.

மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள்
Posted in இலங்கை செய்திகள்

மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள்

மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள்

மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள் ,தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் வயல் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 29 வயதுடைய ரம்பொட, நாவலதென்னவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வயல்வெளியில் இரண்டு சடலங்கள்

தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் வயல்வெளியில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக 119 மற்றும் 118 அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த

முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த 22ம் திகதி தாம் தங்கியிருந்த விடுதியில் இருந்து வௌிறேயி மீண்டும் திரும்பாததால், விடுதியில் தங்கியிருந்த ஒருவர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.

மர்ம மரணங்கள்

இலங்கை திரு நாட்டில் இடம்பெறு இவ்விதமான மர்ம மரணங்கள் தொடர்பில் மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது .

ஆளும் அரசும் அதன் காவல்துறையினாலும் ஏன் இந்த மர்ம மனித படுகொலைகளை தடுக்க இயலவில்லை என்ற கேள்வி எழுப்ப படுகிறது .

வரலாற்று சாதனையாக பல ஆண்டுகளாக இவ்விதமான மர்ம படுகொலைகள் ,இடம் பெற்ற வண்னம் உள்ளது .

இவை ஆளும் அரசுகள் மீதான சந்தேகத்தை ஏற்படுத்தி வருவதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர் .

காணாமல் போன மாணவன்
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன மாணவன்

காணாமல் போன மாணவன்

மதுரங்குளி பகுதியில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல் போன 12 வயது மாணவன் கதிர்காமம், 20 ஏக்கர் –

டோசர்வெவ கௌதம சதகம் அரன விகாரையில் தங்கிருந்த நிலையில் 22 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி முன்மாதிரி பாடசாலை

மதுரங்குளி முன்மாதிரி பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்கும் நெதுசர பிரியனந்த எனும் மாணவன் கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.

குறித்த மாணவனின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், மாணவன் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தனது பாட்டியோடு முரண்பட்ட நிலையில், 18 ஆம் திகதி யாருக்கும் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவன் இன்னமும்

வீடு திரும்பவில்லை என உறவினர்கள் மதுரங்குளி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த மாணவன் புத்தளம் – மதுரங்குளியில் இருந்து கொழும்புக்கு சென்றுள்ளதாகவும், பின் அந்த மாணவனின் விருப்பத்தின் படி

கதிர்காமம், 20 ஏக்கர் – டோசர்வெவ கௌதம சதகம் அரன விகாரையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ளார்

இவ்வாறு பௌத்த விகாரையில் ஒப்படைக்கப்பட்ட, குறித்த மாணவனின் விருப்பத்திற்கிணங்க கடந்த 20 ஆம் திகதி “மதுரங்குளி சுபோதி” எனும்

பெயரில் பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ளார் என கௌதம சதகம் அரன விகாரையின் விகாராதிபதி கலன்பிந்துனுவெவ அனுருத்த மைத்திரி தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட குறித்த மாணவன், கௌதம சதகம் அரன விகாரையில் இருப்பதாக மதுரங்குளி பொலிஸாருக்கு

தகவல் வழங்கப்பட்டதுடன், அந்த மாணவனை அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், பௌத்த துறவியாகுவதே தனது விருப்பம் எனவும், தான் விகாரையை விட்டு வேறு எங்கும் செல்லப் போவதில்லை என மதுரங்குளி சுபோதி” எனும் பெயரில் பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ள அந்த மாணவன் தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.