ஈராக்கில் 20 PKK இலக்குகளை துருக்கிய இராணுவம் அழித்தது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஈராக்கில் 20 PKK இலக்குகளை துருக்கிய இராணுவம் அழித்தது

ஈராக்கில் 20 PKK இலக்குகளை துருக்கிய இராணுவம் அழித்தது


ஈராக்கில் 20 PKK இலக்குகளை துருக்கிய இராணுவம் அழித்தது
தெஹ்ரான், செப். 03 (எம்என்ஏ) – வடக்கு ஈராக்கில் திங்கள்கிழமை வான்வழித் தாக்குதல்களை நடத்திய துருக்கி, குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின்

(பிகேகே) 20 இலக்குகளை அழித்ததாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் வடக்கு ஈராக்கின் பிகேகே தளங்களான அசோஸ், காரா, ஹகுர்க், மெட்டினா, காண்டில் மற்றும் ஜாப் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

X இல் ஒரு அறிக்கையில், இலக்குகளில் குகைகள், தங்குமிடங்கள், பதுங்கு குழிகள், டிப்போக்கள் மற்றும் வசதிகள் ஆகியவை அடங்கும் என்று அமைச்சகம் கூறியது.

PKK பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடும் சாக்குப்போக்கின் கீழ், துருக்கி தனது படைகளை வடக்கு ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளில்

நிலைநிறுத்தியுள்ளது மற்றும் இந்த நாடுகளின் வடக்குப் பகுதிகளின் சில பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம்

அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம்

அர்ச்சுனா தம்பி ஐயாவுக்கு சொன்ன விடயம் ,ஐயோ அண்ணா..
நான் கண்விழித்துப் பார்த்தபோது ஒருவர் என்னை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார் சோட்சுடன் படுத்து இருந்தேன்..
இருவர் தலைமாட்டிலும் கதவுக்கு வெளியாலும் நின்று இருந்தார்கள்..


நான் நினைத்தேன் இவர்கள் திட்டமிட்ட ரீதியில் என்னை மீண்டும் அரெஸ்ட் பண்ணத்தான் வந்திருக்கிறார்கள் என்று..
நித்திரையில் கண்ணால் முடித்த போது நான் வேறு என்னத்தை கற்பனை பண்ண முடியும்..


ஆதலால் தான் நீங்கள் எவ்வாறு எனது குவாட்டர்ஸின் கதவை உடைத்தீர்கள் என்று கேட்டேன்..
அது சட்டப்படி முரணானது..


ஆனால் எனக்கு நான் நித்திரையாக போனவுடன் இவ்வளவு விடயம் நடந்ததை இப்போதுதான் ஒன்றாக யூடியூபில் பார்த்தபடி போய்க்கொண்டிருக்கிறேன்..


காலை 8 மணிக்கு போலீஸ் தலைமை அதிகாரிக்கு கால் பண்ணி மன்னிப்பும் கோரி எவ்வாறு இது நடந்தது யார் இதை உடைக்க சொன்னார்கள் எனக்கு எதுவுமே தெரியாது என்று அவரிடம் சொன்னபோது நீங்கள் வந்து ஒரு ஸ்டேட்மெண்ட் ஒன்றை போலீசில் கொடுத்து விடுங்கள் உங்களை பாதுகாக்க தான் கதவை உடைத்தோம் என கேட்டார்கள்..


ஆம் என்று சொல்லி இருக்கிறேன்..
இது ராமநாதன் அர்ஜுனா அண்ணா தயவுசெய்து யோசித்து விட்டு கருத்தை பகிருங்கள்..


தம்பி ராஜா அண்ணா இன்று வரை ஒன்றுக்கொன்று முரணாக எனக்கு சார்பாகவும் எனக்கு எதிராகவும் கருத்தை வெளிவிட்டு கொண்டிருப்பது எனக்கு நன்றாக தெரியும்…


மன்னார் கோட்சில் கூட அவர் அங்கு நின்று பிரச்சனை பட்ட போது நீதிமன்ற அவமதிப்பு என்று மறுபடியும் நான் உள்ளே போய் இருப்பேன்..
அவர் வயது முதிர்ந்தவர் உணர்ச்சிவசப்பட்டு கார்த்தி குளரி ஒன்றையும் செய்யக்கூடாது..


ஏற்கனவே எட்டு வழக்குகளை வைத்துக் கொண்டிருக்கிறேன்..
இனி மறுபடியும் வைத்தியசாலை குவாட்டர்ஸில் நான் உள்ளே இருந்து திட்டமிட்ட ரீதியில் இவற்றையெல்லாம் செய்தேன் என்று யூட்யூபில் எழுதிக் கொண்டிருப்பார்கள்..


அதனால் தான் எனக்கு கோபம் வந்தது..
எனக்கு இதுவரை உள்ள வழக்குகள் போதும்.
வைத்திய சாலையில் உள்ளே லைப் போடக்கூடாது என்று அவருக்குத் தெரியாதா..


நான் சூசைட் பண்ண போகிறேன் என்று தனக்கெல்லாம் சொல்லி இருக்கிறேன் என்று முட்டாள்தனமாக சொல்லி இருக்கிறார்..
ஒருவரில் உதவி செய்கிறோம் என்று உரிமை எடுத்து அவரை தலைகீழாக மாற்றுவது முட்டாள்தனம்..


எனக்கும் தம்பி ராஜா எனப்படுகின்ற சம்பந்தப்பட்ட நபருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவர் எனது ஆதரவாளராக நான் எந்தக் கூட்டத்திலோ எந்த யூடியூப்பிலும் எந்த நேர்காணல் கருத்து தெரிவிக்கவில்லை..


இந்த நிமிடத்தில் நான் யாரையாவது எனது ஆதரவாளர் என்று சொல்லும்போது அவர்கள் செய்கின்ற முட்டாள்தனமான வேலைகளுக்கு எல்லாம் நான் தான் நீதிமன்றத்தில் பதில் சொல்லிக் கொள்ள வேண்டி இருக்கும்..


தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்..
உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.
என் மீது வைத்திருந்த அன்பு என்றே சொல்லிக் கொள்வோம்..


அதை எப்போது கண்டிக்காவிடில் நாளை ஒரு போலீசாருக்கு அடித்து விட்டு சொல்லுவார்கள் அர்ச்சுனாவில் உள்ள அன்பால் அடித்தோம் என்று..


வன்முறையையும் தனிப்பட்ட விளம்பரங்களையும் என்னால் அனுமதிக்க முடியாது அவ்வாறாயின் அரசியல் செய்ய முடியாது அது சாணக்கியன் சுமந்திரன் அரசியல்..


இது இராமநாதன் அர்ச்சுனாவின் அரசியல்..
யாரும் என்னை தெரியும் என்னுடன் பழக்கம் இவருக்கு காசு போடுங்கள் என்று இன்றுவரை காசு சேர்க்கவில்லை..


யாரும் நான் இவரின் நண்பன் என்று சொல்லி இன்றுவரை மார் தட்டிக் கொள்ளவில்லை..


அவரவர் தகுதிக்கேற்ப அவரவர் என் மீது கொண்ட பாசத்திற்கு ஏற்ப நியாயமானதாக என்ன உதவி கேட்டாலும் செய்யலாம்..


அர்ச்சுனாவை தெரியும் என்பதற்காக வித்தியா படுகொலை போல் போலீசாருடன் ஒருபோதும் சொல்லப்போவதில்லை அவரை விட்டு விடுங்கள் என்று..


என்னை பின்தொடர்புலுக்கு கனிவான வேண்டுகோள் தயவுசெய்து தங்களுடைய சுயலாபத்திற்காக பின் தொடர வேண்டாம்..


உங்களுக்கு தமிழினத்தின் பால் அன்பு இருக்குமாயின் நீங்கள் என்னுடன் நிக்கலாம் நான் உங்களுடன் உயிரைத் தந்து நிற்பேன்..

அர்ச்சுனாவுக்கு இரவு நடந்தது என்ன இதோ ஆதாரம்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனாவுக்கு இரவு நடந்தது என்ன இதோ ஆதாரம்

அர்ச்சுனாவுக்கு இரவு நடந்தது என்ன இதோ ஆதாரம்

அர்ச்சுனாவுக்கு இரவு நடந்தது என்ன இதோ ஆதாரம், கடந்த தினம் இரவு அர்ச்சுனா இராமநாதனனுக்கு நடந்தது என்ன ..?

மக்கள் பதட்டம் அடைந்தது ஏன் ? எதற்காக மக்கள் காவல்துறைக்கு அழைத்து அவர் தனது அறைக்குள் உள்ளாரா என பார்க்க வைத்தார் என்ற விடயம் பேசு பொருளாக்க பட்டுள்ளது .

எனவே அது தொடர்பான கட்சிகளுடன் இதோ கீழ் உள்ள காணொளியை மக்களே பாருங்கள் , வன்னி மைந்தன் டிக் டாக் லைவ் இல் நடந்தது என்ன .முழுமையன விடயம் இதோ

டிக் டாக்கில் இணைய லிங்க் இதோ

இதில் அழுத்தி வீடியோ பார்க்க

தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பம்

தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பம்

தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பம் ,இந்த ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை (04) ஆரம்பமாகவுள்ளன.

மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், சிரேஷ்ட மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள், பொலிஸ்

நிலையங்கள், சிறப்பு அதிரடிப் படை முகாம்கள், சிறப்பு பொலிஸ் பிரிவுகள் மற்றும் உயரடுக்கு பாதுகாப்புப் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நாளை தபால் மூலம் தனது வாக்கினை அடையாளப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாளைய தினத்திற்கு மேலதிகமாக குறித்த இடங்களில் 6ஆம் திகதியும் தபால் வாக்குகளை அடையாளப்படுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்களுக்கான தபால் மூல வாக்குப்பதிவு செப்டம்பர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

தபால் வாக்குகளை குறித்த திகதிகளில் அடையாளப்படுத்த முடியாத தபால் வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில், எதிர்வரும், 11, 12ம் திகதிகளில், தபால் வாக்குகளை அடையாளப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு 712,319 தபால்மூல வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதுடன், குருநாகல் மாவட்டத்தில் அதிகூடிய வாக்காளர்களாக 76,977 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று முதல் விநியோகிக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் செப்டெம்பர் 14ஆம் திகதி வரை இடம்பெறும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்டிக்கர்கள் மற்றும் சுவரொட்டிகளை வாகனங்களில் ஒட்டுவது சட்டவிரோதமானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறான வாகனங்களில் உள்ள சுவரொட்டிகள் மற்றும் ஸ்டிக்கர்களை அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன் ,கணவன் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று அவிசாவளை, கெடஹெத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இக்கொலைச் சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திவுரும்பிட்டிய, கெடஹெத்த பிரதேசத்தில் வசித்து வந்த 43 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையிலான குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞர்கள் இருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

இளைஞர்கள் இருவர் படுகொலை

இளைஞர்கள் இருவர் படுகொலை

இளைஞர்கள் இருவர் படுகொலை ,இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (02) பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பயிரிக்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது.

அநுராதபுரம், தன்னாயன்குளம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மிஹிந்து மாவத்தை, பரசன்கஸ்வெவ பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த போது, ​​நண்பருடன் கருத்து வேறுபாட்டில் இருந்த சிலர் அவரது வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, இரு குழுக்களும் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலில் காயமடைந்த இரு தரப்பையும் சேர்ந்த நான்கு பேர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரசன்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ரத்கம, சிறிகந்துரவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த நபர் ஆராச்சிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரலஜயபுர சிறிகந்துரவத்த பிரதேசத்தில் வசித்து வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தபால் வாக்காளர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும்
Posted in இலங்கை செய்திகள்

தபால் வாக்காளர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும்

தபால் வாக்காளர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும்

தபால் வாக்காளர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும் ,தமிழரசு கட்சியின் சஜித்தை ஆதரிக்கும் அறிவிப்பானது எமது பொது வேட்பாளர் விடயத்தை பாதிப்படையச் செய்யும். வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் (தபால்)

வாக்காளர்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வாரம் இடம்பெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிக்கும் வாரமாக இருப்பதனால் வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் உறுதியாக தபால் மூலம் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த பொது வேட்பாளர் விடயத்தில் சிவில் சமூக அமைப்பினர் நமக்கு ஒரு உத்தரவாதத்தினை வழங்கியிருந்தனர். தமிழரசு கட்சியையும் இந்தக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்து எமது பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற விடயத்தில் தெரிவித்திருந்தனர்.

ஆனால் தமிழரசு கட்சிக்குள்ளேயே இவ்விடயம் சம்பந்தமாக இரு வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் நேற்று இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்திருந்தனர.;

இந்த அறிவிப்பானது எமது பொது வேட்பாளர் விடயத்தை பாதிப்படையச் செய்யும் இதற்குரிய முடிவை மக்கள் உரிய காலத்தில் வழங்குவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இன்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் சஜித்தை ஆதரிக்கும் அறிவிப்பானது எமது பொது வேட்பாளர் விடயத்தை பாதிப்படையச் செய்யும். வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் (தபால்) வாக்காளர்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வாரம் இடம்பெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிக்கும் வாரமாக இருப்பதனால் வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் உறுதியாக தபால் மூலம் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த பொது வேட்பாளர் விடயத்தில் சிவில் சமூக அமைப்பினர் நமக்கு ஒரு உத்தரவாதத்தினை வழங்கியிருந்தனர். தமிழரசு கட்சியையும் இந்தக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்து எமது பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற விடயத்தில் தெரிவித்திருந்தனர். ஆனால் தமிழரசு கட்சிக்குள்ளேயே இவ்விடயம் சம்பந்தமாக இரு வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் நேற்று இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்திருந்தனர்.

இந்த அறிவிப்பானது எமது பொது வேட்பாளர் விடயத்தை பாதிப்படையச் செய்யும் இதற்குரிய முடிவை மக்கள் உரிய காலத்தில் வழங்குவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இன்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊட சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் ,சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி பகுதியில் கடந்த முதலாம் திகதி (1) இரவு இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாவடி தெற்கு பத்திரகாளி கோவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இரவு 9:30 மணி அளவில் உள் நுழைந்த மர்ம நபர்கள், இளைஞன் மீது வாள் வெட்டினை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 22 வயதான இளைஞன் கையில் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .

நான்கு பேர் கொண்ட குழுவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞன் சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் கடந்த வருடம் குறித்த இளைஞன் மீதும் தாயார் மீதும், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த வாள்வெட்டு தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெரியவராத நிலையில், மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் குற்றத் தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன மக்கள் அழுகை
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன மக்கள் அழுகை

அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன மக்கள் அழுகை

அர்ச்சுனாவுக்கு நடந்தது என்ன மக்கள் அழுகை ,மருத்துவர் அர்ச்சுனாவுக்கு என்ன நடந்தது அறை திறக்க படவில்லை .

கைது செய்யப்பட்டாரா அல்லது அவர் ஏதும் செய்து கொண்டாரா என்பது தொடர்பாக தெரியவில்லை .

மக்கள் தற்போது பெரும் ; பதட்டத்தில் உறைந்து கொண்டுள்ளனர்

வீடியோ live

அழும் நீதி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அழும் நீதி

அழும் நீதி

உளம் உடைந்து நோகிறான்
ஊருக்காக வாழ்கிறான்
எவன் உணர்ந்து கொள்கிறான்
ஏனோ இவன் ஏற்க மறுக்கிறான்

கரை முட்டி அலையும்
களைத்து நோகிறது
எழுந்தேற முடியாது
ஏனோ தட்டி தவிக்கிறது

வேகம் தரும் காற்று
வேகம் மாறி வீசிட
தோற்று போனதாய்
தொலைவில் இருந்து அழுகிறது

வேர்த்து போன உடலுடன்
வேங்கை இன்று தூங்கிறது
வேலை வரும் இலக்கிற்காய்
வேடன் அழிக்க பதுங்கிறது …

காலம் ஒரு நாள் – உன்
கால் தடம் தழுவும் – அன்று
கண்ணீரால் கண்கள் நனையும்
கரிகாலன் தேசம் உன்னை பேசும் ….

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-09-2024

மனம் உடைந்த அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

மனம் உடைந்த அர்ச்சுனா

மனம் உடைந்த அர்ச்சுனா

மனம் உடைந்த அர்ச்சுனா ,எனக்கேன் வம்பு..
இது சாதாரண தமிழன்…
வம்புகள் தானே பார்த்துக் கொள்ளலாம்..
இது இராமநாதன் அர்ச்சுனா..


இதுவரை கிடைத்த நற்பெயருடன் லண்டன் வா கனடா வா பிரான்ஸ் வா என்கிறது உறவு..


இல்லை இங்கேயே செத்து விடுகிறேன் என சொல்கிறது அப்பாவின் ஆன்மா..
மனமுடைந்து கேட்கிறேன்..சோறு தானே உண்கிறீர்கள்..


நான் இவ்வாறே விட்டுவிட்டு ஓடிப்போகிறேன் என்று சொல்லிக் கொள்வோம்..
இனியும் உங்களுக்கு ஏதாவது நம்பிக்கை உண்டா?


வீடு பிளந்து போய் இருக்கிறது..
சுமந்திரன் என்ன செய்கிறார்?
சாணக்கிய பரமாத்மா எங்கே?
அங்கஜன் ராமநாதன் எங்கே?


சித்தார்த்தனுக்கு whatsappபில் பிடிஎஃப் ஓபன் பண்ண தெரியாதா?
மனதுக்குள் அழுகிறேன்..இவ்வாறு முகநூலில் அர்ச்சுனா மனம் உடைந்து எழுதியுள்ளார் .

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு செய்யப்பட்டுள்ளது ,சங்கு சின்னத்திற்கு வாக்கினை அளிக்குமாறுஇ கோரி இந்த புதிய பாடல் ஒன்று வெளியிட பட்டுள்ளது .

பிரான்சை சேர்ந்த ஈழத்து பாடகராக விளங்கும் மயிலையூர் இந்திரன் அவர்களினால் எழுத பட்டு ,பாட பட்டுள்ளது .இதற்க்கு 13 வயது சிறுவன் இசை அமைத்து வெளியிட பட்டுள்ளது .

பொது வேட்பாளர் மிக முக்கியமாக கருதப்படுவதால் இந்த பாடல் அவருக்காக விரைந்து உருவாக்கம் பெற்று வெளியிட பட்டுள்ளது .

இந்த பாடல் உருவகத்தில் ஈடுபட்ட இந்திரன் மற்றும் இசை அமைப்பாளருக்கும் இவ்வேளை எதிரி இணையம் பாராட்டையும் வாழ்த்தினையும் தெரிவித்து கொள்கிறது .

இதில் அழுத்தி பாடல் பார்க்கலாம்

அர்ச்சுனா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா

அர்ச்சுனா

நான் உன் உறவு நம்படா
நான் கூட வருவேன் எண்ணடா
தோல்வி கண்டு தளராதே
தோற்று நீ போகாதே

வழி வரும் தடை கண்டு வாடாதே
வலி எல்லாம் வெற்றி தான் கலங்காதே
எதிரே பகை வரின் தளராதே
என்றும் நாம் இருப்போம் சோராதே ..

திடல் இருக்கு விளையாடு
திட்டம் இருக்கு அடி போடு
வீர மகன் நீ தானே
விளையாடு விவேகம் நாட்டு

எவன் வருவான் எழு பார்ப்போம்
எழுவாய் பயனிலை முன் காப்போம்
தடை போட்டார் தடை உடை
தரணியில் உன் புகழ் விதை..

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-09-2024

ஏன் அழுகின்றாய்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஏன் அழுகின்றாய்

ஏன் அழுகின்றாய்

தனிமையில் நீ இருந்து
தங்கமே ஏன் அழுகின்றாய்
அங்கமெல்லாம் தினம் வாட
ஆர் உயிரே ஏன் நோகிறாய் ,,

உண்ணாமல் நீ இருந்து
உயிரே தினம் வாடலாமோ
என் நாளும் நான் வாட
என் உயிரே வைக்கலாமா

இன்பம் துன்பம் இரு பாதி
இதயமே புரிந்து விடு
வாழும் போதே
வசந்தமாய் வாழ்ந்து விடு

கண் இருந்து நீர் வடிய
கண்ணே இதயம் நோகுதே
மண்ணை விட்டு போக தானே
மனமே எண்ணுதே

உள்ளம் நீ வாட
உறங்க முடியலையே
என் மனதை
ஏ மனமே புரிந்து விடு…..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-09-2024

காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம்

காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம்

காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம் ,தமிழரசு கட்சியின் கூட்டத்தில் கலந்து கொள்ள காய்ச்சல் காரணமாக தவறிய மாவை சேனாதிராசா தோழர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் .

யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள தர்மலிங்கம் நினைவு தூபியில் ,அவரது நினைவு நாளில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் .

இதில் தர்மலிங்கத்தின் மகனான சித்தார்த்தன் ,அவருடன் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோர் கலந்து கொண்டு தமது நினைவு அஞ்சலியை செலுத்தி .கொண்டனர்

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக ,தமிழரசு கட்சி செயலாற்ற போவதாக அறிவிக்க பட்ட நிலையில் ,மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது .

அதனை அடுத்து தற்பொழுது தமிழரசு கட்சி பொதுவேட்பாளருக்கு ஆதரவு தரமறுத்து சஜித்துக்கு ஆதரவை வழங்கிட முன் வந்த நிலையில் ,அந்த கட்சியின் கூட்டத்தில் வக்கெடுப்பில் கலந்து கொள்ள தனக்கு காய்ச்சல் சுகவீனம் என கூறி தப்பித்து கொண்ட மாவை தற்போது தோழர் நினைவிடத்தில் கொட்டாவி விட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார் .

பெட்டிகளுக்கு இவர்கள் பேரம் போயுள்ளது இந்த கட்சி படத்தை பார்க்கின்ற பொழுது தெளிவாகிறது .

அரசியல் வியாபாரிகள் இவர்கள் என மக்கள் கோரியது உண்மை தான் போலும் .

விமானம் 22 சுட்டுவீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

விமானம் 22 சுட்டுவீழ்த்தல்

விமானம் 22 சுட்டுவீழ்த்தல்

விமானம் 22 சுட்டுவீழ்த்தல் ,உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட ரஷ்ய தற்கொலை வெடிகுண்டு விமானங்கள் 22 சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் வான் காப்பு படைகள் தெரிவித்துள்ளன .

கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட ரஸ்யாவின் அகோர தாக்குதலில் 22 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாகவும் ,20 ஏவுகணைகள் உள்ளிட்டவை சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

வடகொரியா மற்றும் ஈரான் ஏவுகணையை ரஸ்யா பயன்படுத்தி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ரஸ்யா நடத்தும் இந்த தாக்குதலில் மிக பெரும் யுத்தம் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .

M-60 டாங்கிகள் ஈரான் இராணுவ தரைப்படை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

M-60 டாங்கிகள் ஈரான் இராணுவ தரைப்படை

M-60 டாங்கிகள் ஈரான் இராணுவ தரைப்படை

M-60 டாங்கிகள் ஈரான் இராணுவ தரைப்படை களிடம் ஒப்படைக்கப்பட்டன
தெஹ்ரான், செப். 01 (எம்என்ஏ) – ஷாஹித் ஜர்ஹரன் படைமுகாமில் ராணுவத் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் செயத் அப்துல்ரஹிம் மௌசவி முன்னிலையில்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், புதிய மாற்றியமைக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட எம்-60 டாங்கிகள் ஒப்படைக்கப்பட்டன.

ஈரான் இராணுவம் திடீரென களமிறங்கிய இந்த டாங்கிகள் மிக பெரும் பேரழிவை ஏற்படுத்த வல்லது என தெரிவிக்க பட்டுள்ளது .

களம் இறக்க பட்ட இந்த டாங்கிகள் வருகை எதிரி இராணுவத்தை மிக பெரும் நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது என்கிறது இராணுவம் .

மத்திய கிழக்கு நாடுகள் மீது இஸ்ரேல் அமெரிக்கா கூட்டு படைகள் இணைந்து தாக்குதல் நடத்த கூடும் என்ற நிலையில் இந்த டாங்கிகள் களம் இறக்க பட்டுள்ளது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

4 பேர் அமெரிக்காவில் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

4 பேர் அமெரிக்காவில் பலி

4 பேர் அமெரிக்காவில் பலி

4 பேர் அமெரிக்காவில் பலி ,அமெரிக்காவின் ஹவாயில் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர், 2 பேர் காயமடைந்தனர்

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க பொலிஸார் திங்கள்கிழமை அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள ஹொனலுலு கவுண்டியில் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில்

சந்தேக நபர் உட்பட நான்கு பேர் இறந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாக உள்ளூர் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

11:15 மணிக்குப் பிறகு சிறிது நேரம். சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி (ஞாயிற்றுக்கிழமை 0915 GMT), வயானே பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்கு காவல்துறை அதிகாரிகள் பதிலளித்ததாக ஹொனலுலு காவல் துறை தெரிவித்துள்ளது.

Waianae வசிப்பிடத்திலிருந்து வரும் பல 911 அழைப்புகள், அவர்களது பக்கத்து வீட்டுக்காரர் ஒரு முன் லோடரை இயக்குவதாகவும், பல கார்களை வீட்டிற்குள் செலுத்துவதற்கு அதைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பல நபர்கள் கார்போர்ட்டில் இருந்தனர் மற்றும் சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது தப்பியோடினார் அல்லது தப்பி ஓட முயன்றார், பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கினார் என்று திணைக்களம் ஒரு

செய்திக்குறிப்பில் கூறியது, சில சமயங்களில், வீட்டில் வசிக்கும் 42 வயதுடைய ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கைத்துப்பாக்கியுடன் சந்தேக நபர், சின்ஹுவா தெரிவித்துள்ளது.

சந்தேக நபரை சுட்டுக்கொன்ற குடியிருப்பாளர் இரண்டாம் நிலை கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சந்தேக நபர் உட்பட மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. கூடுதல் நபர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்” என்று திணைக்களம் முன்பு ஒரு பேஸ்புக் பதிவில் கூறியது.

சில மணிநேரங்களுக்குப் பிறகு, காயமடைந்தவர்களில் ஒருவர் மருத்துவமனையில் இறந்துவிட்டார், மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று திணைக்களம் ஒரு புதுப்பிப்பில் உறுதிப்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து ஆலோசிக்க ஹொனலுலு போலீசார் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். “முந்தைய மாதங்கள் மற்றும் வாரங்களில் பல சம்பவங்கள் நடந்துள்ளன, ஆனால் இந்த சம்பவம் அவற்றுடன் தொடர்புடையது அல்ல.

இந்த சம்பவம் அண்டை வீட்டாரின் விளைவாக நடந்தது” என்று ஹொனலுலு காவல்துறை தலைவர் ஜோ லோகன் உள்ளூர் செய்தி நிறுவனமான HawaiiNewsNow மூலம் மேற்கோள் காட்டினார்.

துப்பாக்கிச் சூடு “ஒரு சீரற்ற செயல் அல்ல, ஆனால் இலக்கு வைக்கப்பட்டது.”

Waianae பள்ளத்தாக்கு பகுதி ஓஹு தீவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது, இது மாநில தலைநகரான ஹொனலுலுவின் தாயகமாகும்.

வெஸ்ட் ஓஹுவில் நடந்த வன்முறைக் குற்றங்களின் சமீபத்திய துப்பாக்கிச் சூடு.

பல துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகளுக்குப் பிறகு, “சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் சமீபத்திய வன்முறைச் சம்பவங்களால் விரக்தியடைந்து சோர்ந்து போயிருப்பதாக” உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்

பதின்ம வயதினரை உள்ளடக்கிய பலர், உள்ளூர் KITV தொலைக்காட்சி வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது, “சமீபத்திய சோகங்கள் கட்டாயப்படுத்துகின்றன. மாநில தலைவர்கள் இதில் ஈடுபட வேண்டும், இங்கு சட்ட அமலாக்கத்தை அதிகரிக்க வேண்டும்.”

இரண்டு கப்பல் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இரண்டு கப்பல் தாக்குதல்

இரண்டு கப்பல் தாக்குதல்

இரண்டு கப்பல் தாக்குதல் ,யுனைடெட் கிங்டம் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) திங்கள்கிழமை காலை ஒரு புதிய அறிக்கையில், யேமனின் சலீஃப் நகருக்கு வடமேற்கே 70NM தொலைவில் ஒரு சம்பவம் நடந்ததாக அதன் ஆதாரங்களில் இருந்து ஒரு அறிக்கை கிடைத்துள்ளது.

“செப் 02, 2024 அன்று 0410UTC UKMTO க்கு யேமனின் சலீஃப் நகருக்கு வடமேற்கே 70NM தொலைவில் ஒரு சம்பவம் பற்றிய அறிக்கை கிடைத்தது” என்று UKMTO ஒரு அறிக்கையில் கூறியது.

“ஒரு வணிகக் கப்பலின் மாஸ்டர், கப்பலை 2 அறியப்படாத எறிகணைகள் தாக்கியதாகத் தெரிவிக்கின்றன.

சேதத்தைக் கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று அறிக்கை மேலும் கூறியது.

காசா மீதான அதன் ஆக்கிரமிப்புகள் மற்றும் பாலஸ்தீன தேசத்திற்கு எதிரான அதன் குற்றங்கள் நிறுத்தப்படும் வரை சியோனிச ஆட்சியின் கப்பல்கள் மற்றும் நலன்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று ஏமன் ஆயுதப்படைகள் அறிவித்துள்ளன.

டெல் அவிவ் அக்டோபர் 7, 2023 முதல் இஸ்ரேலிய ஆட்சிக்கு ஆதரவாக யேமன் மீது ஆக்கிரமிப்பைத் தொடங்கிய இஸ்ரேலிய ஆட்சி மற்றும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடைய செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் டஜன் கணக்கான கப்பல்களை யேமன்கள் குறிவைத்துள்ளனர்.

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படு கொலை பிரச்சாரத்தை ஆட்சி தொடங்கியது.

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில் ,அன்பு தம்பி வன்னி மைந்தன் மற்றும் தம்பி ரகுராம் அவரகட்கு.

உங்கள் அர்ச்சுனா பற்றிய உரையாடல் கேட்டேன்! தமிழ் அரசியல் ஊழல் வாதிகள் அவர்களுக்கு உதவிடும் சிவில் சேவை அமைப்புக்கள், இதில் மதத்தலைவர்களும் அடங்கும். இந்த நிலமைகளை நிதானமாக ,அவதானமாக கவனித்த தம்பி தேசிய தலைவர் அவர்கள் கூறிய இறுதி வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

எங்கள் எதிர்கால அரசியலை எமது இளைஞர்களின் கையில் ஒப்படைக்கின்றேன் என்பதுதான்?.

ஆகவே இப்போது நடப்பது அதுதான். அதை செயல்படுத்த எங்களுக்கு ஒரு இளைஞன் கிடைக்கமாட்டானா என்று கடந்த 15 வருடமாக காத்திருந்த எமக்கு கிடைத்த விடி வெள்ளி வைத்தியர் அரச்சுனா.

ஒவ்வொரு தன்மானமுள்ள தாயகத்தில் உள்ள தமிழனும்,புலம்பெயர் உறவுகளும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எமது பேரவா! தமிழர் ஒற்றுமை பேணப்படவேண்டும் என்றால் பொது வேட்பாளருக்கு,அவர்கள் ஏற்றுக் கொண்டார்களோ இல்லையோ அவர்களுக்கு வாக்களிப்போம்.

ஆனால் அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் கல்விமான்களான இளைஞர்களை தேர்தலில் நிறுத்துவோம்.


எங்கள் சிந்தனை என்ன என்றால் வடக்கு, கிழக்கில் இப்போதுள்ள மருத்துவ மாபியாக்களை,இவர்களுக்கு துணையாய் இருக்கும் ஊழல் அரசியல்வாதிகளை,அரசியல்வாதிகளின் குடையின் கீழ் இயங்கும் சிவில் அமைப்பினரை, குருமாரை துடைத்தெடுத்து கள்ளங் கபடமற்ற ,வெளிப்படைத்தன்மையாகப்பேசும் டாக்டர்.

அர்ச்சனாவின் தலமையின் கீழ் நிரந்தரமான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை எம்மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எமது பேரவா.

2009 இதன் பின் சலித்துப்போயிருந்த எமக்கு இன்று அர்ச்சுனா ஒரு நம்பிக்கை விடி வெள்ளி.

ஆகவே, உங்களைப் போன்றவர்கள் அர்ச்சுனாவின் சிந்தனைகளை உள்வாங்கி அவருக்கு எதிராக செயல்படும் மாபியாக்களுக்கு துணை போகாமல் தர்மத்தின் பாதையில் செல்ல வேண்டும் என்பதே எமது பேரவா.

ஆகவே படித்த பண்புள்ள,மூன்று மொழிகளிலும் சரளமாக உரையாடக்கூடிய பட்டதாரிகளை பாராளுமன்றம் அனுப்புவோம்.

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்: . எனது மனைவி வீட்டில் இருந்து 5வது வீடு அர்ச்சுனாவினுடைய அப்பா வீடு. இவர்கள் பெரிய விழானை பூர்வீகமாக கொண்டவர்கள்.

அர்ச்சுனாவினுடைய சித்தப்பா என்னுடன் இளவாலை புனித கென்றி அரசர் கல்லூரியில் படித்தவர்.அர்ச்சுனா இப்போது வலம் வரும் தட்டுவாணிகளைப்போல் அல்ல.

யாழ்ப்பாணம் ராணி தியேட்டர் ,ஶ்ரீதர் தியேட்டர்,ஹரன் தியேட்டர். உரிமையாளர் திரு. இரத்தின சபாபதியின் பேரன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வடக்கிலும், கிழக்கிலும் 146 பேரூந்துகளை வைத்து பஸ் கம்பனி நடத்திய நாகலிங்கத்தின் பேரனாவார்.

யாழ். ஸ்ரான்லி வீதியில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் விற்கும் மகேந்திரா அன் கம்பனி திரு. நித்தியானந்தத்தின் மருமகனாவார்.இவர் உறவினர்கள் அகதிகளாக பிரித்தானியா சென்றவர்கள் அல்ல.1960 முன்பதாகவே அங்கு குடியேறியவர்கள்.

அர்ச்சுனா வாய்திறந்தால் கோடியாக கொட்டி கொடுப்பதற்கு உறவினர்கள் தயாராக இருக்கின்றார்கள்.ஆனால் அவரது நேர்மை, பணிவு,ஒளிவு மறைவு இன்மை, கல்வித்தகமை,தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பாசம் இதனால் அவர் எதைக்குறித்தும் அலட்டிக்கொள்ளவில்லை.


ஆம் அன்பான உறவுகளே! எம் சமூக நீதிக்காக அர்ச்சனா வழியில் போராடுவோம்.”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”என்பதை மன்னாரில் கண்ணால் கண்டோம்.கலந்து கொண்ட அனைத்து உள்ளங்கட்கும் நன்றி!.

மருத்துவ பராமரிப்பு இல்லாமல் எம்மை விட்டு பிரிந்த எம் அன்பு மகள் சிந்தூஜா,அவர் கணவர் மரியராஜிற்காக நாம் இறைவனிடம் வேண்டுவோம்.

இதை எல்லாவற்றையும் தன் இதயத்தில் சுமந்து வலிதாங்கிய எம் அன்பு மகன் டாக்டர். அர்ச்சுனாவின் நெஞ்சுரத்திற்கு நன்றி கூறுகின்றேன்.


டேவிட் அந்தனி( பிரான்ஸ்சிலிருந்து) என்ற வாசகர் அர்ச்சுனா உடன்பிறந்த அண்ணா ரகுராம் பேச்சு கேட்டு வாசகர் ஒருவர் எழுதிய மடல் இது .

நன்றி டேவிட் அண்ணா .