பாயும் பெண் புலி
பாயும் பெண் புலி
காடு காத்த கரும்புலியை
கா தழைத்து கொன்றவரே
செய்த செயல் தவறாச்சு – சிசு
செம்புலியாய் பாய்ந்திருச்சு
கோட்டையிலே கொடி கட்டி
கொடுமைகளை உடைத்தெறிய
வீரமுடன் வந்திருச்சு – திறன்
விவேகமது கொண்டிருச்சு
நான் என்ற ஆணவத்தில்
நாடாண்ட கோமகனே
முடி தரித்த உன் ஆட்சி
முள் வேலியில் வீழ்ந்திருச்சு
அவள் அழுத கண்ணீர் துளி
அனலாக கொத்திருக்கு
குற்றவாளி உங்களை தான்
கூண்டில் அடைக்க வந்திருக்கு
வால் ஆட்டி திரிந்தவரும்
வாயாட்டி நகைத்தவரும்
சிறை புகும் காலமிது
சிரித்து இன்று மலர்கிறது
ஆதிக்க வெறி என்றும்
அரங்கமதில் நிலைக்காது
நீதியின் வெற்றிடங்கள்
நிரம்பிடா உறங்காது
வீரப்பன் விழிக்கின்றான்
விடுதலையை அழைக்கின்றான்
சத்திய தேவதை யோ
சரிதம் எழுத வருகிறாள்
நாம் தமிழர் ஆட்சியில்
நல்லாட்சி செய்திடுவாள்
நலிந்த மக்கள் மகிழ்ந்திடவே
நல்லுதவி புரிந்திடுவாள் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-03-2024
23-03-2024 நாம் தமிழர் கட்சியில் 40 வேட்பாளர் போட்டியில் வீரப்பன் மகள் சத்தியா போட்டியிட்ட செய்தி அறிந்த பொழுது …
- மீள வருவாயா
- ஒரு நாள் வெல்வேன்
- எப்படி நான் பேசிடுவேன்
- என்னை விடு
- நேரில் வந்து விடு
- என் உயிரே நான் வெல்வேன்
- என்னை ஏற்று விடு
- என்னை அழைப்பாயா
- அடைத்து வைக்க வாவேண்டி
- கவலைப் படுகிறேன்
- யார் மேல் குற்றம்
- காதலே சோகமா
- கண்டதெல்லாம் கனவு
- ஏமார்ந்த காதல்
- அர்ச்சுனா ஆவி பேசிறது
- எனக்கு என்ன ஆச்சு
- எனக்கொரு பதில் சொல்லாயோ
- உன்னால் தவிக்கிறேன்
- மன்னித்து விடு
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
- அழும் நீதி
- அர்ச்சுனா
- ஏன் அழுகின்றாய்
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
போர் கப்பல்கள் இரண்டின் மீது தாக்குதல் வெடித்த பெரும் சமர்
போர் கப்பல்கள் இரண்டின் மீது தாக்குதல் வெடித்த பெரும் சமர்
போர் கப்பல்கள் இரண்டின் மீது திடீர் தாக்குதல் .
வெடித்த பெரும் சமர் ,கடலடியில் இடம்பெற்ற அதிர்ச்சிகர தாக்குதல்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் ஜனாதிபதி ரணில்
பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் ஜனாதிபதி ரணில்
புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றும், கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் போல எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதை
உறுதிசெய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
ஏனைய அரசியல்வாதிகள் பொறுப்பேற்கத் தயங்கிய நாட்டையே தான் பொறுப்பேற்றதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சிலர் தமது அரசியல் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்தித்த போதும், தான் நாட்டின் எதிர்காலத்தை பற்றியே சிந்தித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
பொலன்னறுவையில் நடைபெற்ற ‘யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம்’ உடனான சிநேகபூர்வ கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
‘ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்’ என்ற இச்சந்திப்பில் நாட்டின் எதிர்காலம் மற்றும் தூரநோக்குக் குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, இளையோரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்
பால் தேநீர் விலையில் மாற்றம்
பால் தேநீர் விலையில் மாற்றம்
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பால் தேநீரின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விலை குறைக்கப்பட்ட பால் மா சந்தைக்கு வந்த பின்னர், பால் தேநீரின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போது 100 ரூபாயாக உள்ள பால் தேநீரின் விலை 90 ரூபாயாக குறையும்.
இதேவேளை, புறக்கோட்டையை அண்மித்த பகுதியில் பால்மா அல்லாமல் டின்பால் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பால் தேநீர் தற்போது 60 முதல் 80 ரூபாய் வரை உள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பறவை கூடுகளுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்கள்
பறவை கூடுகளுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்கள்
தம்புத்தேகம கல்வி வலயத்துக்குட்பட்ட ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவர்களுக்கு பறவைக் கூடு ஒன்றைக் கொண்டு வருமாறு அனுப்பிய வட்ஸ்அப் தகவலுக்கு அமைய மறுநாள் நாற்பது மாணவர்கள் பறவைக் கூடுகளுடன் வகுப்புக்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பறவைக் கூடு கொண்டு வரச் சொல்லி சுமார் அறுபது மாணவர்களுக்கு வட்ஸ்அப் மூலம் ஆசிரியர் செய்தி அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து, சுமார் நாற்பது மாணவர்கள் பறவைக் கூடுகளுடன் பாடசாலைக்கு வந்துள்ளனர்.
பறவைக் கூட்டுடன் குழந்தைகளை வகுப்பறைக்கு அழைத்து வந்த பெற்றோர்கள் வகுப்பறையில் ஏராளமான பறவைக் கூடுகளைக் கண்டு ஆசிரியரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பறவை கூடுகளுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்கள்
இயற்கைச் சூழலில் பறவைக் கூடுகளை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு பதிலாக இவ்வாறு பறவைக் கூடுகளை அழிக்கக் கற்றுக் கொடுப்பது குறித்து பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பிரதேச செயலாளருக்கு பெற்றோர்கள் அறிவித்துள்ளனர். தம்புத்தேகம கல்வி வலய ஆரம்பக் கல்வி உதவிப் பணிப்பாளர் உபாலிசேன இது தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 31ஆவது பிரிவின்படி பறவைக் கூடுகளை உடைப்பது, அகற்றுவது மற்றும் அழிப்பது சட்டப்படி குற்றமாகும் என சிரேஷ்ட சுற்றாடல் சட்டத்தரணி கலாநிதி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அந்தச் சட்டத்தின்படி பறவைக் கூண்டுகளும் பாதுகாக்கப்பட வேண்டியலை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்
மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களை தமக்கு தெரியும் என மைத்திரிபால சிறிசேன கண்டியில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
குறித்த அறிக்கை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.
மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்
இதன்படி, வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 10.30 மணி அளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் மைத்திரிபால சிறிசேன பொய்யான தகவல்களை வெளியிட்டதாக பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அது தொடர்பில் தெரிவிக்கும் சட்டப் பொறுப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சியோனிச படைகளை ஓட ஓட போட்ட போராளிகள்
சியோனிச படைகளை ஓட ஓட போட்ட போராளிகள்
சியோனிச படைகளை ஓட ஓட போட்ட போராளிகள், 190 ஏவுகணை 140 விமானங்கள் மூலம் தாக்குதல் , போர்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

ஹமாசிடம் கெஞ்சும் இஸ்ரேல் வெற்றி பெறும் போராளிகள்
ஹமாசிடம் கெஞ்சும் இஸ்ரேல் வெற்றி பெறும் போராளிகள்
ஹமாசிடம் கைதிகளை விடுவிக்க கெஞ்சும் இஸ்ரேல் ,தொடர்ந்து டிமாண்ட்
விதிக்கும் ஹமாஸ் போர் படை புலிகள் ,வெற்றி பெறும் போராளிகள் ,திணறும் எதிரிகள்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை மோசடி டொக்டர் கைது
இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை மோசடி டொக்டர் கைது
சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
குறித்த நபர் கொழும்பு 07, விஜேராம மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் அவர் வைத்தியராகவும் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை மோசடி டொக்டர் கைது
சந்தேக நபர் நாரஹேன்பிட்டியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பணத்தை பெற்றுக் கொள்வதற்காக மக்களை அழைத்துள்ளார்.
சந்தேகநபர் 9 பேரிடம் இருந்து 7 லட்சத்து 65 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும், அவருக்கு பணம் வழங்கிய நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை கொழும்பு இல 5 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த மோசடிக்கு உதவிய அவரது மனைவி, விசாரணை அதிகாரிகளை தவிர்த்து தலைமறைவாகி இருப்பதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெள்ளவத்தை நோ லிமிட்டில் பாரிய தீ
வெள்ளவத்தை நோ லிமிட்டில் பாரிய தீ
வெள்ளவத்தையில் உள்ள நோ லிமிட் ஆடையகத்தில் பாரிய தீ பரவியுள்ளது.
அந்த தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த தீயால் அப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
புளியம்பக்கணை நாகதம்பிரான் பங்குனி உத்திர பொங்கல்
புளியம்பக்கணை நாகதம்பிரான் பங்குனி உத்திர பொங்கல்
புளியம்பக்கணை நாகதம்பிரான் பங்குனி உத்திர பொங்கல் நேற்று (24) இடம்பெற்றது.
வரலாற்று சிறப்பு மிக்க கிளிநொச்சி – கரைச்சி, புளியம்பக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்திர பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த பொங்கல் நிகழ்வுக்காக கடந்த 17 ஆம் திகதி பண்டம் எடுத்து வர புத்தூர் பண்டமாவடி சென்று அங்கு மக்களிடம் சேகரிக்கப்பட்ட பொருட்களை மாட்டு வண்டில்களில் நேற்று கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஹிஸ்புல்லா மரண அடியில் கோலன் படை அழிப்பு
ஹிஸ்புல்லா மரண அடியில் கோலன் படை அழிப்பு
ஹிஸ்புல்லா மரண அடியில் கோலன் படை அழிப்பு .
ஏவுகணைகள் ,பீரங்கிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது ,இஸ்ரேல் முக்கிய கோலன் படை தளம் தாக்குதல் இலக்கு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

கொழும்பு புறநகர் பகுதிகளில் McDonalds இயங்கத் தடை
கொழும்பு புறநகர் பகுதிகளில் McDonalds இயங்கத் தடை
McDonald’s வர்த்தக நாமத்தின் கீழ் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 12 உணவகங்கள் இயங்குவதற்கு தடை விதித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவர்களது உடன்படிக்கைகளில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் ஆதார நிறுவனம் முறைப்பாடு செய்ததை அடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்டொனால்ட் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடக பாவனையாளர்கள் பலரும் பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

- அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை

- இருவர் வெட்டி படுகொலை

- லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் விசாரணை

ஏன் வர மறுக்கிறாய்
ஏன் வர மறுக்கிறாய்
காலை வந்து எனை எழுப்பும்
கதிரவன் போல் நீ இருந்தால்
நெஞ்சம் எல்லாம் உன்னை சுமக்கும் – உன்
நினைவுடனே மனம் வாழும்
மெல்ல வந்து தாலாட்டும்
மெல்லிசை தென்றல் போல
எனை வந்து நீயணைத்தால்
என் ஏக்கம் தீர்ந்து போகும்
சின்ன மீசை மெல்ல வந்து
சீக்கிரமே குற்றும் என
எண்ணியிருக்கும் இக் காலம்
ஏக்கமின்றி தீர்ந்து போகும்
மஞ்சம் மட்டும் உன்னை எண்ணி
மணி கணக்காய் காத்திருக்க
நெஞ்சே வர மறுப்பதென்ன – என்
நியம் காண தவிர்ப்பதென்ன ..?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 24-03-2024
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

ஹிஸ்புல்லா தாக்குதல் எரியும் இஸ்ரேல் ஆயுத களஞ்சியம்
ஹிஸ்புல்லா தாக்குதல் எரியும் இஸ்ரேல் ஆயுத களஞ்சியம்
ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் எரியும் இஸ்ரேல் ஆயுத களஞ்சியம் .
வடக்கு இஸ்ரேல் இராணுவ தளங்கள் கடும் சேதம் ,வெடித்த உச்ச கட்ட மோதல் ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

இந்தியாவில் பெரிய வெங்காயம் ஏற்றுமதி தடை நீடிப்பு
இந்தியாவில் பெரிய வெங்காயம் ஏற்றுமதி தடை நீடிப்பு
பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையை மறு அறிவித்தல் வரை நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் வெங்காயம் அதிக அளவில் இருப்பில் இருப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு கூறுகிறது.
கடந்த டிசெம்பரில், இந்திய அரசு பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது, வரும் 31ம் திகதியுடன் இந்த தடை முடிவடைய இருந்தது. பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதால், இந்திய சந்தையில், பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக சரிந்தது.
எதிர்வரும் தேர்தலை குறி வைத்து, விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஏற்றுமதி தடையை நீடிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலக அளவில் வெங்காய ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.இந்த தடை காரணமாக பல நாடுகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதற்கு இந்தியா விதித்துள்ள தடையே பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஹவுதி அடியில் எரியும் ஒயில் கப்பல் இஸ்ரேல் தளபதி அவுட்
ஹவுதி அடியில் எரியும் ஒயில் கப்பல் இஸ்ரேல் தளபதி அவுட்
ஹவுதி அடியில் எரியும் ஒயில் ,செங்கடலில் வெடித்த புது யுத்தம் ,திணறும் கப்பல் போக்கு வரத்து .
இஸ்ரேல் இராணுவ தளபதி ஹமாஸ் தாக்குதலில் அவுட்
வீடியோ ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

ஜனாதிபதி ரணிலுக்கு இன்று பிறந்த தினம்
ஜனாதிபதி ரணிலுக்கு இன்று பிறந்த தினம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்த தினம் இன்று (மார்ச் 24) ஆகும். நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் 1948 இல் பிறந்த ரணில் விக்கிரமசிங்க கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
1977 ஆம் ஆண்டு பியகம தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்றம் பிரவேசித்த ரணில் விக்கிரமசிங்க, அதன் பின்னர் தொடர்ந்து 47 வருடங்களாக
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். நாட்டில் 6 முறை பிரதமர் பதவியை வகித்து சாதனை படைத்த ஜனாதிபதி விக்ரமசிங்க, சவால்களை தைரியமாக ஏற்றுக்கொண்டார்.
’அரகலய’ போராட்டத்திற்குப் பிறகு, அனைத்துக் கட்சித் தலைவர்களும் நாட்டின் பிரதமர் பதவியை ஏற்கத் தயங்கியபோது, அவர் நாட்டின் பொறுப்பை ஏற்றார் .
தேர்தல் சட்ட ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு
தேர்தல் சட்ட ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு
தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம் இறுதி
அறிக்கையை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை அரசாங்கம் நீட்டித்துள்ளது.
அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன் அளிக்க வேண்டும் என்று முன்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் மேலும் இரண்டு
மாதங்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஜூன் 15ம் திகதி அறிக்கை கையளிக்கவேண்டும்.
வீதியோரத்தில் உள்ள முட்புதர் ஒன்றில் சடலம்
வீதியோரத்தில் உள்ள முட்புதர் ஒன்றில் சடலம்
ஹப்புத்தளை, பிடபொல பிரதேசத்தில் வீதியோரத்தில் உள்ள முட்புதர் ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (23) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதுடைய இதல்கஸ்ஹின்ன, போவத்த பகுதியைச் சேர்ந்தவராவார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






























