காணிகளை விடுவிக்ககோரி போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

காணிகளை விடுவிக்ககோரி போராட்டம்

காணிகளை விடுவிக்ககோரி போராட்டம்

முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி கேப்பாப்புலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை புதன்கிழமை (27) முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள முல்லைத்தீவு கேப்பாப்புலவு இராணுவ படை தலைமையகத்திற்கு இலங்கையின் இராணுவ தளபதி வருகை தந்திருந்தார். அவரிடம் தமது சொந்த காணிகளை விடுவித்து தருமாறு கோரி மகஜர் கையளிக்க குறித்த இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக ஒன்று கூடி கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்

எனினும் இராணுவ தளபதியை தற்போது சந்திக்க முடியாதெனவும் புதன்கிழமை (27) மாலை 3 மணியளவில் 5 நபர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு மேற்கொண்டு தருவதாகவும் இராணுவத்தினால் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த கவனயீர்ப்பினை நிறைவுக்கு கொண்டு வந்திருந்தனர்.

காணிகளை விடுவிக்ககோரி போராட்டம்

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கும் கடந்த 11.03.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்திருந்தனர். இதன்போது குறித்த கடிதத்தை தான் உரிய தரப்புக்களுக்கு அனுப்பி பத்து நாட்களில் ஒரு பதிலை பெற்று வழங்குவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் திங்கட்கிழமை (25) கேப்பாபுலவு மக்கள் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடிய போது தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் உறுதியான முடிவு இதுவரை கிடைக்கவில்லை என மாவட்ட செயலாளர் தெரிவித்ததாக கேப்பாபுலவு மக்கள் தெரிவித்திருந்தனர்.

கேப்பாப்புலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம் , ஆலயங்கள் , தேவாலயம், பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்ட மக்களின் குடியிருப்புக்கள் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது..

குறிப்பாக மக்களின் பயன்தரு தென்னை மரங்கள் பல குறித்த காணியிலேயே காணப்படுகின்றன. 62 நபர்களின் 171 ஏக்கர் காணிகள் தற்போது விடுவிக்கப்படாது இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல் அதிரும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல் அதிரும் இஸ்ரேல்


இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல் அதிரும் இஸ்ரேல்

இஸ்ரேல் விமான தளம் மீது இராக் போர் படைகள் ஏவுகணை ,விமான தாக்குதல் அதிரும் இஸ்ரேல் .

நநான்கு முனைகள் ஊடாக நடத்த பட்டு கொண்டிருக்கும் பலமான தாக்குதல்கள்

வீடியோ

சீமான்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

சீமான்

சீமான்

நட மாடும் ஊடகமே
நான் கண்ட நூலகமே
புல்லரிக்கும் உன் பேச்சால்
புலி கூட புல் உண்ணும்

சொல் அடுக்கு உன் மொழிகள்
செல் அடிகள் போலிருக்கும்
மறவாது நினைவிருத்தும்
மாசற்ற பேச்சு இருக்கும்

மறந்த தமிழ் வரலாற்றை
மணி கணக்காய் கற்பிக்கும்
செயல் நெறி வித்தகனே
செந்தமிழன் நீ தானே

இக்கால அரசியலில்
இடி முழக்கம் நீ தானே
இரத்தத்தை சூடேற்றும்
இயந்திரம் நீ தானே

வீர பிறப்பெடுத்த
வீர புலி மகனே
கோட்டை பல நடுங்குதடா – உன்
கொள்கையாலே எரியுதடா

ஆர்ப்பரித்த கூட்டத்தில்
ஆர தழுவுகின்ற
நேசத்தின் முதல் மகனே – எம்
நெஞ்சம் எல்லாம் நீதானே…!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 27-03-2024

எரியும் இஸ்ரேல் கட்டடங்கள் வெடித்து 50 ரொக்கட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் இஸ்ரேல் கட்டடங்கள் வெடித்து 50 ரொக்கட்


எரியும் இஸ்ரேல் கட்டடங்கள் வெடித்து 50 ரொக்கட்

எரியும் வடக்கு இஸ்ரேல் கட்டடங்கள் ,குடியேற்ற பகுதியில் ,ஹிஸ்புல்லா இராணுவதின் வெடித்து 50 ரொக்கட் ,
மிக பெரும் இழப்பு என அறிவிப்பு

இஸ்ரேல் ,ரொக்கட்,ஹிஸ்புல்லா இராணுவதின்,வடக்கு இஸ்ரேல் , பெரும் இழப்பு,

வீடியோ

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து DIG விடுவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

2 வீடுகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவிப்பு

2 வீடுகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தெஹிவளை மற்றும் பேருவளை பிரதேசத்தில் அமைந்துள்ள 2 சொகுசு வீடுகள் அல்கொய்தா மற்றும் தௌஹீத் ஜமாத் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக உண்மைகள் வெளியாகியுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம முன்வைத்த விடயங்களை பரிசீலித்த பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம், ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அந்த வீடுகளின் உரிமையாளர்கள் தாக்கல் செய்த 2 அடிப்படை உரிமை மனுக்களை நிராகரிக்குமாறும் கோரியுள்ளார்.

இந்த மனுக்கள் நேற்று (26) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில் குறித்த இரு வீடுகளிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம நீதிமன்றில் தெரிவித்தார்.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் லுக்மான் தாலிஃப் என்ற நபர் இந்த வீடுகளின் உரிமையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்ததாக அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி தெரிவித்ததோடு, குறித்த வீடு தௌஹீத் ஜமாத் மற்றும் அல்கொய்தாவின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த வீடுகள் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பான வகுப்புகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.

தமக்கு வழங்கப்பட்ட திருப்திகரமான தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த வீடுகளை பொலிஸாருக்குக் காவலில் வைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதால் மனுதாரர்களின் அடிப்படை மனித உரிமைகள் இந்த உத்தரவின் மூலம் மீறப்படாது என அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் குறித்த மனுக்களை நிராகரிக்குமாறு நீதிமன்றில் மேலும் கோரிக்கை விடுத்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சுற்றுலாத்துறை பாதிக்கும் பாதாள உலக செயற்பாடுகள்

சுற்றுலாத்துறை பாதிக்கும் பாதாள உலக செயற்பாடுகள்

நாட்டில் நிலவும் சூழல்நிலை சுற்றுலாத்துறையின் வளர்ச்சியுடன் நேரடியான தொடர்பை கொண்டுள்ளது என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தென் மாகாணத்தில் இடம்பெறும் பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

”பாதாள உலக செயற்பாடுகள் போன்ற பயங்கரமான சம்பவங்களால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். பெந்தர, அஹுங்கல்ல, கொஸ்கொட, ரத்கம, ஹிக்கடுவ போன்ற பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐரோப்பா போன்ற நாடுகளில் மக்கள் அமைதியான சூழலில் வாழ விரும்புகின்றனர். இங்கு துப்பாக்கிச் சூடு சத்தத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த மக்கள் இனி இங்கு வரமாட்டார்கள். எனவே சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கவும் மிகவும் அவசியம்.” என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுற்றுலாத்துறை தொடர்பான பல்வேறு செயற்பாடுகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஐயோ சாமி பாடலுக்கு எடிசன் விருது
Posted in இலங்கை செய்திகள்

ஐயோ சாமி பாடலுக்கு எடிசன் விருது

ஐயோ சாமி பாடலுக்கு எடிசன் விருது

சென்னையில் நடைபெற்ற 16 வது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை “ஐயோ சாமி” என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலக வென்றுள்ளார்.

இந்த விருதைப் பெற்றுக் கொண்ட அவர் நேற்று (26) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சர்வதேச திரைப்படப் பாடல்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் விழா சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்றது.

ஐயோ சாமி பாடலுக்கு எடிசன் விருது

பாடலை எழுதிய பொத்துவில் அஸ்மின் மற்றும் இசை அமைத்த சனுக விக்கிரமசிங்க ஆகியோரும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.

அங்கு, ஐயோ சாமி பாடலைப் பாடிய வின்டி குணதிலகவுக்கு 2023 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சிறந்த உணர்ச்சிப் பாடலுக்கான விருது வழங்கப்பட்டது.

அவரை வரவேற்க ஏராளமான மக்கள் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.

அங்கு கருத்து தெரிவித்த வின்டி குணதிலக்க, “சர்வதேச விருதை நான் பெறுவது இதுவே முதல் முறை. இலங்கைக்கு சர்வதேச விருது ஒன்றை பெற்றுக்கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.” என தெரிவித்தார்

அமெரிக்காவில் பாலத்தை உடைத்த கப்பல் இராணுவ தளபதி மரணம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்காவில் பாலத்தை உடைத்த கப்பல் இராணுவ தளபதி மரணம்


அமெரிக்காவில் பாலத்தை உடைத்த கப்பல் இராணுவ தளபதி மரணம்

அமெரிக்காவில் மிக முக்கிய பலத்தை உடைத்த கப்பல் ,
இந்தியர்கள் செய்த் சதி ,மிக முக்கிய இராணுவ தளபதி மரணம்

வீடியோ

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு ஒ​ருவர் பலி

துப்பாக்கிச் சூடு ஒ​ருவர் பலி

நாரம்மல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொள்ளையடிப்பதற்காக வந்த மூவரில் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்வதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்து கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்தவர்களிடம் கொள்ளையர்கள் பணத்தைத் திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த விளம்பரத்திற்கு அமைய, ருவன்வெல்ல பிரதேசத்தில் இருந்து கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய சிலர் வந்ததாகவும், சந்தேகத்தின் அடிப்படையில் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்து பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் அவர்களைச் சந்திக்கச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு ஒ​ருவர் பலி

அவர்களை நாரம்மல பகுதியில் உள்ள இடமொன்றுக்கு வருமாறு கூறிய கொள்ளையர்கள், அந்த இடத்தை அடைந்ததும் கொள்ளையர்கள் கூரிய ஆயுதங்களால் அவர்களது மோட்டார் வாகனத்தை தாக்கியுள்ளனர்.

இதன்போது, பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் போது, ​​பொலிஸ் அதிகாரிகள் கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு கொள்ளையர்கள் தப்பியோடியதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கொள்ளையர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த இருவர், கொள்ளையர்களின் தாக்குதலால் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட நடவடிக்கை

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட நடவடிக்கை

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட நடவடிக்கை ,கடைகளை பரிசோதிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 3,000 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உணவு சோதனை

​​பண்டிகைக் காலத்திற்காக தயாரிக்கப்பட்ட உணவு வகைகளின் மாதிரிகள் பரிசோதனைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

“பொதுமக்கள் பண்டிகைக் காலத்துக்கான உணவுகளை வாங்க வரும்போது, ​​அவர்களுக்கு உணவு தயாரிக்கக் கொடுக்கப்படும் பொருட்கள், பண்டிகைக்

காலத்துக்காக தயாரிக்கப்படும் உணவு வகைகள், பழங்கள் போன்றவற்றைச் சரிபார்ப்போம். அதை பரிசோதகர்களுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” என்று உபுல் ரோஹன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, உணவு தயாரிக்கும் நிலையங்களில் உணவு தயாரிக்கும் நபர்களின் மருத்துவ அறிக்கைகளை பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் திரு உபுல் ரோஹன மெலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டு தோறும் மக்கள் கொண்டாடும் இந்த பண்டிகை நாளில் ,வாழ்க படும் இந்த உணவு பாதுகாப்பு நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேப்பை பெற்றுள்ளது .

பண்டிகையின் பொழுது மக்களை பாதுகாக்க இலங்கை சுகதாஹர அமையு மேற்கொள்ளும் ந்த நடவடிக்கை பாராட்ட பெறுகிறது .

கிழவருக்கு ஒரு மடல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கிழவருக்கு ஒரு மடல்

கிழவருக்கு ஒரு மடல்

மண்டையில முடி விழுந்தும்
மாண்பு இன்னும் தெரியவில்லை
மக்களது அரசியலை
மன்றில் பேச தெரியவில்லை

நரை விழுந்த கிழவருக்கு
நாற்காலி இன்றெதுக்கு
பாப்பா பாட்டு பாடுகின்ற
பர தேசிக்கு வாழ்வெதற்கு

உயிரெழுத்தில் பெயர் வைத்து
உலவுகின்ற கிழவருக்கு
அலரிக்கா மாளிகையில்
அடி கழுவி திரிந்தாருக்கு

பேச்சு மேசைக்கு
பெரும் இடரை கொடுத்தார்க்கு
வால் பிடிக்கும் கூட்டங்களே
வையத்தில் தொல்லைகளே

இல்லாத அவர் காலம்
இருக்கின்றாய் நீ இக் காலம்
என் செய்தாய் தமிழுக்கு
ஏ தொன்று சொல் எனக்கு

மளிகை வீடு கட்டி
மல்லாக்காய் படுத்திருந்து
கொறட்டை தினம் விட்டால்
கொடை வள்ளல் நீ ஆகாய்

இக் கலாம் வாழ்கின்ற
இடர் செய்த பெரு மகனே
உன் வாழ்வே வீனாகும்
உன் இறப்பே தப்பாகும்

கோபத்தில் உனை வரைந்து
கொழுத்தி விட வரவில்லை
ஏக்கத்தில் மனம் தவிக்க
எழுதி வைத்து நீட்டுகிறேன் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-03-2024

மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலைய பொலிஸ் T-56 துப்பாக்கி மாயம்
Posted in இலங்கை செய்திகள்

மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலைய பொலிஸ் T-56 துப்பாக்கி மாயம்

மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலைய பொலிஸ் T-56 துப்பாக்கி மாயம்

மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலைய பிரதான வாயிலில் பாதுகாப்பான இடத்தில் பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி காணாமல் போனது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு

வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு

இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதேபோல், குறித்த காலப்பகுதியில் சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும், அதன் ஊடாக 687 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்தது.

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

குறைந்தபட்ச ஊதிய சம்பளம் 17500 ரூபாய்

குறைந்தபட்ச ஊதிய சம்பளம் 17500 ரூபாய்

தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் விதிகளின்படி, தேசிய குறைந்தபட்ச ஊதியம் 12,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்ட குழு சம்பளத்தை 17,500 ரூபாவாக அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, தேசிய குறைந்தபட்ச தினக்கூலியும் 500 ரூபாயில் இருந்து 700 ரூபாயாக அதிகரிக்கப்படும்.

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

துப்பிய பெண் வழக்கறிஞருக்கு சிக்கல்

துப்பிய பெண் வழக்கறிஞருக்கு சிக்கல்

வழக்கு ஆவணத்தில் உள்ள ஆவணத்தை மென்று அழித்து, வழக்கறிஞர் தொழிலுக்கு ஒவ்வாத வகையில் நடந்து கொண்ட பெண் வழக்கறிஞரை, வழக்கு முடியும் வரை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (25) தீர்மானித்துள்ளது.

12 வருடங்களாக சட்டத்தரணியாக கடமையாற்றிய பிரதிவாதி சட்டத்தரணியின் செயற்பாடு பாரதூரமான நடவடிக்கையாக கருதப்பட வேண்டுமென பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணிக்கு எதிராக தொழில் நெறிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.

துப்பிய பெண் வழக்கறிஞருக்கு சிக்கல்

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, உயர் நீதிமன்ற நீதியரசர்களான காமினி அமரசேகர மற்றும் ஏ.எச்.எம்.டி., நவாஸ் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.

கெக்கிராவ நீதவான் நீதிமன்ற பதிவாளர் காரியாலயத்தில் உள்ள வழக்கு ஆவணமொன்றை வலுக்கட்டாயமாக எடுத்து வாயில் போட்டு அழித்ததன் மூலம் சட்டத்தரணிக்கு தகாத வகையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில், பிரதிவாதி சட்டத்தரணிக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை முன்வைத்துள்ளார்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த நீதியரசர்கள் குழு, தொழில் நெறிமுறைகளை மீறியதாக வழக்குரைஞருக்கு எதிரான வழக்கை ஏப்ரல் 2ஆம் திகதி விசாரிப்பதற்கு உத்தரவிட்டார்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் திகதி வெளியானது

ஜனாதிபதி தேர்தல் திகதி வெளியானது

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் சூட்சுமமான முறையில் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

ஜானாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் வெசாக் நிறைவடைந்தவுடன் ஆரம்பமாகும்.

இஸ்ரேலை தாக்கிய சிரியா ஈராக் போர் படைகள் உளவு கப்பல் சேதம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய சிரியா ஈராக் போர் படைகள் உளவு கப்பல் சேதம்


இஸ்ரேலை தாக்கிய சிரியா ஈராக் போர் படைகள் உளவு கப்பல் சேதம்

இஸ்ரேலை இராணுவ தளங்கள் ஆக்கிரமிப்பு குடையற்ற பகுதிகளை தாக்கிய சிரியா ஈராக் போர் படைகள் .

உளவு கப்பல் கடும் சேதம். உக்கிர யுத்தம்

வீடியோ

தேர்தல் தை மாதம் இடம்பெறும் என அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் ஒத்திவைக்கப்பட மாட்டாது

தேர்தல் ஒத்திவைக்கப்பட மாட்டாது

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லையென நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரையில் முன்வைக்கப்பட்ட தேர்தல் திருத்தங்கள் மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் திட்டம் இருப்பதாக சமூகத்தில் சில பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஆனால் இந்தத் திருத்தங்கள் மூலம் தேர்தலை ஒத்திவைக்க எதிர்பார்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதன் போது எந்தவொரு வேட்பாளரும் இந்த தேர்தல் திருத்தம் குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்கலாம். பொதுமக்களுக்கும் இது தொடர்பாக தமது முடிவை எடுக்க முடியும் என்றார்.

இஸ்ரேலை தாக்கிய சிரியா ஈராக் போர் படைகள் உளவு கப்பல் சேதம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய சிரியா ஈராக் போர் படைகள் உளவு கப்பல் சேதம்


இஸ்ரேலை தாக்கிய சிரியா ஈராக் போர் படைகள் உளவு கப்பல் சேதம்

இஸ்ரேலை இராணுவ தளங்கள் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளை தாக்கிய சிரியா ஈராக் போர் படைகள் .

உளவு கப்பல் கடும் சேதம். உக்கிர யுத்தம்

வீடியோ

பாயும் பெண் புலி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

பாயும் பெண் புலி

பாயும் பெண் புலி

காடு காத்த கரும்புலியை
கா தழைத்து கொன்றவரே
செய்த செயல் தவறாச்சு – சிசு
செம்புலியாய் பாய்ந்திருச்சு

கோட்டையிலே கொடி கட்டி
கொடுமைகளை உடைத்தெறிய
வீரமுடன் வந்திருச்சு – திறன்
விவேகமது கொண்டிருச்சு

நான் என்ற ஆணவத்தில்
நாடாண்ட கோமகனே
முடி தரித்த உன் ஆட்சி
முள் வேலியில் வீழ்ந்திருச்சு

அவள் அழுத கண்ணீர் துளி
அனலாக கொத்திருக்கு
குற்றவாளி உங்களை தான்
கூண்டில் அடைக்க வந்திருக்கு

வால் ஆட்டி திரிந்தவரும்
வாயாட்டி நகைத்தவரும்
சிறை புகும் காலமிது
சிரித்து இன்று மலர்கிறது

ஆதிக்க வெறி என்றும்
அரங்கமதில் நிலைக்காது
நீதியின் வெற்றிடங்கள்
நிரம்பிடா உறங்காது

வீரப்பன் விழிக்கின்றான்
விடுதலையை அழைக்கின்றான்
சத்திய தேவதை யோ
சரிதம் எழுத வருகிறாள்

நாம் தமிழர் ஆட்சியில்
நல்லாட்சி செய்திடுவாள்
நலிந்த மக்கள் மகிழ்ந்திடவே
நல்லுதவி புரிந்திடுவாள் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-03-2024

23-03-2024 நாம் தமிழர் கட்சியில் 40 வேட்பாளர் போட்டியில் வீரப்பன் மகள் சத்தியா போட்டியிட்ட செய்தி அறிந்த பொழுது …