அக்கரைப்பற்று கொழும்பு பஸ் விபத்து பலர் காயம்
அக்கரைப்பற்று கொழும்பு பஸ் விபத்து பலர் காயம்
கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணிகளை ஏற்றி சென்ற அதிசொகுசு பஸ் இன்று (30) அதிகாலை, மட்டக்களப்பு ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது
இந்த விபத்தில் சிக்கி, பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதோடு, சில வர்த்தக நிலையங்கள் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியிலே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சொகுசு பஸ் அதிகாலை 3.30 மணியளவில் 4 ஆம் கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றை உடைத்தெறிந்துள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தின் போது சாரதி உட்பட்ட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
மது போதையில் கோடரி தாக்குதலில் மனைவி மரணம் கணவன் படுகாயம்
மது போதையில் கோடரி தாக்குதலில் மனைவி மரணம் கணவன் படுகாயம்
திருகோணமலை – அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 85ம் கட்டைப் பகுதியில் நபர் ஒருவர் மது போதையில் கணவர் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் கந்தளய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (29) 8.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
அக்போபுர 85 ஆம் கட்டைப் பகுதியில் குறித்த நபர் மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த வேலை, குறித்த நபரின் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் சத்தம் போட வேண்டாம் எனக் கூறியதையடுத்து கோபம் கொண்ட குறித்த நபர் கணவன் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்த இருவரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ள நிலையில் கணவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த பெண் அக்போபுர -85ம் கட்டை பகுதியைச் சேர்ந்த சிரோமாலா பெர்ணாந்து (44வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் கோடாரியால் தாக்கியதாக கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த ஏ.டபிள்யூ.எம்.விக்ரமசிங்க (54வயது) என்ற சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
கஞ்சா விற்பனை செய்த பெண் கைது
கஞ்சா விற்பனை செய்த பெண் கைது
திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை இன்று (29) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் விற்பனை தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு துறையினர் மொரவெவ பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக சோதனைகளை மேற்கொண்ட போது குறித்த பெண் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜே.சமீரா (38 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் பல வருடங்களாக கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் பல தடவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், கஞ்சா போதை பொருட்களை பல தடவைகள் மறைத்து வைத்திருந்த நிலையில் பெண் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்குகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.
இதே நேரம் தொடர்ந்தும் குறித்த பெண் கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் திணைக்களத்திற்கு பல கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேநேரம் மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி நாகத்தன அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சந்ரசிறி உட்பட அவரின் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது 52,160 மில்லிகிரேம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண்ணை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்
இஸ்ரேல் இராணுவத்திற்கு மரண அடி தளபதி பலி பலர் காயம்
இஸ்ரேல் இராணுவத்திற்கு மரண அடி தளபதி பலி பலர் காயம்
இஸ்ரேல் இராணுவத்திற்கு மரண அடி தளபதி பலி 16 பேர் கொத்தாக காயம் ,ஓட ஓட அடித்த ஹமாஸ் ,
பாலஸ்தீன இஸ்ரேல் போர் இன்றைய நிலவரம் களம் அதிர்கிறது
அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் கைதிகள் தப்பி ஓட்டம்
அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் கைதிகள் தப்பி ஓட்டம்
அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
திறந்தவெளி சிறைச்சாலையின் சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றிய இரண்டு கைதிகளே, இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனுராதபுரம் – கிரவஸ்திபுர மற்றும் களனி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கைதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இந்நாடு அனைவருக்கும் சொந்தமானது எதிர்க்கட்சித் தலைவர்
இந்நாடு அனைவருக்கும் சொந்தமானது எதிர்க்கட்சித் தலைவர்
இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி இந்நாடு அனைத்து குடிமக்களுக்கும் சொந்தமானது. இந்நாடு எந்தத் தலைவருக்கும் எழுதிக் கொடுப்படவில்லை. அரசியல்வாதிகள் இந்நாட்டின் தற்காலிக பாதுகாவலர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முழு நாடும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் சொந்தம் என்பது போல் சிலர் நடந்து கொள்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக இந்நாட்டின் உரிமை ஒரு குடும்பத்திற்கு மட்டுமே என்று நினைப்பது தவறு. இந்நாடு ஒரு குடும்பத்திற்கோ அல்லது உறவினர்களுக்கோ சொந்தமானது அல்ல, இந்நாடு அனைத்து இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த 220 இலட்சம் சிங்கள தமிழ் முஸ்லிம் பர்கர் பிரஜைகளுக்கு சொந்தமானது எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கட்சிகளின் உரிமைகள் தந்தையிடமிருந்து மகனுக்கும் பின்னர் பேரனுக்கும் என வரையறுக்கப்பட்டுள்ளன. சில அரசியல் கட்சிகளால் இவ்வாறு நடந்து கொள்ள முடியுமாக இருந்தாலும், 220 இலட்சம் மக்களுக்கே இந்நாடு உரித்துடையது. இது எல்லா மதத்தினருக்கும் எல்லா இனத்தினருக்கும் சொந்தமானது. இனங்கள் மதங்கள் இடையே ஒற்றுமையை உருவாக்க வேண்டும். மதங்களுக்கும் இனங்களுக்கும் இடையே வேறுபாடுகளை பிரிவினைகளை உருவாக்கி எம்மால் முன்னேற முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 136 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், வவுனியா,நெடுங்கேணி ஒலுமடு தமிழ் வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மார்ச் 28 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கல்லூரியின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான ஆடைகளை பெறுவதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.
நாட்டின் உரிமை எந்தக் குடும்பத்துக்கும் தனித்து சொந்தமானதல்ல. 220 இலட்சம் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்து தற்காலிக பாதுகாவலர்களாக பணியாற்ற வேண்டும்.
ஸ்மார்ட் கல்வியின் மூலம் ஸ்மார்ட் இலங்கை உலகில் முதல் ஸ்தானத்திற்கு இட்டுச் செல்வதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
யுத்தம் நிறைவடைந்த பல நாடுகளின் அரச தலைவர்கள் சர்வதேச ஒத்துழைப்பு மாநாடுகளை நடத்திய போதிலும், இந்நாட்டில் யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்றன. சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டை இன்னும் நம் நாட்டு தலைவர்களால் நடத்த முடியாது போயுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இத்தகைய ஒத்துழைப்பு மாநாட்டை நடத்த எதிர்பார்க்கிறோம். அழிந்து போன உட்கட்டமைப்பு வசதிகளையும் மக்களின் வாழ்க்கையையும் மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நாட்டில் பெரும்பாலான மக்கள் முறைமையில் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். இந்த முறைமையில் மாற்றத்தை ஐக்கிய மக்கள் சக்தியே ஆரம்பித்து வைத்துள்ளது. சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளாக எந்த எதிர்க்கட்சியும் ஆற்றாத பணியை ஐக்கிய மக்கள் சக்தி ஆற்றிவருகிறது. அதிகாரம் இல்லாமல் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியே முன்னைடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
டொலர் தட்டுப்பாடு நிலவும் இந்த வங்குரோத்து நாட்டில் கல்வி, சுகாதாரத்துறைக்கு தற்போதுள்ள அரசால் கூட செய்ய முடியாத சேவையை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது. இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி, அந்தஸ்து என பிளவுபட்டு வாழும் இலங்கை மக்கள், ஒரே தாய் தந்தையரின் பிள்ளைகளாக ஒன்படும் யுகத்தை ஆரம்பிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஆலங்குளத்தில் சீமான் பரப்புரை
ஆலங்குளத்தில் சீமான் பரப்புரை
ஆலங்குளத்தில் நாம் திமிலர் கட்சி சீமான் தேர்தல் பரப்புரை,நாம் தமிழர் வெல்ல வாக்களிப்பீர் ,
நேரலை அருப்புக்கோட்டையில் சீமான் தலைமையில் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம்! | Seeman Speech
நேரலை அருப்புக்கோட்டையில் சீமான் தலைமையில் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம்! | Seeman Speech
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

- தண்ணீர் மாநாடு – சீமான் உயிரின் உரை

- அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

- நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்

- தீயாக பேசிய சீமான்

- அணில் ஏன் UNCLE என கத்துகிறது சீமான்

விழித்து கொள் தமிழா
விழித்து கொள் தமிழா
ஒத்த ரூபா நான் தாரேன்
ஓடி வந்து வாக்கு இடு
சங்கதிகள் வெளியில் சொல்லா
சத்தமிடா சென்று விடு
எங்களது ஆட்சியதை – மக்கள்
ஏற்றார் என் றுரைப்போம்
வாக்கிற்கு விலை பேசும்
வையத்து அரசியலாம்
சோற்றுக்கு வழியில்லா
சோர் விழந்தார் என் செய்வார்
வீட்டுக்கு வழியில்லா
வீதி உளார் ஏதறிவார்
மக்களது நலன் காக்க
மன்ரேறி வந்தவரோ
அடுக்கு மாடி கட்டி
அழகாக வாழ்கின்றார்
இன்றைய அரசியல்
இழி நிலை இது காணாய்
இதை மாற்றி நாம் வாழ
நாம் தமிழரை வெல்ல வைப்பாய் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் -29-03-2024
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

- முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- சொல்வாயா

- உறங்கிய காதல்

- யோசி… நேசி…

பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன
பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன
ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும் உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது – எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை.
இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும் பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்
ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் போர் களத்தில் போராடும் சிங்கள இராணுவம் வீடியோ
ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் போர் களத்தில் போராடும் சிங்கள இராணுவம் வீடியோ
ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் போர் களத்தில் போராடும் சிங்கள இராணுவம்.
உக்ரைன் முன்னரங்க களத்தில் தரித்து நிற்கும் இலங்கை இராணுவம் வெளியான
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

திடீர் தாக்குதல் 36 ஆமி எரியும் யுத்த டாங்கிகள்
திடீர் தாக்குதல் 36 ஆமி எரியும் யுத்த டாங்கிகள்
திடீர் தாக்குதல் 36 ஆமி மரணம் ,எரியும் யுத்த டாங்கிகள் ,
வெடித்த கடும் யுத்தம் ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

இஸ்ரேல் துறைமுக பகுதியில் பாரிய குண்டு சத்தங்கள்
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 31 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (28) காலை உயிரிழந்துள்ளார்.
லுணுகம்வெஹர பிரதேசத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் லுணுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு
நாடளாவிய ரீதியில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (29) பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளை மறுதினமும் (31) இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் இன்று, புனித வெள்ளியை அனுஸ்டிப்பதுடன் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் தினத்தை கொண்டாட உள்ளனர்.
இந்த நிலையில், இலங்கையில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்குமாறு, காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார்
2 மாதங்களில் 983 7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம்
2 மாதங்களில் 983 7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம்
கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இலங்கை 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுள்ளதுடன், நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதை, அது உறுதிப்படுத்துவதாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.
பாடசாலைக் காலத்திலேயே தொழில்முயற்சி சூழலுக்குள் ஈர்த்தெடுப்பது அவர்களை எதிர்காலத்தில் தொழில்முனைவோராக உருவாக்க வழிவகுக்கும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர,
கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து ஒரு நாடாக குறிப்பிடத்தக்களவு சாதனைகளை நாம் அடைந்துள்ளோம். கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளது.
ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் சுமார் 05 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். மேலும், நம் நாட்டில் 2.5% ஆக இருந்த தொழில்முயற்சியாளர்களின் எண்ணிக்கையை 3% ஆக அதிகரிக்க முடிந்துள்ளது. நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகிறது.
மேலும், ஆடை மற்றும் நெசவுத் தொழில் நிறுவனம் ஏறக்குறைய 500 பிள்ளைகளுக்கு டிப்ளோமா சான்றிதழ்களை வழங்கியுள்ளது. IDB நிறுவனத்துடன் இணைந்து பாடசாலை தொழில் முயற்சியாளர் வட்டங்களை உருவாக்கி மாணவர்களை பாராட்ட முடிந்துள்ளது.
பாடசாலைக் காலத்திலேயே தொழில் முயற்சியாளர் சூழலை உருவாக்குவது மக்களை தொழில்முனைவோர் ஆக்குவதற்கு பெரும் ஆதரவை அளிக்கிறது என்பதையும் கூற வேண்டும். இதன் மூலம் நாட்டில் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.
குறைந்த வருமானம் பெறும் 24 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதலாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு வரையிலான 17 இலட்சம் பாடசாலை மாணவர்களின் போசாக்குத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், மதிய உணவு திட்டமும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், களிமண், பித்தளை, பிரம்பு ஆகிய கைத்தொழில்களை ஊக்குவிக்கும் வகையில், இத்தாலி, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு இந்நாட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்வது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆசிய அபிவிருத்தி நிதியத்துடன் இணைந்து, சலுகை வட்டி விகிதத்தில் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
மேலும், பிரம்புகளை எடுத்துச் செல்வதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தாலோசித்து 500 பிரம்புகள் வரை கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளோம். மேலும், களிமண் போக்குவரத்தில் அதிகபட்சமாக 05 கியுப்களை அனுமதிப்பதற்கு தேசிய அருங்கலைகள் பேரவையுடன் கலந்தாலோசித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.” என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
500 ரூபா லஞ்சம் பெற்ற பொலிஸூக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
500 ரூபா லஞ்சம் பெற்ற பொலிஸூக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (28) சிறைத்தண்டனை விதித்துள்ளது.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக, முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் 500 ரூபாவை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் சந்தேகத்திற்குரிய பொலிஸ் சார்ஜன்ட் குற்றவாளியாக இனம்காணப்பட்டார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிராக 4 குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றில் கருத்துக்களை முன்வைத்திருந்தது.
இதன்படி 4 குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளியாக இனம்காணப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட், குற்றவாளி என நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், சிறைத்தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன்ட் மீது ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 5,000 ரூபா வீதம் 20,000 ரூபா அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், லஞ்சமாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட 500 ரூபாவை பண அபராதமாக மீளப் பெற்றுக் கொள்ளுமாறும் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.
நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு விளக்கமறியல்
நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு விளக்கமறியல்
நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின்
மேற்பார்வையாளரான பெண் சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் 27 ஆம் திகதி மீண்டும் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள்
ஆராயப்பட்டு 28 வயதுடைய குறித்த பாடசாலையின் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் பாலுறவில் ஈடுபடுபவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று அவர் கூறினார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டொக்டர் ஜானகி விதானபத்திரன இதனை தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி
தென்னாப்பிரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி
தென்னாப்பிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்தனர்.
ஜோகன்னஸ்பர்க் அருகே மமத்லகாலா பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்து பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
ஈஸ்டர் கொண்டாடுவதற்காக போட்ஸ்வானாவில் இருந்து மோரியா சென்ற குறித்த பேருந்தே விபத்தில் சிக்கியது.



























