Tag: நடிகை
காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா
காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, காதல் தோல்விகள் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா
நயன்தாரா
நயன்தாரா கேரளாவில் இருந்து சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்-1 கதாநாயகியாக இருந்து வருகிறார்.
10 வருடங்களாக அவரது மார்க்கெட்டை சக நடிகைகளால் சரிக்க முடியவில்லை. அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிம்பு என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த
பெருமையும் நயன்தாராவுக்கு உண்டு. இப்படி உச்ச நடிகையாக இருக்கும் அவரது சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்தது.
லைட்பாய் முதல் எல்லா தொழிலாளர்களுடனும் அன்பாக பழகுவார். படப்பிடிப்பு இறுதி நாளில் எல்லோருக்கும் பரிசு
பொருட்களை வாரி வழங்குவார், சக நடிகர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் பல லட்சம் செலவு செய்து விருந்து கொடுப்பார்
என்றெல்லாம் நயன்தாராவின் நல்ல குணங்களை பட உலகினர் பட்டியலிடுகின்றனர்.
ஆனால் இன்னொரு புறம் காதலில் அவர் தொடர்ந்து காயப்பட்டு வருகிறார். 2006-ல் வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவுடன்
அவரது முதல் காதல் துளிர்த்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார்கள். ஆனால் சில மாதங்களிலேயே அந்த காதல் முறிந்து போனது.
நயன்தாரா
அதன்பிறகு 2009-ல் பிரபுதேவாவுடன் நயன்தாராவின் இரண்டாவது காதல் மலர்ந்தது. வில்லு படத்தை பிரபுதேவா இயக்கியபோது
அதில் கதாநாயகியாக நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு ஜோடியாக சுற்றினார்கள்.
நயன்தாரா மதம் மாறி பிரபுதேவாவை மணந்து சினிமாவுக்கு முழுக்கு போடவும் தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த காதலும் முறிந்து போனது.
தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். நானும் ரவுடி தான் படத்தில் இருவரும் இணைந்து
பணியாற்றினார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது காதல் முறிவு குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:
”நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது. அதேபோல் நம்பிக்கை இல்லாத இடத்தில் சேர்ந்து வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல்
என உணர்ந்து, பழைய காதல்களை கடந்துவிட்டேன்” என கூறியுள்ளார்.

கணவரை விவாகரத்து செய்தார் பிரபல டி.வி. நடிகை
கணவரை விவாகரத்து செய்தார் பிரபல டி.வி. நடிகை
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை சிம்ரன் கன்னா, கணவரை விவாகரத்து செய்துள்ளார்.
கணவரை விவாகரத்து செய்தார் பிரபல டி.வி. நடிகை
நடிகை சிம்ரன் கன்னா
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் சிம்ரன் கன்னா.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யா ரிஷ்தா கியா கேஹ்லத ஹை’ என்ற தொடர் சிம்ரன் கன்னாவுக்கு புகழை பெற்றுக்கொடுத்தது.
இவருக்கும், பரத் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வினித் என்ற ஆண் குழந்தை
உள்ளது. மகிழ்ச்சியாக சென்ற இவர்கள் குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீசியது. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப
தகராறு ஏற்பட்டது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்தனர். கோர்ட்டிலும் விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர்.
தற்போது இருவருக்கும் கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது. குழந்தை, தந்தையுடன் வசிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அவர் மீது எனக்கு காதல் – வெட்கப் பட்டு சொன்ன நடிகை
அவர் மீது எனக்கு காதல் – வெட்கப் பட்டு சொன்ன நடிகை
96, பிகில் படத்தில் நடித்து பிரபலமான வர்ஷா பொல்லம்மா, பள்ளி பருவத்தில் அவர் மீது கிரஸ் என்று கூறியிருக்கிறார்.
பள்ளி பருவத்தில் அவர் மீது கிரஸ் – வர்ஷா பொல்லம்மா
வர்ஷா பொல்லம்மா
விஜய் சேதுபதியின் 96 படத்தில் மற்றும் விஜயின் பிகில் படத்தில் நடித்தவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.
வர்ஷா பொல்லம்மா பென்சிலில் வரைந்த ஜெர்சி மாடல்
இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனக்கு விராட் கோலியின் மீது கிரஸ் இருப்பதாக கூறி சில புகைப்படங்களை
வெளியிட்டுள்ளார். பள்ளி பருவத்தில் அவர் மீது கிரஸ் இருந்ததாகவும், அவருக்காக பென்சிலில் ஜெர்சி மாடல் வரைந்து வைத்ததாகவும் பதிவு செய்து இருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் திருமணமானவர் மீது ஈர்ப்பா என அவரை கலாய்த்து வருகின்றனர்.

கொரனோவால் வீட்டை ஜிம்மாக மாற்றிய நடிகை
கொரனோவால் வீட்டை ஜிம்மாக மாற்றிய நடிகை
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், ஊரடங்கால் தன்னுடைய வீட்டை ஜிம்மாக மாற்றி இருக்கிறார்.
வீட்டை ஜிம்மாக மாற்றிய ரகுல் பிரீத் சிங்
நடிகை ரகுல்பிரீத் சிங்
கொரோனா ஊரடங்கில் நடிகர்-நடிகைகள் பலரும் வீட்டிலேயே உடற்பயிற்சிகள், யோகா செய்து தேகத்தை கட்டுக்கோப்பாக
வைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
நடிகை ரகுல்பிரீத் சிங் உடற்பயிற்சி செய்யும் காட்சி
நடிகை ரகுல்பிரீத் சிங்கும் உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விதம் விதமாக உடற்பயிற்சிகள் செய்யும்
புகைப்படங்களையும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.
இப்போது ஜிம்முக்கு செல்லும் நிலைமை இல்லாததால் வீட்டையே உடற்பயிற்சி கூடமாக மாற்றி இருக்கிறார்.
வீட்டில் இருக்கும் மரச்சாமான்கள் உதவியோடு உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் செய்கிறார்.
வீட்டுக்குள்ளேயே அந்தரத்தில் தொங்குவது, ஓடுவது, குதிப்பது என்றெல்லாம் உடற்பயிற்சிகள் செய்கிறார்.
ஊரடங்கு நமது ஆரோக்கியத்துக்கு தடையாக இருக்க கூடாது. கலோரிகளை
கரைக்க ஜிம்முக்குதான் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே எளிமையான உடற்பயிற்சிகளை செய்யலாம் என்றார்.

நீச்சல் உடையில் கலக்கும் ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்
நீச்சல் உடையில் கலக்கும் ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஹன்சிகா, தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிகினியில் கலக்கும் ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்
ஹன்சிகா
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து
முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில்
நடிக்கிறார். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஹன்சிகா
இந்நிலையில், ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அவர், “கடலை பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. மனம் முழுவதும் அங்கு
தான் உள்ளது” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பலகோடி தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தார் – 2 நடிகைகள் புகார்
பலகோடி தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தார் – 2 நடிகைகள் புகார்
3 மடங்கு சம்பளம் தருவதாக கூறி இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
3 மடங்கு சம்பளம் தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தார்- இயக்குனர் மீது நடிகை புகார்
நடிகைகள் பலர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதாக மீ-டூவில் புகார் சொல்லி பரபரப்பை
ஏற்படுத்தினர். தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டில் சிக்கினர். தற்போது
இன்னொரு நடிகையும் பாலியல் புகார் கூறியுள்ளார். அவரது பெயர் மான்வி கக்ரூ. இவர் நோ ஒன் கில்டு ஜெஸிகா, பீகே உள்ளிட்ட சில
படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்கள், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். டிவிஎப் டிப்ளிங், போர் மோர்
ஷாட்ஸ், மேட் இன் ஹெவன் போன்ற வெப் தொடர்கள் இவரது நடிப்பில் வந்தன.
மான்வி கக்ரூ அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னை போனில் ஒருவர் அழைத்து, தன்னை இயக்குனர் என்று
அறிமுகப்படுத்தினார். ஒரு வெப் தொடர் எடுக்கிறோம், அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறினார். முதலில் கதையை
சொல்லுங்கள், எனக்கு பிடித்து இருந்தால் சம்பளம் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் குறித்து பேசலாம் என்றேன். அவர் எனது சம்பளத்தை
கூறினார். அது குறைவாக இருக்கிறது என்றேன். உடனே சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்தி இந்த தொகைக்கு சம்மதமா? என்றார்.
ஒரேயடியாக இவ்வளவு சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாரே! என்று வியந்தேன். அதன்பிறகு இவ்வளவு சம்பளம் என்னால் கொடுக்க
முடியும், அதற்கு பதிலாக நீங்கள் அதற்கு உடன்பட வேண்டும் என்றார். இதனால் கோபமாகி அவரை திட்டினேன். இப்படி பேச
உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்? போலீசில் புகார் செய்வேன் என்று கோபமாக பேசிவிட்டு போனை வைத்து விட்டேன்.” இவ்வாறு
அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா சாதி மதம் பார்க்காமல் கொல்கிறது பிரபல நடிகை
கொரோனா சாதி மதம் பார்க்காமல் கொல்கிறது பிரபல நடிகை
கொரோனா சாதி, மதம் பார்க்காமல் கொல்வதாகவும், அதற்கு எதிரான போரில் இணைந்து செயல்படுவோம் என்றும் நடிகை ராஷி கன்னா கூறியுள்ளார்.
மதசார்பற்ற கொரோனா…. சாதி, மதம் பார்க்காமல் கொல்கிறது –
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை
அளிக்கப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
டெல்லியில் சமீபத்தில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது பரிசோதனையில்
உறுதியானது. இதையடுத்து அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தானாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படி மத்திய, மாநில அரசுகள் வற்புறுத்தி உள்ளன.
ராஷி கன்னா
இந்த நிலையில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள
ராஷிகன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 வைரஸ்
மதசார்பற்றது. மதத்தின் அடிப்படையில் மக்களை அது பிரிக்கவும் இல்லை. சாதி, மதம், சொத்து போன்ற எதையும் பார்க்காமல்
அவர்களை தொற்றிக்கொள்கிறது. கொல்லவும் செய்கிறது. எனவே ஒருவரையொருவர்
குற்றம் சொல்வதை விடுத்து கொரோனாவுக்கு எதிரான போரில் இணைந்து செயல்படுவோம்.
இவ்வாறு ராஷிகன்னா கூறியுள்ளார்.

நடிகையின் குடியிருப்புக்கு சீல் வைத்த அதிகாரிகள்
நடிகையின் குடியிருப்புக்கு சீல் வைத்த அதிகாரிகள்
பிரபல இந்தி நடிகை வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அதிகாரிகள் சீல் வைத்திருக்கிறார்கள்.
இந்தி நடிகையின் குடியிருப்புக்கு சீல் வைத்த அதிகாரிகள்
அங்கிதா லோகந்தே
பிரபல இந்தி நடிகை வசிகங்கனா ரனாவத் நடித்த ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கை வரலாற்று படமான மணிகர்னிகாவில்,
ஜால்காரிபாய் எனும் போராளி வேடத்தில் நடித்தவர் நடிகை அங்கிதா லோகந்தே. டைகர் ஷெரப்பின் பாகி 3 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அங்கிதா வசித்து வருகிறார். அந்த குடியிருப்பில் உள்ள ஒருவருக்கு கொரோனா
நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டிற்கு சென்று திரும்பியதால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவருக்கு தனிமை வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வரும் அதிகாரிகள், அங்கிதா வசித்து வரும் அடுக்குமாடி
குடியிருப்பை தனிமைப்படுத்தி சீல் வைத்துள்ளனர். மேலும், அந்த அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வரும் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா பிடியில் இருந்து மக்களை காக்க சிறப்பு யாகம் நடத்திய நடிகை ரோஜா,
கொரோனா பிடியில் இருந்து மக்களை காக்க சிறப்பு யாகம் நடத்திய நடிகை ரோஜா
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பிடியிலிருந்து மக்களை காக்க நடிகை ரோஜா தனது வீட்டில் சிறப்பு யாகம்
ஒன்றை நடத்தி உள்ளார்.
கொரோனா பிடியில் இருந்து மக்களை காக்க சிறப்பு யாகம் நடத்திய நடிகை ரோஜா
குடும்பத்தினருடன் வீட்டில் யாகம் நடத்திய ரோஜா
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது
கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு
உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஆந்திர மாநிலத்திலும் ஊரடங்கு
கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா தனது கணவரும், இயக்குனருமான
ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து தனது வீட்டில் பண்டிதர்கள் மூலம் ருத்ராபிஷாகம் என்ற யாகத்தினை நடத்தினர்.
கொரோனாவின் பிடியில் இருந்து கடவுள் பொதுமக்களை காத்திட
வேண்டி இந்த யாகத்தை தனது வீட்டில் நடத்தியதாக ரோஜா தெரிவித்தார்

தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை – ராஷ்மிகா
தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை – ராஷ்மிகா
தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை என்று கூறியுள்ளார்.
தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை – ராஷ்மிகா
ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த ஒரு வருட காலத்தில் கிடுகிடுவென முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார். தெலுங்கு மற்றும் தமிழில் பிசியாக வலம் வரும் இவர்,
தற்போது தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார். விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் கூட இவர் தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்ட
நிலையில் அந்த வாய்ப்பு திடீரென பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனனுக்கு சென்று விட்டது.
தற்போது தெலுங்கில் பீஷ்மா என்கிற படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா, அந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில்
கலந்து கொண்டு வருகிறார். அப்போது அவரிடம் உங்களது நண்பர், பாய்பிரண்ட் மற்றும் உங்களுக்கு கணவராக
வரப்போகிறவர் என எந்தெந்த நடிகர்களை கூறுவீர்கள் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது..
ராஷ்மிகா
அதில் தெலுங்கு நடிகர் நிதின் எனக்கு நண்பராக இருக்க வேண்டும் எனக் கூறியவர், எனக்கு பாய் பிரண்டாக இருக்க
வேண்டும் என நான் விரும்புவது நடிகர் விஜய்யை தான் என கூறியுள்ளார் ராஷ்மிகா. ஆனால் தனக்கு கணவனாக
வரப்போகும் நபர் என எந்த நடிகரையும் குறிப்பிட்டுச் சொல்லாதவர், தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை என கூறியுள்ளார்.

ரசிகர்களை பதற வைத்த அந்த நடிகை
ரசிகர்களை பதற வைத்த அந்த நடிகை
நடிகை சிம்ரன், தான் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரசிகர்களை பதற வைத்த சிம்ரன்
சிம்ரன்
நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத
மனமும் துள்ளும், பம்மல் கே.சம்பந்தம் என்று பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகை சிம்ரன், புகழின் உச்சியில்
இருந்த போதே 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.
அதன் பின்னர், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தீவிரமாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தில் வில்லியாக மிரட்டிய சிம்ரனுக்கு ரஜினியுடன் ஜோடியாக நடித்த பேட்ட
படம் வரவேற்பை கொடுத்தது. மீண்டும் பழைய சிம்ரனைப் பார்த்த மகிழ்ச்சியில் அவரது ரசிகர்களும் கொண்டாடினார்கள்.
சிம்ரன்
இந்நிலையில், அவரது ட்விட்டர் பக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது
எடுக்கப்பட்டது என்று கூறி நெத்தி, கை, கால்களில் எல்லாம் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை
வெளியிட்டு ரசிகர்களை பதற வைத்து விட்டார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், உண்மையிலேயே
நடிகை சிம்ரனுக்கு அடிப்பட்டுவிட்டதோ என்று கலங்கி, ஆறுதல் சொல்லி வருகிறார்கள். பின்னர், இது படப்பிடிப்பு
தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிந்த பிறகு தான் நிம்மதி அடைந்தனர்.

பிள்ளை பெற்றுக்கொள்ளாதது ஏன்? – விஜயசாந்தி
பிள்ளை பெற்றுக்கொள்ளாதது ஏன்? – விஜயசாந்தி
13 ஆண்டு இடைவேளைக்கு பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ள விஜயசாந்தி,
குழந்தை பெற்றுக்கொள்ளாதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
குழந்தை பெற்றுக்கொள்ளாதது ஏன்? – நடிகை விஜயசாந்தி விளக்கம்
விஜயசாந்தி
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த விஜயசாந்தி அரசியலுக்கு சென்றதால் சினிமாவை விட்டு ஒதுங்கினார். 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும்
தெலுங்கு படமொன்றில் மகேஷ் பாபுவின் அம்மாவாக நடித்து இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “என்னை நடிக்க சொல்லி தொடர்ந்து அழைப்புகள் வந்தன.
ஆனால் நல்ல கதைகள் அமையாததால் விலகி இருந்தேன். இப்போது மகேஷ் பாபு படத்தில் முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரம் அமைந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
அரசியல்தான் எனக்கு முக்கியம். பிடித்த கதாபாத்திரம் அமைந்தால் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிப்பேன். குழந்தைகள் எனக்கு பிடிக்கும். ஆனாலும்
குழந்தைகள் இருந்தால் சுயநலம் வந்து விடும். அரசியலுக்கு வந்த பிறகு சுயநலத்தை விட்டால்தான் பொது தொண்டு செய்ய முடியும். எனவே குழந்தைகள் நமக்கு வேண்டாம்
என்று கணவரிடம் சொன்னேன். அவரும் ஒப்புக்கொண்டார். ஜெயலலிதாவும் குழந்தை, குடும்பம் இல்லாமல் சுயநலமின்றி மக்களுக்கு தொண்டு செய்தார்.
விஜயசாந்தி
அவர் மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காகவே குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. எங்கள் காலத்தில் காருக்குள் இருந்தே மேக்கப் போட்டு உடை மாற்றிக்கொள்வோம்.
குளிர்சாதன கார் தருவது இல்லை. படப்பிடிப்பில் காற்று வரவில்லை என்றால் ஓலையில் செய்த விசிறி கொடுப்பார்கள். சரியாக தூக்கம் இருக்காது. அது மாதிரி
கஷ்டம் இப்போதைய நடிகைகளுக்கு இல்லை. கேரவன் உள்ளிட்ட நிறைய வசதிகள் செய்து கொடுக்கிறார்கள்.”
இவ்வாறு விஜயசாந்தி கூறினார்.
குடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்
குடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்
பிரபல இந்தி நடிகையான ஸ்வேதா திவாரி, நாகினி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். இவர் நடிகர் ராஜா சவுத்ரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாலக் என்ற பெண் குழந்தை உள்ளது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.
அதன்பிறகு நடிகர் அபினவ் கோலியை காதலித்து 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது. தற்போது 2-வது கணவருடனும் மோதல் ஏற்பட்டுள்ளது. அபினவ் கோலி மது போதையில் தினமும் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக ஸ்வேதா திவாரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அபினவ்வை கைது செய்தனர். தற்போது அபினவ்வை பிரிந்து தனியாக வசிக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கிறார்.
கணவருடன் ஸ்வேதா திவாரி

குடும்ப வாழ்க்கை குறித்து ஸ்வேதா திவாரி அளித்துள்ள பேட்டி வருமாறு:- “கணவரை பிரிந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது வாழ்க்கை ஒரு விஷக்கிருமியிடம் சிக்கி இருந்தது. அந்த கிருமி என்னை கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்தது. இப்போது கிருமியை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எறிந்து விட்டேன். பல பெண்கள் தங்கள் பிரச்சினையை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். தொல்லைகளை பொறுத்துக்கொள்கிறார்கள். எனக்கு தைரியம் உள்ளது.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அந்த படத்தில் நடிக்க மறுத்த நடிகை
அந்த படத்தில் நடிக்க மறுத்த நடிகை
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஐந்தெழுத்து நடிகையை ஒரு பெரிய நடிகரின் படத்தில், போலீஸ்
வேடத்தில் நடிக்கும்படி கேட்டார்களாம். “நான் இனிமேல் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக இல்லை” என்று நடிக்க
மறுத்து விட்டாராம். அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை (போலீஸ் வேடத்துக்கு) தேடி வருகிறார்களாம்.
“என் கை, கால், இடுப்பு மூன்றையும் அசைத்து ஆடினாலே போதும். ரசிக கண்மணிகள் ஆசையுடன் பார்ப்பார்கள்.
அதற்கு மேல் ‘ரிஸ்க்’ எடுக்க தேவையில்லை” என்கிறாராம், அந்த ஐந்தெழுத்து நடிகை!







