கொரோனா சாதி மதம் பார்க்காமல் கொல்கிறது பிரபல நடிகை

Spread the love

கொரோனா சாதி மதம் பார்க்காமல் கொல்கிறது பிரபல நடிகை

கொரோனா சாதி, மதம் பார்க்காமல் கொல்வதாகவும், அதற்கு எதிரான போரில் இணைந்து செயல்படுவோம் என்றும் நடிகை ராஷி கன்னா கூறியுள்ளார்.

மதசார்பற்ற கொரோனா…. சாதி, மதம் பார்க்காமல் கொல்கிறது –
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை

அளிக்கப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

டெல்லியில் சமீபத்தில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது பரிசோதனையில்

உறுதியானது. இதையடுத்து அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தானாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படி மத்திய, மாநில அரசுகள் வற்புறுத்தி உள்ளன.

ராஷி கன்னா

இந்த நிலையில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள

ராஷிகன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 வைரஸ்

மதசார்பற்றது. மதத்தின் அடிப்படையில் மக்களை அது பிரிக்கவும் இல்லை. சாதி, மதம், சொத்து போன்ற எதையும் பார்க்காமல்

அவர்களை தொற்றிக்கொள்கிறது. கொல்லவும் செய்கிறது. எனவே ஒருவரையொருவர்

குற்றம் சொல்வதை விடுத்து கொரோனாவுக்கு எதிரான போரில் இணைந்து செயல்படுவோம்.

இவ்வாறு ராஷிகன்னா கூறியுள்ளார்.

கொரோனா சாதி மதம்
கொரோனா சாதி மதம்

Leave a Reply