Tag: இலங்கை
நாடெங்கும் மேதின போராட்டம்
நாடெங்கும் மேதின போராட்டம்
இலங்கையில் மே தினத்தை முன்னிட்டு நாடனெங்கும் பல தொழில் சங்கங்கள்
இணைந்து மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்
தொடர்ந்து வெடிக்கும் மக்கள் போராட்டத்தினால் கோட்டா பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்
சஜித்தை தூக்கும் முயற்சியில் ரணில் கோட்டா சதி
சஜித்தை தூக்கும் முயற்சியில் ரணில் கோட்டா சதி
எதிர்கட்சி தலைவராக உள்ள சஜித் பிரேமதாசாவை , அந்த தலைவர் பத்வியில் இருந்து ,அவரை துரத்தி புதியவரை நியமிக்கும் நகர்வில் ரணில்,கோட்டாபய ஈடுபட்டுள்ளனர்
இவர்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் பொழுது இந்த விடயம் பேசப்பட்டுள்ளது
இதனை அடுத்து தற்போது தனக்கு மிரட்டல் அழைப்புக்கள் விடுக்க பட்டுள்ளதாக சஜித் தெரிவித்துள்ளார்
ரணில் இதுவரை ஜனாதிபதியாக துடித்த பொழுதும் அது முடியவில்லை ,தனக்கு பின் ஆசனத்தில் இருந்தவர் நாட்டின் தலைவராக வருவதை ரணில் விரும்பவில்லை
அதனாலேயே அவரது வெற்றியை மகிந்தாவுடன் இணைந்து தடுத்து கோட்டாவை வெல்ல வைத்தார் ,
அதன் பின்னர் மற்றுமொரு சதியில் ரணில் ஈடுபட்டு வருவதாக உள்ளக கசிவுகள் இடித்து கூறுகின்றன
கோட்டா முக்கிய அமைச்சர்கள் ஊழல் 3ம் திகதி வெளியீடு பீதியில் அமைச்சர்கள்
கோட்டா முக்கிய அமைச்சர்கள் ஊழல் 3 திகதி வெளியீடு பீதியில் அமைச்சர்கள்
எதிர் வரும் மூன்றாம் திகதி இலங்கை ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்களின்
ஊழல் தொடர்பாக முக்கிய ஆவணங்களை தான் வெளியீடு செய்ய போவதாக அனுரா குமரா திசாநாயாக்க தெரிவித்துள்ளார்
இவரது இந்த அறிவிப்பு இலங்கையில் அமைச்சர்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது
கோபத்தில் உள்ள மக்களுக்கு இவர் மேலும் எண்ணெய் ஊற்றுவது போன்று இந்த தகவல் பரவும் என எதிர்
பார்க்க படுகிறது
மாத்திரைகளின் விலைகள் 40 வீதத்தால் அதிகரிப்பு
மாத்திரைகளின் விலைகள் 40 வீதத்தால் அதிகரிப்பு
இலங்கையால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து மருத்துவ பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளது
தற்போது இவை நாற்பது சதாஹவீததால் , இதன் விலை அதிகரிக்க பட்டுள்ளது ,நாள் தோறும் இலங்கையில் ஏற்படும்
விலையேற்றத்தினால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளதுடன் தொடர்ந்து போராடட்ம முன்னெடுக்க பட்டு வருகிறது
லண்டன் லூசியம் பகுதியில் இளம் பெண் மாயம் – தேடும் போலீஸ்
லண்டன் லூசியம் பகுதியில் இளம் பெண் மாயம் – தேடும் போலீஸ்
லண்டன் லூசியம் பகுதியில் கடந்த இருபத்தி இரண்டாம் திகதி முதல் பதினேழு வயதுடைய இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்
இவரை கண்ணுற்றால் தமக்கு தெரிவிக்கும் படி போலீசார் தெரிவித்துள்ளனர்
குறித்த மாவட்டத்தில் தற்போது குற்ற செயல்கள் அதிகரித்து செல்வதால் போலீசார் சிவில்
உடையில் கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளனர்.
11 இளைஞர்கள் கடத்தல்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு
11 இளைஞர்கள் கடத்தல்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு
கொழும்பு – கொட்டாஞ்சேனை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்களை கப்பம் பெறுவதற்காக கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம்
தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
விசேட மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கருநாகொட உள்ளிட்ட
14 கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கியுடன் பெண் கைது
கஹட்டகஸ்திகிலிய, பலுகெடுவெவ பிரதேசத்தில் T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து T-56 துப்பாக்கி, 03 மகசீன்கள் மற்றும் 184 தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் தொகையொன்று பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியாவில் ஐஸ் மழை
நுவரெலியாவில் ஐஸ் மழை
இலங்கை நுவரெலியாவில் தற்போது ஐஸ் மழை பொழிந்துள்ளது
அருவருடங்களின் பின்னர் இந்த மழையானது பொழிந்துள்ளமை குறிப்பிட தக்கது
இந்தியா செல்ல முற்பட்ட 12 பேர் கைது
இந்தியா செல்ல முற்பட்ட 12 பேர் கைது
இலங்கை காங்கேசன்துறையில் இருந்து இந்தியா செல்ல முற்பட்ட பன்னிரெண்டு பேர் கடற்படையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
கடற்படை விசாரணையின் பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது
நாட்டில் நிலவுவது பொருளாதார பிரச்சினைதான். அதற்கு நாம் தீர்வு வழங்குவோம்.மனோவிடம் பிரதமர் மகிந்த ராஜபக்
நாட்டில் நிலவுவது பொருளாதார பிரச்சினைதான். அதற்கு நாம் தீர்வு வழங்குவோம்.மனோவிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச
- மனோவிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச
“இன்று நாட்டில் நிலவுவது பொருளாதார பிரச்சினைதான். எமக்கு நட்பு நாடுகள் உதவும். பிரச்சினைகளுக்கு நாம் பொருளாதார தீர்வு வழங்குவோம். மக்களின் பொருளாதார பிரச்சினைகள் தீர்ந்து விட்டால், இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் - ஓய்ந்து போய் விடும். அரசியலமைப்பு தீர்வு என்பது பெரிய விஷயமல்ல. அதனால் பொருளாதார பிரச்சினைகள் தீரப்போவதில்லை. 20ம் திருத்தத்தை அகற்றி விட்டு 19ம் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதாக நான் சொன்னதும், அதற்கு அமைச்சரவையில் சம்மதம் பெற்றதும் உண்மைதான். ஆனால், அதற்கு மேல் அதற்கு என்ன நடந்தது என எனக்கு தெரியாது. ஒருவேளை அது அமைச்சரவை உப குழுவில் இருக்கலாம். அதுபற்றி அவசரப்பட தேவையில்லை. அது சாவகாசமாக வரும்போது வரட்டும். முதலில் மக்களின் பொருளாதார பிரச்சினைகளை நான் தீர்க்கிறேன். அப்போது இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நின்று விடும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம், நேற்றிரவு இருவருக்கும் இடையில் நிகழ்ந்த தொலைபேசி உரையாடலின் போது, கூறியுள்ளார்.
இதுபற்றி மனோ கணேசன் எம்பி ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது,
நேற்றிரவு தொலைபேசியில். சபாநாயகர் மஹிந்த யாபாவிடம் பேசி விட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தொடர்பு கொண்டு, “20ம் திருத்தத்தை அகற்றிவிட்டு, 19ம் திருத்தத்தை கொண்டு வருவதாக சொன்னீர்கள். அமைச்சரவையிலும் அனுமதி
பெற்றதாகவும் சொன்னீர்கள். ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பிலும் நாம் அரசியலமைப்பு திருத்த வரைபை வழங்கியுள்ளோம். அதில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை முழுமையாக அகற்றுவது பற்றி கூறப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கத்தின்
வரைபுக்கே முதலிடம் கிடைக்கும். 20ம் திருத்தத்தை அகற்றும் எல்லா முயற்சிகளுக்கும் நாம் ஆதரவளிப்போம். முதற்கட்டமாக, 20ஐ அகற்றிவிட்டு, 19ஐ கொண்டு வருவதையும் நாம் ஆதரிப்போம். ஆகவே நீங்கள் எப்போது உங்கள் சட்ட வரைபை
பாராளுமன்றத்துக்கு கொண்டு வருகிறீர்கள்? இது பற்றி சற்றுமுன் சபாநாயகர் மகிந்த யாபாவிடம் பேசினேன். உங்கள் சட்ட வரைபு எப்போது சபைக்கு வரும் என்பது பற்றி, அவர் தனக்கு எதுவுமே தெரியாது என்கிறார்”, என்று கேட்டேன்.
அதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச, “இன்று நாட்டில் நிலவுவது பொருளாதார பிரச்சினைதான். எமக்கு நட்பு நாடுகள் உதவும். பிரச்சினைகளுக்கு நாம் பொருளாதார தீர்வு வழங்குவோம். அரசியலமைப்பு தீர்வு என்பது பெரிய விஷயமல்ல. அதனால்
பொருளாதார பிரச்சினைகள் தீரப்போவதில்லை. 20ம் திருத்தத்தை அகற்றி விட்டு 19ம் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதாக நான் சொன்னதும், அதற்கு
அமைச்சரவையில் சம்மதம் பெற்றதும் உண்மைதான். ஆனால், அதற்கு மேல் அதற்கு என்ன நடந்தது என எனக்கு தெரியாது. ஒருவேளை அது அமைச்சரவை உபகுழுவில்
இருக்கலாம். அதுபற்றி அவசரப்பட தேவையில்லை. அது சாவகாசமாக வரும்போது வரட்டும். முதலில் மக்களின் பொருளாதார பிரச்சினைகளை நான் தீர்க்கிறேன்.” என்று கூறினார்.
“அரசியலமைப்பு திருத்தம் மூலம் நாட்டில் உடனடியாக இறுதி தீர்வு வராது என்பது எனக்கு தெரியும். ஆனால் நாட்டில் ஸ்திரத்தன்மை வருமே. அது தீர்வை கொண்டு வரும்
. இன்று மக்கள் நாடு முழுக்க போராடுகிறார்கள். அவதிபடுகிறார்கள். இது உங்களுக்கு பிரச்சினை இல்லையா” என திருப்பி கேட்டேன்.
“இல்லை, கவலை வேண்டாம் தம்பி..! மக்களின் பொருளாதார பிரச்சினைகள் தீர்ந்து விட்டால், இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஓய்ந்து போய் விடும். அதற்குதான்
பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க போகிறேன். அப்புறம் பாருங்கள், இந்த போராட்டங்கள் எல்லாமே முடிவுக்கு வந்து விடும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறி முடித்தார்.
20ம் திருத்தத்தை அகற்றி விட்டு 19ம் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதாகவும், அதற்கு அமைச்சரவையில் சம்மதம் பெற்றதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச சொல்லி இருந்தாலும், இதற்கு அவர் முன்னுரிமை அளிக்கவில்லை என இப்போது
தெரிகிறது. நாட்டில் மக்கள் போராடுவது, உணவு, மருந்து, மின்சாரம், பெட்ரோல், எரிவாயு, உரம் போன்ற பொருளாதார தேவைகளுக்காத்தான் என அவர் உறுதியாக நம்புகிறார். ஆகவே அவற்றுக்கு தீர்வு கண்டால் இந்த போராட்டங்கள் எல்லாம்
முடிவுக்கு வந்து விடும் என அவர் நம்புகிறார். இதற்காக அவருக்கு நட்பு நாடுகள் உதவும் எனவும் அவர் நம்புகிறார்.
ராஜபக்ச குடும்பத்தார் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல், வீணடிப்பு, தவறான நிதிக்கொள்கை போன்ற விடயங்கள் பற்றி அவர் எதுவும் கூறாவிட்டாலும்கூட, இவைபற்றிய போராட்டங்களையும் கூட அவர் முக்கியமாக கருதவில்லை என தெரிகிறது.
இதுபற்றி நேற்றிரவு ஐக்கிய மக்கள் கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் பேசினேன். இன்று ஏனைய எதிரணி கட்சி தலைவர்களிடமும் பேசவுள்ளேன். அனைத்து
எதிரணி கட்சிகளும் தங்கள் செயற்பாடுகளை கூட்டிணைக்க வேண்டும் என விரும்புகிறேன்.
ஈழத்தமிழர்களுக்கு நிவாரண உதவி ! தமிழக சட்டசபைத் தீர்மானத்தினை வரவேற்கின்றோம் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஈழத்தமிழர்களுக்கு நிவாரண உதவி ! தமிழக சட்டசபைத் தீர்மானத்தினை வரவேற்கின்றோம் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை தமிழக
சட்டமன்றில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை வரவேற்கின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் ஆகியனவற்றை தமிழ்நாட்டில் இருந்து நேரடியாக இலங்கைத்தீவுக்கு அனுப்பி வைக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களினால் தனித்தீர்மானமாக இது முன்மொழியப்பட்டிருந்தது.
இச்சிறப்பு தீர்மானம் தொடர்பில் பேசிய முதல்வர் அவர்கள், ‘இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழ்நாடு அரசு உதவ தயாராக உள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு உணவு அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்க வேண்டும் இலங்கை தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரி தமிழ்நாடு
அரசு கடிதம் எழுதியும் மத்திய அரசிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, இலங்கை சிங்களவர்களுக்கும் உதய தயார்’ என பேசியிருந்தார்.
பிரதான எதிர்கட்சியான அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தமது கருத்துக்களை வழங்கியிருந்ததோடு, குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேறியது சபாநாயகர் அறிவித்திருந்தார்.
அனைத்துக்கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றியுள்ள இத்தீர்மானத்தினை நன்றியோடு வரவேற்பாதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழக
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைதாங்கி இந்த முயற்சியினை முன்னெடுப்பதனை நன்றியோடு வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஈழத்தமிழர் தேசத்தின் உண்மை நிலையையைக் கண்டறிவதற்கான குழு ஒன்றினை அங்கு உடன் அனுப்பி வைப்பதும் இம் முயற்சிக்கு
வலுச் சேர்க்கும் என்பதோடு, நேரடி உதவிப் பொறிமுறை ஊடாக ஈழத்தமிழ் மக்களுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பங்களிப்பை
வழங்கும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு முன்னராக அனுப்பியிருந்த கடிதமொன்றில் தெரிவித்தார்.
நாங்கள் ஆட்சி அமைக்க உதவுங்க -நாமல் மன்றாட்டம்
நாங்கள் ஆட்சி அமைக்க உதவுங்க -நாமல் மன்றாட்டம்
இலங்கையில் ராஜபக்ச குடும்ப ஆட்சியை முற்றாக அகற்ற மக்கள் தொடர்
போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்
இவர்களின் இந்த போரட்டம் காரணமாக இயல்பு நிலை பாதிக்க பட்டுள்ளது
,
இவ்வாறான கால பகுதியில் தாம் ஆட்சியமைக்க அணைத்து கட்சிகளும்
ஒன்றிணையுமாற மகிந்த மகன் நாமல் கோரிக்கை விடுத்துள்ளார்
அடித்த கொள்ளை பணத்தை பாதுகாக்க தற்போது ஆட்சி அதிகாரம் அவசியமாகிறது ,அதனால் தமது அதிகாரத்தை தக்க வைத்து
கொள்வதில் ஆளும் கோட்டா அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது
தமிழ் அமைச்சர் வீடு முன்பாக மக்கள் போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இன்றைய பணிபுறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் லிந்துலை மெராயா பகுதியில் நேற்று மதியம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் லிந்துலை எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெரயா, ஹென்போல்ட், திஸ்பனை ஆகிய தோட்டங்களை சேர்ந்த 800ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள்
, இளைஞர், யுவதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த போராட்டமானது எல்ஜீன் பிரதேசத்திலிருந்து பேரணியாக திஸ்பனை சந்தி வரை சென்று மீண்டும் போராட்டகாரர்கள் லிந்துலை மெராயா பிரதேசத்தில் உள்ள
இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரின் வீட்டிற்கு முன்னால் போராட்டத்தை தொடர்ந்தனர்.
மேலும், அவ்விடத்தில் சவப்பெட்டி, டயர், உருவ பொம்மை ஆகியன எரித்து மலையக மக்களுக்கு துரோகம் செய்த அரவிந்தகுமார் ஒழிய வேண்டும் என கோஷங்களை
எழுப்பினர். இதனால் அந்தபகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதோடு, போக்குவரத்து சேவையும் இரண்டு மணித்தியாலயங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.
இதன்போது அமைச்சரின் வீட்டிற்கு எவ்வித சேதங்களும் ஏற்படாத வகையில் லிந்துலை, நானுஓயா,
அக்கரப்பத்தனை, டயகம ஆகிய பொலிஸார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
மக்கள் பார்க்க – சந்தையில் ஒருவர் வெட்டிக் கொலை
மக்கள் பார்க்க – சந்தையில் ஒருவர் வெட்டிக் கொலை
இலங்கை தனமல்வில பகுதியில் உள்ள சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்திட வருகை
தந்த 44 வயதுடைய நபர் ஒருவர் மிக கொடூரமாக வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்
இந்த கொலைக்குரிய காரணம் தெரியவில்லை ,விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கிளிநொச்சியில் வாய், முகம், தாடை சத்திர சிகிச்சைகள் ஆரம்பம்
கிளிநொச்சியில் வாய், முகம், தாடை சத்திர சிகிச்சைகள் ஆரம்பம்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை முதன் முதலாக வாய், மூக்கு, தாடை சத்திர
சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர்
வைத்திய அதிகாரி சுகந்தன் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று மேற்படி
சிகிச்சைகளை பெற்று வந்த பொது மக்கள் இனிவரும் காலங்களில் குறித்த
சிகிச்சைகளை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியும்
எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த வாய், முகம், தாடை விசேட வைத்திய நிபுணர் மா.
தவராஜாவினால் மேற்படி சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ரம்புகளை துப்பாக்கி சூடு – 3 போலீஸ் அதிகாரிகள் கைது
ரம்புகளை துப்பாக்கி சூடு – 3 போலீஸ் அதிகாரிகள் கைது
இலங்கை ரம்புகளை பகுதியில் நடந்த அசம்பாவங்களுக்கு காரணமாக
விளங்கினார்கள் என்ற சாட்டில் மூன்று உயர் போலீஸ் அதிகாரிகள் கைது செய்ய பட்டுள்ளனர்
அங்கு இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளம்பியுள்ள நிலையில் இந்த கைது
இடம் பெற்றுள்ளது
இது ஒரு கண்துடைப்பு நாடகம் என தெரிவிக்க படுகிறது
மகிந்த மகன் நாமலுக்கு எதிராக வழக்கு
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம்
14 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
வழக்கின் மேலதிக சாட்சியங்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாடாளுமன்ற
உறுப்பினராக இருந்த போது நாமல் ராஜபக்ஷ
உட்பட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக 30 மில்லியன் ரூபாவை
கவர்ஸ் கூட்டுத்தாபனத்தில் முதலீடு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
முடங்கிய யாழ்ப்பாணம் – மக்கள் ஏமாற்றம்
முடங்கிய யாழ்ப்பாணம் – மக்கள் ஏமாற்றம்
அரசுக்கு எதிராக தமது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் தொழில்
சங்கங்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன
இவ்விதம் யாழ்ப்பாணம் தற்போது இயல்பு நிலை இழந்து முடங்கியுள்ளது
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு
அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த நீதிமன்ற தடை பிறப்பிக்க பட்டுள்ளது
இதனால் அவர் எவ்வித போராட்டங்களிலும் கலந்து கொள்ள முடியாது என தெரிவிக்க படுகிறது
இந்து சுமந்திரன் ஏற்பாட்டில் உள்ளாக ரீதியா செயல் படுத்த பட்ட நகர்வாக பார்க்க படுகிறது
அரசியலில் இதெல்லாம் சகயமப்பா
1000 தொழில் சங்கங்கள் இணைந்து மகிந்தா ,கோட்டாவுக்கு எதிராக போராட்டம்
1000 தொழில் சங்கங்கள் இணைந்து மகிந்தா ,கோட்டாவுக்கு எதிராக போராட்டம்
இலங்கையில் லயம் கோட்டா மகிந்த அரசுக்கு எதிராக ஆயிரம் தொழில் சங்கங்கள்
இணைந்து இன்று மாபெரும் போரட்டம் ஒன்றை நாடத்துகின்றன
இந்த ஒன்றிணைந்த எதிர்ப்பினால் ஆளும் அரசு பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது
,மக்களின் இந்த எதிர்ப்புக்கு பொறுப் பேற்று பதவி விலகிட தொடர்ந்து சகோதர்கள் மறுத்து வருகின்றமை
குறிப்பிட தக்கது







