Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு மாநகரசபை உறுப்பினராக ரதினி பிரதீப்குமாருக்கு கட்சி தலைவர் மனோ கணேசன் எம்பி நியமனம்

கொழும்பு மாநகரசபை உறுப்பினராக ரதினி பிரதீப்குமாருக்கு கட்சி தலைவர் மனோ கணேசன் எம்பி நியமனம்

இலங்கை ,கொழும்பு ; திருமதி ரதினி பிரதீப்குமார், கொழும்பு மாநகரசபையின் ஜனநாயக மக்கள் முன்னணியின் (DPF) உறுப்பினராக கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது நியமனம் தொடர்பான உறுதியுரையை கட்சி தலைவர் மனோ கணேசன் எம்பியிடம் வழங்கி, நியமனத்தை பெற்றுக்கொண்டார்.

தொழில்ரீதியாக தமிழ் மொழி, இந்து சமயம், சிங்கள-ஆங்கில இணைப்பு மொழி பாட ஆசிரியரும் ஆங்கில பட்டய (diploma) தகைமையாளருமான, ரதினி

பிரதீப்குமார், கொழும்பு மாநகரசபையில் ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர் வரிசையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வண்ணம் நியமனம் பெற்றுள்ளார்.

கொழும்பு மாநகரசபையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பாக பத்து உறுப்பினர்கள் பணியாற்றுகின்றார்கள்.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் ரயில்வே கட்டணங்கள் விலை அதிகரிப்பு

    இலங்கையில் ரயில்வே கட்டணங்கள் விலை அதிகரிப்பு

    இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் இன்று முதல் ரயில்வே கட்டணங்கள் விலை அதிகரிக்க பட்டுள்ளது .இந்த திடீ ரயில் விலை அதிகரிப்பால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்.

    இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறிய நிலையில் அதிகரிக்க பட்டுள்ள ரயில்வே விலை கட்டணங்கள் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாள் தோறும் இலங்கையில் விலைவாசி அதிகரித்து செல்கிறது .ஆனால் மக்களோ தமது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    மக்கள் வாழ்வியலை மீட்டு இயல்பு நிலைக்கு எடுத்து செல்லும் நடைமுறை திட்டம் ஏதும் இலங்கை ஆளும் அரசுகளிடம் காணப்படவில்லை என்கிறது மக்கள் மன்றம் .

    தமது அரசியல் அதிகார போதையில் மிதக்கும் ரணில் விக்கிரமசிங்க மக்கள் வாழ்வியலை மேம்படுத்த ஏதும் செய்திடாது விலை உயர்வை அதிகரித்து செல்கிறது என்கிறது மக்கள் கருத்தாக உள்ளது .

      Posted in இலங்கை செய்திகள்

      அமெரிக்கா தூதர் ரணிலுடன் திடீர் சந்திப்பு

      அமெரிக்கா தூதர் ரணிலுடன் திடீர் சந்திப்பு

      இலங்கை ,கொழும்பு ; இலங்கைக்கான அமெரிக்கா தூதர் ஜூலி சங் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு இடையில் திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

      இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்ற முதல் நாள் போராட்டக்கார்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

      இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்த அவர் இலங்கையின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்தார் .

      மேலும்அமெரிக்காவின் முக்கிய கண்டிப்பான தகவலையும் ரணிலிடம் வழங்கி சென்றுள்ளார் .

      அமெரிக்கா தூதுவரின் விரைவான சந்திப்பு இலங்கைக்கு முக்கிய விடயத்தை அமெரிக்கா வலியுறுத்தி சென்றுள்ளதை காணமுடிகிறது .

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை

        இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை

        இலங்கை ; இலங்கையில் புதிதாக ஆட்சி பீடம் ஏறியுள்ள அரசுக்கு ஐரோப்பிய யூனியன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

        மக்கள் தன்னெழுச்சி போராட்டங்களை அடக்குவது கைது செய்தல் வன்முறை பிரயோகித்தல் நிறுத்த பட வேண்டும் என தெரிவித்துள்ளது .

        மேலும் GSP பிளஸ் சலுகை பெற்றுக்கொள்ளும் விதிகளுக்கு இலங்கை உடன்பட்டு செயல் படவேண்டும் என தனது கடும்போக்கை தெரிவித்துள்ளது .

        இந்த ஐரோப்பிய யூனியன் விதிகளை மறந்து செயல்பட்டால் இலங்கைக்கு வரிச்சலுகை வழங்க படமாட்டாது என்பது இங்கே குறிப்பிட தக்கது.

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் கொரனோ தொற்றுக்கு இலக்காகி ஒருவர் மரணம்

          இலங்கையில் கொரனோ தொற்றுக்கு இலக்காகி ஒருவர் மரணம்

          இலங்கையில் மீள பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

          இலங்கையில் குறைவடைந்து காணப்பட்ட கொரனோ நோயானது மீளவும் அதிகரித்து வருகிறது.

          இலங்கையில் மீள பரவும் இந்த கொரனோ நோயில் இருந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வேண்ட படுகிறது.

          இதே போல பிரேசில் நாட்டில் மிக வேகமாக இந்த நோயானது பரவி வருகின்றது .

          இந்த கொரனோ தாக்குதலில் 300 க்கு மேற்பட்டவர்கள் சமீப நாட்களில் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது.

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கை இந்தியா உறவில் பாதிப்பில்லை இந்தியா அறிவிப்பு

            இலங்கை இந்தியா உறவில் பாதிப்பில்லை இந்தியா அறிவிப்பு

            இந்தியா, டில்லி ; இலங்கையில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை தொடர்பாக இந்தியா கருத்துரைத்துள்ளது .

            இலங்கை இந்தியாவுக்கு இடையில் வர்த்தக முதலீட்டு உறவுகள் சிறந்த முறையில் உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.


            இந்தியா முந்திக்கொண்டு இந்த விடயத்தை அறிவித்துள்ள முக்கிய விடயமாக பார்க்க படுகிறது.

            இலங்கையில் புதிய ஜனாதிபதியை நியமிப்பதில் இந்தியா அமெரிக்கா கடும் போட்டிகளைமேற்கொண்டது .இதில் அமெரிக்காவே வெற்றி பெற்றுள்ளது எனப்படுகிறது.

            அவ்வாறான வேளையில் இந்தியா இவ்விதம் இலங்கை தொடர்பாக தனது கருத்தை வெளியிட்டுள்ளமை முக்கியத்துவம் பெறுகிறது .

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கை நெல்சன் மண்டேலா சர்வதேச தின நடவடிக்கைகளில் பங்கேற்பு

              இலங்கை நெல்சன் மண்டேலா சர்வதேச தின நடவடிக்கைகளில் பங்கேற்பு

              தென்னாபிரிக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022 ஜூலை 18ஆந் திகதி அட்டெரிட்ஜ்வில்லில் உள்ள லெரடோங் ஹொஸ்பிஸில்

              தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. நலேடி பண்டோர் தலைமையில் சமூக சேவை நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்றது.

              உயர்ஸ்தானிகர் பேராசிரியர் காமினி குணவர்தன பல இராஜதந்திரிகளுடன் இணைந்து 18 நோய்வாய்ப்பட்ட நோயாளர் விடுதியின் ஊழியர்களுக்கு

              தன்னார்வ சேவைகளை வழங்குவதில் நேரத்தை செலவிட்டார். மேலும், இலங்கையின் சார்பாக சிலோன் தேயிலை மற்றும் நோயாளிகளுக்கான கழிப்பறைப் பொருட்களையும் வழங்கினார்.

              ஐ.நா. பொதுச் சபையால் (ஐ.நா. தீர்மானம் யுஃசுநுளுஃ64ஃ13) 2009 இல் நிறுவப்பட்ட நெல்சன் மண்டேலா சர்வதேச தினம், மோதலைத் தீர்த்தல், இன உறவுகள், மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், பாலின

              சமத்துவம், குழந்தைகள் மற்றும் ஏனைய பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் உரிமைகள், வறுமைக்கு எதிரான போராட்டம் மற்றும் சமூக நீதியை

              மேம்படுத்துதல் ஆகியவற்றில் மனிதகுலத்தின் சேவைக்கான முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதற்காக

              நிறுவப்பட்டது. இது ஆண்டுதோறும் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 அன்று கொண்டாடப்படுகின்றது.

              இலங்கை நெல்சன் மண்டேலா சர்வதேச தின நடவடிக்கைகளில் பங்கேற்பு

              கடந்த ஆண்டுகளைப் போலவே, தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு ஆதரவளிக்க அல்லது அவர்களின் உள்ளூர் சமூகத்தில் சேவை செய்ய குறைந்தபட்சம் 67 நிமிடங்களை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும்

              வகையில், தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புத் திணைக்களம் (இலங்கையில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு சமமானது) 2022 நெல்சன் மண்டேலா சர்வதேச தின நிகழ்வுகளை

              வழிநடாத்தியதுடன், குறித்த 67 நிமிடங்கள் மனித உரிமைகள் மற்றும் நிறவெறி ஒழிப்புக்காக முன்னாள் ஜனாதிபதி போராடிய ஆண்டுகளின் எண்ணிக்கையை அடையாளப்படுத்துகின்றது.

              நெல்சன் மண்டேலாவின் மேற்கோளான, ‘உங்களிடம் இருப்பதைக் கொண்டு உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்,


              நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்’ என்பது 2022 நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தின் கருப்பொருளாகும்.

                Posted in இலங்கை செய்திகள்

                டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படும் புற்றுநோய் மருந்துகளை நன்கொடை

                டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படும் புற்றுநோய் மருந்துகளை நன்கொடை

                மும்பையில் உள்ள டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை இலங்கை ரூபாய் 20 மில்லியன் பெறுமதியான புற்றுநோய் மருந்துகளை 2022 ஜூலை 15ஆந் திகதி இலங்கைக்கு வழங்கியது.

                இந்த நன்கொடையில் மஹரகமவில் உள்ள அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனைக்குத் தேவையான வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மருந்துகளும் இடம்பெற்றுள்ளன.

                இலங்கைக்கு மருத்துவப் பொருட்களை விமானத்தில் கொண்டு செல்வதற்குத் தேவையான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளை எளிதாக்குவதற்காக

                மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் நன்கொடையாளர் மற்றும் தொடர்புடைய இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுடன் 2022 ஜூலை 16ஆந் திகதி ஒருங்கிணைத்தது.

                இந்த கையளிப்பு விழாவில், நன்கொடையை ஏற்பாடு செய்த டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் பின்வரும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்: டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் சி.எஸ்.

                பிரமேஷ், டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் பீடியாட்ரிக் என்கொலஜி பிரிவின் பேராசிரியர் மற்றும் தலைவர் பேராசிரியர் வைத்தியர் கிரிஷ் சின்னசாமி, டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் உதவி மருத்துவக்

                டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படும் புற்றுநோய் மருந்துகளை நன்கொடை

                கண்காணிப்பாளர் வைத்தியர் வினித் சமந்த், டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் புற்றுநோயியல் உதவிப் பேராசிரியர் வைத்தியர்

                வெங்கட ராம மோகன் கொல்லமுடி, டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் பொது முகாமையாளர் (சி.எஸ்.ஆர்.) சுனிதா ராவ் மற்றும் டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் மருந்தாளர் வோனோத் நாயர்.

                இந்த நன்கொடையை வழங்கும் நிகழ்வில் மும்பையில் உள்ள இலங்கையின் தூதரகத் தூதுவர் கலாநிதி. வல்சன் வேத்தோடி மற்றும் துணைத் தூதுவர் (வணிகம்) சந்துன் சமீர ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கைக்கு

                தேவைப்படும் இந்த நேரத்தில் டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் வழங்கிய விலைமதிப்பற்ற நன்கொடையைப் பாராட்டிய துணைத் தூதுவர், டாட்டா ஞாபகார்த்த நிலையம் மற்றும் இலங்கையில் உள்ள புற்றுநோய்

                சிகிச்சை நிறுவனங்களுக்கு இடையே புற்றுநோய் சிகிச்சை அறிவு மற்றும் நிபுணத்துவத்தை பரிமாறிக்கொள்வதற்கு மேலும் ஒத்துழைப்பைக் கோரினார்.

                உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய புற்றுநோய் மையங்களில் ஒன்றான டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை, 75 ஆண்டுகளுக்கும் மேலான

                விதிவிலக்கான நோயாளர் பராமரிப்பு, உயர்தரப் பயிற்சி மற்றும் புதுமையான புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் தேசிய மற்றும் உலகளாவிய புற்றுநோய்

                கட்டுப்பாட்டு முயற்சிகளில் முன்னணியில் உள்ளது. இது இந்தியாவில் புற்றுநோய்க்கான தடுப்பு, சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கான விரிவான தேசிய புற்றுநோய் மையமாகும்.

                டாட்டா ஞாபகார்த்த நிலையம் அடிப்படை, மொழிபெயர்ப்பு, தொற்றுநோயியல் மற்றும் மருத்துவ புற்றுநோய் ஆராய்ச்சியில் உலக அளவில் முன்னணியில் உள்ளது. டாட்டா ஞாபகார்த்த நிலையத்தில் உள்ள

                ஆராய்ச்சியில் புற்றுநோய் உயிரியலைப் புரிந்துகொள்வதற்கான ஆய்வுகள், பொதுவான புற்றுநோய்களுக்கான பெரிய சமூக அடிப்படையிலான

                ஸ்கிரீனிங் சோதனைகள் மற்றும் கூட்டு ஆய்வுகள், நியோட்ஜுவண்ட் மற்றும் துணை சிகிச்சைகள், பெரிய அறுவை சிகிச்சை தலையீடுகள், அறுவை

                சிகிச்சை சோதனைகள், மறுபயன்பாட்டு மருந்துகள் மற்றும் நோயாளி பயணத்தைப் புரிந்துகொள்வதற்கான தரமான ஆராய்ச்சி ஆகியவை

                அடங்கும். மேலும், பயிற்சி மற்றும் கல்வி ஆகியவை டாட்டா ஞாபகார்த்த நிலையத்திற்கு முக்கிய கவனம் செலுத்தும் பகுதியான இது, இந்தியாவில் புற்றுநோயியல் பயிற்சிக்காக மிகவும் விரும்பப்படும் நிறுவனமாக உள்ளது.

                இலங்கையின் துணைத் தூதரகம்,
                மும்பை

                  Posted in இலங்கை செய்திகள்

                  ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா

                  ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா

                  ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கத்தின் வழமையான மிருகத்தனம் மற்றும் உத்தியோகபூர்வ வன்முறையைப் பயன்படுத்தி, தற்போதைய “ராஜபக்ஸ நிழல்

                  அரசாங்கம்” இன்று காலை காலிமுகத்திடல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக கோழைத்தனமான மற்றும் வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

                  அதனைப் செய்தியிட வந்த பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் அங்கவீனமான போர்வீரர்களும் அந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு

                  முகங்கொடுக்க நேரிட்டதோடு இந்த தாக்குதல் உண்மையான அர்த்தத்திலயே கொடூரமான உத்தியோகபூர்வ வன்முறையாகும்.

                  புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்து ஒரு நாள் கழிவதற்குள் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலைத் தொடுத்துள்ளதுடன் தனது எதிர்கால ஆட்சியின் தன்மை என்பதை இதன் மூலம் உணர்த்த முற்பட்டுள்ளார் என்றால், இவ்வாறான அட்டூழியங்களுக்கு

                  அப்பாற்பட்ட பலமிக்க அரசாங்கங்கள் மக்கள் சக்தியால் வீட்டுக்கு அனுப்பப்பட்டதை அவருக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

                  அந்தந்த சிவில் போராட்டத்தின் போராளிகள் ஆக்கிரமித்திருந்த இடங்கள் அனைத்தையும் மீள கையளித்து கொண்டிருக்கும் போதும், அதற்குள்,

                  பாதுகாப்புப் படையினர் விடியற்காலையில் புகுந்து, “உயர் உத்தரவுப்படி” இந்த கோழைத்தனமான

                  தாக்குதலை நடத்தியுள்ளனர். ராஜபக்ஸ அரசை வீட்டுக்கு அனுப்ப முற்படுவதற்கு எதிராக வெறியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது

                  எங்களுக்குத் தெரியாது, ஆனால் அது அவ்வாறு இல்லை என்று நினைக்க எந்த காரணமும் இல்லை.

                  ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா

                  போராடுவதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் நாட்டு மக்களுக்குள்ள ஜனநாயக உரிமையை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம்.

                  அரச சொத்துக்கள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தாமல், வன்முறைக்குப் பதிலாக நாகரீகமான போராட்டங்களுக்காக நாங்கள் தொடர்ந்து முன் நிற்கிறோம்.

                  ஒரு புறம் தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கு வழி வகுத்தது காலிமுகத்திடல் உட்பட இந்நாட்டு மக்கள் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவினாலாகும்.

                  எனினும் இந்த போராட்டம் அவரை ஜனாதிபதியாவதற்கு சிறிதும் ஊக்கமளிக்கவில்லை என்றாலும், அதன் மூலம் அவர் அதிகாரத்தைப் பெற்றார்.

                  தான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து 12 மணித்தியாலங்கள் செல்வதற்கு முன் அதனை ஜனாதிபதி மறந்து விட்டார் என்பது வருத்தமளிக்கிறது என்பதோடு,

                  ஒருவேளை ராஜபக்ஸ ஆட்சி கவிழ்க்கப்பட்டமைக்கு போராட்டம் காரணமாக அமைந்ததன் கோபமாக கூட இருக்கலாம்.

                  முன்னைய ராஜபக்ஸ அரசாங்கம் நாகரீக நாடாக எழுந்து நிற்பதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் அழித்தொழித்தது என்பதோடு, அதுவே தற்போதைய “ராஜபக்ஸ நிழல் அரசாங்கத்தில்” நடக்க ஆரம்பித்துள்ளது.

                  ராஜபக்ஸ வெறியை விடவும் தீவிர வெறியாக மாறியிருப்பது தான் வித்தியாசமாக உள்ளது.

                  இந்த நாடு எவ்வளவு பாதாளப் படுகுழியில் வீழ்ந்துள்ளது என்பதை புரிந்து கொள்வதற்குப் பதிலாக, தனது அதிகாரத் திட்டத்திற்காக மட்டுமே செயல்படும் இந்த

                  “ராஜ்பக்ஸவின் நிழல் அரசாங்கம்” மக்களின் அடிப்படை உரிமையான எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையையும், சுதந்திரத்தையும் மீறியுள்ளதோடு, ஊடகவியலாளர்களுக்கு உரித்தான சுதந்திரத்தையும் கொடூரமான முறையில் மீறியுள்ளது.

                  ஆயுதம் ஏந்தியவர்கள், அங்கவீனர்கள் மற்றும் பொதுமக்கள் மீது ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்திய உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற அனைத்து

                  அதிகாரிகளுக்கும் எதிராக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதோடு, இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உத்தரவிட்ட அனைவருக்கும் எதிராக உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

                  இந்த வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான தாக்குதலால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம் என்பதோடு, தாக்குதலின் உள்ளார்ந்த வெறுப்புடன் அதைக்

                  கண்டிக்கிறோம். நமது நாட்டை கோத்திர நிலைக்கு தள்ள முயலும் “ராஜபக்ஸ நிழல் அரசுக்கு” எதிராக முழு நாடும் எழுந்து நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அரசுக்கு வலியுறுத்துகிறோம்!

                  சஜித் பிரேமதாஸ – எதிர்க்கட்சி தலைவர்

                    Posted in இலங்கை செய்திகள்

                    உணவில் நச்சுத்தன்மை உட்கொண்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

                    உணவில் நச்சுத்தன்மை உட்கொண்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

                    இலங்கை திருகோணமலை பாலையூற்று பகுதியில் உணவை உட்கொண்ட 11 சிறார்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

                    இவர்களுக்கு வழங்க பட்ட உணவில் நச்சுத்தன்மை காணப்படத்தினால் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி ,சத்தி தலைசுற்று என்பனவற்றுக்கு ஆளான நிலையில் 11 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

                    குறித்த உணவை தயாரித்தவர்கள மீது பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                    உணவில் நச்சு தண்மை ஏற்பட காலாவதியான உணவுகளை சமையல் செய்து இருக்கலாம் என நம்ப படுகிறது.


                    சமைத்த உணவில் ஏற்பட்ட நச்சு தன்மையால் அதனை உட்கொண்ட சிறார்கள் சுகவீனமுற்றது தொடர்ப்பிலான பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து ஆரம்பிக்க பட்டுள்ளன.

                      Posted in இலங்கை செய்திகள்

                      போராட்ட கார்கள் மீது இராணுவம் தாக்குதல்

                      போராட்ட கார்கள் மீது இராணுவம் தாக்குதல்

                      இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் கோட்டா கோ காம போராட்டக்காரர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

                      கோட்டா கோ காம போராட்டக்காரர்கள் பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் இந்த திடீர் வன்முறை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .

                      மக்கள் மீது நடத்த பட்ட தாக்குதல் சம்பவம் மக்களை மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

                      போராட்டக்கார்கள் மேலும் ஒன்று கூடி ஆளும் ஜனாதிபதி ரணில்,விக்கிரமசிங்கேவிற்கு எதிராக போராட்டம் நடத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம்

                        ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம்

                        இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அமைச்சரவை தெரிவு இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                        கொழும்பு-7, ப்ளவோர்ஸ் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த அமைச்சரவை நியமனம் இடம்பெறுகிறது.

                        ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தெரிவின் பொழுது பேரம் பேச்சுக்களின் பொழுது பேரம் பேச பட்ட விடயங்கள் தற்போது அமைச்சரவை நியமனத்தில் இடம்பெறுகிறது குறிப்பிட தக்கது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமனம்

                          இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமனம்

                          இலங்கையின் பிரதமராக ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

                          கொழும்பு-7, ப்ளவோர்ஸ் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், திரு .தினேஷ் குணவர்தன பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

                          அவர் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை அமைச்சராகவும், இலங்கை பாராளுமன்றத்தில் அவைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

                          குணவர்தன 1983 முதல் இடதுசாரி மகாஜன எக்சத் பெரமுன (MEP) கட்சியின் தலைவராக செயல்பட்டுவருகின்றார்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணை

                            ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணை

                            இலங்கை ; ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

                            ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் விஞ்ஞான ரீதியான சாட்சியங்களைப் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு

                            அதிகாரிகள் ((SOCO)) மற்றும் கைரேகை அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

                            ஜனாதிபதி செயலகம், பிரதான நுழைவாயில் மற்றும் அண்மித்த பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்காக

                            முப்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து இன்று (22)அதிகாலை விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டதாக பொலிஸ்

                            ஊடக பேச்சாளர் அலுவலகம வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                            ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                            கைது செய்யப்பட்டவர்கள் களனி, எம்பிலிபிட்டிய, ஜா-எல, இரத்தினபுரி, செவனகல, வெல்லம்பிட்டிய, பிடிகல, வாதுவ மற்றும் நுகேகொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.


                            26 முதல் 58 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..

                              Posted in இலங்கை செய்திகள்

                              யாழில் பெற்றோல், டீசல் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கை

                              யாழில் பெற்றோல், டீசல் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கை

                              தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம் (21) தொடக்கம் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகத்தை

                              சீராக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

                              எரிபொருள் விநியோக நடைமுறைகள் தொடர்பில் நேற்றைய தினம் (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

                              யாழ் மாவட்டத்தில் 8 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகமும், 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகமும் இடம்பெறுகின்றன..

                              நேற்று (21 ஆம் திகதி) தொடக்கம் 29 ஆம் திகதி வரை பெற்றோல் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ளது.

                              மக்கள் எந்த விதமான நெருக்கடி மற்றும் குழப்பங்களை
                              ஏற்படுத்தாது அமைதியான முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

                              இதேவேளை சராசரியாக 7 – 10 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 25 ஆம் திகதி வரையில் டீசல் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான

                              அட்டவணை இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

                              எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு குழப்ப நிலையை தோற்றுவிப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

                              இதற்கமைவாக அரசாங்கத்தினால் தேசிய எரிபொருள் விநியோக அனுமதிப் பத்திரம் ( National fuel Pass வெளியிடப்பட்டுள்ளது.
                              QR code முறை மூலமாக இதனை பெற வேண்டும்.

                              இதனைப் பெறுவதில் சில நடைமுறை பிரச்சினைகள் காணப்படுவதனால் அது முதல்கட்டமாக மேல் மாகாலத்திலும் அடுத்த கட்டமாக நாடு பூராகவும்

                              அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டம் 25ஆம் திகதிக்கு பின்னர் அமுலில் இருக்கும்.

                              இந்த திட்டம் யாழ் மாவட்டத்தில் அமுல்படுத்தப்படும் வரையில் பிரதேச செயலகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விநியோக

                              பங்கீட்டு அட்டைகளை பயன்படுத்துமாறும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

                              வாகனங்களின் இறுதி இலக்க அடிப்படையில் இந்த விநியோகம் இடம்பெறும்.

                              பொதுமக்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் நெருக்கடி நிலையை ஏற்படுத்தாமல் அமைதியாக அந்தந்த பிரதேசங்களில் உள்ள எரிபொருள்

                              நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை பெற்றுக் கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

                              எரிபொருள் பங்கீட்டு அட்டை இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் கிராம அலுவலர் ஊடாக பிரதேச செயலகங்களில் அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

                              இதேவேளை பிற மாவட்டங்களில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்கள் தங்களின் உரிய ஆவணங்களை அந்தந்த பிரதேச செயலகங்களில் சமர்ப்பிப்பதன் மூலம் அவர்களுக்குரிய எரிபொருள் பங்கீட்டு அட்டையை

                              பெற்றுக் கொள்ள முடியும். யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பதற்காக யாழ் பல நோக்கு கூட்டுறவு சங்கம் மட்டுப்படுத்திய எரிபொருள் விநியோகத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

                              இங்கு எரிபொருளை பெறுபவர்கள் கட்டாயமாக மாவட்ட செயலகங்களில் முன் அனுமதியை பெற்றிருத்தல் வேண்டும்.

                              யாழ் மாவட்டத்தில் கருப்பு சந்தை எரிபொருள் விற்பனையை தடுக்கும் முகமாக
                              இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது பொது மக்களை அசௌகரியத்திற்கு


                              உட்படுத்தப்படும் செயல் அல்ல. எனவே அனைவரும் ஒத்துழைத்து எரிபொருள் விநியோகத்தை
                              முன்னெடுப்பதற்கு உதவுமாறும் அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                பள்ளத்தில் வீழ்ந்த வாகனம் 11 பேர் காயம்

                                பள்ளத்தில் வீழ்ந்த வாகனம் 11 பேர் காயம்

                                இலங்கை ;கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா உடப்புஸ்சலாவ பிரதான வீதியின் 12 ஆவது மைல் கல்லுக்கு உட்பட்ட சந்ரகாந்தி தோட்ட ஐஸ்

                                பீளிக்கு அருகில் உள்ள பள்ளத்தில் கெப் ரக லொரி ஒன்று பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

                                இன்று (21) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 11 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் இவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                                குறித்த கெப் ரக லொரி பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்திற்கு உருண்டு சென்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சம்பவம்

                                குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.விக்கிரமசிங்ஹ தெரிவித்தார்.

                                பள்ளத்தில் வீழ்ந்த வாகனம் 11 பேர் காயம்

                                இந்த லொரியானது பூண்டுலோயா பகுதியிலிருந்து ஹைபொரஸ்ட் பகுதிக்கு மரணவீடு ஒன்றுக்கு செல்வதற்காக 11 பேருடன் காலை பயணித்துள்ளது.

                                பின் மீண்டும் பூண்டுலோயா நோக்கி குறித்த லொரி இன்று மாலை பயணிக்கையிலே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

                                இதன்போது சாரதி உட்பட 11 பேர் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பலத்த காயங்கள்

                                ஏற்பட்ட நிலையில் நுவரெலியா மாவட்ட
                                வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கை வந்தடைந்த சீனா அரிசி கப்பல்

                                  இலங்கை வந்தடைந்த சீனா அரிசி கப்பல்

                                  இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கா அதிகாரத்தில் உள்ள பொழுது முதலாவது சீனாவின் அரசி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

                                  சீனாவின் இந்த கப்பலில் 500 மெட்ரிக் தொன் அரிசி ஏற்ற பட்டு வந்தடைந்துள்ளது .


                                  இந்த சீனாவின் அரிசி கப்பல் இலங்கையில் உள்ள சிறார்களின் உணவு தேவையை பூர்த்தி செய்திடும் என தெரிவிக்க படுகிறது .

                                    Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

                                    சீனா கடனால் சீரழிந்தத இலங்கை உண்மையை உடைத்த அமெரிக்கா உளவுத்துறை

                                    சீனா கடனால் சீரழிந்தத இலங்கை உண்மையை உடைத்த அமெரிக்கா உளவுத்துறை

                                    ,

                                    இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் சீனா வழங்கிய கடன் பொறியே என அமெரிக்கா உளவுத்துறை உண்மையை உடைத்து தெரிவித்துள்ளது.

                                    அமெரிக்காவின் உளவுத்துறை தலைவர் நிகழ்வு ஒன்றில் பேசும் பொழுது இன்று இந்த பொருளாதார நெருக்கடியில் இலங்கை நாடு சிக்கி தவிக்க சீனாவின் கடன் பொறியும் அதிகமான வட்டி வீதமும் மூலம் என இடித்துரைத்துள்ளார்.

                                    ஆசை காட்டி சீனா நாடுகளை கடன் நிலைக்கு தள்ளி அந்த நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நரி திட்டமே இது என்கிறது .

                                    இலங்கையில் நெருக்கடி ஏற்படும் ரணில் எச்சரிக்கை

                                    இலங்கையை கைவிட்ட உலக நாடுகள் பிச்சைக்கார நாடான இலங்கை

                                    இலங்கை இன்று இந்த நிலையில் சிக்கி தவிக்க சீனாவே காரணம் என அமெரிக்கா உளவுத்துறை விடயத்தை போட்டுடைத்துள்ளது.

                                    பவுத்த மதம் என்ற நிலையில் சீனாவுடன் ஒட்டி உறவாடிய இலங்கைக்கு இன்று இந்த பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படக்காரணமாக அமைந்தது.

                                    சீனா கடனால் சீரழிந்தத இலங்கை உண்மையை உடைத்த அமெரிக்கா உளவுத்துறை

                                    மேலும் சீனா வழங்கிய பல பில்லியன் டொலர் காரணமாக அதில் லஞ்ச ஊழல் மோசடி புரிந்து ஏப்பம் விட்டது மறு காரணம் என தெரிவிக்க படுகிறது.

                                    சீனாவின் இந்த நெருக்கடி ஏனைய நாடுகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என அமெரிக்கா உளவுத்துறை எச்சரித்துள்ளது.


                                    அப்படி என்றால் மேலும் சில நாடுகள் சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கியள்ளது என்பதையே அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கிறது.

                                    வளர்ந்து வரும் நாடுகளில் அபிவிருத்தி என்கின்ற போர்வையில் காபட் வீதிகளை அமைக்கும் ஒப்பந்தத்தில் சீனா களம் இறங்குகிறது .

                                    அதன் ஊடாக வீதிகளை அபிவிருத்தி செய்வதுடன் தனது தயாரிப்பு வாகனங்களையும் அங்கே இறக்குமதி செய்து விடுகிறது .

                                    அந்த நாட்டி செல்வ செழிப்பை சுரண்டிட இவ்விதமான ஆடம்பர ஆசைகளை காண்பித்து அந்த மக்களையும் நாட்டையும் இவ்விதம் நெருக்கடியில் சிக்க வைத்து தனது அரசியல் மேலாண்மையை அந்த நாடுகளில் நிறுவி விடுகிறது .

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 33 பேர் கடல்படையால் கைது

                                      இலங்கை ,நீர்கொழும்பு ;கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 33 பேர் கடல்படையால் கைது

                                      இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இருந்து ரெலோர் மீன்பிடி படகு மூலம் வெளிநாடு சென்று கொண்டிருந்த படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்தனர் .

                                      இதன் பொழுது அந்த படகில் இருந்த 33 பேர் கைது செய்யப்பட்டனர் .

                                      இவ்வாறு கைதானவர்களில் ஐந்து பெண்கள் ஒன்பது சிறுவர்கள் 19 ஆண்கள் உள்ளடங்களாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

                                      கைதான அனைவரும் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரபடுத்த படவுள்ளனர்.

                                      இலங்கையர் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

                                      கடல்வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 30 பேர் கைது

                                      கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற  33 பேர்  கடல்படையால் கைது
                                      கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 33 பேர் கடல்படையால் கைது

                                      இலங்கையில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியா நோக்கி தமிழர்கள் பயணித்த வண்ணம் உள்ளனர்.

                                      அவுஸ்ரேலியாவுக்குள் கடல்வழியாக நுழையும் மக்களை அங்கிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வருகின்றது.

                                      அவ்வாறு இருந்தும் தொடராக இலங்கைக்கு அகதிகள் இவ்விதமான ஆபத்தான கடல்வழியூடாக பயணித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

                                      கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற  33 பேர்  கடல்படையால் கைது
                                        Posted in இலங்கை செய்திகள்

                                        கோட்டபாயவுக்கு எதிராக பிரான்சில் தமிழர்கள் போராட்டம்

                                        கோட்டபாயவுக்கு எதிராக பிரான்சில் தமிழர்கள் போராட்டம்

                                        பிரான்ஸ் ; உலகலாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கோட்டபாய இராஜபக்சவை சிங்கப்பூர் அரசு கைது செய்யக் கோரும் தொடர் போராட்டங்களின் வரிசையில் தலைநகர் பரிசில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

                                        கோத்தபாய சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஆறு மாத காலத்தில் 40 முதல் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா.வின் அறிக்கையொன்று தெரிவிப்பதோடு, நூற்றுக்கணக்கான தமிழ்

                                        பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானர்கள் தெரிவிக்கின்றது. தவிர ஆயிரக்கணக்கான தமிழர்கள், குழந்தைகள் இவரது காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

                                        இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து சுமார் 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான

                                        குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் இன்னும் இல்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

                                        கோட்டபாயவுக்கு எதிராக பிரான்சில் தமிழர்கள் போராட்டம்

                                        சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் ஓர் நாட்டின் எல்லைக்குள் நடக்காதபோதும், பாதிக்கப்பட்டவரோ அல்லது குற்றவாளியோ அந்த

                                        நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும், சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க, ஓர் நாட்டின் அதிகார வரம்பிற்கு சர்வதேச நியாயாதிக்கம் வழி சமைக்கின்றது.

                                        இந்தக் கொள்கை மூன்றாம் நாடுகளின் தேசிய நீதிமன்றங்களுக்கு வாய்பளிக்கின்றது. வேறு நாட்டில் சர்வதேச குற்றங்களை புரிந்தவர்களை

                                        பொறுப்புக்கு உட்படுத்தவும், தண்டனையிலிருந்து விடுபடுவதை தடுக்கவும் முடியும் என்ற சர்வதேச சட்டவெளி காணப்படுகின்றது.

                                        இந்நிலையில், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் இனப்படுகொலையாளியான கோத்தபாய கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் சிங்கப்பூர் நிறுத்த

                                        வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் வலுவாக முன்வைக்கின்றோம் என நா.தமிழீழ அரசாங்கம் தெரிவித்திருந்தது.

                                        இக்கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் போது சிங்கப்பூர் தூதரக இராஜதந்திரி ஒருவரை சந்தித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்க அமைச்சர்கள் மகிந்தன்

                                        மற்றும் சுதன்ராஜ் கோரிக்கை மனுவினை கையளித்திருந்ததோடு, தமிழர்களின் நிலைப்பாட்டினை வலியுறுத்தியிருந்தனர்.

                                        இக்கவனயீர்ப்பு நிகழ்வில் பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை, போராளிகள் கட்டமைப்பு பிரதிநிதிகள்
                                        மற்றும் தமிழ் சமூக அரசியல் செற்பாட்டாளர்கள் பங்கெடுத்திருந்தனர்.

                                        https://youtu.be/USloSt9sst4