Tag: இலங்கை
தமிழர் பகுதியில் கடற்படை தீவிர ரோந்து – அவர்களை பிடிக்க வேட்டை ஆரம்பம்
தமிழர் பகுதியில் கடற்படை தீவிர ரோந்து – அவர்களை பிடிக்க வேட்டை ஆரம்பம்
இலங்கை தமிழர் தாயாக பகுதிகள் எங்கும் சிறப்பு கண்காணிப்புக்குள் இலங்கை கடல்,படை கொண்டு வந்துள்ளது
,இவர்களுக்கும் உதவியாக விமான படையினரும் ஈடுப்படுத்த ப்பட்டுள்ளனர்
சட்ட விரோத அகதிகள் இலங்கைக்குள் நுளைந்து அவருகின்றனர் என்ற தகவல் கிடைக்க பெற்றதை அடுத்து இந்த தீவிர கண் கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது
தமிழர்களே இந்தியாவில் இருந்து கடல்வழியாக இலங்கை திரும்புகின்றனர் என்ற தகவலின் அடிப்படையில் சிங்கள கடல்
படையினர் வடக்கு ,வடகிழக்கு ,மேற்கு,கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளதுடன் ,
இந்தியா கடற்படையினருக்கும் இது தொடர்பாக தாம் அறிவித்துள்ளதாகக் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்
உண்மை அதுவல்ல என்பதும் பெரும் போதைவஸ்து கடத்தல் இடம்பெறுகிறது ,அதனை தடுக்கவும் ,அந்த பெரும் மாபியா
போதை வஸ்து கும்பல் கடத்தலை முறியடிக்கவும் இந்த வேட்டையில் கடற்படை ஈடுபட்டுள்ளது என்பதே நமது அவதானிப்பு
அகதிகளை பிடிக்க எதற்கு இவ்வித அடுக்கு பாதுகாப்பபு…?,மக்கள் காதில் பூ சுற்றும் இலங்கை கடல் படையின் இந்த கபடி விளையாட்டு .காதில பூ கந்தசாமி .புத்தம் சரணம் கச்சாமி……

ஊரடங்கு சட்டத்தை அலட்சியம் செய்து சுற்றித் திரிந்த 25,031 பேர் கைது
ஊரடங்கு சட்டத்தை அலட்சியம் செய்து சுற்றித் திரிந்த 25,031 பேர் கைது
இலங்கையில் அரசினால் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை அல்டசியம்
செய்து வீதிகளில் சுற்றி திருந்த சுமார் இருபத்தி ஐந்தாயிரத்து முப்பத்தி
ஒரு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப் பட்டவர்களில்
வாகனங்களில் பயணித்தவர்கள் வாகனங்களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதுடன்
விதிகளை மீறி செயல் பட்டனர் என்ற குற்ற சாட்டில் ஐநூறு ரூபா முதலான தண்டமும் அறவிட பட்டுள்ளது
மேலும் இவ்வாறு வீதிகளில் சுற்றுவார்கள் கைது செய்ய பட்டு தனிமை
படுத்தல் முகாம்களில் அடைத்து வைக்க படுவார்கள் என அரசு எச்சரித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

கள்ள சாராயம் தயாரித்த கும்பல் மடக்கி பிடிப்பு
கள்ள சாராயம் தயாரித்த கும்பல் மடக்கி பிடிப்பு
இலங்கையில் ஊரடங்கு வேளையில் கட்டுக்குள் மறைந்திருந்து கள்ள
சாராயம் காய்ச்சிய கும்பல் ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
வடி சாராயங்களை அதிக விலைக்கு மேற்படி நபர்கள் விற்று வருகின்றனர்
மதுபான சாலைகள் பூட்ட பட்டுள்ள நிலையில் இந்த சாராயங்களு தற்பொழுது
மவுசு ஏற்பட்டுள்ளது ,பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய
தகவலை அடுத்து இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

இறைச்சிக்காக பசு மாடுகளை கொண்டு சென்றவர்கள் கைது
இறைச்சிக்காக பசு மாடுகளை கொண்டு சென்றவர்கள் கைது
இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை பயன் படுத்தி மாடுகளை இறைச்சிக்காக
கொண்டு சென்ற நபர்கள் காவல் துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வது என்ற அனுமதி பத்திரத்தை
பயன் படுத்தி பசு மாடுகளை வெட்ட சென்ற வேளையை இந்த கைது இடம் பெற்றுள்ளது

இராணுவம் மருத்துவர்களை கௌரவிக்க ஒளியேற்ற படும் தாமரை கோபுரம்
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை,
பாதுகாப்புப்படையினர் உள்ளிட்ட அனைவரையும் கௌரவிக்கும் வகையில்
இன்று (11) மாலை 6.45 மணியளவில் தாமரைக் கோபுரம் ஒளிர்விக்கப்படுவதாக
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க தனது ட்விற்றர் குறிப்பிட்டுள்ளார.
இதன்போது தாமரைக் கோபுரம் சிவப்பு நிறத்தில் ஒளிர்விக்கப்படும்
என சீனத் தூதரகம் தனது ட்விற்றர் கணக்கில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
தெற்காசியாவின் மிக பெரும் கோபுரம் இது என்பது குறிப்பிட தக்கது

தீயில் எரிந்து பலியான தந்தை மகள் – கண்ணீரில் குடும்பம்
தீயில் எரிந்து பலியான தந்தை மகள் – கண்ணீரில் குடும்பம்
இலங்கை பலாங்கொடை பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து
வந்த தந்தையும் மகளும் அங்கு இடம்பெற்ற திடீர் தீவிபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர் .
ஒருவரை ஒருவர் காப்பற்ற முனைந்த பொழுது இருவரும் தீயின்
வேட்டையில் சிக்கி பரிதாபகரமாக பலியாகினர் .
இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளை காவல்
துறையினர் முன்னெடுத்து வருகின்றனர் .
ஒரே குடும்பத்தில்
இருவர் பலியான சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது

இலங்கையில் கொரனோவால் 190 பாதிப்பு – 7 பேர் பலி
இலங்கையில் கொரனோவால் 190 பாதிப்பு – 7 பேர் பலி
நேற்றைய தினம் (2020.04.09) இலங்கையில் உறுதி செய்யப்பட்ட கொரோனா வைரசு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 190
ஆகுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் கொவிட் 19 தொற்று
பரவுவதை தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையத்தில் உறுதி செய்தார்.
நேற்றைய தினம் ஒரு நோயாளர் மாத்திரம் அடையாளங்காணப்பட்டார் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
134 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை, வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 32 வைத்தியசாலைகளில் 242 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் இதுவரை இலங்கையின் 14 மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை நோயாள்களுள் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரையில் பூரண குணமடைந்த நிலையில் 49 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இன்று முதல் ஊரடங்கு சட்டத்தை மீறி சென்றால் – தனிமை படுத்தல் முகாமில் அடைப்பு – பொலிஸ் அவசர அறிவிப்பு
இன்று முதல் ஊரடங்கு சட்டத்தை மீறி சென்றால் – தனிமை படுத்தல் முகாமில் அடைப்பு – பொலிஸ் அவசர அறிவிப்பு
ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு முயற்சிப்பார்களாயின்
அவ்வாறானோர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்று பிரதி
பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஊரடங்;குச்சட்டம் அமுல் நடத்தப்பட்ட கடந்த 19 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் 19
ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் மாத்திரம் ஆயிரத்து 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று
தெரிவித்த பிரதி பொலிஸ் மா அதிபர
இவ்வாறு சட்டத்தை மீறுவோர் நாளை முதல் 14 நாட்கள்
தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்றும் கூறினார்.
அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள அவசரகால அனுமதிப்பத்திரத்தை சிலர் முறைகேடாக பயன்படுத்துவதாக
தெரியவந்துள்ளது இவ்வாறோனருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ -தனிமை படுத்த பட்டார்
முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ -தனிமை படுத்த பட்டார்
இலங்கை வவுனியாவின் முன்னாள் எம்பி மஸ்தானுக்கு கொரனோ தொற்று உள்ளதாக
சந்தேகிக்க படுவதல் அவர் இருபத்தி ஒரு நாளுக்கு தனிமை படுத்த பட்டுள்ளார்
மரண வீடொன்றுக்கு சென்று திரும்பிய பொழுதே இவருக்கு இந்த நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
மருத்துவர்கள் ஆலோசனையின் பிரகாரம் மஸ்தான் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளார்
,இலங்கையில் தமிழ் அரசியல் கட்சி பிரமுகர்கள் நால்வர் ஏற்கனவனே இந்த
நோயின் அறிகுறியால் அடையாளம் காணப்பட்டு சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிட தக்கது

மன்னார் தாராபுரம் கொரனோ அபாய வலயாமாகி பிரகடனம் – மக்கள்ஸ் செல்ல தடை
மன்னார் தாராபுரம் கொரனோ அபாய வலயாமாகி பிரகடனம் – மக்கள்ஸ் செல்ல தடை
இலங்கை மன்னார் தாராபுரம் பகுதியில் நபர் ஒருவர்க்கு கொரனோ தொற்று ஏற்பட்டதை அடுத்து குறித்த கிராமம்
இராணுவத்தினரால் மக்கள் செல்ல தடை விதிக்க பட்டு முடக்க பட்டு
அந்த மக்கள் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க
பட்டுள்ளனர் .
மேலும் அவர்களுக்கு இந்த நோயானது உள்ளதா என்ற சோதனை நடவடிக்கை
மேற்கொள்ளவே இவ்வாறு புரிந்துள்ளதாக அந்த பகுதி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ஒருவருக்கு கொரனோ என்றால் அந்த கிராமத்தையே தனிமை படுத்தி
முடக்கும் மிக சிறந்த செயல் பாட்டில் இலங்கை ஈடுபடுவதாக நெட்டிசன்கள் கழுவி ஊற்றுகின்றனர்
அப்படி என்றால் இலங்கை முழுவதிலும் உள்ள கிராமங்கள் இவ்வாறு
அடித்து பூட்ட படும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை

1,262 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல் இராணுவம் அறிவிப்பு
1,262 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல் இராணுவம் அறிவிப்பு
இலங்கையில் வைரஸ் நோயினால் பாதிக்க பட்டவர்கள் என சந்தேகிக்க
படும் நபர்கள் கைது செய்ய பட்டு தனிமை படுத்தி வைக்க பட்டுள்ளனர் .
இந்த நோயின் தாக்குதல் பாதிப்பு இல்லாதவர்களை தாம் விடுதலை புரிந்து வருவதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்

இலங்கையில் 186 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் 186 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயில் சிக்கி இதுவரை
186 பேர் பாதிக்க
பட்டுள்ளதாக இலங்கை சுகாகாதார அமைச்சு அறிவித்துள்ளது
மேலும் இதன் பாதிப்பு அதிகரிக்க படலாம் என்பதால் மக்களை வீடுகளை
விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க பட்டு வருகிறது
தொடர்ந்து ஊரடங்கு சட்டங்கள் அமூல் படுத்த பட்டுள்ளது
மேலும் இந்த நோயின் தாக்குதல் அறிகுறி என சந்தேகிக்க படும் பல்லாயிரம் பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர்

கொரனோவால் இனம் காணப்பட்ட நபர் கண்டி மருத்துவ மனையில் அனுமதி
கொரனோவால் இனம் காணப்பட்ட நபர் கண்டி மருத்துவ மனையில் அனுமதி
இலங்கை கண்டி பகுதியில் நபர் ஒருவர் கொரனோ வைரஸ் தாக்குதல்
காரணமாக அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்பொழுது அவர்
கண்டி ஆதர் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்
மேலும் இவருடன் பழகிய உறவுகள் ,நண்பர்களை தனிமை
படுத்தும் முயற்சியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்
இலங்கையில் பெருகி வரும் சேதங்களை அரசு மறைத்து வந்த நிலையில்
அது தாண்டி தற்பொழுது அதிக அளவிலான மக்கள் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

நாம் உயிருடன் இருப்போமோ தெரியாது – மகிந்தா உருக்கமான பேச்சு
நாம் உயிருடன் இருப்போமோ தெரியாது – மகிந்தா உருக்கமான பேச்சு .
இலங்கையில் நிலவும் அதி பயங்கர கொரனோ நோயின் தாக்கம் பெருமளவு
பரவியுள்ளது ,இவ்வேளை ஊரடங்கு சட்டங்கள் பிறப்பிக்க பட்டுள்ளன .
இராணுவம் எங்கும் குவிக்க பட்டு கைதுகளும் ,கண்காணிப்பும் பலப்படுத்த பட்டுள்ளது
இவ்வாறான சூழலில் நாட்டு மக்களுக்கு, இது ஒரு முக்கிய கால கட்டம் ,
நாம் வாழ்வோ , சாவா ,என்ற நிலையில் போராடி வருகிறோம் ,எவர் இருப்பார் ,என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலைமை நீடிக்கிறது
எனேவ சுகாதார அமைச்சு கூறுவது போன்று அதனை பின்பற்றி ,உங்கள்
உயிர்களை காப்பாற்றி கொள்ளுங்கள் என மிக உருக்கமாக பிரதமர் மகிந்தா பேசியுள்ளார்
இவரது இந்த பேச்சு சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

ஏழ்மை குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கிய பல்கலைகழக மாணவர்கள் -photo
ஏழ்மை குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கிய பல்கலைகழக மாணவர்கள் -photo
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழக மாணவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
இன்று (07) புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் காணப்படும் தோட்டங்களில் நிவாரணங்கள் எதுவும்
கிடைக்காத பெருந்தோட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு
பொருட்கள் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழகத்தின்
நமக்காக நாம் செயற்திட்டத்தில் அன்றாடம் தொழில் புரியும் பின்தங்கிய குடும்பங்களுக்கு ஊவா வெல்லஸ்ஸ
பல்கலைகழக மாணவர்களின் பூரண அணுசரனையில் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன






வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் பொலிஸ் photo
வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் பொலிஸ் photo
புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தின் பொருப்பதிகாரியான பிரதான பொலிஸ்
பரிசோதகர் இந்திக்க ஹேமகுமார அவர்களின் தலைமையில் பிரதேசத்திற்கு
உட்பட்ட வருமைகோட்டிற்கு கீழ் காணப்படும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்
வீடு வீடாக சென்று இன்று (07) கையளிக்கபட்டன. இந்த உன்னதமான
செயற்பாட்டில் பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் பலரும்
கலந்துக் கொண்டனர்.





இலங்கையில் தனிமை படுத்த பட்ட 312 பேர் விடுதலை
இலங்கையில் தனிமை படுத்த பட்ட 312 பேர் விடுதலை
வெளி நாடுகளில் இருந்து இலங்கை வந்தடைந்த மக்கள் 14 நாட்கள் தனிமை படுத்த பட்டு கொரனோ சோதனைக்கு உள்ளாக்க பட்டனர் .
இவ்விதம் உள்ளாக்க பட்டவர்கள் தற்பொழுது விடு விக்க க பட்டு அவர் தம் குடும்பத்துடன் இணைந்திட அனுப்பி வைக்க பட்டுள்ளனர்
இவ்வாறு 312 பேர் விடுதலை செய்ய பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சும் ,இராணுவமும் தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் பரவலில் பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி விஷேட பூஜைகள் photo
கொரோனா வைரஸ் பரவலில் பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி விஷேட பூஜைகள் photo
விகாரி வருடம் பங்குனி திங்கள் மாத சஷ்டி தினத்தன்று புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்தில் கொரோனா வைரஸ்
பரவலில் பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி விஷேட பூஜைகள் நேற்று (30) நடைபெற்றன. இந்த தெய்வீக நிகழ்வில் குறிபிட்ட
பக்தர்களும் புஸ்ஸல்லாவ பொலிஸாரும் கலந்துக் கொண்டனர்



புத்தளம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் இராணுவம் – படம் உள்ளே
புத்தளம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் இராணுவம் – படம் உள்ளே
இலங்கை புத்தளம் பகுதியில் உள்ள பொது கட்டடங்கள் ,மற்றும்
வனவிலங்கு பாதுகாப்பபு திணைக்களம் போன்றவற்றுக்கு
இலங்கை இராணுவத்தினர் சென்று கிருமி நாசினிகள் தெளிக்கும்
பணியில் ஈடுபட்டுளனர்
பரவும் நோயினை கட்டு படுத்தும் நோக்கில் இந்த முன் தடுப்பு நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளது
இதன் ஊடக இந்த நோயினை கட்டு படுத்த முடியும் என இலங்கை சுகாதார அமைச்சு நம்புவதன் விளைவே இந்த மருந்தடி நிகழ்வாக உள்ளது
இவ்வாறு மாவட்டங்கள் தோறும் சென்று இராணுவம் தனது பணியினை மேற்கொண்டு வருவதாக இராணுவம் அறிவித்துள்ளது
மக்கள் சேவையில் தமது இராணுவம் என சிங்கள அரசு கூறி மகிழ்கிறது




இராணுவத்தால் இரண்டு கொரனோ தனிமை படுத்தல் முகாம் அமைப்பு – படங்கள் உள்ளே
இராணுவத்தால் இரண்டு கொரனோ தனிமை படுத்தல் முகாம் அமைப்பு – படங்கள் உள்ளே
இலங்கை இராணுவ கடற்படை பிரிவால் புதிதாக மேலும் இரண்டு
கொரனோ தனிமை படுத்தல் முகாம்கள் Buwaneka முழங்காவில் மன்னார் மற்றும் ஒலுவில் அமைக்க பட்டுள்ளன .
குறித்த நோயால் அடையாளம் காணப்படும் நோக்குடன் ,
சந்தேகிக்க படும் நபர்கள் இங்கே தங்க வைக்க படுகின்றனர்
இங்குள்ளவர்களை இராணுவமே முழுமையாக கண்காணிக்கிறது
இது ஒரு மிரட்ட பட்டு ,அடக்குமுறையின் கீழ் உள்ள செயல்பாடுகளில் ஒன்றாக பார்க்க படுகிறது
இங்கு பணியாற்றும் பெரும்பான்மையான மருத்துவ குழு
இராணுவத்தினரின் மருத்துவ குழுக்கள் என தெரிவிக்க படுகிறது
இலங்கையில் இதுவரை பல டசின் பேர் மரணமாகியுள்ள
பொழுதும் அதனை இலங்கை அரசு திட்டமிட்டு மறைத்து வருவதாக குற்றம் சுமத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது









