Posted in இலங்கை செய்திகள்

வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் பொலிஸ் photo

வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் பொலிஸ் photo

புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தின் பொருப்பதிகாரியான பிரதான பொலிஸ்

பரிசோதகர் இந்திக்க ஹேமகுமார அவர்களின் தலைமையில் பிரதேசத்திற்கு

உட்பட்ட வருமைகோட்டிற்கு கீழ் காணப்படும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்


வீடு வீடாக சென்று இன்று (07) கையளிக்கபட்டன. இந்த உன்னதமான

செயற்பாட்டில் பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் பலரும்

கலந்துக் கொண்டனர்.

வீடு வீடாக சென்று மக்களுக்கு
வீடு வீடாக சென்று மக்களுக்கு
Posted in இலங்கை செய்திகள்

கொரோனா நோய்க்கு எதிரான முன்முயற்சிகளை ஆதரிப்பீர் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் !

கொரோனா நோய்க்கு எதிரான முன்முயற்சிகளை ஆதரிப்பீர் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் !

மனிதகுலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக இன்று வந்துள்ள கொரோனா கொவிட்-19 வைரஸ் தொற்று, பல இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடத்தில் தொற்றியுள்ளதோடு, பல ஆயிரம்

பேர்களின் உயிர்களை பறித்து வரும் நிலையில், இப்பெரும் நோய்தொற்றுக்கு எதிராக முன்முனைப்புக்களில் ஆதரிக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த துயரக் கணக்குகள் ஒவ்வொன்றும் நாள்தோறும் ஏறிச்செல்லும் நிலையில், சில காலமாகப் அனைத்துலக சமூகத்திடையேயான உறவுகளில் காணப்படாத நாடுகளைக்

கடந்த தோழமை பெரமளவு முக்கியத்துவம் உடையதாகிறது. ஒவ்வொரு அரசுகளுக்கு இடையிலான கொள்கை

முரண்பாடுகளினால் நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் மூடப்பட்டுக் கொண்டிருந்தாலும் இன்றைய நெருக்கடியை வெல்லப் பன்னாட்டு சமூகத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.

எப்படியானாலும், தனிமனிதர்கள் என்ற அளவில் தோழமையின் ஆற்றலைக் காண முடிகிறது. சமூக விலகல் நம்மை உடலளவில்

பிரித்து வைத்திருந்தாலும் உலகெங்கும் மக்கள் தோழமையுடன் ஒன்றுபட்டு நிற்கின்றார்கள். முதலில் கொரோனாவை எதிர்நிற்கும்

சுகாதாரத்துறைப் பணியாளர்களும் மற்ற அனைவரும் இந்த அனைத்துலக நெருக்கடியின் முனையில் முகம்கொடுத்து முன்நிற்கின்றார்கள்.

இந்த உணர்வின் பாற்பட்டுத்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கொரோனாவின் புதிவித நோய்க்கிருமிக்கு எதிரான போரில்

உலகெங்கும் இருக்கும் சுகாதாரதுறை பணியாளர்களுக்கு முழு ஆதரவினையும் தோழமையினையும் வழங்குகின்றது. உலகெங்கும் பணியாற்றி வரும் சுகாதாரதுறை பணியாளர்களுக்கு நாடுகடந்த

தமிழீழ அரசாங்கம் நெஞ்சம்நிறைந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறது. பிறர் உயிர்காக்கத் தம்முயிர் கருதாமல்

உழைத்திடும் இவர்கள் ஆகச் சிறந்த மானிடத்துக்கும் மனிதநேய இலட்சியங்களுக்கும் எடுத்துக்காட்டுகள் ஆவர்.

பெருந்தொற்று நோய்க்கு எதிரான போரில் பிற தெற்காசிய நாடுகளுக்கு உதவும் பொருட்டு ஒரு நிதியம் தோற்றுவிக்க இந்திய

அரசு எடுத்துள்ள முன்முயற்சியையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது. உயிர்களைக் காக்கவும் இப்பிராந்திய

மக்களை இன்னுங்கூட நெருக்கமாக ஒன்றுசேர்ப்பதற்கும் இது அருமையானதொரு மனிதநேய சமிக்ஞை ஆகும்.

இந்தப் பின்னணியில் கொவிட்-19 பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்தவும் முறியடிக்கவுமான முயற்சிகளில் முழுமையாகப்

பங்கேற்கும்படி உலகப்பரப்பெங்கும் வாழும் தமிழர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்கிறது.

கொவிட்-19க்கு எதிரான போர்முனைகளில் மேற்கொள்ளபப்டும் முயற்சிகளுக்குத் தனித்தனியாகவோ கூட்டாகவோ நிதிசேர்த்தும்,

தன்னார்வத் தொண்டர்கள் திரட்டியும் துணைபுரிந்து வரும் பற்பல தமிழர்களையும், தமிழர் அமைப்புக்களையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்துகின்றது.

இந்த நெருக்கடி ஏழை எளிய மக்கள் மீது கூடுதலான தீவிளைவேற்படுத்தி வருகிறது என்பதையும் நாடுகடந்த தமிழீழ

அரசாங்கம் குறிப்பிட விரும்புகிறது. ஆகவே அரசுகள் தம் மக்களிடையே திடீர் வேலையின்மை அல்லது வருமான இழப்பால்

கடும் பாதிப்புக்கு ஆளானவர்கள் போன்ற பொருளியலாக மிகவும் நலிந்த பிரிவினரின் நலனை உறுதி செய்ய உடனடி நடைபடிகள்

எடுக்க வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்கிறது. குடிபெயர்ந்தோரும், வீடற்றோரும், முன்கூட்டியே

உயிருக்கு ஆபத்தான மருத்துவ நிலைமைகளுடன் இருப்போரும் கூட தனிக் கவனத்துக்குரியோரே, அவசரமாக!

இந்தக் கட்டத்தில் முழு அடைப்புகள், ஐயத்துக்குரிய அல்லது உறுதி செய்யப்பட்ட கொவிட்-19 நோயாளர்களைத் தனிமைப்படுத்தி

வைத்தல் போன்ற நோயடக்கும் வழிமுறைகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பொதுவான ஆதரவு வழங்கிய போதிலும்,

அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளையும் கண்ணியத்தையும் மதிக்கும் படியான வழிமுறைகளைக்

கண்டிப்பாகச் செயலாக்கும் படியும் அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது. மேலும், மதம், மரபினம், இனக்குழு, பாலினம்,

குடிவரவுத் தகுநிலை, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட மக்கள்பிரிவுகளை அரசுகள் முனைந்து பாதுகாக்கும் படியும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது.

உலகம் இன்று சந்திப்பது போன்ற ஒரு நெருக்கடி மானிடத்தில் உன்னதமானவற்றை வெளிப்படுத்தும் அதே நேரத்தில்

அச்சத்தினாலோ கவலையினாலோ அதிகாரத்தினாலோ அரசியல் உள்நோக்கங்களினாலோ விருப்புவெறுப்பினாலோ சிலரிடத்தில் படுமோசமானவற்றையும் வெளிப்படச் செய்யக் கூடும்.


மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடுவோரை அரசுகள் பொறுப்புக்கூறும் படிச் செய்யத்தான் வேண்டும். கொவிட்-19 நெருக்கடியை எதிர்த்துப் போராடுவது அவசரத்திலும் அவசரமான

ஒன்று என்னும் போதே, அதனைச் சாக்கிட்டுத் தண்டனையச்சமின்றிக் குற்றம் புரிய அனுமதிக்க முடியாது.

விரிந்து அகன்ற, ஜனநாயகப்புறம்பான அதிகாரங்கள் பெறவும் தனிமையுரிமை, கருத்துரிமை போன்ற அடிப்ப்டை உரிமைகளை

மீறவும் சில அரசுகள் பெருந்தொற்று நோயைப் பயன்படுத்திக் கொள்வதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கவனப்படுத்துகிறது,

கண்டிக்கிறது. குறிப்பாக சிறிலங்காவில் இடைக்காலக் காவல்துறைத் தலைமை ஆய்வாளர் சி.டி. விக்ரமரத்னா அரசின்

குற்றப் புலனாய்வுத் துறைக்கும் காவல்துறைக்கும் அறிவுறுத்தியிருப்பது என்னவென்றால் சமூக ஊடகங்களில் அரசு அதிகாரிகளைக் குறைகூறும் ஆட்களுக்கு எதிராகச் சட்ட

நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும். ஏனென்றால் அது அரசாங்கத்தின் கடமைகளுக்கு இடையூறு செய்வதாம்!

இந்த வகையில், சில அரசுகள் கட்டி வைத்துள்ள தணிக்கைக் கொள்கைகளை மதியாமல் கடமையின் தேவையையும் கடந்து உயிரைப் பொருட்படுத்தாமல் உலகெங்கும் செயல்பட்டுள்ள

சுகாதாரத்துறைப் பணியாளர்களை அறிந்தேற்று அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நன்றி தெரிவிக்க விரும்புகிறது.

பெருந்தொற்று நோய்க்கான நாட்டின் மறுவினைகள் பற்றிய பொய்க் கதைகளை மறுத்து ஊடகங்களிடம் பேசுவது உயிருக்கு

ஆபத்தானது அல்லது சிறைக்குள் தள்ளக்கூடியது என்று தெரிந்தே இப்படிச் செய்திருப்பது வீரச் செயல் என்றுதான் சொல்ல வேண்டும்

. தகவலுக்கான அடிப்படை உரிமையையும் தெரிந்து கொள்ளும் உரிமையையும் பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவ அறம் காக்க

ஹிப்போக்கிரட்டிஸ் எழுதிய உறுதிமொழியில் இல்லை என்றாலும், நல்வாழ்வுப் பணியாளர்கள் பலரும் தம்மைத்தாமே இந்த உரிமைகளின் காவலர்களாக்கிக் கொண்டுள்ளனர்.

இந்தப் பெருந்தொற்று நோய் வாழ்க்கைத் துறைகள் பலவற்றிலும் மாற்றங்களைத் தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை. இரண்டாம்

உலகப் போருக்குப் பின்னராக அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தபடப்ட மர்சல் உதவித்திட்டம் உலக ஒழுங்கில் மாற்றங்களை கொண்டுவந்தது

போலவே, (செப்ரெம்பர் இரட்டைக் கோபுரத்தாக்குதல்) 9-11 பன்னாட்டு உறவுகளையும் பன்னாட்டுச் சட்டத்தையும்

என்றென்றைக்குமாக மாற்றி விட்டது போலவே, கொரோனாவுக்கு முன் வாழ்க்கை, கொரோனாவுக்குப் பின் வாழ்க்கை என்று

காலத்தைப் பிரிக்கும் நாள் வரும். நெருக்கடிநிலைகளில் அரசுகள் எடுத்துக் கொண்ட விரிந்தன்ற அதிகாரங்களை இந்த மாற்றத்தைப்

பயன்படுத்தி கெட்டியாகப் பிடித்துக் கொள்ள இடமளிக்கக் கூடாது என்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். எடுத்துக்காட்டாக

இணைய வழித் தொடர்பாடல் வாழ்க்கையில் முதன்மை இடம் பெறும் என்பதால் இணைய சுதந்திரத்தைப் பாதுகாத்தாக வேண்டும்.

இன்று பற்பலருக்கும் இடையே நாம் காணும் தோழமை நீடித்து நிலைக்கும் மாற்றங்கள் நிறைந்த ஒன்றாக இருக்கும் என்று

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 15,900 காவல்துறையால் பேர் கைது

இலங்கையில் 15,900 காவல்துறையால் பேர் கைது

இலங்கையில் விதிக்க பட்ட ஊரடந்கு சட்டத்தின் பொழுது தேவையற்று

வீதிகளில் உலவிய சுமார் 15,960 பேர் கைதுசெய்ய பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

கைதானவர்கள் தடுத்து வைக்க பட்டுள்ளதுடன் சிலருக்கு தண்டம் அறவிட பட்டு பின்னர் விடுதலை செய்ய பட்டுள்ளனர்

மக்களை நோயில் இருந்து காப்பாற்றும் முகமாக வீடுகளை விட்டு வெளியேறாது

பாதுகாப்பாக இருக்கும் படி கோர பட்ட பொழுதும் மக்கள் அதனை செவி மடுக்காது

வீதியில் சுற்றும் நிகழ்வும் அதிகரித்து காணப்படுகின்றன

இலங்கையில் 15900 காவல்துறையால்
இலங்கையில் 15900 காவல்துறையால்
Posted in இலங்கை செய்திகள்

கிணற்றுக்குள் விழுந்து யானை பலி – மீட்பு பணிகள் ஆரம்பம்

கிணற்றுக்குள் விழுந்து யானை பலி – மீட்பு பணிகள் ஆரம்பம்

இலங்கை கிரிப்பேவ பகுதியில் எட்டு அடி ஆழமுள்ள கிணறு ஒன்றுக்குள் யானை ஒன்று வீழ்ந்துள்ளது


இதனை கண்ணுற்ற மக்கள் அங்கு சென்று பார்த்த பொழுது அந்த யானை இறந்த நிலையில் கான் பட்டுள்ளது .

குறித்த யானையினை மீட்கும் பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

மேலும் இந்த யானையின் மரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

கிணற்றுக்குள் விழுந்த
கிணற்றுக்குள் விழுந்த
https://www.youtube.com/watch?v=s9Ad2fcgM6M
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 180 கொரனோ நோயா பாதிப்பு6 பேர் பலி

இலங்கையில் 180 கொரனோ நோயா பாதிப்பு6 பேர் பலி

இளங்கியில் பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 180

பேர் பாதிக்க ப்பட்டுள்ளனர் .மேலும் பேர் உயிரிழந்துள்ளனர் .

பதின் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர்

இந்த நோயானது மேலும் சில ஆயிரங்களை தாண்டும் எனின் அது பெரும்

பாதிப்பை இலங்கைக்கு ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

இலங்கையில் 180 கொரனோ
இலங்கையில் 180 கொரனோ
https://www.youtube.com/watch?v=s9Ad2fcgM6M
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பிறந்த நாள் கொண்டாடிய ஆவா ரவுடி குழு – பொலிஸாரால் சுற்றிவளைப்பு

யாழில் பிறந்த நாள் கொண்டாடிய ஆவா ரவுடி குழு – பொலிஸாரால் சுற்றிவளைப்பு

இலங்கை மல்லாகம் பகுதியில் மக்களி மிரள வைத்து வரும் ஆவா தெரு

ரவுடிக்குழுவை சேர்ந்த விநோதன் என்பவருக்கு பிறந்த நாள் இடம்பெற்றுள்ளது

,அதனை அங்கு விமரிசையாக வீடு ஒன்றில் கொண்டாடிய பொழுது அவர்களை

போலீசார் கைது செய்திட சென்ற பொழுது அவர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்

எனினும் சிலர் கைது செய்ய பட்டதுடன் அங்கிருந்த ஐந்து மோட்டார் சைக்கிள்கள் மீட்க பட்டுள்ளன


என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

தப்பி ஓடிய ஆவா குழு தலைவனை கைது செய்யும் பணி முடுக்கிவிட பட்டுள்ளதாம் ,

யாழில் பிறந்த நாள்
யாழில் பிறந்த நாள்
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ வேளையில் வவுனியாவில் குவிந்த மக்கள் – வீடியோ

கொரனோ வேளையில் வவுனியாவில் குவிந்த மக்கள் – வீடியோ

இலங்கை வவுனியா பகுதியில் இன்று ஊரடங்கு தளர்த்த பட்ட வேளையில்

பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடி தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்ற காட்சிகள்

இந்த மக்கள் தவறான செயல் பாடுகளை இந்த காணொளியில் பாருங்க

கொரனோ வேளையில் வவுனியாவில்
கொரனோ வேளையில் வவுனியாவில்
https://www.youtube.com/watch?v=nwdzRzLTRl0
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் ஆறு இலங்கையர்கள் பலி-ஆபத்தான நிலையில் பிரதமர்

லண்டனில் ஆறு இலங்கையர்கள் கொரனோவால் பலி

இன்று திங்கள் லண்டன் யாழ்பணத்தை சேர்த்த தமிழர் ஒருவர் லண்டனில்

கொரனோ வைரஸ் நோயினால்
பாதிக்க பட்டு பலியாகியுள்ளார்

சில தினங்களாக தொடர்ந்து பிரிட்டனில் தொடராக தமிழர்கள் இந்த கொடிய

நோயினால் பாதிக்க பட்டு பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

இவருடன் ஆறு இலங்கையர்கள் பிரிட்டனில் இதுவரை பலியாகியுள்ளனர்

மேலும் பல டசின் தமிழர்கள் இந்த நோயினால் பாதிக்க பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,.


இந்த நோயால் இறந்தவர்கள் தமிழர் கடைகளில் பணிபுரிந்தவர்கள் ,மற்றும் சாரதிகளாக பணியாற்றியவர்கள்,மருத்துவர்கள் அதிகம் என தெரிவிக்க படுகிறது

மக்களை வீடுகளை விட்டு வெளியேறாதீர்கள் ,என அரசு மீளவும் எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிட தக்கது

பிரிட்டன் அதிபர் ஜோன்சன் தற்போது அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்ற பட்டுளளார் ,மிக ஆபத்தான நிலையில் உள்ளார் .

நலமுடன் அவர் திரும்பிட மக்கள் பிராத்தனைகள் தொடர்கின்றன ,பதட்டம் நிலவுகிறது

இன்று லண்டனில் தமிழர்
இன்று லண்டனில் தமிழர்
https://www.youtube.com/watch?v=nwdzRzLTRl0
https://www.youtube.com/watch?v=s9Ad2fcgM6M
Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சும் மக்கள் – சொல்லும் காரணம் இது .

லண்டனில் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சும் மக்கள் – சொல்லும் காரணம் இது .

லண்டனில் உள்ள தமிழர் கடைகளில் சில வாரங்களுக்கு முன்னர் அவர்கள் வியாபாரம் பெரும் சூடு பிடித்தது ,அதனால் வரும்

மக்களுக்கு வரையறுக்க பட்ட லிமிட் பொருட்கள் வழங்க பட்டன .
பொருட்களின் விலைகளும் அதிகமாக உயர்த்த பட்டு விற்க பட்டன

வழமையாக செல்லும் வாடிக்கை யாளர்களுக்கே அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்த நிலையால் மீளவும் அந்த

கடைகளுக்கு தாம் செல்ல மாட்டோம் என வாடிக்கையாளர்கள் தெரிவித்தன .

தற்பொழுது சில கடைகளில் பணி புரிந்த பணியாளர்களுக்கு கொரனோ வைரஸ் தொற்றியுள்ள நிலையில் அந்த கடைகள் அடித்து பூட்ட பட்டுள்ளனவாம்

இதனால் கலக்கம் உற்ற தமிழர்கள் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சி வருகின்றனர் ,அங்கு பணி புரியும் தமிழர்களை வற்புறுத்தி

வேலைகளுக்கு வருமாறு அதே தமிழ் முதலாளி மார்கள் கோருவதாகவும் ,

ஆனால் நோயின் பீதி காரணமாக அவர்கள் பணிக்கு வரமாட்டோம் என கூறும் நிலையில் ,வரா விட்டால் வேலை இல்லை என

தெரிவிப்பதால் அந்த பணியாளர்கள் பெரும் சங்கட நிலையில் சிக்கியுள்ளன

எனினும் வேலை போனாலும் பரவாயில்லை உயிர் முக்கியம் என கருதிய பல கூலிகள் அந்த கடைக்கு பணிக்கு செல்வதை
முற்றாக கைவிட்டு வீட்டில் முடங்கியுள்ளது .

அண்மையில் பிரிட்டனில் கொரனோவால் இறந்த தமிழர்கள் சிலர் ,கடையில் பணி புரிந்தவர்கள் என கண்டறிய பட்டுள்ளது

நோயின் தொற்றுடன்,நோயினை மறைத்து , இவர்கள் வேலை செய்ய கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, தமிழர்கள்

இப்பொழுது தமிழர் கடைகளுக்குச செல்வதை அதிகம் தவிர்த்து வருகின்றனர்

தமது கடைகள் பூட்ட பட்ட பொழுதும் அதற்கான காரணத்தை இவர்கள் மறைத்து வருவதால் அங்கு உள்ளே பணி

புரிந்தவர்களினாலே கதைகள் வேகமாக பரவிய நிலையில் மக்கள் பெரிதும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்

மனைவி பிள்ளைகள் கடைகளுக்கு செல்லாதீர்கள் என மறித்த பொழுதும் அது தாண்டி பணிக்கு சென்ற சிலர், நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதும் ,இறந்துள்ளதும் நிகழ்ந்துள்ளது

இப்பொழுது ஆள் இல்லா கடையில் இலையான் கலைக்கும் நம்ம சில தமிழ் கடைகள் ,


உண்மையும் ,நேர்மையும் இல்லாது வியாபாரம் செய்திட முனைந்தால் இது தான் நிலவரம் என சமூக வலைத்தளங்களில் மக்கள் வறுத்தெடுத்து வருவதை காண முடிகிறது

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தாது போல ,அலறிய மக்கள் மடியில் அதிக பணத்தை கறந்தன இந்த தமிழ் கடைகள் .

கொரனோ முடிவுற்றதும் ,விலை கூடி விற்ற தமிழர் கடைகளுக்கு வியாபாரம் கொரோனவாக முடியும் என்பதே மக்கள் கருத்துக்களாக உள்ளன

சில கடைகளின் முன்பாக மூன்றடி இடைவெளியில் ஒருவர் நிற்க வேண்டும் என்ற விதி உள்ளது அதற்கான கோடுகள் கடைகளில்

இடப் பட்டுள்ளன, இல்லை எனின் அவ்வாறான தூரத்தில் நிற்க வேண்டும்

ஆனால் தமிழர் கடைகள் சிலதில் அவை காண முடியாத நிலையிலும் ,கவுண்டரில் இருந்து பணத்தை பெறுபவர் தூரமும்

அவ்வாறே இருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளதாக பேசு பொருளாகிறது,

அவ்விதம் இல்லாத கடைகளுக்கு மூடு விழா இடம் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் வைராலகி வருகின்றன

அனைவரும் தமிழர்கள் எனவே இந்த கொடிய நோயின் காலத்தில் ,சிந்தித்து செயல் படுவது நன்று ,

பணம் நாளையும் உழைக்கலாம் ,ஆனால் உயிர் போனால் வருமா ..? இந்த நோய் தொற்றின் நிலை என்ன .? உங்களுக்குள் இந்த

கேள்விகளை எழுப்பி பார்ப்பின் அதன் எதிர்விளைவுகள் சற்றேனும் தெழிந்திட வாய்ப்புக்கள் இருக்கும் என நம்பலாம் .

இந்த நோயின் பரவல் காலத்தில் நான்கு வாரத்தில் நத்தார் வியாபாரத்தை தாண்டி வியாபாரம் புரிந்து பிரிட்டனில் புரிந்து டெஸ்க்கோ நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது

எங்கே நம்ம தமிழர் கடைகளில் உங்கள் வியாபார கணக்கு எது என்பதை காண்பிக்க முடியுமா ….? இது மக்கள் மன்றின் கேள்வி ….

இந்த கேள்விக்கு உங்களிடம் பதில் ஏதும் இல்லை என்பதே ,பதிலாக அமையும் . நேர்மை எங்கு இருக்கிறதோ அவ்விடத்தில் எப்பொழுதும் வியாபாரம் பெருகும் என்பதே வியாபார தந்திரம் .

லண்டனில் தமிழர் கடைகளுக்கு
லண்டனில் தமிழர் கடைகளுக்கு
https://www.youtube.com/watch?v=nwdzRzLTRl0
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பிலிருந்து வெளிமாவட்டக்காரர்கள் பஸ், ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும்-மனோ

கொழும்பிலிருந்து வெளிமாவட்டக்காரர்கள் பஸ், ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும்-மனோ

கொழும்பு மாவட்ட ஒருகிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு – மனோ கணேசன்


கொழும்பிலிருந்து வெளிமாவட்டத்துக்காரர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டு, பஸ் மற்றும் ரயில்

மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கொழும்பு மாவட்ட செயலகத்தில்

நடைபெற்ற. “கொரோனா நிலைமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழு’ கூட்டத்தில் முடிவு என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச

கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு

மாவட்ட எம்பியுமான, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

இன்று காலை கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற. “கொரோனா நிலைமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழு’

கூட்டத்தில், கொழும்பில் வாழும் வெளிமாவட்ட மக்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

கொழும்பிலிருந்து வெளிமாவட்டத்துக்காரர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டு, பஸ் மற்றும் ரயில்

மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கே அவ்வந்த மாவட்ட, பிரதேச பொது

சுகாதார அதிகாரிகள், இவர்களை பொறுப்பேற்று, தத்தமது வீடுகளில் இவர்கள்

தனிமை நிலைமையில் இருப்பதை கண்காணிப்பார்கள்.

இவர்களை இவர்களது வீடுகளில் தனிமை நிலையில் வைக்க முடியாவிட்டால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இப்படி கொழும்பில்

இருந்து வருகின்ற நபர்களுக்கான “கொரோனா தனிமை நிலையங்கள்” அமைக்கப்பட்டு அங்கே இவர்கள் தங்க

வைக்கப்பட்டு, மருத்துவ அனுமதியின் பின் வீடு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என நான் இக்கூட்டத்தில் ஆலோசனை கூறினேன்.

வெளிமாவட்ட மக்கள் கொழும்பிலிருந்து வெளியேறுவது, கொழும்பில் சமூக இடைவெளிக்கு இடையூறாக இருக்கின்ற

நெருக்கடியையும் தணிக்க உதவும். இது கொழும்பில் நிரந்தரமாக வசிக்கும் மக்களுக்கு நன்மை தரும் எனவும் நான் இக்கூட்டத்தில் கூறினேன்.

இந்த நபர்களை அடையாளம் கண்டு அனுப்பி வைக்கும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும். இதுபற்றி இன்று நடக்கும் அத்தியாவசிய

சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் பிரஸ்தாபித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தினேஷ்

குணவர்தன உறுதியளித்தார். எக்காரணம் கொண்டும் இந்நடவடிக்கை தாமதாமாகும் பட்சத்தில் இந்த பிரிவினருக்கு

கொழும்பிலே வாழ்வதற்கான வாழ்வாதார உதவிகள் அரசால் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளேன்.

கொழும்பு மாவட்ட முன்னாள் எம்பீக்களும், மாவட்ட செயலாளர் தலைமையில் அனைத்து பிரதேச செயலாளர்களும், அதிகாரிகளும்

கலந்துகொண்ட இந்த ஒருங்கிணைப்பு குழுவின் அடுத்த கூட்டம் எதிர்வரும்

சனிக்கிழமை நடைபெறும் போது, இது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை மாவட்ட செயலாளர் சமர்பிப்பார்.

கொழும்பிலிருந்து வெளிமாவட்டக்காரர்கள்
கொழும்பிலிருந்து வெளிமாவட்டக்காரர்கள்
Posted in இலங்கை செய்திகள்

போலி செய்திகளை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் பெண் ஒருவர் கைது

போலி செய்திகளை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் பெண் ஒருவர் கைது

இலங்கையில் வைரஸ் நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் அது தொடர்பான

செய்திகளை வதந்தியாக பரப்பினார் என்ற குற்ற சாட்டில் பெண் ஒருவரை சிங்கள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

இவ்வாறான செய்திகளை பரப்பினார்கள் என்ற குற்ற சாட்டில் மக்களை

கைது செய்வதன் ஊடாக அணைத்து மக்களின் வாய்களுக்கும் சிங்கள அரசு பூட்டு போட்டுள்ளது

பெரும் அடக்குமுறைக்குள் இலங்கையில் வாழும் மக்கள் செய்தி தணிக்கைக்குள் அடக்க பட்டுள்ளனர் .


போர்க்கால சூழல் போலவே அந்த மக்கள் திறந்த வெளி சிறை சாலைக்குள் அடைக்க பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

போலி செய்திகளை பரப்பினார்
போலி செய்திகளை பரப்பினார்
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு சாராயங்களுடன் நால்வர் காவல் துறையால் கைது

வெளிநாட்டு சாராயங்களுடன் நால்வர் காவல் துறையால் கைது

இலங்கை நுவரெலியா பகுதியில் வெளி நாட்டு சாராயங்களுடன் நால்வர் கைது செய்ய பட்டுள்ளனர் .

இவ்வாறு கைது செய்ய பட்ட இவர்கள் அனைவரும் தீவிர

விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

ஊரடங்கு வேளையில் சட்ட விரோதமாக இந்த நூறு சாராய போத்தல்களை

விற்பனை புரிவதற்கு வேறு இடத்திற்கு வினியோகத்தில் ஈடுபட

முனைந்த பொழுதே கைது செய்ய பட்டுளள்னர்

Posted in இலங்கை செய்திகள்

கொரனோவால் இத்தாலி கப்பலில் சிக்கிய இலங்கையர்

கொரனோவால் இத்தாலி கப்பலில் சிக்கிய இலங்கையர்

இத்தாலியில் என் எஸ் சி கபபிலில் பணிபுரியும் இலங்கையரை மீள் நாட்டுக்கு

அழைத்து வரும் பணியில் இலங்கை இத்தாலிய தூதரகம் ஈடுபட்டுள்ளது

இலங்கை அழைத்து வரப்படும் இவர் ,விசேட தனிமை படுத்தல் முகாமில்

21 நாளுக்கு தாங்க வைக்க பட்டு பின்னர் சோதனைகளில் இந்த நோயானது

இல்லை என்ற நிலையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்க படும் நடவடிக்கையில் அரசு ஈடுபடும் என தெரிவிக்க பட்டுள்ளது

கொரனோவால் இத்தாலி
கொரனோவால் இத்தாலி
Posted in இலங்கை செய்திகள்

கணவன் ,மனைவியை அடித்து கொன்ற வாகனம் – கண்ணீரில் தவிக்கும் கிராமம்

கணவன் ,மனைவியை அடித்து கொன்ற வாகனம் – கண்ணீரில் தவிக்கும் கிராமம்

இலங்கை கபரண பகுதியில் ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்த

கணவன் மனைவி மீது வேகமாக பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று

மோதி தள்ளியது இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் பலியாகினர் .

கெப் ரக வாகனத்தின் சாரதியின் அலட்சியே போக்கே இந்த உயிர் பலிகளுக்கு காரணமாக அமைந்துள்ளது

சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது


கேப்ரக சாரதி கைது செய்ய பட்டு தீவிர விசாரனைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

இலங்கையில் நாள் தீரும் நால்வர் இவ்வாறான வீதி விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

கணவன் மனைவியை அடித்து
கணவன் மனைவியை அடித்து
Posted in இலங்கை செய்திகள்

கொரனோவால் தனிமை படுத்த பட்ட 217 பேர் விடுதலை

கொரனோவால் தனிமை படுத்த பட்ட 217 பேர் விடுதலை

இலங்கையில் சிங்கள இராணுவத்தால் வைரஸ் நோயால் பாதிக்க பட்டவர்கள்

என சந்தேகிக்க படும் நபர்கள் விசேட இடை தங்கள் முகாம்களில் தனிமை படுத்த பட்டனர் .

அவ்வாறு தனிமை படுத்தப்பட்ட சுமார் 217 பேர் தற்போது அவர்தம் உறவுகளுடன்

இணைந்தது கொள்ள வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்

இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் இவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்

கொரனோவால் தனிமை
கொரனோவால் தனிமை
Posted in இலங்கை செய்திகள்

கொரனோவில் சிக்கி கனடா தமிழர்மருத்துவர் -மற்றும் அவுஸ்ரேலியாவில் ஒருவர் பலி

கொரனோவில் சிக்கி கனடா தமிழர்மருத்துவர் -மற்றும் அவுஸ்ரேலியாவில் ஒருவர் பலி

கொரனோவில் சிக்கி கனடா தமிழர்மருத்துவர் -மற்றும் அவுஸ்ரேலியாவில் ஒருவர் பலி


கனடாவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்க கனடாவில்

இலங்கையே சேர்ந்த தமிழ் மருத்துவர் ஒருவர் பலியாகியுள்ளார் .
நீண்ட நாட்களாக நோயினால் பாதிக்க பட்டு தற்பொழுது சாவடைந்துள்ளார்

அதே போல இலங்கையை சேர்ந்த ஒருவர் அவுஸ்ரேலியாவிலும் பலியாகியுள்ளார்


இவ்வாறு லண்டன் ,பிரான்ஸ் ,சுவிஸ் ,இத்தாலி போன்ற நாடுகளிலும் தமிழர்கள் பலியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

குறித்த நோயின் அறிகுறி தெரியாது இந்த நோயினால் மேலும் பல தமிழர்கள் பாதிக்க


பட்டுள்ளனர் ,லண்டனில் காடைகள் வைத்து நடத்தி வரும் பல தமிழர்கள்இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

கொரனோவில் சிக்கி
கொரனோவில் சிக்கி
Posted in இலங்கை செய்திகள்

சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டணி (IYAP) ஆலோசனைக் கலந்துரையடல் : மட்டக்களப்பில் இடம்பெற்றது.

சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டணி (IYAP) ஆலோசனைக் கலந்துரையடல் : மட்டக்களப்பில் இடம்பெற்றது.

( ஜி.முஹம்மட் றின்ஸாத் )

தேசிய ஆலோசனை கூட்டத்தின் ஒரு பகுதியாக சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டணியானது (IYAP)

ஆலோசனைக் கலந்துரையடலொன்றை மட்டக்களப்பில் அண்மையில் மேற்கொண்டது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ் ஆலோசனைக் கூட்டத்தில் 18- 29 வயது வரையான பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் பங்குபற்றினர்.

இளைஞர்களும் சமாதானமும் பாதுகாப்பும் என்ற தொனிப்பொருளில் World Vision Lanka மற்றும் இளைஞர்

சமாதானம் மற்றும் பாதுகாப்பு வலையமைப்பு எனும் அமைப்புக்களை பங்குதாரர்களாக கொண்டு British Council Sri

Lanka Active Citizens Programme இன் வலுவூட்டலுடன் இந்த ஆலோசனைக்கு கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடல் உலகளாவிய ரீதியில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கட்டியெழுப்பி வளமான எதிர்காலத்தை

உருவாக்குவதில் இளைஞர் யுவதிகளின் பங்கை மீள வலியுறுத்துவதன் ஒரு பகுதியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டணியானது (IYAP) நிலைத்து நிற்கக்கூடிய சமூக அபிவிருத்தியை ஏற்படுத்தும்

நோக்கில் இளையவர்கள் மத்தியில் ஓர் வலையமைப்பை உருவாக்க இளைஞர் யுவதிகளால் முன்னெடுக்கப்படும் ஓர் அமைப்பாகும்.

சமாதானத்திற்கான சர்வதேச
சமாதானத்திற்கான சர்வதேச
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றம், ஏன்? மனோ கணேசன் விளக்கம்

பாராளுமன்றம், ஏன்? மனோ கணேசன் விளக்கம்

பிரித்தானிய பாராளுமன்றம் முதல் பக்கத்து குட்டி நாடான மாலைத்தீவு பாராளுமன்றம் வரை பல்வேறு உலக நாட்டு

சட்டசபைகள் இன்று, கோவிட்-19 மத்தியில் மெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றங்களாக கூடுகின்றன.

அதாவது, இந்நாடுகளின் எம்பீக்கள் தம் வீடுகளில் இருந்தபடி, சபாநாயகர் தலைமையில், காணொளி தொழில்நுட்பம் மூலம் கூடி பேசி விவாதிக்கின்றார்கள்.

இந்நிலையில் நம் நாட்டில், இந்த கொரோனா வைரஸ் தேசிய நெருக்கடியையே காரணமாக காட்டி, எதிரணி உறுப்பினர்களை

வீடுகளில் முடக்கி வைத்து விட்டு, தாம் விரும்பியவாறு இந்த அரசாங்கம் காய் நகர்த்த முயலுகிறது.

கொரோனா கட்டுப்பாடு, வாழ்வாதார நிவாரணங்கள் ஆகியவை தொடர்பில் இந்த அரசின் நடவடிக்கைகளுக்கு, ஆரம்பத்தில் நாமும் அரசியல் பேதங்களுக்கு அப்பால் முழுமையாக ஒத்துழைப்பு

வழங்கினோம். இந்த நாட்டு மக்களும் இன, மத, கட்சி பேதங்கள் இல்லாமல், ஜனாதிபதியின் ஆரவாரமான நிவாரண அறிவிப்புகளை வரவேற்றார்கள்.

ஆனால், இன்று கொரோனா கொடும்நோய் நாளுக்கு நாள் வளர்கிறது. பரிசோதனை செய்யப்பட வேண்டிய

பெருந்தொகையானோர் இன்னமும் இருக்கிறார்கள். உரிய மருத்துவ கருவிகள் இல்லை. அப்படி பரிசோதனை செய்யப்பட்டால்

, இன்றைய நோயாளர் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

அப்படியானால், இந்நாடு இன்னமும் பல மாதங்கள் ஊரடங்கினால் மூடப்படலாம். இன்றே வாழ்வாதார சவால்களுக்கு உள்ளாகியுள்ள

அப்பாவி மக்கள், கொரோனா தவிர்ந்த ஏனைய மருத்துவ சிக்கல்களை எதிர்நோக்கும் நோயாளர்கள், நகரங்களில்

சிக்கியுள்ள புலம்பெயர்ந்த உழைப்பாளர்கள் (MIGRANT WORKERS), எதிர்வரும் வாரங்களில் இன்னும் பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்க நேரலாம்.

ஏனெனில், பெரும் எடுப்பில் பேசப்பட்ட ஜனாதிபதியின் வாழ்வாதார நிவாரணங்கள் நாடெங்கும் மக்களை சென்று

இன்னமும் அடையவில்லை. அடையும் இடங்களிலும் பாரபட்சங்கள் காட்டப்படுகின்றதாக பரவலான புகார்கள் நாள்தோறும் என்னை வந்தடைகின்றன.

மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. கையிருப்பில் முக்கியமான மருந்துகள் இல்லை. சிறுநீரக வியாதி, நீரழிவு வியாதி, இருதய

வியாதி, புற்றுநோய் வியாதி ஆகிய பல நோய்களை கொண்டுள்ள நோயாளர்கள், மருந்து தட்டுப்பாடுகள் காரணமாக இப்போதே

தவிக்க ஆரம்பித்து விட்டார்கள். இலங்கை அரசு, அவசரமாக வழங்கியுள்ள மருந்து பட்டியல் கோரிக்கையை ஏற்று, இந்திய

அரசாங்கம், இந்தியாவில் மருந்து தேவைப்படும் இன்றைய க் சூழலிலும்கூட, மருந்துகளை “அரசாங்கம்-அரசாங்கம் (G2G)

பரிவர்த்தனை” என்ற அடிப்படையில் (அதாவது தனியார் இல்லை) வழங்க முடிவு செய்துள்ளமையை அறிந்து நாம் இந்திய அரசுக்கு

இலங்கையின் துன்பப்படும் அனைத்து மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

இதைவிட, நிதி உதவியாக, இந்நாட்டு அரசாங்கத்துக்கு, இன்றைய கொரோனா சூழலில், அமெரிக்க அரசாங்கம், ஐக்கிய நாடுகள்

சபை, உலக வங்கி, சீன அரசாங்கம் ஆகியவை பல மில்லியன் கணக்கான பெருந்தொகை டொலர்களை உதவியாக வழங்கியுள்ளன.

இவை தனியொரு கட்சிக்கோ, தனி நபர்களுக்கோ, தனி அரசியல் தலைவர்களுக்கோ வழங்கப்படுகின்ற உதவிகள் அல்ல. இவை

இலங்கை நாட்டு மக்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள். இன்னமும் பெருந்தொகை உதவி நன்கொடைகள், இலகு கடன்கள் இப்படி வழங்கப்பட உள்ளன.

அரசியலமைப்பின்படி பாராளுமன்றத்துக்கே நாட்டின் நிதிவளம் தொடர்பில் முதன்மை அதிகாரம் உள்ளது. ஆகவே இவற்றுக்கு

என்ன நடக்கின்றது? இவை கொரோனா கொடும் நோய் தடுப்புக்கும், இந்நாட்டு மக்கள் நலன் சார்ந்த நிவாரணத்துக்கும்

பயன்படுத்தபடுகின்றனவா என பாராளுமன்றம் கூடி ஆராய கூடாதா?

கொரோனா தடுப்பு பற்றி, மக்களின் வாழ்வாதாரங்கள் பற்றி அடுத்த ஆகஸ்ட் மாதம்வரை தெரிவு செய்யப்பட்டு இருந்த மக்கள்

பிரதிநிதிகள் ஆராய கூடாதா? ஆராய்ந்து மக்களுக்கு அறிவிக்க கூடாதா?

நான் “வீட்டில் சும்மா முடக்கியிருக்க” விரும்பும் மக்கள் பிரதிநிதியல்ல. எல்லாம் நன்றாகவே நடக்கின்றது, எல்லாமே

மக்களுக்கு கிடைக்கின்றது, என ஆளுவோருக்கு ஆலவட்டம் பிடித்து, வளர்க்கும் கட்சி தலைவனும் அல்ல. ஆகவேதான் இந்த கேள்விகளை கேட்கிறேன்.

Posted in இலங்கை செய்திகள்

ஒரு பெண்ணால் 34 பேருக்கு கொரனோ – தனிமை படுத்திய அரசு

ஒரு பெண்ணால் 34 பேருக்கு கொரனோ – தனிமை படுத்திய அரசு

இலங்கை இரத்மலானை பகுதியில் பெண் ஒருவருக்கு கொரனோ தொற்று கண்டு

பிடிக்க பட்ட நிலையில் அவர் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளார் ,

இதனை அடுத்து அவருடன் உறவாடிய குறித்த பகுதி மக்கள் 34 பேர் சிறப்பு

பூனானை கொரனோ தனிமை படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்

இதுவரை 170பேர் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக

இலங்கை சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

ஒரு பெண்ணால் 34 பேருக்கு
ஒரு பெண்ணால் 34 பேருக்கு
Posted in இலங்கை செய்திகள்

தேசிய நெருக்கடியின் பாரதூரத்தை உணர்ந்து, பாராளுமன்றத்தை கூட்டுங்கள்!மனோ கணேசன்

தேசிய நெருக்கடியின் பாரதூரத்தை உணர்ந்து, பாராளுமன்றத்தை கூட்டுங்கள்!

எம்பீக்களுக்கு சம்பளம் தேவையில்லை – மனோ கணேசன்

(அ)நாட்டில் நாளுக்கு நாள், பரிசோதிக்க பரிசோதிக்க, புதிது புதிதாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று தொடர்பில் ஆராயவும்;

(ஆ)ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் நிவாரணங்கள், பெரும்பாலான மக்களுக்கு இன்னமும் கிடைக்காததால்,

நெருக்கடியாகியுள்ள திக்கற்ற மக்களின் வாழ்வாதாரம் பற்றி ஆராயவும்;

(இ)நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினால், கொரோனாவுக்கு அப்பால் ஏனைய நோய்களாலும் மக்கள் உயிரிழக்க கூடிய அபாயம் பற்றி ஆராயவும்;

(ஈ)ஜூன் 2க்கு முன் தேர்தலை நடத்த முடியாததால் ஏற்படுகிற அரசியலமைப்பு நெருக்கடி தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின்

கருத்தை பெறுங்கள் என ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் கூறி விட்டதை ஆராயவும்;

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச உடனடியாக பாராளுமன்றத்தை மீள கூட்ட வேண்டும் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச

கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி தனது சமூக ஊடக தளங்களில் கருத்து கூறியுள்ள மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

அமைச்சர் விமல் வீரவன்ச இன்னமும் சிறுபிள்ளைதனமாக பேசுகிறார். பாராளுமன்றம் கூட்டப்பட கூடாது என்பதற்கு அவர் சொல்லும் ஒரு காரணம், “எம்பிகளுக்கு சம்பளம் வழங்க

வேண்டிவருமாம்”. எம்பீக்களுக்கு சம்பளம் தேவையில்லை என நான் சொகிறேன். அதை எதிரணியின் அனைத்து எம்பீக்களும் ஏற்பார்கள் என நான் நம்புகிறேன். உண்மையில் இது ஒரு

பிரச்சினை இல்லை. இதையெலாம் ஒரு பிரச்சினையாக கூறும் விமல் போன்றர்களின் சிந்தனைதான் பிரச்சினை. இவரது

மூளையை ஐஸ் பெட்டியில் வைத்து இந்த தேசம் பாதுகாக்க வேண்டும்.

அரச பக்கத்தை சார்ந்த இன்னொரு முன்னாள் எம்பியான உதய கம்மன்பில இன்னொரு காரணம் கண்டு பிடித்து சொல்கிறார்.

அதாவது, “பாராளுமன்ற சபையில் அருகருகாக அமர்ந்து சபை அமர்வை நடத்த கூடாது. அது சமூக இடைவெளி விதியை மீறும்”.

என்கிறார். இவரது மூளையையும் ஐஸ் பெட்டியில் வைத்து நாம் பாதுகாக்க வேண்டும்.

அருகருகாக அமராமல், எம்பீக்கள் வீடுகளில் இருந்தபடி, தொலைதொடர்பு தொழில்நுட்ப காணொளி மாநாட்டின் மூலமாக

பாராளுமன்ற அமர்வு நடத்தப்படலாம். உலகின் வேறுபல நாடுகளில் இத்தகைய காணொளி அமர்வுகள் இன்று

நடத்தப்படுகின்றன. இலங்கையில் அனைத்து மக்களும் இன்று வீடுகளில் முடங்கி இருக்கின்றார்கள். எனவே இந்த காணொளி

பாராளுமன்ற அமர்வை அனைத்து மக்களும் பார்த்து கேட்க முடியும். இதனால், இன்றைய தேசிய நெருக்கடி தொடர்பில் நாட்டில்

பொதுஜன அபிப்பிராயம் உருவாகும். அரசியல் பேதங்களுக்கு அப்பால், இதுதான் இன்றைய தேவை.