தேசிய நெருக்கடியின் பாரதூரத்தை உணர்ந்து, பாராளுமன்றத்தை கூட்டுங்கள்!மனோ கணேசன்

Spread the love

தேசிய நெருக்கடியின் பாரதூரத்தை உணர்ந்து, பாராளுமன்றத்தை கூட்டுங்கள்!

எம்பீக்களுக்கு சம்பளம் தேவையில்லை – மனோ கணேசன்

(அ)நாட்டில் நாளுக்கு நாள், பரிசோதிக்க பரிசோதிக்க, புதிது புதிதாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று தொடர்பில் ஆராயவும்;

(ஆ)ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் நிவாரணங்கள், பெரும்பாலான மக்களுக்கு இன்னமும் கிடைக்காததால்,

நெருக்கடியாகியுள்ள திக்கற்ற மக்களின் வாழ்வாதாரம் பற்றி ஆராயவும்;

(இ)நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினால், கொரோனாவுக்கு அப்பால் ஏனைய நோய்களாலும் மக்கள் உயிரிழக்க கூடிய அபாயம் பற்றி ஆராயவும்;

(ஈ)ஜூன் 2க்கு முன் தேர்தலை நடத்த முடியாததால் ஏற்படுகிற அரசியலமைப்பு நெருக்கடி தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின்

கருத்தை பெறுங்கள் என ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் கூறி விட்டதை ஆராயவும்;

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச உடனடியாக பாராளுமன்றத்தை மீள கூட்ட வேண்டும் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச

கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி தனது சமூக ஊடக தளங்களில் கருத்து கூறியுள்ள மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

அமைச்சர் விமல் வீரவன்ச இன்னமும் சிறுபிள்ளைதனமாக பேசுகிறார். பாராளுமன்றம் கூட்டப்பட கூடாது என்பதற்கு அவர் சொல்லும் ஒரு காரணம், “எம்பிகளுக்கு சம்பளம் வழங்க

வேண்டிவருமாம்”. எம்பீக்களுக்கு சம்பளம் தேவையில்லை என நான் சொகிறேன். அதை எதிரணியின் அனைத்து எம்பீக்களும் ஏற்பார்கள் என நான் நம்புகிறேன். உண்மையில் இது ஒரு

பிரச்சினை இல்லை. இதையெலாம் ஒரு பிரச்சினையாக கூறும் விமல் போன்றர்களின் சிந்தனைதான் பிரச்சினை. இவரது

மூளையை ஐஸ் பெட்டியில் வைத்து இந்த தேசம் பாதுகாக்க வேண்டும்.

அரச பக்கத்தை சார்ந்த இன்னொரு முன்னாள் எம்பியான உதய கம்மன்பில இன்னொரு காரணம் கண்டு பிடித்து சொல்கிறார்.

அதாவது, “பாராளுமன்ற சபையில் அருகருகாக அமர்ந்து சபை அமர்வை நடத்த கூடாது. அது சமூக இடைவெளி விதியை மீறும்”.

என்கிறார். இவரது மூளையையும் ஐஸ் பெட்டியில் வைத்து நாம் பாதுகாக்க வேண்டும்.

அருகருகாக அமராமல், எம்பீக்கள் வீடுகளில் இருந்தபடி, தொலைதொடர்பு தொழில்நுட்ப காணொளி மாநாட்டின் மூலமாக

பாராளுமன்ற அமர்வு நடத்தப்படலாம். உலகின் வேறுபல நாடுகளில் இத்தகைய காணொளி அமர்வுகள் இன்று

நடத்தப்படுகின்றன. இலங்கையில் அனைத்து மக்களும் இன்று வீடுகளில் முடங்கி இருக்கின்றார்கள். எனவே இந்த காணொளி

பாராளுமன்ற அமர்வை அனைத்து மக்களும் பார்த்து கேட்க முடியும். இதனால், இன்றைய தேசிய நெருக்கடி தொடர்பில் நாட்டில்

பொதுஜன அபிப்பிராயம் உருவாகும். அரசியல் பேதங்களுக்கு அப்பால், இதுதான் இன்றைய தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *