Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் வற்றிய நீர் நிலைகள் மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் வற்றிய நீர் நிலைகள் மக்களுக்கு எச்சரிக்கை

,

பிரிட்டன் ; பிரிட்டன் நாட்டில் கடந்தவாரம் இடம்பெற்ற அகோர வெப்ப நிலை காரணாமாக நீர் நிலைகள் வற்றிய நிலையில் காட்சியளித்தன .

பிரிட்டனில் 1976 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெப்ப நிலையின் பின்னர் கடந்த வாரம் இடம் பெற்ற வெப்பத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

பிரித்தானியாவில் இடம்பெற்ற அகோர வெப்ப நிலை காணமாக இரண்டு நாட்களில் 13 பேர் பலியாகி இருந்தனர் ,மேலும் பலர் அதிக வெப்ப நிலை

தாக்கத்தினால் பாதிக்க பட்டு இருந்தத்துடன் நீர் நிலகைகள் வற்றிய நிலையில் காட்சியளித்தன .

பிரிட்டனில் வற்றிய நீர் நிலைகள் மக்களுக்கு எச்சரிக்கை

இவ்விதமான சூழல் எதிர் காலத்தில் மேலும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது .

வெப்பநிலை அதிகரித்தால் பூமியில் வாழும் உயிரினங்கள் அதிக வெப்பத்தை
ஏற்றுக்கொள்ள முடியா நிலையில் மரணிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் நீர்

நிலைகள் வற்றிவிட்டால் உயிரினம் வாழமுடியா சூழல் ஏற்படும் என்கின்ற மிரட்டல் கணிப்புக்கள் மக்களை பீதியில் உறைய வைத்துள்ளன .

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டன் பிரதமர் யார் பரபரப்பு போட்டி

    பிரிட்டன் பிரதமர் யார் பரபரப்பு போட்டி

    ,

    பிரிட்டன் ,லண்டன் ; பிரிட்டனில் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பதவி விலகிய நிலையில்
    தற்போது பிரிட்டனுக்கு புதிய பிரதமர் போட்டி நிலவுகிறது .

    இந்த போட்டியில் இந்தியரான ரிஷி சுனெக் மற்றும் பிரிட்டன் பூர்வீக கூடிய பெண் ஒருவருக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த இருவர் போட்டியில் மக்கள் கருத்து கணிப்பில் ரிஷி சுனெக் முன்னிலையில் உள்ளார் .

    ஆனால் கறுப்பினத்தவர் ஆட்சியில் அமர்ந்திட கூடாது என துடிக்கும் இனவாதிகள் சுனெக்கிற்கு எதிரான அ கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர் .

    பிரிட்டன் பிரதமர் யார் பரபரப்பு போட்டி

    எதிர் வரும் ஐந்தாம் திகதி பிரிட்டன் பிரதமர் யார் என்கின்ற விடயம் தெரியவரும் .

    தபோது வரை ரிஷி சுனெக் முன்னிலையில் உள்ளார் .இவ்வாறு ரிஷி சுனெக் பிரதமராக வெற்றி வாய்ப்பு கிடைத்தால் பிரிட்டனை ஆண்ட
    முதல் இந்தியர் மாற்றும் கறுப்பினத்தவர் என்ற பெருமையை இவரை தட்டி செல்லும் என்பது குறிப்பிட தக்கது .

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      உக்கிரேனில் கைக்குண்டு வீசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன்

      உக்கிரேனில் கைக்குண்டு வீசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன்

      ,

      உக்கிரேன் ; உக்கிரேனுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இராணுவ பயிற்சி பாசறையில் கைக்குண்டு ஒன்றை வீசியுள்ளார் .

      உக்கிரேனில் இராணுவ பயிற்சி மையத்தில் கைக்குண்டு வீசிய போரிஸ் ஜோன்சன் புகைப்படம் தற்போது வைரலாகிய வண்ணம் உள்ளது.

      உக்கிரேனுக்கு பிரிட்டன் அதிக ஆயுதங்களை வழங்கி வருவதுடன் ,நவீன் ஏவுகணையையும் வழங்கி வருகிறது.

      உக்கிரேன் இராணுவத்தினருக்கு பிரிட்டன் இராணுவம் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது .


      பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கைக்குண்டு வீசிய செயல் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

      உக்கிரேனில் துப்பாக்கி மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் சுட்டு பயிற்சி பெற்றுள்ளார் .

      ஆமா வெடிச்சு இருந்தா என்ன ஆகி இருக்கும் ..?

      https://www.youtube.com/watch?v=-Rt2zx-Z8SE
        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        பிரிட்டனில் கவிழ்ந்த கார் வீதியில் நடந்த பயங்கரம்

        பிரிட்டனில் கவிழ்ந்த கார் வீதியில் நடந்த பயங்கரம்

        ,

        பிரிட்டன் ஐயர்லாந்த் ; பிரிட்டன் Ormeau Rd, Belfast. பகுதியில் காலை 11.30 மணியளவில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது கவிழ்ந்தது .

        இந்த கார் விபத்தில் சிக்கிய சாரதி சிறு காயங்களுடன் தப்பித்தார் .
        இங்கு இடம்பெற்ற கார் விபத்தினால் அந்த வழி போக்குவரத்து சில மணி நேரங்கள் தடை பட்டன.

        கார் விபத்து சம்பவித்த பகுதிக்கு விரைந்து காவல்துறையின் போக்குவரத்துக்கு நெரிசலை கட்டு படுத்தி கார் விபத்து தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தனர்.

        மேலும் விபத்தில் சிக்கிய கார் அங்கிருந்து மீட்க பட்டது .விபத்து சம்பவத்திற்கு விரைந்த வந்த அம்புலன்ஸ் அவசர உதவி பிரிவினர் கார் சாரதிக்கு சிச்சை வழங்கி காப்பாற்றினர்.

        தொடர்ந்து கார் விபத்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

        பிரிட்டனில் இவ்வாறு பல கார் கவிழ்ந்த நிலையில் விபத்தில் சிக்கி வரும் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன .

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          பிரிட்டனில் அதிக வெப்பத்தினால் 13 பேர் மரணம்

          பிரிட்டனில் அதிக வெப்பத்தினால் 13 பேர் மரணம்

          ,

          பிரிட்டனில் கடந்த தினம் நிலவிய அதிக வெப்பத்தின் காரணமாக நாடு தழுவிய ரீதியில் 13 பேர் பலியாகியுள்ளனர் .

          மேலும் இந்த அதிக வெப்பத்தினால் பலர் மூச்சுத்திணறலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

          சம்பவ தினம் பிரிட்டனில் 40 செல்சியஸ் வெப்ப நிலை காணப்பட்டது.

          இந்த அதிக வெப்பநிலை காரணமாக ரயில்வே தண்டவாளங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது .

          மேலும் பல வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன .இதே போல வாகனங்களும் எரிந்துள்ளன .

          போர் கோலமாக பிரிட்டனில் அதிக வெப்பநிலை காணப்பட்டது .அன்றைய தினம் மக்கள் பெரும் இடர்களை சந்தித்தனர் என்பது வரலாறாக பதிவாகியுளளது .

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            பிரிட்டன் பிரதமராக துடிக்கும் இந்தியா ரிஷி சுனக்கை இலக்கு வைத்து தாக்கும் ஊடகங்கள்

            பிரிட்டன் பிரதமராக துடிக்கும் இந்தியா ரிஷி சுனக்கை இலக்கு வைத்து தாக்கும் ஊடகங்கள்

            ,

            பிரிட்டன் லண்டன் ; பிரிட்டன் பிரதமராக போட்டியிட தற்போது நிதியமைச்சராக விளங்கிய ரிஷி சுனெக்கை இலக்கு வைத்து பிரிட்டன் ஊடகங்கள் தாக்குதலை நடத்தி வருகின்றன .

            இவர் இந்தியர் என்கின்ற நிலையில் மக்கள் முதுகில் குத்துவார் என்கின்றதான நிலையில் கருத்துக்கள் வேகமாக பரப்பப் பட்டு வருகின்றன . .

            இவருக்கு எதிரான மக்கள் அலையை கிளறி வெளிவிவகார அமைச்சராக விளங்கும் பிரிட்டன் நாட்டு அம்மணியை பிரதமராக்கும் நிலையில் ஊடகங்கள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன.

            பிரிட்டன் பிரதமராகும் இந்தியா வம்சாவளி நிதியமைச்சர் சுனெக்

            இவை நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் உளவுத்துறை பின்புலத்தில் இருந்து நடத்த படுவதாக நோக்க முடிகிறது .

            பிரிட்டன் பிரதமராக துடிக்கும் இந்தியா ரிஷி சுனக்கை இலக்கு வைத்து தாக்கும் ஊடகங்கள்


            118 வாக்குகளை பெற்று முன்னிலையில் ரிஷி சுனெக் உள்ளார் .அதனை தொடர்ந்து 92 வாக்குகள் பெற்று இரண்டாம் நிலையில் அம்மையார் உள்ளார் .

            இவ்வாறு ஒரே கட்சிக்குள் நடந்து வரும் மோதலினால் சுனெக் பின் தள்ளப்பட்டு பிரிட்டன் நாட்டில் பிரதமராக துடிக்கும் இந்தியர் ஓரம் கட்ட படுகிறார் என்பதாக அந்த பக்கங்களை காணாமுடிகிறது என்கிறது மக்கள் சமூகம் .

            பாக்கலாம் இறுதி சுற்றில் வெல்ல போவது இந்தியாரா அல்லது அம்மணியா என்பதை .

              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

              சிக்கிய 125 கிலோ போதைவஸ்து அதிர்ச்சியில் பொலிஸ்

              சிக்கிய 125 கிலோ போதைவஸ்து அதிர்ச்சியில் பொலிஸ்

              ,

              பிரிட்டன் ; பிரிட்டனில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு டீசல் ஜெனரேட்டர் இயந்திரம் ஒன்றுக்குள் மறைத்து வைக்க பட்ட நிலையில் கடத்தி செல்ல பட்ட 125 கிலோ போதைவஸ்து சுங்கப்பிரிவினரிடம் சிக்கியது .

              பிரிட்டனில் இருந்து மிக லாவகமாக அனுப்பி வைக்க பட்ட இந்த போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு பிரிட்டன் அதிகாரிகளை மிரள வைத்துள்ளது.

              லண்டன் புறநகர் பகுதிகளில் இயங்கி வந்த மூன்று இயந்திர தொழில்துறை நிறுவனங்களும் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டது.

              சிக்கிய 125 கிலோ போதைவஸ்து அதிர்ச்சியில் பொலிஸ்

              அப்பொழுது இதேபோல இயந்திரம் ஒன்று தயாரான நிலையில் வைக்க பட்டதும் அதற்குள் இருந்தும் போதைவஸ்து மற்றும் கஞ்சா என்பனவும் மீட்க பட்டன.

              போதைவஸ்து கடத்திய நீர்மூழ்கி கப்பல்கள் துரத்தி பிடித்த கடற்படை

              போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று சிறை பிடிப்பு


              மேலும் பொலிசார் நடத்திய சோதனையில் திருட பட்ட நகைகள் மற்றும் வாகனங்கள் என்பனவும் மீட்க பட்டுள்ளது.

              கைதான போதைவஸ்து கடத்தல் காரர்கள் தொடர்ந்து தீவிர விசாரணை வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

                Posted in பிரித்தானிய செய்தி

                கவிழ்ந்த விமானம் பிரிட்டனில் நடந்த பயங்கரம்

                கவிழ்ந்த விமானம் பிரிட்டனில் நடந்த பயங்கரம்

                பிரிட்டன் ; பிரிட்டனின் ஐயர்லாந்து பகுதியில் இலகு ரக விமானம் ஒன்று Portaferry Road, Newtownards பகுதியில் தலைகீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியது .

                அயர்லாந்தில் இடம்பெற்ற இந்த விமான விபத்தில் சிக்கி இருவர் பலியாகினர். .
                இதே போன்ற விமனம ஒன்று சோமாலியாவில் கடந்த தினம் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் பயணிகள் தப்பித்தனர் .

                ஆனால் இன்று பிரிட்டன் ஐயர்லாந்தில் இடம்பெற்ற இந்த விமான விபத்தில் , இருவர் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                விமானம் கவிழ்ந்தது நடந்த பயங்கரம் மக்கள் கதறல்

                பிரிட்டனில் நடந்த இந்த விமானம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

                சிதறிய இந்தியா விமானம் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு

                இந்த விமான விபத்தினால் அந்த பகுதி போக்குவரத்துக்கு சிலமணி நேரம் தடை பட்டது .

                குறித்த விமான விபத்து காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .

                  Posted in பிரித்தானிய செய்தி

                  பிரிட்டனில் அதிக வெப்பம் மக்கள் அவதி

                  பிரிட்டனில் அதிக வெப்பம் மக்கள் அவதி

                  பிரிட்டனில் இன்று திங்கட் கிழமை அதிக வெப்பம் காணப்பட்டது

                  இந்த வெப்பநிலை 40C ஆக பதிவானது ,இந்த வெப்பம் காரணமாக போக்குவரத்து பாதிக்க பட்டதுடன் பல பகுதிகளில் பாடசாலைகள் அடித்து மூடப்பட்டன.மக்கள் அவதிபட்டனர் .

                  மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை வெளிப்படுத்த பட்ட நிலையில் வெப்ப பாதிப்பு தவிர்க்க பட்டுள்ளது.

                  தொடர்ந்து நாளை செய்வாய்க் கிழமை இது போன்ற அதிக வெப்ப காலநிலை காணப்படும் என அறிவிக்க பட்டுள்ளது .

                  நாளைக்கும் இந்த அதிக வெப்ப நிலை ஏற்படும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.

                    Posted in பிரித்தானிய செய்தி

                    லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது

                    லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது

                    லண்டன் Elfirda Close பகுதியில் வீட்டுக்குள் வைத்து முப்பது வயதுடைய இளம் பெண் ஒருவர் குற்றி கொலை செய்யப்பட்டுள்ளார் .

                    பலமான கத்தி குத்துக்கு இலக்கண நிலையில் பெண் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

                    லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது
                    லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது

                    இந்த பெண் கொலை குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் முப்பது வயதான ஆணும் இருபது வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டனர் .

                    இருபது வயது பெண் இந்த பெண்ணை குற்றி கொலை புரிந்திட உதவினார் என்ற குற்றத்தில் கைது செய்ய பட்டுள்ளார்.

                    கைதானவர்கள் ஆண் பெண் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .


                    லண்டனில் சமீப காலங்களாக இவ்விதமான கத்தி குத்து தாக்குதல்கள் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது.

                      Posted in பிரித்தானிய செய்தி

                      லண்டனில் வேகமாக பரவும் கொரோனோ தமிழர்கள் அதிகம் பாதிப்பு

                      லண்டனில் வேகமாக பரவும் கொரோனோ தமிழர்கள் அதிகம் பாதிப்பு

                      பிரிட்டன் லண்டன் பகுதியில் சமீப வாரங்களில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பல நூறு தமிழர்கள் பாதிக்க பட்டுள்ளனர்.

                      மக்கள் முகமூடிகளை அணியாது உலவிய வண்ணம் உள்ளனர்

                      பேருந்து மற்றும் பொது போக்குவரத்து பொது இடங்களில் அலட்சியத்துடன் நடந்து திரிந்தவர்களுக்கு இந்த நோயானது அதிகம் தாக்கியுள்ளது.

                      தற்ப்போது கொரோனோ நோயானது மக்களுக்கு தொற்றி கொண்டாலே அதனை சோதனை செய்வதற்கு பணம் செலுத்த வேண்டும் .

                      முன்னர் லண்டனில் அது இலவசமாக கிடைக்க பெற்று வந்த நிலையில் தற்போது அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்கிறது பிரிட்டன் அரசு .

                      நமக்கு தெரிந்த பல தமிழர்கள் இந்த நோயினால் பீடிக்க பட்டுள்ளனர் ,தமிழர்களே எச்சரிக்கையாக செயல்படுங்கள்.


                      பிரிட்டன் தழுவிய நிலையில் கொரனோ நோயானது மீளவும் அதிகமாக தாக்கி வருகிறது.

                      வரும் முன் தடுப்போம் உயிரை கப்பபோம் .

                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        மலிவு விற்பனையில் லண்டன் Bexley Bromley Greenwich and Lewisham
                        பகுதிகள் வீடுகள்

                        மலிவு விற்பனையில் லண்டன் Bexley Bromley Greenwich and Lewisham
                        பகுதிகள் வீடுகள்

                        லண்டன் Bexley Bromley Greenwich and Lewisham
                        பகுதிகள் உள்ள மாநகர சபைகளில் வீடுகள் ஐந்து லட்சம் வரை கடந்த பன்னிரெண்டு மாதங்களுக்குள் மலிவு விலையில் விற்பனை செய்யப் பட்டுள்ளன.

                        கொரனோ தொற்று நோயானது வேகமாக பரவிய நிலையில் அந்த நோயின் தாக்குதலின் பொழுதும் வீடுகள் மலிவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

                        இந்த பகுதிகளில் வீடுகளின் விலை ஐந்து லட்சம் முதல் £573,280.வரையிலான விலைக்குள் அதிகமாக விற்பனை செய்ய பட்டுள்ள புதிய புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.


                        மேலும் இதே பகுதிகளில் மக்கள் வீடுகளை வாங்கி குவித்திட முயன்று வருவதாக அந்த தகவலில் மேலும் தெரிவிக்க பட்டுள்ளது .


                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          லண்டனில் சிறுவனை கடித்து குதறிய நாய்

                          லண்டனில் சிறுவனை கடித்து குதறிய நாய்

                          லண்டன் Cumberland Avenue, Canterbury பகுதில் ஒன்பது வயது சிறுவன் ஒருவனை நாய் ஒன்று திடீரென கடித்து குதறியது .

                          இந்த சம்பவத்தின் பொழுது அந்த சிறுவன் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அம்புலன்ஸ் உலங்குவானூர்தி மூலம் லண்டன் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டான்.

                          தற்போது லண்டன் மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வரும் சிறுவன் நிலை தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை.

                          நாயின் உரிமையாளர் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளார்.

                            Posted in பிரித்தானிய செய்தி

                            லண்டனில் குத்துக் கரணம் அடித்த கார்

                            லண்டனில் குத்துக் கரணம் அடித்த கார்

                            லண்டன் Albert Road, Ashford. பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து குத்துக்கரணம் அடித்துள்ளது.

                            தலைகீழாக கவிழ்ந்த காரில் இருந்தவர்கள் பலத்த காயங்களுடன் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

                            இந்த கார் விபத்தினால் அந்த வழி சாலை போக்குவரத்து சில மணி நேரம் தடை பட்டது.

                            சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அம்புலன்ஸ் என்பன பாதிக்க பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் .

                            குத்துகரணம் அடித்து கவிழ்ந்த கார் விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.

                            லண்டனில் கார்கள் இப்படியும் குத்துகாரணம் அடிக்கும் என்பது இதன் மூலம் காணமுடிகிறது .

                              Posted in பிரித்தானிய செய்தி

                              லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார்

                              லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார்

                              லண்டன் Hurst Road Bexley பகுதியில் சனிக்கிழமை கார் ஒன்று வீட்டுக்குள் நுழைந்துள்ளது .

                              அந்த சாலை வழியாக வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து வீட்டின் முன்பாக நிறுத்து வைத்திருந்த காரில் மோதி சிதறியது .

                              இதன் பொழுது அந்த கார் அந்த வீட்டின் யன்னல் கதவுகளை உடைத்து உரசி சென்றது .

                              எனினும் வீட்டின் உள்ளே இவ்வேளை இருந்த தாய் மகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.

                              இந்த கோர விபத்தில் சிக்கி எவரும் பலியாகவில்லை .


                              ஆனால் வீட்டின் மதில் மற்றும் யன்னல் கதவுகளை உடைந்துள்ளன. இவ்வேளை வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்க பட்டிருந்த கார் உட்பட கடும் சேதமடைந்துள்ளன.

                              பிரிட்டனில் இவ்விதமான விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

                                Posted in பிரித்தானிய செய்தி

                                லண்டன் லூசியத்தில் பெண்ணை காணவில்லை தேடும் பொலீஸ்

                                லண்டன் லூசியத்தில் பெண்ணை காணவில்லை தேடும் பொலீஸ்

                                லண்டன் லூசியம் பகுதியில் பெண்ணை காணவில்லை என அந்த பகுதி எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் .

                                கடந்த ஐந்தாம் திகதி லூசியம் பகுதியில் காணப்பட்ட Fiona என்கின்ற 47 வயது பெண் காணாமல் போயுள்ளார் .

                                இவ்வாறூ காணாமல் போன இந்த பெண்ணை கண்ணுற்றால் தமக்கு அறியத் தரும்படி பொலிசார் வேண்டி நிற்கின்றனர் .

                                லண்டன் லூசியத்தில் பெண்ணை காணவில்லை தேடும் பொலீஸ்
                                லண்டன் லூசியத்தில் பெண்ணை காணவில்லை தேடும் பொலீஸ்

                                இந்த பெண் காணமல் போனமை தொடர்பாக அதே பகுதி பாராளும்னற உறுப்பினரும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பெண்ணை கண்ணுற்றால் பொலிசாருக்கு தெரிவிக்கும் படி அறிவித்துள்ளார் .


                                சமீப காலங்களாக லண்டன் லூசியம் பகுதியில் ஆண் பெண்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

                                  Posted in பிரித்தானிய செய்தி

                                  பிரிட்டனுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் லண்டன் Catford ஜெர்மன் நெதர்லாந்து நாடுகளில் கைது

                                  பிரிட்டனுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் லண்டன் Catford ஜெர்மன் நெதர்லாந்து நாடுகளில் கைது

                                  பிரிட்டனுக்கு கடல்வழியாக ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர்களை கைது செய்யும் வேட்டையில் பிரிட்டன் உளவுத்துறையினர் ஈடுபட்டனர் .

                                  இவ்விதம் ஆட்கடத்தலில் ஈடுபட்ட ஏயன்சிகள் லண்டன் Docklands and Catford ,Rushey Green, Catford,பகுதியில் கைது செய்ய பட்டுள்ளனர்.

                                  இந்த ஆள்கடத்தலில் ஈடுபட்டு வந்த 21 வயதுடைய முக்கிய புள்ளி கைது செய்ய பட்டுள்ள்ளார் .

                                  இவருடன் கூட்டிணைந்து செயல் பட்ட பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                                  மேலும் ஜெர்மன் மற்றும் நெதர்லாந்து நாடுகளிலும் இந்த முகவர்கள் அந்த நாடு காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .

                                  பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டு படுத்த இந்த வேட்டை இடம்பெற்று வருகிறது.

                                    Posted in பிரித்தானிய செய்தி

                                    லண்டன் லூசியம் பகுதியில் வெடித்த காஸ் பைப்

                                    லூசியம் பகுதியில் வெடித்த காஸ் பைப்

                                    கடந்த தினம் இரவு 8.10 மணியளவில் லண்டன் லூசியம்
                                    Lee High Road, SE13. பகுதியில் காஸ் பைப் வெடித்து சிதறியது .எனினும் இதன் பொழுது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

                                    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மருத்துவ குழுக்கள் தமது சேவைகளை வழங்க தயாராக இருந்தனர் என மெட்ரோ போலீசார் தெரிவித்துள்ளனர்

                                    தெய்வாதீனமாகா பெரும் உயிர் சேதம் இதன்போது தவிர்க்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

                                    குறித்த வெடிப்பு தொட்ரபில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

                                      Posted in பிரித்தானிய செய்தி

                                      காதலி வீட்டை லொறியால் இடித்து உடைத்த காதலன் பிரிட்டனில் நடந்த பயங்கரம்

                                      காதலி வீட்டை லொறியால் இடித்து உடைத்த காதலன் பிரிட்டனில் நடந்த பயங்கரம்

                                      பிரிட்டனில் தனது காதலி தன்னை சந்திக்க மறுத்த காரணத்தால் கோபமடைந்த காதலன் லொறியால் East Kilbride, South Lanarkshire, பகுதியில் உள்ள அவரது வீட்டை இடித்து உடைத்த பயங்கரம் இடம்பெற்றுள்ளது .

                                      காதலன் காதலியின் வீட்டை லொறியால் இடித்து உடைக்கும் பொழுது அவ்வேளை அந்த வீட்டிற்குள் காதலி மற்றும் இரண்டு பிள்ளைகள் வசித்துள்ளனர் .

                                      அவ்வாறு அவர்கள் அந்த வீட்டுக்குள் வசிக்கும் பொழுது இவர் மேற்கொண்ட இந்த கொலை வெறி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

                                      போதையில் லொறியை செலுத்திய காதலன் காதலியின் லிவ்விங் அறைக்குள் லொறியை பார்க்கிங் செய்திட இவ்விதம் லொறியால் வீட்டை இடித்து உடைத்துளளார் .

                                      காதலி வீட்டை லொறியால் இடித்து உடைத்த காதலன் பிரிட்டனில் நடந்த பயங்கரம்
                                      காதலி வீட்டை லொறியால் இடித்து உடைத்த காதலன் பிரிட்டனில் நடந்த பயங்கரம்

                                      இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் இவரால் வீட்டிற்கு ஏற்படுத்த பட்ட சேதம் 475 ஆயிரம் பவுண்டுகள் இவரே செலுத்த வேண்டும் என அறிவிக்க பட்டுள்ளது .

                                      அது தவிர லொறியின் சேதம் மற்றும் அதன் இழப்பு . உயிராபத்தை விளைவிக்க கொலை முயற்சியில் ஈடுபடடர் என்ற கோணத்தில் இவை பார்க்க படுகிறது .

                                      காதலிகளே யாக்கிரதை காதலன் கோபத்தில் பேசினால் அவரை சமாதனம் செய்த்து உள்ளே விட்டு விடுங்க இல்லை என்றால் இப்படி ஏதாவது கிறுக்குத்தனமாக பண்ணிட போறாங்க .

                                      எதற்கும் இவ்வாறான வேளையில் எச்சரிக்கையாக இருங்கள் .
                                      காதல் செய்த அலங்கோலம் .இதுக்கு பேர் தான் காதலா ..?

                                        Posted in பிரித்தானிய செய்தி

                                        லண்டனுக்குள் கடல்வழியாக 3136 அகதிகள் நுழைவு ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம்

                                        லண்டனுக்குள் கடல்வழியாக 3 136 அகதிகள் நுழைவு ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம்

                                        லண்டனுக்குள் ஆபத்தான கடல்வழியூடாக படகுகள் மூலம் அகதிகள் நுழைந்த வண்ணம் உள்ளனர் .இவ்வாறு நுழையும் அகதிகள் ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம் பெற்று வருகிறது .

                                        இவ்வாறு கடந்த முப்பது நாட்களில் மட்டும் 76 படகுகளில் 3,136 அகதிகள்ஆபத்தான ஆங்கில கால்வாய் கடல்வழியாக லண்டனுக்குள் நுழைந்துள்ளனர் .

                                        லண்டனுக்குள் நுழையும் அகதிகள் யாவரும் ரூவாண்டாவுக்கு அனுப்பி வைக்க படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகி ரூவாண்டாவுக்கு முதலாவது விமானம் சென்றுள்ள நிலையிலும் லண்டனுக்குள் அகதிகள் வருகை அதிகரித்துள்ளது .

                                        ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் விலகிய பின்னர் ஆங்கில கால்வாயை கடந்து படகுகள் மூலம் நுழையும் அகதிகள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது .

                                        தொடர்ந்து லண்டனுக்குள் நுழையும் அகதிகளை தடுத்து நிறுத்திட முடியா நிலையில் பிரிட்டன் அரசு திணறிய வண்ணம் உள்ளது.

                                        நேற்று மட்டும் கடல்வழியாக லண்டன் டோவர் பகுதியில் இரண்டு படகு மூலம் 94 சட்டவிரோத குடியேற்ற வாசிகள் வந்தடைந்துள்ளனர் .

                                        லண்டனுக்குள் கடல்வழியாக 3136 அகதிகள் நுழைவு ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம்

                                        லண்டனில் இருந்து நான்காயிரம் மைல்கள் அப்பால் உள்ள ரூவாண்டாவுக்கு நாடு கடத்த படுவார்கள் என்ற நிலை ஏற்படுத்த பட்டுள்ள நிலையிலும் அதனை செவி சாய்க்காது மக்கள் லண்டனுக்குள் வருகின்ற செயல்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது..

                                        அகதிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து செல்வதால் அகதிகள் விடயத்தில் இறுக்கமான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது .

                                        லண்டனுக்குள் கடல்வழியாக 3136 அகதிகள் நுழைவு ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம்
                                        லண்டனுக்குள் கடல்வழியாக 3136 அகதிகள் நுழைவு ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம்

                                        எனினும் இவ்விதமான நெருக்கடிகள் மத்தியிலும் லண்டனுக்குள் குறி வைத்து நுழையும் அகதிகள் எண்ணிக்கை தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது.

                                        லண்டனுக்குள் கடல்வழியாக அகதிகள் நுழைவு பெரும் சவால் நிறைந்த ஒன்றாக பிரிட்டன் அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது .

                                        இந்த அகதிகள் கட வழியாக லண்டனுக்குள் நுழைவதற்கு பிரான்ஸ் அதிக ஆதரவு தெரிவித்து வருகிறது .

                                        பிரான்ஸ் கடல் பகுதியில் தனது கட்டுப்பாட்டை தளர்த்திய நிலையில் பிரான்சுக்குள் அகதிகள் வருகை மிக இலகுவாக அதிகரிக்க பட்டுள்ளதாக குறிப்பிட படுகிறது .

                                        பிரான்ஸ் பிரிட்டனுக்கு இடையிலான மீன்பிடி துறையில் முறுகல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அகதிகள் வருகை வெள்ளம் போல கட்டுடைத்து பாயும் நிலை அதிகரித்துள்ளது என்கிறது ஐரோப்பிய முக்கிய ஊடகம் ஒன்று . குறிப்பிட தக்கது .