லண்டனுக்குள் கடல்வழியாக 3136 அகதிகள் நுழைவு ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம்

Spread the love

லண்டனுக்குள் கடல்வழியாக 3 136 அகதிகள் நுழைவு ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம்

லண்டனுக்குள் ஆபத்தான கடல்வழியூடாக படகுகள் மூலம் அகதிகள் நுழைந்த வண்ணம் உள்ளனர் .இவ்வாறு நுழையும் அகதிகள் ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம் பெற்று வருகிறது .

இவ்வாறு கடந்த முப்பது நாட்களில் மட்டும் 76 படகுகளில் 3,136 அகதிகள்ஆபத்தான ஆங்கில கால்வாய் கடல்வழியாக லண்டனுக்குள் நுழைந்துள்ளனர் .

லண்டனுக்குள் நுழையும் அகதிகள் யாவரும் ரூவாண்டாவுக்கு அனுப்பி வைக்க படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகி ரூவாண்டாவுக்கு முதலாவது விமானம் சென்றுள்ள நிலையிலும் லண்டனுக்குள் அகதிகள் வருகை அதிகரித்துள்ளது .

ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் விலகிய பின்னர் ஆங்கில கால்வாயை கடந்து படகுகள் மூலம் நுழையும் அகதிகள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது .

தொடர்ந்து லண்டனுக்குள் நுழையும் அகதிகளை தடுத்து நிறுத்திட முடியா நிலையில் பிரிட்டன் அரசு திணறிய வண்ணம் உள்ளது.

நேற்று மட்டும் கடல்வழியாக லண்டன் டோவர் பகுதியில் இரண்டு படகு மூலம் 94 சட்டவிரோத குடியேற்ற வாசிகள் வந்தடைந்துள்ளனர் .

லண்டனுக்குள் கடல்வழியாக 3136 அகதிகள் நுழைவு ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம்

லண்டனில் இருந்து நான்காயிரம் மைல்கள் அப்பால் உள்ள ரூவாண்டாவுக்கு நாடு கடத்த படுவார்கள் என்ற நிலை ஏற்படுத்த பட்டுள்ள நிலையிலும் அதனை செவி சாய்க்காது மக்கள் லண்டனுக்குள் வருகின்ற செயல்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது..

அகதிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து செல்வதால் அகதிகள் விடயத்தில் இறுக்கமான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது .

லண்டனுக்குள் கடல்வழியாக 3136 அகதிகள் நுழைவு ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம்
லண்டனுக்குள் கடல்வழியாக 3136 அகதிகள் நுழைவு ரூவாண்டாவுக்கு அனுப்புவது தீவிரம்

எனினும் இவ்விதமான நெருக்கடிகள் மத்தியிலும் லண்டனுக்குள் குறி வைத்து நுழையும் அகதிகள் எண்ணிக்கை தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது.

லண்டனுக்குள் கடல்வழியாக அகதிகள் நுழைவு பெரும் சவால் நிறைந்த ஒன்றாக பிரிட்டன் அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது .

இந்த அகதிகள் கட வழியாக லண்டனுக்குள் நுழைவதற்கு பிரான்ஸ் அதிக ஆதரவு தெரிவித்து வருகிறது .

பிரான்ஸ் கடல் பகுதியில் தனது கட்டுப்பாட்டை தளர்த்திய நிலையில் பிரான்சுக்குள் அகதிகள் வருகை மிக இலகுவாக அதிகரிக்க பட்டுள்ளதாக குறிப்பிட படுகிறது .

பிரான்ஸ் பிரிட்டனுக்கு இடையிலான மீன்பிடி துறையில் முறுகல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அகதிகள் வருகை வெள்ளம் போல கட்டுடைத்து பாயும் நிலை அதிகரித்துள்ளது என்கிறது ஐரோப்பிய முக்கிய ஊடகம் ஒன்று . குறிப்பிட தக்கது .

    Leave a Reply