Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வைரலாகும் சீமான் – விவசாயி புதிய பாடல் – வீடியோ
வைரலாகும் சீமான் – விவசாயி புதிய பாடல் – வீடியோ
நாம் தமிழர் கட்சியின் வெற்றியை இலக்கு வைத்து அவர்கள் விவசாயி சின்னத்தை மைய படுத்தி பல புதிய பாடல்கள் தயாரிக்க பட்டு வெளியாகிய வண்ணம் உள்ளன ,
அவ்வாறான பாடல் ஒன்று இப்பொழுது இளங்கோ செல்லப்பா
இசையிலும், மறத்தமிழ் வேந்தன வரிகளில் , மதுர குரலோன் பாவேந்தன் ஒலியில் முழங்கியுள்ளது
தமிழா ஒன்றிணைந்து வடமிழு ,இந்த பாடல்களை பரப்பிடு
வாழ்த்துக்கள் ,தொடரட்டும் உங்கள் பணிகள்
பொலிஸ் ஜீப் ஆட்டோ மோதல் – ஒரேகுடும்பத்த சேர்ந்த இருவர் மரணம்
பொலிஸ் ஜீப் ஆட்டோ மோதல் – ஒரேகுடும்பத்த சேர்ந்த இருவர் மரணம்
இன்று Katupotha வீதியில் காவல்துறை ஜீப் வான் ஒன்று ஆட்டோ
ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மகன் பலியாகியுள்ளனர்
இறந்தவருடைய மனைவி மற்றும் இரு பிள்ளைகள் மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
குறித்த ஜீப் வண்டியை செலுத்தி சென்ற கான்ஸ்டபிள் ரக அதிகாரி
காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்
சந்தேக நபர் ஒருவரை துரத்தி சென்ற ஜீப் வண்டியே இவ்வாறு விபத்தில்சிக்கியதாக தெரிவிக்க படுகிறது
சிறிலங்காவுக்கு எதிரான ஓய்வூதிய வாய்ப்புக்கள் ! கோபத்தை வெளிப்படுத்திய செய்தி !!
சிறிலங்காவுக்கு எதிரான ஓய்வூதிய வாய்ப்புக்கள் ! கோபத்தை வெளிப்படுத்திய செய்தி !!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் காணப்படும் சர்வதேச பிரதிநிதிகள், தமது ஓய்வூதிய காலத்தில் வாய்ப்புக்களை பெற்றுக் கொண்டு சிறிலங்காவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தனது கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் சட்டமாஅதிபர் ரம்சி கிளாக், போர் குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்ரீபன் ராப், ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஐ.நாவின் முன்னாள் வல்லுனர் ஜஸ்மின் ஆகியோரை இலக்குவைத்து தனது கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டுமென ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர்கள், சிறப்பு அறிக்கையாளர்கள், வல்லுனர்கள் என பலரது கூட்டுஅறிக்கைக்கு பின்னராக இவ்வாறான கோபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் இவர்களது உறவுகளுக்கான ஆதாரங்களை ஊடகப்பதிவுகளை குறிப்பிட்டு, சிறிலங்கா மீதான இவர்களது குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்றும், இவர்களின் நிலைப்பாடு ஒரு பக்கசார்பானது எனவும் இந்த ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
பாடசாலை அதிபருக்கு தர்ம அடி
பாடசாலை அதிபருக்கு தர்ம அடி
இலங்கை பொகவந்தலாவ, டின்சின் தமிழ் மகா வித்தியாலய அதிபர் மீது மர்ம நபர்கள் குழு ஒன்று இடீர் தாக்குதலை நடத்தியது
இதில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
இந்த தாக்குதலுக்குரிய காரணம் தெரியவரவில்லை போலீசார் தொடர்ந்து புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழில் 52 கைதிகளுக்கு கொரனோ
யாழில் 52 கைதிகளுக்கு கொரனோ
யாழ்ப்பாணத்தில் உள்ள சிறை சாலை ஒன்றில் கைதிகளாக உள்ள
ஐம்பத்தி இரண்டு பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டு
சிகிச்சை பெற்றுவருவதாக சிறைச்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது
பத்தாயிரம் மீனவர்களுடன் இந்தியா செல்வேன் – டக்கிளஸ் கூவல்
இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் இங்கிருந்து கதைப்பதை விட, பத்தாயிரம் வடமாகாண கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவுக்குப் படகில் சென்று, அந்த
பிரச்சனையை தீர்ப்பதற்கு யோசித்துக்கொண்டிருக்கின்றேன் என கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்படுமெனவும், இந்திய மீனவர்களின் பேச்சு
வார்த்தை வருவது போவதாக உள்ளது. தீர்வு என்று எதுவும் இல்லாவிட்டாலும் இந்திய மீனவர்களின் வருகை நிதந்தரமாக
காணப்படுவதாக கடற்தொழிலாளர்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் என்றார்.
இதனை தீர்த்து தராவிட்டால் ஆர்ப்பாட்டம், தொழில்முடக்கம், அமைச்சரின் வடமாகாண நடமாட்டத்தினை முடக்குவோம் என்று
சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். நான் பொறுமை பொறுமை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றேன் இருந்தாலும் அது
நியாயமான கோரிக்கை இதனை நான் விரைவில் தீர்க்க முயற்சிப்பேன் எனவும் தெரிவித்தார்.
1.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைவஸ்துடன் ஆண் ,பெண் கைது
1.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைவஸ்துடன் ஆண் ,பெண் கைது
இலங்கையில் போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது அதி
உயர் ரக போதைவஸ்துடன் ஆண் ,பெண் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்களிடம் இருந்து மீட்க பட போதைவஸ்து இலங்கை ரூபா பெறுமதியில் சுமார் ஒன்றரை மில்லியன் என தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கை போதைவஸ்து பாவனையில் கொலம்பியாவை மிஞ்சி
விடும் அளவுக்கு அதன் பாவனை அதிகரிப்பு செறிந்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது
ஜப்பான் போர் கப்பல் இலங்கை வருகை
ஜப்பான் போர் கப்பல் இலங்கை வருகை
இலங்கை கம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஜப்பான் நாட்டின் போர் கப்பல் ஒன்று தரித்துள்ளது ,இரு நாடுகளுக்கு இடையிலான போர் பயிற்சி மற்றும் ,பாதுகாப்பு தொடர்பில்
கலந்துகொள்வதற்காக அந்த கப்பல் வருகை தந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது
குறித்த கப்பல் பகுதி சீனாவுக்கு இலங்கையால் வழங்க பட்ட
நிலையில் அதே துறைமுகத்தில் ஜப்பான் கப்பல் வருகை தந்துள்ளமை குறிப்பிட தக்கது
கட்சிக்கு தலைவர் ஆனார் மைத்திரி
கட்சிக்கு தலைவர் ஆனார் மைத்திரி
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு
தலைவராகியுள்ளார் ,பரம்பரையாக ஆண்டு வந்த பண்டாரநாயக்காவின் கட்சி இப்பொழுது பறிபோயுள்ளது
மைத்திரி தெரிவான நிலையில் மீளவும் சந்திரிக்கா மற்றும் ,மைத்திரிக்கு இடையில் மோதல் நிலை நீடித்து செல்கிறது
மேற்படி கட்சியினுள் முக்கிய பதவி நிலைகளில் உள்ளவர்கள்
பெரும்பாலானவர்கள் சிங்கள பபவுத்த இனவாத கொள்கை கொண்டவர்கள் என்பது குறிப்பிட தக்கது
போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட -61,500 பேர் கைது
போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட -61,500 பேர் கைது
இலங்கையில் ஆளும் சகோதரர்கள் ஆட்சியில் போதைவஸ்து
வியாபாரம் பல்கி பெருகியுள்ளது ,இளைய சமுதாயம் தவறான வழியில் வழி நடத்த படுகிறது
கடந்த வருடம் மட்டும் இந்த வியாபாரத்தில் ஈடு பட்ட சுமார் 61,500
பேரினை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்
தொடந்து இவ்விதமான முக்கிய நபர்கள் கைது செய்ய பட்டு
வருகின்ற பொழுதும் ,மேற்படி போதைவஸ்து பாவனையை ஒழிக்க முடியவில்லை
45 கிலோ போதைவஸ்துடன் இராணுவ சிப்பாய் கைது
45 கிலோ போதைவஸ்துடன் இராணுவ சிப்பாய் கைது
இலங்கை கொரனோ பகுதியில் வான் ஒன்றில் நாற்பத்தி ஐந்து கிலோ எடையுள்ள போதைவஸ்த்தை எடுத்து சென்று கொண்டிருந்த
இலங்கை இராணுவத்தை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரை போலீசார் வழிமறித்து கைது செய்தனர்
இவரது வாகனத்தை சோதனை செய்த பொழுது அதற்குள் மேற்படி போதைவஸ்து இருப்பது
கண்டு பிடிக்க பட்ட நிலையில் அவர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
தமிழ் இன அழிப்பை மறைக்க -இந்திய உதவியை கோரும் இலங்கை
தமிழ் இன அழிப்பை மறைக்க -இந்திய உதவியை கோரும் இலங்கை
இலங்கையில் ,தமிழ் மக்கள் ஆளும் சகோதர ஆட்சி காலத்தில் அழிக்க பட்டனர்,அவர்களின் இந்த அழித்தொழிப்புக்கு எதிராக
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன
இலங்கையில் சர்வாதிகார ஆட்சி நிலவி வருகிறது ,இதற்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியாவின் உதவிய இலங்கை
கோரியுள்ளது ,தமிழர்களை அழித்தொழிக்க இந்தியா
போராயுதங்கள்,மற்றும் இராணுவத்தை வலங்கை பேர் உதவி புரிந்தமை இங்கே குறிப்பிட தக்கது
ஐநா பிரேரணையை நிராகரித்த இலங்கை – தயராகும் பெரும் ஆப்பு
ஐநா பிரேரணையை நிராகரித்த இலங்கை – தயராகும் பெரும் ஆப்பு
இன்று முன்வைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ள
முடிவுகளையும் பரிந்துரைகளையும் இலங்கை திட்டவட்டமாக நிராகரிப்பதாக வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு இந்த சபையின் 43வது அமர்வில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக அறிவித்த தீர்மானம் 30/1 மற்றும் 40/1 ஆகியவற்றிலிருந்து வெளிவருகின்றது.
எந்தவொரு சுயமரியாதை, இறையாண்மை கொண்ட நாட்டிற்கும், முக்கியமாக ஆட்சி தொடர்பான பல பிரச்சினைகள் மற்றும் உள்நாட்டு விடயங்களை உள்ளடக்கி, நியாயமற்ற முறையில் தனது நோக்கத்தை விரிவுபடுத்தி மேலும் ஆணையிட்டுள்ள உயர்
ஸ்தானிகரின் அறிக்கையை இலங்கை நிராகரிக்கின்றது. இது ஐ.நா. சாசனத்தின் 2 (7) வது பிரிவான ´தற்போதைய சாசனத்தில் உள்ள எதுவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எந்தவொரு அரசினதும்
உள்நாட்டு அதிகார எல்லைக்கு உட்பட்ட விடயங்களில் தலையீடு செய்வதற்கு அங்கீகாரம் அளிக்காது…´ ஐ முழுமையாக மீறும் செயலாகும்.
பரிந்துரைகள் மற்றும் முடிவுகள் தொடர்பாக வெளிவந்த பாதையானது, இலங்கைக்கு எதிராக இடைவிடாமல் தொடர்ந்த முன்கூட்டிய, அரசியல்மயப்படுத்தப்பட்ட மற்றும் பாரபட்சமற்ற சில
கூறுகளின் நிகழ்ச்சி நிரலைப் பிரதிபலிக்கின்றது. இந்தப் பரிந்துரைகள் தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமைந்தவை.
உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ள முடிவுகளையும் பரிந்துரைகளையும் இலங்கை திட்டவட்டமாக நிராகரிக்கின்றது.
முப்பது ஆண்டுகளாக வெளியிடப்படாத மற்றும் அவற்றுள் சில உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் தக்கவைக்கப்பட்டு, அணுகுவதற்கு மறுக்கப்பட்டிருந்த ஆதாரங்களின் அடிப்படையில், குறிப்பாக ஐ.நா மற்றும் அதன் பொறிமுறைகளுடன்
தொடர்ச்சியாகவும் ஆக்கபூர்வமாகவும் ஈடுபட்டு வரும் இலங்கை போன்ற ஒரு நாடு தொடர்பாக, சொத்து முடக்கம், பயணத் தடைகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைப் பற்றிய குறிப்புக்கள் மற்றும் தனிப்பட்ட அரசுகள் உலகளாவிய அதிகார
வரம்பைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கான அழைப்பானது, சர்வதேச சமூகம் ஒட்டுமொத்தமாகக் கவனிக்க வேண்டிய ஒரு தனித்துவமான மற்றும் சிறந்த ஆபத்தை சுட்டிக்காட்டுகின்றது. சில
நாடுகளின் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையும், மற்றும் இயற்கை நீதியின் கொள்கைகளை மீறுவதுமாகும்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்திற்கும் மேலதிகமாக, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான தகவல்கள், தவறான கருத்துக்கள் மற்றும் தன்னிச்சையான மதிப்பீடுகள் குறித்து இலங்கை எழுத்துபூர்வ கருத்துக்களை வழங்கியுள்ளது. உயர் ஸ்தானிகர்
அலுவலகம் தனது அறிக்கையை முன்னெப்போதும் இல்லாத பிரச்சாரத்துடன் இணைந்து வெளியிட்டமை மற்றும் குறித்த அறிக்கை தொடர்பான எமது கருத்துக்களை ஒரு துணை நிரலாக
வெளியிட மறுத்தமை ஆகியன வருத்தமளிக்கின்றது. இது இலங்கையையும், அறிக்கை குறித்த இலங்கையின் கருத்துக்களை சமமாகக் காணும் உறுப்பினர்களையும் இழந்துள்ளது.
இந்த சபைக்கு முன்னர் விளக்கப்பட்ட காரணங்களுக்காக இலங்கையால் நிராகரிக்கப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் தொடர்பான நிபுணர் குழுவின் மிகவும் சர்ச்சைக்குரிய அறிக்கை மற்றும் இலங்கை தொடர்பான உயர் ஸ்தானிகர் அலுவலக
விசாரணை அறிக்கை ஆகியவற்றிலிருந்தான உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலங்கை மறுக்கின்றது. கூறப்பட்ட சர்ச்சைக்குரிய
அறிக்கைகளிலிருந்து பெறப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கங்கள், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் எமது மக்களின் வாழ்க்கை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நியாயமான நடவடிக்கைகளுடன், சர்வதேச அளவில்
தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அட்டூழியங்களை சமன் செய்வதாகத் தோன்றும் உண்மைத் தவறுகளால் நிறைந்திருக்கின்றன.
தலைவி அவர்களே, இந்த சபை மற்றும் அனைத்து ஐ.நா. அமைப்புக்களுடனான எமது தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாடுகள் இருந்தபோதிலும், வெளிப்புறமாக இயக்கப்படும்
சக்திகளை தொடர்ந்தும் வலியுறுத்துவதானது பல சவால்களை ஏற்படுத்துவதாக அமைவதுடன், இதுபோன்ற செயன்முறைகள்
ஐ.நா. வின் அனைத்து உறுப்பு நாடுகளையும் பாதிக்கும் ஆபத்தான முன்னுதாரணத்தையும் அமைக்கும்.
அரசியல் உந்துதல்களால் உந்தப்பட்டு, இந்த சபையால் இலங்கை மீது செலுத்தப்பட்டுள்ள கவனத்திற்காக நாங்கள் வருந்துகின்றோம். இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு
தீர்மானமும் சபையால் நிராகரிக்கப்பட்டு மூடப்பட வேண்டும் என இலங்கை இந்த சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.
முடிவில், இந்த சபை உட்பட ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்துடன் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பகுதிகளில், அரசியலமைப்பிற்கு
இணங்க, உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப ஆக்கபூர்வமாக ஈடுபடுவதற்காக நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
நுவரெலியாவில் ஒருபகுதி முடக்கம் – போலீஸ் குவிப்பு
நுவரெலியாவில் ஒருபகுதி முடக்கம் – போலீஸ் குவிப்பு
பரவி வரும் நோய்ந் தாக்குதல் பரவலை அடுத்து நுவரெலியாவில் ஒரு பகுதி முடக்க பட்டுள்ளது
மேற்படி முடக்க நிலையை அடுத்து தற்போது அங்கு காவல்துறையினர் குவிக்க பட்டு கண்காணிப்பு தீவிர அபடுத்த பிட்டுள்ளது
மறு அறிவித்தல் வரை மேற்படி பகுதி முடக்க நிலை தொடரும் என தெரிவிக்க பட்டுள்ளது
கோட்டாவுடன் பேசிய பின்னர் நாடு பறந்தார் பாகிஸ்தான் அதிபர்
கோட்டாவுடன் பேசிய பின்னர் நாடு பறந்தார் பாகிஸ்தான் அதிபர்
பாகிஸ்தான் நாட்டின் அதிபர் இம்ரான் கான் இலங்கைக்கு இரு நாள் அரசமுறை பயணத்தை மேற்கொண்டு வந்தார் ,
இவரது பயணம் முடிவடைந்து தற்போது பாகிஸ்தானுக்கு புறப்பட்டு சென்றார்
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் ,பாதுகாப்பு மற்றும் ,அபிவிருத்தி தொடர்பில் பேச பட்டுள்ளது
இவ்வேளை யுத்தத்தின் பொழுது பாகிஸ்தான் அரசு வழங்கிய உதவிக்கு நன்றியை தெரிவித்து கொண்டார் கோத்தபாயா
வீதி விபத்தில் ஒரேநாளில் -12 பேர் மரணம்
வீதி விபத்தில் ஒரேநாளில் -12 பேர் மரணம்
இலங்கையில் காந்த 24 மணித்தியாலத்தில் நடந்த வீதி விபத்துக்களில்
சிக்கி சுமார் 12 பேர் மரணமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
சாரதிகள் அலட்சிய போக்கின் காரணமாக ஏற்படும் இவ்விதமான விபத்துக்களில்
சிக்கி பெரும் தொகையில் ஒரேநாளில் மக்கள் பலி இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது
அடேல் பாலசிங்கத்துக்கு எதிராக சிங்கள புதிய காணொளி வெளியீடு
அடேல் பாலசிங்கத்துக்கு எதிராக சிங்கள புதிய காணொளி வெளியீடு
இலங்கையில் இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் ஆலோசகர்
ஆண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் சிறுவர் ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் எனவும் ,இவர் ஆயுத பயிற்சி பெற்றவர்
எனவும் கூறி அவரை உடனே கைது செய்ய வேண்டும் என இலங்கை அரசு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது
அதில் விடுதலை புலிகள் தொடர்ப்பிலான பாரிய குற்றச் சாட்டுக்களை சிங்கள அரச பயங்கரவாதம் வைத்துள்ளது ,புலிகளை துடைத்து அழித்துவிட்டோம் என்கிறது
ஆனால் இப்பொழுது அவர்கள் மீள் எழுச்சி கொள்கின்றார்கள் என்ற கோணத்தில் போலியான பரப்புரையை புரிந்து ,ஐக்கிய நாடுகள்
மனித உரிமையை திசை திருப்பும் நகர்வில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது
கிளிநொச்சியில் சிக்கிய 2,685 கிலோ கஞ்சா
கிளிநொச்சியில் சிக்கிய 2,685 கிலோ கஞ்சா
கிளிநொச்சி பகுதியில் போலீசார் மேற்கொண்ட திடீர்
சுற்றிவளைப்பின் பொழுது மறைத்து வைக்க பட்டிருந்த சுமார் 2,685 கிலோ கஞ்சா மீட்க பட்டுள்ளது
போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
புலிகளை அழித்த நோர்வே அனுசரணை சாமாதான ஓப்பந்தம்
புலிகளை அழித்த நோர்வே அனுசரணை சாமாதான ஓப்பந்தம் –
இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத் தொடர் அமர்வு தொடர்பில் தனது அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ
அரசாங்கம், தமிழ் ஈழ அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாக, 2002ம் ஆண்டு இதேநாளில் (பெப்ரவரி 22) நோர்வே
அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமதான ஒப்பந்தம் குறித்தும் தனதறிக்கையில் குறித்துரைத்துள்ளது.
குறிப்பாக இந்த சமாதான ஒப்பந்தத்தின் ஊடான சர்வதேச சக்திகளின் தலையீட்டின் காரணமாக மனித உரிமைகள்
பாதுகாக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு கிட்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தமிழர்களுக்கு, அடுத்தடுத்த நிகழ்ந்தேறிய நிகழ்வுகள், 2009 முள்ளிவாய்க்கால்
இனப்படுகொலை முடிவாக நிரூபித்திருந்ததோடு, ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சக்திகள் தமது புவிசார் அரசியல் காரணிகளை
கருத்தில்கொண்டு தமிழர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்த விடயத்தினை வெளிக்காட்டிய 2012 வெளிவந்த ஐ.நா. உள்ளக
மறுஆய்வு அறிக்கையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று, சிறிலங்கா தொடர்பாக முகன்மை குழு ஐ.நாவில் சமர்ப்பித்த ஆரம்ப (ணநசழ னசயகவ) தீர்மானம வரைவு, இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு பூச்சிய (ணநசழ ) வரைவு பூச்சிய நீதி மற்றும் பூச்சிய பொறுப்புக்கூறலை வழங்குகிறது என்பதோடு,
நாங்கள் தார்மீக கோபம் அடைகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைத்துள்ளது.
2009ம் ஆண்டு பெரும் இனப்படுகொலையொன்றின் ஊடாக தமிழர் தேசம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தீவில் தமிழர்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான
அரசியல்வெளி என்ற நிலையில், தமிழர்கள் மீண்டும் சர்வதேச நிறுவனங்களை, குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையை , நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காக திரும்பவும் நாடினார்கள் என்பதனை
சுட்டிக்காட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், போரின் போதோ அதற்குப் பின்னரோ தமிழர்களுக்கு எதிரான
இனப்படுகொலையினை புரிந்தவர்கள் எவருக்கும் தண்டனையோ, எதிரான வழக்கோ தொடரப்படவில்லை; எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் தனதறிக்கையில் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அசராங்கம்,
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிறிலங்காவை பரிந்துரைப்பதன் மூலம் மட்டுமே பொறுப்புக்கூறலை அடைய முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஐ.நா உயர்
ஆணையாளர் பேரவைக்கு அனுப்பிய தனது அறிக்கையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்குமாறு உறுப்பு நாடுகளை
வெளிப்படையாக வலியுறுத்தியுள்ளார். ஐ.நாவின் முன்னாள் உயர் ஸ்தானிகர்கள், முன்னாள் சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும்
சிறிலங்கா தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர்களின் நிபுணர் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் கடந்த பெப்ரவரி 18ம் நாளன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டுமென ஐ.நா மனித உரிமைச்சபை உறுப்பு நாடுகளுக்கு எழுதிய கடிதத்தில் எழுதியுள்ளனர். இந்த கோரிக்கை சமீபத்திய பி 2
பி பேரணியில் (பொத்துவில் முதல் பொலிகண்டி வரை) பல்லாயிரக்கணக்கான மக்களால் உறுதிப்படுத்தப்பட்டது. 2011ம்
முதல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இக்கோரிக்கையினை ஐ.நாவுக்கான மனுவில் தெரிவித்திருந்ததோடு,ஒரு மில்லியன் கையொப்பங்களை பெற்று வலியுறுத்தி 2015ம் ஆண்டில் வலியுறுத்தியிருந்தது.
சிறிலங்கா தொடர்பான முகன்மை குழு சமர்ப்பித்த ஆரம்ப (Zero Draft Resolution) தீர்மானம வரைவு, இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள்
புரிந்தவைர்களை பொறப்புக்கூற வைப்பதில் தோல்வியடைகிறது. நீதிக்காக போராடும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பூச்சிய ( Zero )
வரைவு பூச்சிய நீதி மற்றும் பூச்சிய பொறுப்புக்கூறலை வழங்குகிறது. இதனால் நாங்கள் தார்மீக கோபம் அடைகிறோம்.
பேரவையின் கடமைகளையும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதற்கான உலகளாவிய அறைகூவலை பூர்த்தி செய்யவும் ஒரு புதிய தீர்மானத்தை அறிமுகப்படுத்த வேண்டுமென்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொள்கிறது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த அமர்வு ‘மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் மிக உயர்ந்த நியமங்களை நிலைநிறுத்துவது’, ‘மனிதனின்
முழுமையான செயல்பாட்டை ஊக்குவித்தல்’ உள்ளிட்ட நோக்கத்தையும் கொள்கைகளையும் நிலைநிறுத்துவதோடு மேம்படுத்துதல், ‘நாடுகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித
உரிமைகளை காக்கும் கடமைகள்’,’ மற்றும் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு பங்களிப்பு செய்தல் ‘ ஆகியவற்றை காப்பாற்ற வேண்டும். என குறித்துரைத்துள்ளதோடு,
உலகெங்கிலும் உள்ள இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு ஆளானவர்கள்
நீதிக்காக மனித உரிமைகள் பேரவையையே நாடுகின்றனர் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளது
ஆதாரமற்ற பிரென்சு ஊடகங்களின் செய்தி – நீதிமன்றத்தினை நாட வேண்டிவரும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
ஆதாரமற்ற பிரென்சு ஊடகங்களின் செய்தி – நீதிமன்றத்தினை நாட வேண்டிவரும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
தமிழர்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் அமைதியான முறையில், பிரென்சு மண்ணில் மேற்கொண்டு வரும் அரசியல் செயற்பாடுகளுக்கு, ஆதாரமற்ற பிரென்சு ஊடகங்களின்
செய்திகள் குந்தகம் விளைவிப்பதாக குற்றஞச்சாட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அராங்சகத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகள், இவ்விடயத்தில் உண்மைத்தன்மை வெளிக்கொணர நீதிமன்றத்தில் முறையிட வேண்டிய கட்டாயத்துக்கு தமிழர்கள் தள்ளப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தலைநகர் பரிசின் அமைந்துள்ள தமிழர் வர்த்தக மையப்பகுதியாக லாச்சப்பலில், வர்த்தக நிலையமொன்றின் மறைவிடத்தில் இருந்து, காவல்துறை சோதனையொன்றின் போது மீட்கப்பட்ட தங்கம், பெருமளவு பணம் தொடர்பில் விடுதலைப் புலிகளை இணைத்து செய்தி வெளியிட்டிருந்தமை பிரான்ஸ் தமிழர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட நபர், ‘விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்றும், இலங்கையின் பிரிவினைவாத செயற்பாடுகளுக்காக பண சேகரிப்பில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் செய்தியில் குறிப்பிட்டிருந்தமை தமிழ்உணர்வாளர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இவ்வியடம் தொடர்பில் பிரதான பிரென்சு ஊடகங்களுக்கு தமது எதிர்ப்பினை தெரிவித்த கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகளின் கடிதத்தில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கைது செய்யப்பட்ட நபருக்கும் தமிழீழ புலிகளின் இயக்கத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்த இந்த சந்தேகங்கள் முற்றிலும் ஆதாரமற்றவை. உண்மை முற்றிலும் வேறுபட்டது.
இந்த உண்மைகளின் யதார்த்தத்தை எந்தவொரு விசாரணையும் செய்யாமல் இத்தகைய குற்றச்சாட்டுகள் பிரெஞ்சு ஊடக ;பரப்பில் பரப்பப்படும் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது.
சட்டத்தின் ஆட்சி கொண்ட பிரான்ஸ் நாட்டில் நாங்கள் இருக்கிறோம். இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான நீதிக்கும், அரசியல் இறமைக்குமான வெளி இல்லா நிலையில், நாங்கள் பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரி வாழ்ந்து வருகின்றோம்.
தமிழினப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களாகிய நாம் எமக்கான நீதி கோரி போராடி வருவதோடு, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு கோரியுள்ளார்.
பாதிக்கப்பட்ட தமிழ்மக்களாகிய நாம், எமக்கான நீதிக்கும் அரசியல் இறைமைக்கும் பிரென்சு மண்ணில் நாம் அமைதியான முறையி;ல் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு இவ்வாறான ஆதரமற்ற செய்திகள் குந்தகம் விளைவிப்பதாக கருதுகின்றோம்.
எங்கள் கருத்துக்களை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுவதோடு,செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உங்கள் ஆதாரங்களின் உண்மைத்தன்மை குறித்து உங்கள் விழிப்புணர்வை நாங்கள் கேட்கிறோம்.
எங்கள் கோரிக்கை உங்களின் கவனத்திற்கு ஈர்க்கவில்லை என்றால், இந்த விடயத்தில் நீதிமன்றத்தினை நாட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என தமது கடித்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.






