ஆதாரமற்ற பிரென்சு ஊடகங்களின் செய்தி – நீதிமன்றத்தினை நாட வேண்டிவரும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

Spread the love

ஆதாரமற்ற பிரென்சு ஊடகங்களின் செய்தி – நீதிமன்றத்தினை நாட வேண்டிவரும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

தமிழர்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் அமைதியான முறையில், பிரென்சு மண்ணில் மேற்கொண்டு வரும் அரசியல் செயற்பாடுகளுக்கு, ஆதாரமற்ற பிரென்சு ஊடகங்களின்

செய்திகள் குந்தகம் விளைவிப்பதாக குற்றஞச்சாட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அராங்சகத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகள், இவ்விடயத்தில் உண்மைத்தன்மை வெளிக்கொணர நீதிமன்றத்தில் முறையிட வேண்டிய கட்டாயத்துக்கு தமிழர்கள் தள்ளப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் தலைநகர் பரிசின் அமைந்துள்ள தமிழர் வர்த்தக மையப்பகுதியாக லாச்சப்பலில், வர்த்தக நிலையமொன்றின் மறைவிடத்தில் இருந்து, காவல்துறை சோதனையொன்றின் போது மீட்கப்பட்ட தங்கம், பெருமளவு பணம் தொடர்பில் விடுதலைப் புலிகளை இணைத்து செய்தி வெளியிட்டிருந்தமை பிரான்ஸ் தமிழர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட நபர், ‘விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்றும், இலங்கையின் பிரிவினைவாத செயற்பாடுகளுக்காக பண சேகரிப்பில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் செய்தியில் குறிப்பிட்டிருந்தமை தமிழ்உணர்வாளர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இவ்வியடம் தொடர்பில் பிரதான பிரென்சு ஊடகங்களுக்கு தமது எதிர்ப்பினை தெரிவித்த கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகளின் கடிதத்தில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கைது செய்யப்பட்ட நபருக்கும் தமிழீழ புலிகளின் இயக்கத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்த இந்த சந்தேகங்கள் முற்றிலும் ஆதாரமற்றவை. உண்மை முற்றிலும் வேறுபட்டது.

இந்த உண்மைகளின் யதார்த்தத்தை எந்தவொரு விசாரணையும் செய்யாமல் இத்தகைய குற்றச்சாட்டுகள் பிரெஞ்சு ஊடக ;பரப்பில் பரப்பப்படும் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது.

சட்டத்தின் ஆட்சி கொண்ட பிரான்ஸ் நாட்டில் நாங்கள் இருக்கிறோம். இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான நீதிக்கும், அரசியல் இறமைக்குமான வெளி இல்லா நிலையில், நாங்கள் பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரி வாழ்ந்து வருகின்றோம்.

தமிழினப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களாகிய நாம் எமக்கான நீதி கோரி போராடி வருவதோடு, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு கோரியுள்ளார்.
பாதிக்கப்பட்ட தமிழ்மக்களாகிய நாம், எமக்கான நீதிக்கும் அரசியல் இறைமைக்கும் பிரென்சு மண்ணில் நாம் அமைதியான முறையி;ல் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு இவ்வாறான ஆதரமற்ற செய்திகள் குந்தகம் விளைவிப்பதாக கருதுகின்றோம்.

எங்கள் கருத்துக்களை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுவதோடு,செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உங்கள் ஆதாரங்களின் உண்மைத்தன்மை குறித்து உங்கள் விழிப்புணர்வை நாங்கள் கேட்கிறோம்.

எங்கள் கோரிக்கை உங்களின் கவனத்திற்கு ஈர்க்கவில்லை என்றால், இந்த விடயத்தில் நீதிமன்றத்தினை நாட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என தமது கடித்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Author: நலன் விரும்பி

Leave a Reply