Tag: அடாவடி
அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள் ,பௌத்த துறவற அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் துறவியான ராஜங்கனே சத்தரத்னா, அடையாளம் தெரியாத இருவரால் தாக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் ஜூன் 06 அன்று நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
முகமூடி அணிந்த இருவர் ஒரு வேனில் வந்து, பாதிக்கப்பட்டவரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் துறவி
காயமடைந்த முன்னாள் துறவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கான நோக்கம் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்த காவல்துறையின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இறைச்சி கடையில் அடாவடி
இறைச்சி கடையில் அடாவடி
இறைச்சி கடையில் அடாவடி ,ஹட்டன் நகரில் இறைச்சி விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் , வாடிக்கையாளர்களிடம் அடாவடித்தனமாக நடந்து கொள்வதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
இறைச்சி எலும்பு கலந்த இறைச்சி

தனி இறைச்சி எலும்பு கலந்த இறைச்சி இன்னும் சில ரகங்களில் இங்கு இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. .எனினும் வாடிக்கையாளர்களின்
தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய விதத்தில் இறைச்சி முறையாக வகைப்படுத்தப்படுவதில்லை என தெரியவருகிறது.
தனி இறைச்சி என்னும் பெயரில் எழும்பும் கலந்து விற்பனை செய்கிறார்கள். அதுபோலவே எழும்புடன் விற்பனை செய்யப்படும் இறைச்சியில் அதிக
விகிதத்தில் எழும் இருப்பதாகவும் மிகவும் சொற்ப அளவிலான இறைச்சி இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர் .
தரம் குறைவாக ஏசி
தோட்டங்களில் வசிக்கும் மக்கள் இந்த கடையின் வாடிக்கையாளர்கள் என்பதால் அவர்களை அலட்சியம் செய்வதாகவும் இது தொடர்பாக பேசினால் அவர்களை தரம் குறைவாக ஏசி பேசுவதாகவும் தெரியவருகிறது.
“ஹட்டன் மாட்டிறைச்சி கடையில் வாடிக்கையாளர்களுக்கான மதிப்பும் மரியாதையும் கிடைப்பதில்லை.வாடிக்கையாளர் இறைச்சி தொடர்பாக
ஏதாவது கேட்கையில் சரியான பதில் கிடைப்பதில்லை. மாறாக நக்கல் நையாண்டியாக பதில் கிடைக்கிறது விலைக்கு தகுந்த பொருள்
கிடைப்பதில்லை வியாபாரிகளின் பேச்சிகள் கேட்டு பெரும் மன உளைச்சல் ஏற்படுகிறது” என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.









