Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
ரயிலுடன் மோதி சிதறிய பேரூந்து – 20 பேர் பலி
ரயிலுடன் மோதி சிதறிய பேரூந்து – 20 பேர் பலி
கடந்த தினம் பாகிஸ்தான் Karachi to Lahore express ரயிலுடன்யாத்திரை சென்ற பயணிகள் பேரூந்து ஒன்று மோதி சிதறியதால்
அதில் அவ்வேளை பயணித்த இருபது பேர் உடல் சிதறி பலியாகினர் ,மேலும் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்காயமடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
அடையாளம் தெரியாத ரயில்வே கடவடையில் இந்த சம்பவம் Sheikhupura district of Punjab பகுதியில் இடம்பெற்றுள்ளது
மேற்படி விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

பாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்
பாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்
நேற்று மியன்மாரில் இடம் பெற்ற பாரிய நில நடுக்கத்தில் சிக்கி
இதுவரை சுமார் 162 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்
இருபதுக்கு மேற்பட்டவர் காணாமல் போயுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
தொடர்ந்து மீட்பு பணிகள் ,மற்றும் தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன
கட்டட இடி பாடுகளுக்குள் மக்கள் சிக்கி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது
தற்போது மீட்பு பணிகள் துரித படுத்த பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது
,இராணுவம் மக்கள் ,மீட்பு பணிகளில் ஈடுப்படுத்த பட்டுள்ளனர்

பாரிய நில நடுக்கம் 
உடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்
உடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்
கம்போடியாவில் ஆடையின்றி குளத்தில் குளித்த முதியவர் உடல் வழியே அட்டை பூச்சி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி… குளத்தில் குளித்தபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்…
அட்டை பூச்சி
கம்போடியாவின் புனோம் பென்னில் என்ற பகுதியில் முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு
அந்த முதியவர் வீட்டின் அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவரது
உறுப்பில் வீக்கம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. வலியில் அவதியுற்ற அந்த முதியவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோதனையில் அதிர்ச்சியான சம்பவத்தை பார்த்துள்ளனர். முதியவரின்
சிறுநீர்ப்பையில் சிறிய கேமரா கொண்டு நுழைத்து பார்க்கையில் அட்டை பூச்சி ஒன்று அவரது உடலுக்குள் புகுந்துள்ளது
தெரியவந்தது. குளத்தில் ஆடையின்றி குளித்த போது அவரின் உறுப்பு வழியே அந்த அட்டைப் பூச்சி சென்றிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அந்த அட்டை பூச்சி அவரது ரத்தத்தை உறிஞ்சி பெரிதாகி வருவதும் தெரிய வந்தது. உடலின் மற்ற பாகங்களையும் அந்த
அட்டை பூச்சி சேதப்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த அட்டை பூச்சியானது முதியவரின் உடலில் இருந்து சுமார் 500 மில்லிக்கு அதிகமான ரத்தத்தை உறிஞ்சி விட்டதால், அந்த
அட்டைப்பூச்சியை வெளியேற்றுவதில் மருத்துவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டு
அட்டைப்பூச்சியை வெளியேற்றி உள்ளனர். மேலும் அந்த முதியவரை தங்களது மருத்துவமனை கண்காணிப்பில்
வைத்துள்ளனர். இதையடுத்து முதியவர் குணமடைந்து அவரது வீட்டிற்க்கு சென்றுள்ளார்.
கம்போடியாவில் நிகழ்ந்த இந்த சம்பவம் ஆச்சர்யமாகவும் மிகுந்த சவாலாகவும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுபோன்ற சம்பவம் முதல் முறை அல்ல. 2018 ஆம் ஆண்டில், சீனாவின் நெய்ஹைர் நகரில் ஒரு மனிதனின் மூக்கிலிருந்து அட்டைப்பூச்சி வெளியேற்றப்பட்ட சம்பவமும் நடந்து உள்ளது.

ரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்
ரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்
ரஷியாவின் அரசியலமைப்பில் திருத்தம் செய்யலாமா என்பது தொடர்பாக நடத்தப்பட்ட தேர்தலில் பெரும்பான்மையானோர்
ஆதரவு தெரிவித்துள்ளதால் விளாடிமிர் புதின் 2036 ஆம் ஆண்டுவரை அதிபராக செயல்பட முடியும்.
இனி எந்த தடையும் இல்லை – ரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்
புதின்
விளாடிமிர் புதின் 1999-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ரஷியாவின் அதிபராக பதவியேற்றார். அப்போது முதல் ரஷியாவின் அதிபர் அல்லது பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதேனும் ஒன்றில்
தன்னை நிலைநிறுத்திவந்த புதின் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்றார்.
இதனால் 2024-வரை ரஷியாவில் புதினின் ஆதிக்கம் இருக்கும். இந்த வெற்றியின் மூலம் தொடச்சியாக இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், ரஷியாவில் உள்ள சட்டத்தின்படி ஒரு நபர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.
இதனால், 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் புதின் போட்டியிட முடியாத சூழல் இருந்து வந்தது.
இந்த தடையை நீக்கும் விதமாக அதிபர் தேர்தலில் போட்டுயிடுவதற்கான சட்டத்தை புதுப்பிக்கும் விதமாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதாவின் படி, பழைய நடைமுறைகள் அழிக்கப்பட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான சட்டம் மீண்டும் முதலில் இருந்தே அமலுக்குவரும்.
அதாவது, ஏற்கனவெ தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் சட்டம் புதிக்கப்பட்டதால் மீண்டும் முதலில் இருந்தே அதிபர் தேர்தலில் போட்டியிடலாம்.
சுருக்கமாக கூற வேண்டுமானால் தற்போது அதிபராக உள்ள புதின் அடுத்துவரும் 2024-ம் ஆண்டு மற்றும் 2030-ம் ஆண்டு ஆகிய இரண்டு தேர்தல்களிலும் எந்தவித தடையும் இன்றி போட்டியிடலாம்.
இதையடுத்து, இந்த மசோதா தொடர்பாக அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யலாமா? என்பது குறித்து முடிவு செய்ய
பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பு தேர்தல் நடைமுறையில் நடைபெற்றது. மக்கள் தங்கள் கருத்துக்களை வாக்குகளாக அளித்தனர்.
இந்த தேர்தலில் 65 சதவிகித மக்கள் வாக்களித்ததாக ரஷிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பதிவான வாக்குகள் அனைத்தும்
நேற்று எண்ணப்பட்டன. அதில் 77 சதவிகித வாக்காளர்கள் அரசியல் அமைப்பில் திருத்தம் செய்ய ஆதரவு, 23 சதவிகித மக்கள்
சட்டத்திருத்திற்கு எதிராகவும் வாக்களித்துள்ளதாக ரஷிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நிலவி வந்த அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.
அதாவது ஏற்கனவே தொடர்ந்து 2 முறை நாட்டின் அதிபராக இருந்த நபர் மேலும் இரண்டு அதிபர் தேர்தல்களில் பங்கேற்கலாம்.
ஆகையால், தற்போது ரஷியாவின் அதிபராக உள்ள புதின் 2024 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளில் நடைபெறும் இரண்டு அதிபர் தேர்தல்களிலும் அவர் பங்கேற்கலாம்.
அந்த தேர்தல்களில் வெற்றிபெறும் பட்சத்தில் 2036-ம் ஆண்டுவரை அதாவது தனது 83 வயது வரை ரஷியாவின் அதிபராக விளாடிமிர் புதின் செயல்படுவதில் இனி எந்த சட்ட சிக்கலும் இல்லை.
இதற்கிடையில் விளாடிமிர் புதின் தனது வாழ்நாள் முழுவதும் அதிபராக இருக்க எல்லா வேலைகளையும் செய்துவருவதாக ரஷிய எதிர்க்கட்சி தலைவரான அலெஸ்சி நவல்னி குற்றச்சாட்டியுள்ளார்.
தந்தை மகனை அடித்து கொன்ற போலீஸ் அதிகாரி – நீதிமன்றில் நிறுத்தம்
தந்தை மகனை அடித்து கொன்ற போலீஸ் அதிகாரி – நீதிமன்றில் நிறுத்தம்
சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ. ரகு கணேஷ் தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்
ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சாத்தான்குளம் வழக்கு: நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார் எஸ்.ஐ. ரகு கணேஷ்
கைது செய்யப்பட்ட எஸ்.ஐ. ரகு கணேஷ்
சென்னை:
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு
உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு கணேஷை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்
. 4 போலீசார் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட எஸ்.ஐ.ரகு கணேஷ் தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்
ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் முன்னதாக ரகு கணேசுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதல் கட்டமாக உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது.
மருத்துவப்பரிசோதனை முடிந்த உடன் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ. ரகு கணேஷ் தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி முன் தற்போது
ஆஜர்படுத்தபடுத்தப்பட்டுள்ளதாக என தகவல் வெளியாகிவருகிறது
எதியோப்பியாவில் 81 பேர் சுட்டு கொலை – பல டசின் பேர் காயம்
எதியோப்பியாவில் 81 பேர் சுட்டு கொலை – பல டசின் பேர் காயம்
எதியோப்பியாவில் இடம்பெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 81 பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,மேலும் பல டசின் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவ்வாறு காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
அமைதி வழியில் போரடிய அப்பாவி மக்கள் மீது அடக்குமுறையை பாவித்து
,சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தியுள்ள அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் வெடித்து பறக்கிறது
பெரும் போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு – சிக்கிய ஐஸ் எஸ் தீவிரவாத குழு
பெரும் போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு – சிக்கிய ஐஸ் எஸ் தீவிரவாத குழு
இத்தாலிய நாட்டில் கப்பல்கள் மூலம் கடத்தி வரப்பட்டு ஐரோப்பிய
சந்தையில் விற்பனை செய்ய பட்டு வந்த மிக பெரும்
போதைவஸ்து கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது
இத்தாலிய உளவுத்துறையினர் மேற்கொண்ட தகவல் சேகரிப்பு மற்றும்
கண்டறியும் துப்பறியும் வேட்டையின் பொழுதே மேற்படி விடயம் அம்பலமாகியுள்ளது
இவர்களின் இந்த சர்வதேச ரீதியாக சட்டவிரோதமாக இயங்கி வந்த உருமறைப்பு
செய்ய பட்ட உற்பத்தி ஆலைகள் கண்டு பிடிக்க பட்டு இரகசிய நகர்வுகள்
முடுக்கி விட பட்டுள்ளது ,மாபிய கும்பல்கள் மூலம் இவை வெளிச் சந்தைக்கு எடுத்து செல்ல பட்டதும் கண்டறிய பட்டுளள்து
பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 176 பேர் பலி
பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 176 பேர் பலி
பிரித்தானியாவில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி சுமார் 176 பேர் பலியாகியுள்ளனர்
இதுவரை இங்கு இடம்பெற்ற இறப்பு எண்ணிக்கை சுமார் 43,906 ஆக அதிகரித்துள்ளது
மேலும் மூன்று லட்சம் மக்கள் வரைபாதிக்க பட்டுள்ளனர் ,தற்ப்போது மெல்ல இயல்பு வாழ்விற்கு பிரிட்டன் நகர்ந்து
செல்கிறது ,எனினும் மக்கள் மத்தியில் பெரும் பீதி நிலவி வருகிறது குறிப்பிட தக்கது
பிரிட்டனிடனில் கடைக்குள் புகுந்த கார்- சிறுவன் பலி
பிரிட்டனிடனில் கடைக்குள் புகுந்த கார்- சிறுவன் பலி
கடந்த தினம் மதியம் இரண்டு மணியளவில் பிரிட்டன் Morningside Road in Edinburgh
பகுதியில் உள்ள வீதியோர கடை ஒன்றுக்குள் கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து கடைக்குள் புகுந்ததில் அவ்வேளை அங்கு நின்ற மூன்று வயது இசுறுவன் பலியானார் .
மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன
சாரதியின் அலட்சிய போக்கே மேற்படி விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

15 நாடுகளுக்கு எல்லையை திறந்துவிட ஐரோப்பிய யூனியன் முடிவு
15 நாடுகளுக்கு எல்லையை திறந்துவிட ஐரோப்பிய யூனியன் முடிவு
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ள நிலையில், சீனா உள்பட 15 நாடுகளுக்கு எல்லையை திறந்தவிட ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.
சீனா உள்பட 15 நாடுகளுக்கு எல்லையை திறந்துவிட ஐரோப்பிய யூனியன் முடிவு
எல்லையை திறந்து விட ஐரோப்பிய யூனியன் முடிவு
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஐரோப்பிய
நாடுகள், ஆசிய கண்டம், ஆப்பிரிக்க கண்டம், அமெரிக்க கண்டனம் என உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.
ஐரோப்பிய கண்டத்தில் இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரன்ஸ் நாடுகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. சுமார் மூன்று
மாதங்களுக்குப் பிறகு கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.
ஆனால் அமெரிக்காவில் இன்னும் குறையவில்லை. இந்தியாவில் தற்போதுதான் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாளையில்
இருந்து (ஜூலை 1-ந்தேதி) 15 நாடுகளுக்கு ஐரோப்பிய யூனியன் எல்லைகளை திறந்து விட முடிவு செய்துள்ளது. இந்த 15 நாடுகளில்
சீனா இடம் பிடித்துள்ளது. ஆனால் அமெரிக்கா நிராகரிக்கப்பட்டுள்ளது.
சூழ்நிலைக்கு ஏற்ப இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இது மாற்றியமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, உருகுவே, அல்ஜீரியா, ஜார்ஜியா, ஜப்பான், மொராக்கோ, ருவாண்டா,
செர்பியா, தென்கொரியா, தாய்லாந்து, துனிசியா, மொன்டெனெக்ரோ ஆகிய நாடுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியனில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதன் அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வெடித்து சிதறிய மருத்துவமனை 13 பேர் பலி
வெடித்து சிதறிய மருத்துவமனை 13 பேர் பலி
ஈரான்: மருத்துவமனையில் பயங்கர வெடி விபத்து – 13 பேர் பலி
ஈரானில் உள்ள மருத்துமனையில் ஆக்சிஜன் டாங்க் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஈரான்: மருத்துவமனையில் பயங்கர வெடி விபத்து – 13 பேர் பலி
வெடி விபத்து ஏற்பட்ட மருத்துவமனை
தெஹ்ரான்:
ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் தைரிஷ் சதுர்க்கம் என்ற பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் டாங்கில் ஏற்பட்ட கவு காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்
வெளியாகி வருகின்றன. இந்த வெடி விபத்து காரணமாக மருத்துவமனை முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிந்தது.
இந்த கோர சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் பலர் சிக்கி இருக்கக்கூடும் என்பதால் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கட்டிடத்திற்குள்
சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் டாங்கிகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் அவை தொடரந்து வெடித்து சிதறிய வண்ணம் உள்ளது.
இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

வெள்ளத்தில் மிதக்கும் இந்தியா – தவிக்கும் மக்கள்
வெள்ளத்தில் மிதக்கும் இந்தியா – தவிக்கும் மக்கள்
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அசாம், மேகாலயா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
விடுக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், அசாமில் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி நேற்று 4 பேர் பலியாகினர். இதையடுத்து, கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக பேரிடர் மீட்புக்குழுவினர் கூறுகையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 7 லட்சத்துக்கும் அதிகமான
பெரிய விலங்குகள், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறிய விலங்குகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
25 மாவட்டங்களை சேர்ந்த13 லட்சத்து 16 ஆயிரத்து 927 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். 273 நிவாரண முகாம்களில் 27 ஆயிரத்து 452 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்தனர்.

தெருவில் பாட்டு பாடி காய்கறி விற்கும் நடிகர்
தெருவில் பாட்டு பாடி காய்கறி விற்கும் நடிகர்
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையுலகம் முடங்கி இருப்பதால் பிரபல நடிகர் ஒருவர் தெருவில் பாட்டு பாடி காய்கறி விற்று வருகிறார்.
திரையுலகம் முடங்கியதால் தெருவில் பாட்டு பாடி காய்கறி விற்கும் நடிகர்
நடிகர் ஜாவேத் ஹைதர்
கொரோனா ஊரடங்கு வைரஸ் பிரபலங்கள், சாமானியர்கள் என்ற எந்தவித பாகுபாடில்லாமல் அனைத்து தரப்பினரின் இயல்பு
வாழ்க்கையைும் பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறாததால் அது சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் நடிகர்கள் சிலரும் வருமானம் இன்றி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர்
ஒருவர் தெருவில் காய்கறி விற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜாவேத் ஹைதர்
பாலிவுட் நடிகர் ஜாவேத் ஹைதர் தெருவில் பாடிப்பாடி காய்கறி விற்று வருகிறார். ஜாவேத் ஆமிர் கானின் ‘குலாம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் பல்வேறு
தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக தனது செலவுகளுக்கு காசில்லாமல் அவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்

மகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 5257 பேருக்கு பாதிப்பு
மகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 5257 பேருக்கு பாதிப்பு
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 5,257 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு
அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 69 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 5257 பேருக்கு பாதிப்பு
கொரோனா வைரஸ்
மும்பை:
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் ஐந்தாவது கட்டமாக ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. இங்கு
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 5 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்
கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில் 181 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7,610 ஆக
அதிகரித்துள்ளது. தற்போது 73 ஆயிரத்து 298 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிராவில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டுக்குள் புகுந்த வண்டி – நால்வர் பலி
வீட்டுக்குள் புகுந்த வண்டி – நால்வர் பலி
அவுஸ்ரேலியா Queensland பகுதியில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் நால்வர்பலியாகியுள்ளனர்
வேகமாக பயணித்த வண்டி ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்ததால் சம்பவ இடத்தில பலர் பலியாகினர்
குறித்த நாள் ஒன்றுக்குள் இதேபகுதியில் இவ்விதமான விபத்தில் சிக்கி நால்வர் பலியாகியுள்ளனர்
சாரதிகளின் அலட்சிய போக்கும் சாலை விதிகளை மீறி வேகமான கார் ஓட்டுதல் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

காருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்
காருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்
அமெரிக்கா northern Virginia பகுதியில் கார் ஒன்றுக்குள் 11 மாத சிசுவை பெண் ஒருவர் பூட்டி வைத்து விட்டு சென்று விட்டார்
இவர் மீள காருக்கு திரும்பி வர தாமதமானது
அவ்வேளை என்பது முதல் 90 செல்சியஸ் வெப்பம் நிலவியாதல் சிசு மூச்சு தினறி பலியாகியுள்ளது
அருகில் கார் ஒன்றை நிறுத்திய நபர் காரின் பின் ஆசனத்தில் சிசு ஒன்று
தனியாக உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தெரிவித்தார்
இவ்வேளை போலீசார் விரைந்து செயல் பட்டு சிசுவை காப்பாற்றிட முனைந்த பொழுதும் அது பயனளிக்கவில்லை
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
அமெரிக்காவில் துப்பாக்கி சண்டை -4 பேர் பலி – 2 பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கி சண்டை -4 பேர் பலி – 2 பேர் காயம்
அமெரிக்கா கலிபோனியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில்
நால்வர் பலியாகியுள்ளனர் .மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
வால்மார்ட் கடை பகுதியில் இடம்பெற்ற திடீர் துப்பாக்கி சூட்டின் பொழுதே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது
போலீசார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

பிரிட்டனில் கொரனோ நோயால் 130 பேர் பலி
பிரிட்டனில் கொரனோ நோயால் 130 பேர் பலி
பிரிட்டனில் பார்வை வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 130 பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் 43,514 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் ,310,250
பேர் இதுவரை பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து இந்த நோயானது வேகமாக பரவி வருகிறது ,எனினும் மக்கள்
இயல்பு வாழ்வு வழமைக்கு முற்று முழுதாக திரும்ப வில்லை என்பது குறிப்பிட தக்கது
காணாமல் போன வாலிபன் சடலமாக மீட்பு
சீனப் பொருட்களுக்கு தடை விதித்து தீர்மானம் போட்ட கிராமம்
சீனப் பொருட்களுக்கு தடை விதித்து தீர்மானம் போட்ட கிராமம்
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சீனப் பொருட்களுக்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீனப் பொருட்களுக்கு தடை விதித்து தீர்மானம் போட்ட கிராமம்
கடையில் கட்டப்பட்டுள்ள பேனர்
புனே:
இந்தியா – சீன ராணுவ வீரர்களுக்கிடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு அதிகாரி உள்பட
20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. சீனாவின் அத்துமீறலுக்கு
எதிராக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
குறிப்பாக, சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீனப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்
என்ற கோரிக்கை தீவிரமடைந்து வருகிறது. பலர் சீன பொருட்களை தவிர்க்கத் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள கோண்ட்வே-தவாடே கிராம பஞ்சாயத்தில், சீனப் பொருட்களுக்கு
தடைவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் சீனப் பொருட்களை விற்பனை செய்யவோ, வாங்கவோ
கூடாது என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து கடை உரிமையாளர்களுக்கும்
சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். சீனப் பொருட்களை அதிகாரப்பூர்வமாக தடை செய்த முதல் கிராமம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் நிதின் திவாதி கூறுகையில், ‘சீனப் பொருட்கள் மீதான தடை குறித்து கிராம பஞ்சாயத்து
ஒப்பந்தக்காரர்களுக்கும் தெரிவிக்கிறோம். இந்த விஷயங்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும். சீனப் பொருட்களின் விற்பனை
மற்றும் கொள்முதலை தடை செய்யுமாறு இங்குள்ள மக்களுக்கும் கடைகளுக்கும் தெரிவிக்க உள்ளோம். இதற்கான பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை ஒட்ட உள்ளோம்’ என்றார்.









