ரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்

Spread the love

ரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்

ரஷியாவின் அரசியலமைப்பில் திருத்தம் செய்யலாமா என்பது தொடர்பாக நடத்தப்பட்ட தேர்தலில் பெரும்பான்மையானோர்

ஆதரவு தெரிவித்துள்ளதால் விளாடிமிர் புதின் 2036 ஆம் ஆண்டுவரை அதிபராக செயல்பட முடியும்.

இனி எந்த தடையும் இல்லை – ரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்
புதின்

விளாடிமிர் புதின் 1999-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ரஷியாவின் அதிபராக பதவியேற்றார். அப்போது முதல் ரஷியாவின் அதிபர் அல்லது பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதேனும் ஒன்றில்

தன்னை நிலைநிறுத்திவந்த புதின் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்றார்.

இதனால் 2024-வரை ரஷியாவில் புதினின் ஆதிக்கம் இருக்கும். இந்த வெற்றியின் மூலம் தொடச்சியாக இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், ரஷியாவில் உள்ள சட்டத்தின்படி ஒரு நபர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.


இதனால், 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் புதின் போட்டியிட முடியாத சூழல் இருந்து வந்தது.

இந்த தடையை நீக்கும் விதமாக அதிபர் தேர்தலில் போட்டுயிடுவதற்கான சட்டத்தை புதுப்பிக்கும் விதமாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது.

அந்த மசோதாவின் படி, பழைய நடைமுறைகள் அழிக்கப்பட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான சட்டம் மீண்டும் முதலில் இருந்தே அமலுக்குவரும்.

அதாவது, ஏற்கனவெ தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் சட்டம் புதிக்கப்பட்டதால் மீண்டும் முதலில் இருந்தே அதிபர் தேர்தலில் போட்டியிடலாம்.

சுருக்கமாக கூற வேண்டுமானால் தற்போது அதிபராக உள்ள புதின் அடுத்துவரும் 2024-ம் ஆண்டு மற்றும் 2030-ம் ஆண்டு ஆகிய இரண்டு தேர்தல்களிலும் எந்தவித தடையும் இன்றி போட்டியிடலாம்.

இதையடுத்து, இந்த மசோதா தொடர்பாக அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யலாமா? என்பது குறித்து முடிவு செய்ய

பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பு தேர்தல் நடைமுறையில் நடைபெற்றது. மக்கள் தங்கள் கருத்துக்களை வாக்குகளாக அளித்தனர்.

இந்த தேர்தலில் 65 சதவிகித மக்கள் வாக்களித்ததாக ரஷிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பதிவான வாக்குகள் அனைத்தும்

நேற்று எண்ணப்பட்டன. அதில் 77 சதவிகித வாக்காளர்கள் அரசியல் அமைப்பில் திருத்தம் செய்ய ஆதரவு, 23 சதவிகித மக்கள்

சட்டத்திருத்திற்கு எதிராகவும் வாக்களித்துள்ளதாக ரஷிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நிலவி வந்த அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.

அதாவது ஏற்கனவே தொடர்ந்து 2 முறை நாட்டின் அதிபராக இருந்த நபர் மேலும் இரண்டு அதிபர் தேர்தல்களில் பங்கேற்கலாம்.

ஆகையால், தற்போது ரஷியாவின் அதிபராக உள்ள புதின் 2024 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளில் நடைபெறும் இரண்டு அதிபர் தேர்தல்களிலும் அவர் பங்கேற்கலாம்.

அந்த தேர்தல்களில் வெற்றிபெறும் பட்சத்தில் 2036-ம் ஆண்டுவரை அதாவது தனது 83 வயது வரை ரஷியாவின் அதிபராக விளாடிமிர் புதின் செயல்படுவதில் இனி எந்த சட்ட சிக்கலும் இல்லை.

இதற்கிடையில் விளாடிமிர் புதின் தனது வாழ்நாள் முழுவதும் அதிபராக இருக்க எல்லா வேலைகளையும் செய்துவருவதாக ரஷிய எதிர்க்கட்சி தலைவரான அலெஸ்சி நவல்னி குற்றச்சாட்டியுள்ளார்.

      Leave a Reply