15 நாடுகளுக்கு எல்லையை திறந்துவிட ஐரோப்பிய யூனியன் முடிவு

Spread the love

15 நாடுகளுக்கு எல்லையை திறந்துவிட ஐரோப்பிய யூனியன் முடிவு

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ள நிலையில், சீனா உள்பட 15 நாடுகளுக்கு எல்லையை திறந்தவிட ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.

சீனா உள்பட 15 நாடுகளுக்கு எல்லையை திறந்துவிட ஐரோப்பிய யூனியன் முடிவு


எல்லையை திறந்து விட ஐரோப்பிய யூனியன் முடிவு
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஐரோப்பிய

நாடுகள், ஆசிய கண்டம், ஆப்பிரிக்க கண்டம், அமெரிக்க கண்டனம் என உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.

ஐரோப்பிய கண்டத்தில் இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரன்ஸ் நாடுகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. சுமார் மூன்று

மாதங்களுக்குப் பிறகு கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.

ஆனால் அமெரிக்காவில் இன்னும் குறையவில்லை. இந்தியாவில் தற்போதுதான் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாளையில்

இருந்து (ஜூலை 1-ந்தேதி) 15 நாடுகளுக்கு ஐரோப்பிய யூனியன் எல்லைகளை திறந்து விட முடிவு செய்துள்ளது. இந்த 15 நாடுகளில்

சீனா இடம் பிடித்துள்ளது. ஆனால் அமெரிக்கா நிராகரிக்கப்பட்டுள்ளது.

சூழ்நிலைக்கு ஏற்ப இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இது மாற்றியமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, உருகுவே, அல்ஜீரியா, ஜார்ஜியா, ஜப்பான், மொராக்கோ, ருவாண்டா,

செர்பியா, தென்கொரியா, தாய்லாந்து, துனிசியா, மொன்டெனெக்ரோ ஆகிய நாடுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியனில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதன் அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

      Leave a Reply