Posted in உலக செய்திகள்

பிரான்சில் பேரூந்து சாரதி அடித்து கொலை – மக்கள் கொதிப்பு

பிரான்சில் பேரூந்து சாரதி அடித்து கொலை – மக்கள் கொதிப்பு

மக்கள் பயணிகள் பேரூந்து சாரதியாக பணியாற்றி வந்த 59 வயதுடைய சாரதி ஒருவர் பயணிகளிடம் முக கவசம் அணியும் படி கோரியுளளார்

அதற்கு மறுத்த பயணி அவரை சரமாரியாக திடீரென தாக்கினார்

இதில் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் பலியானார்


இதனை அடுத்து இவரது இந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்,இப்படியும் பயணிகள் இருக்கத்தான் செய்கின்றனர்

பிரான்சில் பேரூந்து சாரதி
பிரான்சில் பேரூந்து சாரதி
      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      கொலண்ட் Amsterdam-London க்கு நேரடி ரயில் சேவை ஆரம்பம்

      கொலண்ட் Amsterdam-London க்கு நேரடி ரயில் சேவை ஆரம்பம்,Amsterdam-London க்கு நேரடி ஈரோ ஸ்டார் ரயில் சேவை இந்த வருடம் முதல் நேரடியாக ஆரம்பிக்க படவுள்ளது

      இதற்கான ஒப்பந்தத்தில் பிரிட்டன் நெதர்லாந்து அரசுகள் கைச்சாத்திட்டுள்ளன

      விரைவில் பிரான்ஸ் லண்டன் சேவைகள் போல இந்த சேவைகள் இடம்பெறவுள்ளன

      இவ்விதம் ரயில் சேவைகள் ஆரம்பிப்பதல் அதிக உல்லாச பயணிகள் விரைவாக வந்து செல்ல இலகுவாக இருக்கும் என கருத்துரைக்க பட்டுள்ளது

      லண்டன் ,நெதர்லாந்து மக்களுக்கு இது மிக பெரும் மகிழ்ச்சியான செய்தியாகும்

      கொலண்ட் Amsterdam-London
      கொலண்ட் Amsterdam-London
          Posted in உலக செய்திகள் சினிமா

          இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை…. திரையுலகினர் அதிர்ச்சி

          இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை…. திரையுலகினர் அதிர்ச்சி

          மண்டியா அருகே நடிகர் சு‌ஷில்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

          32 வயது இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை…. திரையுலகினர் அதிர்ச்சி
          சு‌ஷில்குமார்


          கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சு‌ஷில்குமார்(வயது 32). இவர் கன்னடத்தில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர்.

          இவர் சலகா என்ற கன்னட படத்தில் நடித்து உள்ளார். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. மேலும் பெங்களூருவில் ஒரு

          உடற்பயிற்சி கூடத்தில் சு‌ஷில்குமார் பணியாற்றி வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால்

          மண்டியா டவுனில் உள்ள தனது வீட்டில் சு‌ஷில்குமார், குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

          இந்த நிலையில் நேற்று மண்டியா புறநகர் இந்துவாலு பகுதியில் உள்ள தனது நண்பரின் பண்ணை வீட்டிற்கு சு‌ஷில்குமார் சென்று

          இருந்தார். அங்கு ஒரு அறையில் திடீரென சு‌ஷில்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து

          அதிர்ச்சி அடைந்த நண்பர் உடனடியாக மண்டியா புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

          சு‌ஷில்குமார்

          கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் வருமானம் குறைந்து சு‌ஷில்குமார் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். ஆனாலும் அவர்

          தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து மண்டியா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

          கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட பிரபல நடிகர் சிரஞ்சீவி சர்ஜா உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், வளர்ந்து வரும்

          கன்னட நடிகரான சு‌ஷில்குமார் தற்கொலை செய்து கொண்டது கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

          இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை…. திரையுலகினர் அதிர்ச்சி
          இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை…. திரையுலகினர் அதிர்ச்சி
              Posted in உலக செய்திகள்

              டெல்லியை துரத்தும் கொரோனா: 3200-பேர் பலி

              டெல்லியை துரத்தும் கொரோனா: 3200-பேர் பலி

              டெல்லியில் ஒரே நாளில் 2,033 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.04 லட்சத்தைக் கடந்துள்ளது.

              டெல்லியை துரத்தும் கொரோனா: 3200-ஐ தாண்டியது பலி எண்ணிக்கை
              வெப்ப நிலையை பரிசோதிக்கும் ஊழியர்
              புதுடெல்லி:

              சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

              இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

              நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.20 லட்சத்தை தாண்டியுள்ளது.

              இந்நிலையில், தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2,033 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,04,864 ஆக

              அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 48 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,213 ஆக உயர்ந்துள்ளது.

              மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்தைக் கடந்துள்ளது என டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  லண்டனில் வீட்டின் மேலே வீழ்ந்த கிறையின் -ஒருவர் பலி -4 பேர் காயம்

                  லண்டனில் வீட்டின் மேலே வீழ்ந்த கிறையின் -ஒருவர் பலி -4 பேர் காயம்

                  இன்று கிழக்கு லண்டன் பகுதியில் மதியம் இரண்டு முப்பது மணியளவில்

                  வீட்டின் கூரைகள் இடிந்து வீழ்ந்தன ,பதறி போன வீட்டு காரர்கள் ஒடி சென்று

                  காடின் வழியாக பார்வை இட்டனர் ,அப்பொழுது சிவப்பு நிறத்திலான கிரேன் ஒன்று வீட்டின் மேலே வீழ்ந்துள்ளது கண்டு பிடிக்க பட்டது

                  இந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் .

                  மேலும் நல்லவர் பாடுகாயமடைந்தனர்

                  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்புலனஸ் காயமடைந்தவர்களை மீட்டு சென்றது


                  மீட்பு படையினர் கிரையினை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்

                  மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                      Posted in உலக செய்திகள்

                      முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா

                      முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா

                      சமூக விலகல், முகக்கவசம் தேவையில்லை என்று கூறி வந்த பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

                      முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி
                      பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ


                      பிரேசில் நாட்டு அதிபராக இருப்பவர் ஜெய்ர் போல்சோனாரோ. கொரோனா வைரசால் உலகமே அச்சத்தில் இருக்கும் போது மக்கள் சமூக விலகல், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரசாரம் செய்தவர்.

                      மக்கள் லாக்டவுனில் வீட்டுக்குள் முடங்கி இருந்தால், கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பு பொருளாதார முடக்கத்தால் ஏற்படும். மக்கள் வெளியே வந்து சுதந்திரமாக

                      பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என தொடர்ந்து போல்சனாரோ பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அதிபர்

                      போல்சனாரோவும் வெளியே சென்றால் முகக்கவசத்தை அணிவதில்லை. நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததால் தற்போது முகக்கவசம் அணிகிறார்.

                      பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ

                      இந்நிலையில் போல்சோனாரோ கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டது. மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார்.

                      வெளியில் வரும்போது என்னுடைய நுரையீரல் சுத்தமாக உள்ளது என்று கூறினார்.

                      இந்நிலையில் கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு பாசிட்டிவ் என வந்துள்ளது. என்றாலும் அவருக்கு லேசான அறிகுறி

                      மட்டுமே இருப்பதாகவும், அவர் சிறப்பாக இருப்பதாக உணர்வதாகவும் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

                      இவரின் மோசமான கொள்கையால் பிரேசில் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறது

                      முகக்கவசம் அணிய
                      முகக்கவசம் அணிய
                          Posted in உலக செய்திகள் முக்கிய செய்திகள்

                          வெளிநாட்டில் இருந்து வந்து வாலிபரை – கைகால்களை கட்டி தூக்கிச் சென்ற சுகாதாரத்துறை

                          வெளிநாட்டில் இருந்து வந்து வாலிபரை – கைகால்களை கட்டி தூக்கிச் சென்ற சுகாதாரத்துறை

                          வெளிநாட்டில் இருந்து வந்து ஜாலியாக ஊர் சுற்றிய வாலிபர்: கைகால்களை கட்டி தூக்கிச் சென்ற சுகாதாரத்துறை

                          முகக்கவசத்தை முறையாக அணியாமல் சாலையில் சுற்றித்திரிந்த நபரை சுகாதாரத்துறையினர் கட்டி ஆம்புலன்ஸில் தூக்கிச்சென்ற சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

                          வெளிநாட்டில் இருந்து வந்து ஜாலியாக ஊர் சுற்றிய வாலிபர்: கைகால்களை கட்டி தூக்கிச் சென்ற சுகாதாரத்துறை


                          விதிமுறை மீறிய நபரை தூக்கிச் செல்லும் சுகாதாரத்துறை ஊழியர்கள்


                          கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு முடக்கத்திற்குப் பின்னர் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனா

                          காலத்தில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகள் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

                          இந்நிலையில், நேற்று கேரள மாநிலம் பத்தனம்திட்டா புனித பீட்டர்ஸ் சந்திப்பு பகுதியில் ஒருவர் முகக் கவசத்தை முழுமையாக

                          அணியாமல் சுற்றிதிரிவதாகவும், சொன்னாலும் அவர் கேட்க மறுப்பதாகவும் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

                          சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 43 வயதுடைய அந்த நபர் கடந்த 4 நாட்களுக்கு முன் குவைத்தில்

                          இருந்து வந்தது தெரியவந்தது. அத்துடன் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் விதிகளை மீறி முகக்கவசம் அணியாமல் திரிந்தது அறியப்பட்டது.

                          இதையடுத்து போலீஸார் கொடுத்த தகவலின்படி கவச உடையுடன் வந்த சுகாதாரத்துறையினர், தப்பிக்க முயன்ற அந்த நபரை விரட்டிப்பிடித்து கைகால்களை கட்டி ஆம்புலன்சில் ஏற்றிக்

                          கொண்டு சென்றனர். தற்போது அந்த நபர் எர்ணாகுளம் கோளஞ்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்

                          தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர்மீது பத்தனம்திட்டா போலீஸார் கொரோனா ஒழிப்பு தனிமைப்படுத்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

                          வெளிநாட்டில் இருந்து
                          வெளிநாட்டில் இருந்து
                              Posted in உலக செய்திகள்

                              சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- வழக்கை விசாரணைக்கு ஏற்றது சி.பி.ஐ.

                              சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- வழக்கை விசாரணைக்கு ஏற்றது சி.பி.ஐ.

                              சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட தந்தை, மகன் மரணம் குறித்த வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

                              சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- வழக்கை விசாரணைக்கு ஏற்றது சி.பி.ஐ.

                              சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை

                              ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ மூலம் விசாரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.

                              சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி

                              விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, இதுவரை 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

                              இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்த ஒப்புதல்

                              அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

                              இந்த வழக்கை சிபிஐ ஏற்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். முதலமைச்சரின்

                              கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

                                  Posted in உலக செய்திகள்

                                  ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது

                                  ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது

                                  குஜராத்தில் பெண்ணை மானபங்கம் செய்த வழக்கு தொடர்பாக ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் சுவேதா சடேஜாவை போலீசார் கைது செய்தனர்

                                  குஜராத்தில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது
                                  லஞ்சம்

                                  குஜராத்தின் மேற்கு ஆமதாபாத் மகளிர் காவல்நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் சுவேதா சடேஜா. அதே பகுதியை

                                  சேர்ந்த தொழில் அதிபர் கேனல் ‌ஷா என்பவர் ஒரு பெண்ணை மானபங்கம் செய்ததாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

                                  வழக்கை விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர் சுவேதா சடேஜா, வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க தொழில் அதிபரிடம் ரூ.35 லட்சம்

                                  லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர், தரகர் மூலமாக முதல்கட்டமாக ரூ.20 லட்சத்தை சப்-இன்ஸ்பெக்டரிடம்

                                  லஞ்சமாக கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் மீதி ரூ.15 லட்சம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

                                  இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு போலீசார், ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் சுவேதா சடேஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்

                                      Posted in உலக செய்திகள்

                                      எம்.பி.யும் நடிகையுமான சுமலதாவுக்கு கொரோனா

                                      எம்.பி.யும் நடிகையுமான சுமலதாவுக்கு கொரோனா

                                      மாண்டியா தொகுதியின் எம்.பி.யும், நடிகையுமான சுமலதாவுக்குக்

                                      கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

                                      எம்.பி.யும் நடிகையுமான சுமலதாவுக்கு கொரோனா
                                      நடிகை சுமலதா
                                      பெங்களூரு:

                                      கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதி எம்.பி. ஆன சுமலதா, முன்னாள்

                                      நடிகையும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் நடித்துள்ளார்.

                                      இதற்கிடையே, மாண்டியா தொகுதியில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் பணிபுரிந்து வந்தார் சுமலதா.

                                      இந்நிலையில், முன்னாள் நடிகையும், எம்.பி.யுமான சுமலதா, தனக்குக்

                                      கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, வீட்டுத் தனிமையில் உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

                                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                          பிரிட்டனில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு 750 பவுண்டு பணம் இலவசம் – குஷியில் மக்கள்

                                          பிரிட்டனில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு 750 பவுண்டு பணம் இலவசம் – குஷியில் மக்கள்

                                          பிரிட்டனில் கொரனோ பாதிப்பை அடுத்து தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது

                                          இவ்விதம் பெரியவர்களுக்கு தலா 500 பவுண்டுகள் மற்றும் சிறுவர்களுக்கு

                                          தலா 250 பவுண்டுகள் விகிதம் ஒவ்வொருவருக்கும் பெற்று கொள்ளும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவுள்ளது

                                          New proposals could see all adults receive £500 and children £250 to use in the most badly impacted sectors of the economy

                                          இதற்கான நிதி நிலை கொள்கை வகுப்பு நிபுணர்கள் பரிந்துரையின் கீழ் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவிடவும்

                                          ,மேலும் வீழ்ந்து போன பொருளாதரத்தை மீள நிமிர்த்தி செல்லும் நோக்குட அரசு இந்த பணத்தினை வழங்கவுள்ளது

                                          இதற்கான திட்டங்கள் நிறைவடைந்ததும் மக்களுக்கு பவுச்சர் வழங்க

                                          படும் அதனை வைத்து கடைகளில் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்திட முடியும்

                                          ஐம்பதாயிரம் வியாபர கடன் வழங்கியது போன்று இவை இலவசமாக

                                          வழங்க படவுள்ளது ,ஆளும் அரசின் இந்த திட்ட அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுளளது

                                          ஐரோப்பிய விசாவுடன் இந்த நாடுகளில் வசிப்பவர்களுக்கு இது வழங்க படமாட்டாது என தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது குறிப்பிட

                                          தக்கது , பிரிதனியர்க்ளுக்கு மட்டும் என அதில் தெரிவிக்க பட்டுள்ளது ,அதன் பொருள் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்களாகும்

                                          ,அபுற்றம் என்ன குஷி தான் ,இந்த செய்தியை நண்பர்களுக்கு பகிர்ந்து தெரிய படுத்துங்கள்

                                          இது எப்படி சாத்தியம் என எண்ணுகிண்றீர்களா ..? இதோ அதற்கான விரிவாக்கம் ,அதாவது ஐநூறு பவுண்டுகள் என்றால் வியாபார

                                          நிலையங்களில் வணிகம் நடக்கும் அதற்கு அவர்கள் இருநூறு பவுண்டு வரி செலுத்த வேண்டும் ,அப்டி என்றால் குடுப்பது போன்று குடுத்து ,மறு பக்கத்தால் எடுப்பதாகும் .

                                          அரசியல் வியாபாரம் என்பது இதைத்தான் ,எது எப்படியோ பணம் வருகிறது அல்லவா

                                              Posted in உலக செய்திகள்

                                              டிரம்பின் பிரசார குழு அதிகாரிக்கு கொரோனா

                                              டிரம்பின் பிரசார குழு அதிகாரிக்கு கொரோனா

                                              ஜனாதிபதி டிரம்பின் பிரசார குழுவில் முக்கிய பங்காற்றி வரும் கிம்பெர்லி கில்போயில் என்ற அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

                                              டிரம்பின் பிரசார குழு அதிகாரிக்கு கொரோனா தொற்று
                                              டிரம்ப், பிரசார குழு அதிகாரி கிம்பெர்லி கில்போயில்
                                              வாஷிங்டன்:

                                              கொரோனா வைரஸ் பாதிப்பில் உலகளவில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

                                              அங்கு நேற்று மதியம் நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்தை நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 32 ஆயிரத்தை கடந்துள்ளது.

                                              இதனிடையே அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் திட்டமிட்டபடியே ஜனாதிபதி தேர்தலை நடத்த முடிவு

                                              செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற நவம்பர் மாதம் அங்கு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது.

                                              இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடும் நிலையில் ஜனநாயக கட்சி சார்பில்

                                              முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் இறங்கி இருக்கிறார்.

                                              கொரோனா பாதிப்பு ஒருபுறம் இருக்க தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி டிரம்பின்

                                              பிரசார குழுவில் முக்கிய பங்காற்றி வரும் கிம்பெர்லி கில்போயில் என்ற அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                              இவர் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்துக்காக ஜனாதிபதி டிரம்புடன் தெற்கு டகோட்டா மாகாணத்துக்கு சென்று வந்த

                                              நிலையில் அவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி டிரம்புக்கும் வைரஸ் தொற்று பரவியிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

                                                  Posted in உலக செய்திகள்

                                                  தமிழகத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்த கொரனோ வைரஸ் நோயாளர்கள்

                                                  தமிழகத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்த கொரனோ வைரஸ் நோயாளர்கள்

                                                  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்தது. மாவட்ட வாரியாக முழு விவரத்தை காண்போம்.

                                                  தமிழகத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக விவரம்
                                                  கோப்பு படம்
                                                  சென்னை:

                                                  தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 150 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                                  இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது.

                                                  இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம்.

                                                  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

                                                  மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 62 ஆயிரத்து 778 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

                                                  ஆனாலும், கொரோனா தமிழகத்தில் இதுவரை 1,510 பேர் உயிரிழந்துள்ளனர்.

                                                  மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

                                                  அரியலூர் – 468
                                                  செங்கல்பட்டு – 6,633
                                                  சென்னை – 68,254
                                                  கோவை – 741
                                                  கடலூர் – 1,257
                                                  தர்மபுரி – 121
                                                  திண்டுக்கல் – 704
                                                  ஈரோடு – 248
                                                  கள்ளக்குறிச்சி – 1,205
                                                  காஞ்சிபுரம் – 2,547
                                                  கன்னியாகுமரி – 560
                                                  கரூர் – 166
                                                  கிருஷ்ணகிரி – 185
                                                  மதுரை – 4,085
                                                  நாகை – 285
                                                  நாமக்கல் – 109
                                                  நீலகிரி – 124
                                                  பெரம்பலூர் – 168
                                                  புதுக்கோட்டை – 350
                                                  ராமநாதபுரம் – 1,385
                                                  ராணிப்பேட்டை – 1,148
                                                  சேலம் – 1,247
                                                  சிவகங்கை – 512
                                                  தென்காசி – 448
                                                  தஞ்சாவூர் – 496
                                                  தேனி – 1,009
                                                  திருப்பத்தூர் – 259
                                                  திருவள்ளூர் – 4,806
                                                  திருவண்ணாமலை – 2,497
                                                  திருவாரூர் – 539
                                                  தூத்துக்குடி – 1,162
                                                  திருநெல்வேலி – 1,030
                                                  திருப்பூர் – 204
                                                  திருச்சி – 972
                                                  வேலூர் – 1,932
                                                  விழுப்புரம் – 1,186
                                                  விருதுநகர் – 895
                                                  விமானநிலைய கண்காணிப்பு
                                                  வெளிநாடு – 432
                                                  உள்நாட்டு – 366
                                                  ரெயில் நிலைய கண்காணிப்பு – 416

                                                  மொத்தம் – 1,11,151

                                                      Posted in உலக செய்திகள்

                                                      மக்களுக்குள் புகுந்த கார் இருவர் பலி – பலர் காயம்

                                                      மக்களுக்குள் புகுந்த கார் இருவர் பலி – பலர் காயம்

                                                      அமெரிக்காவில் அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்குள் வேகமாக வந்த யாக்குவார் கார் ஒன்று புகுந்துள்ளது .


                                                      இதன் பொழுது இருவர் பலியாகினர் மேலும் இருவர் படு காயமடைந்துள்ளனர் ,இந்த குற்ற செயலை புரிந்த சாரதி

                                                      காவல்துறையினரால் கைது செய்ய ப்பட்டுள்ளார் ,இது திட்டமிடப்பட்டு மேற்கொள்ள பட்ட படுகொலை தாக்குதல் என தெரிவிக்க படுகிறது

                                                      கோபத்தில் உறைந்த மக்கள் கார் மீது தாக்குதலை நடத்தினர் ,ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டவர்கள் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்

                                                      போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

                                                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                          வடக்கு லண்டனில் ஒருவர் சுட்டுக்கொலை

                                                          வடக்கு லண்டனில் ஒருவர் சுட்டுக்கொலை

                                                          கடந்த சனிக்கிழமை மதியம் 3,20 மணியளவில் children’s play park in

                                                          London பகுதியில் நபர் ஒருவர் சுட்டு படுகொலை
                                                          செய்ய பட்டுளளார்

                                                          பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிய நபர் சம்பவ இடத்திலே துடி துடித்து பலியானார் .

                                                          இந்த சுட்டு சம்பவத்திற்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை ,

                                                          காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                                                          தற்போது பிரிட்டனில் குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றன ,குற்றங்களை தடுப்பதற்கு போலீசார்


                                                          அதி தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்ற பொழுதும் மேற்படி சம்பவங்களை தடுக்க முடியாது

                                                          பொலிசார் தினறி வருவதை மேற்படி சம்பவங்கள் காண்பிக்கிறது குறிப்பிட தக்கது

                                                              Posted in உலக செய்திகள்

                                                              சிரியாவில் அரச இராணுவ தாக்குதல் 40 கிளர்ச்சி படைகள் பலி

                                                              சிரியாவில் அரச இராணுவ தாக்குதல் 40 கிளர்ச்சி படைகள் பலி

                                                              சிரியாவில் அரச இராணுவத்தினரின் தாக்குதலில் சிக்கி கிளர்ச்சி படையை சேர்ந்த நாப்பது பேர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                                                              இவ்வாறு படுகொலை செய்ய பட்டவர்கள் மீது சிரியா இராணுவத்தினர் அகோர தாக்குதலை நடத்தினர்

                                                              அதன் தாக்குதல் எதிரொலியே இந்த இழப்பு என தெரிவிக்க பட்டுள்ளது

                                                              இட்லி பகுதியில் துருக்கிய ஆதரவு கிளர்ச்சி படைகளுக்கும் ரசியா ஆதரவுடன் போராடி வரும் சிரியா அரச இராணுவத்திற்கும் இடையில் பலத்த மோதல்கள் வெடித்து பறப்பது குறிப்பிட தக்கது

                                                              சிரியாவில் அரச
                                                              சிரியாவில் அரச
                                                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                  பிரிட்டன் மக்களே யாக்கிரதை overdraft வங்கி கட்டணம் இரட்டிப்பாக அதிகரிப்பு

                                                                  பிரிட்டன் மக்களே யாக்கிரதை overdraft வங்கி கட்டணம் இரட்டிப்பாக அதிகரிப்பு

                                                                  பிரிட்டனில் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வியாழக்கிழமை முதல் வங்கிகள்

                                                                  வழங்கி வரும் ஓவர்டிராப் overdraft கடன் உதவி கட்டண தொகை

                                                                  இரட்டிப்பாக அதிகரிக்கிறது

                                                                  தற்போது நபர் ஒருவருக்கு ஐநூறு பவுண்டுகள் வழங்கிட அனுமதி வழங்க

                                                                  பட்டுள்ளது ,ஆனால் அதன் கட்டண வட்டி தொகை இரட்டிப்பாக அதிகரிக்க படுகிறது

                                                                  தேவையற்று பணத்தை பெற்று கொள்ளும் மக்களே யாக்கிரதை மாத

                                                                  இறுதியில் உங்களுக்கு பெரும் சுமை காத்துள்ளது ,தப்பித்து கொள்ளுங்கள் ,விழித்து கொள்ளுங்கள்

                                                                  Changes to overdraft charges are being brought in next week – so people with overdrafts are being urged to take action.

                                                                  From next Thursday, July 9, banks will start to double their charges

                                                                  பிரிட்டன் மக்களே
                                                                  பிரிட்டன் மக்களே
                                                                      Posted in உலக செய்திகள்

                                                                      பாரிய நில நடுக்கம் – குலுங்கிய வீடுகள்

                                                                      பாரிய நில நடுக்கம் – குலுங்கிய வீடுகள்

                                                                      Puerto Rico ,-5.3 hit just southwest பகுதியில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது

                                                                      ,இதனால் அவ்வேளை வீடுகள் ,கட்டடங்கள் என்பன குலுங்கின இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

                                                                      இதுவரை எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என முதல் கட்ட தகவல்கள்

                                                                      தெரிவிக்கின்றன ,எனினும் முழுமையான சேத விபரங்கள் வெளியாகவில்லை

                                                                          Posted in உலக செய்திகள்

                                                                          கனடாவில் ஆற்றுக்குள் வீழ்ந்து நொறுங்கிய விமானம் – மூவர் பலி

                                                                          கனடாவில் ஆற்றுக்குள் வீழ்ந்து நொறுங்கிய விமானம் – மூவர் பலி

                                                                          கனடாவில் இலகுரக விமானம் ஒன்று plane crash south of Edmonton. பகுதியில்

                                                                          உள்ள நீர் ஏரியில் வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுதும் அதில் பயணித்த மூவர் பலியாகினர்

                                                                          மேற்படி விமான விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது


                                                                          நீர் ஏரியில் மூழ்கிய விமானத்தில் இருந்து சடலங்கள் மீட்க பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                                                                          கனடாவில் ஆற்றுக்குள்
                                                                          கனடாவில் ஆற்றுக்குள்
                                                                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                              இன்றில் இருந்து பிரிட்டனில் சாராய கடைகள் ,திறக்க அனுமதி -குஷியில் குடி மகன்கள்

                                                                              இன்றில் இருந்து பிரிட்டனில் சாராய கடைகள் ,திறக்க அனுமதி -குஷியில் குடி மகன்கள்

                                                                              பிரிட்டனில் இன்றில் இருந்து இரவு வரை ,விடிய விடிய சாராய கடைகள் ,

                                                                              பார்கள்,நைட் கிளப்புக்கள் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது

                                                                              ,அதாவது மீள இயல்பு வாழ்வுக்கு பிரிட்டன் இயங்கிட அனுமதி வழங்க பட்டுள்ளது

                                                                              இதனால் குடி மகன்கள் ரெம்பவே குஷியில் உள்ளனர் ,டாக்சி ,மற்றும் உணவகங்கள் என்பனவும் குஷியில் உள்ளன

                                                                              கொரனோ வைரஸ் நிலவியதின் பின்னர் இந்த உத்தரவு கிடைத்து இருப்பது

                                                                              மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,எனினும் தொடர்ந்து

                                                                              கொரனோ நோயினால் மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

                                                                              இன்றில் இருந்து
                                                                              இன்றில் இருந்து