Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
துருக்கி இராணுவ முகாம் மீது தாக்குதல்
துருக்கி இராணுவ முகாம் மீது தாக்குதல்
ஈராக் மொசூல் பகுதியில் அமைந்துள்ள துருக்கிய நாட்டின் Zelikan Base இராணுவ முகாம் மீது ஏவுகணை மற்றும் ஆட்டிலறி தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன .
இந்த தாக்குதலில் துருக்கி இராணுவ முகமாக பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.
குறித்த முகாம் பத்து நாட்களுக்கு இரண்டாவது முறையாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது .
குருதீஸ் போராளிகள் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது துருக்கிய இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
அதற்கு பதிலடி தாக்குதலாக குருதீஸ் போராளிகள் துருக்கிய முகாம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது.
கனடாவில் அதிசய யானை கண்டுபிடிப்பு
கனடாவில் அதிசய யானை கண்டுபிடிப்பு
கனடா நாட்டில் ஆதிகாலத்து அதிசய யானை குட்டி ஒன்று கண்டுபிடிக்க பட்டுள்ளது .
இந்த யானை குட்டி தற்கால யானைகளை விட ஆதிகாலத்தில் காடுகளில் அதிகமாக வாழ்ந்து வந்தவை இவை தற்பொழுது அழிந்து போயுள்ளன.
அவ்வாறான யானை குட்டி ஒன்றின் சடலாமே தற்போது மீட்க பட்டுள்ளது
மீட்க பட்ட யானை குட்டி தொடர்ந்து ஆய்வுகளுக்கு உள்ளாக்க பட்டு வருகிறது.
உக்கிரேன் இலங்கை போல நாறுமா – 6 பில்லியன் கடனுதவி
உக்கிரேன் இலங்கை போல நாறுமா – 6 பில்லியன் கடனுதவி
உக்கிரேன் – ரசியா இராணுவம் உக்கிரேன் மீது தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது .ரசியாவின் தாக்குதலில் உக்கிரேன் உள் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது. இவ்வேளை உக்கிரேனுக்கு 6 பில்லியன் கடனுதவி வழங்க பட்டுள்ளது.
அவசர நிதி உதவியாக ஆறு பில்லியன் யூரோக்கள் கடனாக வழங்க பட்டுள்ளது .
இந்த கடனுதவி மிக குறுகிய காலத்தின் தேவைக்கு ஏற்ப குறைந்த வட்டியுடன் வழங்க பட்டுள்ளது என உதவி புரிந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
உக்கிரேன் அருகில் உள்ள ஜெர்மன் நாடானது ஒரு பில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது .
இலங்கை பாகிஸ்தானுக்கு சீனா எப்படி பெரும் தொகையில் பணத்தை கடனுதவி வழங்கி அந்த நாடுகளை வறுமை நாட்டு பட்டியல் இணைத்ததோ, அதே போன்ற செயல் பாடு உக்கிரேனில் இடம்பெறுகிறது.
பணத்தை அவசரமாக அள்ளி வழங்கும் நாடுகளுக்கு இந்த கடனுதவி பணம் மீள வளங்கபடுமா என்பதை சிந்திக்க வேண்டும் .
இவ்வாறு மாற்றி யோயுங்கள் -உக்கிரேன் முழுவதுமாக ரசியாவின் கட்டு பாட்டில் சென்றால் ஆயுதங்களை ,பணத்திற்காக கடனுதவி வழங்கிய நாடுகளுக்கு அந்த பணம் யார் கொடுப்பது..?
உக்கிரேன் நாடானது ராசியாவின் ஆளுகைக்குள் சென்று விடும் .அப்படி சென்றால் இந்த ஐரோப்பா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஏன் உக்கிரேனின் இத்தனை மில்லியன் பணத்தை கடனுதவியாக கொடுக்கின்றன.
புரிந்துள்ளதா மக்களே தமது நாட்டை காப்பாற்ற அவசர கடனுதவி என்ற போர்வையில் வெள்ளம் வரும் முன் அணையை கட்டுவது போன்ற செயல் பாட்டு சமாச்சாரம் இங்கே கச்சிதமாக நடக்கிறது.
உக்கிரேன் இலங்கை போல நாறுமா – 6 பில்லியன் கடனுதவி
உக்கிரேன் போரில் தமது ஆயுதங்கள் மூலமே உக்கிரேன் நாடு உயிர் வாழ்கிறது என்கின்ற நிலையில்,
இந்த நாடுகள் இத்தனை பில்லியன் பணத்தை கடனடிப்படையில் வழங்குகின்றன என்றால் அதற்க்கு காரணம் இது தான் மக்களே .
ரசியா இதுவரை சோவியத் தயாரிப்பு ஏவுகணைகளையே அதிகமாக பயன் படுத்தி வருகிறது .
அப்படி நோக்கின் தனது பழைய சேமிப்புக்களை இப்பொழுது உக்கிரேன் களத்தில் வீசி முடிக்கிறதா என்ற கேள்வி அல்லாவா எழுகிறது.
உக்கிரேனில் ரசியாவை ஆழம் பார்க்க முனைந்த அமெரிக்கா பிரிட்டன் நேட்டோ நாடுகளுக்கு ரசியா விளையாடடு காட்டிய வண்ணம் நாளை கடத்துகிறது.
இந்த நாள் கடத்தல் எது வரை என்பது தான் கேள்வியாகிறது .அப்படி என்றால் ரசியா ஜனாதிபதி புட்டீன் திடீர் பாய்ச்சல் ஒன்றை வேறு திசையில் வேறுமாதிரி நடத்த திட்டம் போட்டு விட்டார் என்பதை இது காண்பிக்கிறது.
அப்படி என்றால் விரைவில் வேட்டை நடக்க போகிறது .அந்த வேட்டையில் முண்டு கொடுத்து நகரும் நாடுகளின் முதுகில் ஏறி ஆடும் உக்கிரேன் வீழ்ந்து
சிதறும் நிலையே உருவாக போகிறது என்பது களத்தில் இருந்து வெளியாகும் செய்திகள் வாயிலாக ஊகிக்க முடிகிறது.
உள்ளே நடக்கிறது பெரும் விளையாட்டு .தாம் தப்பிக்க பலியாகும் உக்கிரேன் .நமது ஊகம் சரி தானா என்பதை காத்திருந்து பார்க்கலாம் .
- வன்னி மைந்தன் –
ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரேன் முக்கிய நகர்
ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரேன் முக்கிய நகர்
உக்கிரேன் தலை நகரின் முதல் காவல் அரணாக விளங்கி வரும் Lysychansk நகரம் தற்போது ரசியா இராணுவத்தின் கட்டு பாட்டுக்குள் வந்துள்ளது .
டொன்பஸ் நகரம் முற்றாக வீழ்ந்த நிலையில் தற்போது இந்த Lysychansk நகரம் ரசியா இராணுவத்திடம் வீழ்ந்துள்ளது.
தொடர்ந்து கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
உக்கிரேனின் முதல் தர நகரங்களில் ஒன்றான Lysychansk வீழ்ந்துள்ள நிலையில் விரைவில் உக்கிரேன் தலைநகர் கீவ் நகரும் வீழ்ச்சியுறும் என எதிர் பார்க்க படுகிறது.
விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக உக்கிரேன் இராணுவம் தாம் வென்று
நிற்பதாக மேற்குலக நாடுகள் முதுகில் ஏறி நின்று கூவி வருகிறது குறிப்பிட தக்கது .
லண்டனில் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திய சாரதி
லண்டனில் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திய சாரதி
லூசியம் -லண்டன் மாநகரத்தில் உள்ள லூசியம் பகுதி கவுன்சிலுக்கு நபர் ஒருவர் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திட கிடைக்க பெற்ற கடிதத்தை கண்டு அதிர்ந்து போனார்.
மேலும் இதே கவுன்சிலினால் இம் மாதம் இந்த தாண்ட பணத்தை செலுத்த தவறின் அவர் £455 and this is expected to increase to £585 by next month.எதிர் வரும் மதம் £585 செலுத்த வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது.
அறுபது பவுண்டுகள் தண்டம் செலுத்திட தவறிய நபருக்கு இன்று வட்டிக்கு வட்டியாக சேர்த்து சுமார் 585 அதிகரிக்க பட்டுள்ளது .
லண்டனில் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திய சாரதி
தனது காருக்கு வீட்டு முன்பாக கார் பார்க்கிங் தரித்திடும் அனுமதியை பெற்று இருந்ததாகவும் ,அதற்கு பணம் செலுத்திய பொழுது அது அவ்வேளை இணையம் மூலம் செலுத்திட தவறிய நிலையில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளதாக அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
கவுன்சில்கள் இப்பொழுது அதிகம் இவ்வாறு சம்பாதிக்கின்றன என்பது இதன் மூலம் மீளவும் தெளிவாகியுள்ளது .
ஆப்கானிஸ்தானில் 500 கிலோ குண்டு கண்டு பிடிப்பு
ஆப்கானிஸ்தானில் 500 கிலோ குண்டு கண்டு பிடிப்பு
ஆப்கானிஸ்தானில் Farah பகுதியில் சோவியத் ரசியா வீசிய 500 கிலோ எடையுள்ள குண்டு ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இந்த குண்டு ரஷ்ய இராணுவத்தால் 1980ம் ஆண்டுகளில் வீச பட்டுள்ளது .
அதிக எடையுள்ள குண்டு கண்டு பிடிக்க பட்டு தமது குண்டு செயல் இழக்க வைக்கும் படையினரால் அந்த குண்டு செயல் இழக்க வைக்க பட்டுள்ளது என தலிபான் போராளிகள் தளபதி தெரிவித்துள்ளார்.
இந்த குண்டு வெடித்திருந்தால் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும். ஆனால் மக்கள் தெய்வாதீனமாக தப்பித்து கொண்டனர் .

ஆப்கானிஸ்தானில் மிதி வெடி மற்றும் கண்ணி வெடிகளில் சிக்கி எட்டு லட்சம் முதல் பத்து லட்சம் மக்கள் பாதிக்க பட்டு தமது விரல்கள் மற்றும் கால்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
சோவியத் ரசியா இரண்டாம் உலக போரில் வீசிய குண்டு கண்டு பிடிக்க பட்டது வியப்பில் உறைய வைத்துள்ளது .
ரஷ்யா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்கிரேன்
ரஷ்யா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்கிரேன்
உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்யா இராணுவம் நடத்திய ஏவுகணைளை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து வரும் இராணுவ படையெடுப்பை தடுத்து நிறுத்தும் தற்காப்பு யுத்தத்தில் உக்கிரேன் இராணுவம் ஈடுபட்ட வண்ணம் உள்ளது
இவ்வாறு உக்கிரேன் பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா இராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலை தமது விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வானில் இடை மறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது .
ரஷ்யா இராணுவத்தின் பத்து ஏவுகணைகளை தமது வான்மறிப்பு ஏவுகணைகள் வானில் மறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம்.
தொடர்ந்து கருங்கடல் வழியாகவும் கப்பல்களில் இருந்து தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதலை ரஷ்யா நடத்திய வண்ணம் உள்ளது.
உக்கிரேன் இராணுவம் அமெரிக்கா பிரிட்டன் வழங்கிய ஏவுகணைகள் மூலம் எதிர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது.
வேலியுடைத்து பாய்ந்த 2000 அகதிகள் 20 பேர் சுட்டு கொலை
வேலியுடைத்து பாய்ந்த 2000 அகதிகள் 20 பேர் சுட்டு கொலை
மொரோக்க நாட்டு வழியாக ஸ்பெயின் நாட்டுக்குள் ஆப்ரிக்கா அகதிகள் வேலியுடைத்து நுழைந்துள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
எல்லையில் இராணுவம் பொலிஸ் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொழுதும் அது தாண்டி அவர்கள் அந்த எல்லை வேலியுடைத்து பாய்ந்து சென்றுள்ளனர்.
இவ்விதம் இரண்டாயிரம் அகதிகள் ஒரே தடவையில் அதன் எல்லையை வேலியுடைத்து பாய்ந்துள்ளனர் .
இவர்களை கட்டு படுத்த மேற்கொள்ள பட்ட தாக்குதலில் இதுவரை இருபது அகதிகள் பலியாகியுள்ளனர் .
போலும் நாற்பதுக்கு மேற்பட்டவர்கள் பாடுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.
இந்த சம்பவம் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ நாடுகளுக்கு இடையில் இராயத்தந்திர முறுகளை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழையும் நோக்குடன் இந்த கைதிகள் வருகை காணப்படுகிறது என தெரிவிக்க படுகிறது .
நோர்வேயில் துப்பாக்கி சூடு 2 பேர் மரணம் 14 பேர் காயம்
நோர்வேயில் துப்பாக்கி சூடு 2 பேர் மரணம் 14 பேர் காயம்
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் மக்கள் மீது நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி சம்பவ இடத்தில இருவர் பலியாகினர் மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் அவசர காவுவண்டிகள் மூலம் மருத்துவ மனைக்குஎடுத்து செல்ல பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரியவரவில்லை .துப்பாக்கி கி சூடு நடத்தியதில் ஒருவர் மட்டுமே சம்பந்த பட்டுள்ளதாக
தெரிவிக்கும் நோர்வே பொலிஸார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .
பாதகமான காலநிலைக்கு மத்தியில் இந்த சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்கிரேன் பாலத்தை உடைத்த ரசியா இராணுவம்
உக்கிரேன் பாலத்தை உடைத்த ரசியா இராணுவம்
உக்கிரேன்; உக்கிரேனிய நாட்டின் மீது ரசியா இராணுவம் போரை நடத்திய வண்ணம் உள்ளது ,இவ்வேளை உக்கிரேன் Lysychansk in Luhansk பகுதிகளை அமைந்துள்ள முக்கிய நெடுஞ்சாலை பாலம் ஒன்றை ரசியா இராணுவம் உடைத்துள்ளனர் .
ரசியா இராணுவத்தின் போர் விமானங்கள் இந்த பாலத்தை குண்டு வீசி தாக்கி உடைத்தனர் .
பாலம் உடைக்க பட்டாலும் அதில் ஒரு பகுதி வழியாக கார்கள் சென்று வருகின்றன .ஆபத்தான நிலையில் பாலம் உள்ள பொழுதும் சிலர் அந்த ஆபத்தை எதிர்கொண்டு காரில் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது
குறித்த உக்கிரேன் நாட்டு பாலம் உடைக்க பட்டதினால் கனரக வாகன போக்குவரத்து தடை பட்டுள்ளது .

இதன் குறித்த பகுதிக்கான உணவு பொருட்கள் எடுத்து செல்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது .
முன்னேறி வரும் ரசியா இராணுவம் இவ்வாறான முக்கிய பாலங்களை உடைத்த வாறு முன்னோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளனர் .
ஓயாது தொடரும் ரசியா உக்கிரேன் போரினால் உலக நாடுகள் உள்ளிட்டவை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன.
கோடை காலம் முடிவதற்குள் உக்கிரேன் போர் முடிவுக்கு வந்து விடும் என ரசியா ஜனாதிபதி புட்டீன் தெரிவித்துள்ளார்.
உக்கிரேன் பாலத்தை உடைத்த ரசியா இராணுவம்
ரசியா ஜனாதிபதி புட்டீனின் இந்த அறிவிப்பு வெளியாகிய சில நாட்களில் ரசியா இராணுவம் உக்கிர போரினை உக்கிரேன் மீது தொடுத்து வந்தது.ஆனால் தற்போது அவற்றில் சற்று தளர்வு நிலை காணப்படுகிறது .
இதுவரை உக்ரேனின் இடம்பெற்ற போரில் முப்பத்தி நான்காயிரம் ரசியா இராணுவத்தை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் இராணுவமும் அதன் பாதுகாப்பு அமைச்சும் தெரிவித்து வருகின்றன .
ஆனால் ரசியாவோ உக்கிரேனின் முக்கிய மாகாணங்களை மீட்டு அவற்றை தமது ஆதரவு கிளர்ச்சி படைகளிடம் ஒப்படைத்துள்ளது .
உக்கிரேன் கூறுவது போன்று ரசியா இராணுவம் இறந்திருக்க கூடும் ,ஆனால் ரசியா இராணுவம் ஆக்கிரமித்த உக்கிரேன் பகுதிகளில் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது .
அந்த பகுதிகளுக்குள் உக்கிரேன் இராணுவம் செல்ல முடியாது தவித்து வருகிறது .சுருங்க சொல்லின் ரசியா இராணுவத்தின் முற்றுகையில் தொடர்ந்து உக்கிரேன் நாடு சிக்கியுள்ளது .
தமது கால எல்லைக்குள் உக்கிரேன் முழுவதும் ரசியா இராணுவம் ஆக்கிரமித்து விடும் என்பதே களநிலவர காட்சிகள் குறிப்பிடுகிறது .
பொலிஸார் வௌியிட்ட வைரல் காட்சி
பொலிஸார் வௌியிட்ட வைரல் காட்சி
தெலுங்கான ; இந்தியா தெலுங்கான பொலிஸார் வௌியிட்ட வைரல் காட்சி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல நாடுகளில் எரிபொருள் விலையேற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்தியா தெலுங்கானாவில் வாலிபர் ஒருவ தனது மோட்டார் சைக்கிளில் அதிகமான பொருள்களை ஏற்றி செல்லும் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது .
அந்த வீதி வழியூடாக பயணித்த ஒருவர் வாலிபர் மோட்டார் சைக்களில் செல்லும் இந்த காட்சியை காணொளி பிடித்து வெளியிட்டு விட்டார் ,அதுவே உலக நாடுகள் எங்கும் வைரலாகி வருகிறது .
தெலுங்கானா பொலிஸார் தமது டுவிட்டர் பக்கத்திலும் அந்த காட்சியை வெளியிட்டு இவ்வாறு செயல்பட வேண்டாம் என மக்களிடம் வேண்டுதல் விடுத்து வைரலாக்கி வருகின்றனர் .
மிக ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் இந்த வாலிபர் வைரல் செயல் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது .
தம்பி ராசா வரும் போது வீட்டுக்கு சொல்லிட்டாப்பா வந்தாய் ..?
ஐரோப்பாவுக்கு காஸ் நிறுத்த ரசியா முடிவு பதட்டத்தில் நாடுகள்
ஐரோப்பாவுக்கு காஸ் நிறுத்த ரசியா முடிவு பதட்டத்தில் நாடுகள்
ரஷ்யா; ஐரோப்பிய நாடுகளுக்கு ரசியா நாற்பது வீதமான காஸ் விநியோகத்தை மேற்கொண்டு வருகிறது.
ரசியாவின் இந்த காஸ் விநியோகத்தினால் ஐரோப்பிய மக்கள் சுகபோகமாகா வாழ்ந்து வந்தனர்.
எதிர் வரும் குளிர்காலம் ஆரம்பிக்கும் பொழுது ரசியா ஐரோப்பாவுக்கு ஏற்று மதி செய்திடும் காஸ் விநியோகத்தை முற்றாக நிறுத்தும் நிலைக்கு செல்ல உள்ளது .
அவ்வாறு ரசியா காஸ் விநியோகத்தை நிறுத்தினால் ஐரோப்பிய நாடுகள் பெரும் நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட போகிறது .
தற்போது ஐரோப்பா எங்கும் ஐம்பது வீதத்தினால் காஸ் விலை அதிகரிக்க பட்டுள்ளது .
மேலும் இவ்வாறான காஸ் தடை ஏற்பட்டால் மேலும் அதன் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட போகிறது.
ஐரோப்பாவுக்கு காஸ் நிறுத்த ரசியா முடிவு – பதட்டத்தில் நாடுகள்
உக்கிரேன் மீதான ரசியா போரினை அடுத்து ரசியா மீது ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து பொருளாதார தடையினை விதித்துள்ளன .
இந்த பொருளாதார தடையினை உடைத்தெறிய ரசியா இந்த காஸ் வழங்குதல் முடக்க நடவடிக்கையை மேற்கொள்ள போகிறது.
தமது நாட்டின் மீது தடைகளை விதித்தவர்கள் அந்த தடையினை மீள பெற்றால் மட்டும் காஸ் வழங்க படும் என்ற நிலையை
ரசியா உருவாக்க போகிறது என்பதனை இந்த விடயங்கள் சுட்டி காட்டுகின்றன .
ரசியா காஸ் வழங்குதல் நடவடிக்கையை முற்றாக நிறுத்தினால் ஐரோப்பா நாடுகள் உடனடியாகா அனல்மின் நிலையத்தை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது
அதனை விரைந்து அரசுகள் செயல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்க பட்டுள்ளது .
அரசுகள் தமது மக்களை காப்பாற்றிட இதனை விரைந்து செய்திட வேண்டும் தவறினால் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் குளிர்காலத்தில் பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
ரசியா மேற்கொள்ள போகும் இந்த காஸ் விநியோக தடை ஐரோப்பவை கதற வைத்துள்ளது .
இறக்குமதியில் தமது நாடுகளை கட்டி காத்து வந்த ஐரோப்பவுக்கு மரண வைத்தியம் கொடுக்க ரசியா ஜனாதிபதி புட்டீன் தயாராகி வருகின்றமை மூன்றாம் உலக போர் ஒன்று வெடிக்கும் நிலை ஏற்பட போகிறது என்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .
தீயில் எரிந்த அடுக்குமாடி 35 பேர் காயம்
தீயில் எரிந்த அடுக்குமாடி 35 பேர் காயம்
Buenos; அர்ஜெண்டினா தலைநகர் Buenos பகுதியில் அமைய பெற்றுள்ள அடுக்கு மாடி தொடரில் ஏற்பட்ட தீ பரவல் சம்பவத்தில் சிக்கி ஐந்து பேர் பலியாகியும் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
அதி வேகமாக பரவிய தீயின் காரணமாக ஏற்பட்ட புகை அதனால் ஏற்பட்ட மூச்சு திணறலில் சிக்கி ஐவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர்.
மேலும் காயமடைந்த முப்பத்தி ஐந்து பேரும் அவசர சேவை உதவி பிரிவினர் ஊடாக மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர்.
காயமடைந்தவர்கள் சிலர் உயிராபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது.
தீயில் எரிந்த அடுக்கு மாடி கட்டட தீ விபத்து தொடர்பில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
துருக்கியில் தரை இறங்கிய ரசியா உளவு விமானம்
துருக்கியில் தரை இறங்கிய ரசியா உளவு விமானம்
துருக்கி ;ரசியா நாட்டின் இராணுவ உளவு விமானம் ஒன்று துருக்கி நாட்டின் Kurtun Gumushane பகுதியில் அவசர தரை இறக்கம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
குறித்த ரசியா விமானத்தை கண்ணுற்ற மக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து அந்த விமானம் துருக்கியினால் மீட்க பட்டுள்ளது.
இந்த ரசியா உளவு விமானம் துருக்கியில் தரை இறங்கியது திட்டமிடப்பட்ட ரசியாவின் செயலா ..?
அல்லது உண்மையில் இயந்திர கோளாறு காரணமாக தரை இறக்க பட்டதா என்பது தொடர்பில் உளவுத்துறை வட்டாரங்களில் திகில் செய்திகள் பரவிய வண்ணம் உள்ளது.
துருக்கியில் தரை இறங்கிய ரசியா உளவு விமானம்
துருக்கி நாட்டு உளவு விமானங்கள் உக்கிரேனில் ரசியா இராணுவத்தினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ள நிலையில் .ரசிய விமானம் இங்கே அவசர தரை இறக்கம் மேற்கொண்டது எப்படி என்ற கேள்வி எழுகிறது.
இன்னொரு நாட்டின் பகுதிக்குள் தரை இறங்கியுள்ளது எனின் ரசியா உளவு விமானங்கள் இங்கே முன்னரும்
இறங்கி சென்று இருக்கலாம் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் தாய் பிள்ளை குத்தி கொலை
லண்டனில் தாய் பிள்ளை குத்தி கொலை
வடக்கு லண்டன் Barnet, north London. பகுதியில் தாய் மற்றும் அவரது ஐந்து வயது குழந்தை மர்ம நபரால் மேற்கொள்ளபட்ட கத்தி குத்து தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .
தாய் மற்றும் சிசுவை குத்தி கொன்ற 37 வயதுடைய மர்ம நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் .
கொலை குற்றத்தில் ஈடுபட்டு கைதான நபர் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார் .
லண்டனில் சமீப காலங்களாக இவ்விதமான கத்தி வெட்டு படு கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன .
இந்த தாய் , பிள்ளை குத்தி கொலை செய்தமைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை ,
குறித்த குத்தி கொலை சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தாய் பிள்ளை குத்தி கொலை செய்யப்பட்ட பகுதியில் பூக்களை வைத்து மக்கள் தமது அஞ்சலியை செலுத்திய வண்ணம் உள்ளனர்.
ரொக்கட் தாக்குதலில் சிதறிய துருக்கி முகாம்
ரொக்கட் தாக்குதலில் சிதறிய துருக்கி முகாம்
எதிரி செய்திகள் .
வடக்கு ஈராக் பகுதியில் அமைந்துள்ள துருக்கி இராணுவத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த Bamerne இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
எதிரி இராணுவமாக விளங்கும் துருக்கிய இராணுவம் முகாம் மீது குருதீஸ் போராளிகள் அதிரடி ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளதாக உரிமை கோரியுள்ளனர் .
குருதீஸ் போராளிகள் நடத்திய ரொக்கட் தாக்குதலில் துருக்கி இராணுவம் முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஈராக்கிய ஊடகங்கள் இங்கு நடத்த பட்ட ரொக்கட் தாக்குதலில் பன்னிரெண்டு அப்பாவி மக்களும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கிறது .
எனினும் இதுவரை துருக்கிய இராணுவ தலைமையகமோ ,அதன் பாதுகாப்பு அமைச்சோ இந்த தாக்குதல் தொடர்பாக எவ்வித கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை .
வடக்கு ஈராக் பகுதியில் நிறுவ பட்டுள்ள துருக்கிய இராணுவத்தின் இராணுவ முகாம்கள் மீது தொடராக ரொக்கட் தாக்குதல்கள் நடத்த பட்ட வண்ணம் உள்ளன .
குருதீஸ் போராளிகள் கட்டு பாட்டு தாயக பகுதிகள் மீது எதிரி இராணுவம் தேடி அழிப்பு இராணுவ நடவடிக்கையை துருக்கிய மேற்கொண்டு வரும் நிலையில்
இந்த ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இஸ்ரேலை போன்று குருதீஸ் விடுதலை போராளிகள் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் ஆளும் எடகோன் அரசு குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது .
ரொக்கட் தாக்குதலில் சிதறிய துருக்கி முகாம்
தனது அரசியல் வெற்றிகளுக்கு அப்பாவி குருதீஸ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர் .
ஐ எஸ் தீவிரவாதிகளை உருவாக்கி அந்த அமைப்புக்கு எதிராக போராடிய குருதீஸ் போராளிகள் மீது தற்போது துருக்கி நேரடி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
எதிரி இராணுவ நடவடிக்கையில் குருதீஸ் தாயக பகுதிகள் பலத்த சேதங்களுக்கும் ,உயர் பலிகளுக்கும் உள்ளாகிய வண்ணம் அந்த மக்கள் கண்ணீரில் அகதிகளாக இடம்பெயர்நத வண்ணம் உள்ளனர் .
தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஒப்பான இயக்கமாக குருதீஸ் போராளிகள் அமைப்பு துருக்கிக்கு சிம்மா செப்பணமாக விளங்கி வருகினறமை இங்கே குறிப்பிட தக்கது .
- வன்னி மைந்தன் –
ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தில் 1500 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தில் 1500 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 1500 பேர் பலியாகியுள்ளனர் என முதல்கட்ட செய்திகள் வெளியாகியுள்ளன .
மேலும் இந்த நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை இரண்டாயிரம் பேர் வரை படுகாயமடைந்துள்ளனர் .
கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன .
இதுவரை வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் இந்த உயிர்ப்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்ச படுகிறது.
மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் இராணுவ உலங்குவானூர்திகளும் பயன் படுத்த பட்ட வண்னம் உள்ளது .
தலிபான்கள் ஆட்சியில் இடம்பெற்ற முதலாவது பெரும் நில நடுக்க பேரழிவு காட்சியாக இது அமைய பெற்றுள்ளது .
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் மக்களுக்கு அடக்குமுறையை பிரயோகித்து வருவதால் உலக நாடுகள் பல உதவிட பின்னடித்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .
பிரித்தானியாவில் எதிரியான பெற்றோல் விலை
பிரித்தானியாவில் எதிரியான பெற்றோல் விலை
பிரித்தானியாவில் எதிரியான பெற்றோல் விலை உயர்வால் மக்கள் பெரிதும் இன்னல்களை சந்தித்த வண்ணம் உள்ளனர் ,.
நாடளாவிய ரீதியில் தற்போது எரிபொருள் விலை அதிகரித்து செல்கிறது ஒரு லீட்டர் இரண்டு பவுண்டுகளை எட்டி பிடித்துள்ளது.
மின்சாரம் எரிவாயு விலை ஐம்பது விகிதம் விலை அதிகரித்த நிலையில் தற்போது எரிபொருள் , பெற்றோல் விலை உயர்வு காரணமாக மக்கள் ஆளும் அரசு மீது கடும் கோபத்தில் உறைந்துள்ளனர்.
மக்களுக்கு எதிரியான எரிபொருள் , பெற்றோல் ,டீசல், விலை உயர்வு ஆளும் அடச்சியாளர்களுக்கு எதிரியாக மக்கள் கொதித்தெழுந்து எதிர்வரும் தேர்தலில் பலத்த தோல்வியை வழங்கும் நிலை ஏற்படலாம் என எதிர்வு கூற படுகிறது.
உக்கிரேன் ரசியா போரினை அடுத்து உலக நாடுகள் எங்கும் எரிபொருள் ,எரிவாயு விலையில் அதிரடி அதிர்ச்சிகர விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரித்தானியாவில் நாடு தழுவிய ரீதியில் மக்கள் பெரும் துயரை சந்தித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
தீ பிடித்த பயணிகள் விமனம – மூவர் காயம்
தீ பிடித்த பயணிகள் விமனம – மூவர் காயம்
அமெரிக்கா மியாமி சர்வதேச விமான நிலையாயத்தில் தரை இறங்கிய Red Air plane ஒன்று திடீரென தீ பிடித்து கொண்டது.
இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் மூவர் தீ ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் பாதிக்க பட்டுள்ளனர் .
மூச்சு திணறலுக்கு உள்ளான மூவரும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.
இந்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க படுகின்றன ,
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் மனித உயிர் அழிவுகள் தடுக்க பட்டன .
ஆப்கானிஸ்தானில் பாரிய நில நடுக்கம் 1000 பேர் மரணம்
ஆப்கானிஸ்தானில் பாரிய நில நடுக்கம்1000 பேர் மரணம்
ஆப்கானிஸ்தானில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 1000 பேர் மரணம் ஆகியும், ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் படுகாயமடை ந்துள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன .
ஆப்கானிஸ்தானில் பாரிய நில நடுக்கம்
மேலு கட்டட இடி பாடுகளுக்குள் சிக்கி மக்கள் இறந்திருக்க கூடும் என்ற அச்சத்தினால் தொடர்ந்து மீட்பு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகியுள்ளது .
அங்கிருந்து வரும் தகவலின் அடைப்படையில் உயிர் பலிகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .







