உக்கிரேன் பாலத்தை உடைத்த ரசியா இராணுவம்

Spread the love

உக்கிரேன் பாலத்தை உடைத்த ரசியா இராணுவம்

உக்கிரேன்; உக்கிரேனிய நாட்டின் மீது ரசியா இராணுவம் போரை நடத்திய வண்ணம் உள்ளது ,இவ்வேளை உக்கிரேன் Lysychansk in Luhansk பகுதிகளை அமைந்துள்ள முக்கிய நெடுஞ்சாலை பாலம் ஒன்றை ரசியா இராணுவம் உடைத்துள்ளனர் .

ரசியா இராணுவத்தின் போர் விமானங்கள் இந்த பாலத்தை குண்டு வீசி தாக்கி உடைத்தனர் .


பாலம் உடைக்க பட்டாலும் அதில் ஒரு பகுதி வழியாக கார்கள் சென்று வருகின்றன .ஆபத்தான நிலையில் பாலம் உள்ள பொழுதும் சிலர் அந்த ஆபத்தை எதிர்கொண்டு காரில் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது

குறித்த உக்கிரேன் நாட்டு பாலம் உடைக்க பட்டதினால் கனரக வாகன போக்குவரத்து தடை பட்டுள்ளது .

உக்கிரேன் பாலத்தை உடைத்த ரசியா இராணுவம்

இதன் குறித்த பகுதிக்கான உணவு பொருட்கள் எடுத்து செல்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது .

முன்னேறி வரும் ரசியா இராணுவம் இவ்வாறான முக்கிய பாலங்களை உடைத்த வாறு முன்னோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளனர் .

ஓயாது தொடரும் ரசியா உக்கிரேன் போரினால் உலக நாடுகள் உள்ளிட்டவை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன.

கோடை காலம் முடிவதற்குள் உக்கிரேன் போர் முடிவுக்கு வந்து விடும் என ரசியா ஜனாதிபதி புட்டீன் தெரிவித்துள்ளார்.

உக்கிரேன் பாலத்தை உடைத்த ரசியா இராணுவம்


ரசியா ஜனாதிபதி புட்டீனின் இந்த அறிவிப்பு வெளியாகிய சில நாட்களில் ரசியா இராணுவம் உக்கிர போரினை உக்கிரேன் மீது தொடுத்து வந்தது.ஆனால் தற்போது அவற்றில் சற்று தளர்வு நிலை காணப்படுகிறது .

இதுவரை உக்ரேனின் இடம்பெற்ற போரில் முப்பத்தி நான்காயிரம் ரசியா இராணுவத்தை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் இராணுவமும் அதன் பாதுகாப்பு அமைச்சும் தெரிவித்து வருகின்றன .

ஆனால் ரசியாவோ உக்கிரேனின் முக்கிய மாகாணங்களை மீட்டு அவற்றை தமது ஆதரவு கிளர்ச்சி படைகளிடம் ஒப்படைத்துள்ளது .

உக்கிரேன் கூறுவது போன்று ரசியா இராணுவம் இறந்திருக்க கூடும் ,ஆனால் ரசியா இராணுவம் ஆக்கிரமித்த உக்கிரேன் பகுதிகளில் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது .

அந்த பகுதிகளுக்குள் உக்கிரேன் இராணுவம் செல்ல முடியாது தவித்து வருகிறது .சுருங்க சொல்லின் ரசியா இராணுவத்தின் முற்றுகையில் தொடர்ந்து உக்கிரேன் நாடு சிக்கியுள்ளது .

தமது கால எல்லைக்குள் உக்கிரேன் முழுவதும் ரசியா இராணுவம் ஆக்கிரமித்து விடும் என்பதே களநிலவர காட்சிகள் குறிப்பிடுகிறது .

    Leave a Reply