Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
ஈரானில் கலவரத்தை தூண்டிய அமெரிக்கா உளவாளி கைது
ஈரானில் கலவரத்தை தூண்டிய அமெரிக்கா உளவாளி கைது
ஈரானில் ஆளும் அரசுக்கு எதிராக பாரிய போராட்டங்கள் மற்றும் வன்முறைகளை தூண்டி விட்ட அமெரிக்கா மத்திய புலனாய்வுத்துறையை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர், ஈரான் இராணுவத்தால் கைது செய்ய பட்டுள்ளார் .
ஈரானில் மக்கள் ஆட்சிக்கு எதிராக, அரசு செயல்படுகிது என்கிற வகையில் ,பல்கலைக் கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களை தூண்டி வன்முறையில் ஈடுபட்ட அமெரிக்கா உளவாளியே இவ்விதம் கைது செய்யப் பட்டுள்ளார் .
இவ்வாறு கைதானவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .
இஸ்ரேல் உளவாளி லெபனானில் கைது
இஸ்ரேல் உளவாளி லெபனானில் கைது
இஸ்ரேல் நாட்டின் மொசாட் உளவுத்துறையை சேர்ந்த உளவாளி ஒருவர் லெபனானில் வைத்து கைது செய்ய பட்டுள்ளார் .
லெபனானான் உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மொஸாட் உளவாளி மடக்கி பிடிக்க பட்டார் .
கைதான இஸ்ரேல் உளவாளியிடம் உரிய பாணியில் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .
கடந்த இருவரங்களுக்கு முன்னதாக ஈரானில் வைத்து இஸ்ரேல் உளவாளி கைது செய்யப்பட்டமை இங்கே குறிப்பிட தக்கது.
லண்டனில் கவிழ்ந்த பேரூந்து – மாணவர்கள் காயம்
லண்டனில் கவிழ்ந்த பேரூந்து – மாணவர்கள் காயம்
பிரிட்டன் புறநகர் பகுதியில் மாணவர்களை காவிய படி பயணித்த பேரூந்து திடீரென விபத்தில் சிக்கி கவிழ்ந்தது .
இதன் போது அதில் பயணித்த மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர் .
காயமடைந்தவர்களில் சிலர் அம்புலன்ஸ் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர் .
விபத்தில் சிக்கி கவிழ்ந்த பேரூந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .
இந்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மாணவர்களை உல்லாச விடுமுறைக்கு அழைத்து சென்ற பேரூந்தே விபத்தில் சிக்கியது .இதனால் பெற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
பாதிக்க பட்ட மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் என்ன பதில் கூற போகிறது ..?
500 ரசியா இராணுவம் பலி – தொடரும் கடும் போர்
500 ரசியா இராணுவம் பலி – தொடரும் கடும் போர்
உக்கிரேனில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம் பெற்ற மோதல்களில் சிக்கி ,ரசியா இராணுவத்தினர் 500 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக, உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
அகோர ஏவுகணை தாக்குதல்களை நடத்திய வண்ணம் ,முன்னேற முயன்ற ரசியா படைகளுக்கு எதிரான ,வழிமறிப்பு தாக்குதலை நடத்திய பொழுது ,இந்த பாரிய இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக ,உக்கிரேனிய இராணுவம் அறிவித்துள்ளது .
500 ரசியா இராணுவம் பலி – தொடரும் கடும் போர்
குரூஸ் ஏவுகணைகளை பயன் படுத்தி, ரசியா இராணுவம் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
அவ்வாறான நவீன ஆயுதங்களை பயன் படுத்திய பொழுதும் .இவ்விதமான இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம் .
இதுவரை ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட யுத்த டாங்கிகள் கவச வாகனங்கள் என்பன முற்றாக அழிக்க பட்டுள்ள பொழுதும் ,தொடர்ந்து தாக்குதல்களை நடத்திய வண்ணம் ரசியா படைகள் முன்னேற்ற நகர்வுகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளன .
உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகள் வழங்கிய பிரிட்டன்
உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகள் வழங்கிய பிரிட்டன்
உக்கிரேனில் ரசியா இராணுவம் நீண்ட தூர ஏவுகணைகளை பயன் படுத்தி தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .
குளிர்காலத்தை மையப்படுத்தி தமது தாக்குதல்களை வேகப்படுத்தியுள்ள ,ரசியாவின் நிலைப்பாட்டை அடுத்து ,தற்பொழுது அதனை முறியடிக்கும் முகமாக புதிய ஏவுகணைகளை பிரிட்டன் வழங்குகிறது .
உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகள் வழங்கிய பிரிட்டன்
400 பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான ஆயுத உதவிகள் உக்கிரேனுக்கு வாழுங்க படும் என ,பிரிட்டன் அரசு அறிவித்திருந்த நிலையில் ,இந்த ஏவுகணைகள் வழங்க படுகின்றன .
இவை 180 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்த ஏவுகணைகள் என்கிறது பிரிட்டன் .
மிக பெரும் தாக்குதலுக்கு ரசியா தயாராகி வரும் நிலையில் ,அதனை முறியடிக்கும் நகர்வுகளில் ,பிரிட்டன் அமெரிக்கா கூட்டாக இணைந்து செயல் பட்டு வருகின்றன .
தமது போராயுதங்களை உதவி என்கின்ற போர்வையில் , இந்த வல்லாதிக்க நாடுகள் சோதனை செய்து வருகின்றமை அம்பலமாகியுள்ளது .
வெடித்து சிதறிய கெமிக்கல் பக்டரி
வெடித்து சிதறிய கெமிக்கல் பக்டரி
துருக்கி நாட்டின் Denizli மாகாணத்தில் அமைந்துள்ள மிக பெரும் கெமிக்கல் பக்டரி ஒன்று வெடித்து சிதறி தீயில் எரிந்துள்ளது .
இந்த தீ பரவல் சம்பவத்தினால் அந்த நிறுவனம் முற்றாக அழிந்து நாசமாகியுள்ளது .
இந்த தீ பரவல் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை .
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன .இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என அஞ்ச படுகிறது .
பிரிட்டன் டீவி நிருபர் ஈரான் இராணுவத்தால் கைது
பிரிட்டன் டீவி நிருபர் ஈரான் இராணுவத்தால் கைது
ஈரானிய ஆளும் அரசுக்கு எதிராக சதி நடவடிக்கை மற்றும் போலியான பரப்புரைகளில் ஈடுபட்டதாக ,பிரிட்டன் ஊடக நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .
இந்த தொலைக்காட்சிக்கு சவூதி நாடு நிதி உதவி வழங்கி வருவதாகவும் ,அதன் ஊடாகவே இந்த தொலைக்காட்சி ஈரானுக்கு எதிரான பரப்புரை ,மற்றும் சதி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ,ஈரான் புரட்சிகர இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது .
மேலும் குறித்த தொலை காட்சி கறுப்பு பட்டியலில் உள்ளடக்க பட்டுள்ளது .
ஈரான் பிரிட்டன் நாடு தழுவிய நிலையில் பலரை ,கறுப்பு பட்டியலில் போட்டி போட்டு பதிவு செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
மின்சார கம்பியில் தொங்கிய விமானம்
மின்சார கம்பியில் தொங்கிய விமானம்
இலகுரக விமானம் ஒன்று மின்சார கம்பிகள் மேல் தொங்கிய காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .
விமானிகளின் அலட்சியம் காரணமாக இந்த விமானம் அதி உயர் மின்சாரம் பாயும் கம்பிகளுக்குள் சிக்கியது .
இவ்வேளை அதில் பயணித்த இருவரும் பலத்த மின்சார தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ,தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .
குறித்த விமானத்தை மீட்க ஆறு மணி நேரம் போராட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்க பட்டுள்ள விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
வீழ்ந்து நொறுங்கிய விமானம் குதித்து தப்பிய விமானி
வீழ்ந்து நொறுங்கிய விமானம் குதித்து தப்பிய விமானி
எகிப்து நாட்டின் இராணுவ போர் விமானம் ஒன்று நடு வானில் திடீரெனெ வீழ்ந்து நொறுங்கியது .
விமானம் வீழ்ந்து நொறுங்கிய பொழுதும், அதனை செலுத்தி சென்ற விமானி பாராசூட் மூலம் குதித்து தப்பியுள்ளார் .
இந்த போர் விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
கரடியின் வாயில் சிசு மக்களை அலறவிட்ட காட்சி
கரடியின் வாயில் சிசு மக்களை அலறவிட்ட காட்சி
கரடி ஒன்றின் வாயில் சிசு ஒன்று உள்ள காட்சிகள் தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
சர்வதேச ரீதியில் அதிக மக்களினால் இந்த காட்சி பகிர பட்டு வருவதுடன் பேசு போலாக மாற்றம் பெற்றுள்ளது .
சிசுவை கரடி கொல்லாது பெற்றவர்களிடம் ஒப்படைத்த சம்பவமே , இந்த காட்சி வைரலாக காரணமாக அமைந்துள்ளது .
தாய்மை உள்ளம் கொண்ட விலங்குகள் இவ்வாறும் இருக்கத்தான் செய்கின்றன .
வெளிநாட்டு படைகள் 100 பேர் மரணம் ரசியா அறிவிப்பு
வெளிநாட்டு படைகள் 100 பேர் மரணம் ரசியா அறிவிப்பு
உக்கிரேன் Donetsk பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி வெளிநாட்டு இராணுவத்தினர் 100 பேர் பலியாகியுள்ளதாக ரசியா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
இதுவரை உக்கிரேனில் தமது இழப்புக்களை மூடி மறைத்த ரசியா இராணுவம் திடீரென ,தமது இழப்புக்களை அறிவித்த வண்ணம் உள்ளனர் .
ரசியாவின் இந்த திடீர் இழப்பு அறிவிப்பின் பின்புலத்தில், மிக பெரும் பொறி உக்கிரேனுக்கு காத்துள்ளதாக , மேற்குலக முக்கிய உளவுத்துறை ஊடகங்கள் கருத்துரைத்து வருகிறன .
பார்க்கலாம் ஏத்தி வரும் நாட்களில் உக்கிரேன் களத்தில் ரசியாவின் தாக்குதல் எதுவாக அமைய போகிறது என்பதை .
ரசியா எறிகணை தாக்குதலில் 32 உக்கிரேனியர்கள் மரணம்
ரசியா எறிகணை தாக்குதலில் 32 உக்கிரேனியர்கள் மரணம்
தெற்கு உக்கிரேன் கேர்சன் பகுதிகளை இலக்கு வைத்து ரசியா இராணுவம் நடத்திய எறிகணை தாக்குதல்களில் சிக்கி ,ஒரே நாளில் அதே பகுதியை சேர்ந்த 32 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர் .
மேலும் பல தாஸின் மக்கள் படுகாயமடைந்துள்ளனர் .கட்டடங்கள் ,வீடுகள் என்பன இடிந்து வீழ்ந்துள்ளது .
குறித்த கேர்சன் பகுதியை விடுவித்து ரசியா இராணுவம் விலகி சென்றதன் பின்னர் ,அந்த பகுதியை இலக்கு வைத்து கடுமையான எறிகணை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
மீளவும் இழந்த உக்கிரேன் பகுதிகளை மீட்கும் இராணுவ நகர்வை ரசியா இராணுவத்தினர் மேற்கொள்ள கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி – விமானி மரணம்
வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி – விமானி மரணம்
அமெரிக்காவில் உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் ,அதனை செலுத்தி சென்ற விமானிகள் பலியா கியுள்ளனர் .
அதிவேக சாலையின் ஓரத்தில் உலங்கு வானூர்தி வீழ்ந்து நொறுங்கியதில் ,அதனை செலுத்தி சென்ற இரு விமானிகளும் பலியாகியுள்ளனர் .
இந்த உலங்குவானூர்தி விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆம்பிக்க பட்டுள்ளன .
இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்று இருக்க கூடும் என கருத படுகிறது .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
ஆற்றில் குளிக்க சென்றவரை பிடித்து தின்ற முதலை
ஆற்றில் குளிக்க சென்றவரை பிடித்து தின்ற முதலை
தமிழகம் பழைய குளிதம் ஆற்று பகுதியில் குளிக்க சென்ற வாலிபரை அங்கு வந்த முதலை இழுத்து சென்று கொன்று திண்றுள்ள சம்பவம் பெரு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
முதலையினால் கொலை செய்ய பட்ட வாலிபர் சடலத்தய் மீட்கும் பணியில் மீட்பு படைகள் ஈடுபட்டுள்ளனர் .
பல மணி நேர போராட்டத்தின் பின்னர் சடலம் மீட்க பட்டுள்ளது .
வாலிபனை முதலை இழுத்து செல்லும் காட்சிகள் ,சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
இந்த சம்பவத்தை அடுத்து ,குறித்த குளத்தில் மக்கள் குளிக்க அதிரடியாக தடை விதிக்க பட்டுள்ளது.
மரத்தில் ஏறிய ஆடு வைரலாகும் வீடியோ
மரத்தில் ஏறிய ஆடு வைரலாகும் வீடியோ
தமிழகத்தில் ஆடு ஒன்று ,பனை மரம் ஒன்றில் குரங்கு போல தாவி ஏறி விளையாடும் காட்சிகள் வைரலாகிய வண்ணம் உள்ளது .
இந்த ஆட்டின் சுட்டி தனம் பார்ப் பவர்களை கவர்ந்துள்ளதால் ,பல லட்சம் மக்கள் ,இந்த காட்சிகளை வேகமாக பகிர்ந்த வண்ணம் உள்ளனர் .
ஒரே நாளில் உலகம் முழுவதும் இந்த ஆட்டு குட்டி வைரலாக மாறியுள்ளது .
லண்டன் லூசியம் பகுதியில் பொலிஸ் வேட்டை வீடியோ
ஆண் ஒருவரை நான்கு இளம் பெண்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்
ஆண் ஒருவரை நான்கு இளம் பெண்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்
ஆண் ஒருவரை நான்கு இளம் பெண்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமொன்று இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பஞ்சாப்- ஜலந்தரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும் நபர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை நோக்கி ஒரு கார் வேகமாக வந்துள்ளது. அந்த காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம்பெண்கள் இருந்துள்ளனர்.
இதனையடுத்து காரில் இருந்த இளம்பெண்கள் ஒரு துண்டு சீட்டை நீட்டி அந்த நபரிடம் கொடுத்து முகவரி விவரம் குறித்து கேட்டுள்ளனர்.
அவர்கள் கூறியதை நம்பிய அந்த நபர் வாங்கி படித்துள்ளார். அப்போது அந்த பெண்கள் ஸ்பிரே ஒன்றை அவர் மீது அடித்துள்ளனர்.
இதனையடுத்து அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரை தங்களது காரில் ஏற்றிக்கொண்டு பறந்தனர்.
பின்னர் மறைவான இடத்தில் காரை நிறுத்தி அவரது கை, கால்களை கட்டி போட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அவர்கள் குடித்துவிட்டு தன்னையும் குடிக்க வற்புறுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட நபர் கூறினார்.
அதன் பிறகு நான்கு இளம்பெண்களும் மாறி மாறி தன்னை பலாத்காரம் செய்ததாக அந்த நபர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இதனையடுத்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் அவரது கை மற்றும் கண்களை கட்டி ஏதோ ஒரு இடத்தில் இறக்கிவிட்டு சென்று விட்டனர். இதுகுறித்து அவர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அந்த பெண்கள் பணக்காரர்கள் போல தெரிந்தவர்கள் என்றும் நன்றாக ஆங்கிலம் பேசினர் என்றும், தன்னிடம் 2 பெண்கள் பஞ்சாப் மொழியில் பேசினர் என அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த இளம்பெண்களைத் தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில் இது போல் ஒரு ஆணை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த 4 பெண்களும் போதையில் இருந்தனரா, எதற்காக இது போல் செய்தனர் என்பதெல்லாம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக பெண்களையும் சிறுமிகளையும் கடத்திச் சென்று தான் பலாத்காரம் செய்து வரும் நிலையில் ஆண் ஒருவரை
இளம்பெண்கள் கூட்டாக பலாத்காரம் செய்யும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸ் காரை திருடி சென்ற வெறி குட்டி
பொலிஸ் காரை திருடி சென்ற வெறி குட்டி
சீனா Guangxi மாகாணத்தில் பொலிஸ் காரை அதி போதையில் இருந்த நபர் திருடி சென்ற சம்பவம் இடம் பெற்றுள்ளது .
காவல்துறை காரை திருடிய நபர் அதி வேகமாக செழுத்தி சென்று கடை ஒன்றுடன் மோதியுள்ளார் .
இதில் காவல்துறை கார் மற்றும் கடை சேதமடைந்துள்ளது .
குறித்த சம்பவம் அங்கிருந்த மக்களினால் காட்சி பிடிக்க பட்டு தற்போது வெளியிட பட்ட நிலையில் செம வைராலகிய வண்ணம் உள்ளது .
போதை செய்த கோலத்தை பாருங்க .
பிரிட்டனில் கோர விபத்து சிதறிய கார் பெண் பலி
பிரிட்டனில் கோர விபத்து சிதறிய கார் பெண் பலி
பிரிட்டன் A13 in Dagenham. பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று மோதி சிதறியதால் பெண் ஒருவர் பலியாகியுள்ளார் .
குறித்த காரினை நிறுத்தும் படி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்த பொழுதும் ,அதனை செவிமடுக்காது கார் பயணித்த காரணத்தால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .
இந்த விபத்தினால் அந்த வழிச்சாலை போக்குவரத்து பல மணித்தியாலம் பாதிக்க பட்டது .
குறித்த விபத்து சம்பவம் தொடர்பிலான, விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
ஈரான் துருக்கி எல்லையில் ஈராக் இராணுவம் குவிப்பு
ஈரான் துருக்கி எல்லையில் ஈராக் இராணுவம் குவிப்பு
ஈரான் துர்க்கை எல்லை பகுதியில் தற்பொழுது ஈராக்கிய ஆயுத படிகள் குவிக்க பட்டு எல்லை சோதனைகள் முடுக்கிவிட பட்டுளள்ன .
துருக்கி மற்றும் ஈரான் பகுதிகளில் தீவிரவாத குழுக்கள் தகுதல் நடத்தியத்தையே டுத்து தற்போது ,அதி நவீன படை பிரிவினர் வீதி எல்லை கண் கணிப்பு ,மற்றும் சோதனைகள் நடவடிக்கையில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .
ஈராக் சிரியா ஏழை பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் குருதீஸ் போராளிகளை இலக்கு வைத்து ,ஈரான் துருக்கி இராணுவம் கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது .





























































