Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – புதிய கட்டுப்பாடுகள்
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – புதிய கட்டுப்பாடுகள்
சீனாவில் கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது அந்நாட்டு அரசு.
சமீபகாலமாக சீனாவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது.
கொரோனா கட்டுப்படுத்தும் நோக்கில் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
சீனாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 31,444 ஆக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாகாணங்களில் கட்டுப்பாடுகளும், ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களில் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் நடத்தவும் அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – புதிய கட்டுப்பாடுகள்
இந்நிலையில் செங்சோவின் 8 மாவட்டங்களில் வசிப்பவர்கள் நாளை முதல் 5 நாள்களுக்கு உணவு வாங்கவும், மருத்துவச் சிகிச்சைக்கும் வெளியே வருவதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தெற்கில் உள்ள குவாங்சோவின் உற்பத்தி மையத்திலிருந்து வடக்கே பெய்ஜிங் வரையிலான வணிகங்கள் மற்றும் குடியிருப்பு சமூகங்கள் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பெய்ஜிங்கில் ஒரு கண்காட்சி மையத்தில் கொரோனாவுக்கான மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு, போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்டவை
அமல்படுத்தப்பட்டு தீவிர கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குருதீஸ் போராளிகள் மீது துருக்கி அகோர தாக்குதல்
குருதீஸ் போராளிகள் மீது துருக்கி அகோர தாக்குதல்
ஈராக் குருதீஸ் பகுதிகளை இலக்கு வைத்து துருக்கிய இராணுவம் அகோர வான் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
குருதீஸ் Dohuk பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
துருக்கிய இராணுவம் மேற்கொள்ளும் இந்த தாக்குதலினால் ,குருதீஸ் பகுதிகள் பலத்த சேதமடைந்தும் மக்கள் உயிரிழப்பும் அதிகரித்து செல்கிறது .
துருக்கிய இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி குருதீஸ் மக்கள் உலக நாடுளில் போராட்டம் நடத்துகின்றனர் .
லண்டன் Heathrow விமான நிலைய Terminal 2. ஆயுதங்களுடன் சிலர் கைது
லண்டன் Heathrow விமான நிலைய Terminal 2. ஆயுதங்களுடன் சிலர் கைது
இன்று மதியம் 12.46 மணியளவில் ,லண்டன் Heathrow விமான நிலைய Terminal 2, வைத்து இருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப் பட்டுள்ளனர் .
Heathrow விமான நிலைய Terminal 2 இல் சோதனைக்கு நிறுத்தாமல் சென்ற காரினை காவல்துறையினர் துரத்திய பொழுதே மேற்படி நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் .
கைதான இருவரும் மேற்கு லண்டன் காவல்துறை நிலையத்தில் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
இது தீவிரவாத தொடர்பு பட்ட சம்பவமா என தெரியவரவில்லை .
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
உக்கிரேனில் அமெரிக்கா ஏவுகணை வெடித்து பலர் காயம்
உக்கிரேனில் அமெரிக்கா ஏவுகணை வெடித்து பலர் காயம்
உக்கிரேனில் அமெரிக்கா ஏவுகணை வெடித்து சிதறியதில் பலர் காயமடைந்துள்ளனர் .
உக்கிரேனின் Kramatorsk பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் அமெரிக்கா ஏவுகணைகள் வெடித்து சிதறியதில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
போலந்து நாட்டின் மீது வீழ்ந்து வெடித்தவை உக்கிரேன் ஏவிய ஏவுகணைகள் என்கின்ற சர்ச்சை நீடித்து செல்கிறது .
இவ்வாறான நிலையில் ,தற்பொழுது அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள் ,உக்கிரேன் நாட்டின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
49 போராளிகள் சுட்டு கொலை – இராணுவம் அறிவிப்பு
49 போராளிகள் சுட்டு கொலை – இராணுவம் அறிவிப்பு
சோமாலியாவில் அரச இராணுவத்தினருக்கு எதிராக போராடி வந்த 49 போராளிகளை சுட்டு கொலை செய்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது .
இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையி இடம்பெற்ற கடும் மோதலில் இந்த படுகொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது .
இராணுவ தரப்பிலும் பலத்த இழப்புக்கள் என்கிறது போராளி குழுக்கள் .
தொடர்ந்து அரசு மற்றும் போராளி குழுக்களுக்கும் இடையில் சமர் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
உக்கிரேனுக்கு 400 மில்லியன் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா
உக்கிரேனுக்கு 400 மில்லியன் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா
உக்கிரேனில் இடம்பெற்று வரும் போருக்கு ஆதரவாக அமெரிக்கா அரசு 400 மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது .
இவ்விதம் வழங்க படும் பெரும் தொகை ஆயுத குவியலில், ஏவுகணைகள் ,ஆட்டிலொறிகள் ,மற்றும் டாங்கிகள் உள்ளிட்டவை அடங்கு கின்றன .
ரசியா இராணுவம் தற்பொழுது நீண்ட தூர ஏவுகணைகளை பயன் படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது .
அதனால் இவ்விதமான அவசர ஆயுத உதவியினை அமெரிக்கா வழங்குவதாக அறிவித்துள்ளது .
உக்கிரேன் போர்க்களத்தை அமெரிக்கா பிரிட்டன் நாடுகளே ,முன் நின்று நடத்தி வருகின்றது .
போர் முடிவுற்றாலும் ,தற்போது உக்கிரேன் பெற்றுள்ள கடன் தொகையில் இருந்து மீளுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது .
துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு
துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு
சிரியா துருக்கி எல்லையில் தாயகம் கோரி போராடி வரும் குருதீஸ் போராளிகள் இலக்குகளை ,குறிவைத்து துருக்கிய அரச இராணுவம் தேடி அழிப்பு தாக்குதலை தொடுத்துள்ளது .
துருக்கி இராணுவத்தின் தேடி அழிப்பு தகுத்தலில் குருதீஸ் போராளிகள் பலத்த இழப்புகளை சந்தித்த வண்ணம் உள்ளன .
தமது ஆட்சி அதிகாரத்தை தாக்க வைத்து கொள்ள , மக்களிடத்தில் இனவாதத்தை தூண்டி வெற்றி பெறும் நகர்வில் ,ஆளும் துருக்கிய ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார் .

துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு
அதன் ஒரு வெளிப்பாடே குருதீஸ் புலிகள் மீதான தொடர் வலிந்து தாக்குதல்கள் அமைய பெற்றுள்ளன .
துருக்கி தலைநகரில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் பின்புலத்தில் குருதீஸ் போராளிகள் உள்ளதால் ,அவர்களை முற்றாக அழிக்கும் நோக்குடன் தாக்குதல்களை துருக்கி தீவிர படுத்தி வருகிறது .
பள்ளி வாசலுக்குள் துப்பாக்கி சூடு ஐவர் சுட்டு கொலை
பள்ளி வாசலுக்குள் துப்பாக்கி சூடு ஐவர் சுட்டு கொலை
ஆப்கான் தலைநகர் காபூல் Juaja Rauash பகுதியில் உள்ள பள்ளி வாசலுக்குள் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்கள் மீது மர்ம ஆயுததாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் சிக்கி சம்பவ இடத்தில ஐந்து பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .
தலிபான்கள் ஆட்சியில் குறித்த நாடு வீழ்ச்சியடைந்த பின்னர் ,இவ்வாறான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு 6 பேர் மரணம் 4 பேர் காயம்
அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு 6 பேர் மரணம் 4 பேர் காயம்
அமெரிக்கா Walmart store in Virginia வுக்குள் அங்கு பணி புரிந்த ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ,ஆறுபேர் பல சரக்கு கடைக்குள் பலியாகினர் .
மேலும் நான்கு பேர் படு காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை வருகின்றனர் .
துப்பாக்கி தாரியும் காயமடைந்த நிலையில் மீட்க பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான கரணம் உடனடியாக தெரியவில்லை. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி
அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி
அமெரிக்கா கடற்படை சிப்பாய்கள் மூவர் ஒரு வாரத்தில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்கா Norfolk’s கடற்படை ததளத்தில் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது .
குறித்த தற்கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
தலமை அதிகாரிகள் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் காரணமாக ,இந்த தற்கொலைகள் இடம்பெற்று இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .
எனினு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
400 பேருடன் கிரேக்கில் ஒதுங்கிய அகதி கப்பல்
400 பேருடன் கிரேக்கில் ஒதுங்கிய அகதி கப்பல்
கிரேக்கத்தில் 400 பேருடன் அகதகிகள் கப்பல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது .கிரேக் Palaiochora துறைமுகத்தில் இந்த கப்பல் தரித்துள்ளது .
பல் நாட்டு அகதிகள் .ஐரோப்பவுக்குள் நுழையும் முகமாக இவ்விதம் ,கடல் வழியாக பயணம் செய்துள்ளமை கண்டுபிடிக்க பட்டுள்ளது .
பிரிட்டனுக்குள் நுழையுமுகமாக ஐரோப்பிய துறைமுக பகுதிகளை இலக்கு வைத்து ,அகதிகள் நுழைந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
வெடித்து சிதறிய காஸ் 41 பேர் மரணம்
வெடித்து சிதறிய காஸ் 41 பேர் மரணம்
வடக்கு ஈராக் Duhok பகுதியில் எரிவாயு வெடித்து சிதறியதில் 41 பேர் படு காயமடைந்துள்ளனர் .
திடீரென ஏற்பட்ட எரிவாயு கசிவினால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
குறித்த கட்டடம் முற்றாக வெடித்து சிதறிய நிலையில் காண படுகிறது .
இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
சீனாவில் வெடித்து சிதறிய பக்டரி 38 பேர் மரணம்
சீனாவில் வெடித்து சிதறிய பக்டரி 38 பேர் மரணம்
சீனா மத்திய Henan மாகாணத்தில் அமைய பெற்றுள்ள பக்டரீ ஒன்று வெடித்து சிதறியதில் ,சம்பவ இடத்தில 38 பேர் பலியாகியும் ,.டசின் கணக்கானோர் படு காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் சில ஆபத்தான நிலையில் உள்ளனர் .
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .இந்த வெடிப்பு சம்பவத்தால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது .
தீவிரவாதிகளினால் 100 பேர் கடத்தல்
தீவிரவாதிகளினால் 100 பேர் கடத்தல்
நையீரியாவில் தீவிரவாதிகள் 100 பேர் கடத்தி செல்ல பட்டுள்ளனர் .
ஆயுத முனையில் நுழைந்த தீவிரவாதிகள் 14 வயது முதலான இளம் பெண்களையும் கடத்தி சென்றுள்ளனர் .
மூன்று கிராமங்களை சேர்ந்த 100 க்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு கடத்தி செல்ல பட்டுள்ளனர் .
காணமல் போனவர்களை மீட்கும் பணியில் அரச இராணுவம் ஈடுபட்டுள்ளது.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 162 பேர் காயம்
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 162 பேர் காயம்
இந்தியனோசியா யாவ பகுதி மலைக்கு அருகில் உள்ள பகுதிகளில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி 1262 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் .
வீடுகள் ,வாகனங்கள் என்பன பலமாக தகர்ந்த நிலையில் காட்சி அலிகின்னா .
இந்த அந்தரத்தினால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை .
சேதங்கள் இழப்புகள் மேலும் அதிகரிக்க படலாமா என அஞ்ச படுகிறது .
துருக்கி இராணுவம் மீது தாக்குதல் 9 பேர் காயம்
துருக்கி இராணுவம் மீது தாக்குதல் 9 பேர் காயம்
சிரியா துருக்கி எல்லை வழியில் அமைக்க பட்டிருந்த துருக்கி இராணுவத்தினரை ,இலக்கு வைத்து நடத்த பட்ட ,ரொக்கட் தாக்குதலில் 9 இராணுவத்தினர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு ,சிகிச்சைக்கு அனுப்பி வைக்க பட்டனர் .இந்த தாக்குதலில் கவச வாகனங்கள் சேதமாகின .
துருக்கி இராணுவத்தினர் குருதீஸ் போராளிகளை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .
உக்கிரேனில் திருட்டில் ஈடுபட்டுள்ள ரசியா இராணுவம்
உக்கிரேனில் திருட்டில் ஈடுபட்டுள்ள ரசியா இராணுவம்
உக்கிரேன் நாட்டில் ரசியா கட்டு பாட்டில் விளங்கிய Kakhovka பகுதி மீளவும் உக்கிரேன் இராணுவம் வசம் வீழ்ந்தது .
இங்கு இடம்பெற்ற உக்கிர சமரில் ,உக்கிரேன் மக்கள் வீடுகளில் இருந்த பொருட்களை ,ரசியா இராணுவம் கொள்ளையடித்துள்ளது .
அது மட்டுமல்லாது அங்கிருந்த ,மிதி வண்டிகளையும் திருடி சென்றுள்ளது என உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .மேற்படி சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .
தொடர்ந்து உக்கிர சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
மனைவி பிள்ளைகளை வீட்டோடு எரித்து கொன்ற கணவன் – இங்கிலாந்தில் பயங்கரம்
மனைவி பிள்ளைகளை வீட்டோடு எரித்து கொன்ற கணவன் – இங்கிலாந்தில் பயங்கரம்
இங்கிலாந்து Fairlisle Close, Clifton நோட்டிங்காம் பகுதியில் வீட்டோடு மூன்று வயது மற்றும் ஒரு வயது குழந்தைகளை ,எரித்து கொன்ற கணவன் கைது செய்ய பட்டுள்ளார் .
மனைவி பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
இந்த கொலைகளை இவரே புரிந்தார் என்பதால், 31 வயதுடைய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார் .தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளான.
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 5 பேர் மரணம் 18 பேர் காயம் .
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 5 பேர் மரணம் 18 பேர் காயம் .
அமெரிக்கா LGTBQ club in Colorado பகுதியிலில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ,5 பேர் பலியாகியும் 18 பேர் படுகாயமடைந்ததுள்ளனர் .
22 வயது வாலிபர் நவீன இயந்திர துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார் .
திறந்தவெளி தாக்குதலை நடத்தியதில் இவர் சம்பவ இடத்தில பலியாகினர் .
ஆயுத தாரியான 22 வயது வாலிபரும் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .
இந்த சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரிவிக்க படவில்லை .
இஸ்ரேல் தலைநகரில் குண்டு வெடிப்பு சிதறிய வாகனங்கள்
இஸ்ரேல் தலைநகரில் குண்டு வெடிப்பு சிதறிய வாகனங்கள்
இஸ்ரேல் தலைநகர் அல் அவி அருகில் உள்ள Sharon பகுதியில் பெரிய குண்டு வெடிப்பு இடப்பெற்றுள்ளது .
இந்த குண்டு வெடிப்பில் வாகனங்கள் சிதறிய வண்ணம் காட்சி அளிக்கின்றன .
எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை .
இதுவரை இந்த குண்டு தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை .
இஸ்ரேல் பலஸ்தீனம் ,லெபனான்,சிரியா,ஈரான்,ஈராக் நாடுகள் மீது வலிந்து தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ள
வேளையில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .














































