Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் மிதிவண்டிகளுக்கு புதிய சாலை அமைப்பு

கொழும்பில் மிதிவண்டிகளுக்கு புதிய சாலை அமைப்பு

இலங்கை ,கொழும்பு ; தற்போதைய எரிபொருள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளால், துவிச்சக்கரவண்டிகளின் பாவனையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ள

நிலையில், துவிச்சக்கரவண்டி பாவனையாளர்களுக்கு பிரத்தியேக ஒழுங்கை முன்னோடித் திட்டத்தை கொழும்பு நகரசபை முன்னெடுத்துள்ளது.

29 ஆம் திகதி கொழும்பு வங்கி அவென்யூவுக்கு எதிரே இந்த முன்னோடித் திட்டத்தை கொழும்பு மாநகர முதல்வர் திருமதி.ரோஸி சேனாநாயக்க ஆரம்பித்துவைத்தார்

கொழும்பில் மிதிவண்டிகளுக்கு புதிய சாலை அமைப்பு

வங்கி மாவத்தையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு பிரத்தியேக ஒழுங்கை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், துவிச்சக்கர வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன

வங்கி அவென்யூ முன்னோடித் திட்டத்திற்கு மேலதிகமாக, கொட்டாஞ்சேனை ஜோர்ஜ் ஆர்.


டி சில்வா மாவத்தையிலும் , சைக்கிள் பாதையை ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கை பிரதமர் மக்களிடம் கோரிக்கை

    இலங்கை பிரதமர் மக்களிடம் கோரிக்கை

    இலங்கை ,கொழும்பு ;நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஒரு நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமாயின் சட்டம் ஒழுங்கு மிக அவசியமாகும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

    இன்று (31) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் அங்கு மஹாநாயக்க தேரர்களின் ஆசியைப் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

    நாட்டின் எதிர்காலத்திற்காக சர்வதேச ரீதியில் எமக்கு ஆதரவுகள் கிடைக்கின்றன.

    சட்டம், ஒழுங்கை மீறியவர்கள் தற்சமயம் வன்முறை செயற்பாடுகளிலிருந்து விலகி வருகின்றனர்.

    வன்முறையில் ஈடுபட்ட அத்தகைய ஆர்ப்பாட்டக்காரர்களை முழுமையாக அகற்றி மீள கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம்

    மற்றும் அலரி மாளிகை ஆகியவை மீள் திருத்தப்பட்டு மீளவும் இயக்கச் செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.


    இது மிக குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளப்பட்டமை சிறப்பம்சமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

      Posted in இலங்கை செய்திகள்

      இனந்தெரியாத சடலமொன்று கண்டுபிடிப்பு

      இனந்தெரியாத சடலமொன்று கண்டுபிடிப்பு

      இலங்கை , இரத்தினபுரி – லெல்லோபிட்டிய பிரதேசத்தில் இனந்தெரியாத சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

      லெல்லோபிட்டிய, சன்னஸ்கம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

      உயிரிழந்தவர் கொடகவெல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

      சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

        இலங்கையில் அதிகரிக்கும் விபச்சாரம்
        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் அதிகரிக்கும் விபச்சாரம்

        இலங்கையில் அதிகரிக்கும் விபச்சாரம்

        இலங்கையில் அதிகரிக்கும் விபச்சாரம் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள இலங்கையில் பெண்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் இவர்களுள் பலர் தமது

        வாழ்வாதாரத்துக்காக பாலியல் தொழில்களை நாடுவதாகவும் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

        ANI செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

        இந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக பெண்கள் பாலியல் தொழில்களை நாடும் நிலை அதிகரித்துள்ளதாகவும் பாலியல் தொழிலில்

        ஈடுபடும் பெண்களின் உரிமைகளுக்காக செயற்படும் Standup Movement lanka என்ற அமைப்பு குறித்த செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

        கடந்த மாதத்தில் இலங்கையில் பாலியல் தொழிற்றுறை 30 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

        பொருளாதார நெருக்கடியால் தொழில்வாய்ப்பை இழக்கும் பெண்கள் மசாஜ் நிலையங்களுக்கு


        தொழிலுக்கு செல்வதுடன் பாலியல் ரீதியான தொழில்களில் ஈடுபடுவதாகவும் குறித்த செய்தி சேவை தெரிவித்துள்ளது.

        வீரம் விளைந்த தமிழர்களுக்கு நடந்த மிக கொடூரமான செயலாக இதனை பார்க்க முடிகிறது .தமிழர் சமூகம் தெளிந்து இந்த விடயங்களை தடுக்க முடியும்

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் ஒருலட்சம் மக்கள் உணவு இன்றி தவிப்பு

          இலங்கையில் ஒருலட்சம் மக்கள் உணவு இன்றி தவிப்பு

          இலங்கையில் ஒரு இலட்சம் குடும்பங்கள் தினமும் உணவு கிடைக்காமல்

          பட்டினியில் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.

          மேலும், 75,000 குடும்பங்கள் தினசரி என்ன சாப்பிடுவது என்று தெரியாமல், உணவு நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகவும்,

          40,000 பேர் ‘சேலைன் ‘ மூலம் போஷாக்கை பெறுவதாகவும் அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

          தற்போது நிலவும் நெருக்கடிக்கு உரிய தீர்வுகள் உடனடியாக வழங்கப்படாவிட்டால்


          இந்த நிலைமை மிகவும் மோசமானதாக அமையும் எனவும் படகொட மேலும் தெரிவித்துள்ளார்

            Posted in இலங்கை செய்திகள்

            தொண்டமானாறு கடலில் மிதக்கும் மீன்கள்

            தொண்டமானாறு கடலில் மிதக்கும் மீன்கள்

            தொண்டமானாறு கடல் நீர் ஏரி பகுதியின் நன்னீர் அணைக்கட்டின் தெற்கு பகுதியில் உள்ள கடல் நீரேரியில் மீன்கள் இறந்து மிதக்கின்றன.

            கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே போன்ற சம்பவம் பதிவாகி இருந்ததுடன், மீண்டும் எட்டு வருடங்களுக்கு பின்னர் இவ்வாறு மீன்கள் இறந்து காணப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்

            இது காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

            இது தொடர்பில் -யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபா சிவகுமாரிடம்வினவிய பொழுது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

            கடந்த மாத காலப்பகுதியில் கடும் வெப்பம் காரணமாக வெப்பநிலை 30 பாகை செல்சியஸ்க்கு மேல் காணப்பட்டது.

            தொண்டமானாறு கடலில் மிதக்கும் மீன்கள்

            இதன் காரணமாக நன்னீர் அணைக்கட்டின் தெற்கு பகுதி, இந்து சமுத்திரத்துடன் தொடுகையுடன் உள்ள பகுதியுடன் ஒப்பிடும் பொழுது கடும் வெப்பம் காரணமாக நீர் வற்றி, நீர் மட்டம் மிகவும் குறைவடைந்து காணப்படுகிறது.

            இதன் காரணமாக உப்பு செறிவு அதிகரித்து காணப்படுகிறது. அத்துடன் ஒக்சிஜனின் அளவும் குறைவடைந்துள்ளமை அவதானிக்க கூடியதாக உள்ளது.

            குறிப்பாக உப்பு செறிவு அதிகரிப்பும் வெப்பநிலை அதிகரிப்பும், வளிமண்டல ஒக்ஸிஜனை நீரில் கரையும் தகவை மேலும் குறைவடைய செய்யும்

            இதன் காரணமாக இங்குள்ள மீன்களுக்கு ஒக்சிசன் கிடைக்காத காரணத்தினால் இந்த இறப்பு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்

              Posted in இலங்கை செய்திகள்

              மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகளுக்கான பிரத்தியேக ஒழுங்கை

              மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகளுக்கான பிரத்தியேக ஒழுங்கை

              இலங்கை ,மட்டக்களப்பு மாவட்டத்தில் துவிச்சக்கர வண்டி பாவனை அதிகரித்துள்ள நிலையில் துவிச்சக்கர வண்டிகளுக்கான,


              பிரத்தியேக ஒழுங்கை அமுலாக்கும் முன்னோடி வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாநகர

              சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.

              குறித்த முன்னோடி வேலைத்திட்டத்தினை மட்டக்களப்பு மாநகர சபையுடன் மட்டக்களப்பு வீதி
              அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து முன்னெடுத்துவருகின்றன.

                Posted in இலங்கை செய்திகள்

                அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வகட்சி அரசாங்கம்

                அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வகட்சி அரசாங்கம்

                அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்கி நாடு எதிர்நோக்கியுள்ள சமூக, பொருளாதார

                மற்றும் அரசியல் சவால்களை முறியடிப்பதற்கு புதிய பாதையில் பயணிப்பதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

                இன்று (30) பிற்பகல் மல்வத்து மகாநாயக்க அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரை சந்தித்த

                ஜனாதிபதி அவர்கள், நாட்டை கட்டியெழுப்புவதற்காக அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டத்தில் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

                மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.

                ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று, (30) மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் மற்றும்

                அனுநாயக்க தேரர்கள் தலைமையிலான நிறைவேற்று சபை மகாசங்கத்தினரை சம்பிரதாயபூர்வமாக சந்தித்து, ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

                அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வகட்சி அரசாங்கம்

                மல்வத்து மகா விகாரையில் கூடியிருந்த மல்வத்து பீடத்தின் மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்ட

                அனுநாயக்க தேரர்கள் மற்றும் நிறைவேற்று சபை தேரர்கள் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு, ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.

                அதனைத் தொடர்ந்து, அஸ்கிரி மகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு, அஸ்கிரி மகா விகாரை மண்டபத்தில்

                ஒன்று கூடியிருந்த, அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர், அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட

                நிறைவேற்று சபை தேரர்கள் பிரித் பாராயணம் செய்து ஆசிர்வாதம் வழங்கினர்.

                மல்வத்து மகா விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி அவர்களுக்கு ஆசி வழங்கும் விசேட நிகழ்வின்போது, ​​மல்வத்து மகா விகாரையின் நிறைவேற்று சபை உறுப்பினர் ராஜகீய பண்டித அதி

                வணக்கத்திற்குரிய மஹவெல ரதனபால தேரர் சிறு அனுசாசனை உரை நிகழ்த்தி, பொருளாதாரத்தை மீட்டெடுத்து நாட்டை அபிவிருத்தியை நோக்கி

                கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு சக்தி இருப்பதாக தெரிவித்தார்.

                தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் புகழைப் பெற்ற, முதிர்ச்சியும் திறமையும் கொண்ட அரசியல்வாதியான அவர், பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள

                அன்றாடப் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து, தேவையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவார் என்று மகாசங்கத்தினர் நம்புவதாகவும் தேரர் குறிப்பிட்டார்.

                மல்வத்து மகா விகாரை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்.

                ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, சம்பிரதாயபூர்வமாக, நான் செய்ய வேண்டிய இரண்டு கடமைகள் இருந்தன. பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிடுதல். அதற்கு முன்னர் சம்பிரதாயபூர்வமாக மல்வத்து –

                அஸ்கிரி மகா விகாரைகளில் ஆரம்பித்து ஏனைய விகாரைகளில் உள்ள மகாநாயக்க தேரர்களை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்வது,

                உங்களிடமிருந்து பெற்ற ஆசீர்வாதங்களுக்கும் கிடைத்த சக்திக்கும் நான் குறிப்பாக நன்றி கூறுகிறேன். இந்த நேரத்தில், நீங்கள் வழங்கிய ஆதரவு எனது பணிகளுக்கு பலமாக அமைந்தது.

                அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வகட்சி அரசாங்கம்

                நாடும் நாட்டின் பொருளாதாரமும் அழிவின் விளிம்பில் இருந்ததால்தான் நான் முதலில் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டேன். ஒரு நாடாக நாம் இன்று மிகவும் கடினமான இடத்தில் இருக்கிறோம். இந்த ஆண்டு நாட்டின்

                பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும். சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு, இந்த பொருளாதாரத்தை சீர்படுத்தி 2023, 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய வகையில்

                பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நான் செயற்பட்டு வருகின்றேன். இது கடினமானதொரு பணியாகும். ஆனால் அதனை செய்யவில்லை என்றால், அது

                இன்னும் கடினமாக இருக்கும். மருந்து கொடுத்து நோயாளியை குணப்படுத்த முயற்சி செய்வதா அல்லது மருந்து கொடுக்காமல் நோயாளியை இறக்க விடுவதா என்று பார்க்க வேண்டும்.

                இன்று, இந்தப் பிரச்சினைகளுடன் அரசியலமைப்பில் பல சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டுள்ளன. அதை அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த சீர்திருத்தங்கள் மூலம்

                பல்வேறு அழுத்தங்கள் வந்தன. சிறந்த, வலிமையான, நல்ல சக்திகள். அதேபோன்று ஒரு நாட்டை அழிக்கக்கூடிய அழுத்தங்கள்.

                அவை அனைத்துக்கும் மத்தியில் வந்து தற்போது நான் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்றுள்ளேன்.

                நீங்கள் உபதேசித்தபடி, நாங்கள் மிகவும் கடினமான இடத்தில் இருக்கிறோம். பொருளாதார சிக்கல்கள் உள்ளன. அரசியல் பிரச்சினைகள் உள்ளன. மகாநாயக்க தேரர்கள் சமர்ப்பித்த ஆலோசனைகளை நான் வாசித்தேன்.

                அதில் பல நல்ல விடயங்கள் உள்ளன. ஜனாதிபதியாக நான் புதிய பாதையில் செல்ல விரும்புகிறேன். அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து அந்தப் பயணத்தை மேற்கொள்ள விரும்புகிறேன். சர்வகட்சி அரசாங்கத்தை

                உருவாக்குங்கள். அதற்கு இரண்டு வழிகள் உள்ளன. அதில் ஒன்று 19ஆவது திருத்தத்தை முன்வைக்க வேண்டும். அனைவரின் விருப்பத்திற்கும் ஏற்ப

                திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதிலிருந்து தேசிய அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். இரண்டாவதாக, பாராளுமன்றத்தில் கண்காணிப்பு ஆணைக்குழுவை நியமித்து, அதன் மூலமும் பங்கேற்கும்

                வாய்ப்பை வழங்கலாம். அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த தேசிய சபைக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

                அத்துடன் புத்திஜீவிகள் எவ்வாறு இதனை ஒழுங்கமைப்பது, சீர்திருத்தங்கள் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது அவை அனைத்தும் செய்யப்படும். இவை நமக்கு முக்கியமான விடயங்கள் ஆகும்.

                அதனால், சர்வகட்சி அரசாங்கம் அல்லது அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தை அரசாங்கமாக ஸ்தாபித்து

                வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நான் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அறிவித்தேன்.

                உங்களின் அறிவுரைக்கும், கொள்கைக்கும் அமைய நான் செயற்படுவேன். அதற்காக மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட நிறைவேற்று சங்க சபையின்

                ஒத்துழைப்பும் பொதுமக்களின் ஆதரவும் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கிறேன்.

                இப்போது உருவாகியுள்ளது கடைசி சந்தர்ப்பமாகும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்.

                குறைந்தபட்சம் ஒரு பொதுவான திட்டமொன்றையாவது உருவாக்க வேண்டும். இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே எமது முதன்மைப் பணியாகும். அவற்றை முன்னெடுக்கும்போது எமது பௌத்த தர்மத்தைப் பாதுகாக்கும்

                பணியையும் நாம் மறக்க மாட்டோம். நாம் இன்று லிச்சவி மன்னன் குழந்தைகளுக்கு கூறிய அறிவுரைகளை பின்பற்றினால் இந்த நாட்டை

                முன்னேற்ற முடியும். அதில்தான் நமது எதிர்காலம் தங்கியுள்ளது. விசேடமாக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

                ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், ஜனாதிபதியின் சிரேஷ்ட
                ஆலோசகர் ருவன் விஜயவர்தன உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

                Posted in இலங்கை செய்திகள்

                ரணில் தலதா மாளிகையில் வழிபாடு

                ரணில் தலதா மாளிகையில் வழிபாடு

                ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் காலை கண்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்குச் சென்று சமயக்கிரியைகளில் ஈடுபட்டார்.

                தலதா மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், கண்டி நகரபிதா திரு.கேசர சேனநாயக்க மற்றும் அமைச்சர்களினால் வரவேற்கப்பட்டு தலதா மாளிகையின் பிரதான நுழைவாயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

                ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல மற்றும் நான்கு மகா தேவாலய பஸ்நாயக்க நிலமேமார் வரவேற்றனர்.

                அதன் பின்னர், தலதா மாளிகையில் புனித தந்ததாது பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மேல்மாடிக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், அங்கு மலர்

                அஞ்சலி செலுத்தி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

                சமய வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், தலதா மாளிகையில் சிறப்பு விருந்தினர்களுக்காக

                ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்துக்குக்குச் சென்று நினைவுக் குறிப்பேட்டில் நினைவுக் குறிப்பொன்றை இட்டார்.

                ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று பிற்பகல் மல்வத்து – அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்திக்க உள்ளார்.

                அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, திலும்

                அமுனுகம, குணதிலக ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், ஜனாதிபதி ஆலோசகர் ருவன் விஜயவர்தன, ஐ.தே.க பொதுச் செயலாளர்

                பாலித ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ஐக்கிய லக் வனிதா.

                முன்னணியின் தலைவி சாந்தினி கோன்கஹகே, கம்பளை நகரபிதா சமந்த அனுரகுமார


                உள்ளிட்ட கண்டி மாவட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  காவல்துறையால் அப்பாவி மக்கள் 13 பேர் கைது

                  காவல்துறையால் அப்பாவி மக்கள் 13 பேர் கைது

                  இலங்கை ; இலங்கையில் எரிபொருள் பெற்றிட எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நின்ற 13 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                  இவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                  மக்கள் மத்தியில் மோதல் நிலை ஏற்படுத்தி அமைதியின்மை விளைவித்தனர் என்கின்ற குற்ற சாட்டில் இந்த அப்பாவி மக்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                  கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    காலிமுக போராட்டக்காரர்கள் கூட்டத்தில் மனோ கணேசன்

                    காலிமுக போராட்டக்காரர்கள் கூட்டத்தில் மனோ கணேசன்

                    அரசியல் கைதிகள் விடுதலை என்ற கோஷத்தில் தமிழ் கைதிகளுக்கு முதலிடம் இருக்க வேண்டும்
                    – காலிமுக போராட்டக்காரர்கள் கூட்டத்தில் மனோ கணேசன்

                    காலிமுக போராட்டக்காரர்கள் என்ற முறையில் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். ஆட்கடத்தல், முறைதவறிய கைது, அவசரகால சட்டம், பயங்கரவாத தடை சட்டம், அரசியல் கைதிகள் விடுதலை, மனித உரிமை பேணல், மக்களுக்கு

                    நிவாரணம் ஆகியவற்றை நாம் ஏற்கிறோம். இவை எங்களதும் நீண்டகால கோரிக்கைகள்தான். பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிப்பதில் 10, 15, 20 வருடங்களாக சிறையில் இருந்து, தம் வாழ்வையே இழந்து

                    நிற்கும் தமிழ் அரசியல் கைதிகள் முதலிடம் பெறவேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். இல்லாவிட்டால் எமது கட்சி உங்களுடன் ஒத்துழைக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

                    காலிமுக போராட்டக்காரர்கள் கூட்டத்தில் மனோ கணேசன்
                    காலிமுக போராட்டக்காரர்கள் கூட்டத்தில் மனோ கணேசன்

                    காலிமுக போராட்டக்கார இயக்கத்தினர் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் நடத்திய கலந்துரையாடலில் அழைப்பின் பேரில் கலந்துக்கொண்ட மனோ எம்பி மேலும் கூறியதாவது,

                    ரணில் இன்று ஜனாதிபதி. அவருடன் அரசியல் காரணங்களுக்காக எதிரணி என்ற முறையில் நாம் முரண்படலாம். முரண்பாடுகள் உள்ளன. ஆனால், அவர் சட்டப்படித்தான் ஜனாதிபதி ஆகியுள்ளார். இடைக்கால ஜனாதிபதி ஒருவர்

                    பாராளுமன்றத்தில்தான் தெரிவு செய்யப்பட முடியும் என சட்டம் கூறுகிறது. அதன்படி அவர் 134 வாக்குகளை பெற்று அவர் ஜனாதிபதி ஆகியுள்ளார்.

                    தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பீக்கள் மாற்று வேட்பாளருக்கு வாக்களித்தோம். அது எம் அரசியல் கொள்கை நிலைப்பாடு. ஆனால், ரணில் இன்று ஜனாதிபதி.

                    இன்றைய பாராளுமன்றம் மக்களின் மனவுணர்வுகளை பிரதிபலிக்கவில்லை. வெளியே மக்கள் மத்தியில் தேர்தல் நடந்திருந்தால், முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும்.

                    ஆகவே இயன்றவரை சீக்கிரம் புதிய ஒரு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டு, புதிய மக்கள் ஆணை பெறப்பட்டு, புதிய பாராளுமன்றம் அமைய வேண்டும்.

                    ஆகவே சீக்கிரம் “புதிய ஒரு பாராளுமன்ற தேர்தல் தேவை”, என்பதையும் மேலதிக ஒரு கோஷமாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

                    இங்கே என்னருகில் அமர்ந்து இருக்கும் முன்னிலை சோஷலிச கட்சி நண்பர் புபுது ஜாகொடவின் கட்சி பொது செயலாளர், குமார் குணரத்தினம் பாராளுமன்றத்துக்கு வெளியே “மக்கள் சபை” அமைய வேண்டும் என கூறுகிறார்.

                    காலிமுக போராட்டக்காரர்கள் கூட்டத்தில் மனோ கணேசன்

                    எம்மை பொறுத்த அளவில், பாராளுமன்றம்தான் இன்று இந்நாட்டில் உள்ள மிகப்பெரும் “மக்கள் சபை”. அந்த பாராளுமன்றத்தை எரிக்க முடியாது. ஆகவே அதை தேர்தல் மூலம் கைப்பற்றுங்கள்.

                    நேற்று மாலை, ஜனாதிபதி ரணில், எமது கட்சிக்கும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித்தில் தேசிய அரசு, அமைச்சர் பதவிகள் பற்றி எதுவும் இல்லை.

                    நாடு இன்று எதிர்கொள்ளும் அரசியல், பொருளாதார, சமூக சவால்களை சந்திக்க தேசிய கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள எம்மை அவர் அழைத்துள்ளார்.

                    இதுபற்றி நமது கட்சி அரசியல் குழு முடிவு செய்யும். ஆனால், நாம் இந்த தேசிய கலந்துரையாடலுக்கான அழைப்பை சாதகமாக பரிசீலிப்போம்.

                    போராட்டக்காரர்கள் மீதான, ஆட்கடத்தல், முறைதவறிய கைது, அவசரகால சட்ட பயன்பாடு, பயங்கரவாத தடை சட்ட பயன்பாடு ஆகியவற்றை நிறுத்துங்கள் என நாம் அவரை சந்தித்து கோருவோம்.

                    இதுதான் ஜனநாயக கதவுகளை திறக்கும், தடைகளை நீக்கும் தேசிய கலந்துரையாடல். அதை அவருக்கு எம்மால் சொல்ல முடியும்.

                    பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கைதான்.

                    அதையும் நாம் ஜனாதிபதி ரணிலிடம் சொல்வோம். உங்கள் கோரிக்கை பட்டியலில் 10, 15, 20
                    வருடங்களாக சிறையில் இருந்து, தம் வாழ்வையே இழந்து நிற்கும் தமிழ் அரசியல் கைதிகள் முதலிடம்
                    பெறவேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். இல்லாவிட்டால் உங்களுடன் எமது கட்சி உங்களுடன் ஒத்துழைக்க முடியாது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      தனியார் பேருந்து உரிமைத்தை இரத்து செய்யும் அரசு

                      தனியார் பேருந்து உரிமைத்தை இரத்து செய்யும் அரசு

                      இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் எரிபொருள் தட்டு பாடு காரணமாக சேவையில் ஈடுபடாமல் தனியார் பேரூந்துகள் உள்ளன .

                      இவ்வாறு சேவையில் ஈடுபடாமல் உள்ள தனியார் பேருந்துகளின் உரிமங்களை இரத்து புரியும் படி பந்துல குணவர்த்தன உத்தரவு பிறப்பித்துள்ளார்.


                      இவரது இந்த அறிவிப்பு தனியார் பேரூந்து உரிமையாளர்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார கார்

                        இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார கார்

                        இலங்கை ,கொழும்பு ; ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுமையான மின்சார மோட்டார் காரை (29) சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.

                        இந்த காருக்கு ‘Ideal Moksha’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

                        இந்த புதிய Ideal Moksha கார், உலகம் முழுவதும் அதிக பிரபலம் பெற்ற ஆஸ்டின் மினி மொக் காரை போன்றது

                        இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார கார்

                        அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகளை பயன்படுத்தி அதிக திருப்திகரமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த காருக்கு ‘Moksha’ என பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

                        Ideal Moksha கார் இலங்கையின் பாதைகளுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதன் தோற்றம், இடவசதி, பயண சொகுசு என்பவற்றின் ஊடாக இந்த தயாரிப்பின் தனித்துவத்தைக் காட்டுகின்றது.

                        நான்கு சக்கர மின்சார Electric Codricycle மாதிரியை சேர்ந்த
                        Ideal Moksha மோட்டார் கார் 22.46 kWh லித்தியம் பெட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          கள்ள மணல் ஏற்றிய கும்பல் யாழில் கைது

                          கள்ள மணல் ஏற்றிய கும்பல் யாழில் கைது

                          இலங்கை ,யாழ்ப்பாணம், – கொடிகாமம் கெற்பேலி பகுதியில் உளவு இயந்திரம் மூலம் மணலை ஏற்றியவர்கள் இராணுவத்தால் கைது செய்யப் பட்டுள்ளனர் .

                          கொடி காமம் பகுதியியில் கள்ள மணல் ஏற்றுவதாக இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து விரைந்து வந்த இராணுவத்தினர் மணல்

                          ஏற்றியவர் இருவரை கைது செய்ததுடன் உளவு இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

                          மேலும் இதுகுறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

                            Posted in இலங்கை செய்திகள்

                            காதலிக்கு சண்டை போட்ட நண்பர்கள் கத்தி வெட்டு தாக்குதல்

                            காதலிக்கு சண்டை போட்ட நண்பர்கள் கத்தி வெட்டு தாக்குதல்

                            உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரப்பாணக் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

                            ரப்பாணக் தோட்டத்தை சேர்ந்த ஐவர் கொண்ட இளைஞர் குழு ஒன்றுக்கிடையில் (29) இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இளைஞர்

                            ஒருவரை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உடப்புஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

                            இந்த படுகொலை சம்பவத்தில் வி.தனோஷன் (வயது 19) என்ற இளைஞர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

                            அதேநேரத்தில் இக்குழு சண்டையில் (21) வயதுடைய இளைஞர் ஒருவரும் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட

                            வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் உடப்புஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

                            மேலும் இந்த சம்பவத்தில் கத்தி வெட்டை நடத்திய இளைஞர் தானாகவே பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஆஜராகியுள்ளதுடன் சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

                            காதலிக்கு சண்டை போட்ட நண்பர்கள் கத்தி வெட்டு தாக்குதல்

                            அத்துடன் குறித்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மேலும் இரு இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் மரண

                            விசாரணையை வலப்பனை நீதிமன்ற நீதிவான் மேற்கொண்ட பின் சடலத்தை பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

                            சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.

                            இந்த கத்தி வெட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் நண்பர்கள் இவர்கள் அனைவரும் (29) மாலை மது அருந்திய பின் காதல் பிரச்சினை ஒன்றுக்காக ஏற்பட்ட வாய்தர்க்கத்தினால் மோதலில் ஈடுப்பட்டுள்ளனர்.

                            இதன்போது கத்தி வெட்டை நிகழ்த்திய இளைஞரை ஏனைய இளைஞர்கள் சரமாறியாக தாக்கியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்

                            உடப்புஸ்ஸலாவை நகரில் உள்ள ஹாட்வெயார் ஒன்றில் வெட்டு கத்தி ஒன்றை பணம் கொடுத்து வாங்கி சென்று தன்னை தாக்கிய இளைஞர்களை வெட்டியுள்ளார்.

                            இதில் ஒரு இளைஞரின் உயிர் பரிபோகியுள்ளது, மேலும் ஒரு இளைஞர் வெட்டு காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில்


                            அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

                              21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

                              இலங்கை,கொழும்பு ; ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதான பொருளாதார நிலையங்களின் நுழைவாயிலை மறைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக்

                              கூறப்படும் 21 போராட்டக்காரர்களின் வெளிநாட்டுப் பயணத்தை உடனடியாகத் தடை செய்யுமாறு நேற்று (28) பிற்பகல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                              ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் குறித்த சந்தேகநபர்கள் வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த

                              தகவலின்படி, கோட்டை பொலிஸ் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

                              இவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உடனடியாக கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களுக்கு அறிவிக்குமாறு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

                              21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

                              சங்கைக்குரிய வீகொடவத்த காஸ்யப தேரர், திசர நுவந்த அனுராத, ருமேஸ் இந்திக்க, எல்.என்.டி பெரேரா, ஆர்.ஏ. ராஜபக்ச, சிறில் மனதுங்க, இசுரு வர்ணகுல, ரொஷான் அலி டானிஷ் அலி, சண்டிமால் கமகே, டி.ஆர்.டி. பெந்தர

                              ஆரச்சி, எம். காசிம், என். எம். தௌபிக், நிலந்த சமித் பெர்னாண்டோ, பந்துல பிரபாத், சமீர மதுசங்க சிறிவர்தன, எச். எம். டி. ஜி. மெனிகா, எம்.ஆர். சாரக

                              கிம்ஹான், சதுரிகா சரோஜினி, ஜே. நிலந்த, எம். நிஷாந்தி மற்றும் சுதத் லக்ஷ்மன் ஆகிய 21 பேருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

                              கடந்த 13ம் திகதி, தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களை மிரட்டி, நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஈடுபட்ட ரொஷான் அலி டானிஷ்

                              அலி மற்றும் சமிந்த கலும்பிரிய அமரசிங்க ஆகியோரின் வெளிநாட்டு பயணத்தை இடைநிறுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.

                              கறுவாத்தோட்ட பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

                              நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பிரகாரம், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட டானிஷ் அலியை எதிர்வரும் 1ஆம் திகதி

                              நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடப்பட்டது.சந்தேக நபரின் அடையாளப் பிடியாணையையும் பிரதம நீதவான் இரத்துச் செய்தார்.

                              அத்துடன், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் அழைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் டெம்பிடியே சுகதானந்த

                              தேரரையும் கைது செய்வதற்காக கோட்டை நீதவான் திலின கமகே பிடியாணை பிறப்பித்துள்ளார்.

                              கல்வி அமைச்சுக்கு முன்னால் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட

                              ருஹுணு பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவர் என்னடி வேரங்க புஷ்பக டி சில்வாவை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

                              இதேவேளை, பாராளுமன்றம் செல்லும் பொல்துவ சந்திக்கு அருகில் (13ஆம் திகதி) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலவரச் சூழலுக்கு தூண்டியதாக

                              கூறப்படும் போராட்டத்தின் தீவிர உறுப்பினரான பெத்தும் கர்னர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (28ஆம் திகதி) கைது செய்யப்பட்டுள்ளார்.

                              கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமரை வெளியேறுமாறு வலியுறுத்தி பொல்துவ சந்திக்கு அருகில் போராட்டம் நடைபெற்றுக்

                              கொண்டிருந்த வேளையில் பெரும் கும்பலை அந்த இடத்திற்கு வரவழைத்து பாராளுமன்றத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு குறிப்பிடுகின்றது.

                              அன்றைய தினம், ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலாவது பாதுகாப்பு அரணை உடைத்து, இரண்டாவது பாதுகாப்பு வேலியில் கடமையாற்றிய இராணுவத்தின் பாதுகாப்புப் படையினருடன் மோதலுக்குச் செல்ல முற்பட்டுள்ளனர்.

                              அங்கு நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க நடவடிக்கை

                              எடுத்ததுடன், அங்கு 24 பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தாக்கப்பட்டனர். மேலும், போராட்டக்காரர்கள் இரு இராணுவ வீரர்களை தாக்கி அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகளையும் திருடிச் சென்றதாக தெரிவிக்பட்டது

                              இச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக திரு.பெத்தும் கெர்னர் கடந்த 18ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த

                              போதிலும், அவர் அன்றைய தினம் அங்கு ஆஜராகாத போதிலும், நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவிடம் சரணடைந்தார்.

                              அதன்படி அவர் கைது செய்யப்பட்டதாக அந்த பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

                              இராணுவ மருத்துவப் பிரிவில் லெப்டினன்டாக இருந்து வெளியேறி இங்கிலாந்து சென்றுள்ள இவர், அங்கிருந்து இலங்கையில் இளம் சமூகத்தை

                              இணையத்தில் போராட்டத்துக்கு தூண்டிவிட்டு வருவது தெரியவந்துள்ளது. காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பமானதும், இந்நாட்டிற்கு வந்த பெத்தும் கெர்னரை


                              போராட்ட களத்தில் இருந்து விரட்டியடிக்க அங்கிருந்த ஒரு குழுவினர் செயற்பட்டுள்ளனர்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கையில் புதிய சட்டம் ஜனாதிபதி பல்லு பிடுங்க படுமா

                                இலங்கையில் புதிய சட்டம் ஜனாதிபதி பல்லு பிடுங்க படுமா

                                நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையில் 22ஆம் திருத்தத்தை மீண்டும் திருத்தி, 19 ஆம் திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட விடயங்களையும்,

                                அதில் இருந்த பலவீனமான சரத்துக்களை நீக்கி 19ஐ விஞ்சிய புதிய திருத்தும் ஒன்றினை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

                                கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

                                22ஆம் திருத்த சட்டம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு, வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அப்போதைய ஜனாதிபதி

                                கோட்டாபய ராஜபக்‌ஷ 22 ஆம் திருத்தத்திற்கு உப இணைப்புகள் சிலவற்றை உள்ளடக்கினார். அது மீண்டும் நிறைவேற்று அதிகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

                                இலங்கையில் புதிய சட்டம் ஜனாதிபதி பல்லு பிடுங்க படுமா

                                எனினும், இப்போது அரசாங்கம் முழுமையாக மாறியுள்ள காரணத்தினால் மீண்டும் அமைச்சரவையில் யோசனை ஒன்றினை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி முன்வைத்த இணைப்புகளை நீக்கி மீண்டும் 19 ஆம் திருத்தத்தில்

                                கொண்டுவரப்பட்ட விடயங்களையும், அதில் இருந்த பலவீனமான சரத்துக்களை நீக்கி 19 ஆம் திருத்தத்தை விஞ்சிய புதிய திருத்தும் ஒன்றினை கொண்டுவர அறிவுறுத்தியுள்ளேன்.

                                குறித்த சட்டமூலம் அமைச்சரவை காரியாலயத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த திங்கட்கிழமை அமைச்சரவையில் அனுமதியை பெற்ற பின்னர்

                                வர்த்தமானி அறிவித்தலுக்கு விடவும், அடுத்த ஏழு நாட்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

                                இது குறித்து சகல தரப்புடனும் கலந்துரையாடி சகலராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் அரசியல் அமைப்பு திருத்தத்தை

                                கொண்டுவரவும், அதேபோல் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைத்து நாட்டிற்கு பொருத்தமான புதிய அரசியல் அமைப்பு ஒன்றினை உருவாக்கவும் அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

                                பாதுகாப்பபு அமைச்சு ஜனாதிபதியிடம் இருக்க வேண்டும் என்பதில் மாற்றம் இல்லை, இந்த அரசியல் அமைப்பின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சு

                                மாற்றப்பட வேண்டும் என்றால் சர்வசன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டும்.
                                அதற்கு இப்போது வாய்ப்பில்லை என்றார்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  அமெரிக்கா இலங்கை திடீர் சந்திப்பு

                                  அமெரிக்கா இலங்கை திடீர் சந்திப்பு

                                  பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

                                  பிரதமர் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

                                  நாட்டின் பொருளாதார சவால்களை சமாளிக்க அமெரிக்கா எந்த வழிகளில் ஆதரவை வழங்க முடியும் என்பது குறித்து இதன்போது கவனம்

                                  செலுத்தப்பட்டதாக அமெரிக்க தூதர் ஜூலி சங் தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

                                  சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான உரிய நடைமுறைகள் குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளது.

                                  நீதிக்கான அணுகல் மற்றும் சட்டத்தின் ஆட்சி குறித்தும் விரிவாக
                                  கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    ரயில் விபத்தில் இரண்டு பெண்கள் காயம்

                                    ரயில் விபத்தில் இரண்டு பெண்கள் காயம்

                                    வெள்ளவத்தை பகுதியில் இரண்டு யுவதிகள் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

                                    விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளம்பெண்களும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                                    ரயில் விபத்தில் இரண்டு பெண்கள் காயம்

                                    20 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

                                    இவர் கிரேசியன் பிரிவு, உடபுஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

                                    வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் பொலிஸ் உயிர்காப்பு பிரிவுக்கு அருகில் இந்த ரயில் விபத்து இடம்பெற்றுள்ளது.

                                    கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் நேற்று பிற்பகல் வேளையில் யுவதிகள் இருவரும் மோதுண்டுள்ளனர்.

                                    உயிரிழந்த யுவதியும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யுவதியும்
                                    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கைக்கு நிதி வழங்க மாட்டோம் சர்வதேச நாணய நிதியம்

                                      இலங்கைக்கு நிதி வழங்க மாட்டோம் சர்வதேச நாநாணய நிதியம்

                                      இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு நாம நிதி வழங்கவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது

                                      இலங்கை ஜனாதிபதி ஜனாதிபதியாக பதவி ஏற்ற மறுதினம் மக்கள் மீது இராணுவத்தை ஏவி தாக்கல் நடத்திய பின்னர் உலக நாடுகள் கண்டனத்திற்கு

                                      உள்ளாக்கியதன் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது