தேவாயலம் அடித்து நொறுக்கு விஷமிகள் அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

தேவாயலம் அடித்து நொறுக்கு விஷமிகள் அட்டகாசம்

தேவாயலம் அடித்து நொறுக்கு விஷமிகள் அட்டகாசம்

இலங்கை ; முசலி – கஜிவத்தை பகுதியில் காணப்பட்ட புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் உள்ள தூய அந்தோனியார் திருச் சொரூபங்கள் இரண்டு

இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக கொக்குப்படையான் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் நேற்று மாலை ஆராதனைகளை மேற்கொள்ள கொக்குப்படையான் கிராம மக்கள் சென்றிருந்தனர்.

இதன் போது குறித்த சிற்றாலயத்தில் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1 மற்றும் 3 அடி உயரம் கொண்ட அந்தோனியார் திருச் சொரூபம் உடைக்கப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து உடனடியாக சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கொக்குப்படையான் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

    பொருட்களின் விலை அதிகரிப்பினால் மக்கள் அவதி ரணிலிடம் முறையீடு
    Posted in இலங்கை செய்திகள்

    பொருட்களின் விலை அதிகரிப்பினால் மக்கள் அவதி ரணிலிடம் முறையீடு

    பொருட்களின் விலை அதிகரிப்பினால் மக்கள் அவதி ரணிலிடம் முறையீடு

    பொருட்களின் விலை அதிகரிப்பினால் பொது மக்கள் எதிர்கொண்டுள்ள இன்னலை ஜனாதிபதியிடம் தான் சுட்டிக்காட்யிருப்பதாகவர்த்தகம், வணிகம்

    மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

    மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று (02) மேற்கொண் உத்தியோகபூர் விஜயத்தின் போது நுகர்வோர் மத்தியில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

    இந்த விஜயத்தின் போது அமைச்சர் இ கள்ளியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சத்தோச மொத்த விற்பனை நிலையத்தை பார்வையிட்டார்.

    கள்ளியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சதோச மொத்த விற்பனை நிலையத்தை பார்வையிட்டதுடன், அதற்கு அருகாமையில் தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ள சதோச விற்பனை நிலையத்தை பார்வையிட்டார்.

    பொருட்களின் விலை அதிகரிப்பினால் மக்கள் அவதி ரணிலிடம் முறையீடு


    விற்பனை நிலயத்தில் காணப்படும் குறைபாடுகளை அதிகாரிகளிடமும்இ வாடிக்கையாளர்களிடமும் கேட்டறிந்துகொண்டதுடன், காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டார்.

    இதன்போது பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் தமக்கு பால்மா இங்கு கிடைப்பதில்லையென கூறியதை தொடர்ந்து அமைச்சர்

    தொலைபேசி வாயிலாக உரிய அதிகாரியை தொடர்பு கொண்டு மாவட்டத்திற்கென இலவசமாக ஒரு தொகுதி பால்மாவை

    அனுப்பிவைக்குமாறு பணித்ததுடன், சத்தோசையின் விற்பனைக்காகவும் பால்மாவினை அனுப்பிவைக்குமாறும் பணித்தார்.

    அத்தோடு கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது தான் ஜனாதிபதியிடம் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும், மக்கள் மிகுந்த கஸ்டத்தை

    எதிர்நோக்கி வருகின்றார்கள் என கூறியிருப்பதாகவும் இதன்போது பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்த மக்களிடம் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

    அமைச்சரின் கள விஜயத்தின்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், அரச

    வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் சத்தோச நிறுவனத்தின்
    அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பலர் இதன்போது கலந்துகொண்டனர்.

      மோசடி அமைச்சர் மீளவும் அமைச்சரானார்
      Posted in இலங்கை செய்திகள்

      மோசடி அமைச்சர் மீளவும் அமைச்சரானார்

      மோசடி அமைச்சர் மீளவும் அமைச்சரானார்

      இலங்கையில் லஞ்ச உள்ள குற்ற சட்டு சுமத்த பட்டிருந்த நிமால் சிறிபாலடிசில்வா மீளவும் இலங்கையில் அமைச்சராக மாற்றம் பெற்றுள்ளார் .

      நிமால் சிறிபாலடிசில்வா விமான மற்றும் கப்பல் போக்குவரது அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார் .

      மிக முக்கிய பொறுப்பை நிமல் சிறிபாலடி சில்வா தன் வசப்படுத்தியுள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது .


      மேலுநிமால் சிறிபாலடி சில்வா மேற்கொண்ட லஞ்ச உள்ள மோசடிகள் தொடர்பில் இதுவரை விசாரணைகள் மேற்கொள்ள படவில்லை.

      இவை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் கொரானாவுக்கு ஒரே நாளில் 7 பேர் மரணம்

        இலங்கையில் கொரானாவுக்கு ஒரே நாளில் 7 பேர் மரணம்

        இலங்கையில் வேகமாக கொரனோ பரவி வருகிறது ஏழுபேர் பலியாகியுள்ளதாக இலங்கை சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது.

        ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகிய பின்னர் தற்போது கொரனோ மரணங்கள் அதிகரிக்க பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்து வருகிறது .

        இதன் மூலம் மக்களை வீடுகளுக்குள் முடக்கிட இந்த வார அறிவிப்பை இலங்கை அரசு புரிந்த வண்ணம் உள்ளது.


        ரணிலுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்புக்கள் அதிரடியாகி வெளியாகிய வண்னம் உள்ளதான உள்நோக்கு
        இலங்கை அடித்து பூட்டும் நிகழ்விற்கு செல்ல போகிறது என்பதாக உள்ளது.

        நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம்.
        Posted in இலங்கை செய்திகள்

        நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம்.

        நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம்.

        கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக ஒரே பதவியில் கடமையாற்றி வந்த சில மாகாண திணைக்களத் தலைவர்களை வேறு திணைக்களங்களுக்கு

        இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்கவிற்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமைய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

        அதற்கமைய, மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளராக கடமையாற்றிய திருமதி. ஆர்.வளர்மதி மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும், மாகாண கல்வித்

        திணைக்களத்தின் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய என்.சிவலிங்கம் மாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

        நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம்.

        மாகாண கூட்டுறவு ஆணையாளராக கடமையாற்றிய ஏ.எல்.எம்.அஸ்மி கல்முனை மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

        மாகாண கலாசார பணிப்பாளராக கடமையாற்றிய எஸ்.நவநீதன் மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

        நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளராக பணியாற்றிய (திருமதி) எஸ்.சரணியா மாகாண கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளராகவும், மாகாண கூட்டுறவுச்

        சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக பணியாற்றிய ஏ.ஜி.தேவேந்திரன் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

        மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளராக கடமையாற்றிய கே.இளந்துடுதன் மாகாண கூட்டுறவு சேவைகள்

        ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.

        குறித்த இடமாற்றங்களைப் பெற்ற அதிகாரிகள் இன்று (02) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்து விசேட

        கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இக்கலந்துரையாடலின்போது இடமாற்றங்களைப் பெற்றவர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

        இடமாற்றங்களைப் பெற்ற சகல அதிகாரிகளும் தங்களுக்கான கடமைகளை உடனடியாக பொறுப்பேற்றுக்கொள்ளுமாறும்,


        அதில் எந்த மாற்றங்களும் இடம்பெறாது என்று கிழக்கு மாகாண ஆளுநர் சகல அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளார்.

        பைஷல் இஸ்மாயில் –

          Posted in இலங்கை செய்திகள்

          யாழில் வாள்களுடன் திருடர்கள் மடக்கி பிடிப்பு

          யாழில் வாள்களுடன் திருடர்கள் மடக்கி பிடிப்பு

          இலங்கை .யாழ்ப்பாணம் ; வட்டுக்கோட்டை பகுதியில் வாள்களுடன் நடமாடிய திருடர்கள் மக்களினால் பிடிக்க பட்டனர் .

          வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த மூவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொழுது அவர்களை கண்ணுற்ற மக்கள் அவர்களை துரத்தினர்.

          இதன் பொழுதே ,அவர்கள் தப்பிக்க முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது .

          அவ்வேளை வாள்களை போட்டு இருவர் தப்பித்து ஓடியுள்ளனர் .

          ஒருவர் மக்களினால் பிடிக்க பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்க பட்டுள்ளார்.

            மண்சரிவில் சிக்கி மூவர் மரணம் பலரை காணவில்லை
            Posted in இலங்கை செய்திகள்

            மண்சரிவில் சிக்கி மூவர் மரணம் பலரை காணவில்லை

            மண்சரிவில் சிக்கி மூவர் மரணம் பலரை காணவில்லை

            இலங்கை மலையகம் நோட்டன்-பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இதுவரை மூவர் பலியாகியுள்ளனர்.

            மேலும் சிலரை காணவில்லை என தெரிவிக்க படுகிறது .

            காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

            மழை அதனால் ஏற்பட்ட மண்சரிவு வெள்ளத்தில் சிக்கிய இந்தஅனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

            உயிரிழப்ப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது.

              Posted in இலங்கை செய்திகள்

              மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

              மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

              இலங்கையில் பொதுவில் முதல் காலி வரையிலான கடல் பகுதியில் புயல் வீசுவதால் மீனவர் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.

              இந்த புயலானாது மணிக்கு எழுபது கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும், இதனால் கடலில் கொந்தளிப்பு காணப்படலாம் என தெரிவிக்க படுகிறது.

              கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்ட பட்டுள்ளது.

                Posted in இலங்கை செய்திகள்

                கோட்டபாயவுக்கு சிங்கப்பூரில் சலுகை இல்லை

                கோட்டபாயவுக்கு சிங்கப்பூரில் சலுகை இல்லை

                இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் ஓடி பதுங்கியுள்ளார் .

                இவர் சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ள கோட்டபாயாவுக்கு சிங்கப்பூர் அரசு எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை என இலங்கை தெரிவித்துள்ளது,

                கோட்டபாயவை கைது செய்ய கோரி சிங்கப்பூரில் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் கோட்டபாய உள்ளார்.

                இதனால் இலங்கை திரும்பிட கோட்டபாய முனைகிறார் .

                இலங்கையில் மக்கள் இவருக்கு எதிராக உள்ளதினால் அவரை சுற்றிவளைத்து தாக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

                அதனால் என்னவோ இப்பொழுது கோட்டபாய தொடர்பிலான இவ்விதமான தகவல்களை இலங்கை நாள்தோறும் கசிய விட்ட வண்ணம் உள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  யாழ்ப்பாணத்தில் எரிபொருள் வரிசையில் மோதல் ஒருவர் காயம்

                  யாழ்ப்பாணத்தில் எரிபொருள் வரிசையில் மோதல் ஒருவர் காயம்

                  இலங்கை ; யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரி பொருள் வாங்கிட வரிசையில் காத்து நின்றவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சிக்கி ஒருவர் காயமடைந்துள்ளார்.

                  காயமடைந்தவர் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .


                  எரிபொருள் பெற்றிட காத்திருக்கும் மக்களுக்குள் இடையில் புகுந்திட மேற்கொள்ளும் செயல்பாடுகளினால்
                  மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது.

                    கைது நடவடிக்கை அச்சம் கோட்டபாய வேறு நாடு செல்ல திட்டம்
                    Posted in இலங்கை செய்திகள்

                    கைது நடவடிக்கை அச்சம் கோட்டபாய வேறு நாடு செல்ல திட்டம்

                    கைது நடவடிக்கை அச்சம் கோட்டபாய வேறு நாடு செல்ல திட்டம்

                    இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய சிங்கப்பூரில் தங்கியுள்ளார்.


                    அங்கு தங்கி இருக்கு இவரை போர்குற்றத்தில் கைது செய்யுமாறு தமிழர்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .


                    இதனால் கோட்டபாய எவ்வேளையும் கைது செய்யும் வாய்ப்பு ஏற்படலாம் என்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளது .

                    இதனால் சிங்கப்பூரில் இருந்து கோட்டபாய வேறு நாடு ஒன்றுக்கு செல்ல திட்டமிடுகிறார் என்கிறது முக்கிய தரப்பு வட்டாரங்கள்.

                    கோட்டபாய அரேபிய நாடு ஒன்றை இலக்கு வைத்து நகரவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

                    கைது நடவடிக்கை அச்சம் கோட்டபாய வேறு நாடு செல்ல திட்டம்

                    இலங்கை சென்றால் மீளவும் அங்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என்ற நிலையில் கோட்டபாய சிக்கியுள்ளார் .

                    இலங்கையில் கோட்டபாயவை சிங்களவர்கள் துரத்திட வெளி நாடுகளில் தமிழர்கள் துரத்துகின்றனர் .

                    ஆக மொத்தம் இலங்கை சிங்கள தமிழ் மக்களினால் கோட்டாபய விரட்ட பட்ட வண்ணம் உளளார் .


                    முள்ளி வாய்க்கால் மக்களின் சாபத்தின் அவலம் இப்பொழுது கோட்டபாயவை துரத்துகிறது .

                      கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஏ.ஜீ.தெய்வேந்திரன் (01) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
                      Posted in இலங்கை செய்திகள்

                      கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஏ.ஜீ.தெய்வேந்திரன் (01) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

                      கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஏ.ஜீ.தெய்வேந்திரன் (01) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

                      கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக ஏ.ஜீ.தெய்வேந்திரன் இன்று காலை (01) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

                      கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த என்.மதிவண்ணன் மட்டக்களப்பு மாநகர சபையின்

                      ஆணையாளராக கடந்த 2022.03.31 ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட

                      வெற்றிடத்திற்கு இலங்கை நிருவாக சேவை தரம் – II யைச் சேர்ந்த ஏ.ஜீ.தெய்வேந்திரன் நியமிக்கப்பட்டார்.

                      கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஏ.ஜீ.தெய்வேந்திரன் (01) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

                      இவர், கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் உதவிச் செயலாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

                      இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு,


                      சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முதளிதரன், உதவிப் பணிப்பாளர் திருமதி எஸ்.சரண்யா,

                      கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஏ.ஜீ.தெய்வேந்திரன் (01) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.


                      நிருவாக உத்தியோகத்தர் எ.சுவேந்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

                      பைஷல் இஸ்மாயில் –

                        யாழ் சித்த போதனா வைத்தியசாலையில் மூலிகை தகவல் மையம் ஆரம்பித்து வைப்பு
                        Posted in இலங்கை செய்திகள்

                        யாழ் சித்த போதனா வைத்தியசாலையில் மூலிகை தகவல் மையம் ஆரம்பித்து வைப்பு

                        இலங்கை ,யாழ்ப்பாணம் ; யாழ் சித்த போதனா வைத்தியசாலையில் மூலிகை தகவல் மையம் ஆரம்பித்து வைப்பு
                        பொதுமக்களின் சந்தேகங்களை தீர்த்துவைக்க வைத்திய கலாநிதிகள்

                        பைஷல் இஸ்மாயில் –

                        யாழ். கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் மூலிகைகள் மற்றும் நச்சுத்தாவரங்களை பற்றிய தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும்

                        வகையில் மூலிகை தகவல் மையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.ஜெபநாமக்கணேசன் தெரிவித்தார்.


                        இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் காணப்படும் நச்சுத் தாவரங்கள் மற்றும் அவை தொடர்பான விடயங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்

                        , அவை தொடர்பான அனைத்து விடயங்களையும் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


                        இது பற்றிய முழுமையான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சித்த மருத்துவ பேரரறிஞர்கள் மற்றும் சித்த மருத்துவக் கலாநிதிகள்

                        ஆகியோர்களின் வழி காட்டலின் கீழ் மூலிகை தகவல் மையம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


                        மேலும், இன்றைய போக்குவரத்து பிரச்சனை மற்றும் மூலிகை தகவல் மையத்துக்கு வருகை தர முடியாதவர்களின் பிரச்சினைகளையும்

                        கருத்திற்கொண்டு அவர்களுக்கு எழுகின்ற சந்தேகங்களை 021 – 2057104, 077 0661005 தொலைபேசி ஊடாகவோ அல்லது வட்சப் ஊடாகவோ அல்லது

                        mpicjaffna@gmail.com மின்னஞ்சல் ஊடாகவோ பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

                          வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை
                          Posted in இலங்கை செய்திகள்

                          வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை

                          வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை

                          இலங்கை ,வவுனியா – நேற்று வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்

                          ஆயுதங்களுடன் வருகை தந்த ரவுடி கும்பல் இவரை படுகோரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளது .

                          சடலத்தில் இவரது கை ஒன்று முற்றாக வெட்டி வீச பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது .

                          சடலம் மீட்க பட்டு உடல் கூற்று பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது.

                          இவரது கொலைக்கான காரணம் தெரியவில்லை .இவ்வாறு வெட்டி கொலை செய்ய பட்டவர் குடும்பஸ்தர் என்பது குறிப்பிட தக்கது .

                            ரயிலுடன் மோதி இராணுவ சிப்பாய் மாரணம்
                            Posted in இலங்கை செய்திகள்

                            ரயிலுடன் மோதி இராணுவ சிப்பாய் மரணம்

                            ரயிலுடன் மோதி இராணுவ சிப்பாய் மரணம்

                            இலங்கை,கொழும்பு ,. வீரவில விமானப்படை தளத்தில் பணியாற்றும் விமான படையை சேர்ந்த இராணுவ சிப்பாய் ரயிலுடன் மோதி பலியாகியுள்ளார் .

                            இவர்கள் பயணித்த வான் ரயிலுடன் மோதியதில் சிப்பாய் ஒருவர் சம்பவ இடத்தில பலியானார் .மேலும் ஒருவர் படுக்கையாமடைந்துள்ளார் .

                            காயமடைந்தவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்.

                            .பாதுகாப்பற்ற ரயில்வே கடவையை கடக்கும் பொழுதே ரயிலுடன் வான் மோதி இந்த விபத்து சம்பவம் இடமேற்றுள்ளது என தெரிவிக்க படுகிறது .

                              பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு
                              Posted in இலங்கை செய்திகள்

                              பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

                              பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

                              இலங்கை ,கொழும்பு ; இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் பாரூக் புர்கி, 2022 ஜூலை 29ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

                              இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அபிவிருத்தியடைந்து வரும் இருதரப்பு உறவுகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்

                              கலந்துரையாடியதுடன், பல துறைகளில் நடைபெற்று வரும் ஒத்துழைப்பு குறித்து திருப்தியை வெளிப்படுத்தினார். இரு வழி உறவுகளை

                              வலுப்படுத்துவதற்கான வழிமுறையாக மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு அவர்கள் தீர்மானித்தனர்.

                              பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகளில் கடினமான காலங்களில் பாகிஸ்தான்


                              அரசாங்கம் வழங்கிய உறுதியான மற்றும் நிலையான ஆதரவை அமைச்சர் பாராட்டினார்.

                                சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பஸ்கள் மீண்டும் சேவையில்
                                Posted in இலங்கை செய்திகள்

                                சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பஸ்கள் மீண்டும் சேவையில்

                                சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பஸ்கள் மீண்டும் சேவையில்

                                இலங்கை ,கொழும்பு ; சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பஸ்கள் இன்று (01) முதல் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.

                                இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிக்கையில் ,டயர் மற்றும் உதிரிப்பாகத் தட்டுப்பாட்டினால் இந்த பஸ்கள் சேவையில் இருந்து அகற்றப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

                                105 டிப்போக்களில் இந்த பஸ்கள் பழுதடைந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. இவ்வாறான பின்னணியில் தற்போது குறித்த


                                பஸ்கள் செப்பனிடப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி

                                  இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி

                                  இலங்கை ,கிளிநொச்சி ; தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேசத்தயார் என்கிறார் சிறீதரன் எம்.பி

                                  தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேசத்தயாராகவே நாங்கள் இருக்கிறோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

                                  இன்றைய தினம் கிளிநொச்சி இராமநாதபுரம் வட்டாரத்தில் மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது குறித்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                                  இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி

                                  அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இந்த மண்ணிலே புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் இருந்தாலும் நாங்கள் பேசுவோம் அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்கவோடும் நாம் பேசுவோம்.

                                  ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19 தடவைகள் பேசியிருக்கிறோம் கோத்தபாய ராஜபக்ஷவுடனும் ஒரு தடவை

                                  பேசியிருக்கிறோம் இவ்வாறு இந்த நாட்டில் யார் யார் எல்லாம் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்களோ அவர்களுடன் எல்லாம் தமிழர் தரப்பு பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்

                                  ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 3 ஆம் திகதியன்று பாராளுமன்றில் தனது அக்கிராசன உரையை நிகழ்த்தவுள்ளார் இவர் தனது அக்கிராசன உரையில் புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிப்பாரா?

                                  அல்லது முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச போன்று அனுராதபுரத்தில் பதவியேற்ற போதும் சரி தனது அக்கிராசன உரையிலும் சரி மக்களால்

                                  விரட்டியடிக்கப்படும் வரை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசாதது போன்று இவரும் செயற்படுவாரா? எனும் சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது

                                  40 வருடங்களுக்கு மேலான அரசியல் அனுபவத்தை கொண்டுள்ள ஜனாதிபதி இந்த நாடு இப்படி பொருளாதார ரீதியில் அதளபாதாளத்திற்கு போவதற்கு பிரதான காரணமாக இருந்தது ஒரு இனத்தின் மீது நடைபெற்ற போர்தான் என்பதை புரிந்து

                                  வைத்திருப்பார் எம் மீது நடைபெற்ற இனவழிப்பின் பங்காளியாக இருந்தவர் எமது விடுதலைப் போராட்டத்தை சூழ்ச்சியால் பிரித்த ரணில் விக்கிரமசிங்க நாட்டின்

                                  பொருளாதார நிலையை சீர் செய்ய வேண்டும் என்றால் முதலில் இனப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்

                                  குறித்த சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பிலும் பொருளாதார பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

                                  அவர்களுடன்
                                  வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    மக்கள் கொந்தளிப்பை தணிக்க எரிபொருள் விலையை குறைக்கும் ரணில்

                                    மக்கள் கொந்தளிப்பை தணிக்க எரிபொருள் விலையை குறைக்கும் ரணில்

                                    இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் எட்டாவது புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எரிபொருள் விலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளார் .

                                    இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் ஐம்பது முதல் நூறு ரூபா வரை குறைக்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

                                    புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .

                                    மக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நாடத்தினால் அது தனது அரசியல் வாழ்வை முடக்கிவிட்டும் என்பதால் ரணில் விக்கிரமசிங்க இந்த அதிரடி விலை குறைப்பு நடவடிக்கைக்கு திட்டமிட்டுள்ளார் .

                                    மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளதாலும் இந்த விடயம் கண்துடைப்பு நாடகமாக அரங்கேற்ற படுகிறது .

                                    இந்த எரிபொருள் விலை குறைப்பின் பின்னர் இலங்கையில் ஆளும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி நிலைத்து நிற்குமா .மக்கள் கோபம் தணியுமா என்பதே கேள்வியாக உள்ளது .

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      துப்பாக்கி சூடு ஏழு பேர் மரணம்

                                      துப்பாக்கி சூடு ஏழு பேர் மரணம்

                                      இலங்கை ,கொழும்பு ;நாடளாவிய ரீதியில் கடந்த 27ஆம் திகதி முதல் இன்று (31) வரை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

                                      கொட்டாஞ்சேனை மற்றும் ரத்கம பகுதிகளில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

                                      கொட்டாஞ்சேனை விவேகானந்தா வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், சனிக்கிழமை (30) இரவு நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 51 வயதான நபரொருவர் பலியாகினார்.

                                      காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்கம, கம்மத்தேகொட பிரதேசத்தில் இன்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்தனர்.

                                      துப்பாக்கி சூடு ஏழு பேர் மரணம்

                                      மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ரி-56 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்ற நிலையில், படுகாயமடைந்து வைத்தியசாலையில்

                                      அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

                                      உயிரிழந்தவர் ரத்கம, தெவெனிகொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                                      காயமடைந்தவர்கள் 47 மற்றும் 29 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                                      இதேவேளை, கம்பஹா, அம்பலாங்கொடை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளில் கடந்த 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடத்தப்பட வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஐவர் உயிரிழந்திருந்தனர்.

                                      கம்பஹா நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக 27ஆம் திகதி மதியம் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த பாதாள உலகக்

                                      குழு உறுப்பினரான ‘பஸ் பொட்டா’ என்று அழைக்கப்படும் சமன் ரோஹித்த, அன்று மாலையும் இன்னொருவர் இரண்டு தினங்களிலும் மரணமடைந்திருந்தார்.

                                      அம்பலாங்கொடை கலகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில், 27ஆம் திகதி மாலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பலியாகினர்.

                                      இந்நிலையில், இரத்மலானை, சில்வா மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் 28ஆம் திகதி அதிகாலை நுழைந்த இருவர் நடத்திய

                                      துப்பாக்கிப் பிரயோகத்தில்
                                      30 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.