Tag: விஷமிகள்
Posted in இலங்கை செய்திகள்
தேவாயலம் அடித்து நொறுக்கு விஷமிகள் அட்டகாசம்
Author: நலன் விரும்பி Published Date: 03/08/2022 Leave a Comment on தேவாயலம் அடித்து நொறுக்கு விஷமிகள் அட்டகாசம்
தேவாயலம் அடித்து நொறுக்கு விஷமிகள் அட்டகாசம்
இலங்கை ; முசலி – கஜிவத்தை பகுதியில் காணப்பட்ட புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் உள்ள தூய அந்தோனியார் திருச் சொரூபங்கள் இரண்டு
இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக கொக்குப்படையான் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் நேற்று மாலை ஆராதனைகளை மேற்கொள்ள கொக்குப்படையான் கிராம மக்கள் சென்றிருந்தனர்.
இதன் போது குறித்த சிற்றாலயத்தில் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1 மற்றும் 3 அடி உயரம் கொண்ட அந்தோனியார் திருச் சொரூபம் உடைக்கப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து உடனடியாக சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கொக்குப்படையான் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.







